பெரியார் சிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியார் சிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 நவம்பர், 2021

நிதானம் தேவை - "விஜயபாரதமே!"


“விஜயபாரதம்“ என்னும் ஆர்.எஸ்.எஸ். வார இதழ் (29.11.2021 பக்கம் 12, 13) “ஈ.வெ.ரா.சிலையா? பிரிவினை பேச சதியா?” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளது.

(1) சிலை வழிபாட்டில் நம்பிக்கையற்றவர்கள், ஹிந்து மத துவேஷிகள், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை கொச்சைப்படுத்துபவர்கள், இவர்களின் வழிகாட்டியான ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு சிலை ஏன்? அவ்வாறு சிலை வைத்தால் அதை வணங்குபவனுக்கு என்ன பெயர்? ஏன் என்றால் கடவுள் இல்லை, கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என விமர்சனம் செய்தவருக்கு சிலை வைத்தால், அவரது சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்துபவரும் காட்டுமிராண்டிதானே?” என்று புத்திசாலி போல பேனா பிடித்துள்ளது ஆர்.எஸ்.எஸ். இதழ்!

சங்கராச்சாரியாரிடம் தாக்கத்தை

ஏற்படுத்திய தந்தை பெரியார்

சங்கராச்சாரியாரிடமே கூட தாக்கத்தை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் என்றால் யாருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம், ஆனாலும் அதுதான் உண்மை.

தந்தை பெரியார் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அந்த வழியாக காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி மேனா (பல்லக்கு)வில் சென்றார். அதனைக் கவனித்த தந்தை பெரியார் மற்றவர்கள் சிரமப்பட்டு தூக்கிச் செல்ல சொகுசாக உட்கார்ந்து கொண்டுள்ளாரே! இவர்களைத் துறவி என்று எப்படி சொல்ல முடியும்? என்றார். பெரியாரின் பேச்சு பெரியவாள் என்று சொல்லப்படும் அவரின் காதில் விழுந்தது. அவ்வளவுதான். மேனாவை விட்டு கீழே நடக்க ஆரம்பித்தார் சங்கராச்சாரியார்.

அவர் ஏதோ சொல்கிறார், பெரிசா எடுத்துக்காதீங்கோ என்று கேட்டுக் கொண்டார்கள்.

“அவர் சொல்வது சரிதான்.... சுகத்தை துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி எங்கே சென்றாலும் நடந்தே செல்வேன் என்றார்.

(ஆதாரம்: சக்தி விகடன், பொறுப்பாசிரியர், ரவி பிரகாஷ்)

குறிப்பு: காஞ்சிபுரம் சங்கராச்சாரியாரிடம் 40 ஆண்டு காலம் பணிபுரிந்த லட்சுமி நாராயணன் என்னும் 76 வயதுள்ள பெரியவரிடம் (மாங்காட்டில்) எழுத்தாளர் சாருகேசியுடன், சக்தி விகடன் பொறுப்பாசிரியர் ரவி பிரகாஷ் எழுதிய கட்டுரையிலிருந்து.

 

ரீஃபார்ம்களைப் பற்றி சங்கராச்சாரியார்

“ரீஃபார்ம்களை ஆரம்பித்து விடுகிற எல்லா லீடர்களையும் ஒழுங்கு தப்பினவர்கள் என்று சொல்லுவதற்கில்லைதான். சாஸ்த்ர, ஸம்பரதாய விதிகளாகிற ஒழுங்குகளை இவர்களும் விட்டவர்கள்தான் என்பதால் இவர்களை ஸனாதன தர்ம பீடங்களான மடஸ்தாபனங்களிலிருந்த நாங்கள் ஒப்புக் கொள்ளத்தான் இல்லை என்றாலும், இவர்கள் Personal Life இல் (தனி வாழ்க்கையில்) ஸத்யம், ஒழுக்கம், தியாகம், அன்பு போன்ற பலவற்றைக் கடைப்பிடித்தவர்கள் என்பதை ஆக்ஷேபிப்பதற்கில்லை. ஓரளவிற்குப் படிப்பு, விஷய ஞானம் எல்லாம் உள்ளவர்களாகவும், ஜனங்களை நல்லதில் கொண்டு போக வேண்டும் என்பதில் நிஜமான அக்கறை கொண்டவர்களாகவுமே இந்தச் சீர்திருத்தத் தலைவர்களில் பலர் இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்“ - சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி

- என்று குறிப்பிட்டுள்ளார் (‘தெய்வத்தின் குரல்;’ மூன்றாம் பகுதி, பக்கம் எண்.336)

இந்த சங்கராச்சாரியார் காலத்தில் வாழ்ந்த ரீஃபார்மர் தந்தை பெரியார்தானே!

முதலில் "விஜயபாரதங்கள்" ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தந்தை பெரியாரின் சிலை வழிபாட்டுக்கு உரியதல்ல. கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்ற வாசகமே அதனை உணர்த்துமே!

இந்த அடிப்படைக் கூடத் தெரியாமல் அறியாமை இருட்டில் இருந்து கொண்டு எழுதுவது பரிதாபமே!

தனக்கு உதவியாளராக இருந்த மகள் போன்ற மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக சிலையா? என்பது ஆர்.எஸ்.எஸின் கேள்வி.

கேட்டுக் கேட்டு புளித்துப் போனது இது. தனது உதவியாளரை - தனக்குப் பின் இயக்கத்தில் சொத்துப் பாதுகாப்புக்கும், நடப்புக்கும் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடு என்று எடுத்துச் சொன்னபிறகு, முதலையும் மூர்க்கனும் கொண்டது விடான் என்ற பாணியிலே இருப்பவர்களைத் திருத்துவது கடினமே.

பெரியார் எதிர்பார்த்தது போலவே இயக்க உடமைகளுக்கும், இயக்க நடப்புகளுக்கும் அவர் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருந்தார்,  செயல்பட்டார் என்பது அறிவுடையோர்க்குத் தெரியும்.

தனது மடத்துக்கு வந்த பெண்மணியை கையைப் பிடித்து இழுத்த ஆட்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களுக்கு ஜெகத்குரு.

பெண்ணுரிமைக்காகவும், ஒழுக்கத்துக்காகவும் குரல் கொடுத்துப் பிரச்சாரம் செய்த தலைவருக்குச் சிலை வைத்தால் ஒரு கூட்டத்திற்கு நெறி கட்டுகிறது. புரிந்து கொள்ளத்தக்கதே!

நற்செயல்களுக்காக ஒருவருக்குச் சிலை வைக்கலாம் என்று ஒத்துக் கொள்கிறது “விஜயபாரதம்.”

தந்தை பெரியாரை விட மக்கள் நலனுக்கு, சமூகநீதிக்கு, பெண்ணுரிமைக்கு, மூடத்தன எதிர்ப்புக்கு, பொது ஒழுக்கத்துக்குப் பாடுபட்ட தலைவர் யார்?

திருச்சியில் முதன்முதன் தந்தை பெரியாருக்குச் சிலை வைக்கப்பட்ட போது, சிலைக்குழுவின் துணைத் தலைவர் யார்? அ.வே.ரா.கிருஷ்ணசாமி ரெட்டியார் நாத்திகரா? சிறீரங்கம் வெங்கடேச தீட்சிதர் யார்? கடவுள் மறுப்பாளரா?

தவத்திரு குன்றக்குடி அடிகளார், தந்தை பெரியாரை தலைவர் பெரியார் என்று அழைத்தது எல்லாம் எந்த அடிப்படையில்?

ஆர்.எஸ்.எஸின் வேரில் புழுத்த வருணாசிரம ஜாதிப் புற்றுநோயை ஒழித்து மனித சமூகத்தில் சகோதரத்துவத்தைப் பேணிய ஒப்பாரும் மிக்காருமில்லாத் தலைவர் என்பதற்காகத் தானே.

ஒன்றிய அரசு அவரின் நூற்றாண்டையொட்டி சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டது எந்த அடிப்படையில்?

“இந்தியாவில் இரண்டாயிரம் வருடத்தில் மகத்தான ஒரு சமுதாயப் புரட்சி தமிழ்நாட்டில்தான் நடந்திருக்கிறது. திராவிடர் கழகத் தலைவர் பெரியார் தான் அந்தப்புரட்சியைச் செய்தவர்”  என்பது அமெரிக்காவில் உள்ள மூத்த பேராசிரியர்களின் கருத்து ஆகும்!

- பேராசிரியர் ஜான்னரலி

(‘ஆனந்தவிகடன்’, 16.7.1972)

இந்து ராஜ்ஜியம் என்று கூறி மக்களைப் பிறப்பின் அடிப்படையில் பேதப்படுத்தி குளிர்காயும் ஆதிக்கக் கூட்டத்திற்குப் பெரியார் என்றால் பேரிடியாகத்தான் இருக்கும், பூகம்பமாகத்தான் தோன்றும்.

இவற்றையெல்லாம் கடந்து உலகநாடுகள் போற்றும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் ஒரு பெருந்தலைவர் பெரியாரைத் தூற்றினால், தூற்றியவர்கள்தான் அவமானப்படுவார்கள், தூற்றப்படுவார்கள்.

“கீழை நாடுகளைப் பற்றி பெர்ட்ரான்டு ரசல் ஒரு நூலில் எழுதும்போது, இங்குள்ளவர்கள் எதை எழுதினாலும், பேசினாலும் மேற்கோள் காட்டிப் பேசுவதுதான் வழக்கம். தனது கருத்து என்று வெளியிட மிகவும் தயங்குவார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். நான் அறிந்த வரையில் மேற்கோள் காட்டிப் பேசாமல் தனது அறிவையே முன்வைத்துப் பேசும் தனித்த சிந்தனையாளர் பெரியார் ஒருவர் தான்!

- ஏ.எஸ்.பி.அய்யர் சட்டக்கல்லூரி இயக்குநர்.

10.2.1960 அன்று சென்னை சட்டக்கல்லூரியில் தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் சட்டக்கல்லூரி இயக்குநரான ஏ.எஸ்.பி.அய்யர் இவ்வாறு கூறினார். அந்நிகழ்ச்சியில் தந்தை பெரியார் சிறப்புரையாற்றினார் என்பது முக்கியமானதாகும்,

1927ஆம் ஆண்டிலேயே தன் பெயருக்குப்பின்னால் இருந்த நாயக்கர் பட்டத்தைத் தூக்கி எறிந்த பெரியாரைக் குறிப்பிடும்பொழுது ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்று குறிப்பிடுகிறது ‘விஜயபாரதம்‘ என்றால், அது அவர்களின் பூணூல் ஜாதிப் புத்தியைத்தானே காட்டும்!

ஒழுக்கமுள்ள ஒரு கடவுளைக்கூட “கற்பிக்க” லாயக்கற்ற கும்பல், ஒழுக்கத்தின் ஊற்றுக்கண்ணாக - பொதுப்பணியைத் தொண்டறமாகக் கருதி 95 வயது வரை உழைத்த ஒரு தலைவரைக் கொச்சைப்படுத்த விரும்பினால்,   மக்கள் அவர்களைத்தான் கொச்சையாக நினைப்பார்கள் - அற்பர்களாகக் கூட்டி ஒதுக்குவார்கள்.

ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாடும்பொழுது, ஆளுநர் உட்பட எழுந்து நின்று மரியாதைகாட்டும் நிலையில், குத்துக்கல்லாக உட்கார்ந்த பேர்வழிதானே விஜயபாரதங்களுக்குப் பெரியவாள்!

அதே நேரத்தில் அரசு விழாக்களில் கடவுள் வாழ்த்து பாடப்படும்பொழுது பொது ஒழுக்கம், நாகரிகத்தைப் பேணும் வகையில், தள்ளாத வயதில் தானாக நிற்க முடியாத நிலையிலும், இரு பக்கங்களிலும் தொண்டர்களை நிறுத்தி, அவர்களின் தோள்களில் கையைப் போட்டுக்கொண்டு, அந்தக் கடவுள் வாழ்த்துப்பாடி முடிக்கப்படும் வரை நின்றாரே.

அவர் மனிதரா - காவி வேட்டி மைனர்களா?

ஆர்.எஸ்.எஸின் ஏடான விஜயபாரதத்துக்கு ஒன்று சொல்லிக் கொள்வோம்!

மூன்று முறை அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ். காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்ட போது தடை செய்யப்பட்ட அமைப்பும் கூட!

காந்தியார் சுடப்பட்ட நிலையில் சுட்டவன் நாதுராம் கோட்சே என்னும் பார்ப்பான் என்று தெரிந்த நிலையில் மும்பையில் என்ன நடந்தது?

அக்ரகாரங்கள் எரிந்தன. பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனரே!

தந்தை பெரியார் அன்று கண்ஜாடை காட்டியிருந்தால், இங்கு பார்ப்பனர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும், அக்ரகாரங்களின் நிலை எந்த நிலைக்கு ஆளாகி இருக்கும்?

ஒரு பொறுப்பான தலைவர் என்ற முறையில் அந்த நிலையைத் தடுத்து நிறுத்திட்ட மாபெரும் உன்னதத் தலைவர் தந்தை பெரியார்.

அன்றைய முதலமைச்சரான ஒழுக்க சீலர் ஓமந்தூராரின் அழைப்பின் பேரில் வானொலியில் தந்தை பெரியார் ஆற்றிய உரையால் தமிழ் மண்  அமைதிப் பூங்காவாயிற்று என்பதை மறக்க வேண்டாம்!

தந்தை பெரியாருடன் கருத்து மாறுபட்ட நிலையில் கூட தோழர் ஜீவா சொன்னார் - “பெரியாரை விமர்சிக்கும்போது நிதானம் வேண்டும்!” என்றாரே, அதனை இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்.

‘விஜயபாரதமே’ யாரைப்பற்றி எழுதுகிறோம் என்பதில் நிதானம் தேவை! தேவை!!

செவ்வாய், 27 ஜூலை, 2021

கடவுளுக்குப் பூணூல் போடும் கூட்டம் பெரியார் சிலைக்கு மாலை போடும்போது கு(கொ)திப்பானேன்?

 

கேள்விபெரியாருக்குக் கோவில் கட்டிகிவீரமணியை அர்ச்சகராக நியமித்தால் எப்படி இருக்கும்?

பதில்பெரியார் திடலில் நடப்பது .வெ.ராவழிபாடு தான்அதைச் செய்யும் வீரமணி பூஜாரி தான்அதை விடுங்கள்தமிழகத்தில் பிள்ளை யாரைப் போல் முச்சந்திகளில் இருப்பது .வெ.ராசிலைதான்பிள்ளையார் போல் .வெ.ரா.வுக்கும் கோவில் தேவையில்லை.வெ.ரா.வையும்பிள்¬ ளயாரையும் வழிபடும் முறையில்தான் வித்தியாசம்பிள்ளையார் சிலைக்கு தேங்காய் உடைத்து வழி பாடு.வெ.ராசிலைக்கு மாலை போட்டு வழிபாடுபிள்ளையாரை வழிபடாத வர்களே கிடையாது.வெ.ரா.வை வழிபடாத அரசியல்வாதியே கிடையாதுபா..தலைவர் முருகனே .வெ.ரா.வுக்கு மாலை போட்டு வழிபட்டாரே!

'துக்ளக்' 4.8.2021 பக்.11

தந்தை பெரியார் சிலை நாடெங்கும் இருப்பது பார்ப்பனர்களின் அடி வயிற்றைக் கலக்கோ கலக்கு என்று கலக்கி - அது அவாளின் மூளையையும் (?)தாக்கோ தாக்கு என்று தாக்கிஅதனால் வாந்தியும்பேதியும் ஏற்பட்டுஅதனை பேனாவில் நிரப்பி 'துக்ளக்கொட்டோ கொட்டென்று கொட்டி "ஆசுவாசம்அடைவதைப் புரிந்துகொள்ள முடிகிறது!

234 உறுப்பினர்கள் கொண்ட தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரே ஒரு பார்ப்பானைக்கூட உள்ளே நுழையவிடவில்லையே தமிழ்நாட்டு மக்கள் - ஆத்திரம் அலை மோதாதா அக்கிரகார அம்பி களுக்கு?

பெரியார் சிலை ஒன்றும் வழிபாட்டுக்குரிய ஒன்றல்ல - மாறாகக் கடவுளை மறுக்கும் கம்பீரமான சிலைமானமிகு வீரமணியும் பூஜாரியல்ல - பூணூல் கூட்டத்தின் ஆதிக்கத் திமிரைப் புரட்டிப் போடும் போராளிமாலை போட்டு யாரும் வழிபடுவதும் கிடையாதுநாமும்கூட சொல்லலாம் - செத்த வனுக்கு உயிர் இல்லைசாமிகளுக்கும் சக்தியில்லைஎனவே இரு சாரார்க்கும் மாலை போடுவது அந்த அர்த்தத்தில் தானா?

ஒன்றைக் கவனித்தீர்களாபெரியார் சிலைக்குதமிழ்நாடு பா...  தலைவராக இருந்த எல்முருகன் மாலை போட்டு விட்டாராம்அவருக்கு மந்திரி பதவி வேறு கொடுத்து விட்டார்கள் அல்லவாஅந்த ஆத்திரத்தில் இப்பொழுது குத்தி காட்டுகிறார் குருமூர்த்தி.

தமிழ்நாடு பா..தலைவராக வந்த நிலையில் எல்முருகன் பெரியாரை அவமதித்துப் பேச வேண்டாம்எழுத வேண்டாம் என்று கூறி குருமூர்த்திகளுக்குச் சூடு போட்டார்.

அதனைக் கண்டித்து இதே குருமூர்த்தி என்ன எழுதினார் - பெரியாரை பா..புகழக் கூடாது ('துக்ளக்' 14.10.2020 பக்கம் 5) என்று எழுதவில்லையா?

பெண்களுக்காக பெரியார் பெரிதும் பாடுபட் டவர் என்று பா...வின் அகில இந்திய செயலாளர் வானதி சீனிவாசன் கருத்துக் கூறவில்லையா?

ஆக அங்கேயும் பார்ப்பனர்பார்ப்பனர் அல்லா தார் என்ற பிளவு உள்ளுக்குள் கனலாக தகித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பது வெளிப்படை.

அது சரிதிருப்பதி ஏழுமலையானுக்கும் திருப்பரங்குன்றம் முருகனுக்கும் பூணூல்போட்டுகடவுள்களும் எங்கள்  ஜாதிதான் என்று கூறும் ஜெயேந்திரர் சரஸ்வதியின் சீடகோடிகள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கடவுள்கள் எங்கள் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று பார்ப்பனர்கள் சொல்லும் நிலையில்பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துபெரியார் எங்கள் இனத்தின் பாதுகாவலர்வழிகாட்டி என்று காட்டிக் கொள்ளும்போது ஆத்திரப் பூணூல் 'லபோ துபோஎன்று கு(கொ)திப்பானேன்?

சனி, 8 பிப்ரவரி, 2020

தாராபுரத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்திய வழக்கில் 3 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, பிப்.8 திரிபுராவில் லெனின் சிலை அகற்றப் பட்டது போல், தமிழ்நாட்டிலும் பெரியார் சிலைகள் இடிபடும் என்று பா.ஜ.க.வின் எச்.ராஜா சுட்டுரையில் பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்து மதவெறி தலைக் கேறிய ஒருவன் கடந்த 17.9.2018 அன்று தாராபுரத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்தி, செல்பி எடுத்து தமிழகத்தில்  கலவரத்தை உருவாக்க முயற்சி செய்தான். பின் விசாரணைக்குப் பின் அவன் கந்தசாமி (கவுண்டர்) மகன் நவீன்குமார் என்று அறியப்பட்டு, அவன் மீது குற்ற எண் 454 ஷீயீ 2018 என்ற வழக்கு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 153, 504, மற்றும் 506 (2)  பிரிவுகளின் கீழ் தாராபுரம் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின்  பிணை மனு கடந்த 23.10.2018 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில்,  நீதிபதி வி.தண்டபாணி முன்பு மருத்துவர் கொடுத்த கடிதத்தைக் கொடுத்து மேற்படி நவீன் குமாருக்கு மன நோய்க்காக சிகிச்சை அவசியமாகிறது என்றும், அவரால் யாரையும் அடை யாளம் காண முடியவில்லை என்றும், உடனே பிணை கொடுக்க வேண்டும் என்றும் அவரது வழக்குரைஞர்  வாதிட்டும், அரசு வழக்குரைஞர் மருத்துவர் சான்றிதழ் கொடுத்துப் பேசினார்.

நீதிபதி அந்தக் கடிதங்களை என்னிடம் கொடுத்து ஒரு மனநோயாளியை இன்னும் சிறையில் வைத்திருக்க வேண்டுமா என்று என்னிடம் கேட்க, நான் அவர் மனநோயாளி அல்ல என்றும், தாராபுரம் நீதிமன்றத்தில் இந்த வாதத்தை வைக்காமல், மாவட்ட அமர்வு நீதிமன் றத்திலும், இங்கும்தான் வாதிடுகிறார்கள் என்றேன்.

மேலும் 17.9.2018 ஆம் தேதிக்குப் பின் சென்னை, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை என்று முக்கிய ஊர்களில் பெரியார் சிலை சேதப்படுத்த நவீன்குமாரே காரணம். சென்னையில் பெரியார் சிலை மீது செருப்பு வீசிய ஜெகதீசன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளார். இதற்குக் காரணமான நவீன்குமார் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டும், திருப்பூர் ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை. நவீன்குமார் பெரியார் பிறந்த நாளன்று தெரிந்தே இந்தக் குற்றத்தைப் புரிந்துள்ளார். தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் இன்று வரை எழுத்து மூலமான எதிர்ப்பினை ஏன் பதிவு செய்யவில்லை என்றும், பிணை மனு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.  விசாரணையின் போது நவீன் குமார் தந்தை கந்தசாமியும் (கவுண்டர்) உடனிருந்தார்.

இறுதியில் நீதிபதி நவீன் குமாருக்கு மனநோயாளிக் கான சிகிச்சை அவசியமாகிறது என்றும், அதனால் பிணை வழங்குவதாகக் கூறி கீழ்க்காணும் நிபந்தனை களை விதித்தார்.

1. நவீன் குமாரால் சேதப்படுத்தப்பட்ட தாராபுரம் பெரியார் சிலையை அவர் குடும்பத்தினர் சீர் செய்து சரிப்படுத்த (ரிப்பேர்) வேண்டும்.

2. மன நோய்க்கான சிகிச்சையை நவீன்குமார் உடனடியாக எடுக்க வேண்டும்.

3. மன நோய்க்கான சிகிச்சை முடிந்தவுடன் இரண்டு வாரங்கள் தாராபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.

4. மீண்டும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் உயர்நீதிமன்றம் அளித்த பிணை உத்தரவு தானாகக் காலாவதியாகிவிடும். அவரைக் காவல்துறை அதிகாரி கள் கைது செய்து சிறையில் அடைக்கலாம்.

இவை அநேகமாக மறந்திருக்கலாம்.

மேற்படி வழக்கில் தாராபுரம்காவல்துறையினரால் குற்றப்பத்திரிக்கை இன்று வரை தாக்கல் செய்யப்பட வில்லை. எனவே, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணை செய்து இறுதி அறிக்கையினைத் தாக்கல் செய்ய தாராபுரம் காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று புகார்தாரரும் தாராபுரம் கழக மாவட்ட திராவிடர் கழக செயலாளருமான க.சண்முகம்  உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இம்மனுவின் விசாரணை நேற்று (7.2.2020) நீதிபதி பி.இராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. இன்னும் புலன் விசாரணை முடியவில்லை என்று அரசு வழக்குரைஞர் கூறினார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு களாக இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததை சுட்டிக்காட்டியதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவர்கள் மூன்று மாதங்களுக்குள் குற்றப்பத்திரிக் கையைத் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தர விட்டார்.

- தகவல்: வழக்குரைஞர் சு.குமாரதேவன்

- விடுதலை நாளேடு, 8. 2. 20

வெள்ளி, 24 ஜனவரி, 2020

காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையை உடைத்த காலிகள் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், ஜன.24  உத்திர மேரூர் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத் திரமேரூரை அடுத்த சாலவாக்கம், களியப்பட்டியில் பெரியார் சிலை உள்ளது. நேற்று இரவு வந்த காலிகள் பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்தி சென்றனர். இன்று காலை பெரியார் சிலை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச் சியடைந்துள்ளனர்.

பெரியார் சிலை உடைப்பில் ஈடுபட்ட வன்முறையாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள், திராவிடர் கழகம், திமுக, விடுதலை சிறுத் தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர்  கண்டனப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட் டுள்ளது.

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போராட்டம் நடைபெறாமல் இருக்க அப்பகுதி யில் காவல்துறையினர் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காவல்துறைத் தலைமை இயக் குநருக்கும், தலைமைக் கழகத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட் டுள்ளது.

1998ஆம் ஆண்டு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் இந்த பெரியார் சிலையை திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி  மு.க.ஸ்டாலின் கண்டனம்

தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியுள் ளதாவது:

“95 ஆண்டுகாலம் தமிழகத் திற்காக குரல் கொடுத்த, போராடிய தந்தை பெரியாரை இழிவு படுத்துவதென்பது வேதனைக்குரிய ஒன்று. அந்தச் செயலில் ஈடு பட்டோர் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.’’ என்றார்.

- விடுதலை நாளேடு 24 120