மணியம்மையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மணியம்மையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 மார்ச், 2023

அன்னை மணியம்மையார் நினைவு நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

வியாழன், 18 மார்ச், 2021

அன்னை மணியம்மையாரின் 43 ஆம் ஆண்டு நினைவு நாள்: எங்களுக்கு வெறும் படம் அல்ல! பாடம் கற்றொழுகும் கடமைப் பாடங்கள்!


அன்னை மணியம்மையார் அவர்கள் எங்களுக்கு வெறும் படம் அல்லபாடம் கற்றொழுகும் கடமைப் பாடங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள நினைவு நாள் அறிக்கை வருமாறு:

உலகில் எந்த ஒரு பெண்ணும் - எந்த  ஒரு தாயும் சுமக்காத தனி மனித தாக்குதல்களையும்தாங்கொணாத அவமானத்தையும்தரக்குறைவான இழிசொற்கள் - புயலையும் தாங்குவதில் அவருக்கிணை அவரே! ‘‘பெரியாருக்குத் தொண்டு செய்வதே என் கடன்என் மான அவமானம் எனக்கு முக்கியமல்ல'' என்று எந்த சூறாவளிக்கும் சாயாத சுயமரியாதைச் சுடரொளி நம் அன்னையார் அவர்களின் 43 ஆவது நினைவு நாள் இன்று! (16.3.2021).

நம் நெஞ்சில் என்றும் வாழ்பவர்!

பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என் பதற்கான இலக்கணமாய்த் திகழ்ந்துநம் நெஞ்சில் என்றும் வாழுபவர் - கொள்கையாய்தொண்டாய்ஈகையாய் ஆனவர் எம் அன்னையார் அவர்கள்!

நம் அய்யாவுக்கு - அறிவு ஆசானுக்கு மட்டுமா அவர் செவிலித்தாய்?

அவர் கண்ட இயக்கமாம் - திராவிடர் கழகத்திற்கும்அய்யாவிற்குப் பின் தலைமையேற்றுவழிநடத்திஅகிலத்தை ஆச்சரியப்பட வைத்தவர் நம் அன்னையார் அவர்கள்!

அவரின் உவமை சொல்ல முடியாத சகிப்புத் தன்மைமூலம் எதிரிகளை வென்றார்.

என்றும் களத்தில் துணிவுடன் நின்றார்!

தூற்றியவர்களின் பாராட்டு மழை யிலும் நனைந்தார்!

தூற்றுதலையும்போற்றுதலையும் ஒன்றுபோலவே சமமாக நடத்திமனதால்  தத்துவ ஞானித் தாயானார்!

போட்டியில் எதிரிகளை மட்டுமா வென்றார்எம் அன்னையார்?

எந்தையாம் என்றும் நம் சிந்தையில் நின்று வழிநடத்தும் தந்தையையும் வென்றார்.

சிக்கனத்தில் - தந்தையோடு போட்டியிட்டு வென்றார்!

சகிப்புத்தன்மையும் எதிர்நீச்சலிலும் அவருக்கு வெற்றியே!

எளிமையில் -அய்யாவே அதிசயக்கத்தக்க வகையில் வாழ்ந்து காட்டி வரலாறு படைத்தார்  - வென்றார்!

ஈகையில்தனக்களிக்கப்பட்டதனது சொத்துக்களை பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் பொதுவுக்காக்கிபூரித்தார்!

நிம்மதியை பெரு வெகுமதியாய் அவரே பெற்று மகிழ்ந்தார்!

பிள்ளைகளை ஏராளம் பெற்றார் - வளர்த்தார்!

இதோ எங்கள் ‘‘நாகம்மையார் குழந்தைகள் இல்லம்'' என்ற அன்னை யின் தாய்ப் பாடத் தொட்டிலைப் பாருங்கள்!

வாராது வந்த எங்கள் மாமணித்தாயே!

வாராது வந்த எங்கள் மாமணித்தாயேஉங்களது தொண்டறம்நேர்மைதனக் கென வாழா எடுத்துக்காட்டான பொதுத் தொண்டு!

எனவேநீங்கள் எங்களுக்கு வெறும் படம் அல்லபாடம் கற்றொழுகும் கடமைப் பாடங்கள்!

வாழ்கவாழ்க!! உங்கள் தொண்டு!

வளர்கவளர்க!! எம் உறுதியான கொள்கைப் பிடிப்பு!!

 

உங்களின் பல்லாயிரம் பிள்ளைகளில் ஒருவன்

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

16.3.2021

அன்னை மணியம்மையார் நினைவு நாள் - சிலை, நினைவிடத்தில் மரியாதை (16.3.2021)


 
அன்னை மணியம்மையார் நினைவு நாளில் தமிழர் தலைவர் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிப்பு - நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை

சென்னைமார்ச் 16- அன்னை மணியம் மையார் நினைவு நாளில் (16.3.2021) காலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பெரியார் .வெ.ராநெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணி யம்மையார் சிலைக்கு கழகத் தோழர்கள்மகளிர் தோழர்கள் மாலை அணிவித்து எழுச்சியுடன் ஒலிமுழக்கங்கள் எழுப்பினர்தொடர்ந்து தமிழர் தலைவர் தலைமையில் ஊர்வல மாக பெரியார் திடல் அடைந்துபெரியார் திடலில் அமைந் துள்ள தந்தைபெரியார் 21 அடி உயர முழு உருவச்சிலைக்கு மாலை வைத்து எழுச்சி முழக்கங்களுடன்  மரியாதை செலுத்தப் பட்டது.

தந்தைபெரியார்அன்னை மணியம் மையார் நினைவிடங்களில் தமிழர் தலை வர் தலைமையில் கழகப் பொறுப்பா ளர்கள் மலர்வளையம் வைத்து மரி யாதை செலுத்தினர்அன்னை மணி யம்மையார் நினைவு நாளையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கையை திரா விட மாணவர் கழக மாநில செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார் வாசித்தார்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன்செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசுபொதுச்செயலாளர் வீஅன்புராஜ்திராவிடர் கழக வழக்குரை ஞரணி தலைவர் .வீரசேகரன்வெளி யுறவு செயலாளர் கோ.கருணாநிதிஅமைப்புச்செயலாளர் வி.பன்னீர்செல் வம்பெரியார் புத்தக நிலைய மேலாளர் ..நடராசன்மோகனா வீரமணிமருத் துவர் மீனாம்பாள்,  பகுத்தறிவு எழுத் தாளர் மன்றத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன்ஆடிட்டர் இராமச்சந் திரன்சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால்வடசென்னை மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன்துணைத் தலைவர் கி.இராம லிங்கம்தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்தாம்பரம் மாவட் டத் தலைவர் .முத்தையன்ஆவடி மாவட்டச் செயலாளர் .இளவரசுஅமைப்பாளர் உடுமலை வடிவேல்மாவட்ட துணைத் தலைவர் முத்தழகுவடசென்னை மாவட்ட செய லாளர் தி.செ.கணேசன்அமைப்பாளர் புரசை அன்புசெல்வன்வடசென்னை மாவட்ட இளைஞரணி தளபதி பாண்டி யன்தென் சென்னை மாவட்ட துணை செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோத ரன்சி.வெற்றிசெல்விநல்லினிபெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக் குநர் பசும்பொன் செந்தில் குமாரிதிரா விட மகளிர் பாசறை மாநில செயலாளர் பா.மணியம்மைகொடுங் கையூர் தங்க.தனலட்சுமிபூவை செல்விபிரிசில்லாமு.பவானிவெண்ணிலா கதிரவன்மீனா குமாரிமோகனப்ரியாமுத்துலட்சுமிகலைமணிகொரட்டூர் கோபால்தே.ஒளி வண்ணன்தாம்பரம் சுமோகன்ராஜ்மா.குணசேகரன்பெரியார் மாணாக்கன்பெரியார் மணியம்மை மருத்துவமனை சார்பில் டாக்டர் தங்கம்திராவிடன் நிதி மற்றும் பெரியார் திடல் பணித் தோழர்கள் அன்னை மணியம்மையார் நினைவுநாள் நிகழ்வில் பங்கேற்றனர்.

திங்கள், 15 மார்ச், 2021

அன்னையாரின் 102 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று: ஆரியத்தை வீழ்த்தி, வீரியத்துடன் இலட்சியத்தை நோக்கி வீர நடை போட சூளுரை ஏற்போம்!


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரின்  உறுதிமொழி அறிக்கை!

இன்று (10.3.2021) அன்னை மணியம்மையாரின் 102 ஆம் ஆண்டு பிறந்த   நாள்ஆரியத்தை வீழ்த்திவீரியத்துடன் இலட்சியத்தை நோக்கி வீர நடை போட சூளுரை ஏற்போம் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள உறுதிமொழி அறிக்கை வருமாறு:

இன்று (10.3.2021) நம் அன்னை .வெ.ராமணியம்மையாரின் 102 ஆம் ஆண்டு பிறந்த நாள்!

தந்தை பெரியாரிடம் - அவர்தம் இயக்கத் திடம் முழுநேரத் தொண்டராகதுணையாக யாரும் கேட்காமலேயே தாமே முன்வந்து தனது பள்ளிப் படிப்பை முடித்துமேற்கொண்டு குலசேகரப்பட்டினத்தில் புலவர் படிப்பு படிக்க முன்வந்துஅதிலும் சேராதுதந்தையின் செயலாளராய்தாதியாய்சேவகியாய் தன்னை ஒப்படைத்துக் கொண்டார் அன்னையார்!

ஓர் அரிய வாய்ப்பு;

ஒரு திருப்புமுனை!

1933 மே மாதத்திற்குப் பிறகு ஒரு பத் தாண்டுகள் தன்னந்தனியராய் சுற்றுப்பயணம் செய்து, 1943 வரை கடுமையாக உழைத்து வந்த தந்தை பெரியாருக்கு சரி வர உணவுகவனிப்பு போதிய அளவில் கிட்ட வாய்ப் பில்லைஆனால்அவர் ஒரு துறவிபோல் அதைப்பற்றி எல்லாம் கிஞ்சிற்றும் கவலைப் படாமல் இயக்கப் பணிகளை - போராட் டங்களை - ‘சிறைப் பறவையாகஅலுப்பு சலிப்பின்றி செய்ததால்வயிற்றுப் புண் - வலிசில நேரங்கள் மயக்கம் - இப்படி உடல்நலம் குன்ற ஆரம்பித்த நிலையில்தான்தந்தை பெரியாரைப் பாதுகாக்கும் மாமருத்துவராக - உடல்நலம் - இயக்கப் பணி கவனிக்க  வேலூர் கே..மணியம்மை கிடைத்தது ஓர் அரிய வாய்ப்புஒரு திருப்புமுனையே!

அதற்குப் பிறகு 6 ஆண்டுகளில் அய்யா வின் முழு நம்பிக்கைக்குரியவராகி அவர்தம் சொத்துக்களுக்கும் பாதுகாவலராகிஅவர்தம் இயக்கத்திற்கும் அய்யாவின் மறைவுக்குப் பிறகு முழுக்காவலராக மாறிசேதாரம் சிறிதுமின்றி சிறப்பாகத் தொண்டாற்றினார்!

பிற்காலத்தில் புரியாதவர்களுக்கும்

புரிய வந்தது!

‘‘திருமணம் என்பது சட்டப்படிக்கான ஒரு பெயரே தவிரமற்றபடி இயக்கப் பாதுகாப் பிற்கான ஓர் ஏற்பாடே ஆகும்'' என்பது பிற்காலத்தில் புரியாதவர்களுக்கும் புரிய வந்தது!

இடையில் ஏற்பட்டது அரசியல் திருப்ப மாகும் - அதுவும் நன்மையாகவே முடிந்தது!

இன்று திராவிட இயக்கத் தத்துவம்லட்சிய ரீதியாகவும்சமூகப் புரட்சி இயக்கமாகவும்அரசியல் மாற்ற இயக்கமாகவும் உயர ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகதந்தை பெரியார் அவர்களும்அவர்களால் உருவாக்கப்பட்ட அறிஞர் அண்ணாகலைஞர் ஆகியவர்களால் அமைக்கப்பட்டுஅவர்கள் இல்லா அடுத்த பொறுப்பாளர்கள் பலத்தோடு வலம் வருவதற்கு முக்கிய அடிப் படை அன்னையாரின் தியாகம்தியாகம்!!

சர்வபரித் தியாகம் செய்தவர் அன்னையார்!

வலிமையை விட இளமையைத் தொண் டறத்திற்காகஇயக்க - கொள்கைப் பாதுகாப் புக்காக தன்னையே தந்து சர்வபரித் தியாகம் செய்தவர்!

எங்கள் அன்னையேஉங்களால் இன்றும் திராவிடம் வாழுகிறதுஎன்றும் வாழும்!

காரணம்இதன் ஆணிவேர் எங்கே என்பது பலருக்கு குறிப்பாக நம் இன எதிரிகளுக்குத் தெரியாது.

ஆயிரங்காலத்துப் பயிரான திராவிடத் தைப் பாதுகாப்பது அதுதான்கொள்கை லட்சியம் - சுயமரியாதைச் சூட்டுடன்!

புதியதோர் அரசியல் திருப்பத்திற்கும் மூலகாரணமான மறைந்தும் மறையாத நம் அன்னையின் ஒப்பற்ற தியாகம்உயரிய தொண்டறம்.

இலட்சியத்தை நோக்கி

வீர நடை போட சூளுரை ஏற்போம்!!

எனவேஉங்கள் பிறந்த நாளில் புதிய பூமியை - புதிய வானத்தை - புத்தாக்கத் திராவிடத்தை வெல்லச் செய்வோம்!

ஆரியத்தை வீழ்த்திவீரியத்துடன் இலட்சியத்தை நோக்கி வீர நடை போட சூளுரை ஏற்போம்!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

10.3.2021