சனி, 19 அக்டோபர், 2019

அமெரிக்க கலிபோர்னியாவில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் விழா

"ஒடுக்குமுறைக்கு எதிராக தந்தை பெரியாரின் சிந்தனைகள்"


தமிழர் தலைவர் உரை




பஜன் சிங் - பீட்டர் பிரடெரிக் எழுதிய 'எளிய மனத்தினரைக் கவர்தல்' எனும் நூலை ஆசிரியர் அவர்கள் வெளியிட்டார்கள்.


கலிபோர்னியா,அக்.13   வடஅமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்தில் சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரின் 141-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, அக்டோபர் 12-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கு,  பிரீமாண்ட் நகரில் ஆல்டர் அவென்யூவில் உள்ள லாஸ் செரிட்டாஸ் சமூக மய்யத்தில் நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், "ஒடுக்குமுறைக்கு எதிராக தந்தை பெரி யாரின் சிந்தனைகள்" எனும் தலைப்பில் எழுச்சி உரையாற்றினார்.

மனித மாண்பிற்கான போராட்டம் -

நூல் வெளியீடு

விழாவில், அமெரிக்காவில் இயங்கும் இந்திய சிறுபான்மையினர் சங்கத்தின் சார்பில், பஜன் சிங் _ பீட்டர் பிரடெரிக் எழுதிய "எளிய மனத்தினரைக் கவர்தல்  _ இந்தியத் துணைக் கண்டத்தில் _ மனித மாண்பிற்கான போராட்டம்" எனும் நூல் தமிழர் தலைவரால் வெளியிடப்பட்டது. ஆங்கில நூலான ‘Captivating the Simple-Hearted: A Struggle for Human Dignity in the Indian Subcontinent’ எனும் நூலைத் தமிழில் மொழி பெயர்த்து இந்நூல் வெளியிடப்பட்டது. பேராசிரியர் அம்ரிக் சிங், பிரியன் ரைட் ஆகியோர் உரையாற்றினர்.

"ஒடுக்குமுறைக்கு எதிராக தந்தை பெரியாரின் சிந்தனைகள்" எனும் தலைப் பில் தமிழர் தலைவர் ஆற்றிய உரை, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் ஆசிரியர் வகுப்பு எடுத்தது போல் அத் தனை சிறப்பாக அமைந்ததாக அனைவரும் மகிழ்வுடன் தெரிவித்தனர்.



பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மேனாள் மாணவிகள் ஆசிரியருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.




அமெரிக்க காயிதே மில்லத் பேரவையின் சார்பில் தமிழர் தலைவருக்கு "சமூக நீதிப் போராளி' (SOCIAL JUSTICE WARRIOR) எனும் விருதினை அதன் அமைப்பாளர் திரு.சம்சுதின் மற்றும் நிர்வாகிகள் அளித்தனர்.


தமிழர் தலைவர் உரை

இந்நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய  ஆங்கில உரையின் சுருக்கம் வருமாறு:

அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள், வணக்கம். நாம் இங்கே சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி கொள் கிறேன். தந்தை பெரியார் இந்த சமூகத்தை எப்படி மாற்றினார், அவர் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார், காரணம் கல்வி மட்டுமே சமூகத்தை மாற்றும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவர் காலத்தில் பெரும் பான்மைச் சமூகத்தினருக்கு குறிப்பிட்ட சில சமூகத்தவரால் கல்வி முற்றிலும் மறுக்கப்பட்ட நிலையில் அந்த பெரும் பான்மைச் சமூகம் கல்வி அறிவு பெற வழியில்லாமல் இருந்தனர். அந்த காலகட்டத் தில் பெரும்பான்மை சமூகத்தினர் கல்வி கற்றால் அவர்களது நாக்கில் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சூடு வைக்கவேண்டும் என்றும், கல்வியைக் கேட்கும் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றவேண்டும் என்றும் எழுதி வைத்துள்ளனர். இவ்வளவு கொடூர மான சிந்தனைகளைக் கொண்டவர் களிடையே பெரும்பான்மை மக்கள் சிக்கியிருந்தனர்.  கல்வி குறித்து மனுதர்மத் தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

மேலும் அந்த மனுதர்ம நூலில் நீங்கள் மனுதர்மத்தின் விதிகளை கடைப்பிடித் தால் சொர்க்கத்திற்கு செல்வீர்கள், இல்லையென்றால் உங்களுக்கு நரகம் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.  ஆனால் பெரியார் இவற்றை எல்லாம் எதிர்த்தார், மனிதத்தன்மையற்ற இது போன்ற அனைத்துக் கோட்பாடுகளையும் கடுமையாக எதிர்த்தார். அவர் மிகப்பெரும் போராட்டத்தைத் துவங்கினார்.

மனிதத் தன்மையற்ற கோட்பாடுகள்

மனிதத்தன்மையற்ற கோட்பாடு களுக்கு எதிராக அவர் கட்டமைத்தப் போர் இன்றளவும் தொடர் கிறது. அவரது போராட்டம் பன்முகத் தன்மை கொண் டது. ஒன்று இந்தியாவில் தொடரும் ஜாதிக்கு எதிரான போராட் டம், அடுத்து பாலினப்பாகுபாட்டிற்கு எதிரான போராட்டம் _ மாற்றுப் பாலினத்தவ ருக்கான நீதிக்கான போராட்டம். மூன் றாவது மனித உரிமைகளுக்கானது. நான்காவது  போராட்டம்  சிறுபான்மையினருக்கான உரிமைகள் குறித்ததாகும். அய்ந்தாவதாக மறுக்கப்பட்ட சமூகநீதிக் கான போராட்டத்தை அவர் மேற்கொண் டார். இந்தப் போராட்டங்களை பகுத்தறிவுடன் அவர் தொலைநோக்குப் பார்வையோடு மேற்கொண்டார். உலகின் பிற பகுதிகளிலும் நாம் மனித உரிமைக் களுக்கான போராட்டம் குறித்துப் பார்த் திருக்கிறோம். நான் இதைக் கூறுவதில் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள் கிறேன். காரணம், பெரியாரால் போராட் டம் துவங்கிய  பிறகு -_ அதாவது அவர் சுயமரியாதை இயக்கம் உருவாக்கிய பிறகு _ அதற்கு முன்பு, மனிதர்கள் மனிதத் தன்மையுடன் நடத்தப்படவில்லை. ஆனால்  பெரியார் சுயமரியாதை இயக்கம் மூலம் அடிமையாக்கப்பட்டு இருந்த பெரும்பான்மை சமூகத்திற்கு உரிமைக் கான போராட்ட உணர்வூட்டினார்.

நான் சில எடுத்துக்காட்டுகளைத் தருகிறேன், இந்திய அரசு  அறிக்கை ஒன்றை தந்துள்ளது. அந்த அறிக்கையின் பெயர் மண்டல் கமிசன். மண்டல் கமிசன் எளிதாக அமலாகவில்லை. அம்மண்டல் கமிசனை அமல்படுத்தக் கோரி  42-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடத்தினோம். 16 மாநாடுகள் நடத்தினோம். நாடாளுமன்றத்தில் மண்டல் கமிசன் அறிமுகப்படுத்தும் வரை நாங்கள் தொடர்ந்து பல்வேறு வகைகளில் போராட்டம் நடத்திக் கொண்டு இருந் தோம்.  பிரதமராக இருந்த சமூகநீதிக்காவ லர் வி.பி.சிங் மண்டல் கமிசன் பரிந்துரை களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி னார். மண்டல் அறிக்கையில் முன்பு இச்சமூகம் எப்படி இருந்தது என்பதைக் கூறியுள்ளனர்.  பெரியாருக்குமுன் எப்படி இருந்தது இந்தச் சமூகம் என்பதை இந்த அறிக்கையின் மூலம் அறிய முடியும். பெரியாரின் போராட்டம் எத்தகையது, எதைநோக்கியது என்பதை இந்த அறிக்கையிலிருந்து நாம் உணர முடியும். அக்காலகட்ட இந்தியாவையும் அறிந்து கொள்ள முடியும். அந்த அறிக்கை கூறு கிறது. இந்துமத்தில் நான்காம் வர்ணத்தவர் கடுமையான பழமைவாத பார்ப்பனீய கொள்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட் டிருந்தனர் என்று கூறுகிறது.



தந்தை பெரியார் 141ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திரளாக கலந்து கொண்டவர்களோடு தமிழர் தலைவர்.


பெரியார் கருத்துக்கள்

ஒரு தடுப்பு மருந்து

இந்திய தீபகற்பத்தைப் பொறுத்தவரை தூய்மை மற்றும் தூய்மை இன்மை தொடர் பாக அதிகம் சமூகத்தில் பேசப்பட்டது.

உலகின் மற்ற பகுதிகளில் தூய்மை  இன்மை என்பது வேறு;  ஆனால் மனுதர்மத்தைப் பொறுத்தவரை தூய்மை இன்மை என்பது வேறு;  இங்கு ஆரியக் கலாச்சாரம் உயர்ந்தது மற்றவை எல்லாம் தூய்மையில்லாதது என்று கூறப்பட்டது. இங்கிருந்துதான் மனிதர் களுக்குள் தீண்டத்தகாதவர்கள் என்று பிரித்து வைத்தனர். தீண்டத்தகாதவர்கள், பார்க்கக் கூடாதவர்கள், எதையுமே கேட்கும் உரிமை யற்றவர்களாகப் பார்த்தனர்.

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இதை அப்படியே ஏற்றுக்கொண்ட போது பெரியார் இதை எதிர்த்துக் கடுமையான போராட்டம் நடத்திக் கொண்டு இருந்தார். இப்போது நாம் பெரியாரின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடிக் கொண்டு இருக்கி றோம். அமெரிக்காவிலும் கொண் டாடிக் கொண்டு இருக்கிறோம் அவரது அனைத்து சேவைகளுக்கும் நாம் மரியாதை செலுத்துவோம். அவரது சேவைகள் சாதாரண மானவை அல்ல, பெரியார் சமூகத் திற்கு ஏற்பட்ட காயத்திற்கு மருந்திட்டார்.  பெரியார் கூறினார். நமது சமூகத்திற்கு ஏற்பட்ட இந்த நோய்க்கு நாம் தான் மருந்து தேடவேண்டும், நாம் அடுத்தவர்களை எதிர்பார்க்கக் கூடாது என்று. தந்தை பெரியார் கருத்துக்கள் ஒரு தடுப்பு மருந்து போன்றது. அது நம்மிடம் எப்போதும் இருக்க வேண்டும், காரணம் கிருமிகள் நம்மைத் தாக்க எப்போதும் தயா ராகிக்கொண்டு இருக்கின்றன. தூய்மையற்றது என்பதை இந்துமதத்தில் உள்ள வர்ணா சிரமத்தின் மூலம் விளக்கு கிறேன். இது நானே கூறுவது கிடையாது.

பெரியார் ஏன் இந்த இயக்கத்தை உருவாக்கினார்?

வர்ணாசிரமமுறையில் உள்ளது என்ன? முதலில் இரு பிறப்பாளர் ஜாதி (பார்ப்பனர்கள்) இரண்டாவது ஜாதியினர் முதல் ஜாதியினரின் கட்டளையை நிறைவேற்றுபவர்கள், இந்தி யாவில் இது நடைமுறையில் உள்ளது. இது நமது அரசமைப்புச் சட்டத்திலும் கூறப் பட்டுள்ளது. இப்போது புரிகிறதா பெரியாரின் போராட்டம் எதற்கு என்று? மூன்றாவது பிரிவினர் என்று கூறப்படுவர்களிடம் முதலாம் வர்ணத்தவர் எதையுமே பெறக்கூடாது. ஆனால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளலாம்.  நான்காம் வர்ணத்தவர்களிடம் எதையுமே பெற்றுக் கொள்ளக் கூடாது, அய்ந்தாம் வர்ணத்தவர் இந்த நான்கு வர்ணத்தவர்களிடம் எதையுமே பெறவும் தரவும் கூடாது, அவர்கள் தீண்டத்தகாதவர்கள், இவர்கள் சமூகத்தின் அனைத்து பாகங்களில் இருந்தும் விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். இது மனிதத்தன்மையற்ற செயல். இது போன்ற பல கொடுமைகளில் இருந்து மனிதர்களைக் காப்பாற்ற பெரியார் போராடினார். பெரியார் அதற்காகவே இந்த இயக்கத்தை உருவாக் கினார்.

இங்கு நான் மிகவும் மகிழ்ச்சியான தரு ணத்தைக் காண்கிறேன். காரணம், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பல பழைய மாணவர்கள் இங்கே அமர்ந்திருக்கின்றனர். இதுவே தந்தை பெரியாரின் சாதனைக்கு ஒரு சான்றாக உள்ளது, தந்தை  பெரியார் இல்லையென்றால் இவர்களை நாம் இங்கே பார்த்திருக்கமுடியுமா? பெரியார் கடவுள் மறுப்பை ஏன் கையிலெடுத்தார்? கடவுளே வர்ணாசிரம தர்மத்தை உருவாக்கினார் என்று கூறுகின் றனர்.

பெரியார் பணிகள் மிகவும் உன்னதமானவை

சதுர்வர்ணம் மயாசிருஸ்டம், அதாவது ஜாதிமுறையை நானே உருவாக்கினேன், இது பகவத் கீதையில் உள்ளது. இன்று ஏதோ பகவத் கீதை உலகின் புனிதமான நூலாகப் பேசிக் கொண்டு இருக்கின்றனர். தமிழ் நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையை ஒரு பாடமாக வைக்க முடிவு செய்து கடுமையான எதிர்ப்பிற்குப் பிறகு பின்வாங்கியுள்ளனர். கடவுளின் அவதாரங்கள் வர்ணாசிரம தர்மத்தைக் காப்பாற்ற வந்தன என்று பகவத் கீதை கூறுகிறது, அதாவது சூத்திரன் பார்ப்பனர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தால் அவனை அழிக்க கடவுள் அவதாரம் எடுக்கிறாராம்; இதைத்தான் பகவத் கீதை கூறுகிறது. பெரியார் என்ன கூறுகிறார்? இப்படி மனிதர்களைப் பிரிக்கும் கொள்கை கொண்டது உங்களது கடவுள் என்றால் அதை நான் ஏற்கமாட்டேன் என்றார். தந்தை பெரியாரின் பணிகள் மிகவும் உன்னதமானவை _ என்று  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

(ஆசிரியர் அவர்களின்  உரை விரைவில் முழுமையாக வெளிவரும்.)

இந்நிகழ்ச்சியில் தோழியர் அமிர்த சுபா வரவேற்புரை ஆற்றினார். திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி அறிமுக உரையாற்றினார். தோழர் கார்க்கி குமரேசன் நன்றியுரை நிகழ்த்தினார். தோழியர் சுகந்தி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழக மேனாள் மாணவிகள் 15 பேர் நிகழ்வில் கலந்து கொண்டு, தமிழர் தலைவரை வரவேற்றனர்.

விழாவின் நிகழ்ச்சிகள் முக நூலில் நேரடி ஒளிபரப்பானதை உலகின் பல நாடுகளில் மகிழ்வுடன் கண்டுகளித்தனர்.

கலிபோர்னியா மாநில பெரியார் பன்னாட்டமைப்பு,  சீக்கிய தகவல் மய்யம் மற்றும் இந்திய சிறுபான்மையினர்க்கான சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை ஏற்பாடு செய்தன.

கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள தமி ழர்கள், சீக்கியர்கள்,ஏறத்தாழ 130 தோழர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் பெருமளவில் பங்கேற்றது சிறப்பாக அமைந்தது.

இந்நிகழ்வில் திராவிடர் கழக பொருளாளர் வீ. குமரேசன் அவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார், மற்ற தோழர்களும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழா சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் அறிவழகன் கருணாநிதி திறம்பட செய்தார்.

- விடுதலை நாளேடு 13 10 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக