வியாழன், 31 டிசம்பர், 2020

தமிழர் தலைவர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள்


*அமைதி ஊர்வலம்             * கருத்தரங்கம்          *விருது வழங்கும் விழா

சென்னைடிச. 24- தந்தை பெரியார் அவர்களின் 47ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள்  இன்று (24.12.2020) சென்னையில் எழுச்சியுடன் நடை பெற்றன.

இன்று காலை 8.45 மணிக்கு சென்னை அண்ணா சாலை பெரியார் பாலம் அருகில் தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்தார்.  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்பொருளாளர் வீ.குமரேசன்பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் .அருள்மொழிசட்டத்துறை தலைவர் வழக்குரைஞர் .வீரசேகரன்வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதிதுணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் .இன்பக்கனிஅமைப்புச்செயலாளர் வி.பன்னீர்செல்வம்மாணவர் கழக மாநில செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் மாநிலமண்டல பொறுப்பாளர்கள்,  தென்சென்னைவடசென்னைஆவடிதாம்பரம்கும்மிடிப்பூண்டிசோழிங்கநல்லூர்திருவொற்றியூர் கழக மாவட்டப் பொறுப்பாளர்கள்மகளிரணி,  மகளிர் பாசறைஇளைஞரணிமாணவர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அணி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் அண்ணாசாலை பெரியார் சிலை அருகிலிருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டுசிந்தாதரிப்பேட்டைபெரியார் .வெ.ராநெடுஞ்சாலை வழியே பெரியார் திடலை அடைந்தது

பெரியார் .வெ.ராநெடுஞ்சாலையில் அமைந் துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு கழக மகளிரணிமகளிர் பாசறை பொறுப்பாளர்கள் மாலை அணிவித்தனர்பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் 21 அடி முழு உருவச்சிலைக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் தலைமையில் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப் பட்டதுதமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூறஅவரைத் தொடர்ந்து கழகப்பொறுப்பாளர்கள் சூளுரை ஏற்றனர்.

அன்னை மணியம்மையார் நினைவிடம்சுயமரி யாதை சுட ரொளிகள் நினைவிடங்களில்  மலர் வளை யம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில்  தனி மனித இடைவெளிமுகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்புக்கான கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சிகள் நடை பெற்றன.  கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளின் காரணமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஊர்வலத் தில் பங்கேற்காமல் அரங்க நிகழ்வில் பங்கேற்றார்கள்.

Ôசமூக நீதிக்கான கி.வீரமணி விருதுÕ

வழங்கும் விழா

காலை 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரை பெரியார் பன்னாட்டமைப்பு (அமெரிக்காசார்பில்  Ôசமூக நீதிக்கான கி.வீரமணி விருதுÕ வழங்கும் விழா காணொலியிலும்நேரிலும் நடைபெற்றது.

காணொலிமூலம் பன்னாட்டளவில் பலரும் பங்கேற்றனர்விழாவில் பெரியார் பன்னாட்டமைப்பு (அமெ ரிக்காதலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் காணொலிமூலம் வரவேற்புரை ஆற்றினார்.

பெரியார் பன்னாட்டு அமைப்பு (அமெரிக்காசார்பில்  2020ஆம் ஆண்டுக்கான Ôசமூகநீதிக்கான கி.வீரமணி விருதுÕ விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் டாக்டர் தொல்.திருமாவள வன் அவர்களுக்கு  வழங்கப்பட்டதுடாக்டர் இலக்கு வன்தமிழ் காணொலிமூலம் விருதினை வழங்கினார்மருத்துவர் மீனாம்பாள் விருதினை நேரில் வழங்கினார்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர்திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சித்தமிழர் தொல்திருமா வளவன் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துரை ஆற்றினார்விருதினைப் பெற்றுக் கொண்டு எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமா வளவன் ஏற்புரை ஆற்றினார்.

 பேராசிரியர் டாக்டர் ரவிசங்கர் கண்ணபிரான் காணொலிமூலம் நன்றி கூறினார்.

விருது வழங்கும் விழாவில் விடுதலை சிறுத்தை கள் கட்சி செய்திதொடர்பாளர்வன்னியரசுதுணைப் பொதுச்செயலாளர் பாலாஜிமந்தைவெளி அசோக்சி.ராஜ்குமார் உள்பட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநிலமாவட்ட பொறுப்பாளர்கள்மகளிர் அணி பொறுப்பாளர்கள் பெருந்திரளானவர்கள் பங் கேற்றனர்.

தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம்

முற்பகல் 11.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை  தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை அணி வித்து இயக்க வெளியீடுகளை வழங்கி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்பு செய்தார்.

கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் .இன்பக்கனி வரவேற்றார்.  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றினார்.

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி து.அரிபரந்தாமன் கருத்தரங்க சிறப்புரையாற்றினார்.

நூல் வெளியீடுபெரியார் விருது

‘’தந்தை பெரியாரின் சமூகநீதி சிந்தனைகள்’’ நூலை வெளியிட்டும்பெரியார் விருதினைப் பெற்றுக் கொண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன் ஏற்புரையாற்றினார்.

திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக் குரைஞர் பா.மணியம்மை இணைப்புரை வழங்கினார்.

தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகளில் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்பொருளா ளர் வீ.குமரேசன்அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம்சென்னை மண்டல செயலாளர் தே.செகோபால்வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன்தென்சென்னை  மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்,  ஆவடி பா.தென்னரசுதிருவொற்றியூர் மாவட்டத் தலைவர்  வெ.மு.மோகன்பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன்பெரியார் புத்தக நிலைய மேலாளர் .நடராசன்,  கே.கே.சி.எழிலரசன்மோகனா வீரமணிசி.வெற்றிசெல்விஆம்பூர் வடசேரி மீரா ஜெகதீசன்அகிலா எழிலரசன்உமா செல்வராசுடெய்சி மணியம்மைபசும்பொன் செந்தில்குமாரி உள்ளிட்ட கழகப்பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

சி.பி.அய்., சி.பி.எம்கட்சிகளின் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள்திராவிடர் கழகத்தின் பல்வேறு அணிகளின் மாநிலமண்டல பொறுப்பாளர்கள்தென்சென்னைவடசென்னைதாம்பரம்ஆவடிகும்மிடிப்பூண்டிசோழிங்கநல்லூர்திருவொற்றியூர் கழக மாவட்டங்களின்  பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

புதன், 30 டிசம்பர், 2020

எப்பொழுதும் பார்ப்பனர் திரைமறைவில்தான்!


 'துக்ளக்' பூனைக்குட்டி வெளியில் வந்தது!



கேள்வி: ராஜாஜி காலத்தில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வி திட்டம் போன்றது- மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அதனைக் கட்சி வரைக்கும் எதிர்க்க வேண் டும்! என்று இந்திய கம்யூனிஸ்ட் கடைசித் தலைவர் முத்தரசன் கூறியுள்ளதுபற்றி...

இந்தக் கேள்விக்குத் துக்ளக் இதழில் (18.11.2020) அரசியல் புரோக்கர் திருவாளர் சாமிநாதன் குருமூர்த்தி - பூனைக் குட்டி வெளியில் வந்தது! என்று சொல்லும் வண் ணம் அந்தரங்கத் தகவலைக் கூறியுள்ளார்.

1952இல் நடைபெற்ற சென்னை மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் கம்யூனிஸ்டுகள் உட்பட 166 எம்.எல்.ஏ.க்கள் இருந்த நிலையில், ஆட்சி அமைக்க ஆளுநரிடம் அனுமதி கோரப்பட்டது. கம்யூனிஸ்ட் பெரும்பான்மை கொண்ட கூட்டணி ஆட்சி அமையும் அபா யம் உருவானது.

அந்த ஆபத்திலிருந்து எப்படி காப்பாற் றினார்களாம்? குருமூர்த்தி கூறுகிறார். தின மணி ஆசிரியராக இருந்தஏ.என். சிவராமனும், கோயங்காவும் ராஜாஜியை நேரில் சந்தித்து, அவரின் காலில் இருவரும் சாஷ்டாங்கமாக விழுந்தார்களாம்.

சாமி நீங்கள் தான் நாட்டைக் காப்பாத் தணும் என்று வேண்டிக் கொண்டார்களாம்.

என்ன விஷயம்? என்று ராஜாஜி கேட்க, கம்யூனிஸ்ட் அபாயத்திலிருந்து தாங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூற, ஜவஹர் லால் உங்களை அனுப்பினாரா, என்னை முனிஸிபாலிட்டி சேர்மனாக்க விரும்பு கிறாரா? என்று கிண்டலாகக் கேட்டாராம் ராஜாஜி.

தாங்கள் சம்மதித்தால் மட்டுமே தேசிய வாத ஆட்சி அமையும். கம்யூனிஸ்ட்களை தடுக்க வேறு வழியே இல்லை என்று இரு வரும் மன்றாடினார்களாம்.

நேரு உங்களை வேண்டிக் கொண்டால், நீங்கள் முதலமைச்சராக சம்மதிக்க வேண்டும் என்று கோயங்காவும், ஏ.என். சிவராமனும் கேட்க யோசித்தார், ராஜாஜி. நேரு விரும் பினால் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வருவ தைத் தடுக்க என்னால் முடிந்ததைச் செய்ய நான் தயார் என்று உத்தரவாதம் கொடுத் தாராம் ராஜாஜி.

நேருவிடம் கோயங்கா தொலைபேசியில் எல்லாவற்றையும் விளக்கிக் கூற, நேருவும் ராஜாஜியுடன் தொலைபேசியில் பேச, ராஜாஜி முதல் அமைச்சர் ஆனார்.

இந்தத் தகவல்களை எல்லாம் கோயங்கா குருமூர்த்தியிடம் கூறியதாக துக்ளக்கில் (18.11.2020) எழுதித் தள்ளியிருக்கிறார் குரு மூர்த்தி அய்யர்வாள்.சட்டசபையில் கம்யூனிஸ்ட்டுகள் என் முதல் எதிரி என்று முதல் அமைச்சரான ராஜாஜி அறிவித்ததையும் துக்ளக்கில் குறிப் பிடப்பட்டுள்ளது. முதலில் இந்தக் யோச னையை கோயங்காவிடம் தெரிவித்ததே ஏ.என்.சிவராமன் தானாம். இதில் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் முக்கியமா னவை எவை?

1952 தேர்தலில் கோயங்கா காங்கிரஸ் சார்பில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி யில் போட்டியிட்டு, திருக்குறளார் வீ.முனு சாமியிடம் பெருந் தோல்வியைச் சந்தித்தார் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

அரசியலில்  - தேர்தலில் நேரடியாக ஈடு படாத சிவராமன்களால் அரசியலில் ஆட் சியை நிறுவுவதில் எப்படிப்பட்ட கபட வேலையை செய்ய முடிகிறது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆரிய த்தின் சூழ்ச்சி வலை எத்தகையது என்பது முக்கியம்.

1952 சட்டப் பேரவைத் தேர்தலில் ராஜாஜி போட்டியிட்டாரா? (எந்தத் தேர்தலில் ராஜாஜி மக்கள் வாக்குப் பெற்று வெற்றி பெற்றார்?) அந்த சிரமமான வேலை எல்லாம் வைத்துக் கொள்ள மாட்டார் அவர். யானை வந்து கழுத்தில் மாலை போட்டு ராஜா வாக்கிவிடும் ராஜாஜியை).

1952இல் மேல் சபையில் ஆளுநர் மூலம் நியமிக்கப்பட்டு கொல்லைப்புறம் வழியாக நுழைந்தவர்தான்  ராஜாஜி. கொல்லைப்புற வழி நுழைபவர் என்ற சொல்லாடல் இவருக் காகவே உருவான ஒன்றாகும்.

சுதந்திரம் அடைந்து முதலில் நடை பெற்றது 1952 பொதுத் தேர்தல்தான்.

இந்திய சுதந்திரத்துக்குப் பாடுபட்ட கட்சி என்று இந்தியா முழுவதும் அனைத்து மாநி லங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந் தாலும் சென்னை மாநிலத்தில் தோல்வியைச் சந்தித்தது.

காங்கிரஸ் எதிர்ப்புக் கட்சிகள் அய்க்கிய முன்னணி என்ற ஓர் அமைப்பின் கீழ் காங் கிரசை எதிர்க்கும் அணி உருவாக்கப்பட்டது.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டணிக்குத் துணை நின்று சென்னை மாநிலம் முழுவதும் சுற்றிச் சுழன்று சூறாவளிப் பிரச்சாரப் பெருமழை பொழிந் தவர்.

கார்ல்மார்க்சை நாங்கள் நேரில் பார்த் ததில்லை - இதோ பெரியாரைப் பார்க்கிறோம் என்றெல்லாம் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலை வர்கள் எல்லாம் புகழாரம் சூட்டினார்கள்.

பல கம்யூனிஸ்டுத் தோழர்கள் தலைமறை வாக இருந்த அந்தக் கால கட்டத்தில் கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் மிகப் பெரிய வெற்றி யைப் பெற்றனர் என்றால் அது சாதாரணமான தல்ல. தந்தை பெரியாருக்கும் திராவிடர் கழகத்திற்கு அதில் மிகப் பெரிய பங்கு உண்டு.

கம்யூனிஸ்டுகளை முதல் எதிரி என்று ஒரு கட்டத்தில் சொன்ன ராஜாஜி கருப்புச் சட் டைகள்தான் என் முதல் எதிரி என்று பிற் காலத்தில் சொன்ன நிலையும்கூட உண்டு.

சிவராமன்களும் கோயங்காக்களும் மூளையைக் கசக்கி பார்ப்பனத்தனத்துடன்  பின் திரையில் இயங்கி, இயக்கி, உடல் முழுவதும் மூளை உள்ளதாகத் தம்பட்டம் அடிக்கப்படும் ராஜாஜியைக் கொண்டு வந்து நிறுத்தினாலும், வாய்தா காலம் அவரால் ஆள முடியவில்லையே!

கவர்னர் ஜெனரல் என்னும் உயர்ந்த பதவியை எல்லாம்கூட அனுபவித்தாலும் ஆரியத்தின் அடிப்படைச் சித்தாந்தமான வர்ண தர்மத்தை நிலை நிறுத்துவதில்தானே அவர் குறியாக இருந்திருக்கிறார்.

சூத்திரனுக்கு எதை கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்ம சிந்தனைதானே அவருக்குள் குடியிருந்து வழி நடத்தியிருக்கிறது.

1937இல் சென்னை மாநில பிரதமராக (Premier) வந்த போதும் 2500 பள்ளிகளை இழுத்து மூடினார். 1952இல் முதல் அமைச்சராக அவர் திணிக்கப்பட்டபோதும் 6000 பள்ளி களை இழுத்து மூடிஅரை நேரம் படித்தால் போதும், மீதி அரை நேரம் அப்பன் தொழி லைச் செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கவில்லையா?

அந்த ஆணையே அவருக்குப் படு குழியாக்கப்படவில்லையா? தொழிற்கல்வி என்று எல்லாம் பார்ப்பனப் பத்திரிகைகள் மடிகட்டி, மல்லுக்கட்டிப் பிரச்சாரம் செய் தாலும், இது குலக்கல்வியே! என்ற தந்தை பெரியாரின் ஒற்றை அடியே மரண அடியாகி, ஆச்சாரியாரை ஆட்சியை விட்டே ஓடச் செய்ததே!

அந்தக் கால கட்டத்தில் கோயங்காவும், தினமணி சிவராமன்களும் உயிரோடு தானே இருந்தனர்! ராஜாஜிக்கு முட்டுக் கொடுத்து ஆட்சியைக் காப்பாற்றச் செய்ய முடியவில் லையே ஏன்?

1954இல் ஆட்சியை விட்டு தந்தை பெரியாரால் விரட்டியடிக்கப்பட்ட ராஜாஜி யின் அரசியல் பொது வாழ்வு  அத்தோடு அஸ்தமனம் ஆனது ஆனதுதான். அதற்குப் பின் சுதந்திரா கட்சி என்ற ஓர் அரசியல் கட்சியை உண்டாக்கிப் பார்த்தார், 1971இல் தன் பரம எதிரியான காமராசரின் கையைப் பிடித்து கர்ணம் போட்டும் பார்த்தார், விளக் கெண்ணெய்க்குக் கேடாக முடிந்ததே தவிர பிள்ளை பிழைத்த பாடில்லையே!


அன்று சிவராமன்கள் செய்த வேலை யைத்தான் அவரின் சீடர் கோடிகளான குருமூர்த்திகளும் செய்து பார்க்கிறார்கள். நான் அரசியல் புரோக்கர்தான் என்று பச் சையாக ஒப்புக் கொண்டு எழுதினார் மறைந்த சோ.ராமசாமி; இப்பொழுதும் அதே புரோக்கர் வேலையைத் தான் அன்றாடம்  செய்து கொண்டு வருகிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள்.

அன்று கம்யூனிஸ்டு ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக காலில் விழுந்த படலம் எல்லாம் நடந்திருக்கிறது. இப்பொழு தும் குருமூர்த்தி கூட்டம் யார் காலில் விழுந்தாலும் (நடிகர்களாகக் கூட இருக் கலாம்) தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடக் கூடாது என்று சத்ருசம்ஹார யாகம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் எந்தக் காரணங்களுக்காக திமுக வரக் கூடாது என்று நினைக்கிறார்களோ, அதே காரணங்களுக்காகவே திமுக ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் துடிதுடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது மட்டும் காலத்தின் கல்வெட்டாகும். 

பெரியார், அண்ணா, கலைஞர் தந்த அறிவாயுதத்தால் சமூகநீதியை காப்போம்


தளபதி மு.க.ஸ்டாலின்

சென்னை,டிச.28 நெல்லை சமூகநீதி மாநாட்டில் பெரியார், அண்ணா, கலைஞர் தந்த அறிவாயுதத்தால் சமூகநீதி காப்போம் என்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் கூறினார்.

நெல்லையில் நடைபெற்ற பெரியார் சமூகநீதி நூற்றாண்டு மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்று நிறைவுரை யாற்றினார். அப்போது மு.க.ஸ்டாலின் பேசிய தாவது: பெரியார் சமூகநீதி மாநாட்டை எழுச்சியுடனும் உணர்ச்சி யுடனும் நெல்லையில் ஏற்பாடு செய்துள்ள எழுத்தாளர் சூர்யா சேவி யர்க்கு எனது மனமார்ந்த பாராட் டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியாரைப் பார்த்து இன்னமும் பயப்படுகிறார்கள். இறந்து அய்ம்பது ஆண்டுகள் ஆனபிறகும் பயப்படு கிறார்கள். அறிஞர் அண்ணாவைப் பார்த்து பயப்படுகிறார்கள். கலைஞர் என்ற பெயரைச் சொன்னால் இன்னமும் சிலருக்கு பயமாக இருக் கிறது. என்ன காரணம்? இவர்கள் ஆயுதம் ஏதும் வைத் திருந்தார்களா? ஆயுத அமைப்பை நடத்தினார்களா? இல்லை, இவர்கள் வைத்திருந்தது அறிவாயுதம், இவர்கள் வைத் திருந்தது உண்மை என்ற கேடயம், அறிவும் உண்மையும் ஒரு இயக் கத்திடம் இருக்குமானால் அந்த இயக்கத்துக்கு வேறு எதுவும் தேவையில்லை. அத்தகைய அறிவியக்கமாம் திராவிட இயக்கம் இந்தத் தமிழ் மக்களுக்குத் தயாரித்துக் கொடுத்த கொடைதான் சமூகநீதி, இ டஒதுக்கீடு, வகுப்புவாரி உரிமை, அந்தச் சமூகநீதித் தத்துவத் தின் நூற்றாண்டு விழாவைத்தான் நாம் கொண்டாடிக் கொண்டு இருக் கிறோம். 

இடஒதுக்கீடு, சமூகநீதியை மொத்தமாக எடுத்துவிட வேண்டும் என்பது தான் பாஜகவின் கொள்கை. அதைப் படிப்படியாகச் செய்து வருகிறார்கள். எந்தச் சூழ்நிலை வந் தாலும் சமூகநீதியை, இடஒதுக் கீட்டை, வகுப்பு உரிமையை விட்டுத் தர மாட்டோம் என்பதுதான் நமது கொள்கை. திமுகவை எதிர்ப்பவர்கள் அனைவரும் சமூகநீதியின் எதிரியாக இருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்வை அடைந்து விடுவார்கள், ஏழைகள் ஏற்றம் பெற்று விடுவார்கள் என்று நினைப்பவர் கள்தான் திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். இந்த ஒரு நோக்கத்துக்காகத்தான் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.

தமிழர்களாகிய பலர் கோடிக் கணக்கான ஒடுக்கப் பட்ட மக்கள் -லட்சக்கணக்கான ஏழை மக்கள்- வாழ்வு பெற வேண்டும் என்ப தற்காகத் தான் திமுக ஆட்சி அமைய வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

 

 

இயற்பியல் பேராசிரியர் செ.அ.வீரபாண்டியன் மறைவு

தமிழர் தலைவர் இரங்கல்

தஞ்சையில் பகுத்தறிவாளர் கழகத்துடன் இணைந்து பணி யாற்றியவரும், இயற்பியல் பேராசிரியராக இருந்தவருமான செ.அ.வீரபாண்டியன் அவர்கள் நேற்று (27.12.2020) காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.

நம்மோடு பணியாற்றிய அவர், பிறகு பல்வேறு நிலைப் பாடுகள் எடுத்தாலும்கூட, ஆரம்ப  காலத்தில் அவர் ஆற்றிய தொண்டு மறக்க முடியாத ஒன்று. அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்!

 

 

சென்னை       தலைவர்,

28.12.2020          திராவிடர் கழகம்  

பிரித்தாளும் நரியே - போற்றி!'

'

'துக்ளக்' 30.12.2020

தாழ்த்தப்பட்டவர்கள்; பிற்படுத்தப்பட்டவர்கள் ஹிந் துக்களாக இருந்தும் கல்வி, வேலை வாய்ப்பில் அவர்களுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீட்டை எதிர்ப்பது, தடுப்பது பா.ஜ.க. தானே - பா.ஜ.க. ஆட்சி தானே!

உரிய பயிற்சி பெற்று இவர்கள் அர்ச்சகரானால் ஹிந்துமத ஆகமங்களுக்கு விரோதம் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடுவோர் யார்? உயர் ஜாதி ஹிந்துப் பார்ப் பனர்கள் தானே - ஜீயர்கள் தானே சங்கராச்சாரியார்கள்தானே! ஹிந்துக்களுக்கான கட்சி என்று மார்தட்டும் அதே ஹிந்துக் களான தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டோருக்கான வளர்ச்சிகளையும், உரிமைகளையும் எதிர்ப்பானேன்? அப்படி என்றால் பெரும்பாலான ஹிந்துக்களுக்கு பா.ஜ.க. எதிரி தானே!

இதனை திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் சுட்டிக் காட்டினால், எப்படி திசை திருப்புகிறார்கள் பார்த்தீர்களா? இதற்குப் பெயர்தான் பூணூல் புத்தி என்பது - நரித்தனம் என்பது. 

பா.ஜ.க.வையும் பார்ப்பனர்களையும்  அவர்களின் ஊட கங்களையும் பெரும்பாலான மக்களான தாழ்த்தப்பட் டோரும் பிற்படுத்தப்பட்டோரும் புரிந்து கொள்வீர்களாக! 

செவ்வாய், 22 டிசம்பர், 2020

கொடுங்கையூர் ரா.தனலட்சுமி _ கோ.தங்கமணி அவர்களின் வாழ்க்கை ஒப்பந்த விழா! - 29.4.1990


கழகத்தோழர் கொடுங்கையூர் ரா.தனலட்சுமி -

கோ.தங்கமணி வாழ்க்கை இணையேற்பு ஒளிப்படம்

29.4.1990 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கொடுங்கையூர் ரா.தனலட்சுமி _ கோ.தங்கமணி அவர்களின் வாழ்க்கை ஒப்பந்த விழாவுக்குக் தலைமையேற்று நடத்தி வைத்தேன். விழாவில் கவிஞர் கலி.பூங்குன்றன் வாழ்த்துரை வழங்கினார்.


 பெரியார் திடலில் ரா.தனலட்சுமி - கோ.தங்கமணி வாழ்க்கை ஒப்பந்த விழா ஆசிரியர் தலைமையில் நடைபெறும் காட்சி

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

-உண்மை இதழ், 16- 30 .10 .19



திங்கள், 21 டிசம்பர், 2020

திராவிடம் வெல்கவே! நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....


கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

நீதிக்கட்சித் தலைவர்களின் உருவப் படங்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி, மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் தோழர்கள் உள்ளனர் (சென்னை பெரியார் திடல், 17.12.2020).

இந்நாள் தமிழ்நாட்டு வரலாற்றில், குறிப்பாக பார்ப் பனர்கள் அல்லாத ‘சூத்திரர்' ‘பஞ்சமர்' என்று ஆக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் - ஆட்சி ரீதியாக திருப்பம் ஏற்பட்ட வைரக் கல்வெட்டு நாள்.

ஆம்! இந்நாள்தான் (17.12.1920) நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், சென்னை மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, கடலூர் ஏ.சுப்பராயலு (ரெட்டியார்) தலைமையில் மூவர் கொண்ட அமைச்சரவை பதவி யேற்ற நாள்! (மற்ற இரு அமைச்சர்கள் பனகல் அரசர், கே.வி.ரெட்டி).

இந்த டிசம்பர் 20 இல்தான் (1916) வெள்ளுடை வேந்தர்  பிட்டி தியாகராயரால் நீதிக்கட்சி சார்பில் ‘‘பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை'' (The Non-Brahmin Manifesto) வெளியிடப்பட்டது.

ஒரு நூறாண்டுக்கு முன் பார்ப்பனர் அல்லாத திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி ஆட்சி 1920 முதல் 1937 வரை 17 ஆண்டுகள் செய்த சாதனைகள் அனைத்தும் இன்று நம் மக்கள் அனுபவிக்கும் பல உரிமைகளுக்கும், வாய்ப்புகளுக்கும், வளமைகளுக்கும் போடப்பட்ட மிகப் பலமான அடிக்கற்கள் ஆகும்.

அதிலும் குறிப்பாக இந்தியாவிலேயே சட்ட ரீதியாக இந்திய அரசமைப்புச் சட்ட 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன் இன்று தமிழ்நாட்டு மக்கள் 69 விழுக்காடு அளவில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பயன் பெறுகிறார்கள் என்றால், அதற்கான தொடக்கத்தைக் கொடுத்த அந்தத் தூயதான நல்லாட்சிக்கு நன்றி உணர்வுடன் இந்நாளில் நமது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்!

எத்தனை எத்தனை மகத்தான சாதனைகள் அவை. இப்பொழுது நினைத்தால்கூட மயிர்க்கூச்செரிகிறது.

‘‘ஜனநாயகக் குழந்தை தவழ்ந்து விளையாடும் தொட்டில்'' என்று போற்றப்படும் இங்கிலாந்தில்கூட முழுமையான வடிவத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை 1928 இல் தான் கொண்டுவரப்பட்டது - தொடர் போராட் டங்களுக்குப் பிறகு.

ஆனால், நீதிக்கட்சி நிர்வாகம் செய்த சென்னை மாநிலத்தில் 1921 ஆம் ஆண்டிலேயே பெண்களுக்கு வாக்குரிமை ஆணை பிறப்பிக்கப்பட்டது (அரசு ஆணை எண்: 108, நாள்: 10.5.1921).

எடுத்துக்காட்டாக நீதிக்கட்சி ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட முக்கிய ஆணைகளும், சட்டங்களும் இதோ:

* முதல் வகுப்புரிமை ஆணை (M.R.O. Public Ordinary Service G.O. No.613, Dated: 16.9.1921).

* பதவி உயர்விலும் இட ஒதுக்கீடுக்கு வழி செய்யப்பட்டது. (M.R.O. Public Ordinary Service G.O. No.658, Dated: 15.8.1922).

* ‘‘பஞ்சமர்'' என்ற சொல் நீக்கப் பெற்று, ‘‘ஆதிதிராவிடர்'' என அழைக்கப்படவேண்டும். (அரசாணை எண்: 817 நாள்: 25.3.1922).

* கல்லூரிகளில் முதல்வர்கள் பார்ப்பனர்களாக இருந்த நிலையில், பார்ப்பனர் அல்லாதார் கல்லூரிகளில் சேர முட்டுக்கட்டை நிலவிய சூழலில், ஒவ்வொரு அரசு கல்லூரியிலும் குழுக்கள் (Selection Board) அமைக்கப் பட்டது. (அரசாணை எண்: 536 நாள்: 20.5.1922).

* கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த பார்ப்பனர் அல்லாத பிள்ளைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்கென்றே தனி ஆணை (அரசாணை எண்: 849 நாள்: 21.6.1923).

* சென்னை பல்கலைக் கழக செனட்டின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்தியும், எல்லா வகுப்பினருக்கும், பொது நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வழி செய்யும் ஆணை (பல்கலைக் கழக சட்டம் ஆணை 1923).

* பொதுக் கிணறு, குளம், சாலைகளில் தாழ்த்தப் பட்டோர் புழங்கும் உரிமை (தீர்மானம் முன்மொழிவு: இரட்டைமலை சீனிவாசன் - கெசட்டில் வெளியீடு 24.2.1925).

* தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி நிலையங்களில் மிகுதியாக சேர்க்கப்பட வேண்டும். (அரசாணை எண்: (அ) 205 நாள்: 11.2.1924, (ஆ) 825 நாள்: 24.9.1924). தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்திற்காகவே தனியே லேபர் துறை.

* இந்து சமய அறநிலைய சட்டம் (அரசாணை எண்: 29 நாள்: 27.1.1925).

* சென்னை மாநிலக் கல்லூரியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களை சேர்ப்பதற்கென்றே ஓர் ஆணை (எண்: (அ) 636 நாள்: 2.5.1922 (ஆ) 1880 நாள்: 15.9.1928).

* ஆங்கிலேயர் எதிர்ப்புக்கிடையே மருத்துவத் துறை இந்தியர் மயமாக்கியது பனகல் அரசர் தலைமையிலான அமைச்சரவை.

* மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதம் தேவை என்ற நிபந்தனையை நீக்கியதும் பனகல் அமைச்சரவையே.

* நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் எஸ்.முத்தையா முதலியார் முயற்சியால் கொண்டுவரப்பட்டு முதன்முதலில் செயல்பாட்டுக்கும் வந்த வகுப்புரிமை ஆணை (G.O. M.S. No.1880 Education Dated: 15.9.1928 மற்றும் அரசு ஆணை எண்: 226 நாள்: 27.2.1929).

* அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கான சட்டம் இயற்றல் (1928 டிசம்பர் 21).

* சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உருவாக்கம் (அரசாணை எண்: 484 நாள்: 18.10.1929).

* தேவதாசி ஒழிப்புச் சட்டம் - டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் முயற்சியால். (1930 இல்)

* சென்னை பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதப் படிப்பு உண்டு. ஆனால், தமிழுக்கென்று ஒரு துறை இல்லை. இந்த நிலையை மாற்றியது நீதிக்கட்சி.

* சென்னை மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300; தமிழ்ப் பேராசிரியர் கா.நமசிவாய முதலியாருக்கு மாதச் சம்பளம் ரூ.81. இந்தப் பேதத்தை நீக்கியதும் நீதிக்கட்சி ஆட்சியே!

* வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் சென்னை மேயராக இருந்தபோதுதான் முதன்முதலில் தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச நண்பகல் உணவளிக்க வழி செய்யப்பட்டது. அதன்பின் தான் நகராட்சி சட்டத்தைத் திருத்தி, நீதிக்கட்சி ஆட்சியில் மாநில அரசே மதிய உணவுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியது. (அரசாணை எண்: 1008 (L&M) நாள்: 7.6.1922).

* தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு அரசினர் கல்லூரி வெறும் சமஸ்கிருதக் கல்லூரியாக இருந் ததை மாற்றி தமிழும் சொல்லிக் கொடுக்க ஆவன செய்தவர் - நீதிக்கட்சியின் முக்கிய தலைவரான ஏ.டி. பன்னீர் செல்வம். (ஜில்லா போர்டு தலைவராகவும் இருந்தவர்).

* அரசு மாணவர் விடுதிகளான ராஜா மடம், உரத்தநாடு விடுதிகள் பார்ப்பனர் மாணவர்களுக்கு மட்டுமாகவே இருந்ததை அனைவருக்கும் பயன் படும்படிச் செய்தவரும் அவரே!

* இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக இருந்த நீதிக்கட்சியின் முக்கிய தலைவர் ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காவிட்டால் உரிமம் ரத்து என்று ஆணை பிறப்பித்தார்.

* தாழ்த்தப்பட்டவர்களை சேர்க்காத பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப்படும் என்று ஆணை பிறப்பித்தவர் - நீதிக்கட்சியின் முக்கிய தலைவரான சிவகங்கை எஸ்.இராமச்சந்திரனார் ஆவார்.

இந்த நீதிக்கட்சியின் தொடர்ச்சிதான் அரசியல் ரீதி யில் தி.மு.க.வாகும்.

சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்; சுயமரியாதைத் திருமணச் சட்டம்; இந்திக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை - தமிழும், ஆங்கிலமும்தான்; அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் சட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரம், சுயமரியாதை இயக்க வீராங் கனைகளின் பெயரில் மகளிர் வளரச்சி - உரிமை சட்டங் கள் - திட்டங்கள், ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் இணையர்க்கு தங்கம் - நிதி உதவி.

நுழைவுத் தேர்வு ரத்து - நீட்டை எதிர்த்து வழக்கு.

பேருந்து போக்குவரத்தை நாட்டுடைமை ஆக்கியது, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், இலவச கண்ணொளி திட்டம், பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், கைரிக்ஷா ஒழிப்புத் திட்டம், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட் டோருக்கு என்று தனித்தனி துறைகள், அரசு ஊழியர் இரகசிய குறிப்பாணை (Personal File) இரத்து,

தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20 சதவிகிதம்; தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடங்கும் ஆணை.

பெண்களுக்குச் சொத்துரிமை, பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள், உள்ளாட்சிப் பதவிகளில் பெண் களுக்கு 33 விழுக்காடு, இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்டவர் என்ற நிலை, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு ஒதுக்கீடு, கோவில்களில் கருணை இல்லம், மீனவர்களுக்கு இலவச வீடுத் திட்டம், பசுமைப் புரட்சி திட்டம், வெண்மைப் புரட்சி திட்டம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தனி ஒதுக்கீடு, விவசாயத்துக்கு இலவச மின்சாரம், தமிழ் செம்மொழியாக அங்கீகாரம், தொழிற்கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 15 விழுக்காடு ஒதுக்கீடு, விவசாயிகளின் கடன் தள்ளுபடி உழவர் சந்தை, சமச்சீர் கல்வி முறை, திருவாரூர், கோவையில் மத்திய பல்கலைக் கழகங்கள், மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்,

தி.மு.க. ஆட்சியின் சாதனைகளில் பொருளாதார வளர்ச்சியும் இருக்கும் - அதற்குள் மய்யக் கருவாக - புள்ளியாக சமூகநீதி  - இனப் பண்பாடு எனும் கண்ணோட்டமும் கண்டிப்பாக இருக்கும்.

இந்தியாவிலேயே சமூகநீதி என்ற சமுதாயக் கொள்கை உடைய ஓர் அரசியல் கட்சி உண்டு என்றால், அது தி.மு.க.தான்!

நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவைக்கான நூற்றாண்டு என்னும் வைர ஒளி மின்னும் நாளில் (17.12.1920) இவற்றையெல்லாம் அசை போடுவோம்!

அன்று எதிர்க்கத் தொடங்கிய உயர்ஜாதி ஆணவ எதிர்ப்பு இன்றுவரை தொடர்வதையும் கவனிக்கத் தவறக்கூடாது.

நீதிக்கட்சி ஆட்சியின் நூற்றாண்டு நடைபெறும் இந்தக் காலகட்டத்தில், அதன் வழி வந்த விழுதான தி.மு.க.வை ஆட்சிப் பீடத்தில் நிறுத்த உறுதி எடுப்போம்!

வெல்க திராவிடம் -

வெல்கவே!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

17.12.2020

சனி, 19 டிசம்பர், 2020

கிருத்தவ கல்வி நிறுவனங்களில் பயிலும் பாஜக புள்ளிகளின் பிள்ளைகள்

*ராஜ் நாத்சிங்கின் மகன்* இங்கிலாந்தின் "லீட்ஸ்" பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்.

*நிர்மலா சீதாராமன் மகள்* "வாங்மயிபரகலா" அமெரிக்காவின் நார்த் வெஸ்ட் பல்கலைக்கழத்தில் படிக்கிறார்.

வெளி விவகார *அமைச்சர் ஜெய்சங்கரின் மகன்* "துருவ்" ஜியாஜ் டவுன் பல்கலைக்கழகத்திலும், மகள் "மேதா" டெனிசன் பல்கலைக்கழகத்திலும் படிக்கிறார்கள்.

*அமைச்சர் ப்யுஸ்கோயல் மகள்* "ராசிகா" மகன் "துருவ் "ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கிறார்கள்.

*அமைச்சர் பிரகாஷ் சவடேகர் மகள்* "அபூர்வா" பாஸ்ட்டன்  பல்கலைக்கழத்தில் படிக்கிறார்.

*அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மகள்* "ஆதித்யா " அமெரிக்காவின் கார்னகி பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்..

*அமைச்சர் சுஜேந்திர சிங் செகாவத் மகள்* "சுபாஷினி" ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்.

*அமைச்சர் ஜிஜேந்திரசிங்கின் மகள்* "அருனேதய் " ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கிறார்.

*அமைச்சர் சஞ்சய் தோத்ரா மகன்* "நகுல் " கார்னகி பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்.

*அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் மகள்* "திபோத்தமா " வார்விச் பல்கலைக்கழத்தில் படிக்கிறார்.

*இந்த தேசபக்தர்களின் பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் படிப்பது தான் "மேக் இன் இந்தியாவா?*
நம்ம புள்ளைங்க உன் சாமி பெருசா இல்ல என் சாமி பெருசானு அடிச்சுகிட்டு சாவுறானுங்க...

குறிப்பு : *இந்த கல்விக்கூடங்கள் அனைத்தும் கிருஸ்த்தவர்களால் உறுவாக்கப்பட்டது என்பதை கிருஸ்த்தவர்களை வசைபாடும் இராம அவதார காவிகள் நினைவில் கொள்ள வேண்டும்*.
- கட்செவி வழியாக

புதன், 9 டிசம்பர், 2020

மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சை செய்ய ஆயுர்வேதத்திற்கு இடம்கொடுப்பது வருணாசிரமப் பார்வையே!


அலோபதி அறுவை சிகிச்சை முறையில் ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள நிலையில் பின்னோக்கிப் பயணிப்பதை கைவிடவேண்டும்!

டாக்டர்கள் எதிர்ப்புப் போராட்டம் நியாயமானதே!
----------------------------------------------------------

மத்திய அரசின் நல்வாழ்வுத் துறை, ‘நீட்’ தேர்வைப் பிடிவாதமாகத் திணிப்பதற்குச் சொல்லப்படும் ஒரு காரணம் தரமான மருத்துவர்களை உருவாக்கவேண்டும்; நோயாளிகளின் உயிரோடு விளையாடக் கூடாது என்பது மிகமிக முக்கியம் என்று ஒருபுறம் கூறிக் கொண்டே, மறுபுறத்தில்...!

கண்டனத்துக்குரிய கேலிக் கூத்து!

ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கான தகுதியுண்டு என்று ஒரு மருத்துவ விதிகளை மாற்றி, மிக்சியோபதி (Mixopathy) என்று பெயர் கொடுத்திருப்பதைவிட கண்டனத்திற்குரிய கேலிக்கூத்து வேறு இல்லை!

ஆயுர்வேதத்தின்மீது - மற்ற பிரிவுகளை (சித்த வைத்தியம், யுனானி போன்றவற்றின்மீது காட்டாத தீவிர ஆர்வம்)விட அதிகமான அதீத அக்கறை காட்டுவதற்கு மூலகாரணம், அது சமஸ்கிருத கலாச்சாரத்திலிருந்து உருவான ஒன்று என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கை அஜெண்டாதான் என்பது உலகறிந்த ரகசியம்!
மத்திய அரசு சித்த வைத்தியத்திற்கு ஒதுக்கிடும் தொகைக்கும், ஆயுர்வேதத்திற்கு ஒதுக்கும் நிதியும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. அதற்குக் காரணம், இது தமிழ்ப் பண்பாடு - கலாச்சாரம் அடிப்படையைக் கொண்டது என்பதுதான்!

மருத்துவத்திலும் வருணாசிரமப் பார்வையா?

மருத்துவத்தில்கூட இப்படி ஒரு வர்ணாசிரம சிந்தனை ஓட்டம் வேடிக்கையானது.
அலோபதி என்ற ஆங்கில முறை வைத்தியத்தில்கூட, Physician என்ற மருந்துமூலம் குணப்படுத்தும் முறை மருத்துவப் படிப்பினைப் படித்தவர்களுக்கு அறுவை சிகிச்சை நடைமுறை கிடையாதே! அதனால்தானே, Physician’s Cure, Surgeon’s Cure - மருந்துமூலம் குணப்படுத்தும் மருத்துவம், அறுவை சிகிச்சைமூலம் நோயைக் குணப்படுத்தும் சிகிச்சை என்று இரண்டு முறைகள் காலங்காலமாக செயற்பாட்டில் உள்ளது!
அப்படி அதிலேயே இருக்கிறபொழுது, மருத்துவப் பட்டப் படிப்பும், அதற்கேற்ப M.D., - M.S., என்று பிரித்து சொல்லிக் கொடுக்கப்படுகிற நிலை உள்ளது!
அறுவை சிகிச்சை செய்வதில் முக்கிய பங்கு  - மயக்க மருந்து (Anaesthesia) கொடுப்பதாகும். அதன் அளவு, நோயாளியின் தன்மைக்கேற்ப அளவீடு பார்த்து கவனமாகக் கொடுத்து, வலி உபாதையிலிருந்து நோயாளிக்கு இதமான முறையில் அறுவை சிகிச்சைமூலம் குணப்படுத்த அதற்கென்றே தனிப்படிப்பு படித்து தகுதி பெறுகிறார்கள் ஆங்கில மருத்துவ முறையில் மருத்துவர்கள்.

நாட்டில் ஜனத்தொகையைக் குறைக்க ஏற்பாடா?

ஆயுர்வேத டாக்டர்கள் இதனை எப்படிக் கையாளுவார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி. மேலும் பல சிக்கலான உடற்கூறு நுணுக்கங்களை அறிந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில், இப்போது ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்தால், மிகப்பெரிய உயிர்க்கொல்லி ஆகி, நாட்டில் ஜனத்தொகையைக் குறைக்கத்தான் உதவுமே தவிர, மற்றபடி பயன்படாது! விபரீதமான மத்திய அரசின் இந்தத் திட்டத்தை எதிர்த்து டாக்டர்கள் எதிர்ப்பு காட்டுவது, மக்கள் நலன் கருதியே தவிர, அவர்களுக்காக அல்ல!

மத்திய அரசு இந்த விபரீத யோசனை - திட்டத்தைக் கைவிடவேண்டும்!

மருத்துவத்தில் - மருந்து கொடுத்து குணப்படுத்தும் ஆயுர்வேதத்தைப் பயன்படுத்தட்டும்; அதுபோல, மற்ற முறைகளிடத்தும் பாரபட்சம் காட்டாமல் - மாற்றாந்தாய் மனப்பான்மையோடு சித்த வைத்தியம், யுனானி போன்றவற்றில் நியாயமாக நடந்துகொள்ள வேண்டியது மிகமுக்கியம்!

முன்னோக்கிச் செல்லவேண்டும் - பின்னோக்கி அல்ல!

21 ஆம் நூற்றாண்டில் அறிவியல் மருத்துவவியலின் வளர்ச்சி, முன்னோக்கி செல்லவேண்டுமே தவிர,  பின்னோக்கி, ஆதிகாலத்தின் அறுவை சிகிச்சைக் காலத்தை நோக்கிப் போவது வளர்ச்சி அல்ல; விபரீத விளையாட்டு - அதுவும் மக்களின் - நோயாளிகளின் உயிருடன் என்பது விரும்பத்தகாத விபரீத நிலை!

டாக்டர்களின் எதிர்ப்பு நியாயமானதே!

எனவே, மத்திய அரசு இந்தத் திட்டத்தை கைவிடுவதே சாலச் சிறந்தது - மற்ற வழிகளில் ஆயுர்வேதத்தை ஊக்கப்படுத்தட்டும்; இப்படி ஒரு அபாயகரமான முயற்சியில் ஈடுபடக் கூடாது. மறுபரிசீலனை செய்வது அவசியம், அவசரம்!
டாக்டர்களின் எதிர்ப்பு நியாயமானது - தேவையானதும்கூட!

கி.வீரமணி,
தலைவர், 
திராவிடர் கழகம்.

9.12.2020 
சென்னை.

திங்கள், 30 நவம்பர், 2020

முகப்புக் கட்டுரை : இந்தியா எங்கும் எழுச்சிக்கு வித்திட்ட திராவிடர் கழக பவள விழா மாநாடு!