இராமாயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராமாயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஜனவரி, 2023

வடபுலத்தில் பெரியார் முழக்கம்!

 

மண்ணின் மைந்தர்களுக்கு எதிரானவையே மனுஸ்மிருதி - 

ராமாயணங்கள் எல்லாம்! வெறுப்பைப் பரப்புவதே ஆர்.எஸ்.எஸ். பணி!

பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் பீகார் கல்வி அமைச்சர் சாட்டை அடி!

பாட்னா, ஜன. 14 - மனுஸ்மிருதியும், ராமசரிதைகளும் இந்த நாட்டின் ஆதிகுடிகளான தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு எதிரானவை என்று பீகார் கல்வி யமைச்சர் சந்திரசேகர் பேசியுள்ளார். மேலும், இவை மக்களி டையே வெறுப்பை பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டி யுள்ளார். 

பீகார் கல்வி அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் மூத்த  தலைவர்களில் ஒருவருமான சந்திரசேகர், நாளந்தா திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் 15 ஆவது பட்டமளிப்பு விழா வில் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றியுள்ளார். அப்போதுதான் இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார். 

‘‘ராமாயண காவியத்தை அடிப் படையாகக் கொண்ட துளசிதாசர் எழுதிய ராமசரித்மனாஸ் கவிதை சமூகத்தில் வெறுப்பைப் பரப்புகிறது. ராம்சரித்மனாஸின் சில பகுதிகள் குறிப்பிட்ட ஜாதியினருக்கு பாகுபாடு காட்டுகிறது. 

தாழ்த்தப்பட்டவர்கள், கல்வியைப் பெற்ற பின் பாம்பு களைப் போல ஆபத்தானவர்களாக மாறிவிடுவார்கள் என்று ராம்சரித்மனாஸ் கூறுகிறது. ‘ராம்சரித்மனாஸ்’ மற்றும் ‘மனுஸ் மிருதி’ ஆகியவை சமூகத்தை பிளவு படுத்துகின்றன. அத னாலேயே தாழ்த்தப்பட்ட,  பழங்குடிகள் மத்தியில் ராம்சரித் மனாஸுக்கு எதிர்ப்பு எழுந்தது. காவி சித்தாந்தவாதியான கோல்வால்கரின் ‘சிந்தனைக் கொத்து’ வெறுப்பைப் பரப்பும் நூலாகும். 

அதற்கு முன்பு, மனுஸ்மிருதி, ராம்சரித்மனாஸ் ஆகியவை நாட்டில் வெறுப்பைப் பரப்பின. ஆனால், வெறுப்பு அல்ல, அன்புதான் நாட்டை ஒன்றிணைக்கிறது. இந்துக்களின் மரியா தைக்குரிய நூல்களான, மனுஸ்மிருதி, ராம்சரித்மனாஸ் போன்றவை தாழ்த்தப் பட்டவர்கள், பிற  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் கல்வி கற்கும் பெண் களுக்கு எதிரானவை. எனவே, ராம்சரித் மனாஸில் சமூகப் பாகுபாடுகளை அங்கீ கரிக்கும் வகையில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் நீக்கப்பட வேண்டும்” என சந்திர சேகர் கூறியுள்ளார்.

புதன், 30 மார்ச், 2022

மாநிலங்களவையில் பெரியார் அவர்களின் 'சச்சி இராமாயணம்' "பெரியாரைப் புரிந்து கொள்ளுங்கள்!" ஆர்.ஜே.டி. உறுப்பினர் டாக்டர் மனோஜ் குமார் ஜா முழக்கம்

 

புதுடில்லி, மார்ச் 28- நாடாளுமன்றம் -மாநிலங்களவையில் ராஷ்ட் ரிய ஜனதா தளம் உறுப்பினர் தந்தை பெரியாரின் "சச்சி ராமாயணம்" இந்தி நூலைத் தூக்கிக் காட்டி பெரியாரைப் புரிந்து கொள்வீர்! என்று முழங்கினார்.

மாநிலங்களவையில் கடந்த 25 3.2022 அன்று பாஜக உறுப் பினர் ராகேஷ் சின்கா என்பவர் முன்மொழிந்த  “பண்டைய இந் திய அறிவு மரபுகளை புதுப் பிக்க வேண்டும்” என்ற தனி நபர் மசோதாமீது பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி யின் மாநிலங்களவை உறுப்பி னர்  டாக்டர் மனோஜ் குமார் ஜா உரையாற்றுகையில், தந்தை பெரியார் எழுதிய "இராமா யணப் பாத்திரங்கள்" நூலின் இந்தி மொழியாக்கம் செய்யப் பட்டு வெளியான ‘சச்சி இரா மாயணம்’ புத்தகத்தை எடுத் துக்காட்டி உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்ட தாவது,

பெரியாரை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். வட இந்தியாவில் அவரது பெய ரைத் தவிர மற்ற அவரின் படைப்புகளை படித்தவர்கள் மிகக் குறைவு. அய்யா, அது ஒரு புத்தகம், 'சச்சி ராமாயணம்' - தடை செய்யப்பட்டது. அவரு டைய பல புத்தகங்கள் தடை செய்யப்பட்டன. அவருடைய புத்தகம் தடை செய்யப்பட்ட தைத் தொடர்ந்து, மக்கள் போராடிய போது, "அலகாபாத் உயர்நீதிமன்றம் பெரியார் பற்றி என்ன கூறியது என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்." ராகேஷ் ஜி, இதை உங்கள் முன் வைக்கி றேன்,

 'இதில் எழுதப்பட்டிருப்பது அய்ரிஷ் மக்களின் மதத்தையோ அல்லது மத நம்பிக்கைக ளையோ புண்படுத்தும் என்று நாங்கள் நம்ப முடியாது. வேண்டுமென்றே இந்துக்க ளின் உணர்வுகளைப் புண்படுத் துவதை விட, தனது ஜாதிக்கு இழைக்கப்பட்ட அநீதியை காட்டுவதே ஆசிரியரின் நோக் கமாக இருக்கலாம், நிச்சயமாக அதை அரசமைப்புச் சட்டத் துக்கு எதிரானதாகக் கருத முடியாது”. இவ்வாறு அலகா பாத் உயர்நீதிமன்றம் கூறியுள் ளது. 

பெரியார் என்ன நம்பினார், அவரது கருத்தைப் பார்க்க வேண்டாமா? பாபாசாகேப் எதை நம்பினார்? நமது பழங் கால இந்தியா என்ற கருத்து ஏன் நடக்கிறது - நமது தமிழ்நாடு சகாக்களும் சொன்னதை, சிவதாசன்ஜியும் சொல்கிறார் - உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான், இது மாட்டு பெல்ட் (நீஷீஷ் தீமீறீt), அதன் கருத்தை பண்டைய கருத்தாகவே கருதுவோம். பிறகு, இந்தியா, எப்படி, 'ஏக் பாரத், சிறந்த இந்தியா'வாக முன்னேற முடியும்?

காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை இந்தியா ஒன்று என்று நீங்கள் சொன்னால், 'ஏக் பாரத், ஷ்ரேத் பாரத்' என்று நீங்கள் சொன்னால், கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் பன்மைத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இனத்தை மய்யமாகக் கொண்ட அணுகுமுறை இல்லாமல் நாம் முன்னேற வேண்டும்.

கடந்த கால அரு வருப்பான பயணம் குறித்துப் பேசினேன். விமர்சனக் கல்வி என்பது ஒரு விஷயம். கல்விக்கு பல வரையறைகள் இருக்கலாம், ஆனால் கல்வியின் இறுதி வரையறை - "கல்வி என்பது விடுதலைக்கான கருவியாக இருக்க வேண்டும். எல்லாவித அடிமைத்தனங்களிலிருந்தும், அது சித்தாந்த பந்தமாக இருந் தாலும், மத பந்தமாக இருந்தா லும் அல்லது எந்த வகையான அடிமைத்தனமாக இருந்தா லும் சரி, அந்த மக்களை விடு விப்பதாக இருக்க வேண்டும்" என்று பீகார் மாநில மாநிலங் களவை உறுப்பினர் டாக்டர் மனோஜ் குமார் ஜா பேசியுள்ளார்.

புதன், 3 மார்ச், 2021

ராமனுக்குச் சீதை சகோதரியே - ரொமிலாதாபர்