புதன், 27 அக்டோபர், 2021

தமிழகத்தின் தியாக தீபங்கள் - 67: பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை*_தினமணி


*_✍️ 21, Thursday, Oct., 2021_*



*✍️சேலம் மாவட்டம் தாதம்பட்டியில் 1885-இல் பிறந்தவர் நாகம்மாள். பெரியார் ஈ.வெ.ரா. - நாகம்மாள் திருமணம் 1898-இல் நடைபெற்றது. கல்வி இல்லையெனினும் ஆளுமையுடன் விளங்கியவர் நாகம்மை.*

"பெரியார் ஈ.வெ.ரா. ஒத்துழையாமை இயக்கத்தில் அதிதீவிரமாக ஈடுபட்டார். அன்னையாரும் தமது சுகவாழ்வைத் துறந்தார். விலையுயர்ந்த நகைகளைத் துறந்தார். மெல்லிய பட்டாடைகளை வெறுத்தார். முரட்டுக் கதராடை அணிந்தார். தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வழிகாட்டியாக முன்வந்தார்.

அன்னையார் முன்னிலையில் நின்று போராடினார். இதனால் அநேகப் பெண்கள் தைரியமாக இப்போரில் கலந்துகொள்ள முன்வந்தனர் ' என்று எஸ்.சி.சிவகாமியம்மையார் 1935 பகுத்தறிவு இதழில் பதிவு செய்துள்ளார்.

1924-இல் பெரியார் ஈ.வெ.ரா. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளரானார். கள்ளுக்கடை மறியலை அறிவித்திருந்தார் காந்தியடிகள்.

ஈரோட்டில் பெரியார் ஈ.வெ.ரா. இல்லத்தில் காந்தியடிகளும் காங்கிரஸ் தலைவர்களும் மதுவிலக்குக் கொள்கை குறித்துப்பேசி கள்ளுக்கடை முன்பு மறியல் போராட்டம் நடத்தத் தீர்மானித்தனர்.

1921 நவம்பரில் பெரியார் ஈ.வெ.ரா.-வும் அவருடன் நூறு தொண்டர்களும் ஈரோட்டில் தடையை மீறி போராட்டத்தில் இறங்கினர். ஒரு மாத சிறைத் தண்டனை பெற்றனர். இச்சூழலில் பெரியார் ஈ.வெ.ரா.வின் மனைவி நாகம்மையும், தங்கை எஸ்.ஆர்.கண்ணம்மாவும் பெண்களைத் திரட்டி மறியல் போராட்டத்தில் இறங்கினர்.

"நாகம்மையாரும் அவருடன் சென்ற தோழர்களும் சிறைப்படுத்தப்பட்டால் ஈரோட்டின் நிலைமை மிக மோசமாகி 10,000 பேர் சிறை செல்வார்களென்று அதிகாரிகள் கருதி சென்னை அரசாங்கத்திற்குத் தந்தி கொடுத்து முன்னறிவிப்புடன் தடையுத்தரவை நீக்கினர். இச்சம்பவத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியல் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்து விட்டது ' என்று சாமி.சிதம்பரனார் குறிப்பிட்டுள்ளார்.

காந்தியடிகள் 1921 டிசம்பர் 28-ஆம் தேதிய " யங் இந்தியா' இதழில் "மதுவிலக்கில் ஈரோடு மட்டும் அஞ்சாது பணியாற்றி வந்திருக்கிறது. இப்போது நாயக்கரின் மனைவியாரும், அவருடைய சகோதரியும் மறியல் செய்கிறார்கள்' என்று பதிவிட்டிருந்தார்.

1922 ஜனவரி 19-இல் பம்பாயில் நடைபெற்ற சர்வ கட்சிக் கூட்டத்தில் சர் சங்கரன் நாயரும், பண்டிட் மாளவியாவும் "கள்ளுக்கடை மறியலை நிறுத்திவிட்டு நடவடிக்கைகளைத் தொடங்கலாம்' என்று காந்தியடிகளிடம் தெரிவித்தபோது, " மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை, அது ஈரோட்டிலுள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது ' என்று பதிலளித்துள்ளார்.

1924-இல் நடைபெற்ற வைக்கம் கோயில் தெரு நுழைவுப் போராட்டத்தில் பங்கேற்று பெரியார் ஈ.வெ.ரா. கைதாகி சிறைசென்ற பின்னர் நாகம்மையார் களமிறங்கினார்.

அம்மையார் மாநில காங்கிரஸ் உறுப்பினராகவும், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஏராளமான மேடைகளில் சொற்பொழிவாற்றியுள்ளார்.

1925-இல் காங்கிரûஸ விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார் பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மையாரும் பெரியாருடன் வெளியேறி இறுதி மூச்சுவரை சுயமரியாதைச் சுடராகப் பிரகாசித்தார். 11.05.1933-இல் நாகம்மையார் மறைந்தார்.

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

பெட்ரண்ட் ரசலின் Marriages and Morals நூலை காப்பியடித்தாரா பெரியார்?








*”பெட்ரண்ட் ரசலின் Marriages and Morals நூலைத்தான், தமிழில் ”பெண் ஏன் அடிமையானாள்?” என்று காப்பியடித்தாரா பெரியார்?*
-------------------------------------------------------------

”பெட்ரண்ட் ரசலின் Marriages and Morals நூலைத் தான், தமிழில் ”பெண் ஏன் அடிமையானாள்?” என்ற பெயரில் காப்பியடித்தார் பெரியார் என்கிறார் ஒருவர். 

அதை எப்படியும் ஆயிரக்கணக்கான முட்டாள்கள் பகிரப் போகிறார்கள். சங் பரிவார் கும்பல் அதை மீம்சாக்கி பரப்பப் போகிறார்கள். 'போர்டு' தாஸ் மாதிரியான கூலிகள் வீடியோவும் போடுவார்கள். 

நாம் சொல்ல வேண்டிய உண்மையைச் சொல்லி வைப்போம்.
“பெண் ஏன் அடிமையானாள்?” என்ற நூலில் உள்ள கருத்துகள் பெரியாருக்குத் திடீரென்று ஒரே நாளில் தோன்றி எழுதப்பட்ட சிந்தனைகள் அல்ல. 

தந்தை பெரியார் தன் குடும்பத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே மறுமணம் செய்து காட்டியதில் தொடங்கி, பெண்ணுரிமைப் பற்றிய சிந்தனைகள் ஒவ்வொரு கட்டத்திலும் அவருக்கு எப்படி பரிணமித்து வந்திருக்கின்றன என்பதைப் பெரியாரைப் படித்தவர்கள் உணர முடியும். 

அதெல்லாம் தெரியாமல் வன்மத்தை மட்டும் மனதில் கொண்டு திரியும் இந்த 'ஸோம்பிகள்' "தான் திருடி பிறரை நம்பாது" என்பதைப் போல பெரியார் மீது குற்றம் சுமத்துகிறார்கள். (ஒரு போட்டோவை வைத்துக் கொண்டே ஒரு மாமாங்கமாகப் பிழைப்பை ஓட்டுபவர்கள் அல்லவா?)

தந்தை பெரியார் தன்னுடைய கருத்தை, அதற்கு எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அதைத் தன்னுடையது என்று சொல்லும் துணிவு கொண்டவர். இதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. 
அதேபோல் தன் சிந்தனைக்கு ஒத்துவரும் அடுத்தவர் கருத்தை வரவேற்று, அதை அவர்கள் பெயரிலேயே வெளியிட்டுப் பரப்பியவர். மேனாட்டு அறிஞர்கள் தொடங்கி, தன் பத்திரிகையில் பணியாற்றியவர் வரை அவரவர் பெயரிலேயே குறைந்த விலையில் வெளியிட்டுப் பரப்பிய கொள்கை - அறிவு நாணயத்திற்குச் சொந்தக்காரர். 

இங்கர்சால், ஜீன் மெஸ்லியர், அண்ணல் அம்பேத்கர், பகத்சிங், பாதிரியார் சென்னிகியூ, லெனின், ஜோசப் மெக்காபி, சார்ல்ஸ் டீகோர்ம்,  மொழி பெயர்ப்பாளர்களான குருசாமி, ஜீவா, எழுத்தாளர்களான சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், பண்டிதர் இ.மு.சு. என அனைவரின் படைப்புகளையும் பதிப்பாளராக இருந்து வெளியிட்டவர். 

இவர்கள் எடுத்துக்காட்டும் சிந்தனையாளர் பெட்ரண்ட் ரஸலின் மற்றொரு நூலான Why I am not a Christian நூலைத் தமிழில் “நான் ஏன் கிறிஸ்துவன் அல்ல?” என்று வெளியிட்டிருக்கிறார். இவர்கள் சொல்கிறபடி காப்பி அடிக்கலாம் என்றால், இதே நூலை ”கிறிஸ்துவ மத ஆராய்ச்சி” என்ற பெயரில் தமிழில்  வெளியிட்டுத் தன் பெயரைப் போட்டுக் கொள்ள முடியாதா என்ன? 

எத்தனையோ புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிட்ட பெரியாருக்கு இதை மட்டும் தன் பெயரில் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியமென்ன?
ஒன்றா, இரண்டா எத்தனை மொழிபெயர்ப்பு நூல்கள் - அதுவும் பெரும் தொடர்பு வளர்ந்திராத 1920-30 களில்! 

தமிழில் இந்த முற்போக்கு நூல்களெல்லாம் வெளிவந்து அதைப் படித்து தமிழர்கள் சிறப்பாக வந்துவிடமாட்டார்களா என்ற ஆசைதானே பெரியாருக்கு!

பெரியார் ஒரு சுயசிந்தனையாளர்! (Original Thinker) படித்து அறிவை வளர்த்துக் கொண்டவர் அல்ல! கேள்விகளால், பட்டறிவால், பகுத்தறிவால் கூர்மைப்பட்டவர். அந்தக் கருத்துகளை வெளிப்படுத்தியதால், தன் வாழ்நாள் முழுக்க நட்டத்தை, எதிர்ப்பைக் கண்டவரே ஒழிய பாராட்டுகளையும், இலாபத்தையும் பெற்றவர் அல்லர். 

சரி, பெண் ஏன் அடிமையானாள் நூலுக்கு வருவோம். ’கற்பு’ என்கிற தமிழ்ச் சொல் பற்றிய ஆய்வுடன் தொடங்குகிறது பெரியாரின் கட்டுரை. அடுத்த கட்டுரை திருக்குறளும் கற்பும் பற்றி விமர்சிக்கிறது. பெண் ஏன் அடிமையானாள் நூலைப் படித்தவர்களுக்குத் தெரியும், அதன் Context முழுக்கவுமே இந்திய/ தமிழகச் சூழல் சார்ந்தது. இதையா பெட்ரண்ட் ரஸல் எழுதினார்? படித்தால் தானே தெரியவரும்? படத்தையும், தலைப்பையும் வைத்துக் கதைக1 கட்டினால் எப்படி புரியும்?

விரிவாக, விலாவாரியாக வரிக்கு வரி இவர்களின் உளறல்களை மறுக்கலாம். ஆனால், மிக எளிமையாக, ஒரே வாதத்தில் இவர்களின் பொய்யை அம்பலப்படுத்தவோம்!  

இதோ சொல்கிறேன்!

பெட்ரண்ட் ரஸலின் Marriages and Morals வெளியிடப்பட்ட ஆண்டு 1929.
’பெண் ஏன் அடிமையானாள்?’ நூலில் இடம்பெற்றுள்ள முதல் கட்டுரையான கற்பு - 8.1.1928 அன்று வெளியானது. அடுத்த கட்டுரையான வள்ளுவரும் கற்பும் 12.2.1928 அன்று வெளியானது. ஏழாவதாக இடம் பெற்றுள்ள விதவைகள் நிலைமை பற்றிய கட்டுரை 22.8.1926 இல் வெளியானது. பத்தாவது கட்டுரை 1928 ஆகஸ்டில் வெளியானது. 
இப்படி 1926 இல் தொடங்கி 1931 வரை எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த நூல்!

உண்மை இப்படி இருக்க, பெட்ரண்ட் ரசலின் நூலைத் தான் தமிழில் மாற்றி எழுதி தன் பெயரைப் போட்டுக் கொண்டார் பெரியார் என்று இந்தப் புரட்டர்கள், பொய்யர்கள் கூறுகின்றனர். கேடுகெட்ட, மானமற்ற, அயோக்கியர்களுடன் தான் நாம் போராட வேண்டியிருக்கிறது பாருங்கள்!

"பெரியாருக்கும், ரசலுக்கும் 
ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் இத்தகைய சிந்தனை மலர்ந்திருக்கிறது",  என்று ஓர் ஒப்புமையைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதியிருக்கிறார். ஆசிரியர் கி.வீரமணியின் அவர்களின் ஒப்புமை என்பது அறிவு வளர்ச்சி பற்றிய மகிழ்ச்சியின் வெளிப்பாடு! அதை வைத்துக் கொண்டு அளந்து கொட்டியிருக்கிறது ஓர் அரைவேக்காடு. 

1929 இல் வெளியான Marriages and Morals நூலை 1926-லிருந்தே காப்பி அடித்தாரா பெரியார்? இவர்கள் சொல்லும்படி பார்த்தால், ஒரு வேளை புரூப் பார்ப்பதற்காக பெரியாருக்கு அனுப்பி வைத்திருப்பாரோ பெட்ரண்ட் ரசல்? பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருத்தமாகச் சொல்லுங்களேன்?

 - *ச.பிரின்சு என்னாரெசு பெரியார்*

Marriage and Morals

From Wikipedia, the free encyclopedia
Jump to navigationJump to search
First edition (publ. Allen & Unwin)

Marriage and Morals is a 1929 book by philosopher Bertrand Russell, in which the author questions the Victorian notions of morality regarding sex and marriage.

Russell argues that the laws and ideas about sex of his time were a potpourri from various sources and were no longer valid. The subjects range from criticisms of social norms, theories about their origins and tendencies, evolutionary psychology, and instinctual attachment to children (or lack thereof), among others. Notably, the book found marital rape to be common, stating: "Marriage is for woman the commonest mode of livelihood, and the total amount of undesired sex endured by women is probably greater in marriage than in prostitution."[1]


செவ்வாய், 12 அக்டோபர், 2021

அரசு அனுமதி பெற்று பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றிட உயர்நீதிமன்ற நீதிபதி சொன்னது சரியா?

 

நடைபாதைக் கோவில்களை அகற்றிட உச்சநீதிமன்றம் கூறியதே - 5 ஆண்டுகள் ஓடியும் செயல்படுத்தாதது ஏன்?

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்புமீது ‘‘மறுசீராய்வு'' மனு தாக்கல் செய்யப்படவேண்டும்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி - அரசு அனுமதி பெற்று பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலை கள் அகற்றப்படவேண்டும் என்று கூறிய தீர்ப்புக் குறித்து  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்அவரது அறிக்கை வருமாறு:

நம் நாட்டின் ஜனநாயகத்தில் - அரசமைப்புச் சட்டப் படிநீதிமன்றங்கள்தான் மக்களின் கடைசி நம்பிக்கை.

சட்டத்தின்படி ஏற்கப்படக் கூடிய வழக்குதானா?

மக்களின் உரிமைகளையும்அரசமைப்புச் சட்டத் தின் விதிகளையும் முழுமையாக காப்பாற்றிட அவையே பாதுகாப்பு அரணாகக் கடமையாற்றிடும் வகையில் நடந்துமக்களின் அதிகாரமே இறுதியானது என்பதை நிலை நிறுத்திநியாயத் தராசின் முள் எந்தப் பக்கமும் சாயாது தேர்ந்த நீதி வழங்கி வரும் நிலையில்சிற்சில நேரங்கள்சில மாண்பமை உயர்நீதிமன்ற நீதிபதிகள்சட்டத்தின்படி ஒரு வழக்கு ஏற்கக் கூடியதாதள்ளுபடி செய்யப்படவேண்டியதா என்பதை அரசமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு ஏற்ப தீர்ப்புகளை அமைப்பதைத் தாண்டிதங்களது சொந்தக் கருத்துகளை பக்கம் பக்க மாக எழுதுவதுநீதியை எங்கோ அழைத்துச் செல்வதாக அமைந்துவிடுகிறது.

எடுத்துக்காட்டாகசென்னை உயர்நீதிமன்றத்தில் வந்த டாக்டர் அம்பேத்கர் சிலை அமைத்தது பற்றிய ஒரு வழக்கு ஆகும்.

இந்த வழக்கின் (W.P.23140 of 2014 and W.P. 1 and 2 of 2014தீர்ப்பை மாண்பமை தனி நீதிபதி அவர்கள் 7.10.2021 அன்று வழங்கியுள்ளார்கள்.

25 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு அது;

சுட்டிக்காட்டுவது நமது கடமை!

இதில் ‘ரிட்மனுதாரர் ஒரு வழக்குரைஞர்இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 226-இன்படிசெர்ஷியோராரி (Writ of Certiorariரிட்டின்கீழ் போடப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட தலைவரின் சிலை வைப்பதுபற்றி சரிதவறு சட்டப்படி என்று தீர்ப்பு வழங்குவதைத் தாண்டிதமிழ்நாட்டில் உள்ள தலை வர்களின் சிலைகள்பற்றியது - அந்த சிலைகளை அப் புறப்படுத்தி 6 மாதங்களுக்குள் அவற்றை ஒரு ‘சிலைப் பூங்காஆகவும்பொதுவிடங்களில் தற்போதுள்ளவற்றை அகற்றி வைக்கவேண்டும் என்றும் ஒரு பெரிய ‘மலைப் பிரசங்கமேசெய்வதுபோன்று பல விவாதங்களை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை எழுதியிருப்பது சட்டக் கருத்துப்படியோ (Question of Lawபல தகவல் - உண்மைகள்படியோ (Question of  Factsசரியானது என்று கூறத்தக்க தீர்ப்பாக இல்லாமல் உள்ளது என்று எம்மைப்போன்ற பொதுவாழ்வில் உள்ள தொண்டர்கள் சுட்டிக்காட்டுவது எமது கசப்பான கடமையாகும்!

மாண்பமை நீதிபதி அவர்கள் எழுதியுள்ள இந்தத் தீர்ப்புக்கு நாம் எந்த உள்நோக்கமும் கற்பிக்க விரும்ப வில்லைஆனால்அது சரியான தீர்ப்பாக சட்டப்படியும் சரிசரியான உண்மைகளின்படியும் ஏற்கத்தக்கதாக இல்லை என்பதை விளக்கியே ஆக வேண்டியுள்ளது.

நீதிபதி அவர்களின் ‘மலைப்பிரசங்கம்!'

தீர்ப்பைப்பற்றி முதலில் சட்டப் பிரச்சினையை ஆராயலாம்.

1. இவ்வழக்கு  certiorari ரிட்  ஆக பதிவு செய்துள்ள வழக்குஇதில் நேரடியாக பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமே நியாயம் கேட்க உரிமை உண்டுகிராமத்தில் உள்ள ஒரு வழக்குரைஞர் வழக்குப் போட்டுள்ளார்.

இவர் அந்த ஊர் பஞ்சாயத்தில் பொறுப்பில் உள்ள வராஇல்லையா என்பதுகூட அதில் தெளிவுபடுத்தப் படாத நிலையில்இந்த ‘ரிட்மனுவின் Maintainability ஏற்கத்தக்கதா என்பதே முதல் கேள்விஎடுத்த எடுப்பி லேயே தள்ளுபடி செய்யப்பட்டிருக்க வேண்டிய சட்டத் தேவை இதில் உள்ளடங்கியுள்ளதால் - சரிவிசார ணைக்கு வந்துவிட்டதுஇனி தீர்ப்பு வழங்கியாகவேண் டும் என்ற நிலையில்குறிப்பிட்ட சிலை அமைத்தது சரி அல்லது தவறு என்பதோடு அமையவேண்டிய ஒரு தீர்ப்பாகும்.

பாரா 17 இல்,‘‘Let us Consider the present situation across the State of Tamil Nadu....!''

 ‘‘இந்த நிலையில்தற்போது தமிழ்நாட்டில் உள்ள நிலவரம்பற்றி நாம் ஆராய முனையவேண்டும்'' என்று தொடங்கிமேலும்  (17 பாராக்களைத் தொடர்ந்து 18 முதல் 34 பாரா வரைசிலைகள் வைப்பதுபற்றிய ஒரு ‘‘மலைப்பிரசங்கம்'' நிகழ்த்தியிருப்பது எவ்வகையில் நியாயப்படுத்தக் கூடியது என்று புரியவில்லை!

சட்டக் கண்ணோட்டத்தில் இதுபோன்ற கருத்துகளை இது ஒரு பொதுநல மனுவாக (Public Interest Litigation - PILஇருந்தால்தானே சட்டப்படி கூற முடியும்?

அதற்கு இரண்டு நீதிபதிகள் அமர்வு (Two Judges Benchஆக அது இருக்கவேண்டும்.

உச்சநீதிமன்றத்திற்குள்ள அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உண்டா?

தனி நீதிபதி இப்படி எழுதியிருப்பதற்கு உச்சநீதி மன்றத்திற்கு உள்ள இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 142 (Article)  அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு இல்லாத போதுஇப்படி எழுதிடப்படும் தீர்ப்பு எப்படி சட்டப்படி சரியானதாகும்? (ஏனெனில்உச்சநீதிமன்றத் தீர்ப்புபோல இதைக் கருதி தனக்கில்லாத அதிகாரத்தின் அடிப்படை யில்இப்படி தேவையற்ற விவாதங்கள் - அதிலும் அரசியல் ரீதியான தீர்ப்புகள் எப்படி சரியானதாகும்?)

அடுத்துQuestion of  Facts  என்ற உண்மைகள் அடிப்படையில் ஆராய்ந்தாலும்இத்தீர்ப்பின் ‘மலைப் பிரசங்க'ப் பகுதியில் உள்ள பல கருத்துகள் சரியாஎன்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

அரசு அனுமதிபெற்று வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற முடியுமா?

பொது இடங்களில் தமிழ்நாட்டில் பல நகரங்களில் நிறுவப்பட்டுள்ள பல முக்கிய தலைவர்களின் சிலைகள் வைப்பதற்கு அரசிடம் சிலைக்குழுவினர் அனுமதி கேட்டுவாங்கி - அந்த அனுமதியும்நெடுஞ்சாலைத் துறைநகராட்சிஊராட்சித் துறைஅதன்பிறகு காவல் துறைபோக்குவரத்துத் துறை (Traffic Cell), வருவாய்த் துறை என்று இத்தனைத் துறைகளின் பரிந்துரைகளுக்குப் பிறகேபராமரிப்புபற்றியும்மற்ற சில நிபந்தனைகளை சிலைக் குழுவினருக்குப் போட்டும்அவர்களிடமிருந்து உரிய பணம் - தொகைக் கட்டுமாறு கேட்டுகட்டிய பின் ரசீது கொடுத்தும்தனி அரசு ஆணை (G.O.கொடுத்த பிறகே தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

ஒன்றிரண்டு சிலைகள் அனுமதியில்லாமல் வைக்கப் பட்டால்அதை காவல்துறைவருவாய்த் துறையினர் அகற்றிவிடுவதும்தான் நடைமுறையில் நாம் காண்பதாகும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு மதிக்கப்பட்டதா?

‘‘Unauthorised Structures''  என்பதில் ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள  தமிழ்நாட்டில் இருக்கின்ற நடைபாதைக் கோயில்கள்பொது இடங்களில் அனுமதியின்றிக் கட்டப் பட்டுள்ள அனைத்து மத வழிபாட்டுக் கோயில்களையும்சின்னங்களையும் உடனடியாக அப்புறப்படுத்தவேண் டும் என்று உச்சநீதிமன்றம் பலமுறை கூறியதுண்டு (28.4.2016). தமிழ்நாட்டில் மட்டும் 77,450 கோவில்கள் அகற்றப்படவேண்டியவை என்று இரு நீதிபதிகள் கூறினார்களே - அகற்றாவிடின் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் செயலாளர்கள் நீதிமன்றம் வந்து நேரில் விளக்கவேண்டும் என்று கூறினார்களே, 5 ஆண்டுகள் ஓடியும்இதன்மீது நடவடிக்கை இல்லையேஏன்இது நீதிமன்ற அவமதிப்பின்கீழ் வராதா?

அதுமட்டுமல்லதலைவர்களின் சிலைகளால்தான் அரசியல் கலவரங்கள் ஏற்படுகின்றனஎனவேஎடுத்து வேறு பக்கத்தில் வைக்கவேண்டும் என்று கூறுவது நடைமுறை சாத்தியமாஅப்படியே சாத்தியமானாலும் அங்கேயே கலவரம் வர வாய்ப்பு இருக்காதாசட்டம் ஒழுங்கு பிரச்சினை வெடிக்காதா?

கோவில் திருவிழாக்களை மய்யப்படுத்திக் கலவரங்கள் நடக்கவில்லையா?

போக்குவரத்துத் துறை ஆய்வு செய்து - ‘தடையில்லா சான்றுவழங்கிய பிறகேசிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளன பல ஆண்டுகளாகஅதை ஏன் அப்புறப்படுத்தவேண்டும்சட்டப்படி சரியானதாகுமா அந்த வாதம்?

சில ஊர்களில் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களை வருவாய்த் துறை Alienation என்ற மதிப்பீட்டுத் தொகை பெற்றேசிலைக் குழுவினருக்கு உரிமையாக்கியுள்ளது.

பொது இடங்களைக்கூடசிலைப் பகுதியை மட்டும் Alienation என்ற வருவாய்த் துறை மூலம் அனுமதிஉரிமை பெற்றே சிலைகள் அமைக்கப்பட்டிருப்பதை மாற்றச் சொல்லுவது சட்ட விரோதம் அல்லவாஅரசு ஆணைகள்படியே வைக்கப்பட்டுள்ளன.

திருவிழாக்கள் நடைபெறுவதையொட்டி பல ஊர் களில் கலவரங்கள் ஏற்பட்டுகோவிலை மூன்று அல்லது ஆறு மாதங்கள்கூட பூட்டுகிறார்கள்தேர் இழுப்பதிலும் பிரச்சினை உள்ள சில ஊர்களில்இதற்காக விழாவைத் தடுப்பது என்று ஆணையிட முடியுமா?

இப்படி எத்தனையோ கேள்விகள் எழக்கூடும்!

மறுசீராய்வு மனு போடுவது அவசியம்!

எனவேஇத்தகைய சட்டத்திற்கும் அப்பாற்பட்ட தீர்ப்புகளை மாண்பமை நீதிபதிகள் தவிர்த்தால் அவர் களுக்கும் பெருமைசட்டத்தின்படி நடந்த சாதனையாக வும் மிளிரும் என்பதால்இதனை நாம் தவிர்க்க இயலாத பொதுநல உணர்வில் சுட்டிக்காட்டுகிறோம்.

இத்தீர்ப்புக்கு மறு சீராய்வு மனு அல்லது ரிவிஷன் போடுவது அவசியமாகும்!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

11.10.2021