ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

“பக்தர்கள் பாலாபிஷேகம் செய்வது மூடத்தனமே!” - துக்ளக் ஒப்புதல்

கடவுள்களின் கையில் கொலைக்கருவிகள்!

21 மொழிகளில் பெரியார் சிந்தனைகள்: எது விபரீத சிந்தனை - துக்ளக்கே?

'இந்து தமிழ் திசை'க்கு ஒரு மறுப்பு யாருக்குச் சேவகம் செய்ய ஆசை!

ஆளுநரின் விருந்து - கட்சிகள் புறக்கணிப்பு: திராவிடர் கழகத் தலைவரின் கருத்து

'கியூட்' நுழைவுத் தேர்வு எதிர்ப்பு சட்டமன்றத் தீர்மானம்: கழகத் தலைவர் ஆசிரியர் அறிக்கை!

வங்கதேசம் உருவானதற்கு அடிப்படைக் காரணம் மொழிப் பிரச்சினைதான்!

என்.எல்.சி.யின் சதி!

புதன், 6 ஏப்ரல், 2022

அட, அரை குறையே! (துக்ளக்)


கேள்வி: திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தன்னைத் 'தமிழர் தலைவர்' என்று அழைத்துக் கொள்கிறாரே?

பதில்: கருணாநிதி தன் வாழ்நாள் முழுதும் அமர்ந்திருந்த தமிழர் தலைவர், சமூகநீதிக் காவலர் - ஆகிய இரண்டு நாற்காலிகளும் அவருக்குப் பிறகு 5  ஆண்டுகள் காலியாக இருந்தன. அதில் தமிழர் தலைவர் நாற்காலியைக் குறி வைத்துக் கொண்டிருந்தார் கி. வீரமணி. சமயம் பார்த்து, சமூகநீதி சரித்திர நாயகர் என்று புகழ்ந்து ஸ்டாலினை சமூகநீதி காவலர் நாற்காலியில் அமர்த்தி விட்டு, காலியாக இருந்த தமிழர் தலைவர் நாற்காலியில் ஓசைப்படாமல் அமர்ந்து விட்டார் வீரமணி. ஸ்டாலின் புகழ் பாடியபடி இருந்த தி.மு.க.வினர் அதைக் கவனிக்கவில்லை. இனி அந்த நாற்காலியை வீரமணி விடவே மாட்டார். பாவம், ஸ்டாலின். கருணாநிதிக்குப் பிறகு தமிழர் தலைவர் வீரமணி தான். ஸ்டாலின் அல்ல.

'துக்ளக்' 13.4.2022

சிந்தனை: தமிழ்நாட்டுச் சரித்திரத்தின் 'அரிச் சுவடியே'  தெரியாத ஓர் ஆள் 'துக்ளக்'கை அபகரித்துக் கொண்டு உளறிக் கொட்டிக் கொண்டு இருக்கிறார். கலைஞர் அவர்களே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களைத் "தமிழர் தலைவர்" என்றுதான் அழைத்தார் என்பது தெரியுமா? 'தத்துப் பித்து' என்று உளறுவது 'துக்ளக்'கின் வாடிக்கைப் புத்தி!