சரஸ்வதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சரஸ்வதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

சரஸ்வதி பூஜை அறிவுக்கொவ்வாமுறை

தந்தை பெரியார்
சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை, கல்வியையும், தொழிலையும், ஒரு பெண் தெய்வமாக்கி அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்விவரும், வித்தை வரும் என்றும் சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சி இல்லாமல் சாமியையே நம்பிக் கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு நம்மை படிப்பு வரமுடியாத மக்குகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையை கவனித்தால் அது பார்ப்பனர்கள் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்ம னுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப் பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மாவாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம் மாவைத் தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண்மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேட உருவெடுத்து ஆண் மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம் மாவுக்கு மனைவியாக சம்மதித்ததாக சரஸ்வதி உற்பவக்கதை சொல்லுகிறது. அதாவது தன்னைப் பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது - மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்குப் பேத்தி என்று சொல்லப் படுகின்றது அதாவது, பிரம்மா ஒரு காலத் தில் ஊர்வசியின் மீது ஆசைபட்டபோது, வெளியான இந்திரியத்தை ஒரு குடத்தில் விட்டுவைக்க அக்குடத் திலிருந்து அகத்தியன் வெளியாக அவ்வகத் தியன் சரஸ் வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது. இதனால் பிரம்மாவுக்குச் சரஸ்வதி மகன் வயிற்று பேத்தி ஆகிறாள், எனவே சரஸ்வதி யின் பிறப்பும் வளர்ப்பும் நடவடிக்கையும் கூடி பார்ப்பனப் புராணப்படி மொத்த ஆபாசமும் ஒழுக்க ஈனமுமானதாகும்.
கடன் வாங்கி செலவு செய்து விளையும் நன்மை என்ன?
நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய் கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வ மாதலால் வித்தையின் பயன் தொழிலென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் கருதிக் கொண்டு, சரஸ்வதி பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் ஒரு நாளைக் குறித்துக் கொண்டு அந்த நாளை விடு முறையாக்கி புஸ்தகங்களையும் ஆயுதங் களையும் வைத்து பூஜை செய்கிறார்கள். இந்தப் பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், தராசு,படிக்கல், அளவு மரக் கால்படி, உழக்கு, பெட்டி முதலியவை களையும் தொழிலாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும் இயந்திரச் சாலைக்காரர்கள் இயந்திரங்களையும், மாணாக்கர்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளை யும், சீலைகளையும், நகைகளையும், வாத்தியக்காரர்கள் வாத்தியக் கருவி களையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவரும் அவரவர்கள் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள். இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும் படிகளும் போய் பூஜை ஓய்வு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தைச் செலவு செய்தும் போதா விட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதை விட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல்லு வதற்கே இல்லாமல் இருக்கின்றது. ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த, வருகின்ற அரசர்கள் எல்லாம் இன்றைய தினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்து கொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜைகள் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களைக் காணோம்.
நாணயமாய் நடந்து கொள்கின்றார்களா?
சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய்க்கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிறுக்காமலோ குறை அளவு அளக் காமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத்தொழிலாளிகளும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகு பக்தியாய் அவைகளைக் கழுவி விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்து கொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்குத் தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக் கிறார்கள். அது போலவே புஸ்தகங்களையும் பென் சிலையும் கிழிந்த காகிதக்குப்பைகளையும் சந்தனப் பொட்டுப் போட்டு பூஜை செய்கின்றார்களே அல் லாமல் காலோ கையோ பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்களுக் குள்ளாகவே இருந்து வருகின்றார்கள். இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும் இவ்வளவு விரதங்கள் இருந்தும், நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள். நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வரு கிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக் கருதி வேறு நாட்டிற்கு குடிபோகின்றார்கள். நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித்திருக்கின்றார்கள். சரஸ் வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத் திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.
முட்டாள்தனமான கொள்கையே....!
இதன் காரணம் என்ன?
நாம் செய்யும் பூஜைகளைச் சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்க வில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங் களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய்க் கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்கவேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம்.
வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய்க் கிடையாது.
அன்றியும் நாம் காகிதத்தையும் புஸ்தகத்தையும் சரஸ்வதியாய்க் கருதித் தொட்டு கண்ணில் ஒத்திக் கொண்ட, நமக்குக் கல்வி இல்லை. ஆனால் வெள் ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ் வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண்களும் நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள். உண்மையிலேயே சரஸ்வதி என்ற ஒரு தெய்வமிருக்குமானால் பூஜை செய்ப வர்களை தற்குறிகளாகவும், தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும். கல்வி வான்களாகவும் செய்யுமா? என்பதை தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.
பாழாக்கப்படும் பொருளாதாரம்
உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத் தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகி யவைகள் உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூஜை செய்யும் இந்த நாடு அடிமைப் பட்டும் தொழிலற்றும் வியாபாரமற்றும், கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூஜை செய்கின்ற வர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண் டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும், வியாபாரிகள் அரசாட்சியுடனும் தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள்! இந்த பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்!
ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலு விருப்பது. இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, நேரம் செலவு செய்வது, அறிவு செலவு செய்வது, பத்து லட்சக் கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள் சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை பொரி, சுண்டல் வடை, மேளவாத்தியம், வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்குத் தட்சணை, சமாராதனை, ஊர் விட்டு ஊர் போக ரயில் சார்ஜு ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப் பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வ மல்லவா என்று தான் கேட்கின்றோம். ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும் நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணியதினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும். இதை எந்த பொருளாதார, இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.
- 'குடிஅரசு' - சொற்பொழிவு - 20-10-1929
- விடுதலை நாளேடு, 6.10.19

வெள்ளி, 4 அக்டோபர், 2019

இவள்தான் சரசுவதி

பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டு அவ னால் மணக்கப்பட்டவள்.

ஒரு காலத்து - அகத்தியரிடம் பிறந்த வள்.

பிரம்மன் தன்னை நீக்கி யாகம் செய்த தால் நதியுருவாய் யாகத்தை அழிக்க வந்தவள்.

இவள், தன்னைச் சிருஷ்டித்துத் தன்னுடன் கூடப் பிரம்மன் வருகையில், பிரம்மனுக்கு அஞ்சி பெண் மான் உருக் கொண்டு ஓடினாள். பிரம்மன் ஆண் மான் உருக்கொண்டு தொடர, சிவமூர்த் தியால் தடையடையக் கண்டு சிவமூர்த் தியை வேண்டி, பிரம்மனைக் கணவ னாகப் பெற்றவள்.

பிரம்மன் காயத்ரி, சாவித்திரி, சரசுவதி ஆகிய மூவருடன் கூடிக் கங்கா ஸ்நானத் திற்குப் போக சரசுவதி ஆகாய வழியில் பாடிக் கொண்டிருந்த வித்யாதர ஸ்திரீ யின் இசையில் மனம் வைத்தனள். சரசு வதி ஒழிந்த இருவரும் தம் நாயகருடன் கங்கை அடைந்து ஸ்நானம் செய்தனர். சரசுவதி சற்று தாமதித்துப் பிரம்மதேவ னிடம் சென்று, தான் வருமுன் ஸ்நானம் செய்ததுபற்றிக் கோபித்தனள். பிரம்மன் குற்றம் உன்மீது இருக்க என்மீது பயனி லாது கோபித்தலால்...

இவள் பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டு, அவனால் மோகிப்பது கண்டு, அந்த மோக வார்த்தையுரைத்த முகத்தை நோக்கி நீ இவ்வாறு தூஷித்துக்கொண்டு இருந்ததால், ஒரு காலத்தில் சிவபெரு மானையும் அவ்வாறு தூஷித்து அவரால் சிரம் அறுக்கக் கடவாய் எனச் சபித்தனள் (சிவமகா புராணம்).

(ஆதாரம்: சிங்காரவேலு முதலியார் தொகுத்துள்ள அபிதான சிந்தாமணி எனும் பெருநூலில் - பக்கம்-598).

பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டவள் சரசுவதி என்றால், அவள் பிரம்மனுக்கு மகள் அல்லவா ஆகிறாள்? மகள் சரசுவதியை அப்பன் பிரம்மன் மணப்பது எவ்வகையில் நியாயம்?

பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டவள் சரசுவதி என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு, மறுபக்கம் ஒரு காலத்து அகத் தியரிடம் பிறந்தாள் என்றும், பிரம்மனின் யாகக் கலசத்துள் பிறந்தாள் என்றும் முரண்படக் கூறப்படும் கதைக் கருத்தின் நியாயம் என்ன?

பிரம்மனால் பெண்டாளப்படுவதை விரும்பாது, அவனை வெறுத்து ஒதுக்கி, அவனின் காம வேட்கையிலிருந்து தப்பிக்கப் பெண் மான் உருக்கொண்டு ஓடிய சரசுவதி, பின்னர் சிவமூர்த்தியை வலிய வேண்டிப் பிரம்மனைக் கணவ னாகப் பெறுவானேன்?

பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டவள் ஒரு சரசுவதி - பிரம்மனின் யாகக் கலசத் துள் அவதரித்தவள் ஒரு சரசுவதி - அகத் தியருக்குப் பிறந்தவள் ஒரு சரசுவதி.

ஆக, சரசுவதி என்பது மூவரா - அல்லது ஒருவரா? சரசுவதி மூவர் எனில் - இதில் கல்விக் கடவுள் சரசுவதி யார்? கலவிக் கடவுள் சரசுவதி யார்?

ஒருத்திதான் சரசுவதி எனில், அவளுக்கு மூன்று வரலாற்றுப் பிறப்புக் கதைகள் ஏன்?

படைப்புக் கடவுள் பிரம்மனுக்கு காயத்ரி, சாவித்திரி, சரசுவதி என மூன்று மனைவியர் இருப்பது ஏற்புடைத்ததா? ஒருபுறம் சிவமூர்த்தியை வேண்டிப் பிரம்மனைக் கணவனாக அடையப் பெற்றவள் சரசுவதி எனக் கூறிக் கொண்டே - மறுபுறம் தன்னைக் காம இச்சையால் மோகிக்க வந்த பிரம்மனை சிவமூர்த்தியால் சிரம் அறுக்கக் கடவாய் என்று சரசுவதி சபித்ததாக சிவமகா புராணம் கூறுவானேன்?

எந்த ஒன்றிலும் கணவனும், மனை வியும் கலந்து பேசி - கூடி விவாதித்துக் காரியமாற்றுவதே குடும்ப உயர்வுக்கும், பெருமைக்கும் உகந்தது என்கிற இந்த எளிய உண்மை மனித இயல்பாக இருக்க - பிரம்மன் கடவுள் தன் மனைவி சரசு வதியைக் கலக்காமல் யாகம் செய்தார் என்பதும், அதற்காகக் கோபித்துக் கொண்ட சரசுவதிக் கடவுள் அந்த யாகத்தை அழித்தனள் என்பதும் கடவுள் இலக்கணத்திற்கும் - குடும்ப இலக்கணத் திற்கும் பொருத்தமுடையவைதானா?

கல்வி என்பது அறிவையும், அன்பை யும், பண்பையும், பாசத்தையும், நியாயத் தையும், நேர்மையையும், உண்மையை யும், ஒழுக்கத்தையும் போதிக்கின்ற ஒன்று. இந்தக் கல்விக்குக் காமாந்திரக் கிறுக்கியும், செக்ஸ் தலைவியும், மோகக் கள்ளியும், போக மினுக்கியும் ஆன குச்சு சரசுவதி எப்படிக் கடவுள் ஆக முடியும்? அவள்தான் ஆனாலும், மானமும் அறிவுமுள்ள மனித சமுதாயம் எப்படி அவளைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியும்?

அறிவு, நாணயம், ஒழுக்கம், நேர்மை, பண்பு ஆகிய இவற்றிற்கும் சரசுவதி பற்றிய ஈனக் கதை கருத்துக்கும் எள் முனை அளவேனும் தொடர்புளதா?

அபிதான சிந்தாமணியின் தொகுப் பாசிரியர் திருவாளர் ஆ. சிங்காரவேலு (முதலியார்) பெரியார் தொண்டர் அல் லவே - திராவிடர் இயக்கத்தைச் சார்ந் தவர் அல்லவே - நாத்திகக் கொள்கையினர் அல்லவே! இவர் நூலைத் தொகுக்க - எழுதத் தொடங்கும் முன்னும், முடிக்கும்போதும் பகவானை அதாவது சிவபெருமானைத் துணைக்கு அழைத் தல்லவா காரியமாற்றி இருக்கிறார்?

இவரால், நம்மால் கல்விக் கடவுள் என்று நம்பப்படுகிற - போற்றப்படுகிற - சொல்லப்படுகிற சரசுவதிபற்றி மேற் கூறப்பட்ட கருத்துகளைத்தாதனே சொல்ல முடிகிறது?

இவரும் தானாக இட்டுக்கட்டி - கற்பனையில் சொல்லவில்லையே!

நம் முன்னோர்களால் எழுதப்பட்ட தாகச் சொல்லப்படுகின்ற புராண வழிக் கருத்துகளையும் - சமய மத வழிக் கருத்துகளையும் அறிந்தும், ஆய்ந்தும், சுவைத்தும், தோய்ந்தும், உணர்ந்தும் தானே தொகுத்துரைக்கிறார்.

ஏ! பக்தத் தமிழா! இனியேனும் இவை களைப் படித்து அறிந்தேனும் திருந்து வாயா? உலக நடப்புகளோடு பொருந்து வாயா? உன் அறியாமையையும், தவற் றையும் எண்ணி வருந்துவாயா?

- விடுதலை நாளேடு, 4. 10. 19