திங்கள், 14 அக்டோபர், 2019

தென் சென்னையில் பெரியார் 1000 வினா-விடை போட்டி



அரும்பாக்கம், அக். 14- பெரியார் மணியம்மை பல்கலை கழகத் தின் சார்பில் நடைபெறும் பெரியார் 1000 வினா-விடை போட்டியில் மாணவர்கள் பங்கேற்க  தென்சென்னை பகுத்தறிவாளர் கழகம் சார் பில் அரும்பாக்கம் நேஷ்னல் ஸ்டார் மேல்நிலைப் பள் ளியை அனுகினோம்; அதன் தாளாளர் ஜி.பி.சாரதி அவர் கள் மாணவர்கள் பங்கேற்க முழு ஒத்துழைப்பு நல்குவதாக அறிவித்தார்கள்.

அதன் அடிப்படையில் 13.10.2019 நண்பகல் பெரியார் 1000 வினா- விடை‌நிகழ்ச்சி சிறப்பாக அமைய  மாணவர் களுக்கு  பெரியார் 1000 வினா- விடை‌நூல்களை வழங்க வேண்டி தாளாளர் அவர்களி டம் தென் சென்னை பகுத் தறிவாளர் கழகத்தலைவர்  எம்.ஆர். மாணிக்கம் வழங்கினார்.

உடன்: தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா‌.வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்த சாரதி துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன்.அரும்பாக் கம் சா.தாமோதரன் மற்றும்  ஆயிரம் விளக்கு மு.சேகர் ஆகியோர் இருந்தனர்.

 - விடுதலை நாளேடு, 14 .10. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக