உ.பி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உ.பி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 ஜூலை, 2025

சூத்திரன்’ – பகவத் கதை பாராயணம் செய்யக் கூடாதாம்!

 


மொட்டை அடித்து பார்ப்பனப் பெண்களின் சிறுநீரைக் குடிக்கவைத்து எச்சிலை நக்க வைத்த கொடூரம்

அகிலேஷ் கடும் கண்டனம்

வட மாநிலங்களில் பகவத்கதை கதை சொல்லும் நிகழ்வு பிரபலமானது ஒவ்வோரு கிராமமாக சென்று பகவத் கீதை சொல்லி அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்பவர்கள் பலர் உள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் இட்டாவா மாவட்டத்தில்  தரதாபூர் என்ற கிராமத்தில் பகவத்கதை சொல்லும் நபர்கள் வந்து கதை சொல்ல தயாரானார்கள்

அப்போது சிலர் இவர்கள் பார்ப்பனர் அல்ல இவர்கள் எப்படி பகவத் கதை சொல்ல முடியும் என்று கூறி அவர்களை தாக்கி, மொட்டை அடித்தனர்.

மேலும் பார்ப்பனப் பெண் ஒருவர் சிறுநீரைப் பிடித்து அவர்களைக் குடிக்கவைத்து அவர்கள் மீது ஊற்றிய கொடூர நிகழ்வும் நடந்துள்ளது. மேலும் தரையில் எச்சிலை துப்பி அவர்களை நக்க வைத்தும் கொடுமைப்படுத்தி உள்ளனர்

இந்தக்காணொலி சமூகவலைதளத்தில் பகிரப்பட்டு பார்ப்பனர் அல்லாதோர் பகவத் கதை சொல்ல முன்வரவேண்டாம் அபப்டி வந்தால் இதைவிட கொடுமையாக நடத்தப்படுவார்கள் என்று எழுதியுள்ளனர்

இக்காணொலி 2025 ஜூன் 23 இட்டாவா மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது

உடனடியாக கண்காணிப்பாளர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  இட்டாவா காவல்துறைக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. விசாரணையில், இச்சம்பவம் ஜூன் 21 அன்று, பகேவர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாதர்பூர் கிராமத்தில் நடந்தது தெரியவந்தது. அங்கு பாகவத கதை நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. இட்டாவாவின் சிவில் லைன் பகுதியைச் சேர்ந்த முகுந்த் மணி யாதவ், கதை கூறியிருந்தார்.

கிராமவாசிகள், முகுந்த் மணி தன்னை பிராமணர் எனக் கூறி கதையைத் தொடங்கியதாகவும், ஆனால் அவர் யாதவ் ஜாதியைச் சேர்ந்தவர் எனவும் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து, கிராமவாசிகள் முகுந்த் மணி யாதவ் மற்றும் அவரது உதவியாளர் சந்த் குமார் யாதவ்  ஆகியோரை கொடூரமாக தாக்கினர், அவர்களில் ஒருவர் எலக்ட்ராணிக் சேவிங் கருவியால் தலைமுடியைச் சிதைத்தனர்.

அவ்வூரின் உள்ள ஒரு பார்ப்பனப்பெண் தனது, சிறுநீரைக் குடிக்கவைத்தும் எச்சிலைத்துப்பி அதை நக்கவைத்த கொடுமைகள் குறித்து  காவல்துறை ஆணையரிடம் புகாராக முகுந்த் மணி நேரில் சென்று கூறினார்

பதிலடிப் பக்கம்

காவல்துறை நடவடிக்கை

ஜூன் 23 அன்று, சட்டவிதி (BNSS) பிரிவுகள் 115(2), 309(2), 351(2), 352 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

காணொலி மற்றும் உள்ளூர் விசாரணையின் அடிப்படையில், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, நான்கு குற்றவாளிகளை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்கள்:

ஆஷிஷ் திவாரி (21 வயது)

உத்தம் அவஸ்தி (19 வயது)

பிரதம் துபே (24 வயது)

நிக்கி அவஸ்தி (30 வயது)

காவல்துறையின் கூற்றுப்படி, நிக்கி அவஸ்தி என்பவர் காணொலியில் முடி வெட்டுபவராக தெரிகிறார். நான்கு குற்றவாளிகளும் ஜூன் 24 அன்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

பதிலடிப் பக்கம்

இட்டாவா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், “பகேவர் காவல் நிலைய எல்லைக்குட் பட்ட தாதர்பூர் கிராமத்தில், கிராமவாசிகள் இரு நபர்களை அநாகரிகமாக நடத்தி, அவர்களின் முடியை வெட்டிய காணொலி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த காணொலியை உடனடியாக கவனத்தில் கொண்டு, பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர். பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றார்.

இக்கொடூர நிகழ்வு தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறும் போது இது மிகவும் கொடூரமான நிகழ்வே! முகுந்த் மணி யாதவ் பல அரசியல் பிரமுகர்களின் முன்பாக பகவத் கதை சொல்பவர், அவரது குரலும் அவர் கதை சொல்லும் நளினமும் அனைவரையும் ஈர்க்கும், இதற்கான அவர் அரித்துவாரில் பாரட்டுப்பத்திரமும் பெற்றுள்ளார்.

ஆனால் அவரை இவ்வாறு இழிவுபடுத்தியது மிகவும் மோசமான நடவடிக்கை ஆகும்.

பகவத் கதை இன்னார் தான் சொல்லவேண்டும் என்று எங்கும் எழுதவில்லை. இந்த விவகாரத்தில் காவல்துறை கடுமையான நடவடவடிக்கை எடுக்கவேண்டும் முகுந்த்மணியாதவிற்கு நீதிகிடைக்க சமாஜ்வாடி கட்சி துணை நிற்கும் என்று கூறினார்.

– – – – –

பதிலடிப் பக்கம்

மத்திய பிரதேசத்திலும் இதே கதைதான்!

மத்தியப் பிரதேசம் ஜபல்பூரின் பனாகர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட ரைபுரா பகுதியில் உள்ள கல்மாபதி தேவி கோயிலில் ‘‘சிறீமத் பாகவத பிரசங்கம்’’ நடத்தப்பட்டது.

2025 பிப்ரவரி 24 முதல் தொடங்கிய இந்தக் காலட்சேபம் நிகழ்ச்சியில், மறுநாள் (25.02.2025) கல்லூரி மாணவியும், புராணக்கதைகளை சொல் நயத்துடன் கூறும் ராதா ஸ்வரூப் தேவிகா கிஷோரி என்ற பெயரில் அறியப்படும் தேவிகா படேலை காலட்சேபம் நடத்திட அழைத்திருந்தனர்.

இதுவரை எல்லா அழைப்பிதழ்களிலும் அவர் ராதாஸ்வரூப் கிஷோரி என்றே இருந்ததால் எல்லோரும் அவரைப் பார்ப்பனர் என்றே நினைத்து பகவத் கதையைப் படிக்க அவரை அனுமதித்தனர்

இந்த நிலையில் அவரது கோவில் பிரசங்கத்தின் இந்த நிகழ்ச்சிக்கு தேவிகா படேல் என்று ஜாதிப்பெயரோடு அழைப்பிதழ் அச்சடிக்கப் பட்டது.

இதனை அடுத்து அன்று மாலை அவர் பிரசங்கம் செய்ய மேடை ஏறியபோது, அங்கிருந்த பார்ப்பனர்கள் ‘‘நீ சூத்திரப் பெண், எப்படி மேடை ஏறலாம்?’’ என்று கேட்டு அவரைத் தள்ளிவிட்டனர். அவர் அமர்ந்திருந்த இருக்கையில் எண்ணெய் ஊற்றிவிட்டனர்.

மேலும், அந்தக் கும்பல் ‘‘காலட்சேபம் நடந்த வேண்டு மெனில், பிராமணர் குடும்பத்தில் பிறந்திருக்கவேண்டும் அவர்கள்தான் மேடை ஏறி இருக்கையில் அமர்ந்து பிரசங்கம் செய்யமுடியும்

உன்னைப் போன்ற சூத்திரப் பெண் தரையில் உட்கார்ந்து கேட்கவேண்டுமே தவிர, பிராமணர்கள் அடங்கிய மேடையில் ஏறி தீட்டாக்கக்கூடாது’’ என்று கூறி அவரை அவமானப்படுத்தி விரட்டினர்

ஸநாதன தர்மத்தின்படி இருக்கையில் அமர்ந்து காலட்சேபம் செய்ய புராணங்களின் அறிவு மட்டுமின்றி ‘‘பிராமண’’ ஜாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று கூறினர். கோவில் நிர்வாகம் இது தொடர்பாக எந்தக் கருத்தும் கூறவில்லை.

தேவிகா படேல் பொதுமேடையில் பார்ப்பனர்களால் அவமானப்படுத்தப்பட்ட நிகழ்வு மாவட்டம் முழுவதும் பரவிய உடன் மாவட்ட தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தது, மேலும் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடி சமூக அமைப்புகளோடு சேர்ந்து தேவிகா படேலுக்கு ஆதரவாக ஜபல்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக மாவட்ட தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய உறுப்பினரும், வழக்குரைஞருமான இந்திர குமார் படேல் இந்த விவகாரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்து, மனுவாதி மனப்பான்மை கொண்டவர்களால் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவமானப்படுத்தப் பட்டதாகவும், அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், பிற்படுத்தப்பட்டோர் மகாசங்கம் மற்றும் எஸ்டி, எஸ்சி, ஓபிசி முன்னணி ஆகியவை பனாகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஜபல்பூர் ‘‘பிராமண’’ அமைப்பின் தலைவர் ராம் துபே, தெரிவித்ததாவது, ‘‘ஸநாதன பாரம்பரியம் மற்றும் புராணங்களின்படி,பிரசங்கம் செய்யும் உரிமை ‘‘பிராமணர்’’களுக்கு மட்டுமே உண்டு, அவர்களின் பிறப்பே அதற்குத்தான், இங்கு பிராமணர்கள் அல்லாதோர் ஏன் வரவேண்டும்?

அவர் மேடை ஏறியது தவறு; ஸநாதனவிதிகளை மீறும் போது உண்மையான ஸநாதனிகளுக்குக் கோபம் வரத்தான் செய்யும், தவறு அந்தப்பெண்ணின் மீது குற்றம் இருக்கும் போது, தேவையில்லாமல் ‘‘பிராமணர்’’களை குற்றவாளியாக்க முயல்வது தேவையற்றது’’ என்றார்.

இந்த விவகாரத்தில் ஜபல்பூர் மாவட்ட காவல் நிலைய ஆய்வாளர் கூறும் போது ‘‘பிராமண’’ சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், படேல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் கதை வாசிப்பதை எதிர்த்ததாகவும், அதனால் இந்த சர்ச்சை உருவானதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக இரு சமூகங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. மற்றும் சமரசத்துடன் இந்த விவகாரத்தை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தவேண்டாம் என்று அவர் தெரிவித்தார்.

‘எப்படி இருக்கிறது – ஸநாதனமும் – பார்ப்பனீயமும்?’, ‘‘ஹிந்து ராஜ்ஜியம் அமைக்கப் போகிறோம்!’’ என்று சொல்கிறார்களே, அந்த ஹிந்து ராஜ்ஜியம் இத்தகைய ஸநாதன அடிப்படையில் தானே நடக்கும்? ஹிந்துக்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்ளும், பார்ப்பனரல்லாதார் இதைப் பற்றி சிந்திக்க வேண்டாமா? உரிமைக்காக கிளர்ந்து எழ வேண்டாமா?

காவல்துறை அதிகாரி சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், சமாதானம் பேசுவது கட்டப் பஞ்சாயத்து  – வெட்கக் கேடு!

தமிழ்நாட்டில் இது போல் நடந்திருக்க முடியுமா?

காரணம் இது தந்தை பெரியார் மண் – திராவிட இயக்கத்தால் உழுது பக்குவப்படுத்தப்பட்ட மண்!

-விடுதலை நாளேடு, 29.6.25

உ.பி.யிலும் தந்தை பெரியார் பயணம்!


பெட்டி செய்திகள்

உத்தரப் பிரதேசம் இடாவா நகரில் கதாகலாட்சேபம் (பாகவத்கதா) சொல்லவந்த அரித்துவாரில் விருது பெற்ற முகுந்த்மணி யாதவ் மற்றும் அவரது உதவியாளரை சூத்திரன் எப்படி வேதங்களை வாயால் சொல்லாம் என்று அவருக்கு பெண்ணின் சிறுநீரைக் குடிக்கவைத்தும் மொட்டையடித்தும் எச்சில் துப்பி அதனை நக்க வைத்து கொடுமைப்படுத்திய நிகழ்வும் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அகிலேஷ்யாதவ் இந்தக்கொடுமை நடந்த அதே பகுதியில் மேடை அமைத்து முகுந்த்மணி மற்றும் அவரது குழுவினரை கதாகலாட்சேபம் செய்யவைத்து தானும் அமர்ந்து கேட்டார்.
பின்னர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து பாராட்டினார்.
அவர் கூறும்போது பார்ப்பனர்களுக்கு மட்டுமே நாக்கு உள்ளதா?வேண்டுமென்றால் பார்ப்பனர்கள் அவர்களின் ஆட்களின் முன்பு கதாகலாட்சேபம் நடத்தட்டும்! இனிமேல் பார்ப்பனர்களின் கதாகலாட்சேமத்தில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று நான் கட்டளையிட வெகுநேரம் ஆகாது. மனிதர்களாக மதிக்கப்பாருங்கள் என்று பேசினார்.
ஆம் தந்தை பெரியார் உத்தரப் பிரதேசத்திலும் பயணிக்க ஆரம்பித்து விட்டார்.

-விடுதலை நாளேடு, 29.6.25