சனி, 26 அக்டோபர், 2019

வீர வணக்கம்! வீர வணக்கம்!

மயிலாடுதுறை இயக்க கொள்கைத் தூண்

மானமிகு கோ. அரங்கசாமி அவர்களுக்கு

வீர வணக்கம்! வீர வணக்கம்!

திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர், மயிலாடு துறைப் பகுதியில் கழகத்தின் பாசறையாக விளங்கி, கழகத் தின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் போன்ற எண் ணற்றவர்களை உருவாக்கி இயக்கத்திற்குக் கொடையளித்த முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் மானமிகு தோழர் கோ.அரங்கசாமி (வயது 93). அவர்கள் நேற்று (25.10.2019) மதியம் மருத்துவமனையில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

அவர் நடத்திய மளிகைக் கடை, கழகத்தின் பாசறை போல் சதா இளைஞர்களால் சூழப்பட்டிருக்கும்.  சுவர் எழுத்தாளர் சுப்பையனுக்கு அடைக்கலம் தந்து தமிழ்நாடு முழுவதும் அவர்சுவர் எழுத்துப் பிரச்சாரம் செய்ய முக்கிய  காரணமாக இருந்தவர்.

சிங்கப்பூர் திராவிடர் கழகத் தலைவராக இருந்த மானமிகு தோழர் தி.நாகரத்தினம் அவர்களின் உடன் பிறவா சகோதரர்!

கழகம் நடத்திய ஜாதி ஒழிப்பு போராட்டமான சட்ட எரிப்புப் போராட்டங்கள் உட்பட கழகம் நடத்திய அத்தனைப் போராட்டங்களிலும் முதலடி எடுத்து வைத்து சிறை ஏகிய இலட்சிய வீரர்.

விளம்பர வெளிச்சத்துக்கு வராமல் எதிலும் பின்புலமாக இருந்து, மற்றவர்களை முன்னிறுத்தி, இயக்க நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற ஊக்கச் சக்தியாக இருக்கும் இயல்பைக் கொண்டவர்.

கழகத்தில் இளைஞர்களைக் கொண்டு வந்து சேர்க்கும் அணுகுமுறையில் முன் மாதிரியாக இருந்தவர் - சிறந்த பண்பாளர்! அவர் மறைவு அவரது குடும்பத்தை மட்டும் சார்ந்ததல்ல. இயக்கம் என்னும் இலட்சிய குடும்பத்துக்கே பேரிழப்பாகும்.

குடும்பத்தில் பிள்ளைகளையும் இயக்க வழி ஆற்றுப் படுத்தியவர்.

சில மாதங்களுக்கு முன், மயிலாடுதுறைக்கு சென்ற நானும், எனது வாழ்விணையிரும் அவரைச் சந்தித்து உரை யாடி விடை பெற்றது தான் இறுதிச் சந்திப்பாக அமைந்தது போலும்!

அவர்தம் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கும், கழகத் தினருக்கும் கழகத்தின் சார்பில் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதுடன், அவர்தம் அளப்பரிய மறக்க இயலா இயக்கத் தொண்டுக்கு வீர வணக்கத்தையும் செலுத்துகிறோம்.

தலைமைக் கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர்  தஞ்சை இரா. ஜெயக்குமார் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்துவார்கள்.

- கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

26.10.2019

குறிப்பு: மானமிகு கோ. அரங்கசாமி அவர்களது உடல் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது.

நவம்பர் முதல் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாட நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

சென்னை, அக். 26- நவம்பர் 1ஆம் தேதியை, தமிழ்நாடு நாள்., என்று கொண்டாட நிதி ஒதுக்கி, தமிழ்நாடு அரசு, அரசாணையை வெளியிட்டுள்ளது.

1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்டதை, பெருமைப் படுத்தும் வகையில் ஆண்டுதோறும் விழா எடுத்து சிறப் பாக  கொண்டாடப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி, அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதியினை தமிழ்நாடு நாள் என சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு அரசு அர சாணை வெளியிட்டுள்ளது.

மேலும் மொழிக்காவலர்கள், மற்றும் தமிழறிஞர் களையும் சிறப்பிக்கும் வண்ணம் விழா எடுத்து சிறப்பிக்கவும் முடிவு செய்திருக்கிறது. மேலும், இளைய சமுதாயம் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்துகொள்ளும் வகையில் கவிய ரங்கங்கள், பட்டிமன்றம், கருத்தரங்கம், இளையோர் அரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுக்க ஏதுவாக, 10 லட்சம் ரூபாய் நிதியினையும் தமிழ்நாடு அரசு ஒதுக்கி யுள்ளது.

- விடுதலை நாளேடு 26 10 19

மராட்டிய மாநிலத்தில் 2 தொகுதிகளில் நோட்டாவிடம் தோற்ற பாஜக கூட்டணி!

மும்பை, அக்.26 மகாராட்டிர சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக கூட்டணியானது, ல தூர் (ஊரகம்) மற்றும் பலூஸ் ஆகிய2 தொகுதிகளில் நோட் டாவிடம் தோற்றுள் ளது.

மறைந்த காங்கிரஸ் தலை வர் விலாஸ்ராவ் தேஷ்முக். முன்னாள் முதல்வரும் ஆவார். இவரது இரண்டு மகன்களும் காங்கிரஸ் சார் பில் வெற்றி பெற்றுள்ளனர். மூத்த மகன் அமித் தேஷ்முக், லதூர்(நகரம்) தொகுதியில் பாஜக வேட்பாளரை 42 ஆயிரம் வாக்குகள் வித்தியா சத்தில் தோற்கடித்த நிலை யில், இளைய மகன் திராஜ் தேஷ்முக், லதூர் (ஊரகம்) தொகுதியில் சுமார் ஒரு லட் சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சிவசேனா வேட்பாளரை டெபாசிட் இழக்க வைத்துள்ளார்.

திராஜ் தேஷ்முக், மொத் தம் பதிவான ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 599 வாக்குகளில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 615 (சுமார் 67.59 சதவிகிதம்) வாக்குகளை அள்ளிய நிலை யில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் சச்சின் என்ற ரவி தேஷ்முக் சுமார் 13 ஆயிரம் வாக்குகளை மட் டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு போயிருக்கிறார். இத்தொகுதியில் நோட்டா 27 ஆயிரத்து 500 வாக்கு களைப் பெற்றுள்ளது. இதே போல, பலூஸ் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வஜீத் கதாம், மொத்த வாக்குகளில் ஒரு லட்சத்து 71 ஆயிரம் (83.04 சதவிகிதம்) வாக்கு களைப் பெற, அவரை எதிர்த் துப் போட்டியிட்ட சிவ சேனா வேட்பாளருக்கு வெறும் 8 ஆயிரத்து 976 வாக் குகள் மட்டுமே கிடைத்துள் ளது. இங்கு நோட்டா பெற் றது 20 ஆயிரத்து 631 வாக் குகள் ஆகும். இவ்வாறு லதூர் (ஊரகம்) மற்றும் பலூஸ் தொகுதிகளில் நோட்டாவி டம் தோற்றது, சிவசேனா - பாஜக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.

இதுதவிர அக்கல்குவா என்ற தொகுதியில் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சிவசேனா வேட்பாளரை, காங்கிரஸ் வேட்பாளர் வென்றுள்ள நிலையில், இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 4 ஆயிரத்து 856 வாக்குகள் கிடைத்துள்ளன.

- விடுதலை நாளேடு 26 10 19

எச்சரிக்கை மணியோசை எங்கும் இனி கேட்கத் தொடங்கட்டும்!

‘‘சமூகநீதி பாதுகாப்பு அணி''யை அனைத்திந்திய அளவில் பலப்படுத்த இதுவே சரியான தருணம்!

ஒத்தக் கருத்துடையோரே ஒன்று சேருவீர்!

காங்கிரஸ் தனது நிலையைப் பலப்படுத்தினால் மீண்டும் எழுவதற்கும் வாய்ப்பு உண்டு. எச்சரிக்கை மணியோசை எங்கும் இனி கேட்கத் தொடங்கட்டும். சமூகநீதி பாதுகாப்பு அணியை அனைத்திந்திய அளவில் பலப்படுத்த இதுவே சரியான தருணம்; ஒத்தக் கருத்துடையோரே ஒன்று சேருங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

அண்மையில் இரண்டு மாநில சட்டப்பேரவை களுக்கான தேர்தல்களும் மற்றும் 51 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் நடந்து முடிந்த நிலையில், தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின.

கனவில் மிதந்த பா.ஜ.க. கூட்டணி

இரண்டு மாநில (மகாராட்டிரா, அரியானா) சட்ட சபைத் தேர்தல்களிலும் சரி, மற்ற இடைத்தேர்தல் களிலும் சரி, பிரதமர் மோடியும், தேர்தல் புலியாக வர்ணிக்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அவர்களது கூட்டணி கட்சிகளும், தங்களது வெற்றி மிக அபரிமிதமான வெற்றியாக அமையும் என்ற கனவில்தான் இருந்தனர்.

ஊடகங்களின் கருத்துக் கணிப்பு, தேர்தல் முடிந்த பின் வந்த Exit Polls முடிவுகள் என்பவைகளில் பெரும்பாலும், இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றும் என்றே உறுதிபடக் கூறின!

தங்களது ஆசைகளை

கனவுக் குதிரைகளாக்கி ஓடவிட்டனர்!

எடுத்துக்காட்டாக, மகாராட்டிரத்தில் 288 இடங்களில் 200 இடங்களுக்குமேல் பா.ஜ.க. சிவ சேனா கூட்டணி கைப்பற்றும் எனவும்,  90 இடங்கள் உள்ள அரியானாவில், 70 இடங்களுக்குமேல் பா.ஜ.க. கூட்டணிக்குக் கிடைத்து ஆட்சியை மீண்டும் பா.ஜ.க. அமைக்கும் என்றும் கூறினர்!

அதுமட்டுமல்ல, ஆங்காங்கே உள்ள எதிர்க்கட்சி கூட்டணிகள் முன்பு வைத்திருந்த இடங்கள் பலவற் றையும்கூட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி.) இழக்கும் என்றும்கூட எழுதித் தங்களது ஆசைகளை கனவுக் குதிரைகளாக்கி ஓடவிட்டனர்!

பா.ஜ.க.வின் வாக்கு வங்கி

பெரிதும் சரிந்துள்ளது!

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இவ்விரு மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், அதிதீவிர தேசியவாதம் (Hyper Nationalism) பேசியதோடு, பாகிஸ்தான் கண்டனம், காஷ்மீரில் 370 அரசமைப்புச் சட்டப் பிரிவு நீக்கம் - இவற்றைப்பற்றியும் பேசி, அதற்கான  Referendum வாக்கெடுப்பு என்பதாக, குடியுரிமை சட்டம்பற்றியுமே பேசினர்.

சிக்கலான பொருளாதார சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம் போக்கல், விவசாயிகளின் வாழ்வாதார உயர்வுக்கான வழிகளையோ மற்ற முக்கிய மக்களின் வாழ்வாதாரத்தைப்பற்றியோ அதிகம் குறிப்பிட வில்லை.

ஆனால், (2019 இல்) கடந்த 6 மாதங்களுக்குமுன் பிரதமர் மோடி, பா.ஜ.க.வும் பெற்ற வாக்கு வங்கி - பெரிதும் சரிந்துள்ளது என்பது சுவரெழுத்துபோலத் தெரிகிறது!

மொத்தம் 10 நாடாளுமன்ற இடங்களைப் பெற்ற அரியானா மாநிலத்தில் பா.ஜ.க. பெற்ற வெற்றி, 90 இடங்களில்  (Assembly Segments) 79, அதேபோல மகாராட்டிரத்தில் 280 இடங்கள் மொத்தம் என்றால் அதில் பெற்ற வெற்றி 230 ஆகும்!

அவைகளுடன் இப்போது அக்கட்சி பெற்ற வெற்றியை ஒப்பிடும்போது பெரிய விரிசல், ஓட்டை அங்கே ஏற்பட்டுள்ளது; வாக்காளர்கள் ஆதரவு தேய்பிறையாகி வருகிறதே தவிர, வளர்பிறை யாகவோ அல்லது முந்தைய வெற்றி அளவிலோ இல்லை.

பா.ஜ.க.வின் இறங்கு முகத்தின் தொடக்கம் என்பதற்கான அறிகுறி!

அரியானாவில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 58.2 சதவிகிதம் வாக்குகளை பா.ஜ.க. பெற்றது. இப் போது 36.2 சதவிகித வாக்குகளைத்தான் பெற்றுள் ளது!

51 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் (17 மாநிலங் களில் பரவலாக நடைபெற்றுள்ளது) 21 இடங்களை மட்டுமே பா.ஜ.க. கூட்டணி இப்போது பெற்றிருப்பது, இறங்கு முகத்தின் தொடக்கம் என்பதற்கான அறிகுறி போன்றதல்லவா?

அதுபோல இரண்டு நாடாளுமன்றத் தொகுதியில் ஒன்றில்தான் பா.ஜ.க. (உ.பி.யில்) வெற்றி பெற்றுள்ளது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜ ராத்தில் 6 சட்டமன்ற இடைத்தேர்தலில் மூன்றை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது!

பா.ஜ.க.வுக்கு, எதிர்க்கட்சிகள் பலமான ஒருங் கிணைந்த வலுவான போட்டியைத் தர ஆயத்த மாகாத நிலையில், இந்த வெற்றிகள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளும், அரியானா ஜே.ஜே.பி. கட்சி என்ற துஷ்யந்த் சவுதாலா கட்சியும், மகாராட்டிராவில் பிரகாஷ்  அம் பேத்கரின் ஒடுக்கப்பட்டோர் கூட்டணி (ஜோதி பாபூலே - அம்பேத்கர்) இணை நிலைப்படுத்தப்பட்ட கட்சி நல்ல வெற்றி பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது, கோடிட்டுக் காட்டப்படவேண்டிய ஒன்றாகும்.

‘கட்சி மாறிகளுக்கு' வாக்காளர்கள்

பாடம் கற்பித்துள்ளனர்

பா.ஜ.க.வின் ‘கட்சி மாறிகளுக்கு' வாக்காளர்கள் நல்ல பாடம் புகட்டும் அளவுக்கு நல்ல தோல்வியை தந்துள்ளார்கள்.

மகாராட்டிராவில் பா.ஜ.க. - சிவசேனா கூட்டணி என்பது அடிக்கடி உறவில் விரிசல் காணும் கூட்டணியாகவே உள்ளது. எந்த அளவுக்கு நிலையான அரசு வரும் என்பது சரியாக கணிக்க முடியாது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்!

எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகாத நிலையில், குறிப்பாக ஏழை, எளிய, விவசாயிகள், தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினர் உள்ள தொகுதிகளில் (பெரும்பாலான ரிசர்வ் தொகுதிகளில்) காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது; முன்னாளில் இவை பா.ஜ.க. வசமிருந்தவை.

எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்

மத்தியில் அவசரக்கோலத்தில் அள்ளித் தெளித்ததுபோல், விவாதங்கள் இல்லாமலேயே மசோதாக்கள் பெரும்பான்மை கைதூக்கிகளால் நிறைவேற்றப்படும் ஜனநாயக உணர்வுக்கு எதிரான வற்றிற்  கு எதிராக எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்!

ஊடகங்கள் இதுபோன்ற உண்மைகளை மறைக்காமல், நடுநிலை, பொது நிலையில் கருத்துச் சுதந்திரத்தை பறிபோகவிடாமல், எழுத, பேச முன்வருதல் அவசியம்.

சமூகநீதி பாதுகாப்பு அணியை அனைத்திந்திய அளவில் பலப்படுத்த இதுவே சரியான தருணம்

மும்பையில் டாக்டர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் அவர்கள் நல்ல முன்மாதிரியாக, ஒடுக்கப்பட்டோர் அம்பேத்கர் புலே பெயரை வைத்து ஒரு கூட்டணியைத் தொடங்கியது நல்ல பலன் தந்துள்ளது.

அதுபோன்ற முயற்சி வளரவேண்டும் - அகில இந்திய அளவிலும், தென்னாடு, வடநாடு, கிழக்கு, மேற்கிலும்.

காங்கிரஸ் தனது நிலையைப் பலப்படுத்தினால் மீண்டும் எழுவதற்கும் வாய்ப்பு உண்டு. எச்சரிக்கை மணியோசை எங்கும் இனி கேட்கத் தொடங்கட்டும். சமூகநீதி பாதுகாப்பு அணியை அனைத்திந்திய அளவில் பலப்படுத்த இதுவே சரியான தருணம்; ஒத்தக் கருத்துடையோர் ஒன்று சேருங்கள்!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

26.10.2019

வெள்ளி, 25 அக்டோபர், 2019

வாழ்நாள் சாதனையாளர் தமிழர் தலைவர் வாழ்க!

ஆ. வந்தியத்தேவன்

அமைப்புச் செயலாளர், ம.தி.மு.க.

அமெரிக்க மனித நேயர் சங்கமும், பெரியார் பன்னாட்டு அமைப்பும் இணைந்து, 22.09.2019 அன்று அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் - மேரிலாண்டில் நடத்திய சுயமரியாதை தத்துவ மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி பாராட்டியுள்ளது. இந்த இனிய வேளையில், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார் பிலும், 'சங்கொலி' ஏட்டின் சார்பிலும் இதயம் கனிந்த வாழ்த்துகளை நம்' ஆசிரியர்' அய்யா   கி.வீரமணிக்கு தெரிவித்து மகிழ்வோம்!

தமிழகத்தில் 'சுயமரியாதை இயக்கம்' வீறு கொண்டு எழுந்த 1927 ஆம் ஆண்டில் அமெரிக் காவின் சிக்காகோ நகரில் சூல் கொண்டு உருவான இயக்கம்தான் மனித நேய தோழமை இயக்கமான Humanist fellow ship   எனும் இயக்கம்! 1928 ஆம் ஆண்டில் புதிய மனித நேய இயக்கமாக The New Humanist என்ற பெயரில் புதுவடிவம் பெற்றது. 1952 ஆம் ஆண்டில் பன்னாட்டு மனித நேய அமைப்பான,  International Humanist and Ethical Union  என்ற அமைப்பில் தம்மை இணைத்துக் கொண்டு, மனித நேயம், மத நல்லிணக்கம், பகுத்தறிவு, நாத்திகம், அறப்பணிகளில் ஈடுபடுதல் முதலான பணிகளில் முழு வீச்சில் இயங்கி வருகிறது மனித நேயர் சங்கம்!

பால்கர்ட்ஸ், கார்ல்சாகன், ஆலிவர் ஸ்டோன், கேதரின்ஹாப்பன், ஜான்டிலே, வாஸ்திமேகலம், ஆண்டன் ஜே. தர்சன் என உலக முழுவதிலும் உள்ள மனித நேயச் சிந்தனையாளர்களுக்கும், கல்வியாளர் களுக்கும், களப்பணியாளர்களுக்கும், அமெரிக்க மனித நேயர் சங்கம் 1953 ஆம் ஆண்டு முதல் விருது வழங்கி சிறப்பு செய்து வருகிறது.

இதனைப்போல, அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து, பெரியார் பன்னாட்டு அமைப்பு (Periyar International) 13.11.1994 முதல் இயங்கி வருகிறது. மருத்துவர் சோம.இளங்கோவன், வி.ஜே. பாபு, தேம்பாவணி கோபாலகிருஷ்ணன் ஆகியோர்களை இயக்குநர்களாகக் கொண்ட இந்த அமைப்பு அமெரிக்காவிலும், பிற அயல்நாடுகளிலும் பெரியார் கொள்கை களை பரப்பும் பணியில் மிகச் சிறப்பாக ஈடுபட்டு வருகிறது. 1996 ஆம் ஆண்டு முதல் சமூகநீதிக்காக பாடுபடும் மாமனிதர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையுடன், சமூகநீதிக்கான வீரமணிவிருதையும் இந்த அமைப்புவழங்கி வருகிறது. சமூகநீதிக் காவலர் வி.பி.சிங், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர், பீகார் முதல்வர்

நித்திஷ்குமார், காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி, முன்னாள் மத்திய அமைச்சர் சந்திரஜித்யாதவ்,

உபி. மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி, ஒடிசா பகுத்தறிவாளர் கழக தலைவர் பேராசிரியர் தானேசுவர் சாகூ, அய்தராபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சாமி, மியான்மர் வீரமுனிசாமி, சிங்கப்பூர் எஸ்.டி.மூர்த்தி, குவைத் செல்லபெருமாள், பிற்படுத் தப்பட்டோர் சங்க தலைவர் ஹனுமந்தராவ், கருநாடக மாநில அட்வகேட் ஜெனரல் இரவிவர்மகுமார் முதலான பலருக்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பு 'வீரமணி விருது' அளித்து பாராட்டியது.

ஜெர்மன் மொழியில் தந்தை பெரியார் குறித்து நூல் எழுதியும் - முத்தொள்ளாயிரம்' எனும் தமிழ் இலக்கியத்தையும், திருக் குறளையும் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்தும், தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களான இருளர் சமுதாய மக்கள் குறித்து கள ஆய்வு செய்தும் - ஜெர்மனியின் கொலோன் பல்கலைக் கழகத்தில் பெரியார் சுயமரியாதை இயக்க மாநாட்டை நடத்தியும், அருந்தொண்டு ஆற்றிவரும் அம்மையார் பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்லஸ் (Ulrike Niklas) அவர்களுக்கு இந்த ஆண்டிற்கான 'சமூக நீதிக்கான வீரமணி விருதை', பெரியார் பன்னாட்டு அமைப்பு இந்த மாநாட்டில் வழங்கி பெருமைப் படுத்தியது.

இந்தவரலாற்று சிறப்புமிக்க மாநாட்டில்தான் அமெரிக்க மனித நேய சங்கமும், பெரியார் பன்னாட்டு அமைப்பும் இணைந்து 2019 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை (Humanist Life Time Achievement Award)  'ஆசிரியர்' மானமிகு கி.வீரமணிக்கு அளித்து மகிழ்ந்த து. அமெரிக்க மனித நேய சங்கத்தின் செயல் இயக்குநரான ராய்ஸ்பெக் ஹார்ட் (Roy Speck Hardt) விருதினை வழங்கி பாராட்டினார்.

"தந்தை பெரியார் உயிரோடு இல்லாத நிலையில், என்னை அடையாளப்படுத்தி அளிக்கப்பட்ட விருது இது! எனக்காக கொடுக்கப்பட்டது அல்ல இந்த விருது!" என்று விருதினைப் பெற்றுக் கொண்டு தன்னடக் கத்துடன் குறிப்பிட்டதோடு, பெரியார் பணி சிறக்க துணை நிற்கும் தன் வாழ்விணையர் அம்மையார் மோகனா அவர்களையும், திராவிடர் கழகத்தின் தலைமை நிர்வாகிகளையும் மேடைக்கு அழைத்து 'இவர்களுக்கும் பெரியார் தொண்டர்கள் அனைவருக்கும் அளிக்கப் பட்ட விருது இது!' என்றும் குறிப்பிட்ட ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பண்பு நலன் கண்டு அனைவரும் வியப்பின் எல்லைக்கே சென்று திகைத்து நின்றார்கள்!

'ஆசிரியர்' கி.வீரமணி அவர்கள், மாணவப் பருவம் தொட்டு பாராட்டுகளை விருது களாகப் பெற்று ஒளி வீசிய மகத்தான சாதனையாளர் ஆவார்!

தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே, சாலமன் கதையில், மன்னராக நடித்து, வசனங்களை சிறப்புடன் பேசி, கைத்தட்டல்களை பரிசாகப் பெற்றவர் அவர்!

எட்டாம் வகுப்பில் பயின்று கொண்டிருந்த போது, அவரின் தமிழ் ஆசிரியர் புலவர் பழனியாண்டி (முதலியார்) பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, மாணவர்களை ஆய்வு செய்ய வந்த மாவட்டக் கல்வி அலுவலரான முருகேச (முதலியார்), 'உங்களில் எவருக்காவது திருக்குறளை சொல்ல இயலுமா?' எனக் கேட்டார். அப்போது நம் வீரமணி அவர்கள் எழுந்து நின்று பத்து திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்து, அதன் விளக்கத்தையும் சொன்னதையும் கேட்டு, மகிழ்ந்த ஆய்வாளர் பள்ளி இறுதி வகுப்பு வரை, கல்விக் கட்டணம் செலுத்தி மேலும் மாதம் ஒரு ரூபாய் கிடைக்கும் அளவுக்கு கல்வி உதவித் தொகையினை வீரமணி அவர்களுக்குப் பெற்றுத் தந்தார்! அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், பொருளாதார பாடத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றபோது, லேடி ஸ்டேரத்தே விருது, நடரா சாதங்க மெடல், ஒரேநேரத்தில் மூன்று பாராட்டு விருதுகள் - உதவித் தொகைகள், தந்தை பெரியார் அவர்கள் 100 ரூபாய் பணத்தை தந்தி மணியார்டர் மூலம் அனுப்பி கல்விக் கட்டணம் செலுத்த செய்த உதவி, நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்கள் தந்தை பெரியார் தலைமையில் நாடகங்களை நடத்தி, அதன் மூலம் கிடைத்த தொகையை கல்விச் செலவுக்கு அளித்த உதவி இவைகளைப் பெற்று பிஞ்சுப் பருவத்திலேயே நம் அய்யா வீரமணி நிகழ்த்திய அரும் சாதனைகள் ஏராளம்! ஏராளம்!!

5 ஆம் வகுப்பில் பயின்று கொண்டு இருந்தபோதுதான் (29.07.1944 அன்று) கடலூரில் நடைபெற்ற தென்னார்க் காடு மாவட்ட திராவிடர் மாநாட்டை திறந்து வைத்து உரையாற்ற வருகை தந்த அய்யா பெரியாரை முதன் முதலாக சந்தித்தார் வீரமணி! அப்போது திராவிட நாடு படத்தை திறந்து வைத்துப்பேச அறிஞர் அண்ணா அவர்களும் அங்கே வந்திருந்தார்.

அந்த மாநாட்டில், அவரது ஆசிரியர் ஆ.திராவிடமணி அளித்த பயிற்சியினைப் பெற்று முழக்கமிட்டு, அனைவரின் பாராட்டு களையும் பெற்றார் வீரமணி! மாநாட்டில், அண்ணா உரையாற்றும்போது, வீரமணி அவர்களின் உரையைச் சுட்டிக்காட்டித்தான் தன் உரையைத் தொடங்கினார்.

"இப்போது பேசிய சிறுவன் வீரமணி காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்ராட்சம், அணிந்து இப்படி பேசியிருந்தால் இவரை, இந்தக்கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கி இருப்பார்கள். இவர் பேசியதில் இருந்து, இவர் உண்டதெல்லாம் ஞானப் பால் அல்ல. பெரியாரின் பகுத்தறிவுப்பால் தான்!" என்று திராவிடர் கழகத்தின் திருஞான சம்பந்தராக சிறுவன் வீரமணியை பாராட்டிப் புகழ்மாலை சூட்டினார் அண்ணா!

ஓராண்டு கழித்து, சென்னை ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் நடைபெற்ற மாநாட்டிலும், பெரியார் - அண்ணா முன்னி லையில் சிறுவன் வீரமணி எழுச்சியுரை ஆற்றினார். அப்போது தங்க முலாம் பூசிய வெள்ளி மெடலை, கி.வீரமணி அவர் களுக்கு வழங்கி பாராட்டி சிறப்பு செய்தார், அய்யா பெரியார்!

"இளமை வளமையை விரும்பும் என்பர்

இளமை எளிமையை விரும்பிய புதுமையை

வீரமணியிடம் நேரில் கண்டுள்ளேன்!

பாடிக் கைவீசிப் பலருடன் உலவி

வேடிக்கை வேண்டும் வாடிக்கைதனை

அவன்பாற் காண்கிலேன் அன்றும் இன்றும் !

தொண்டுமனப் பான்மை அந்தத் தூயனை

கொண்டது குழந்தைப் பருவத்திலேயே!

தமிழன் அடிமை தவிர்த்து குன்றென

நிமிர்தல் வேண்டும் என்று நிகழ்த்தும்

பெரியார் ஆணை ஒன்றே பெரிதெனக்

கருதிய கருத்து வீர மணியை

வீண் செயல் எதிலும் வீழ்த்தவில்லை!"

என்று மணக்கோலம் பூண்டிருந்த நம் ஆசிரியர் வீரமணிக்கு வாழ்த்துப்பா பாடிய புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளே ஆசிரியரின் பண்பு நலனுக்கான பாராட்டுப் பத்திரம் அல்லவா?

நன்றி: 'சங்கொலி' 11.10.2019

- விடுதலை நாளேடு, 25. 10. 19

வியாழன், 24 அக்டோபர், 2019

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை இல்லை: அசாம் மாநில அரசு அறிவிப்பு

கவுகாத்தி, அக். 24- இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற் றால் அவர்களுக்கு அரசு வேலை இல்லை என அசாம் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

2021 ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள வர்களுக்கு எந்த அரசாங்க வேலைகளும் வழங்கப்பட மாட்டாது என்று அசாம் அமைச்சரவை முடிவு செய் துள்ளது.

கடந்த திங்கள்கிழமை மாலை நடைபெற்ற அமைச்ச ரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் வெளியிடப் பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் புதிய நில சீர்திருத்தக் கொள்கை மற்றும் இரண்டு குழந்தைக ளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு பணி இல்லை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

நிலமற்ற பழங்குடி மக்க ளுக்கு வேளாண்மை செய்ய வும் வீடு கட்டவும் நிலம் ஒதுக் கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் தந்தது. மேலும், அரசு வழங்கும் இலவச நிலத்தை 15 ஆண்டுகாலத் துக்கு மற்றவர்களுக்கு விற்பனை செய்ய முடியாது எனவும் அரசு அறிவித்துள்ளது. இச் சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்றும் அரசு எச்சரித் துள்ளது.

அத்துடன் 2021 ஜனவரி 1 ஆம் தேதி முதல் 2 குழந்தைக ளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு பணி இல்லை என்ப தற்கான ஒப்புதலையும் அமைச் சரவை கொடுத்துள்ளது. தற் போதைய அரசு ஊழியர்க ளும் இதனை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என அசாம் முதலமைச்சர் சர் பானந்தா சோனோவாலி வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு 24 10 19

புதன், 23 அக்டோபர், 2019

கல்வி நிறுவனங்களுக்குள் ஜாதி, மத ரீதியாகப் பிரிக்கும் ஏற்பாடா?

தமிழக  அரசின் தடுப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது

தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்து

சென்னை, அக்.23 தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி களில் மத ரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதைக் கண்காணிப்பதற்கும், அவ்வாறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக சுற்றறிக்கை அனுப் பப்பட்டுள்ளது. இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  கருத்து கூறியுள்ளார்.

தமிழகத்தில் மத ரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதைத் தடுக்குமாறு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்து மாணவர் முன்னணி, இந்து இளைஞர் முன்னணி என்ற பெயரில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களைத் திரட்டுவதாக தகவல் கிடைத் துள்ளது. இந்துப் புராணங்கள், இதிகாசங்கள், இந்துத் தலைவர்கள் பற்றிய பிரச்சாரங்கள் பள்ளிகளில் நடப்பதாக தகவல் வந்துள்ளனவாம்!

இந்து மாணவிகளை லவ் ஜிகாத் பெயரில் மற்ற மதத்தினர் கலப்பு மணம் செய்வதை தடுக்க இந்து அமைப்புகள் முயற்சி எடுக்கின்றனர்.

10 மாணவர்களைக் கொண்ட குழுக்களையும் இந்து மாணவர் முன்னணி அமைத்து வருவதாகவும் புகார் கிடைத்துள்ளது.

இந்து மாணவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் குழு அமைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

மாணவர்களை மதரீதியில் அணிதிரட்டுவது கல்வி நிலைய நிர்வாக விதிமுறைகளுக்கு எதி ரானது.

இதுகுறித்து அறிக்கை அளிக்க பள்ளிகளுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளர் எஸ்.வெங்கடேசன் அவசரக் கடிதம் அனுப்பி யுள்ளார்.

தமிழர் தலைவர் பேட்டி

இதுகுறித்து தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சன் செய்திகள் தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்ததாவது:

இது வரவேற்கத்தக்கது!

‘‘சில நேரங்களில் இப்படி வேகமாக சொல்வதும், பிறகு, சிலருடைய சல சலப்பைக் கண்டு பின்வாங்குவதுமாக இருக்கக்கூடியது - ஏற்கெனவே சில நிகழ்வுகள் நடைபெற்று இருக்கின்றன.

எனவே, ஜாதி ரீதியாகவோ, மத ரீதி யாகவோ அவர்களை அடையாளம் காட் டுவது, மாணவர்களை இப்படிப் பிரித்து, மதவெறி உணர்ச்சியூட்டுவது  என்பது விரும்பத்தக்கதல்ல. இது மதச்சார்பற்ற நாடு. எனவேதான், பிஞ்சு உள்ளத்தில் நஞ்சைப் பரப்பக்கூடாது.

இதில் உறுதியாக இருக்கவேண்டும். இதற்காக தமிழக அரசின் முயற்சியை வர வேற்கிறோம்'' என்று தனது பேட்டியில் கூறினார் திராவிடர் கழகத் தலைவர்.

-விடுதலை நாளேடு 23 10 19

பயிர் காப்பீட்டு இழப்புத் தொகையை விவசாயக் கடன்களுக்கு வரவு வைப்பதா?

பயிர் காப்பீட்டுக்கான இழப்பீட்டுக்காக வேளாண்மை வங்கிகள் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை விவசாயிகளுக்குக் கொடுக்காமல், அவர்கள் விவசாயத்துக்காக ஏற்கெனவே வாங்கிய கடனுக்காக வரவு வைப்பது மனிதாபிமானமற்ற செயல்! எனவே,  தமிழக அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை வழங்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சியின் முன்னணியினர் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித் துள்ளனர் (21.10.2019). மாவட்ட ஆட்சியர் சார்பில், மாவட்ட வருவாய் அலுவலர் மனுவைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

கஜா புயலால் தஞ்சை மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், பயிர் காப்பீட்டுத் தொகை தொடக்க வேளாண்மை வங்கிகள்மூலமாக வழங்கப்படும் நிலையில், அந்தத் தொகை யைப்  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்காமல், ஏற்கெனவே விவசாயத்துக்காக விவசாயிகள் பெற்ற கடனுக்காக வரவு  வைத்துள்ளனர் என்ற செய்தி உண்மை யிலேயே அதிர்ச்சிக்குரியது - இன்னும் சொல்லப்போனால், சிறிதும் மனிதாபி மானற்ற செயலாகும் இது.

இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கடன்களை இரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை ஒரு பக்கத்தில் எழுந்துள்ள நிலையில், இப்படி யொரு செயலை மேற்கொள்ள எப்படித்தான் அரசுக்கு மனம் வந்ததோ தெரியவில்லை.

விவசாய  முதலமைச்சர் என்று ஒரு பக்கத்தில்  பெருமையாகப் பேசிக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் விவசாயிகளின் வயிற்றில் இப்படி அடிக்கலாமா?

இதனை ஒரு கட்சி பிரச்சினையாக, அரசியல் நோக்காகப் பார்க்காமல், அவதிப் படும் விவசாயிகளின் கண்ணீர்ப் பிரச்சினை என்பதை எண்ணி தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கவேண்டும் என்று வலி யுறுத்துகிறோம்.

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

23.10.2019

செவ்வாய், 22 அக்டோபர், 2019

‘தினமலரின்' சிறுமைப்புத்தி!

- ‘தினமலர்', 21.10.2019

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பேச்சை வெளியிட்டு, அதற்கு மேலே தனது கருத்தை ‘தினமலர் திரிநூல்' பதிவு செய்துள்ளது.

எந்தக் காரணமாக இருந்தாலும் சிறைக்கு ஒருவர் செல்வது அவமானமாம் - சொல்லுகிறது ‘தினமலர்'.

இதனைப் படித்தால் கோவணம் கட்டாத கோலி விளையாடும் சிறுவன்கூட வாயால் சிரிக்கமாட்டான்.

கொலைக் குற்ற வழக்கில் சிறைக்குச் சென்றார்களே காஞ்சீபுரம் இரண்டு சங்கராச்சாரிகள்; அதைப்பற்றி அவ்வாறு ‘தினமலர்' எழுதியதுண்டா?

விடுதலைப் போராட்டத்துக்காக சிறை சென்றவர் களையும் கொச்சைப்படுத்துகிறதா ‘தினமலர்?' வைக்கத்தில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு இருமுறை சிறை சென்றாரே தந்தை பெரியார், அதுவும் ‘எந்தக் காரணமாக இருந்தாலும்' என்ற தலைப்பின்கீழ் வருமா?

‘தினமலர்' கிருஷ்ணமூர்த்திமீதான வழக்கில் அவர் சிறை சென்றால், அவரும் அந்த இரகத்தில்தான் வருவாரா?

இன்றைய மத்திய உள்துறை அமைச்சர் ‘என்கவுண்ட்டர்' வழக்கில் சிறைக்குள் சென்றாரே அப்பொழுதெல்லாம் இதுபோல ‘தினமலர்' எழுதியதுண்டா?

‘மிசா'வில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்மீது கொண்ட காழ்ப்பால் ஒட்டுமொத்தமாக சிறை சென்ற அனைவரையும் சிறுமைப்படுத்தும் பார்ப்பன ‘தினமலரை' அடையாளம் காண்பீர்!

- விடுதலை நாளேடு 22 10 19

கழகங்கள் இல்லாத தமிழகமா?

கேள்வி: திராவிடக் கட்சிகள் இல்லாத தமிழகம் சாத்தியமா?

பதில்: இன்றைய கட்சிகள், கழகங்கள் எவ்வளவு நாள் இருக்கும் என்று சொல்ல முடியாது. நிச்சயமாக அவை நிரந்தரமானவையல்ல. ஆனால், தமிழகம் நிரந்தரமாக நிலைத்து இருக்கவே செய்யும். எனவே,  இன்றைய கழகங்கள், கட்சிகள் இல்லாத தமிழகம் சாத்தியமே!

- ‘துக்ளக்', 23.10.2019, பக்கம் 7

சாத்தியமா - இல்லையா என்பதைவிட இவாளின் ஆசையைத்தான் வேறு சொற்களால் வெளிப்படுத்துகிறது ‘துக்ளக்'.

திராவிட அரசியல் கட்சிகளோடு இனி கூட்டு இல்லை என்று பகிரங்கமாக அறிவிக்கும் துப்பு உண்டா இதுகளுக்கு? இதனை சவால் விட்டே கேட்கிறோம்.

தி.மு.க.தான் தமிழ்நாடு என்று  பெயர் சூட்டியது - இருமொழிக் கொள்கையை சட்டமாக்கியது.

தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது.

சுயமரியாதைத் திருமணத்துக்கு சட்ட வடிவம் கொடுத்தது. பட்டப் படிப்புவரை இலவசக் கல்வி கொடுத்தது; பெண் களுக்குச் சொத்துரிமை கொடுத்தது - ஏராளமான திட்டங்களைப் பெண்களுக்காக அறிவித்து செயல்படுத்தியது.

ஏழைகளுக்குக் குடிசை மாற்று வாரியத்தைக் கொண்டு வந்து இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தது.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தைக் கொண்டு வந்து, ஜாதி ஒழிப்புக்கு ஆக்க ரீதியான செயலாக்கத்தை செய்துகாட்டியது.

பெரியார் சமத்துவபுரத்தைக் கொண்டு வந்தது.

விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களை இடைத் தரகர்களுக்கு இடமின்றி விற்பனை செய்ய உழவர் சந்தை கொண்டுவரப்பட்டது.

அ.தி.மு.க. ஆட்சியில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடுக்கு வழி செய்யப்பட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக சூத்திர இழிவை (வேசி மக்கள்) எதிர்த்து ஒழிப்பது திராவிட இயக்கக் கொள்கை.

இன்னும் எத்தனை எத்தனையோ உண்டு. இவற்றை யெல்லாம் அழித்துவிட்டு பா.ஜ.க. பட்டம் சூட்டிக் கொள்ளப் போகிறதா?

மத்திய பி.ஜே.பி. ஆட்சியில் பொருளாதார வீழ்ச்சி நலிவு ஒன்று போதாதா, அதன் இலட்சணத்துக்கு?

இந்தியையும், சமஸ்கிருதத்தையும்

தூக்கிச் சுமக்கும் இவாள் ஆட்சியை

இடறித் தூக்கி எறிவார்கள்

திராவிட பூமி மக்கள் -

எச்சரிக்கை!

மும்மொழி திட்டத்தின் அடிப்படையில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதலாம் கடும் போராட்டத்தை சந்திக்க நேரிடும்!

மும்மொழி திட்டத்தைக் கட்டாயப்படுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கு நாளை (23.10.2019) மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சிக்குரியது. இது உண்மையானால் கடும் மக்கள் போராட்டத்தை மத்திய அரசு சந்திக்க நேரிடும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு புதிய கல்விக் கொள்கையை தயாரித்திருந்தது. இதன் வரைவு அறிக்கை வெளியிடப் பட்டபோது இந்தி கட்டாயம் என்ற பரிந்துரைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

மேலும், மும்மொழிக் கொள்கை, இந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் என்ற பரிந்துரைகள் எதிர்ப்பை ஏற்படுத்தின. இதனை அடுத்து, புதிய கல்விக்கொள்கை வரைவுமீது பொதுமக்கள், கல்வி யாளர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு கோரியிருந்தது. பல தரப்பினரும் (நடிகர் சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள்) புதிய கல்விக்கொள்கைக்கு எதிராகப் பேசியதால், அரசியல் அரங்கிலும் புதிய கல்விக் கொள்கையின் திரைமறைவில் பதுங்கியிருக்கும் ஆபத்துகள் பரவலாகப் பொதுமக்களிடத்தில் போய்ச் சேர்ந்தன.

இந்நிலையில், புதிய கல்விக்கொள்கை மீதான பொதுமக்கள் கருத்து கூற கால அவகாசம் முடிந்த நிலையில், அந்த கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டனவாம்!

நாளை ஒப்புதலா?

இந்த நிலையில் வரும் புதனன்று (23.10.2019)  அமைச்சரவைக் கூடி புதிய கல்விக்கொள்கை மசோதாவிற்கு ஒப்பு தல் அளிக்க உள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. (‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா', 22.10.2019).

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை திணிப்பதில் வேகம் காட்டுகிறது. ஜூலை மாத இறுதி யில் புதிய கல்விக்கொள்கை கருத்துக் கேட்கும் பணி முடிவடையும் என்று கூறிய நிலையில், எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ஆகஸ்ட் இறுதிவரை என்று கூறியது. அதன் பிறகு புதிய கல்விக் கொள்கை குறித்து அமைதிகாத்து வந்த மத்திய அரசு மகாராட்டிரா மற்றும் அரியானா தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த உடனேயே புதிய கல்விக்கொள்கை குறித்த மசோதாவில் முக்கிய முடிவை எடுக்கவிருப்பதாக தெரிவித்துள்ளது. வரும் புதன் கிழமையன்றே புதிய கல்விக் கொள்கை மசோதா அமைச்சரவையின்  ஒப்புதலுக்கு அளிக்கப்படுகிறதாம்.

ஏமாற்று வேலை!

கடும் எதிர்ப்புப் புயல் சுழன்றடிக்கும் நிலைமையிலும், மும்மொழிக்கொள்கை என்ற பரிந்துரையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அதில் இந்திவேண்டாம் என்றால் அதற்கு பதிலாக ஏதேனும் ஒரு செம்மொழி மூன்றாவது மொழியாக பயிற்றுவிக்கப்படும் என்றும்  கூறப்படு கிறது.

தற்போது, இந்தியாவில் தமிழ், மலை யாளம், சமஸ்கிருதம், ஒடியா, தெலுங்கு, கன்னடம் ஆகிய 6 மொழிகள் செம்மொழி தகுதியைப் பெற்றுள்ளன என்பது  குறிப்பிடத்தக்கது.

மேம்போக்காகப் பார்க்கும்பொழுது, இந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் இல்லை என்று புறத் தோற்றத்திற்குத் தெரிந்தாலும், இது ஓர் ஏமாற்று வேலையே! நடை முறையில் இந்தியும், சமஸ்கிருதமும் கட்டாயமாகும் என்பதே  யதார்த்த நிலை யாகும்.

ஒரு வகுப்பில் ஓரிரு மாணவர்கள், ஒடியா, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளைப் படிக்க விரும் பினால், அதற்கு ஏற்பாடு செய்வது சாத்தியமா? பெரும்பாலானவர்கள் இந் தியும், சமஸ்கிருதத்தையும்தான் படிக்க விரும்புகிறார்கள் என்று காரணம் கூறி, தங்கள் திட்டத்தை மத்திய பி.ஜே.பி. அரசு அரங்கேற்றியே தீரும்.

எதையும் சூழ்ச்சி வலை விரித்து, தங்கள் எண்ணத்தை நிறைவேற்றுவது தானே பார்ப்பனீயம். அப்படிதான் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரிலும் நிறைவேற்றத் துடிக்கிறது.

கல்வியாளர் சிந்தனை எது?

இது ஒருபுறம் இருக்கட்டும். பிஞ்சு வயதில் மூன்று மொழிகளைத் திணிப் பதும், 5, 8, 10, 12 வகுப்புகளுக்குத் தேர்வு என்று அச்சுறுத்துவதும் கல்வியியல் நோக்கில் ஆபத்தானது - உளவியல் பாதிப்பை பிள்ளைகளுக்கு ஏற்படுத்தும் எனும் கல்வியாளர்களின் கருத்துக்கு என்ன பதில்? கஸ்தூரி ரங்கன் குழு என்பது கல்வியாளர்கள் குழு அல்லவே!

‘‘முதலையும், மூர்க்கனும் கொண்டது விடான்'' என்பது இன்றைய மத்திய பி.ஜே.பி. ஆட்சிக்குப் பொருந்தக் கூடி யதே!

 

கடும் போராட்டம் வெடிக்கும் - எச்சரிக்கை!

மும்மொழித் திணிப்பை எதிர்த்து கடும் போராட்டப் புயல் வீசப் போகிறது - அதனை மத்திய அரசு எதிர்கொள்ளத் தயாராக இருக்கட்டும்! இந்தியாவுக்கே பெரியார் மண் இதில் வழிகாட்டியாக இருக்கும் என்றும் தொலைநோக்கோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

22.10.2019

திங்கள், 21 அக்டோபர், 2019

பிரதமர் மோடி தமிழைக் கையில் எடுப்பது ராஜதந்திரமாம் ஆர்.எஸ்.எஸ். - விஜயபாரதம் கூறுவதைத் தமிழர்களே புரிந்துகொள்வீர்!

பக்திப் போதை ஊட்டப்பட்டாலும் பெரியார் பிறந்த மண் பா.ஜ.க.வுக்கு இடமில்லை என்பதில் உறுதியாகவே இருக்கும்!

ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜய பாரதம்', பிரதமர் மோடி தமிழைக் கையில் எடுத்திருப்பது ராஜதந்திரம் என்று சொல்வதன்மூலம், தமிழின்மீது உண்மையிலேயே அக்கறையில்லை என்பதை வெளிப்படுத்துகிறதா? இல் லையா? அதேபோல, பக்தி பெருகி ஓடுகிறது என்று ‘தீபாவளி மலரில்' ‘விஜயபாரதம்', ஹிந்து விரோதக் கும் பலுக்குத் தோல்வி என்று தலையங்கம் தீட்டி மகிழலாம்; ஆனால், பெரியார் பிறந்த மண் பக்திப் போதையால் ஏமாந்துவிடாமல், பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்று வாக் குகள்மூலம் நிரூபித்துதான் வருகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அண்மைக்காலங்களில் பிரதமர் மோடி அவர்கள், ‘தமிழ்மொழி மீது தனக் குள்ள தீராக் காதலை' - வாய்ப்பு நேரும் போதெல்லாம் வெளிப்படுத்தி வருகிறார்!

அவரது தமிழ் மொழி மீது கொண்ட தீராக் காதலை - வழிந்தோடும் தமிழ்ப் பற்றைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. ஆர்.எஸ்.எஸ். ஏடான ‘விஜயபாரதம்' (18.10.2019) ஏட்டிலும், அட்டைப் படத்திலும்!

பிரதமரின் பேச்சு

‘‘சென்ற வாரம் சென்னை அய்.அய்.டி. யில் அவர் ஆற்றிய உரையில், ‘‘தமிழ் மொழி உலகின் மூத்த மொழி'' என்றது தமிழகத்தில் திராவிட இயக்கங்களுக்குக் கிலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒரு வார்த்தை மட்டுமே தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு ‘கிலி' ஏற்படுத்தியதற்கான காரணமல்ல!

இதற்கு முந்தைய வாரம் அமெரிக்கா விலுள்ள அய்.நா. சபையின் 74 ஆவது பொதுக்குழுவில் பாகிஸ்தானுக்குப் பதி லடி தந்து உலக நாடுகள்வரை அசத்திய பேச்சின் அடிநாதம் கணியன் பூங்குன் றனாரின் ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்'' மேற்கோளாகும்!

இதே கட்டுரையிலே, பிரதமர் மோடி யின் திடீர்த் தமிழ்க் காதல் ஏன் வந்தது? எப்படி வந்தது? எதனால் தேவைப் படுகிறது? என்பதன் உள்நோக்கத்தை நாம் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும், ‘‘ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோன் புலிவேஷம் போட்டு ஆடுகிறார்; விழிப் போடு இருங்கள்'' - தமிழ்நாட்டு மக்களே என்று எச்சரிக்கை மணி அடிப்பதற்குத் தேவையே இல்லாமல், ‘‘பார்ப்பான் புத்தி எப்போதும் பின்புத்திதான்'' என்று  தந்தை பெரியார் சொல்வதை நிரூபிக்கும் வண்ணம்  - அதே ஏடு, அதே கட்டுரையில் கூறியுள்ள விளக்கம், மோடியும் - ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும் போடும் ஒப்பனையை அவிழ்த்துக்காட்டி, நமது (விளக்கப்) பணியை எளிதாக்கி விட்டது!

‘‘பூனைக்குட்டி வெளியே வந்துவிட் டது'' என்று கூறும் தந்தை பெரியார் கூற்றுக்குச்  சரியான  உண்மை விளக்க மாகிறது!

தமிழைக் கையில் எடுப்பது ராஜதந்திரமாம்!

மேலும், அவ்வேட்டின் விளக்கம் இதோ, படியுங்கள், கேளுங்கள்!

‘‘இந்தியா முழுவதும் காவி மயம் ஆகிவரும் சூழ்நிலையில், தமிழகம் மட்டும் தனித்து நிற்பதும், அதுவும் தொடர்ந்து திராவிடக் கும்பல்கள் கையில் சிக்கித் தவிப்பதும் (அ.தி.மு.க.வுக்கும் சேர்த்துத்தானே இந்தக் குட்டு - சாஷ்டாங்க சரணாகதி மன்னர்கள் இதை யாவது கேட்டு முதுகெலும்பைத் தேடு வார்களா இனி?) உண்மையில் மோடி குழுவுக்கு பெரும் கவலை அளித்து (‘மோடி கம்பெனி'  என்பதன் தமிழாக் கம்தானே சரியாகச் சொன்னால்) வரும் விஷயம்தான். பாடம் புகட்ட தமிழையே ஆயுதமாக, தமிழைப் பிழைப்பாக்கி, 60 ஆண்டுகளாக அரசியல் செய்துவரும் தி.மு.க. கும்பலுக்கு  எடுத்த  ராஜதந்திரத்தை இப்போது தொடங்கி இருக்கிறார் கள் '' என்று எழுதுகிறது ‘விஜயபாரதம்.'

புரிந்துவிட்டதா? தமிழ்ப் பெரு மக்களே, திராவிடத்தின் தீரம்மிக்க அறிஞர்களே!

‘‘தமிழைப் பற்றி, தமிழ்நாட்டைப் பற்றிப் பேசுவது, வேட்டி கட்டுவது, கவிதையை தமிழில் மொழி பெயர்த்து ஊடகங்களில் உலாவரச் செய்தல்,''

‘‘...பின்பொருதரம் நெற்றி முழுவதும் சந்தனப்பட்டையுடன் கூடிய வேட்டி சட்டை உடுத்திய போஸ்! மோடியின் நெஞ்சார்ந்த தமிழ்ப் பற்றுக்கான சான்றுகள்.'' இதுவும் ‘விஜயபாரதம்'தான்.

- எப்படியிருக்கிறது?

தமிழ் என்னும் தூண்டில்

உடைகளை மாற்றுவதில் உலக மகா நாயகனாக பிரதமர் மோடி எப்போதும் திகழுவதும், 10 லட்சம் ரூபாயில் எளிய சட்டை இங்கிலாந்தில் தயாரித்து உடுத்தி, ஏலம் விடும் வித்தையும் இவரைத் தவிர வேறு யாருக்கும் வரும் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

மோடி அவர்களுக்கு இப்போது தமிழ்நாட்டை வளைக்க - ‘‘பிடிக்க'' வேறு எந்தத் தூண்டில்களைவிட தமிழ் மொழித் தூண்டிலில் சில மீன்கள் சிக்காதா என்ற சபலத்தின் வெளிப்பாடே இந்தத் திடீர்த் தமிழ் காதல் என்ற நாடகம்! என்பதை ‘விஜயபாரத' கட்டுரையே காட்டிக் கொடுத்துவிட்டதே!

தமிழ்நாடும், தமிழர்களும் அவ்வளவு இளிச்சவாயர்கள் அல்ல; ஒருபோதும் ஏமாந்த சோணகிரியாகமாட்டார்கள்.

‘தீபாவளி மலர்' என்ன கூறுகிறது?

ஆரியக் கூத்தாடிகளை ரசித்தாலும் கூட காரியத்தில் கண்ணாயிருப்பார்கள் பெரியார் மண்ணின் மைந்தர்கள் என்பதையும் ஆர்.எஸ்.எஸ். ஏடு தனது தொடர்ந்து ஒப்பாரி - அழுகுரலில் அதன் தீபாவளி மலர் (25.10.2019) தலையங்கத்தில் உள்ளதே, நாம் பதில் கூறுவதற்கு அவசியமற்றதாக்கி விட்டது.

இதோ அதன் ஆதங்கம் - பாரீர்!

‘‘தமிழ்நாட்டில் ஒரு கும்பல் தொடர்ந்து ஹிந்து விரோத பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்; இவர்களின் பிரச்சாரத் திற்கும் பிறகும்கூட,  காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் செய்ய ஒரு கோடி பக்தர்கள் திரண்டனர் என்றால், தமிழ்நாடு எப்போதும் ஆன்மிகத்தின் பக்கம் என்பதை நிரூபித்திருக்கிறது.

ஹிந்துக்கள் கோவிலுக்குப் போவது மட்டுமல்லாமல், ஓட்டுப் போடச் சொல் லும்போதும், ஹிந்துவாக வாக்கு அளிக்க வேண்டும்; ஹிந்து விரோத தேச விரோத, பிரிவினைவாத கும்பல்களுக்கு ஹிந் துக்கள் வாக்களிக்க மாட்டோம் என்று இந்தத் தீபாவளி நன்னாளில் சபதம் ஏற்போம்'' என்று ஓலமிடுகிறது.

இதன் பொருள் என்ன?

பக்தி வேறு - வாக்கு வேறு

பக்திப்  போதையை எவ்வளவு தான் இவர்கள் ஊட்டினாலும், ஒருபோதும் ஏமாந்துவிடாது தந்தை பெரியாரின் தமிழ் மண் என்கிற ஒப்புதல் வாக்குமூலம் தந்த ஆர்.எஸ்.எஸ்.சுக்கு நன்றி!

பக்திப் போதையை ஊட்டினாலும் பா.ஜ.க.வைப் புறக்கணிப்பதில் தெளி வாகவே, உறுதியாகவே தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற ஆற்றாமையைத் தானே அவாளின் ‘தீபாவளி மலர்' வெளிப்படுத்துகிறது.

முகமூடிகளும்,ஒப்பனைகளும் ஒருபோதும் நிரந்தரமாகி, எம்மக்களை ஏமாற்றிட முடியாது!

புரட்சியாளர் அம்பேத்கரையும் விழுங்கிட முயற்சி செய்யும் இந்தக் காவிக் கூட்டத்தால், பெரியார் என்ற நெருப்பிடம் நெருங்கினால் - ஆசைப் பட்டால், நிச்சயம் பருத்தி - பஞ்சு பொதி யின் கதிக்கு ஆளாவார்கள் என்பதில் அய்யமில்லை.

தமிழ்மீது அக்கறை இருந்தால் பிரதமர் என்ன செய்யவேண்டும்?

உண்மையிலேயே தமிழ்க்காதல் பிரத மருக்கு - பா.ஜ.க. மத்திய ஆட்சிக்கு இருக் குமானால், எம்மொழியான செம்மொழி வளர்ச்சி நிறுவனத்தை முடக்கிப் போட்டு, சமஸ்கிருத புளியேப்பக்காரர்களுக்கு விருந்து வைப்பதும், தமிழ்மொழி நிறுவன பசியேப்பக்காரர்களை பட்டினி போட்டுக் கொல்லும் பரிதாப நிலையை மாற்றிட முன்வராதது ஏன்?

கோவில்களில் தமிழையே பயன்படுத் தவும், நீதிமன்றங்களில் தமிழ் பயன்பட மத்திய அரசு  முட்டுக்கட்டை போடாமலி ருக்கவும் ஆணைகளைப் பிறப்பிக்க மோடி அரசு முன்வரட்டுமே! தமிழையும் ஆட்சி மொழியாக்கட்டுமே!

சமஸ்கிருதம் தேவபாஷை - தமிழ் நீஷபாஷை என்று இனி கூறமாட்டோம் என்று பிரகடனம் செய்வார்களா?

புரட்சிக்கவிஞர் கூறினார்,

‘‘வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்

வாழ்வினில் உயர்ந்த பின் தமிழையே பழித்தார்''

எவ்வளவு பெரிய உண்மை!

ஏமாற்றாதீர்! ஏமாறாதீர்!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

21.10.2019


சனி, 19 அக்டோபர், 2019

குஜராத்: தேர்வு எழுதிய 119 நீதிபதிகளும் தோல்வி!

அகமதாபாத்,அக்.19 குஜராத் மாநிலத்தில், மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வை எழுதியவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத அவலம் அரங்கேறியுள்ளது. அதிலும் தேர்வை எழுதிய வர்களில் 119 பேர் உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகளாக, நீதித்துறை அதிகாரிகளாக ஏற்கெனவே பணியாற்றி வரு பவர்களாக உள்ளனர்.

இவர்கள் தவிர ஆயிரத்து 372 வழக்குரைஞர்களும் தேர்வை எழுதி தோல்வி அடைந்துள்ளனர். குஜராத் மாவட்ட நீதிமன்றங்களில் மொத்தம் 40 நீதிபதி பணியிடங்கள் காலியாகஉள்ளன. விதிமுறைகளின்படி, மொத்த காலிப் பணியிடங்களில் 65 சதவிகித இடங்கள், மூத்த உரிமையியல் நீதிபதிகளைக் கொண்டும், 25 சதவிகிதம் வழக்குரைஞர்கள் மூலமாக வும், 10 சதவிகிதம் மாவட்ட கூடுதல் நீதிபதிகளில் இருந் தும் நிரப்பப்பட வேண்டும். இதன்படி கடந்த ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு கள் நடைபெற்றன. இறுதி யாக 494 வழக்குரைஞர்களும் 119 நீதிபதிகளும் களத்தில் இருந் தனர்.

கடந்த வாரம் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலை யில் நீதிபதிகள் தேர்வில் ஒரு வர் கூட தேர்ச்சிபெறவில்லை என்று அறிவிக்கப்பட்டுள் ளது. இது நீதித்துறை வட் டாரத்தில் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

- விடுதலை நாளேடு 19 10 19

பிரேமலதா உரிமைக்குரல்



மதுரை அருகே கார்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் (அப்பா லாரி ஓட்டுநர், அம்மா விவசாயக் கூலி) பிரேமலதா என்ற மாணவி. 2011 ஆம் ஆண்டில் இளமனூர் ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார்.

அய்.நா. மனித உரிமைக் கவுன்சில் சார்பில், மனித உரிமைக் கல்வியை மாண வர்கள் எப்படிக் கற்கிறார்கள், அதன்மூலம் அவர்களிடம் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்பதுபற்றி ஆவணப்படம் எடுக்க வந்த போது, மாணவி பிரேமலதா பேசினார்.

ஜாதி ரீதியான பாகுபாடு, பாலினப் பாகுபாடுபற்றி அவர் பேசினார்.

எட்டு வருடங்களுக்குப் பிறகு ஜெனீவா மனித உரி மைக் கவுன்சிலிடமிருந்து அழைப்பு வர பிரேமலதா ஜெனீவா சென்றார். இந்தியா சார்பில் சென்ற ஒரே மாணவி இவர்தான் - ஜெனீவாவில் அவர் என்ன பேசினார்?

அவர் வாயாலேயே கேட் போம்:

‘‘நம் ஊரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், பெண்கள் படும் துன்பங்கள், ஜாதிப் பாகுபாடுகள், கல்வி கற்க பட்டியல் சமூக மக்கள் படும் இன்னல்கள் பற்றிப் பேசினேன். ‘நீட்' போன்ற தேர்வுகளால் அனிதா தற்கொலை செய்து கொண்டதையும், இதுபோன்ற தேர்வுத் தடைகளால் பட்டியல் சமூக மாணவர்கள் உயர்கல்வி படிக்க முடியாமல் போவதை யும் பேசினேன். மேலும் ‘நீட்' போன்ற தேர்வுகளைத் தடை செய்ய இந்தியாவை வற்புறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.''

- ‘‘ஜூனியர் விகடன்'', 16.10.2019, பக்கம் 38-39

இந்திய அரசின் மானம் ஜெனீவாவரை கப்பலேறி விட்டது. ஜாதி காப்பாற்றப்பட வேண்டும் என்ற கொள் கையை அடிப்படையாகக் கொண்ட பா.ஜ.க. நாட்டை ஆள்கிறது. அந்த வகையில் பார்த்தால், மாணவி பிரேமலதா ஜெனீவா வரை சென்று அய்.நா.வின் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசுக்குச் சாட்டையடி கொடுத்து முகத்திலும் கரியைத் தடவி விட்டார் (வெட்கம், மகாவெட்கம்!)

‘நீட்'டைப்பற்றியும் நெற்றி யடி கொடுத்திருக்கிறார். இட ஒதுக்கீட்டை நேரடியாக ஒழிக்க முடியாத பார்ப்பன சக்திகள் ‘நீட்' போன்ற அகில இந்தியத் தேர்வுகளை நடத்தி, அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட மக்களை ‘உதைத்து' வெளியே தள்ளுகிறார்கள்.

பிளஸ் டூ தேர்வில் 1200 மதிப்பெண்ணுக்கு 1176 மதிப் பெண் பெற்ற அனிதாவும், 1125 மதிப்பெண் பெற்ற பிரதீபாவும் தற்கொலை செய்துகொண்டது தான் மிச்சம்.

‘நீட்' வந்த பிறகு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படித்த மாணவர்கள் பெற்ற இடங்கள் அய்ந்தே அய்ந்து; என்னே கொடுமை!

‘நீட்' இல்லாதபோது சி.பி. எஸ்.இ. மாணவர்கள் பெற்ற இடங்கள் 62. ‘நீட்' வந்த பின் பெற்ற இடங்கள் 1,220. அதா வது 20 மடங்கு அதிகம்.

புரிகிறதா ‘நீட்'டின் சூழ்ச்சி?

பிரேமலதா உரிமைக் குரல் ஓங்குக!

- மயிலாடன்

- விடுதலை நாளேடு 19 10 19

இந்துத்துவா பார்வையிலும் - ஈரோட்டின் பார்வையிலும் பெண்கள்!

கலி.பூங்குன்றன்


விதவைப் பெண்கள் தரிசு நிலத்துக்குச் சமமானவர்களே   - ஒன்றுக்கும் உதவாதவர்கள்  - காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி - "தினமணி" தீபாவளி மலர் -1997

*****


வேலைக்குச் செல்லும் பெண்களில் 10 சதவிகிதம் பேர்கள்தான் ஒழுக்கமாக இருக்கிறார்கள் - என்று இதே சங்கராச்சாரியார் சொன்னதற்காக, காஞ்சிபுரத்தில் திராவிடர் கழக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது (9.3.1998)

"இன்று பெண்கள் அதிகம் கல்வி கற்க ஆரம்பித்து விட்டார்கள். திருமணத்தின் போது கணவன் மனைவி இருவரின் கல்வியும், சரிசமமாக இருந்து வருகிறது. சிலவேலைகளில் கணவனைவிட மனைவி அதிகம் படித்தவளாக இருக்கிறாள் அல்லது திருமணத்திற்குப் பிறகு படித்துப் பட்டம் பெற்று விடுகிறாள்.

சிலர் கணவனைவிட உயர் பதவிக்குச் சென்று விடுகிறார்கள். வருமானமும் கணவனைவிட அதிகம் வரத் துவங்கி விட்டது. இந்த இடத்தில் கணவனின் மனநிலைக்கு ஏற்ப  நடக்காத சூழல் மனைவிக்கு ஏற்பட்டுவிடும். இங்கு ஈகோவும் தோன்றி விடுகிறது. இந்த ஈகோதான் இந்தியாவில் இப்பொழுது நடக்கிறது. அதிகமான விவாகரத்துக்குக் காரணமாக  அமைந்து விடுகிறது.

மனைவி கணவனுக்கு சேவகம் செய்வதே கடமையாகக் கொள்ள வேண்டும். பெண்கள் இந்தக் கடமையிலிருந்து விலகி விட்டால் அந்தப் பெண்ணை விலக்கி விடுவது நல்லது.

மனைவி என்பவள் கணவனின் தேவை களை நிறைவேற்றுவதை மட்டுமே கடமையாகக் கொள்ள வேண்டும். வீட்டைக் கவனிக்க வேண்டும். கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். கணவனுக்கு இன்பம் தர வேண்டும். இது பெண்ணின் கடமை. இந்தக் கடமையிலிருந்து ஒரு பெண் விலகி விட்டால், அப்பெண் தேவையில்லை. அவருக்கான ஒப்பந்தம் முடிந்து விட்டது. விலக்கிவிட வேண்டும். கணவனின் தேவையை நிறைவேற்றாத மனைவியை உடன் வைத்திருப்பதால் கணவனுக்கு என்ன பயன்? ஆகையால் திருமணம் என்னும் காண்ட் ராக்டை முடித்து விட வேண்டும்."

- இவ்வளவையும் பேசி இருப்பவர் இப்பொழுது உடன்கட்டையை ஆதரித்துப் பேசும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சாட்சாத் மோகன் பாகவத்துதான் - எங்கே பேசினார்? இந்தூரில் ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டத்தில் (30.6.2014).

பாரதத்தில் கற்பழிப்பு நடக்கவில்லை - இந்தியாவில் தான் கற்பழிப்பு நடப்பதாகக் கூறியதும் சாட்சாத் இந்த ஆர்.எஸ்.எஸ். தலை வர்தான்.

ஆர்.எஸ்.எஸ். - பிஜேபியில் இருக்கும் பெண்கள் இதைப் பற்றி எல்லாம் சிந்தித்த துண்டா?

பார்ப்பன நீதிபதி பார்வையில் பெண்கள்


Women should go back to their homes and not think of competing with men on everything. Since the lady is more capable of building the home. what is necessary that there must be a switch over from office to home.

பெண்கள் வீட்டு வேலைகளை நிருவாகம் செய்வதில் திறமை உள்ளவர்கள். ஆதலால் அவர்கள் அரசு அலுவல்கள், பணிகளிலிருந்து விடுபட்டு அவரவர்கள் வீட்டுக்குச் சென்று அந்தப் பணிகளில் ஈடுபடவேண்டும். எதற் கெடுத்தாலும் ஆண்களோடு போட்டிப் போடும் மனோபாவத்தைக் கைவிட வேண்டும்.

- (8.11.1996 அன்று பிரம்மகுமாரிகள் மாநாட்டில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா உரையிலிருந்து)

இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30 சதவீதம் பேர்தான்:


எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு


இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30 சதவீதம் பேர்தான் உள்ளனர் என்று இந்திய ரிசர்வ் வங்கி இயக்கு நர்களில் ஒருவரும், "துக்ளக்" ஆசிரியருமான எஸ். குரு மூர்த்தி பேசியிருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

"துக்ளக்" ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தற்போது ஆர்பிஅய் இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். அரசியல் ஆலோசகராக இருக்கும் இவர் பாஜக கட்சித் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமானவர். தமிழகத்திலும் அதிமுக தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கக் கூடியவர். சமீபத்தில் துணை குடியரசுத் தலைவர் சென்னையில் வெளியிட்ட புத்தக விழாவிலும் நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்திருந்த அதே மேடையில் இவரும் காணப்பட்டார்.

சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றின் 10 ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் எஸ். குருமூர்த்தி கலந்துகொண்டு பேசுகையில், "இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30 சதவீதம் பேர்தான் உள்ளனர்.  பொருளாதாரம் தொடர்ந்து உயருவதற்குக் காரணம் நம் குடும்பம். அதன் மய்யமாக இருப்பவர்கள் தான் பெண்கள்.  ஆனால் பெண்கள் முன்பு போல இப்போது இல்லை. அவர்களிடம் பெண்மை குறைந்துவிட்டது. பெண்ணிற்கும், பெண் மைக்கும் வித்தியாசம் இருக்கிறது. இப்போது இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் குறைந்துவிட்டனர்."

25.8.2019 'தினமணி'

பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு


எதிரான சங்கராச்சாரியார்


Sankaracharya against quota for women in politics virtually rejected for the demand for seperate reservation for women.

('The Pioneer' - 17.3.1997)

பெண்களுக்குத் தனியே இடஒதுக்கீடு அரசமைப்பில் கூடாது என்று கூறுகிறார் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி.

இவரை ஏற்கிறீர்களா? பெண்களுக்கு இடஒதுக்கீடு தேவை என்கிற திராவிடர் கழகத்தை ஏற்கிறீர்களா?

பெண்களை அவமதிக்கும் ஸ்லோகம்


வடமொழி ஸ்லோகத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு 1990ஆம் ஆண்டு டிசம்பர் 24இல் "இந்தியன் எக்ஸ்பிரஸ் - மெகசின்"  பகுதியில் முதல் பக்கக் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு வெளிவந்துள்ளது.

'Only when fire will cool, the moon burn, or the ocean fill with tasty water will a women be pure'

இதன் பொருள் எப்போது தீ தென்றலாக மாறுகிறதோ, நிலா நெருப்பாக மாறுகிறதோ அல்லது கடல் சுவை நீரால் நிரப்பப்படுகிறதோ அப்போதுதான் ஒரு பெண்ணும் தூய்மை யானவளாக இருப்பாள்.

இந்து மதத்தில் பெண்கள் நிலை


1.    நாரதர் (ஸ்மிருதிக்குக் கர்த்தாவான ரிஷி) கூறுகிறார்: எவனொருவன் வாங் கின கடனையோ, பொருளையோ திரும்பக் கொடுக்கவில்லையோ அவன், கடன் கொடுத்தவனுடைய வீட்டில் ஒரு அடிமையாகவாவது ஒரு வேலைக் காரனாகவாவது ஒரு ஸ்திரியாகவாவது, ஒரு நாலுகால் மிருகமாகவாவது பிறப்பான்.

2.    மனு (இந்துச் சட்டம் செய்தவராய், வேத முறைகளை முதன்முதலில் வெளியிட்டவராய், இன்றைக்கும் மக்கள் யாவரும் பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்களைச் செய்தவராய் உள்ளவர்) கூறுவது: ஒரு மனைவி, ஒரு மகள், ஒரு அடிமை ஆகியோர் சொத்துக்களை வைத்திருக்க யோக்கியதை அற்றவர்களாவார்கள். அவர்கள் என்ன சம்பாதித்தாலும் அதெல்லாம் அவர்கள் எவர்களுக்கு உரிமையுடையவர்களோ அவர்களைச் சேரும்.

3.    போதாயனர் கூறுவது : எந்த மனிதனும் பெண்களுக்கு இரவலோ, கடனோ கொடுக்கக் கூடாது; அடிமைகட்கும், குழந்தைகட்கும்கூட ஒன்றும் இரவல் தரக்கூடாது.

4. மதவிதிகள் கூறும் நூல்களில் ஒன் றாகிய ராமாயணம் உரைப் பது: தப்பட்டைகள், பயிரிடு பவர்கள், ஒடுக்கப்பட் டவர்கள், மிருகங்கள், பெண்கள் ஆகிய இவர்கள் எல்லாம் கடுமையான முறையினால் ஒடுக்கி வைக் கப்பட வேண்டும்.

-  (சுந்தர காண்டம் 5)

5.    மனு கூறுகிறார்: பகலும் இரவும் மாதர்கள் அவர்களுடைய சொந்தக் காரர்களை அண்டியே இருக்கும்படியாகச் செய்யப்பட வேண்டும். பெண்களைக் குழந்தைப் பருவத்தில் தகப்பன் மாரும், வாலிப காலத்தில் புருஷன் மாரும், வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளும் காப்பாற்றுகிறார்கள் - ஒரு பெண் ஆனவள் ஒருபோதும் சுயேச்சையாயிருக்கத் தகுதியுடை யவளல்லள். அவளுடைய வாழ்வு பூராவும் நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ, அலட்சியக் காரர் களாகவோ இருக்கும்படியான மற்றவர் களுடைய இரக்கத்தினால் வாழ்பவ ளாகவே இருக்க வேண்டும். ஏனெனில் பெண்கள் அவ் வளவு அற்ப ஜீவர்களாகவே இருக்கிறார்கள்.

6. உத்தமஸ்திரீக்கு மனுவுரைக்கும் யோக்கியதாம்ச மென்னவெனில், அவளு டைய தகப்பன் அவளை எவனுக்குக் கொடுத்திருக்கின்றானோ அவன் எப்படிப் பட்டவனாயிருந்தாலும் அவனையே அவள் மரியாதை செய்யட்டும்... ஒரு புருஷன் துர்நடத்தையுடையவனாயினும், இன்னொரு மாதினிடம் அன்பு கொண்டவனாயினும், நல்ல தன்மைகளில்லாதவனாயினும், அவனைத் தெய்வம்போலவே கருதுகிறவள்தான் புண்ணிய ஸ்திரீயாவாள்.

(அத். 5, 154)

7.    மனு, ஒரு மாதானவள், எவ்வளவு நல்லவளாகவும், உத்தமமானவளாகவும் இருப்பினும், அவள் தன் கணவனுடைய குணங்களையுடையவளா கத்தான் இருப் பாள். மேலும் அவர் சொல்லுவது: ஒரு மங்கையானவள் தான் மணம் செய்துகொண்ட ஒரு புருஷன் என்ன குணங்களையுடை யவனாயிருக்கின்றானோ அதே குணங்களையே அவளும் அடை வாள்  - எதுபோலவெனில் கடலில் போய்க் கலக்கிற ஆற்றைப்போல்.

(அத்தியாயம் 9, 22)

8. போதாயனர் உரைப்பது: மாதர்கள் அறிவே இல்லாதவர்கள்: அவர்கள் சொத்துரிமை கொள்ளும் யோக்கியதையற்றவர்கள்.

தந்தைபெரியார் பார்வையில் பெண்கள்


1928ஆம் ஆண்டிலேயே தந்தை பெரி யாரின் சீலங்கள் எப்படி இருந்தன?

1. மக்கள் பிறவியிலும், ஆண் - பெண் என்ற தன்மையிலும் உள்ள உயர்வு, தாழ்வு என்கிற  வித்தியாசங்கள் கண்டிப்பாய் ஒழிக்கப் பட வேண்டும்.

2(அ). குடும்பச் சொத்தில் பெண்களுக்கு ஆண்களைப் போலவே சம உரிமை அளிக்கப்பட வேண்டும்.

(ஆ). புருசன் மரணமடைந்துவிட்டால் அவன் சொத்து முழுவதையும் பெண்சாதிக்கு சர்வ சுதந்திரமாய் அனுபவித்துக் கொள்ள உரிமை அளிக்கப்பட வேண்டும்.

(இ) பாகம் பிரியாத குடும்பங்களில் கணவன் இறந்து போனால், அக்கணவனுக்குள்ள சகல உரிமைகளும், சொத்துகளும் அவனது மனைவிக்கு சர்வ சுதந்திரமாய் அனுபவித்துக் கொள்ள உரிமை அளிக்கப்பட வேண்டும்.

3. எல்லாப் பொதுப் பள்ளிக்கூடங்களிலும் ஆண் பெண் என்கின்ற வித்தியாசம் இல்லா மலும், உயர்வு தாழ்வு என்கிற வித்தியாசம் இல்லாமலும் கட்டாயப் படிப்பு கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவையெல்லாம் 90 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் தலைமையில் 1928இல் சென்னையில் நடைபெற்ற தென் னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்பதை எண்ணினால் ஆச்சரியப்படாமல் இருக்கவே முடியாது.

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது ('குடிஅரசு' 16.6.1935) என்று சொன்னவரும் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியாரே!

85 ஆண்டுகளுக்கு முன்பே பகுத்தறிவுத் தந்தை பெரியார் தம் சிந்தனைச் சீலங்களையும், இந்த 2015இல் ஆர்.எஸ்.எஸின் அகில இந்தியத் தலைவர் கூறும் கருத்துகளையும் ஒப்பிட்டுப் பார்த்து தெளிவு பெறுவதுடன் இந்தியாவைப் பொறுத்தவரையில் பாசிச இந்துத்துவாவின் அழிவில்தான் பெண்ணுரிமைப் புரட்சி மலர முடியும்.

இந்நாட்டு பெண்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது. இந்து ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்பவர்களை அடையாளம் காண வேண்டிய காலகட்டம் இது. குறிப்பாக பெண்களைப் போகப் பொருளாக, அடிமையாக எண்ணுவதும், அதன் அடிப்படையில் செயல்படுவதும்தான் இந்துத்துவா!

சிந்தியுங்கள் - இந்துத்துவாவா - பெரி யாரியலா? குறிப்பாக பெண்கள் சிந்திக்கட்டும்.

- விடுதலை நாளேடு 13 10 19