ஜாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

அய்.அய்.டி.யா? அய்யர் - அய்யங்கார் நிறுவனமா?


WhatsApp%20Image%202023-08-03%20at%2017.09.13%20(1)

நாடு முழுவதும் அய்.அய்.டி.க்களில் மாணவர்கள் ஜாதி ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு 2 மாணவர்கள், இந்த ஆண்டு ஒரு மாணவர் என மூன்று பேர் ஜாதி ரீதியிலான வன்கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் மும்பை அய்.அய்.டி.யில் உள்ள உணவகத்தில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மும்பை அய்.அய்.டி உணவு விடுதியில் உள்ள சுவரில் "சைவ உணவு சாப்பிடுபவர்கள் மட்டும் இங்கு அனுமதி" என்று எழுதப்பட்ட சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. 

இதற்கு அய்.அய்.டி.யில் செயல்படும் மாணவர் அமைப்பான அம்பேத்கர், பெரியார், புலே வாசகர் வட்டம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அந்த சுவரொட்டியைக் கிழித்தனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விடுதி செயலாளரிடம்  இதுபற்றி கேட்டதற்கு, மாணவர்கள் சாப்பிடுவதற்கு உணவகத்தில் இருக்கைகள் யாருக்கும் தனியாக ஒதுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட யாரோ இது போன்ற சுவரொட்டியை ஒட்டி இருக்கின்றனர் என்று அந்தப் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து விடுதி செயலாளர் அனைத்து மாணவர்களுக்கும் அனுப்பி இருக்கும் மின்னஞ்சல் செய்தியில், "உணவு விடுதியில் ஜெயின் மாணவர்கள் சாப்பாடு வாங்க தனி கவுன்ட்டர் இருக்கிறது. ஆனால் அவர்கள் அமர்ந்து சாப்பிட தனி இருக்கைகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை" என்று அதில் கூறியுள்ளார். ஆனால், ஜெயின் மாணவர்கள் அமர்ந்து சாப்பிடும் இடத்தில் அசைவ உணவு கொண்டு வருபவர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. 

அதோடு மும்பை அய்.அய்.டி.யில் புதிதாக சேரும் மாணவர்கள் ஜாதி ரீதியாக துன்புறுத்தப்படக்கூடாது என்பதற்காக மாணவர்கள் மற்ற மாணவர்களிடம் மதிப்பெண்கள் குறித்து கேட்கக்கூடாது என்றும், ஜாதி ரீதியாக நகைச்சுவை, விமர்சனங்களை சமூக வலை தளங்களில் பகிர்ந்து கொள்ளவேண்டாம் என்றும், ஜாதி, மதங்களைக் கடந்து ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அய்.அய்.டி.நிர்வாகம் அறிவுரை வழங்கி இருக்கிறது. கடந்த ஆண்டு ஜாதிப் பிரச்சினையால் தர்சன் சோலங்கி என்ற மாணவர் மும்பை அய்.அய்.டி.யில் தற்கொலை செய்து கொண்டார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

 ஹிந்துத்துவ மாணவர் அமைப்பினர் தொடர்ந்து இது போன்ற அராஜகங்களை செய்து கொண்டு இருக்கின்றனர். 

புதுடில்லி, அய்தராபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள கல்வி நிலையங்களில் சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களை இழிவுபடுத்துவது, வன்முறையில் இறங்குவது, என தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு நிர்வாகமும் துணை போகிறது என்பதற்கு மும்பை அய்.அய்.டி. நிர்வாகம் ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.

அய்.அய்.டி. என்றால் அய்யர், அய்யங்கார் டெக் னாலஜி என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் போலும்!

அய்.அய்.டி.களில் இன்னும் சமூகநீதிக் காற்று உள்ளே நுழையவில்லை. கடவுள் வாழ்த்து என்று சமஸ்கிருதத்தில் பாடும் நிலைதான். 'இந்தியா' (மிஸீபீவீணீ)  ஆட்சிக்கு வரும் பட்சத்தில்தான் இதற்கொரு முடிவு காணப்பட முடியும் - இளைஞர்களே, மாணவர்களே தயாராவீர்! 

வெள்ளி, 15 ஜூலை, 2022

சேலம் பெரியார் பல்கலைக் கழகம் காவி மயமாகிக் கொண்டிருக்கிறது' செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்!

வியாழன், 7 அக்டோபர், 2021

தடுப்பூசி போடுவதிலும் வருண தருமமா?

 

மின்சாரம்

கரோனா தடுப்பூசி போடுவதில் கூட வருணா சிரமமா?

இந்தியாவில் இப்படி ஒரு குறிப் பிட்ட கூட்டத் துக்கு மட்டும் என தடுப் பூசி முகாம் நடத்தப்பட்டு உள்ளதாஇவர்களுக்கு மட்டும் ஏன் தனிச்சிறப்பு ஏற்பாடு?

ஒருக்கால் இந்தப் பூதேவர்களைத் தாக்குவது புது ஜாதி கரோனாவா?

தனக்கும் சமூகத்துக்கும் பயனுள்ள வகையில் உழைத்துக் கவுரவமாக வாழும் பல லட்சம் பேருக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லைஆனால் இவாளுக்கு மட்டும் எதற்கு இந்த முன்னுரிமையாம்?

தமிழ்நாட்டில்கூட திருவரங்கம்திருவல்லிக் கேணி கோயில்களில் இப்படிகூட்டாக தடுப்பூசி போடப் பட்டதுஆனால்இந்துஅறநிலையத் துறை சார்பில் அனைத்து ஊழியர் களுக்கும் தடுப்பூசி போடப்பட்டதுஅங்கும் அனைவரோடு பார்ப்பனர் களும் நின்றனர்.

ஆனால்கர்நாடாகவிலோமுழுக்கமுழுக்க பூணூல் அணிந்தவர்களுக்கு மட்டுமே இந்த ஏற் பாடாம்!

மற்றவர்களுக்கு எல்லாம் பஞ்ச கவ்யம்கோமி யம்காய்த்ரி மந்திரம்ஆனால்தனக்கு என்று வரும்போது மட்டும் சிறப்பு தடுப்பூசி முகாமாம்!

ஆனா, “எல்லாம் ரூல்ஸ்படி நடக் கணும்‘ என்று சொல்வதில் மட்டும் குறைச்சல் இல்லை.

கோமியத்தைக் குடிக்க வேண்டி யதுதானே!  உடம்பு நிறைய மாட்டுச் சாணியை அப்பிக் கொண்டு அங்க பிரதட்சணம் செய்ய வேண்டியது தானே!

யாகம் நடத்தித் தேகத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது தானேஅர்ச்சனைகள் நடத்தி அய் யன்மார்கள் ஆயுளை நீட்டித்துக் கொள்ள வேண்டி யதுதானே!

அதெல்லாம் செய்ய மாட்டார்கள் அதில் அவர்கள் ‘புத்திசாலிகள்!’ ஊருக்கு உபதேசித்து  விட்டு நாட்டு மக்களை ஒழிப்பதுதானே அவர்களது உள் நோக்கம்?

மற்றவர்களை அர்ச்சனை நடத்தச் சொல்லி அவர்களின் பணத்தைச் சுரண்டத்தானே இத்தி யாதி இத்தியாதி ஏற்பாடுகள் எல்லாம்?

தீ மிதிக்கும் தீட்சதர்களைப் பார்த் ததுண்டாஅலகு குத்திக் கொள்ளும் ஆராவமுத அய்யங்கார் களைக் கண்டதுண்டாகாவடி எடுக்கும் காயாம்பு சாஸ்திரிகளைக் கண்டது யார்சொல்லுங்கள்மொட்டை யடித்துக் கொள்ளும் பாப்பாத்தி யம்மை யாரைப் பார்த்தது யார்பகருங்கள்!

சேலம் அன்னதானபட்டி செருப் படி மாரியம்மன் கோயிலில் செருப் படிபடும் ஒரேஒரு சிண்டுப் பார்ப்பா னைப் பார்த்தேன் என்று சொன்ன வனைப் பார்த்தது யார்விரலை மடக்குங்கள் பார்க்கலாம் . உண்மை யைச் சொல்லப் போனால் உண்மை யான ‘மெட்டீரியலிஸ்ட்’ இந்தப் பார்ப் பனர்கள்தான்.

மோட்டர் பைக்கில் வந்து அல்லவா புரோகிதம் செய்கிறார்கள்காரில் பறந்து வந்தல்லவா காரியங் களைச் செய்து காசைக் கறக்கிறார்கள்.

ஒரு சேதி தெரியுமாபூரி ஜெகந் நாதர் கோயில் பகவான் ஜெகந்நாத னுக்கே ‘மாஸ்க்‘ போட்ட படம் வந் ததே - பத்திரிகையில் பார்க்கவில் லையா!

திருப்பதி நாமக் கடவுளுக்கே நாமம் சாத்திய ‘டாலர் சேஷாத்திரி களைமறந்து விட்டீர்களா?

இதுவரை தெரிந்துகொள்ளா விட்டால் கரு நாடகா செல்லுங்கள்கடவுளை நம்பாமல் கோவி ஷீல் டையும் கோவேக்சினையும் தேவைப் பட்டால் நாத்திக நாடான ருசியா தயாரித்த ‘ஸ்புட்னிக்‘ வேக்சினையும் சாங்கோ பாங்கமாகப் போட்டுக் கொள்வார்கள்.

ஏமாந்த நம் சோணகிரிகளுக்கு நமது அனுதாபங்கள்!

திங்கள், 15 பிப்ரவரி, 2021

ராஜஸ்தான் மாநில சிறைகளில் ஜாதி அடிப்படையில் வேலை கொடுப்பதா?


மாநில காங்கிரஸ் அரசு தடை விதித்தது

ஜெய்ப்பூர்பிப்.15 ராஜஸ்தான் மாநில சிறைகளில்  கைதிகளுக்கு ஜாதி  அடிப்படையில்  வேலை கொடுக்கும் நடைமுறைக்கு தடை விதித்து மாநில காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறைக்  கைதிகளுக்கு அவரவர் ஜாதியை பொறுத்து  வேலை ஒதுக்கப்பட்ட விவகாரத்தை அண்மையில் ‘தி வயர்’ இணைய இதழ் அம்பலப் படுத்தியது.

ராஜஸ்தான் மாநில சிறைகளில் இதுபோன்ற சம்பவம் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளதை அந்த செய்தி சுட்டிக்காட்டியதுஇந்த விவகாரம் பெரிதானதை தொடர்ந்துபிப்ரவரி 3 ஆம் தேதி ராஜஸ்தான் அரசு சிறைத்துறைக்கு புதிய வழிகாட்டு நெறி முறைகள் அடங்கிய அரசாணை வெளியிட்டு நடவடிக்கை எடுத்துள்ளதுஇதுவரை சிறையில் உள்ள கழிப்பறைகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்யும் வேலையை தாழ்த்தப்பட்டவர்கள் மீது திணிக்கப்பட்டு வந்தது.  சமையல் செய்யும் உரிமை குற்றம் செய்ததாக பிடிபட்டு தண்டனை பெறும் பார்ப்பனர்களுக்கோ அல்லது வேறு உயர்ஜாதி வகுப்பினருக்கோ வழங்கப்பட்டது.

மாநில அரசின் இந்த புதிய அறிவுறுத்தலின்படி இனி இதுபோன்ற நடைமுறை இருக்காது என்று நம்பப்படுகிறதுசமீபத்தில் பீகார் மாநிலத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த அஜய்குமார் என்ற குற்றவாளிக்கு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் வேலை கொடுக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் எதிர்ப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியதுஇதன் பின்னரே நீதிமன்ற தலையீட்டிற்குபின் இந்த முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிறை விதிகள் கையேட்டில் இத்தனை ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது நீதிமன்ற நடவடிக் கைக்குப்பின் அதில் மாற்றங்களை கொண்டு வர வழிவகுத்திருப்பதாகவும் ஒடிசாகோவா மற்றும் டில்லியை தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் புதிய சிறைவழிகாட்டு நெறியை இதுவரை அமல்படுத்தவில்லைவரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ராஜஸ்தான் மாநில சிறை வழிகாட்டு நெறிகள் முழுமையாக மாற்றியமைக்கப்படும்என்று சிறைத்துறை கூடுதல் அய்.ஜி ராஜிவ் டஸாட் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாளையங்கோட்டைமதுரை மத்திய சிறை உள்ளிட்ட சிறைகளில் கைதிகளின் ஜாதி அடிப்படையில் செல்களில் அடைத்து வைக்க இட ஒதுக்கீடு செய்யும் அவலங்கள் தொடர்வதாக ‘தி வயர்’ இதழ் தெரிவித்துள்ளது.

திங்கள், 8 பிப்ரவரி, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (240)


இன்ன ஜாதி இப்படிப் புடவை கட்ட வேண்டும்; பறையன், சக்கிலி இரும்பினால்தான் நகை போட வேண்டும். இன்ன ஜாதி ஈயத்தில்தான் நகை போட வேண்டும் என்று ஜாதியைக் கண்டுபிடிக்க இருந்ததெல்லாம் வருணாசிரமக் கொடுமையின் இந்து மத பாகுபாட்டுத் தன்மையின் அடையாளங்கள் அல்லவா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

‘மணியோசை’

பெரியார் கேட்கும் கேள்வி! (241)


ஜாதி இருப்பதனால்தான் நீ ஹிந்து; உன் மதம் ஹிந்து மதம்; உனது சாத்திரம், மனுதர்மம், உபநிடதம் என்று இருக்கிறது. இவைகளையெல்லாம் ஏற்றுக் கொண்டு விட்டுப் பிறகு நான் எப்படிச் சூத்திரன் என்றால் உலகத்தார் சிரிக்க மாட்டார்களா? சூத்திரன் என்பதை உள்ளபடியே நீ வெறுப்ப தானால் ஹிந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டாமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

‘மணியோசை’

வியாழன், 28 நவம்பர், 2019

ஜாதி வாலை வெட்டியவர் யார்?

அட 'உலக்கைக் கொழுந்தே' தந்தை பெரியார் தொண்டால் தான் தினமலரின் கிருஷ்ண மூர்த்தி கூட, தன் பெயருக்குப் பின்னால் அய்யர் என்ற ஜாதி வாலை ஒட்ட நறுக்கிக் கொண்டு இருக்கிறார்.

இந்தியாவிலேயே பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெய ரைப் போட்டுக் கொள்வதை வெட்கப்படும்படி மாற்றி காட் டினார் பெரியார் என்பதுதான் கடந்த கால நிகழ்கால வரலாறு.

ஒரு கேள்வி - ஜாதி ஒழிய வேண்டுமா? கூடாதா? - தினமலர் பதில் என்ன?

- விடுதலை நாளேடு 20 11 19

புதன், 13 நவம்பர், 2019

ஜாதியும், மதமும் சேர்ந்ததுதான் பி.ஜே.பி. ஆட்சியா?

‘‘அகர்வால் ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வேலைக்கு வாருங்கள்!''

ரயில்வே உணவு வழங்கும் பிரிவு கொடுத்த விளம்பரம்

ஜெய்ப்பூர், நவ. 13 ரயில்வேயின் துணை நிறுவனமான அய்.ஆர்.சி.டி.சி.யின் சார்பில் ரயில்களில் உணவு அளிக்கும் ஒப்பந்தத்தை எடுத்துள்ள  நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரிய அகர்வால் வைசிய ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும் என்று விளம்பரம் கொடுத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ரயில்வேதுறை உணவு வழங்கலுக்கு அய்.ஆர்.சி. டி.சி. என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங் களிடம் ரயிலில் உணவுவழங்கும் பணியை ஒப்படைத்து வருகிறது, ராஜஸ்தானைச்சேர்ந்த  பிருந்தா வன் உணவுப் பொருட்கள் வழங்கும் நிறுவனமும் மத்திய மேற்கு ரயில்வே சார்பில் உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவ னம் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு இடையில் ஓடும் சில ரயில்களில் உணவு வழங்கும் பணியைச் செய் கிறது. இந்த நிறுவனத்திற்கு சமீபத் தில் மேலும் பல புதிய ரயில்களில் உணவு வழங்க ஒப்பந்தமிடப்பட்டது.

இதனை அடுத்து இந்த நிறுவ னத்தின் சார்பில் ரயில் உணவக மேலாளருக்கான ஆட்கள் தேவை என விளம்பரம்  செய்யப்பட்டு இருந்தது. இந்த விளம்பரத்தில் “ரயில்வேயில் கேட்டரிங், கிச்சன் மற்றும் ஸ்டோர் மேலாளர் காலி பணியிடங்களுக்கு 100 ஆண்கள் தேவை, விண்ணப்பதாரர்கள் அகர் வால் வைஷ்ணவ சமூகம், நல்ல குடும்பப் பின்னணியை  உடையவர் களாக இருக்க வேண்டும். கல்வித் தகுதி 10, 12ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்''  என குறிப்பிடப்பட்டி ருந்தது.

இது தொடர்பாக புனே அய்.ஆர்.சி.டி.சி. ஊழியர் ஒருவர் கூறும் போது, ”இவ்விவகாரம் ஊடகத்தில் வெளிவந்த காரணத் தால் தான் விவாதப் பொருளானது. ஆனால் நீண்ட காலமாகவே ரயில் வேயில் உணவு வழங்குபவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் தான் வேலை பார்க்கின்றனர்.

ராமன்தான் பணித்தாராம்!

அகர்வால் பிரிவினர் அனை வரும் ராமன் அயோத்தி திரும்பிய பிறகு நடந்த கொண்டாட்டத்தின் போது தன்னலமில்லாமல் உணவு சமைத்து தங்களது கையாலேயே அனைவருக்கும் வழங்கினார்கள். மேலும் இவர்களுக்கு ராமன் தனது சேனைகளுக்கு உணவு வழங்கும் பணியைக் கொடுத்தார். இதனா லேயே மிகப்பெரிய உணவுப் பரி மாறல் வலைப்பின்னலைக் கொண்ட  இந்திய ரயில்வேதுறையில் பெரும்பாலும் அகர்வால் ஜாதி னரையே தேர்ந்தெடுக்கின்றனர்.  சமீப காலமாக ரயில்வே சார்பில் வெளியிடப்படும் ஒப்பந்ததாரர் பணியிடங்களுக்குத் தரும் விளம் பரத்தைப் பார்த்து பலரும் வரு கின்றனர். இதனால் அனைவரிட மும் நேர்காணல் நடத்தவேண்டியுள் ளது. ஆகவே ஊடகத்திலேயே குறிப்பிட்ட ஜாதியினர் தான் ரயில் வேயில் உணவு வழங்கும் பணிக்கு வரவேண்டுமென்று விளம்பரம் கொடுத்துவிட்டால் நேரம் மிச்ச மாகும்'' என்று கூறினார்.

”இந்தியாவைப் பொருத்தவரை ஒரு நாளைக்கு ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களில் பயணிக்கின்றனர். இதில் பெரும் பாலானோர் இந்துக்கள் ஆவார் கள். இவர்களின் நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் அகர் வால் ஜாதியைச்சேர்ந்தவர்களை மட்டும் நியமிக்கின்றனர்” என்றும் கூறினார்.

மதிய உணவிலும்

குறிப்பிட்ட ஜாதியினர் தானாம்!

இஸ்கான் என்ற அரே ராமா அரே கிருஷ்ணா அமைப்பின் சார்பில் மோடி பிப்ரவரி மாதம் மதுராவில் உள்ள சந்திரோதயா பிருந்தாவன் கோவிலுக்குச் சென்று அக்ஷயா பாத்திரம் என்ற ”3 கோடிப் பள்ளிமாணவர்களுக்கு மதிய உணவு” என்ற திட்டத்தை துவங்கி வைத்தார்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இஸ்கான் சார்பில் உணவு வழங்கப்படுகிறது, இங்கு பணி புரிபவர்கள் அனைவருமே சுத்த வைணவர்களாக இருக்க வேண்டும். அதாவது கிருஷ்ணனை மட்டும் கும்பிடுபவரக்ளாக இருக்க வேண்டும் கட்டாயம் குடுமி வைத் திருக்க வெண்டும். இணையதளத்தில் அங்கு வேலைபார்ப்பவர்கள் அனை  வரும் வேதப் பாரம்பரியத்தின் படி நடந்துகொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமர்சனம் எழுந்த போது ”இங்கு ஜாதி பேதம் இல்லை. ஆனால் இந்தியக் கலாச்சாரத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைப்படி வாழ நாங்கள் வலியுறுத்துகிறோம். இங்கே அனைத்து ஜாதியினரும் வேலை பார்க்கின்றனர்'' என்று விளக்கம் கொடுத்திருந்ததுதான் வேடிக்கையும், விஷமமுமாகும்.

- விடுதலை நாளேடு 13 11 19