செவ்வாய், 22 அக்டோபர், 2019

கழகங்கள் இல்லாத தமிழகமா?

கேள்வி: திராவிடக் கட்சிகள் இல்லாத தமிழகம் சாத்தியமா?

பதில்: இன்றைய கட்சிகள், கழகங்கள் எவ்வளவு நாள் இருக்கும் என்று சொல்ல முடியாது. நிச்சயமாக அவை நிரந்தரமானவையல்ல. ஆனால், தமிழகம் நிரந்தரமாக நிலைத்து இருக்கவே செய்யும். எனவே,  இன்றைய கழகங்கள், கட்சிகள் இல்லாத தமிழகம் சாத்தியமே!

- ‘துக்ளக்', 23.10.2019, பக்கம் 7

சாத்தியமா - இல்லையா என்பதைவிட இவாளின் ஆசையைத்தான் வேறு சொற்களால் வெளிப்படுத்துகிறது ‘துக்ளக்'.

திராவிட அரசியல் கட்சிகளோடு இனி கூட்டு இல்லை என்று பகிரங்கமாக அறிவிக்கும் துப்பு உண்டா இதுகளுக்கு? இதனை சவால் விட்டே கேட்கிறோம்.

தி.மு.க.தான் தமிழ்நாடு என்று  பெயர் சூட்டியது - இருமொழிக் கொள்கையை சட்டமாக்கியது.

தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது.

சுயமரியாதைத் திருமணத்துக்கு சட்ட வடிவம் கொடுத்தது. பட்டப் படிப்புவரை இலவசக் கல்வி கொடுத்தது; பெண் களுக்குச் சொத்துரிமை கொடுத்தது - ஏராளமான திட்டங்களைப் பெண்களுக்காக அறிவித்து செயல்படுத்தியது.

ஏழைகளுக்குக் குடிசை மாற்று வாரியத்தைக் கொண்டு வந்து இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தது.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தைக் கொண்டு வந்து, ஜாதி ஒழிப்புக்கு ஆக்க ரீதியான செயலாக்கத்தை செய்துகாட்டியது.

பெரியார் சமத்துவபுரத்தைக் கொண்டு வந்தது.

விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களை இடைத் தரகர்களுக்கு இடமின்றி விற்பனை செய்ய உழவர் சந்தை கொண்டுவரப்பட்டது.

அ.தி.மு.க. ஆட்சியில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடுக்கு வழி செய்யப்பட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக சூத்திர இழிவை (வேசி மக்கள்) எதிர்த்து ஒழிப்பது திராவிட இயக்கக் கொள்கை.

இன்னும் எத்தனை எத்தனையோ உண்டு. இவற்றை யெல்லாம் அழித்துவிட்டு பா.ஜ.க. பட்டம் சூட்டிக் கொள்ளப் போகிறதா?

மத்திய பி.ஜே.பி. ஆட்சியில் பொருளாதார வீழ்ச்சி நலிவு ஒன்று போதாதா, அதன் இலட்சணத்துக்கு?

இந்தியையும், சமஸ்கிருதத்தையும்

தூக்கிச் சுமக்கும் இவாள் ஆட்சியை

இடறித் தூக்கி எறிவார்கள்

திராவிட பூமி மக்கள் -

எச்சரிக்கை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக