ஜெர்மன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெர்மன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 மார்ச், 2020

ஜெர்மன் நாட்டிலிருந்து பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

ஜெர்மன் நாட்டு கொலோன் பல்கலைக்  கழகத்தைச் சார்ந்த பி.எச்.டி. ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர் ஸ்வென் வொர்ட்மென் (பெரியார் பன்னாட்டு மய்யம், ஜெர்மனி கிளை) இன்று (13.3.2020) சென்னை - பெரியார் திடலில் தமிழர் தலைவரைச் சந்தித்து உரையாடினர். தந்தை பெரியார் பற்றியும் அவர் நிறுவிய இயக்கமான திராவிடர் கழகம் பற்றியும்,  அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நூற்றாண்டு பற்றியும் சுருக்கமாக, ஆழமாக தமிழர் தலைவர் எடுத்துரைத்தார். வருகை தந்த மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார்.  தமிழர் தலைவரைச் சந்தித்த குழுவில் ஸ்வென் வொர்ட்மென் உடன் பேராசிரியை குல்கார்தி பார்போசா, பி.எச்.டி ஆராய்ச்சி மாணவர்கள் ரெனாபி தாவலோஸ், பெரினா யோகராஜா, டொமினிக் க்ரோப் அடங்குவர். பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடம், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் நூல் நிலையம் ஆகியவற்றை குழுவினர் சுற்றிப் பார்த்தனர்.

 - விடுதலை நாளேடு 13 3 20

 

வெள்ளி, 6 டிசம்பர், 2019

ஜெர்மனி அருங்காட்சியகத்தில் திருவள்ளுவர் அய்ம்பொன் சிலைகள்

பெர்லின், டிச. 6- அய்ரோப்பிய தமிழர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஜெர்மனி யின் பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்தின் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள ‘லிண்டன்’ அரசு அருங்காட்சியகத்தில் திருவள்ளுவரின் 2 அய்ம் பொன் சிலைகள் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் நிறு வப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பிரெட ரிக் காமரர், கார்ல் கிரவுல் ஆகியோரால் ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப் பட்ட திருக்குறள் புத்தகம் மற்றும் தமிழக ஆய்வாளர் கவுதம சன்னா எழுதிய ‘திரு வள்ளுவர் யார் - கட்டுக் கதை களை கட்டுடைக்கும் திரு வள்ளுவர்’ என்னும் புத்தக மும், தமிழ் மரபு அறக்கட் டளையின் சார்பில் கதிரவன் உருவாக்கிய குழந்தைகளுக் கான திருக்குறள் மென்பொரு ளும், விழா மலரும் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவள வன், ‘லிண்டன்’ அருங்காட்சி யக இயக்குனர் இனெஸ் டி கெஸ்ட்ரோ, தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் க.சுபாசிணி, எழுத்தாளர் கவு தம சன்னா உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.

- விடுதலை நாளேடு 6 12 19