திங்கள், 29 ஆகஸ்ட், 2022

தமிழ்நாட்டுக் கோயில்களில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்து சு.சாமி வழக்கு: இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பிள்ளையார் ஊர்வலமா? அரசியல் ஆயுதமா? மத சம்பந்தப்பட்ட வழக்குகளையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். உணர்வுள்ள ஒரு நீதிபதியிடமே அனுப்புவானேன்?

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

மாணவர்களிடம் ஜாதியைக் கேட்ட பேராசிரியை - விசாரணை


சென்னை, ஆக. 21- சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை, அவரிடம் படிக்கும் மாணவர் ஒரு வரிடம் அலைபேசியில் பேசும் உரையாடல் சமுக வலைதளங்களில் வெளி யாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த உரையாடலின் போது, கல்லூரியில் சில மாணவர்களைப் பற்றி கேட்பதும், அவர்கள் என்ன சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கேட்பதும், அதற்கு அந்த மாணவர் பதில் அளிப்பதுமாகவும் உரையாடல் நீடிக்கிறது. மேலும் உரையாடலில் பேசும் மாணவரிடமும், 'நீ எந்த சமூகத்தை சேர்ந்த வன் என்பது கூட எனக்கு தெரியாது என்று பேராசிரியை கூறிவிட்டு, ''கண்ணா நீ எந்த சமூகத்தை சேர்ந்த வன்டா''? என்று கேட்டு இருக்கிறார். இதுதவிர 'ஒவ்வொருவரின் மூஞ்சி லயும் அவன் எந்த பிரிவை சேர்ந்தவன்?' என்று எழுதி வைத்திருக்கிறது என்றும், 'நீ அந்த சமூ கத்தை சேர்ந்தவர்களிடம் ஜாக்கிரதையாக இரு' என்றும் மாணவரிடம், பேராசிரியை அந்த உரை யாடலில் பேசுவதுபோல் வெளியாகியுள்ளது. கல்வி கற்றுத்தர வேண் டிய இடத்தில் இருக்கும் கல்லூரி பேராசிரியையின் இந்த உரையாடல் பெரும் பரபரப்பை கிளப்பி உள் ளது. இதுதொடர்பாக பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட போது, 'சம்பந்தப்பட்ட பேராசிரியையிடம் கல் லூரி ஒழுங்கு நடவடிக்கை குழு நாளை (திங்கட் கிழமை) விசாரணை நடத் தும் என்றும், அதனைத் தொடர்ந்து அவர் மீது அடுத்தகட்ட நடவ டிக்கை குறித்து முடிவெ டுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் சகா சிலம்பப் பயிற்சி மாணவர்கள் சிலம்பம் 2000 மாஸ் வேர்ல்ட் ரெக்கார்டில் பங்கேற்று ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் & இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என இரட்டை உலக சாதனை படைத்தனர்

சென்னை பெரியார் திடலில் 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் தமிழரின் வீரக் கலையான சிலம்பக் கலையை பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் சகா சிலம்பப் பயிற்சி மாணவர்கள் சென்னை சவிதா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற சிலம்பம் 2000 மாஸ் வேர்ல்ட் ரெக்கார்டில் பங்கேற்று ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் & இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என இரட்டை உலக சாதனை படைத்தனர்

சென்னை  பெரியார் திடலில் 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் தமிழரின் வீரக் கலையான சிலம்பக் கலையை பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின்   சகா சிலம்பப் பயிற்சி மாணவர்கள் சென்னை சவிதா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற  சிலம்பம் 2000 மாஸ் வேர்ல்ட் ரெக்கார்டில் பங்கேற்று ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் & இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என இரட்டை உலக சாதனை படைத்தனர். சாதனை படைத்த  மாணவர்களுக்கு திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் சான்றிதழ் வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.ஆசிரியர்கள்: தர்மராஜ், கார்த்திக் ராஜா, கோபி, சகா சிலம்பக் கூடத்தின் தலைவர் ராஜேந்திரன் மற்றும் த.மரகதமணி, நா.பார்த்திபன்.


குற்றவாளிகளாக சிறையில் இருந்தவர்கள் 'பிராமணர்'கள்- 'பிராமணர்'கள் குற்றம் செய்யமாட்டார்களாம்

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

காமாலைக் கண்ணு 'தினமலரே!'


கருப்பு துக்கத்தின் அடையாளம் என்று கிண்டல் செய்கிறது. போராட்டம் என்றால், எந்தக் கட்சியும் வித்தியாசம் இல்லாமல் கருப்புடை அணிந்து வீதிக்கு வருகிறார்களே, ஏன்?

ஓ, போராட்டம் என்றாலே, 'தன்னெஞ்சே தன்னைச் சுடும்' என்ற பாணியில் பார்ப்பனக் கூட்டம் பதை பதைக்கிறதே!

அது சரி, கருவிழி கருப்பு என்பதால், பிடுங்கி எறிந்து விடுவீர்களா? வழக்குரை ஞர்களும், நீதிபதிகளும் கருப்புடை அணிவது துக்கத்தின் அடையாளமா?

கருப்பான ஹிந்துக் கடவுள்களை குப்பைமேட்டில் ஒதுக்கித் தள்ளப் போகிறீர்களா?

அட காமாலைக் கண்ணே! உன்னை சொல்லிக் குற்றமில்லை - உங்கள் பூணூல் புத்தியின் விபரீதப் பார்வை அது!

திருப்பத்தூரில் ஒரு திருவிழா... (விடுதலை சந்தா)

புதன், 17 ஆகஸ்ட், 2022

திருப்பத்தூரில் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தாக்கள் வழங்கப்பட்டன (14.8.2022)

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

குறுக்கு வழிகளில் ஆட்சிகளைப் பிடித்த பி.ஜே.பி.,க்குப் பீகாரில் மரண அடி! தமிழ்நாட்டின் 'திராவிட மாடல்' ஆட்சி பீகாரிலும் மலரட்டும்!

புதன், 10 ஆகஸ்ட், 2022

60 ஆம் ஆண்டில் 'விடுதலை' ஆசிரியராக நமது தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்!

திராவிட மாடல்" என்றால் குருதிக் கொதிப்பானேன்?

வரவேற்கிறேன் (ஆசிரியரின் முழு நேர தொண்டுக்கு)

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி: அரசாணை வெளியீடு


சென்னை, ஜூலை 28- தமிழ்நாட்டி லுள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளி களில் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட் டுள்ளது.

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், அரசுப் பள்ளி மாணவர் களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், இதில் முதல்கட்டமாக மாநக ராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையுள்ள மாண வர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதன்படி 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர் களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப் படவுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிற்றுண்டி திட்டத்தில் வழங்கப் படும் உணவின் விவரம்: திங்கள் - அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்.

செவ்வாய் - ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி.

புதன் - வெண் பொங்கல், ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்.

வியாழன் - அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்

வெள்ளி - ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி + ரவா கேசரி, சேமியா கேசரி.

வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூர் சிறு தானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி வழங்கப்படும்.