கேரளா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேரளா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 மார்ச், 2022

இசைக்கு மொழி தடையில்லை என்போர் - கலைக்கு மட்டும் மதத் தடை ஏன்? கேரள கோவிலில் இந்து அல்லாத பரத நாட்டியக் கலைஞர் நிகழ்ச்சிக்குத் தடை!


 திருச்சூர்மார்ச் 29  கேரளாவின் திருச்சூர் மாவட் டத்தில் உள்ள இரிஞ்சாலக்குடாவில் உள்ள கூடல் மாணிக்யம் கோயிலில்இந்து அல்லாதவர் என்பதால் கோவில் வளாகத்தில் நடத்திட திட்ட மிடப்பட்ட பரதநாட்டிய  நிகழ்ச்சி தடை செய்யப் பட்டுள்ளது என்று பரத நாட்டியக் கலைஞர் மான்சியா வி.பி குற்றம் சாட்டியுள்ளார்.

பரத நாட்டியத்தில் பி.எச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள மான்சியாமுஸ்லி மாகப்  பிறந்து வளர்ந்த போதிலும்பாரம்பரிய நடனக் கலைஞராக இருந்ததற்காக இஸ்லாமிய மதகுருக்களின் கோபத்தையும்புறக்கணிப்பையும் எதிர்கொண்டார்.

மான்சியா தனது முகநூல் பதிவில், ''எனது நடன நிகழ்ச்சி ஏப்ரல் 21 ஆம் தேதி கோவில் வளாகத்தில் நடைபெற இருந்ததுநான் இந்து அல்லாதவர் என்பதால் கோவிலில் நிகழ்ச்சி நடத்த முடியாது என்று கோவில் அலுவலக அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்ஒரு நல்ல நடனக் கலைஞரா இல்லையா என்பதைக் கருத்தில் கொள்ளாமல்மதத்தின் அடிப்படையில்தான் அனைத்து நிலைகளும் ஆய்வு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளனஇதனிடையேதிருமணத்திற்குப் பிறகு நான் இந்துவாக மாறினேனா என்ற கேள்வியையும் எதிர்கொண்டேன். (அவர் இசையமைப்பாளர் ஷியாம் கல்யாணை மணந்தார்). எனக்கு மதம் இல்லைநான் எங்கு செல்ல வேண்டும்” என்று மான்சியா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்சில ஆண்டுகளுக்கு முன்பு குருவாயூரில் உள்ள குருவாயூர் சிறீ கிருஷ்ணா கோவிலில் இந்து  அல்லாதவர் என்ற காரணத்திற்காக தடை செய்யப் பட்டதாகக் கூறப்பட்டதால்மத அடிப்படையிலான நிகழ்ச்சியிலிருந்து இத்தகைய விலக்கு தனக்கு முதல் அனுபவம் அல்ல என்றும் மான்சியா கூறினார். “கலை மற்றும் கலைஞர்கள் மதம்ஜாதியால் பின்னிப் பிணைந்துள்ளனர்ஒரு மதத்திற்குத் தடை விதிக்கப் பட்டால்அது மற்றொரு மதத்தின் ஏகபோகமாக மாறுகிறதுஇந்த அனுபவம் எனக்குப் புதிதல்லநமது மதச்சார்பற்ற கேரளாவிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதை நினைவூட்டவே அதை இங்கே பதிவு செய்கிறேன்” என்று மான்சியா குறிப் பிட்டுள்ளார்.

இது குறித்து கூடல்மாணிக்யம் தேவஸ்வம் போர்டு தலைவர் பிரதீப்பை தொடர்பு கொண்டு கேட்டபோது, ​​''கோவிலின் தற்போதைய பாரம்பரியத்தின்படிஇந்துக்கள் மட்டுமே கோவிலின் வளாகத்திற்குள் நிகழ்ச்சிகளை நடத்த முடியும்'' என்றார். ''இந்தக் கோவில் வளாகம் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந் துள்ளதுகோவில் வளாகத்தில் 10 நாள்கள் திருவிழா நடக்கும்விழாவின்போது சுமார் 800 கலைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்நமது நெறிமுறைகளின்படிகலைஞர்களை அவர்கள் இந்துக்களா அல்லது இந்து அல்லாதவர்களா என்று கேட்க வேண்டும்மான்சியா தனக்கு மதம் இல்லை என்று எழுத்துப்பூர்வமாக கொடுத்திருந்தார்அத னால்,  அவருக்கு இடம் மறுக்கப்பட்டதுகோவிலில் தற்போதுள்ள வழக்கப்படிதான் செய்துள்ளோம்” என்று கூறினார்.

வெள்ளி, 1 அக்டோபர், 2021

கேரளா: கண்ணூர் பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் தந்தை பெரியார் கருத்துருக்கள் சேர்ப்பு

 

திருவனந்தபுரம்அக்.1- கேரள பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் பெரியாரின் கருத்துருக்கள் சேர்க்கப்பட்டு உள்ளனகண்ணூர் பல்கலைக்கழகத்தில் பாடத் திட்டங்களை கல்வியியல் குழு மாற்றியமைத்துள்ளது.  இதன்படி முதுகலை நிர்வாகவியல் மற்றும் அரசியல் படிப்பில் இடம்பெற்றிருந்த சங்பரிவார்தீனதயாள் உபாத்யாயாபல்ராஜ் மதோக் உள்ளிட்டோர் தொடர் பான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளனஅதே நேரத்தில்நவீன அரசியல் சிந்தனையில் தேசமும் தேசியமும் என்ற தலைப்பில்சாவர்க்கர்கோல்வாக்கர்முகமது அலி ஜின்னாமவுலான அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்டோரின் கருத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

திராவிட தேசியம் என்ற பெயரிலான பாடத்தில் தந்தை பெரியாரின் கருத்துருக்களும் இடம் பெற்றுள் ளன.எம்.எஸ்நம்பூதிரிபாட்ராம் மனோகர் லோஹியா ஆகியோரைக் குறித்த கருத்துருக்களும் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

புதன், 28 ஜூலை, 2021

கேரளாவில் திருமணத்தின்போது அரசு ஆண் ஊழியர்களுக்கு வரதட்சணை மறுப்பு சான்றிதழ் கட்டாயம்

 

 திருவனந்தபுரம்ஜூலை 28- கேரளாவில் அரசுப்பணியில் இருக்கும் ஆண்கள் தங்கள் திருமணத்தின்போது பெண் வீட்டாரிடம் இருந்து வரதட்சணை வாங்கவில்லை என்னும் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்இந்தச் சான்றி தழில் மணமகள்மணமகளின் பெற் றோர் ஆகியோர் கையெழுத்திட்டி ருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இந்தச் சான்றிதழை திருமணம் முடிந்த மாதத்திலேயே அவரவர்களது உயரதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண் டும்  என அறிவுறுத்தப்பட்டுள்ளதுஇப்பணிகளை பெண்கள் மற்றும் குழந் தைகள் நலத்துறை ஒருங்கிணைப்பு செய்கிறதுஇதன் இயக்குநர் அனுபமாஇதுகுறித்து கேரளத்தின் அனைத்து அரசுத் துறை இயக்குநகரங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்இது போக ஒவ்வொரு மாவட்டத்திலும் வர தட்சணை தடுப்பு அதிகாரிகளும் நிய மிக்கப்பட்டுள்ளனர்அவரிடம் அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் உயரதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் துறையில் பணி செய்வோரின் திருமண விவரங் கள்வரதட்சணை மறுப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அறி வுறுத்தப்பட்டுள்ளதுமேலும் வரதட் சணை வாங்கிக் கொண்டு அரசு அதி காரிகள் திருமணம் செய்தது தெரிய வந் தால் அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் கேரள அரசு கடும் எச்சரிக்கை விடுத் துள்ளது.