அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள ‘திராவிட மாடல்’ முதலமைச்சருக்கு கருஞ்சட்டைகளின் ‘டபுள் சல்யூட்!’

 


வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்! ஜாதி ஒழிப்புக்கான முக்கிய மைல்கல்!
ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள ‘திராவிட மாடல்’ முதலமைச்சருக்கு கருஞ்சட்டைகளின் ‘டபுள் சல்யூட்!’

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

ஆணவக் கொலை தடுப்புக்கான  சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள ‘திராவிட மாடல்’ முதல மைச்சருக்கு கருஞ்சட்டைகளின் ‘டபுள் சல்யூட்!’   என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இன்று (17.10.2025) காலை தமிழ்நாடு சட்டப்பேர வையில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘ஆணவக் கொலைகள் தடுப்புக்கான சட்டமொன்றை இயற்றிட, ஓய்வு பெற்ற நீதிபதி ஜஸ்டிஸ் கே.எம்.பாஷா அவர்கள் தலைமையில் ஒரு தனி ஆணையம் அமையும். அதன் வழிகாட்டுதலையொட்டி, அடுத்து ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டம் உருவாகும்’’ என்று விடுத்துள்ள இந்த அறிவிப்பு, இந்தியாவிற்கே வழி காட்டும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனம் ஆகும்!

இதுபற்றி சட்டப்பேரவையில் அவர் உரை யாற்றும்போது, (அண்மையில் 13 நாள்களுக்கு முன்பு)செங்கல்பட்டு – மறைமலை நகரில் நடைபெற்ற நமது சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஜாதி ஒழிப்புக்கான முக்கிய நடவடிக்கையாக ஆணவக் கொலையைத் தடுக்கச் சட்டம் நிறைவேற்றக் கோரும் தீர்மானத்தை முக்கியமாகக் குறிப்பிட்டு, இச்சட்டத்தின் தேவைபற்றிக் கூறியது நம்மை மெய்சிலிர்க்கச் செய்தது. 1929 செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாட்டின் தீர்மானங்களைச் சட்டமாக்கிட 40 முதல் 60 ஆண்டுகள் ஆயின.

4.10.2025 செங்கல்பட்டு மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுத் தீர்மானங்கள் அடுத்த 13 நாள்களில் செயல்பாட்டுக்கு வர ஏற்பாடுகள் தொடக்கம்!

என்னே வேகம்! என்னே விவேகம்!!

இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மாட்சி!

கருஞ்சட்டையினருக்கு ‘முதல் சல்யூட்’ அளித்த எங்கள் ஒப்பற்ற முதலமைச்சர் அவர்களே,

இந்த ஜாதி ஒழிப்பு முயற்சிக்கான ஆணவப் படுகொலை தடுப்புச் சட்ட ஏற்பாட்டுக்கான முன்னெடுப்புக்கு எங்களது ‘டபுள் சல்யூட்’ – வாழ்த்துகள்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை    

17.10.2025          

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

‘‘தகைசால் தமிழர்'' விருது தமிழ்நாடு அரசு அறிவிப்பு

    

 தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து தமிழர் தலைவர் நன்றி!

7

சென்னை, ஆக.1 திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பாக, ''தகைசால் தமிழர்'' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது அறிவிக்கப்பட்ட தமிழர் தலைவர், இன்று (1.8.2023) தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்திற்குச் சென்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

வருகின்ற விடுதலை நாளான 15.8.2023 அன்று வழங்கப்படவிருக்கின்ற ''தகைசால் தமிழர்'' விருதிற்குத் தெரிவு செய்யப்பட்டு, அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத் திற்குச் சென்று அவரை சந்தித்தார்.

தமிழர் தலைவரை வரவேற்று, தனது அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று, பயனாடை அணி வித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பித்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், முதலமைச்சருக்குப் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

அப்பொழுது தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா, முதலமைச்சரின் தனிச் செயலாளர் முருகானந்தம் அய்.ஏ.எஸ். ஆகியோர் இருந்தனர்.

பேனா நினைவுச் சின்னம்

பின்னர், முதலமைச்சரும், தமிழர் தலைவரும் அமர்ந்து உரையாடினர். அப்பொழுது முத்தமி ழறிஞர் கலைஞர் அவர்களுக்குப் பேனா நினைவுச் சின்னம்  அமைப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் நீதியரசர் எஸ்.கே.கவுல் அளித்த தீர்ப்பு சற்று நேரத்திற்கு முன்புதான் வெளி வந்திருந்தது.

பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எந்தத் தடையும் இல்லை எனும் தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தமிழர் தலைவரிடம் தெரிவித்தார்.

தமிழர் தலைவர் அவர்கள், தமக்கு விருது வழங்கிட உள்ளதைவிட பெரிதும் மகிழ்வான செய்தி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்குப் பேனா நினைவுச் சின்னம் அமைவதற்குத் தடையேதும் இல்லை எனும் செய்தியே என்பதை முதலமைச்சரிடம் தெரிவித்தார்.

முதலமைச்சரின் பணிச் சூழலை வெளிப்படுத்தி, தமிழர் தலைவர் மீண்டும் நன்றி கூறி, விடைபெற்றார். 

தமிழர் தலைவர் வருகையின்பொழுது, தரைத் தளத்திலிருந்து முதலமைச்சர் அலுவலகம் அமைந்துள்ள தளத்திற்கு 'லிப்ட்'மூலம் தமிழர் தலைவர் வந்தபொழுதும் முதலமைச்சர் காத்திருந்து வரவேற்றார். நன்றி தெரிவித்துவிட்டு திரும்பிச் செல்லும் பொழுதும் 'லிப்ட்' வரை வந்து முதல மைச்சர் தமிழர் தலைவரை வழியனுப்பி வைத்தார்.

தமிழர் தலைவருடன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் சென்றிருந்தனர்.

அமைச்சர்கள் கே.என்.நேரு - க.பொன்முடி

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, ஆகியோர் பெரியார் திடலுக்கு வருகை தந்து, தமிழர் தலைவர் ஆசிரியருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

முன்னதாக தமிழர் தலைவர் ஆசிரியரை சந்திக்க பெரியார் திடலுக்கு வந்திருந்த திராவிட முன்னேற்றக் கழகத் தீர்மானக் குழு செயலாளர் பொன்.முத்துராமலிங்கம், விருது அறிவிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் தமிழர் தலைவருக்குச் சால்வை அணிவித்து வாழ்த்தினையும், மகிழ்ச்சியினையும் தெரிவித்தார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் "தகைசால் தமிழர்" விருது!

    

 சுதந்திரதின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

6

சென்னை, ஆக.1 "தகைசால் தமிழர்" விருதிற்கு திராவிடர் கழகத் தலைவர் முனைவர் கி. வீரமணி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப் படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால்  தமிழர்" என்ற பெயரில் புதிய விருது 2021 ஆம் ஆண்டு முதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற் காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க் கையில் ஈடுபட்டு, ‘சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு' ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவரும், 1962 இல் ‘விடுதலை' நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டு களையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருப வரும், உண்மை, பெரியார் பிஞ்சு, The Modern Rationalist - (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணைய தளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துகளைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவரும், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச் சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும், திராவிடர் கழகத் தலைவருமான முனைவர். கி.வீரமணி அவர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான "தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

"தகைசால்  தமிழர்" விருதிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட முனைவர் கி. வீரமணி அவர்களுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற 2023 ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும்.

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கோயில்களில் அர்ச்சகர்களாக நியமனம்: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

 

சென்னைஆக. 17- முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 கோயில்களில் அர்ச்சகர்கள் நிய மனம் தொடர்பாக கடந்த ஜூலை 6ஆம் தேதி விண்ணப் பங்களை வரவேற்று அறநிலை யத் துறை சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டதுஇதில் அர்ச்சகர்களுக்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பை முடித்த வர்களும் அர்ச்சகர் பணியி டத்துக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை ரத்து செய்துஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத் தரவிடக் கோரிஅகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் பொதுச்செய லர் பி.எஸ்.ஆர் முத்துக்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில்ஆகம விதிகளைப் பின்பற்றியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக இந்த விளம்பரம் வெளியிடப் பட்டுள்ளது என்றும்ஆகமவிதிப்படி முறையான பயிற்சி பெறாதவர்களை கோயில்க ளில் அர்ச்சகர்களாக நியமிப் பது சட்டவிரோதமானது என் பதால் 38 கோயில்களில் அர்ச் சகர்கள் நியமனம் தொடர் பான அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த்அர்ச்சகர்கள் பணி நிய மனம் தொடர்பாக தற்போ துள்ள நிலையே நீடிக்க வேண் டும் என உத்தரவிட்டு விசார ணையை தள்ளி வைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக விசா  ணைக்கு வந்ததுஅப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக் குரைஞர்கள் பி.வள்ளியப்பன்பி.அய்யப்பன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் ஆர்.சண்முக சுந்தரம்இதே கோரிக்கை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி அமர் வில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கை முதன்மை அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிஇதுபோல நியமிக்கப் படும் அர்ச்சகர்களுக்கு முறை யாக பயிற்சி அளிக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினார்அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்குரைஞர்முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கோயில்களில் அர்ச் சகர்களாக நியமிக்கப்படுவதாக தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதிஇந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.