ஒற்றை பத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒற்றை பத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 ஜூலை, 2020

பெரிய‘‘வாள்''தான்!



ஜெகத்குரு என்கிறார்கள்; மகாபெரியவாள் என்கிறார்கள், இந்து மதத்தின் தலைவர் என்று சொல்லுகிறார்கள். எங்காவது இந்து மதத்தில் நாம் அனைவரும் சமம் - ஏற்றத்தாழ்வு இல்லை. நாம் ஒற்றுமையாக இருந்து சகோதரராக இருந்து செயல் படுவோம் என்று ஒரே ஒரு வார்த்தையை சங்கரமடத்துக் காரர்கள் - சங்கராச்சாரியார்கள் இதுவரை கூறியதுண்டா? எழு தியதுண்டா? இனியேனும் செய்வார்களா?
இதனை சவால் விட்டே கேட்கிறோம்.
தீண்டாமை வேண்டும் - அது க்ஷேமகரமானது என்கிறார், எல்லாரும் ஒன்றாகிவிட வேண் டும் என்பதும் நாஸ்திகம் என் கிறார், மற்ற தேசங்கள் மாதிரி எல்லோரும் சமத்துவமாக வேண்டும் என்று கிளர்ச்சி செய் வது பண்புக்குறைவான போக்கு என்கிறார்.
  • இப்படிப்பட்ட ஒருவர் எப்படி ஜெகத்குரு? எப்படி மகா பெரியவாள்? எப்படி ஒட்டு மொத்தமாக இந்து மதத்துக்குத் தலைவர் ஆவார்?
இதுவரை இவர்கள் பேசியது, எழுதியது எல்லாம் என்ன? பிராமணர்களுக்காக வக்காலத்து வாங்குகிறேன் என்கிறார் - இதில் கம்யூனலாகவே சொல்லுகிறேன் என்கிறார். கன்னி கழியாத பிரா மணப் பெண்களுக்காக கன்னி காதான டிரஸ்டு ஏற்பாடு என் கிறவரை சரியாகச் சொல்ல வேண்டுமானால் ‘பிராமண சங்கத் தலைவர்' என்று சொல் லுவதுதானே சரி!
பார்ப்பனர்களுக்கு வக் காலத்து வாங்குவதில் மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந் திர சரஸ்வதியார்களின் தந்திர மும் அலாதியானது.
‘‘மற்ற ஜாதிகள் ‘‘பிராமணர்'' களைப் போல இத்தனை கிரிசை கெட்டுப் போகவில்லை. அந்த ஜாதிகளில் இத்தனை வரதக்ஷ ணைக் கொடுமையோ, பெண் கள் இத்தனை பெருவாரியாகக் காலேஜ் படிப்பு, உத்யோகம் என்று போய் ஸ்வயேச்சையாகத் திரியும்படி ‘‘தண்ணி தெளித்து'' விட்டிருக்கிற நிலைமையோ இல்லை. ஆதலால், ஏழை ‘‘பிராம்மண'' பெண்களை உத் தேசித்தே இந்த கன்னிகாதான டிரஸ்ட்.''
(‘தெய்வத்தின் குரல்',
2 ஆம் பாகம், பக்கம் 903)
பெருவாரியாகக் காலேஜ் படிப்பு, உத்யோகம் என்று பார்ப் பனப் பெண்கள் இருப்பது - அவர்களுக்கு வளரச்சிதானே - மேம்பட்ட நிலைதானே! அதனைக் குறையாக சித்தரிக்க முயல்வதைக் கவனியுங்கள். அது குறையென்றால், பிராமணப் பெண்கள் படிக்கக் கூடாது, உத் யோகம் பார்க்கக் கூடாது என்று சொல்லவேண்டியதுதானே!
எத்தகைய தளுக்கு, குலுக்கு ‘மோகினி அவதார' ஏமாற்றுப் பேச்சு! இதுதான் பார்ப்பனிய தந்திரம் என்பது.
‘‘நம் சாஸ்திரம் பண்ணிக் கொடுத்துள்ள ஏற்பாட்டில், பிரா மணன் சரீரத்தில் உழைத்த உழைப்பு, ஒரு குடியானவனின் உழைப்புக்கும் குறைச்சலான தல்ல. இவனுக்கு எத்தனை விரதானுஸ்டங்கள், உபவாசம் என்று எத்தனை நாள் வயிற்றைக் காயப் போட்டாகவேண்டும். எத் தனை ஸ்நானம்? இந்த சிரமங்கள் இதர ஜாதியாருக்கு இல்லை. ஒரு குடியானவன் விழித்தெழுந்ததும், வயிறு ரொம்ப ஜில்லென்று பழையது சாப்பிடுகிறது மாதிரிச் செய்ய பிராம்மணனுக்கு ‘ரைட்' ஏது?''
(‘தெய்வத்தின் குரல்',
2 ஆம் பாகம், பக்கம் 1013-1014)
எவ்வளவு தமாஷ்! எவ்வ ளவு சாமர்த்தியம்! ஆமாம், இவாளை பழையது சாப்பிட்டு ஜில்லென்று இருக்கவேண்டாம் என்று யார் கையைப் பிடித்து இழுத்தது?
  • மயிலாடன்
  • விடுதலை நாளேடு, 4.7.20

சனி, 21 மார்ச், 2020

கடவுள் - மதக்கேடு!

சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உல கையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள் ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1.8 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற் போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 276 பேரைப் பாதித்துள்ளது.

கரோனாவால் சீனா வுக்கு அடுத்து கிழக்கு ஆசி யாவில் அதிகம் பாதிக்கப் பட்டுள்ள நாடு தென் கொரியா ஆகும். தென் கொரியாவில் 8000-க்கும் மேற்பட்டோர் கரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச் சையளிக்கப்பட்டு வருகின் றனர். இந்தச் சூழலில் தென் கொரியாவின் சியோங்னம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் சிறப்புப் பிரார்த் தனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட 46 பேருக்கு கரோனா இருப்பதை அதி காரிகள் தற்போது உறுதி செய்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுப்ப தற்காகத் தேவாலயத்தில் நடத்தப்பட்ட பிரார்த்தனை ஒன்றில் மக்கள் கலந்து கொண்டுள்ளனர். அப் போது அங்கு வந்திருந்த வர்களுக்கு ‘புனித நீர்' வழங்கப்பட்டுள்ளது. ஒரே பாட்டில் மூலம் அனை வருக்கும் இந்தப் புனித நீர் வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் அந்த ‘புனிதநீரைக்' குடித்தவர் களில் 46 பேருக்கும் கரோனா இருப்பது தற் போது கண்டறியப்பட்டுள் ளது. இந்த தேவாலயத்தின் போதகர் மற்றும் அவரது மனைவியும் இதன்மூலம் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 90 பேர் வரை கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் மேலும் பல ருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அதிகாரிகள் அப்பகுதியில் சோதனைகளைத் தீவிரப் படுத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள அந்த தேவாலய போதகர் கிம், "இங்கு நடந்தது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். அனைத்து குற்றச்சாட்டு களுக்கும் நான்தான் பொறுப்பு" எனத் தெரிவித் துள்ளார்

இந்தோனேசிய அதிபர் - "பக்கத்து நாடுகளில் எல் லாம் 'கரோனா' பரவிய நிலையில் நம் நாட்டில் மட்டும் பரவாமைக்குக் கார ணம் கடவுளின் கருணையே கருணை" என்று பிரார்த்த னைக் கூட்டத்தில் கூறிய மறுநாளே, மூவர் கரோ னாவால் பாதிக்கப்பட்டனர் என்று இந்தோனேசிய சுகாதாரத்துறை அறிவித்தது தெரிந்ததே!

மதமும் கட வுளும் மக்களுக்கு கேடு என்பதற்கு இன்னும் ஆதார மும் தேவையோ!

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 21.3.20