தமிழ் மலர்

மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சமூக நீதி
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • திராவிடர் இனம்
  • தமிழ் உலகு
  • சிந்தனை செய்வோம்
  • மகளிர் மாண்பு
  • தென் சென்னை திராவிடர் கழகம்
சேலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 ஜூலை, 2024

சேலம் பள்ளியில் மாணவர்கள் புலால் உணவு கொண்டுவரக் கூடாதாம்!

 

சேலம் பள்ளியில் மாணவர்கள் புலால் உணவு கொண்டுவரக் கூடாதாம்!

Last updated: July 12, 2024 2:40 pm
Published July 12, 2024

கருஞ்சட்டை

சேலத்தில் உள்ள செந்தில் பப்ளிக் ஸ்கூல் முதல்வர், பெற்றோருக்கு அனுப்பிய ஆணை வருமாறு:
‘‘துவக்கப் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு – எங்கள் பள்ளிக்கான உணவுக் கொள்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சில மாணவர்கள் எடுத்துவரும் இறைச்சி வகை உணவு சிலரின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக உள்ளது. ஆகவே, அனைவரின் உணர்வுகளையும் மதிக்கும் சூழலை உருவாக்கும் விதத்தில் புதிய உணவுக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது,
அனைத்து மாணவர்களும் உணவு இடை வேளையின் போது ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். ஆகவே, பள்ளிக்கு இறைச்சி உணவு வகைகளைக் கொண்டுவருவதைத் தடை செய்கிறோம்.
எங்களின் இந்த புதிய உணவுக் கொள்கை அனைவருக்கும் ஒத்துப்போகும் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம்.
ஆகவே, இனிமேல் புலால்வகை உணவை மாணவர்களுக்குக் கொடுத்து அனுப்புவதை கட்டாயம் பெற்றோர்கள் தவிர்த்துவிட வேண்டும்.
இப்படிக்கு
மனோகரன்
பள்ளி முதல்வர்
தமிழ்நாட்டில் உள்ள ஒரு பள்ளிகளில் இப்படியும் ஒரு பள்ளி இருக்கிறது. அதற்கென்று ஒரு முதல்வர் இருக்கிறார். பெற்றோருக்கு இப்படி ஒரு ஆணையை அனுப்புகிறார் என்றால், அது எப்படி?
பள்ளிக் கல்வித் துறை இப்படி ஒரு ஆணையைப் பிறப்பிக்கவில்லை. பெற்றோர்கள் எல்லோரும் நீண்ட வரிசையில் நின்று இப்படி ஓர் கோரிக்கையை முன்வைக்கவில்லை.
இந்த நிலையில், இப்படி ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டது எப்படி?
இதன் பின்னணி என்ன?
சங்கிகள் ஊடுருவலா?

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை
உரிய நடவடிக்கை எடுக்குமா?

இடுகையிட்டது parthasarathy r நேரம் 1:52 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சேலம், பள்ளி, புலால் உணவு

செவ்வாய், 12 டிசம்பர், 2023

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பெரியாரைப்பற்றி பேராசிரியர் நூல் எழுதக்கூடாதா? என்னே விசித்திரக் கொடுமை!



 Viduthalai  December 11, 2023  ஆசிரியர் அறிக்கை, கழகம்,
2-15

பேராசிரியர்மீது நடவடிக்கை எடுத்துள்ள ‘‘காவி” துணைவேந்தர் – அதனை விலக்கிக் கொள்ளாவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை

‘சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார்பற்றி நூல் எழுதிய இணைப் பேராசிரியர்மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ள துணைவேந்தர், அதனை விலக்கிக் கொள்ளாவிட்டால், திராவிடர் கழகத்தின் சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:
தந்தை பெரியார் குறித்து நூல் எழுதியதற்காக, சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியருக்கு மெமோ வழங்கியதற்கு, பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சேலம் கருப்பூரில் தமிழ்நாடு அரசின் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. சேலம் உள்பட 4 மாவட்டங்களைச் சேர்ந்த கலை, அறிவியல் கல்லூரிகள் இப்பல்கலைக் கழகத்தோடு இணைவு பெற்று செயல்பட்டு வருகின்றன. பல்கலைக் கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சமயம் சார்ந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், ஆர்எஸ்எஸ், பா.ஜ.க.விற்கு ஆதரவாகவும் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு ஏற்கெனவே உள்ளது.
முன் அனுமதி தேவையில்லை!
அப்பல்கலைக் கழகத்தில் இதழியல் துறை இணைப் பேராசிரியரான இரா.சுப்பிரமணி, அங்குள்ள கலைஞர் ஆய்வு மய்யத்தின் இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

சமீபத்தில் இவரை, பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக உயர்கல்வித்துறை நியமித்தது. தந்தை பெரியாரின் போராட்டங்கள் தொடர்பாக இவர் எழுதிய `பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற புத்தகம் கடந்த ஆண்டு வெளியானது.
தொடர்ந்து, ஏற்கெனவே இவர் எழுதிய `மெக்காலே பழமைவாதக் கல்வியின் பகைவன்’ என்ற நூலின் மறுபதிப்பும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த நூல்களை எழுதியதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு சமீபத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் பேராசிரியர் இரா.சுப்பிர மணிக்கு மெமோ வழங்கியது.
கலை, இலக்கியம், அறிவியல், கல்வியியல் மற்றும் கலாச்சார தன்மையுடைய விவகாரங்களுக்கு, எந்தவித முன் அனுமதியும் பெறத் தேவையில்லை என்ற விதி உள்ளது. ஆனால், பெரியார் குறித்த புத்தகம் எழுதிய தற்காக பேராசிரியருக்கு மெமோ வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பல்வேறு தரப்பினர், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித் துள்ளனர்.

துணைவேந்தர் ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரரா?
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந் தராக இருக்கக் கூடியவரின் தொடர் நடவடிக்கைகள் – அவர் ஒரு ‘காவி’ உடை அணியாத ஆர்.எஸ்.எஸ்.காரரோ என்ற விமர்சனம் வெடித்துக் கிளம்பியுள்ளது.
தந்தை பெரியார் பிறந்த நாளை ‘‘சமூகநீதி” நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்ததோடு, அன்றைய நாளில் சமூகநீதியைக் கடைப்பிடிப்போம் என்று அரசுப் பணியாளர்கள் உறுதிமொழியை எடுக்கவேண்டும் என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் அத்தகைய உறுதிமொழி எடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை.

கழகத்தின் சார்பில் தொடர் போராட்டம்!
இந்த நிலையில் பெரியார் பெயரில் இருக்கக்கூடிய பல்கலைக் கழகத்தில் பெரியார்பற்றி நூல் எழுதக் கூடாது என்று கூறுவது எத்தகைய அடாவடித்தனம்? எத்தகைய கேலிக் கூத்து!
தமிழ்நாடு அரசு – குறிப்பாக உயர்கல்வித் துறை அந்தக் காவி படிந்த துணைவேந்தர்மீது உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும்.
இணைப் பேராசிரியர் இரா.சுப்பிரமணிமீது பல்கலைக் கழகம் எடுத்துள்ள நடவடிக்கையை ஒரு வாரத்துக்குள் விலக்கிக் கொள்ளவேண்டும்; இல்லை யெனின் மிகப்பெரிய போராட்டத்தை பல்கலைக் கழகம் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.

 

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
11.12.2023

இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:08 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அறிக்கை, சேலம், பெரியார் பல்கலைக்கழகம்

செவ்வாய், 10 ஜனவரி, 2023

சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்



  January 10, 2023 • Viduthalai

 ஆளுநர் ஓர் அரசு ஊழியர் அவ்வளவே!

ஆளுநர் நடந்துகொள்வது அப்பட்டமான சட்ட மீறல்

ஒரு நொடிகூட ஆளுநராகத் தொடரத் தகுதியில்லை;

முதலமைச்சர் தீர்மானம் - ஆளுநர் பதவிக்கு அவமானம்!

சேலம், ஜன.10 ஆளுநர் ஓர் அரசு ஊழியர் அவ்வளவே! ஆளுநர் நடந்துகொள்வது அப்பட்டமான சட்ட மீறல்; ஒரு நொடிகூட ஆளுநராகத் தொடரத் தகுதியில்லை; முதலமைச்சர் தீர்மானம் - ஆளுநர் பதவிக்கு அவமானம்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

நேற்று (9.1.2023) சேலத்திற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

செய்தியாளர்: முதலமைச்சர் உரையாற்றிக் கொண் டிருக்கும்போதே ஆளுநர் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறாரே?

தமிழர் தலைவர்: ஒரு மாநில அரசினுடைய ஆளுநர் என்பவர், தன்னிச்சையாக நடப்பதற்கு, அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டிருக்கின்ற அரசமைப்புச் சட்டத்தில் எந்தவிதமான அதிகாரமும் அவர்களுக்கு அளிக்கவில்லை.

அவர் நடந்துகொண்டிருக்கின்ற முறை, ஏற்கெ னவே வெளியிலும் சரி, இன்றைக்கு சட்டமன்றத் தொடக்க நிகழ்வில், ஆளுநர் அவர்கள் பாதியி லேயே வெளியேறியது என்பது ஜனநாயகத்தைக் கொச் சைப்படுத்துவது - இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு அவமதிப்பு உண்டாக்குவது - தன்னுடைய கடமை யிலிருந்து தவறிய - ஓர் அரசு ஊழியருடைய குற்றத் திற்கு அவர் ஆளாகிறார்.

இதுவரையில், தமிழ்நாட்டின் நீண்ட நெடிய வரலாற்றில், இப்படி ஜனநாயகத்தைக் கொச்சைப் படுத்தக் கூடிய கீழ்த்தரமான ஒரு நிலைக்கு ஓர் ஆளுநர் சென்றதே கிடையாது.

ஆளுநர் உரையை எழுதுவது யார்?

பொதுவாக ஆளுநர் உரை என்பது, அவரால் எழுதப்படுவது அல்ல; அவர் படிக்கவேண்டிய, அரசமைப்புச் சட்டத்தின் முறையில், ஒரு தலைவர் என்ற முறையில், அவருடைய பெயரால் ஆட்சி அமைந்திருக்கிறது என்ற பெயரால், அமைச்சரவை, அதனுடைய கொள்கைகளை முடிவு செய்து, ஆளுநர் மூலம் அறிவிப்பதுதான் ஆளுநர் உரை.

உதாரணமாக, ஒன்றிய அரசில், அந்த அமைச்சரவை என்ன முடிவெடுக்கிறதோ அதைத்தான் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத் தொடக்க உரையில் படிப்பார். அவர் சொந்தமாகக் கருத்துகளைச் சேர்ப்பதற்கோ, நீக்குவதற்கோ அவருக்கு எந்தவிதமான உரிமையும், அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்படவில்லை. இது நீண்ட காலமாக காப்பாற்றப்பட்ட மரபும் ஆகும்.

ஆனால், அந்தக் குறைந்தபட்ச மரபைக்கூட ஆளுநர் மீறியிருக்கிறார். திராவிட மாடல் ஆட்சி என்பதோ, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா போன்றவர்களின் பெயர் களை விட்டுவிட்டுப் படிப்பது என்பது அதிகப்பிரசங்கித் தனமானது; தேவையற்ற ஒன்றாகும்.

இன்னுங்கேட்டால், ஆளுநர் உரை தமிழ்நாடு அமைச்சரவையால் தயாரிக்கப்பட்டு, சட்டப்பேர வையில் ஆளுநர் படிப்பதற்கு முன்பாக, ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அவருடைய அனுமதியையும் பெறு வார்கள். அப்படி அந்த உரையின்மீது ஆளுநருக்கு மாறுபட்ட கருத்து இருந்தால், தனிப்பட்ட முறையில், நேரிடையாக அரசாங்கத்திற்கு அறிவிக்கவேண்டும்; சட்டப்பேரவைத் தலைவருக்குத் தெரிவிக்கவேண்டும்.

இதில் எல்லாம் எனக்கு மாறுபட்ட கருத்து இருக்கிறது என்று சொல்லி, பிறகு அவர்களுக்குள் முடிவெடுக்கவேண்டும்.

அப்படி செய்யாமல், அதை விட்டுவிட்டுப் படிப்பது என்பது இருக்கிறதே, அது தவறான முன்மாதிரி; அது மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்தை மீறிய அவமதிப்புச் செயல். இதற்குரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

இதுவரை தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஓர் ஆளுநர் இவ்வளவு மோசமாக நடந்துகொண்ட நிகழ்வு என்பது  கிடையவே கிடையாது.

ஆளுநர் செயல் - 

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமே!

ஆளுநர் அவர்கள் அரசமைப்புச் சட்டத்தின்மீது எடுத்த உறுதிமொழிக்கு இது முற்றிலும் விரோதமாகும்.

முதலமைச்சர், அமைச்சர்கள் எப்படி அரசமைப் புச் சட்டத்தின்மீது உறுதிமொழி கூறி பதவியேற் கிறார்களோ, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 159 ஆவது பிரிவில் உள்ள பகுதியை உங்களுக்குப் படித்துக் காட்ட விரும்புகிறேன்.

I solemnly affirm will faithfully execute the office of Governor (or discharge the functions of the Governor) of (name of the State) and will to the best of my ability preserve, protect and defend the Constitution and the law and that I will devote myself to the service and well being of the people of (name of the State)

என்று இருக்கிறது. 

அதாவது தமிழ்நாட்டு மக்களுடைய நலனுக்காக நான் பாடுபடுவதற்கு உறுதியேற்கிறேன்; அதைக் காப்பாற்றுவேன் என்பதுதான்.

அமைச்சர்களுக்கும், மற்றவர்களுக்கும் பதவிப் பிராமண உறுதி மொழி வாசகங்கள், அரசமைப்புச் சட் டத்தை உருவாக்கியபொழுது, அந்த வாசகங்கள் வேறு.

ஆனால், ஆளுநர் என்று வரும்பொழுது,    well being of the people - மக்களுடைய நலனுக்கு என்று அதில் தெளிவாக இருக்கிறது. இதற்கு முற்றிலும் விரோதமாக அண்மைக்காலமாக தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் நடந்து வருகிறார்.

அவர் எந்த மாநிலத்தினுடைய ஆளுநராக இருக்கிறார் என்று கேட்டால், தமிழ்நாடு என்று அதற் குத் தெளிவான பெயர், சட்டப்பேரவையிலேயே பேரறிஞர் அண்ணா அவர்கள் காலத்தில் மாற்றப்பட்டு, அது ஒன்றிய அரசால் ஏற்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், இன்றைய ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள், அதை மாற்றி, தமிழகம் என்று சொல்ல வேண்டும்; தமிழ்நாடு என்று சொன்னால், பிரி வினையை உண்டாக்குவது என்று குறுக்குச்சால் விடுகிறார்.

இவையெல்லாம்கூட அவர் வெளியில் சொன்ன விஷயங்கள். ஆனால், சட்டப்பேரவையில், ஆளுநர் உரையை படிப்பது என்பது, தமிழ்நாடு அரசின் கொள்கை அறிவிப்பு. அதைத்தான் ஓர் ஆளுநர் படிக்கவேண்டும்.

பேரறிவாளன் வழக்கில், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

பேரறிவாளன் வழக்கில், இந்த ஆளுநரைப்பற்றி உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

எப்படி இங்கிலாந்து அரசருக்கு முடிவெடுக்க வேண்டிய உரிமை தனியாகக் கிடையாதோ - எப்படி குடியரசுத் தலைவருக்கு முடிவெடுக்கின்ற உரிமை கிடையாதோ - அதுபோன்றுதான், மாநில ஆளுநர்களுக்கும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாகச் சுட்டிக்காட்டி, இவருக்குக் குட்டும் வைத்திருக்கிறது.

அப்படிப்பட்ட ஓர் அனுபவத்தை அவர் ஏற் கெனவே பெற்றும்கூட, இது திட்டமிட்ட ஒரு செயல். வேண்டுமென்றே ஒரு மோதல் போக்கை உருவாக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, இயல்பாக நடக்கக்கூடாது; அதற்கு மாறாக, தாங்கள் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்தவேண்டும் என்று, இதில் மட்டுமல்ல; அரசாங்கத்தினுடைய கொள்கைகள், திட்டவட்டமான கருத்துகளுக்கு விரோதமாக நடந்துகொண்டிருக்கின்றார்.

எனவே, இது மிகப்பெரிய ஓர் அரசியல் போராட்டத் திற்கு அவரே வழிவகுக்கிறார். அவர் ஓர் ஆளுநராக நடந்துகொள்ளவில்லை. முழுக்க முழுக்க ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரராகத்தான் நடந்துகொண்டிருக்கிறார்.

ஆளுநர் ஓர் அரசு ஊழியர் - அவ்வளவே!

அவர் ஓர் அரசு ஊழியர் (பப்ளிக் சர்வண்ட்). நம்முடைய வரிப் பணத்தில் சம்பளம் வாங்கக்கூடிய ஒருவர். அவருக்கு அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், ஆளுநர் பதவியிலிருந்து விலகிவிட்டு, வேண்டுமானால், அண்ணாமலை அவர் களின் பதவிக்கு அவர் போகலாம்; அது அவருடைய விருப்பம். இல்லாவிட்டாலும், ஓர் ஆர்.எஸ்.எஸ். காரராக இருந்து செய்யலாம்; அது அவருடைய விருப்பம். தனிப்பட்ட முறையில், ஆர்.என்.இரவியாக அவர் இதுபோன்ற கருத்தைச் சொல்வதில், எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. அதை நாங்கள் சந்தித்துக் கொண்டிருப்போம்.

ஆனால், முழுக்க முழுக்க மக்களுடைய வரிப் பணத்தை சம்பளமாகப் பெறக்கூடிய ஒருவர், ஆளு நராக இருந்துகொண்டு, சட்டப்பேரவை மரபுகளை யெல்லாம் குழிதோண்டி புதைப்பது - அரசமைப்புச் சட்டத்தின்மீது எடுத்த உறுதிமொழிக்கு விரோதமாக நடந்துகொள்வது என்பது கண்டனத்திற்கு உரியதாகும். மக்கள் போராட்டம் வெடிக்கும்!

ஏற்கெனவே 22 மசோதாக்களை ஆளுநர் அவர்கள் நிலுவையில் வைத்திருக்கிறார். அந்த மசோதாக்களை அவர் திருப்பி அனுப்பவேண்டும்; அல்லது அதற்குரிய காரணங்களை அரசிடம் கேட்கவேண்டும். அப்படி அவர் செய்யவில்லை.

ஆன்-லைன் சூதாட்டத்தினால், ஒவ்வொரு நாளும் தற்கொலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதைப் பற்றி அவர் கவலைப்படாமல், அதற்கு மாறாக,  வேண்டு மென்றே இப்படிப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கு கிறார்கள். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, எங்கெல்லாம் பா.ஜ.க. ஆளவில்லையோ, அங்கெல் லாம் தங்களுக்கு வேண்டப்பட்டவரை ஆளுநராகப் போடவேண்டியது; அந்த ஆளுநர், மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுக்கு விரோதமாக நடந்துகொள் கிறார்கள். இதுதான் ஆர்.எஸ்.எஸின் திட்டமாக இருக் கிறது.

ஒரு நொடிகூட ஆளுநராகத் தொடரக்கூடாது!

தமிழ்நாட்டிற்குப் போடப்பட்ட ஆளுநர்தான் மிக மிக மலிவாக, அருவெறுப்பாக நடந்துகொள்கிறார். அவர் அவமதிப்பது ஜனநாயகத்தை - அரசமைப்புச் சட்டத்தை; தன்னுடைய கடமையிலிருந்து வழுவியிருக்கிறார் ஆளுநர்.

எனவே, ஒரு நாள்கூட, ஒரு நொடிப் பொழுதுகூட ஆளுநராக நீடிக்க அவருக்குத் தகுதியில்லை என்பது மக்களுடைய எண்ணம்.

செய்தியாளர்: குடியரசுத் தலைவருக்கு என்ன கோரிக்கை வைக்க விரும்புகிறீர்கள்?

தமிழர் தலைவர்: நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும்பொழுது,  பிரதமர் மோடி தலைமையில் உள்ள அமைச்சரவை, ஒரு உரையைத் தயாரித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்புவர். அதை அவர் நாடாளுமன்றம் தொடங்கும்பொழுது, அப்படியே படிப்பார், அவ்வளவுதான்.

படிப்பதை பாதியில் விட்டுவிட்டுச் செல்வதோ, உரையில் இருப்பதை விட்டுவிட்டுப் படிக்கவோ முடியாது. அது பெரிய அளவில் இருப்பது.

முதலமைச்சர் தீர்மானம் - 

ஆளுநர் பதவிக்கு அவமானம்!

இது மாநில அளவில் நடப்பது. இதுவரையில் எந்த மாநிலத்திலும் இப்படி நடைபெற்றது இல்லை.

முதலமைச்சர் அவர்கள் தெளிவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார் என்றால், ஆளுநருக்கு இதைவிட அவமானம் வேறு கிடையாது. இதையும் தாண்டி அவர் பதவியில் நீடிப்பது என்பது - அவர் மான, அவமானத்தைப்பற்றி கவலைப்படாமல் இருக்கிறார் என்பதைவிட, அரசமைப்புச் சட்டக் கடமையிலிருந்து அவர் தவறியிருக்கிறார்.

எனவே, அவரை இனி ஆளுநர் பதவியில் துளியும் கூட அனுமதிக்கக் கூடாது. மக்கள் போராட்டம் வெடிக் கும்.

செய்தியாளர்: தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசின் திட்டங்களை வேறு கோணங்களில் இங்கே செயல் படுத்துகிறார்கள் என்று அரசு ஊழியர்களே குற்றம் சாட்டியிருக்கிறார்கள்; குறிப்பாக அவுட்சோர்சிங் முறையில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள், 115 அரசாணை வெளியிட்டு, அதை நீக்காமல் அப்படியே வைத்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டை வைத்திருக் கிறார்களே?

தமிழர் தலைவர்: அதற்கும், இதற்கும் சம்பந்தமேயில்லை. அதை சொல்வதற்கும், இந்த நிகழ்விற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

அதைப்பற்றி விளக்கம் கேட்கவேண்டியது; அதைத் தெளிவாகச் சொல்லவேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை. அது தனிப் பிரச்சினை. எனவே, அதைக் கொண்டு வந்து இதில் குழப்பவேண்டிய அவசிய மில்லை. அது ஆளுநருடைய வேலையும் அல்ல.

ஒன்றிய அரசு என்ன திட்டத்தைச் சொல்லிற்று, மாநில அரசு என்ன செய்தது என்பது வேறு பிரச்சினை. அதற்குத் தெளிவான விளக்கம் சொல்வார்கள்.

ஆளுநர் என்பவர் கேள்வி கேட்கின்ற இடத்தில் இல்லை. சொந்தமாக இவருடைய கருத்தைச் சொல் வதற்கு ஆளுநருக்கு உரிமையில்லை; விட்டுவிட்டுப் படிப்பதற்கும் உரிமையில்லை.

ஒன்றிய அரசு என்ன செய்யவேண்டும்?

செய்தியாளர்: ஆளுநர்மீதான நடவடிக்கை எப்படி இருக்கவேண்டும்?

தமிழர் தலைவர்: ஆளுநர் மீதான நடவடிக்கை என்பது, ஒரு நேர்மையான ஒன்றிய அரசாக இருந் தால், தமிழ்நாட்டு ஆளுநரைத் திரும்பி அழைத்துக் கொள்ளவேண்டும். அல்லது ஆளுநர் ராஜினாமா செய்யவேண்டும்.

அவர்களுடைய திட்டம் என்னவென்றால், அய்ந்தாண்டுகள் இந்த அரசு நீடிக்கக்கூடாது; அதற்காக இப்படி ஒரு மோதல் போக்கை உருவாக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம்.

எனவேதான், ஒன்றிய அரசு இந்த ஆளுநரைத்  திரும்பப் பெறவேண்டும். இல்லையானால், மக்கள் எழுச்சி ஏற்படும்.

செய்தியாளர்: ஆளுநர் அவர்கள், அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய பேச்சுகளை பேசி வருவதின் பின்னணி என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: ஆர்.எஸ்.எஸ். பின்னணிதான். தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நல்லாட்சியாக நடைபெறுகிறது.  திராவிட மாடல் ஆட்சி உலகப் புகழ் பெறுகிறது; இந்தியாவிலேயே முதல் முதலமைச்சராக எல்லோராலும், பத்திரிகைகளாலும் புகழப்படுகிறார்.

இந்தப் பெருமை அவருக்கு வரக்கூடாது; இந்த ஆட்சிக்குப் பெருமை வரக்கூடாது; இப்படியே நீடித்தால், தமிழ்நாட்டில் தாங்கள் காலூன்ற முடியாது என்பதற் காகத்தான் - இதுபோன்ற காரியங்களை செய்கிறார்கள். இது இங்கே மட்டுமல்ல, கேரள மாநிலத்தில் உள்ள ஓர் ஆளுநராலும் அரங்கேற்றப்படுகிறது; மேற்கு வங்காளத்திலும் நடைபெற்றது. தெலங்கானாவில் நடந்துகொண்டிருக்கிறது.

ஆனால், எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, இவ்வளவு கீழிறக்கமாக தமிழ்நாட்டு ஆளுநர்தான் நடந்துகொண்டிருக்கிறார். ஆகவே, அவர் வெளி யேறவேண்டும்; அப்படி வெளியேறாவிட்டால், வெளியேற்றப்படக்கூடிய மக்கள் இயக்கம் நடக்கும். அந்த மக்கள் இயக்கத்தில் அத்துணை பேரையும் ஒருங்கிணைப்போம்.

ஆளுநர் நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறாரா?

செய்தியாளர்: பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர், ஆளு நரை, தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் நிர்ப்பந்தப் படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: மாநில ஆளுநருக்குச் சொந்த மாக சிந்திக்கக் கூடிய உரிமையோ, கருத்தோ சட்டப் பேரவையின் உள்ளே கிடையாது என்பதுதான் அரசமைப்புச் சட்டம்.

எனவே, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரின் குற்றச் சாட்டு என்பது, அரசமைப்புச் சட்டம் தெரியாதவர்கள் பேசுகின்ற பேச்சாகும்.

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 4:24 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆசிரியர் பேட்டி, ஆளுநர், சேலம்

திங்கள், 30 நவம்பர், 2020

முகப்புக் கட்டுரை : இந்தியா எங்கும் எழுச்சிக்கு வித்திட்ட திராவிடர் கழக பவள விழா மாநாடு!


முழக்கங்கள் - முடிவுகள் - விடிவுகள்!

 மஞ்சை வசந்தன்

 சேலத்தில் 1944ஆம் ஆண்டு நீதிக்கட்சி, திராவிடர் கழகமாகப்  பெயர் மாற்றம் செய்யப்பெற்றது வரலாற்றுச் சிறப்புமிக்கது. அம்மாநாட்டில் பங்குபெற்ற சுயமரியாதை வீரர்கள் சிலர், பவள விழா மாநாட்டிலும் கலந்து கொண்டதும், 1944இல் சேலம் மாநாட்டில் உரை நிகழ்த்திய ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகத் தலைவராக, 86 வயது நிறைந்த முதுபெரும் தலைவராக _ தமிழகத்தின் மூத்த தலைவராக இம்மாநாட்டில் இந்தியாவுக்கே எழுச்சியை ஏற்படுத்தும் முழக்கம் இட்டதும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை.

சேலம் மாநகரில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கழகத் தோழர்கள் பொறுப்பாளர்கள் புடைசூழ்ந்து, “தந்தை பெரியார் வாழ்க, அன்னை மணியம்மையார் வாழ்க, தமிழர் தலைவர் வாழ்க’’ என முழக்கமிட, தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

திராவிடர் கழக பவளவிழா  மாநாடு  27.8.2019 அன்று சேலம் அம்மாப்பேட்டை கொங்கு வெள்ளாள திருமண மண்டபத்தில், எடப்பாடி இராமன் நினைவு முகப்பில், அன்னை மணியம்மையார்  நினைவரங்கத்தில் காலை 8:30 மணிக்கு, கலைமாமணி டாக்டர் திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின்  பகுத்தறிவு இசை நிகழ்ச்சி, கலைநிகழ்ச்சிடன் தொடங்கியது.

இசை நிகழ்ச்சியில், பா.மணியம்மை, புதுவை குமார் பாடிய பகுத்தறிவுப் பாடல்கள் அந்நிகழ்ச்சிக்கு மெருகூட்டின.

திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் பழநி.புள்ளையண்ணன் வரவேற்புரை ஆற்றினார்.

தோழர்கள் முழங்க, திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கழகக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார்.

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் மாநாட்டினை  திறந்து வைத்து உரையாற்றினார். 1944ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாடு உள்ளிட்ட பல்வேறு கழகச் செயல்பாடுகளில் தம் பங்களிப்பு குறித்தும், கழகத்தின் மாநில மாநாடுகள், மாநாட்டுப் பேரணிகள் பற்றியும்  பெருமிதத்துடன் கூறினார். தந்தை பெரியார் படத்தை பெரியார் பெருந்தொண்டர் இராசகிரி கோ.தங்கராசு திறந்து வைத்து உரையாற்றினார்.

சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தை முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் ஏ.வி.தங்கவேல்  திறந்துவைத்தார்.

தமிழர் தலைவர் வருகை

கழகக் குடும்பத்தலைவர்  தமிழர் தலைவர்  முகத்தில் புன்னகை தவழ, கழகக் கொடியேந்தியபடி கழகக் குடும்பத்தினரிடம்  நலம் விசாரித்து அனைவரையும் வரவேற்றார்.

தீர்மானங்கள்

மாநாட்டில் காலத்தின் கட்டாயமான 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பி ஏற்றனர்.

மாநாட்டின் துவக்கமாக ஆசிரியர் கொடியுடன் வந்தார். நூற்றண்டு விழா காணும் அன்னை மணியம்மையார் படத்தை திறந்து வைத்தார் உடன் கே.எஸ்.அழகிரி, இரா.முத்தரசன், எம்.எச்.ஜவாஹிருல்லா, சுப.வீரபாண்டியன், கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் 

 மாநாட்டுத் தலைவர் - கழகத் துணைத் தலைவர் உரை

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையேற்று திராவிடர் கழகத்துடன் சேலம் மாநகர் கொண்டுள்ள வரலாற்றுச் சிறப்புகளைப் பட்டியலிட்டு உரையாற்றினார்.

சமூக நீதித் தடத்தில் கழகம் கண்ட களங்களை விளக்கிப் பேசினார்.

திராவிடர் கழக வரலாறு நூல் வெளியீடு

“திராவிடர் கழக வரலாறு’’ நூலை வெளியிட்டு திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து அரிய உரையாற்றினார்.

தலைவர்கள் உரை

தமிழகத்தின் அனைத்துக்கட்சித் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்தரங்கில் உரையாற்றினார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி நிறுவனர் - தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்கள்.

கருத்தரங்கம்

‘பவள விழாக் காணும் திராவிடர் கழகம்’ எனும் கருத்தரங்கிற்கு திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமை தாங்கினார். 1925ஆம் ஆண்டு இந்திய அரசியலில் முக்கியமான ஆண்டு என்று தொடங்கி திராவிடர் கழகம் தொடக்கம், கறுப்புச் சட்டைப் படை உருவாக்கம், கழகக்கொடி உருவாக்கம், சமூக நீதிப் போராட்டம், ராமன் பட எரிப்பு, இராவண லீலா என்று பல்வேறு தகவல்களை விரைவாகப் பதிவு செய்தார்.

பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணித் தலைவர் பேராசிரியர் ப.காளிமுத்து ‘வெள்ளி விழா 1944_1969’ எனும் தலைப்பில்  கருப்புச்சட்டை மாநாடு, இந்திய விடுதலை நாள், காந்தியார் மறைவு, கருப்புக்கொடி காட்டும் போராட்டம், குடியரசு தினம் குறித்து பெரியாரின் கருத்து, இட ஒதுக்கீட்டுக்காக பெரியார் நடத்திய போராட்டம், அரசியலமைப்பு முதல் சட்டத்திருத்தம், குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு பற்றி மிகச் சிறப்பாகக் கருத்துரை வழங்கினார்.

திராவிடர் கழக கிராமப்புற பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் க.அன்பழகன் ‘பொன்விழா 1969 _- 1994’ எனும் தலைப்பில் வரலாற்றுச் செய்திகளை ‘கணீர்’ என்று முழங்கினார். தந்தை பெரியார் _  மணியம்மையார் _- ஆசிரியர் வீரமணி முப்பெரும் தலைமை கண்ட காலம் தான் 1969 _ 1994 என்று குறிப்பிட்டார். கழகம் நிகழ்த்திய சமூகநீதிச் சாதனைகளைப் பட்டியலிட்டார்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ‘பவள விழா 1994 _-2019’ எனும் தலைப்பில் செய்திகளை _- கருத்துகளை வாரி வழங்கினார். தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் உயிருக்குக் குறிவைத்து நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்களைப் பட்டியலிட்டார். 

தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் பிற்பகல் 2 மணிக்கு நிறைவுரை ஆற்றினார். வரலாறு படைக்கும் நிகழ்வு என்று நெகிழ்ந்த தலைவர் அவர்கள் 1944ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டை நினைவு கூர்ந்தார். பெரியார் இல்லை, மணியம்மையார் இல்லை; ஆனால் இயக்கம் இருக்கிறது. காரணம் நானில்லை; கொள்கைக் குடும்பங்கள் நீங்களே என்று தோழர்களைப் பெருமைப்படுத்தினார். தந்தை பெரியார் சந்தித்த அவமானங்களை எடுத்துரைத்தார். பெரியாருக்கு வாய்த்த எதிரிகள் நாணயமானவர்கள், நமக்கு வாய்த்த எதிரிகள் சூழ்ச்சிக்காரர்கள் என்பதைப் புலப்படுத்தினார். கொள்கைக்காக சர்வபரித்தி யாகம் செய்ய தயாராக வேண்டும். பல தளங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

தோழர்களை தோள்மீது தூக்கி உலகிற்குக் காட்டிய தலைவர் பெரியார். தமிழர் என்பது மொழிப் பெயர்; திராவிடர் என்பது இனப்பெயர் என்று விளக்கம் அளித்தார் பெரியார். திராவிடர் என்பது பண்பாட்டு அடையாளம். திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டக் காரணத்தை அழகுற விளக்கினார். பெரியாரின் கூற்றுகளையே மேற்கோள் காட்டினார். அரசியல் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தாது. பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுக்கும் பணியைச் செய்யும். ஆரியம்தான் எல்லோரையும் ஏமாற்றி இருக்கிறது. ஆரியத்தையே ஏமாற்றியவர் அண்ணா. 1971 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றியினை சேலத்தில் நடைபெற்ற ராமன் பிரச்சினையை, வரலாற்றை நினைவு கூர்ந்தார். லட்சியப் பயணம் தொடரும், எதிர்நீச்சல் தொடரும் ஜாதியை ஒழிப்போம்; புதிய சமுதாயத்தை உருவாக்குவோம் என்றார் முத்தாய்ப்பாக.

மாநாட்டுப் பேரணி

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆத்தூர் அ.சுரேசு,  திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், திராவிடர் தொழிலாளரணிச் செயலாளர் மு.சேகர், பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநிலச் செயலாளர் நா.இராமகிருஷ்ணன், சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக செயலாளர் கவிஞர் பா.திவ்யபாரதி முன்னிலையில் பேரணி தொடங்கியது.

மாநாட்டில் கலந்து கொண்டு ஆசிரியரின் உரையை கேட்கும் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள்.

 ஊர்வலப் பாதை

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகம், தந்தை பெரியார் சிலை, திருவள்ளுவர் சாலை, குண்டுபோடும் சாலை வழியே மாநாடு நடைபெற்ற கோட்டை மைதானத்தை பேரணி அடைந்தது.

எழுச்சிப் பேரணியைப் பார்வையிட்டார்  தமிழர் தலைவர்

பேரணியில் திண்டுக்கல் எம்.சி.பட்டி க.பெருமாள் தப்பாட்டக் குழுவினரின் பறையொலி முழக்கம் முதலிலும், ‘திராவிடர் கழக பவள விழா மாநாடு எழுச்சிப் பேரணி‘ பதாகையைத் தாங்கி, எழுச்சி முழக்கமிட்டபடி திராவிடர் கழக மகளிர் தோழர்கள் பேரணியில் பங்கேற்றனர். பெரியார் பிஞ்சுகள், மாணவர்கள், இளைஞர்கள் எழுச்சி முழக்கமிட்டபடி பேரணியில் பங்கேற்றனர். கழக மாவட்டங்களின் பெயர் தாங்கிய பதாகைகளுடன் கட்டுப்பாட்டுடன் தோழர்கள் முழக்கமிட்டபடி பேரணியில் பங்கேற்றனர்.

திருவள்ளுவர் சிலை அருகில் மாநாட்டின் எழுச்சிப் பேரணியை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பார்வையிட்டார்.

தஞ்சை, தாம்பரம், பட்டுக்கோட்டை, ஆவடி, தென்சென்னை, வடசென்னை, தாராபுரம், சிதம்பரம், கடலூர், திண்டிவனம், காரைக்குடி, கிருட்டினகிரி, கோவை, விருதுநகர், தூத்துக்குடி, தேனி, குடந்தை, திருச்சி, கோபி, ஈரோடு கழக மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அணி அணியாக பேரணியில் பங்கேற்றனர். திராவிடர் கழக தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் பதாகை ஏந்தி முழக்கமிட்டபடி பேரணியில் பங்கேற்றனர்.

திராவிடர் கழகத்தின் பவளவிழாவைத் தங்கள் குடும்ப விழாவாக எண்ணி, நம் இனத்தின் உரிமைகளைக் காக்கும் போர்ப்பரணி பாடும் பேரணி தங்களுக்கானது, எதிர்காலத் தலைமுறைக்குரியது என்பதை சேலம்வாழ் மக்கள் உணர்ந்துள்ளார்கள் என்பதை அவர்களின் ஆர்வமிக்க செயல்கள் எடுத்துக் காட்டின.

ஊர்வலத்தில் எழுச்சி முழக்கமிட்ட மகளிர், பெரியார் பிஞ்சுகள், மாணவர்கள், இளைஞர்கள், தோழர்களைக் கண்ட பொதுமக்கள் குண்டு போடும் சாலை உள்ளிட்ட ஊர்வலப் பாதைகளிலிருந்த வீடுகளிலிருந்து தாமாகவே குடிநீர் குவளைகளுடன் முன்வந்து குடிநீரை தோழர்களுக்கு அளித்து மகிழ்ந்தார்கள்.

பேரணி கோட்டை மைதானத்தில் அமைக்கப்பட்ட மாநாட்டுத் திடலை அடைந்தது.  சேலம் கோட்டை மைதானத்தில் மாநாட்டு நிறைவு விழா. கண்கவர் பந்தல், வெண்பட்டு  விதானம், வெள்ளை ஒளி உமிழ்ந்த ஹாலோஜன் விளக்குகள், மைதானம் முழுவதும் இருக்கைகள். இருக்கைகளில் தோழர்கள் சுற்றிலும் நூற்றுக்கணக்கானோர் சூழ்ந்து நிற்க, விழா களைகட்டியது.

தந்தை பெரியார் சமூக காப்பணியின் அணிவகுப்பு

மரியாதையை ஏற்கும் தமிழர் தலைவர்.

 வீதி நாடகம்

மாலை 5:30 மணியளவில் மாநில கலைத்துறை செயலாளர் தெற்குநத்தம் சித்தார்த்தன் -_ வீதி நாடக அமைப்பாளர் பெரியார் நேசன் _செய்துரை மதியழகன் குழுவினரின் ‘ஈரோட்டு பூகம்பம்’ வீதி நாடகம் சிறப்புடன் நடைபெற்றது.

பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்புரை

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். 1944ஆம் ஆண்டு நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாகப் பெற்ற பெயர் மாற்றத்தினையும், பெரியார், மணியம்மையார், ஆசிரியர் தலைமையில் இயக்கம் போட்ட எதிர் நீச் சல்களையும், திராவிடர் கழகத்தின் சாதனைகளையும், 1929ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்க முதலாவது மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சட்டங்களாக வடிவம் பெற்றதையும் தொகுத்துரைத்தார். திராவிடர் கழகத்தால் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது முதலாவது சட்ட திருத்தம், 76ஆவது சட்டத்திருத்தம், 93ஆவது சட்டத் திருத்தம் செய்யப்பட்டதை உணர்ச்சிகரமாக எடுத்துரைத்தார்.

தலைவர்கள் உரை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றும் போது, தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழகத்தின் முகத்தோற்றம் மாறி இருக்கும் என்றார். பெரியாருக்குப் பின்னால் பகுத்தறிவுச் சுடரை அணையாமல் காத்த பெருமை தமிழர் தலைவரைச் சாரும் என்றார். இட ஒதுக்கீடு உரிமையை முழங்கினார். பெரியார் -_ ஜீவா _- சிங்காரவேலர் இணைந்து பணியாற்றிய காலத்தைக் கண்முன்னே கொண்டு வந்தார். கம்யூனிஸ்ட் கொள்கைப் பிரகடனத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட தந்தை பெரியாரின் அருஞ்சாதனையைக் கொண்டாடி மகிழ்ந்தார். அரசியலமைப்பு சட்டத்தின் முதல் திருத்தம், ஆண் - பெண் சம உரிமை, வர்ணாசிரம தர்ம எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு. எழுத்துச் சீர்திருத்தம் என்று பெரியாரின் பெருஞ்சாதனைகளைப் பட்டியலிட்டார். மார்க்சிஸ்ட்டும், பெரியாரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று பூரிப்புடன் வெளிப்படுத்தினார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை கேரள மாநிலம் நிறைவேற்றி இருப்பதை பெருமிதத்துடன் எடுத்துரைத்தார்.

மதிமுக அவை தலைவர் வழக்குரைஞர் திருப்பூர் துரைசாமி அவர்கள் உரை நிகழ்த்தும் போது 75 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் நிலவிய ஜாதிக் கொடுமையைப் படம் பிடித்துக் காட்டினார். அண்ணாவின் சாதனைகளை அடுக்கினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் தம் உரையில், தமிழ்நாடு தனித்துவமாக விளங்க பெரியாரே அடிப்படை என்றும், ஜாதி ஒழிப்புக் குரல், சமஸ்கிருத எதிர்ப்புக் குரல், இந்துத்துவ எதிர்ப்புக்குரல், நீட் வேண்டாம் எதிர்ப்புக்குரல் எல்லாவற்றிற்கும் வேர் பெரியாரே என்றார். ஜாதிக் கொடுமையை 75 ஆண்டுகளில் துடைத்தெறிந்து விட முடியாது. திராவிடர் கழகம் இல்லாமலிருந்தால் மான உணர்ச்சிமிக்க திருமாவளவன் இல்லை என்று முழங்கினார். ஆதிக்கத்தை ஒழிக்க வந்தவர் பெரியார். ஜாதி வெறுப்பு அரசியலை அவர் வளர்க்கவில்லை. சமுகநீதிதான் கோட்பாடு. அதை நடைமுறைப்படுத்த கையாண்ட போர்த் தந்திரம் _ கடவுள் மறுப்பு.

இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் உரையாற்றும் போது, பெரியார் இறைமறுப்பாளர். ஆனால் இறை நம்பிக்கையாளர்கள் பெரியாரை மறுப்பதில்லை என்றார். இட ஒதுக்கீட்டிற்கு முன்னோடி முஸ்லிம்லீக் என்றார்.

தமிழர் தலைவர் தலைமையுரை

தளபதி மு.க.ஸ்டாலினை நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் என்று புகழாரம் சூட்டினார். இயக்கத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. தொண்டறச் செம்மல்களுக்கு வீரவணக்கம் என்று தமிழர் தலைவர் உரையைத் தொடங்கினார். திராவிடர் கழகமும், திமுகழகமும் அண்ணா சொன்னதைப் போல இரட்டைக்குழல் துப்பாக்கி என்றார். மாநாட்டுக் கூட்டத்தை கருங்கடல் என்று வருணித்தார். சுயமரியாதை இயக்கம் தொடங்கக் காரணம் சமூகநீதிதான். பெரியார் இல்லாதபோதும் சமூகநீதி தத்துவம் வென்றிருக்கிறது. 69 சதவிகித இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் மட்டும்தான் உண்டு. இந்திய அரசியலமைப்பு சட்டம் முதல் திருத்தம் நடைபெறுவதற்கும், 76ஆவது திருத்தம் செய்யப்படுவதற்கும், 93ஆவது திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கும் திராவிடர் கழகமே காரணம் என்பதை தெளிவுபடுத்தினார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் இட ஒதுக்கீடு பற்றி விவாதம் செய்ய வேண்டுமென்று கூறியது சூழ்ச்சி என்று உணர்த்தினார்.

அரசியல் சட்டத்தைத் தூக்கி எறிந்து மனுதருமச் சட்டத்தைக் கொண்டுவர இந்த ஆட்சி துடிக்கிறது. மனு தர்மத்திற்கும் - சம தர்மத்திற்கும் போராட்டம். கோல்வாக்கரின் சிந்தனையை ஞானகங்கை நூல் கொண்டு நிறுவினார். தந்தை பெரியாரின் உரையினை எழுச்சியாக எடுத்துரைத்து லட்சிய வாழ்வு வாழ்வோம் என்று முத்தாய்ப்பாக தலைமையுரையை நிறைவு செய்தார் தமிழர் தலைவர்.

 

 

மகளிரணியின் எழுச்சிப் பேரணி மற்றும் தப்பாட்டக் குழுவினரின் நிகழ்ச்சி

இனமான பேராசிரியர் வாழ்த்துச் செய்தி

 

 

திராவிடர் கழகப் பவளவிழா மாநாடு - 75 ஆண்டுகளுக்கு முன் எந்த மாங்கனி நாட்டில் - சேலம் மண்ணில் கூடினோமோ அங்கேயே நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளம் நிறைந்து வழிகிறது.

75 ஆண்டுகள் என்பது ஒரு இயக்க வரலாற்றில் சாதாரணமல்ல. தலைமைகள் மாறியும் தத்துவங்கள் மாறாத, கொள்கைகள் குறைவுபடாத இயக்கம் பவளவிழா கொண்டாடுவது பாராட்டிப் போற்றி மகிழ  வேண்டிய ஒன்று.

நினைவுகளைப் பின்னோக்கிப் பார்க்கிறேன். அண்ணாமலைப் பல்கலையில் பயிலும் கல்லூரிக் காளை என்னை வரலாற்றுப் புகழ் மிக்க, திராவிடர் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய மாநாட்டில் ஆங்கில மொழி வித்தகர் ‘சண்டே அப்சர்வர்’ பி.பாலசுப்பிரமணியம் அவர்களின்  உரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மேடையிலேயே மொழி பெயர்க்கும் பேறு பெற்றதை, இன்றும் அதைக் குறித்து பேசுவதை குறித்துக் கேட்கையில் பெருமிதமும், பேருவுவகையும் அடைகிறேன்.

மாபெரும் சமூக சீர்திருத்த இயக்கம் உரு வாக்கிய சாதனை மகுடங்கள் எண்ணிலடங்கா.

இந்த மாநாட்டில் பங்குபெறும் வாய்ப்பில் லையே என்று ஏங்குகிறேன்.

உடல் நலிவு என்னை இங்கே கட்டிப் போட்டாலும் என் மனம், சிந்தை நினைவு எல்லாம் இப்பவள விழா மாநாட்டின்பால் இருக்கும்.

மாநாட்டை சீரும் சிறப்புமாக ஏற்பாடு செய்த அன்பு இளவல் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆகிய இவர்களுடன் உடனிருந்து தொண்டாற்றும் அன்பு இதயங்களுக்கு நல்வாழ்த்துகள். இந்த இயக்கம் சாதித்துள்ள சாதனைக் குவியல்களை எந்தக் கொம்பனாலும் அழிக்கவோ, மறைக்கவோ, மறுக்கவோ இயலாது என்பது கல்லில் வடித்த உண்மை. மாநாடு வெற்றி பெற நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க பெரியார்!

இவ்வாறு திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உரை

மாநாட்டில் நிறைவுரையாற்றும் தி.மு.க கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின்,

தமிழர் தலைவர் மற்றும் பல்வேறு இயக்கத் தலைவர்கள், பிரதிநிதிகள் அமர்ந்திருக்கும் காட்சி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநாட்டில் நிறைவுரை நிகழ்த்தினார்கள். தாய்க்கழகத்திற்கு வாழ்த்து சொல்ல வந்தேன் என்றார். தமிழர் தலைவரின் உழைப்பை, செயல்பாட்டை வியந்து உரைத்தார். 90 வயதில் தந்தை பெரியார் எழுதிய உடல் நலம் குறித்து வடித்த சொல்லோவியத்தைப் படித்தார். அதன் பின் பெரியார் நடத்திய பிரச்சாரம் வேகத்தை புள்ளிவிவரம் மூலம் வெளிப்படுத்தினார். நியுயார்க் நகரிலிருந்து தந்தை பெரியாருக்கு அண்ணா எழுதிய அற்புதக் கடிதத்தை கூட்டத்திற்குத் தெரியப்படுத்தினார். திராவிட இயக்கம் நிகழ்த்திய சாதனைகளைப் பட்டியலிட்டார். கூட்டம் ஆரவாரித்தது. பெரியாரும், அண்ணாவும் பிரிந்தாலும் ஒரே கொள்கையைப் பேசினார்கள். ஒரு மரத்துக்கனிகள், ஒரு தாய் மக்கள். எல்லா இயக்கத்திற்கும் பொதுவானவர் பெரியார். ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்தால் தட்டிக் கேட்போம். அதனை தேசவிரோதம் என்பதா? என்று வினா எழுப்பினார். தந்தை பெரியாரின் பயணத்தைத் தொடர்வோம் என்றார்.

அவர் எழுதுகிறார்,

“எனக்கு வயது 90.

உடல் நிலை மிகவும் மோசம்.

கைகால் நடுக்கம் அதிகம்.

சிறுநீர் கழிக்கும் போது சப்தம் போட்டுக் கொண்டுதான் கழிக்கிறேன். அதாவது அவ்வளவு வலி.

தூக்கம் சரியாய் வருவது இல்லை.

நினைத்தபோது உடலில் ஏதாவது ஒரு பாகத்தில் வலி ஏற்பட்டு, சில ஏப்பமோ காற்றுப் பிரிவோ ஏற்பட்ட பிறகு நோய் விலகுகிறது.

உண்ட உணவு சரியானபடி ஜீரணமாவ தில்லை.

முன் போல் உணவும் சரியாய் உட்கொள்ள முடியவில்லை.

எந்தக் காரியம் பற்றியும் மனத்திற்கு உற்சாகம் ஏற்படுவதில்லை. களைப்பு அடிக்கடி ஏற்படுகிறது.

நெஞ்சில் வலி திடீரென்று ஏற்படுவதும், ஏப்பம் வந்தபிறகு குறைவதுமாக இருக்கிறது.

என்று 1968ஆ-ம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் இதை எழுதியிருக்கிறார்.

மாநாட்டுக்கு வருகை தந்த கழகத்தினர் மற்றும் மக்கள் திரளில் ஒரு பகுதி

இதற்குப் பிறகுதான், தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டையே சுற்றிச் சுற்றி வந்திருக்கிறார்கள். கூட்டம் பேசினார்கள்; மாநாடு நடத்தினார்கள்; போராட்டங்கள், மறியல்கள் என பலவற்றை நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.

இன்னொரு குறிப்பைச் சொல்லுகின்றேன், 90 வயதில், 141 நாள்கள் அலைந்து 180 இடங்களில் பேசினார்கள். 91 வயதில், 131 நாள்கள் அலைந்து 150 இடங்களில் பேசினார்கள்; 92 வயதில் 175 நாள்கள் அலைந்து 244 இடங்களில் பேசினார்கள்; 93 வயதில் 183 நாள்கள் அலைந்து 249 இடங்களில் பேசினார்கள்; 94 வயதில் 177 நாள்கள் அலைந்து 277 இடங்களில் பேசினார்கள்; 95 வயதில் அவர் வாழ்ந்த நாள்கள் 98; அதில் பயணம் செய்த நாள்கள் 35 அவர் பேசிய கூட்டங்கள் 42.

உலகில் இப்படி ஒரு தலைவன் எந்த இனத்திற்கும் எந்த நாட்டிற்கும் கிடைத்தது கிடையாது!

இடஒதுக்கீடு என்னும் சமூகநீதியை -_ உரிமையை நாம் பெற்றோம்.

தமிழகத்தில் மட்டுமா? இந்திய அளவிலும் நாம் நிலைநிறுத்திக் காட்டி இருக்கின்றோமா இல்லையா? அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீட்டை நிலை நாட்டினோம். மண்டல் ஆணையத்தை அமல்படுத்த வைத்தோம். சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்திருக்கிறோம்.

ஏன், நம்முடைய தாய்நாடு தமிழ்நாட்டிற்கு, ‘‘தமிழ்நாடு’’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்து இருக்கின்றோமே!

இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கினோம். இந்தித் திணிப்பிற்கு தடை எழுப்பினோம். சொத்தில் பெண்களுக்கு சம உரிமை பெற்றுத் தந்தோம். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தைக் கொண்டு வந்தோம்.

மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள்  கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வீரவாள் கொடுத்து மகிழும் காட்சி

அருந்ததியின மக்கள், சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்கள் போன்றவர்களுக்கு இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தோம். மாநில சுயாட்சிக் கொள்கையை வார்த்தெடுத்தோம். தமிழுக்காக வாதாடினோம்; தமிழர்களுக்காக வாதாடினோம், தமிழ்நாட்டிற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இருந்து கொண்டு இருக்கின்றோம் என்றால், இதற்கெல்லாம் காரணம், தந்தை பெரியார்- _அறிஞர் அண்ணா _- தலைவர் கலைஞர் அவர்களால் உருவானது, இதை மறந்து விடக் கூடாது.

தலை நிமிர்ந்து சொல்கின்றேன், திராவிடர் கழகத்தின் சாதனைகள்தாம் இவை!

எனவே, அப்படிப்பட்ட சாதனைகளை எல்லாம் எடுத்துச் சொல்வதற்காக பெருவிழா நடத்திய இடம் தானே இந்த சேலம்!

கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார் அவர்கள். எனவே, பொதுவுடைமை இயக்கத்திற்கும் அவர்தான் வழிகாட்டி!

அண்ணல் அம்பேத்கரின் புத்தகத்தை (‘‘ஜாதியை ஒழிக்கும் வழி’’) வெளியிட்டவர் தான் தந்தை பெரியார் அவர்கள். தலித் இயக்கத்திற்கும் தூணாக இருந்திருக்கின்றார் தந்தை பெரியார் அவர்கள்!

எனவே, எல்லா இயக்கத்திற்கும் பொதுவானவர் தந்தை பெரியார் அவர்கள்! அதனால்தான் யாராலும் அவரை வீழ்த்த முடியவில்லை; வீழ்த்தவும் முடியாது!!

திராவிட இயக்கத்தை வீழ்த்த நினைத்தவர்கள் எல்லோரும் வீழ்ந்து போயிருக்கின்றார்களே தவிர, இந்த இயக்கம் அழிந்ததாக வரலாறு உண்டா?

திராவிட இயக்கம் என்பது முன்பைவிட இப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

திராவிட இயக்கம் எப்போது உருவானதோ, அப்போது திராவிட இயக்கத்தை வீழ்த்துவோம் என்று சொல்லக் கூடியவர்கள் உருவாகி விட்டார்கள். அதனால்தான் இன்றும்கூட திராவிட இயக்கத்தைக் களங்கப்படுத்தும் முயற்சியை நம்முடைய எதிரிகள் இன்னும் விடவில்லை.

நம்மைப் பார்த்து தேச விரோதிகள் என்று சிலர் கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரிவினைவாதிகள் என்று குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பிரிவினைவாதிகள் என்று சொல்லிக்கொண்டு அவர்கள்தான் நாட்டைப் பிரித்துக் கொண்டிருக்கின்றார்கள். மாவட்டத்தையும் பிரித்துக் கொண்டிருக் கின்றார்கள். அதுதான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது.

சர்வாதிகாரத்தை எதிர்த்தாலே, தேசவிரோதிகளா?

நாங்கள் எப்போதும் ஜனநாயகத்தின் ஏஜென்டுகள்! மக்களுடைய ஏஜென்டுகள்!

ஒட்டுமொத்தமாகச் சொல்கின்றேன், தமிழ்நாட்டினுடைய - தமிழ் மக்களுடைய ஏஜென்டுகள் நாங்கள்!! தமிழ்நாட்டிற்கு எங்கு ஆபத்து அச்சுறுத்தல் வந்தாலும் அதை முதலில் தட்டிக் கேட்போம். எப்படிப்பட்ட அடக்குமுறைகள் - என்ன கொடுமைகள் - எது வந்தாலும் அதை எல்லாம் ஏற்றுக்கொண்டு தாங்கிக் கொண்டு, அதை முறியடிப்பதுதான் நம்முடைய முதல் வேலை என்கிற உறுதியோடு நாம் நம்முடைய கடமையை ஆற்றுவோம்.

காஷ்மீர் விவகாரத்தைப் பற்றி சொன்னார்களே, காஷ்மீர் விவகாரத்தில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற 14 கட்சிகளோடு இணைந்து டில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதை வைத்துக் கொண்டு மத்தியில் இருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி தமிழகத்தைப் பழி வாங்குவதா?

தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களை கொடுக்காமல் தொடர்ந்து பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது. தமிழகத்திற்கு நீட் தேர்வை கொண்டு வந்து மத்திய அரசு தொடர்ந்து பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது. விவசாயத்தை அழிக்கக்கூடிய திட்டங்களைக் கொண்டு வந்து பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது. அதற்கெல்லாம் இங்கு இருக்கக்கூடிய அ.தி.மு.க ஆட்சி அடிபணிந்து ஏற்றுக் கொண்டிருக்கின்றது. ஜனநாயகத்தின் குரல்வளை எங்கு நெரிக்கப்பட்டாலும், குரல் கொடுப்பதற்குத்தான் தந்தை பெரியார் அவர்கள் இந்தத் திராவிடர் கழகத்தை துவங்கி வைத்திருக்கிறார்கள்!

இந்தியாவின் பொருளாதாரம் இன்றைக்கு அதல பாதாளத்தில் போய்க் கொண்டிருப்பதை, இந்தியாவில் இருக்கும் சராசரி மனிதர்கள் ஒவ்வொருவரும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்; உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்தியப் பொருளாதாரம் இன்றைக்கு சிக்கலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது என்று, ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் அவர்கள் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.

தொழில் நெருக்கடி காரணமாக பின்னலாடை நிறுவனங்களில் 50 லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள். பிஸ்கட் தொழிலில் கடந்த 90 ஆண்டுகளாக கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த ஒரு நிறுவனம் தன்னுடைய 10 ஆயிரம் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பப் போவதாக சொல்லி இருக்கிறது.

இவை அனைத்தையும் மறைப்பதற் காகத்தான் இன்றைக்கு காஷ்மீர் என்ற ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழர் தலைவர் ஆணைகளை ஏற்று - இணைந்து செயல்படுவோம்

தந்தை பெரியார் அவர்கள் மறைந்தபோது, தலைவர் கலைஞர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார், “தந்தை பெரியார் மறைந்தார் _- இறந்தார் என்று சொல்லாமல், தந்தை பெரியார் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார் என்றுதான் எழுத வேண்டும்’’ என்றார்.

இதோடு தலைவர் கலைஞர் அவர்கள் அந்த அறிக்கையை முடிக்கவில்லை, மறுபடியும் சொல்கின்றார், என்ன சொல்கின்றார் என்றால், ‘தந்தை பெரியார் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார். அதை நாம் தொடர்வோம்’,  என்று குறிப்பிட்டார்.

அதைத் தொடர்வோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ளக்கூடிய மாநாடாக இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!

எனவே, திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் சொன்னார், ‘‘நாங்கள் துவங்கி இருக்கிறோம்; நீங்கள் முடித்து வைக்க வேண்டும்’’ என்று. முடித்து வைப்பதற்காக மட்டுமல்ல; உங்களுடன் இணைந்து _- பிணைந்து உங்களுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் பக்கபலமாக இருந்து ஒன்றுசேர்ந்து போராட, உரிமையை நிலைநாட்ட உறுதி எடுப்போம், உறுதி எடுப்போம் என்கிற உறுதிமொழியோடு, நான் உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன். நன்றி! வணக்கம்!!” என்று முழங்கினார்.

இறுதியில் சிந்தாமணியூர் கவிஞர் சி.சுப்பிரமணியன் நன்றிகூற, மாநாடு 10 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாய் நிறைவுற்றது.

- உண்மை இதழ், செப்டம்பர், 1-15.19

இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:33 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சேலம், மாநாடு

சனி, 19 அக்டோபர், 2019

திராவிடர் கழகப் பவள விழா மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் உரை - 2

அம்பேத்கர் சிலைகளையும், பெரியார் சிலைகளையும் உடைக்கலாம்;


அவர்கள் உருவாக்கி வைத்திருக்கின்ற சமூகநீதிக் கோட்பாட்டுக் கோட்டையை எந்தக் கொம்பனாலும் நெருங்க முடியாது;


தகர்க்க முடியாது- மகத்தான கோட்டை




சேலம், அக்.1 அம்பேத்கர் சிலைகளையும், பெரியார் சிலைகளையும் உடைக்க முடியும்; அவர்கள் உரு வாக்கி வைத்திருக்கின்ற சமூகநீதி என்கிற கோட் பாட்டுக் கோட்டையை எந்தக் கொம்பனாலும் நெருங்க முடியாது;  அது எவராலும் தகர்க்க முடியாது - ஒரு மகத்தான கோட்டை என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்.

திராவிடர் கழகப் பவள விழா மாநாடு


கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி அன்று சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பவள விழா மாநாட்டில்  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

மதராஸ் பிரசிடென்சி என்றால், மெட்ராசை மட்டும் குறிக்காது. ஒட்டுமொத்த தமிழகமே!


பாம்பே பிரசிடென்சி, குஜராத், மகாராட்டிரா போன்ற அந்தப் பகுதிகளை தனக்குள் அடக்கி வைத் திருந்த ஒரு பகுதி - மத்திய பகுதி. மதராஸ் பிரசிடென்சி என்றால், மெட்ராசை மட்டும் குறிக்காது. ஒட்டுமொத்த தமிழகமே, கேரளாவில் ஒரு பகுதி, ஆந்திராவில் ஒரு பகுதி, கருநாடகா பெங்களூர் வரையிலும் மதராஸ் பிரசிடென்சிதான். மதராஸ் வாலா, மெட்ராஸ் வாலா என்று டில்லியில் சொல்லுகிறான் என்றால், ஒட்டு மொத்த தென்னிந்திய திராவிடப் பகுதியைக் குறிக்கும், அதுதான் அதற்குப் பொருள். அந்தப் பிரசி டென்சிக்கு உட்பட்ட பகுதி.

இனம் என்கிற அடிப்படையில்,


இனம் இரண்டு வகை உண்டு!


அப்படிப்பட்ட காலகட்டத்தில், நான் பிறக்க வில்லை, நீங்கள் பிறக்கவில்லை, தந்தை பெரியார் பிறந்திருந்தார். அதனால், அன்றைக்கு அவர் கட்சித் தொடங்குகிறபொழுது, தமிழருக்கென்று தனியே கட்சி தொடங்க முடியாது; தெலுங்கருக்கென்று தனியே கட்சி தொடங்க முடியாது; கன்னடருக்கு என்று தனியே கட்சி தொடங்க முடியாது. ஒட்டு மொத்தமாக அனைவரையும் இணைக்கக்கூடிய ஒரு சொல்லாடல், திராவிடர்கள் என்ற சொல்லாடல். அதிலே ஜாதி வேறுபாடு இல்லை. இரண்டே ஜாதி களை, இரண்டே ஜாதிகளாகப் பார்க்கிற ஒரு பார் வையை தந்தை பெரியார் உற்றுநோக்குகிறார். இனம் என்கிற அடிப்படையில், இனம் இரண்டு வகை உண்டு தோழர்களே, ஒன்று, மொழி வழி அடிப்படையிலான தேசிய இனம். இன்னொன்று மரபு அடிப் படையிலான மரபினம்.

மரபினம் என்பதை ஆங்கிலத்தில், RACE என்று அழைக்கிறோம். ரேஸ் என்பது வேறு. தேசிய இனம் என்பதை மொழிவழி அடிப்படையில், Ethnic Group என்று சொல்வார்கள், Ethnic  City என்பார்கள். தமிழ்த் தேசிய இனம் என்றால், Tamil  Ethnic   Group  அது வேறு. 1956-க்குப் பிறகுதான் அந்த சிந்தனை மேலோங்குகிறது.

ஏனென்றால், அப்பொழுதுதான் மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்டது.

சிறுபான்மை சமூகத்தின்  உணர்வுகளை மதிப்பது தான், திராவிடர் கழகம் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்ற பண்பாடு. எவ்வளவு கட்டுப்பாட்டை நீங்கள் கடை பிடிக்கிறீர்கள் என்பதை எண்ணிப் பார்க்கிறபொழுது பெருமையளிக்கிறது.

தமிழ்ச் சமூகத்தை உலக அரங்கில்


தலைநிமிர வைத்திருக்கிறது


பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கித் தந்த இந்தக் கட்டுப்பாடுதான், இன் றைக்குத் தமிழ்ச் சமூகத்தை உலக அரங்கில் தலை நிமிர வைத்திருக்கிறது என்பதை நான் பெருமையோடு சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

எனவே, மொழிவழி அடிப்படையில் இன்றைக்கு நமக்கு தமிழ் தேசிய இனம் என்ற ஒரு அடையாளத்தை உணர முன்வந்திருக்கின்றோம்.

ஆனால், 1944-களில் திராவிடர் கழகம் என்றுதான் இயக்கம் உருவாகக்கூடிய ஒரு சூழல் அமைந்தது. ஆனாலும், அப்படிப்பட்ட அந்தக் காலகட்டத்தில், தந்தை பெரியார் அவர்கள் முன்வைத்த அரசியலை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இந்தியாவில் இரண்டே இரண்டு மரபினம்தான் இருக்கிறது. திராவிடம் என்பது தேசிய இனத்தின் அடையாளமல்ல, மரபினத்தின் அடையாளம். அகில இந்திய அளவில் இரண்டே இரண்டு மரபினம்தான். ஒன்று, ஆரிய மரபினம் - இன்னொன்று திராவிட மரபினம்.

ஆரிய மரபினம்தான் ஆட்சி அதிகார பீடத்தில் அமர்ந்து ஆதிக்கம் செய்கிறது!


ஆரியன் ரேஸ் - திராவிடன் ரேஸ் இரண்டே இரண்டு மரபினங்கள். ஆரிய மரபினம்தான் ஆட்சி அதிகார பீடத்தில் அமர்ந்து ஆதிக்கம் செய்கிறது.

உச்சநீதிமன்றமாக இருந்தாலும், உயர்நீதிமன்றங் களாக இருந்தாலும், நாடாளுமன்றமாக இருந்தாலும், சட்டமன்றமாக இருந்தாலும், உள்ளாட்சி அமைப்பு களாக இருந்தாலும், பல்கலைக் கழகமாக இருந்தாலும், பள்ளிக்கூடமாக இருந்தாலும், கருவறையாக இருந் தாலும், எந்த அதிகார மய்யமாக இருந்தாலும் அத்தனைவற்றிலும் அதிகாரம் செலுத்தக் கூடியவை ஆரிய இனமாக இருந்தது.

ஆரிய ஆதிக்கத்தைத் தகர்க்கவேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் நோக்கம்


எனவே, அந்த ஆதிக்கத்தைத் தகர்க்கவேண்டும்; திராவிட இனத்திற்கு அதிகாரத்தைப் பகிரவேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் நோக்கம். குறிப்பிட்டு எந்த ஒரு ஜாதிக்கும் எதிரான ஒரு வெறுப்பு அரசி யலை அவர் விதைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட மரபினம், ஆட்சி அதிகார பீடத்தில் அமர்ந்துகொண்டு, பெரும்பான்மை சமூகமாக இருக்கக்கூடிய திராவிட மரபினத்தை ஒடுக்குகிறது - சிதைத்து வருகிறது - அவர்களின் உழைப்பைச் சுரண்டி கொழுத்து வருகிறது - இந்த ஆதிக்கத்தைத் தகர்க்கவேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் நோக்கம்.

பெரியாரை வெறும் கடவுள் எதிர்ப்பாளர் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் மறுப்பு மட்டும்தான் அவருடைய கொள்கை - கடவுள் இல்லை என்று சொன்னார் என்று அவரை சுருக்கிப் பார்க்கிறார்கள்.

கடவுளை அவர் ஏன்  இல்லை என்று சொல்ல வேண்டிய நிலை வந்தது என்றால், ஆரிய மரபினத்தின் ஆதிக்கத்தைத் தகர்ப்பதற்காக, அவர் மக்களை  அணி திரட்டுகின்றபொழுது, நடைமுறையில் சந்தித்த சிக்கல்களிலிருந்துதான் அடிப்படை உண்மையை உணர்ந்து தந்தை பெரியார் கடவுளையும் எதிர்க்க வேண்டும் அல்லது கடவுள் மறுப்பையும் உயர்த்திப் பிடிக்கவேண்டும் என்கிற நிலைப்பாட்டிற்கு வரு கிறார்.

கடவுள் மறுப்பு என்பது ஒரு யுத்த தந்திரம்


கடவுள் மறுப்பு என்பது ஒரு ஸ்டேட்டஜி; அது ஒரு யுத்த தந்திரம்; போர் தந்திரம்; அது ஒரு நடைமுறை செயல் தந்திரம். கடவுள் மறுப்பு என்பது கோட்பாடல்ல. சமூகநீதிதான் கோட்பாடு. தந்தை பெரியார் முன் மொழிந்த கோட்பாடு என்பது சமூகநீதி கோட்பாடு. அதை நடைமுறைப்படுத்துகின்றபொழுது, கையாள வேண்டிய போர்த் தந்திரங்களில் ஒன்றுதான், கடவுள் மறுப்பு என்பது.

உச்சநீதிமன்றத்தில் 99 விழுக்காடு


நீதிபதிகள் யார்?


ஒரு குறிப்பிட்ட மரபினம், அகில இந்திய அளவில், வெள்ளையர்களின் வெளியேற்றத்திற்குப் பிறகு, ஆட்சி அதிகாரத்தின் அனைத்து மய்யங்களிலும், அனைத்து பீடங்களிலும் அவர்களின் கொடியே பறக்கிறது; அவர்களே கோலோச்சிக் கொண்டிருக் கிறார்கள். இன்றைய நாள் வரை உச்சநீதிமன்றத்தில் 99 விழுக்காடு நீதிபதிகள் யார்? எப்படி அது சாத் தியமாகிறது. உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகளாக இருக் கின்றவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பாருங்கள். பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பதவிகளைக் கணக்கிட்டுப் பாருங்கள். இப்படி அதிகார மய்யத்தில், அதிகார பீடத்தில் ஆளுமை செலுத்துவது அனைத்தும் ஒரு குறிப்பிட்ட மரபினத் தைச் சார்ந்தவர்கள் என்கின்ற நிலையில்தான், வெளிப்படையாக அவர் தனது போர்க் குரலைப் பிரகடனம் செய்கிறார்.

திராவிட சமூகத்தில் இருக்கிற


எல்லா சமூகத்தினரும் ஒரே சக்தி!


பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று வெளிப் படையாக அவர் அந்த இயக்கத்தை உருவாக்கு வதற்குக் காரணம், தன்னுடைய சமூகநீதி என்கிற சமத்துவக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதற் காகத்தான். அப்படி சொல்லுகிறபொழுது, திராவிட சமூகத்தில் இருக்கிற எல்லா சமூகத்தினரும் ஒரே சக்தி என்ற பார்வையை முன்வைக்கிறார்.

அனைவரும் ஒரே சக்தி - அதிலே சூத்திரன், பஞ்சமன் என்கிற வேறுபாடுகள் எல்லாம் இல்லை. திராவிடன் என்ற ஒற்றை அடையாளம்தான். ஏனென் றால், ஆரிய மரபினத்தின் ஆதிக்கத்தை நீர்த்துப் போகச் செய்ய அல்லது தகர்த்து எறியவேண்டிய தேவையை உணர்ந்து பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் அதனை முன்மொழிந்தார்.

தமிழ்நாடு தமிழருக்கே என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியவர் தந்தை பெரியார்


இது எவ்வளவு நுட்பமானது; இதை வரலாற்றுப் பின்னணிகளோடு பொருத்திப் பார்க்கவேண்டும். அன்றைக்குத் தமிழன் என்று சொல்லவேண்டிய, தமிழ்த் தேசியம் என்று சொல்லவேண்டிய ஒரு தேவை எழவில்லை. 1956 -க்குப் பிறகு எழுகிறது. ஆனாலும், அந்தக் காலகட்டத்திலேயே, தமிழுக்கு முன்னுரிமை அளித்து, தமிழ்நாடு தமிழருக்கே என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியவர் தந்தை பெரியார் என்பதை மறந்துவிடக்கூடாது.

அன்றைக்கெல்லாம் தமிழ்த் தேசிய இனம் என்கிற அடையாளம் பேசப்படாத நேரம். ஆனால், நீதிக் கட்சியில் முன்னணித் தளபதிகளில் ஒருவராக அல்லது தலைவர்களில் ஒருவராக விளங்கிய, தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் நடத்திய மாநாட்டில், தமிழ்நாடு தமிழருக்கே என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1930-களிலே அந்த மாநாடு அப்படி ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்கள் மேடைக்கு வந்துகொண்டிருக்கிறார்; அவருடைய வருகையை தோழர்கள் ஆரவாரத்தோடு வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள்; அண்ணன் அவர்கள் மேடையில் அமர்ந்ததும் நான் என்னுடைய உரையை சுருக்கமாக நிறைவு செய்ய விரும்புகிறேன்.

தோழர்களே, திராவிடம் என்கிற சொல்லாட்சி நடைமுறை எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கூறுவதற் காக இந்தவரலாற்றுப் பின்னணிகளைச் சுட்டிக் காட்டினேன்.

திராவிடம் என்று அழைக்கக்கூடிய


ஒரு தேவை உருவானது


ஆகவே, பாம்பே பிரசிடென்சி இருந்ததைப்போல, மதராஸ் பிரசிடென்சி  என்ற ஒன்று, திராவிட மொழி கள் பேசுகின்ற மக்களையெல்லாம் ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு நிலப்பரப்பாக இருந்த காலத்தில், அதை தமிழ்நாடு என்று சொல்ல முடியாது. ஆகவேதான், அந்த நிலப்பகுதியை திராவிடம் என்று அழைக்கக் கூடிய ஒரு தேவை உருவானது. அதிலிருந்துதான் திராவிடர் கழகம் என்கிற அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை - திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது ஒரு வரலாற்றுக் கட்டாயமாக மாறியது.

இத்தகைய வரலாற்றுப் பின்னணிகளில் இருந்து தான் சமூகநீதியையும் நாம் பார்க்கக் கடமைப்பட்ட வர்களாக இருக்கிறோம்.

தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தை உருவாக்கிய பின்னர், அது முன்வைத்த கோரிக்கைகள் என்ன? அது முன்மொழிந்த கொள்கை, கோட்பாடு என்ன? இதை நாம் பாகுபாடு இல்லாத பார்வையோடு அணுகக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.

மரபினத்தையும், தேசிய இனத்தையும்


போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது


தமிழை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாட்டை மேம்படுத்துவதற்காக, தமிழ் இனத்தை மீட்பதற்காக திராவிடர் கழகம் எண்ணற்ற பல செயல் திட்டங்களை வரையறுத்து இருக்கிறது. போராட்டங்களை நடத்தி யிருக்கிறது. மாநாடுகளை நடத்தியிருக்கிறது. அவை அனைத்தும் சமூகநீதிக்காக. ஆரிய மரபினம் - திராவிட மரபினம்; எனவே, மரபினத்தையும், தேசிய இனத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. தமிழ் என்கிற மொழிவழி அடிப்படையிலான இனத்தை தேசிய இனம் என்று நாம் அழைக்கிறோம்.

திராவிட இனம் என்பது பல தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு மரபினம். எனவே, ஆரிய மரபி னத்திற்கு எதிராகத்தான் தந்தை பெரியார், அந்த ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காகத்தான் கடவுள் மறுப் பையும் கையிலெடுக்கிறார். கடவுள் மறுப்பு என்பது கொள்கையல்ல. அது ஒரு போர்த் தந்திரம். ஏனென்றால்,  ஆரிய மரபினத்தின் ஆதிக்கம் எங்கே நிலை கொண்டிருக்கிறது? மூன்று சதவிகிதம் என்று சொல்கிறோம்; அது சிறுபான்மைதான். ஆனால், மூன்று சதவிகிதமாக இருக்கிற சிறுபான்மைச் சமூகம் எப்படி இவ்வளவு பெரிய ஆட்சி அதிகார பீடத்தில் அமர முடிகிறது. இதற்கு எது காரணம்? யாரெல்லாம் பார்ப்பனரல்லாதார் என்று நாம் சொல்லுகிறோமோ, அவர்களும் அதே கருத்தியலை உள்வாங்கியவர் களாக, அவர்களின் கருத்தியல்களுக்குக் கட்டுப்பட்ட வர்களாக, அவர்களின் கருத்தியல் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாக விளங்குவதுதான் காரணம். எனவே, அந்த ஆதிக்கத்தைக் கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருப்பது எது என்று பார்க்கின்றபொழுது,  அதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது இந்துத் துவம் அல்லது இந்து மதம் என்பதைப் புரிந்து கொள்கிறார்.

இந்து மதத்தை எது காப்பாற்றுகிறது?


இந்து மதத்தை எது காப்பாற்றுகிறது? இந்துத்து வத்தை எது காப்பாற்றுகிறது? நம்முடைய குடும்பத் தைச் சார்ந்தவர்கள் அத்துணை பேருமே இந்துக் கள்தான். தந்தை பெரியார் குடும்பம் இந்துக் குடும் பம்தான். அவருடைய தந்தையின் பெயர் வெங் கடப்பட நாயக்கர்; இந்து பெயர்தான்; தந்தை பெரியாரின் பெயர் ராமசாமி நாயக்கர், இந்துப் பெயர் தான். என்னுடைய தந்தையின் பெயர்கூட ராமசாமி தான். இந்துப் பெயர்தான். நாம் யாரும் இந்து குடும்பம் அல்லாதவர்கள் அல்ல. ஆனால், தந்தை பெரியார் அதை எதிர்க்கவேண்டிய முடிவிற்கு ஏன் வருகிறார் என்றால், காலங்காலமாக ஒரு மரபினம் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒரு பெரும்பான்மை சமூகம் மூடநம் பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கிறது. அதிகாரம் இல்லாமல் கிடக்கிறது; கல்வி இல்லாமல் இருக்கிறது. இப்படி கல்வி, அதிகாரம் போன்றவற்றை நுகர முடியாமல் இவர்கள் முடங்கிக் கிடப்பதற்கு எது காரணம் என்று கண்டறிந்தபொழுதுதான், இவர்களை இந்த முடைநாற்றம் வீசுகின்ற மூடநம்பிக்கைச் சேற்றுக்குள்ளே புதைத்து வைத்திருப்பது - இவர்கள்மீது திணிக்கப்பட்டு இருக்கிற கடவுள் நம்பிக்கை என்பதைக் கண்டறிகிறார், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். அதனால்தான், கடவுள் மறுப்பை கையிலெடுக்கிறார்.

திராவிடர் கழகத்தின் களப்பணிகள்!


அடிப்படை நோக்கம், ஆரிய  மரபினத்தின் ஆதிக்கத்தைத் தகர்ப்பது.

அடிப்படை நோக்கம், சமூகநீதியை வென்றெடுப் பது

அடிப்படை நோக்கம், உழைக்கும் பெரும்பான்மை மக்கள், கல்வி, வேலை வாய்ப்பு, அதிகாரம் போன்ற வற்றை நுகரவேண்டும்.

இதுதான் அடிப்படை நோக்கம் தோழர்களே,  இதுதான் திராவிடர் கழகத்தின் நோக்கம். இதுதான்  திராவிடர் கழகத்தின் களப்பணிகள்.

ஆகவேதான் தந்தை பெரியார், ஜாதி ஒழிப்பை செயல் திட்டமாக வைக்கிறார்.

ஆகவேதான் பெரியார் பெண் விடுதலையை செயல் திட்டமாக வைக்கிறார்.

ஜாதியை ஒழிக்கவேண்டும், பெண் விடுதலையை வென்றெடுக்கவேண்டுமானால், சமூகநீதிக் கோட் பாட்டை இங்கே நிலைநாட்டவேண்டும்.

சமூகநீதிக் கோட்பாட்டை நிலை நாட்டவேண் டுமானால், ஆரிய மரபினத்தின் ஆதிக்கத்தைத் தகர்ப்பதற்குரிய போராட்டக் களங்களை அமைக்க வேண்டும்.

இந்த அடிப்படையில்தான் திராவிடர் கழகம் செயல்படத் தொடங்கியது. தந்தை பெரியார் 95 வயது வரையில், உடல் நலிவுற்றிருந்த வேளையிலும், தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று பணியாற்றி, தன்மானத்தை ஊட்டி, திராவிட உணர்ச்சி என்கிற தமிழ் உணர்ச்சியை, மான உணர்ச்சியை, தேசிய இன உணர்ச்சியை, சமூகநீதி உணர்ச்சியை விதைத்தார்.

பெரியார் வீழ்ந்தால், திராவிடமே வீழ்ந்துவிடும் என்று கனவு கண்டார்கள்!


அவர் வீழ்ந்தால், திராவிடமே வீழ்ந்துவிடும் என்று கனவு கண்டார்கள். அவர் அழிந்தால், திராவி டர் கழகம் அழிந்து போகும் என்று கனவு கொண் டார்கள்.

ஆனால், காலம் திராவிட அரசியலை முன் னெடுத்துச் செல்வதற்குரிய ஒரு காலக் கொடையாக பேரறிஞர் அண்ணாவை நமக்குத் தந்தது. பேரறிஞர் அண்ணா, பெரியாரின் கொள்கைகளை செழுமைப் படுத்தினார், வலிமைப்படுத்தினார், எளிமைப்படுத் தினார். பெருவாரியான மக்களிடத்திலே கொண்டு போய் சேர்த்தார்.

அண்ணா வீழ்ந்தால், திராவிட அரசியல் வேரறுந்து போகும் என்று கனவு கண்டார்கள்


பேரறிஞர் அண்ணா வீழ்ந்தால், திராவிட அரசியல் வேரறுந்து போகும் என்று கனவு கண்டார்கள். 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் பேரறிஞர் அண்ணா கால மானபோது, பலர் களிப்படைந்தார்கள். அந்த நேரத்தில், பெரியாரும், அண்ணாவும் உருவாக்கிய அந்தக் கழகத்தைக் கட்டிக் காப்பாற்றுவதற்காக சமூகநீதிப் போர்க்களத்தைத் தொடர்ந்து வழிநடத்திச் செல்லுவதற்காக, போர் வாளோடு புறப்பட்டவர்தான் திருக்குவளையில் தோன்றிய தலைவர் கலைஞர் அவர்கள்.

50 ஆண்டுகாலம் அவரை மய்யப்படுத்தியே தமிழ்நாட்டு அரசியல், இந்திய அரசியல் சுற்றுச் சுழன்று வந்தது.

திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்


திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இந்தத் தமிழ் மண்ணிலே தொடர்ந்து போராடும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் முழங்கினார்.

அதையே செழுமைப்படுத்திய  தலைவர் கலைஞர் அவர்கள், திராவிடர் கழகத்தோடு இணைந்து, தமிழ் மக்களின் மீட்சிக்காகத் தொடர்ந்து போராடினார். தமிழ்நாட்டு மக்களுக்காக மட்டுமல்ல, தமிழ் ஈழ மக்களுக்காகவும்தான். வரலாறு தெரியாதவர்கள், அறியாமையில் உழலுகிறவர்கள், அவதூறுகளை அள்ளிப் பரப்பிக் கொண்டிருக்கலாம், ஆனால், அது தற்காலிகமானதுதான்,  புரிந்துகொள்ளவேண்டும்.

தலைவர் கலைஞரும் இல்லை, பேரறிஞர் அண்ணாவும் இல்லை, தந்தை பெரியாரும் இல்லை. இனி திராவிட அரசியல் என்கின்ற சமூகநீதி அரசியல்  அவ்வளவுதான் வீழ்ந்து போகும், கருகிப் போகும், சாம்பலாகும் என்று கனவு கண்டார்கள்.

பெரியாருக்குப் பின்னால், திராவிடர் கழகத்தை வெற்றிகரமாக வழிநடத்திக் கொண்டு வருகிறார்


இல்லை, அதை வழிநடத்த இதோ நானிருக்கிறேன் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக, பெரியாருக்குப் பின்னால், திராவிடர் கழகத்தை வெற்றிகரமாக வழிநடத்திக் கொண்டு வருகிறார். இன்றைக் குப் பவள விழா மாநாட்டினையும் தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருக்கிறார்.

பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞர் அவர்களும் கட்டிக் காத்த அந்த சமூகநீதி அரசியலை,  அண்ணாவும், கலைஞரும் இல்லாவிட்டாலும், அவர்களின் வழியில் அதனைக் கட்டுக்கோப்பாக வழி நடத்தக் கூடிய ஆற்றல் வாய்ந்தவராக இதோ நானிருக் கிறேன் என்று அண்ணன் தளபதி அவர்கள் இன்றைக் குக் களத்திலே வெற்றிகரமாக வீறுநடை போடுகிறார்.

தமிழர் தலைவரும், தளபதியும்


வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்!


பெரியார் இல்லை, அண்ணா இல்லை, கலைஞர்  இல்லை - ஆனால், சமூகநீதி அப்படியே இருக்கிறது. அதற்கான போர்க் குரல் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கான போர்க்களம் இன்னும் சுறு சுறுப்பாகவே இருக்கிறது. அதற்கு நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர் களும், நமது அண்ணன் தளபதி அவர்களும் தான் அதற்கான தலைமைப் பொறுப்பை ஏற்று இன்றைக்கு வழிநடத்திக் கொண்டிருக் கிறார்கள்.

அந்தக் களத்தில் லட்சோபலட்சக்கணக் கான விடுதலை சிறுத்தைகளும் சமூகநீதி யைக் காப்பாற்று வதற்கு, சமத்துவத்தை வென்றெடுப்பதற்கு இடதுசாரிகளும், விடு தலை சிறுத்தைகளும், சிறுபான்மை சமூகத் தினரும் இன்றைக்கு ஒன்று சேர்ந்து நிற் கிறோம்.

ஆனால், நம்மைப் பிரிப்பதற்கு, சிதைப் பதற்கு ஜாதி அடிப்படையில் சிதறடிப்பதற்கு, மதவாத சக்தி கள், சங் பரிவார்கள் இங்கே காலூன்றத் துடிக்கிறார்கள்; தூண்டி விடு கிறார்கள். அதன் விளைவுதான், பெரியார் சிலைகளை உடைக்கின்ற துணிச்சல்; அம் பேத்கர் சிலைகளைத் தகர்க்கின்ற துணிச்சல்.

சமூகநீதி என்கிற கோட்பாட்டுக் கோட்டையை எந்தக் கொம்பனாலும் நெருங்க முடியாது!


அம்பேத்கர் சிலைகளையும், பெரியார் சிலை களையும் உடைக்க முடியும்; அவர்கள் உருவாக்கி வைத்திருக்கின்ற சமூகநீதி என்கிற கோட்பாட்டுக் கோட்டையை எந்தக் கொம் பனாலும் நெருங்க முடியாது;  அது எவராலும் தகர்க்க முடியாத ஒரு மகத்தான கோட்டை என்பதைச் சொல்லி,

திராவிடர் கழகம் என்பது தமிழர் கழகம் தான்

திராவிடர் கழகம் என்பது சமூகநீதிக் கழகம் தான்

திராவிடர் கழகம் என்பது சமத்துவக் கழகம்தான்

திராவிடர் கழகம் என்பது ஆரிய மர பினத்தின் ஆதிக்கத்¬த் தகர்ப்பதற்கான ஒரு போர்க்களம் என்று கூறி,

வாய்ப்புக்கு நன்றி கூறி,  நிறைவு செய் கிறேன்.

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகப் பவள விழா வில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்  அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 1.10.19

இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:48 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சேலம், திருமா, மாநாடு
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

செங்காந்த மலர்

செங்காந்த மலர்
தமிழ் நாட்டு மலர்
Powered By Blogger

2026 பெரியார் விருது பெற்றோர்களுக்கு பாராட்டு

2026 பெரியார் விருது பெற்றோர்களுக்கு பாராட்டு
பெரியார் மய்யம், சென்னை, 17.01.2026

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அளிக்கவேண்டிய நிதியை அளிக்க மறுப்பது தி.மு.க. ஆட்சிக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கும் நோக்கம்தானே! ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து வரும் 3 ஆம் தேதி கழக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

எனக்கு பிடித்தவை

  • 2.வாழ்வியல் சிந்தனைகள்
  • 1.தமிழர் தலைவர்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

Translate மொழிபெயர்

Wikipedia

தேடல் முடிவுகள்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • வாகை சூடிய வாசிங்டன்
    கலி. பூங்குன்றன் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாட்டின் 2ஆம் நாளில் கருத்துக்களம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்கத்...
  • இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அணி; மற்றொன்று சமூகநீதிக்கு (இட ஒதுக்கீட்டுக்கு) எதிரான அணி!
      ‘‘ஊன்றிப் படியுங்கள், உண்மையைப் பரப்புங்கள்!’’ உயர்ஜாதிக் கூட்டம் இடஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது! இந...
  • கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பால் சிவந்தது சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
    சென்னை, பிப்.7  உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் பொருளாதாரச் சி...
  • தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘‘செம்மொழி இலக்கிய விருதுடன்’’ தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை!
      ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சரின் அறிவிப்பு –‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்’ அவர் என்பதை உலகறியச் செய்யும் எடுத்துக்காட்டு துணைவேந்தர்...
  • சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு: 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
    நகைகள் மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டபோது நான்கு கிலோவுக்கும் அதிகமான தங்கம் மாயமானது அம்பலமானது. - திருவனந்தபுரம்: சபரிமலை ...
  • இதுதான் பார்ப்பன பக்தி! மது குடித்துவிட்டு ஆபாச நடனமாடிய நான்கு அர்ச்சகர் பார்ப்பனர்கள்-அறநிலையத் துறை நடவடிக்கை
    சிறீவில்லிபுத்தூர், ஜூன் 26 விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள பெரிய மாரி யம்மன் கோயிலி...
  • ஜாதியப் பாகுபாட்டைத் தடுக்கும் யுஜிசி விதிமுறைகளை எதிர்த்து வடமாநிலங்களில் பார்ப்பன மாணவர்கள் போராட்டம்!
      பார்ப்பனர்களைப் புரிந்துகொள்வீர்! புதுடில்லி, ஜன. 28  பல்கலைக்கழக மானியக் குழு ஜனவரி 13, 2026 அன்று வெளியிட்ட ‘‘உயர்கல்வி நிறு வனங்களில் ...
  • இன்று புரட்சியாளர் லெனின் மறைவு நாள் (21.01.1924)
      இன்று புரட்சியாளர் லெனின் மறைவு நாள் (21.01.1924) சோவியத் யூனியனின் தந்தை என்று அழைக்கப்படும் புரட்சியாளர் விளாடிமிர் லெனின் அவருடைய 102-ஆ...
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஏட்டுக்குத் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அளித்த பேட்டி
      இன்றைய நிலையில், பெரியாரின் பொருத்தப்பாடு என்ன? பார்ப்பனீய எதிர்ப்பு ஏன் என்பது உள்பட ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேட்டுக்கு விடையளித்தார் தி...
  • அமெரிக்கா மாநாட்டில் பங்கேற்ற தோழர்கள் தமிழகம் திரும்பினர்
    அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில்  செப்டம்பர் 21, 22 ஆகிய நாள்களில் அமெரிக்க மனித நேயர் அமைப்பும், பெரியார் பன்னாட்டு அமைப்பும் ஒருங்கிணைந்த...

லேபிள்கள்

  • 10% ஒதுக்கீடு
  • 100 நாள் வேலை
  • 100நாள்வேலை
  • 2020
  • 2021
  • 2024
  • 27%
  • 60 ஆண்டு
  • 7 திட்டங்கள்
  • 91
  • அக்னிபாதை
  • அகவிலைப்படி
  • அஞ்சலகம்
  • அண்ணா
  • அண்ணா பல்கலை
  • அண்ணா பல்கலைக்கழகம்
  • அண்ணாமலை
  • அணி
  • அதிபர்
  • அதிரடி அன்பழகன்
  • அநீதி
  • அபராதம்
  • அபாயம்
  • அம்பத்தூர்
  • அம்பேத்கர்
  • அமிர்தலிங்கம்
  • அமிர்ஷா
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்.அய்.டி
  • அய்.அய்.டி.
  • அய்.ஏ.எஸ்.
  • அய்.நா.
  • அய்.பி.எஸ்
  • அய்தராபாத்
  • அய்யப்பன் கோயில்
  • அயோத்தி
  • அயோத்திதாசர்
  • அயோத்திதாசர் மணி மண்டபம்
  • அர்ச்சகர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சகர் பார்ப்பனர்
  • அரக்கோணம்
  • அரசமைப்பு சட்டம்
  • அரசாணை
  • அரசு
  • அரசு அலுவலகங்கள்
  • அரசு அறிவிப்பு
  • அரசுப் பணி
  • அரபு மொழி
  • அவதூறு
  • அவமதிப்பு
  • அளிப்பு
  • அறநிலையத் துறை
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிவிப்பு
  • அறைஞாண்
  • அன்பழகனார்
  • அனுமதி மறுப்பு
  • அனுமான்
  • அனைத்து கட்சி கூட்டம்
  • அனைத்து சாதியினர்
  • அனைத்து ஜாதி
  • அனைத்து ஜாதியினர்
  • அனைத்துக் கட்சிக் கூட்டம்
  • அனைத்துக்கட்சி
  • அனைத்துக்கட்சி கூட்டம்
  • அஷ்டமி நவமி
  • ஆ.ராசா
  • ஆகமம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி பேட்டி
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியர்அறிக்கை
  • ஆட்சி
  • ஆணவக் கொலை
  • ஆணவக் கொலை தடுப்பு சட்டம்
  • ஆணவப் படுகொலை
  • ஆணை
  • ஆந்திரா
  • ஆபத்து
  • ஆபாச நடனம்
  • ஆய்வரங்கம்
  • ஆய்வுக்குழு
  • ஆயுத பூஜை
  • ஆயுர்வேதம்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்ப்பாட்ட அறிவிப்பு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரப்பா
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆளுநர் விருந்து
  • ஆன்மிக சொற்பொழிவு
  • ஆன்மீகம்
  • ஆனந்த விகடன்
  • ஆனைமுத்து
  • இ.டபில்யூ.எசு
  • இச்சை
  • இசை
  • இட ஒதிக்கீடு
  • இட ஒதுக்கீடு
  • இடிப்பு
  • இணையதளம்
  • இந்தி
  • இந்தி அழிப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்திய இராணுவம்
  • இந்து சட்டம்
  • இந்து தமிழ் திசை
  • இந்து தமிழ்திசை நாளேடு
  • இந்து திருமணம்
  • இந்து நாளேடு
  • இந்து மாநாடு
  • இந்துத்துவா
  • இந்துமதப் பண்டிகைகள்
  • இந்துமதம்
  • இமாம் பசந்த்
  • இரங்கல்
  • இரங்கல் அறிக்கை
  • இரயில் எரிப்பு
  • இரயில்வே
  • இராசு
  • இராமராஜ்யம்
  • இராமன்
  • இராமன் பாலம்
  • இராமன்கோயில்
  • இராமாயணம்
  • இராஜஸ்தான்
  • இல்லத்திறப்பு
  • இலங்கை
  • இலவசம்
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இன்பக்கனி
  • உ.பி.
  • உ.வே.ச
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பு
  • உச்சநீதிமன்றம்
  • உடல்
  • உடைப்பு
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உயர் நீதிமன்ற தீர்ப்பு
  • உயிரிழப்பு
  • உரம்
  • உரிமை
  • உரிமைத்தொகை
  • உரை
  • உலகத் தமிழ் மாநாடு
  • உள்ஒதுக்கீடு
  • உறுதிமொழி
  • ஊத்துக்கோட்டை
  • ஊதியம்
  • ஊரக வளர்ச்சி
  • ஊழல்
  • எச்சரிக்கை
  • எடைக்கு எடை
  • எதிர்ப்பு
  • எழுத்தியல்
  • எழும்பூர்
  • எழும்பூர் ரயில் நிலையம்
  • என்எல்சி
  • ஒப்பீடு
  • ஒப்புதல்
  • ஒரே மொழி
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றிய அரசு
  • ஓசூர்
  • ஓதுவார்
  • ஓபிசி
  • ஓய்வூதியம்
  • க்யூஆர் கோட்
  • கச்சத்தீவு
  • கட்டுமானத் தொழிலாளர்
  • கடவுள்
  • கடவுள் மறுப்பு
  • கடன்
  • கடிதம்
  • கடைசி
  • கண்டணம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டனம்
  • கண்ணதாசன்
  • கம்யூனிஸ்ட்
  • கமலஹாசன்
  • கர்நாடகம்
  • கர்நாடகா
  • கர்ப்பூரி தாகூர்
  • கருணை வேலை
  • கருத்தரங்கம்
  • கருத்தியல் பயிற்சி
  • கருத்து
  • கருத்துப்படம்
  • கருத்துரை
  • கருநாடக மாநிலம்
  • கரோனா
  • கல்
  • கல்வி
  • கல்வி அமைச்சர்
  • கல்வி நிலையம்
  • கல்வி வளாகம்
  • கல்வெட்டு
  • கலந்துரையாடல்
  • கலாச்சாரம்
  • கலி பூங்குன்றன்
  • கலிபூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் சிலை
  • கலைஞர் நூற்றாண்டு நூலகம்
  • கலைஞருடன் – ஒரு நேர்காணல்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கவிதை
  • கவியரங்கம்
  • கவுதமன்
  • கழக நூல்கள்
  • கழகம்
  • கழுதை
  • கன்னிமேரா
  • கனடா
  • கனிம நிலங்கள்
  • கனிமொழி
  • காணொலி
  • காந்தி
  • காப்பீடு
  • காமராஜர்
  • காரணம்
  • காரல் மார்க்ஸ்
  • காலை உணவு
  • காலை சிற்றுண்டி
  • கி.வீரமணி
  • கி.வீரமணி அறிக்கை
  • கியூட்
  • கிரிமிலேயர்
  • கிருஷ்ணகிரி
  • கீழ்ப்பாக்கம்
  • கீழடி
  • குடந்தை
  • குடியரசுத் தலைவர்
  • குடியிருப்பு
  • குடியுரிமை
  • குடியுரிமை சட்டம்
  • குடியுரிமை திருத்தச் சட்டம்
  • குடியுரிமைச் சட்டம்
  • குமரி முதல்
  • குமுதம்
  • குலக்கல்வி
  • குவைத்
  • குழந்தை
  • குழந்தை திருமணம்
  • குழந்தை தொழிலாளர்
  • குழந்தையின்மை
  • குற்றச்சாட்டு
  • குற்றம்
  • குறள்
  • குன்றக்குடி அடிகளார்
  • குஜராத்
  • கூட்டம்
  • கூட்டமைப்பு
  • கூடுவாஞ்சேரி
  • கேதார்நாத்
  • கேந்திர வித்யாலயா
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி
  • கைது
  • கைபேசி
  • கொடும்பாவி எரிப்பு
  • கொடுமை
  • கொரோணா
  • கொலை
  • கொலை முயற்சி
  • கொலைக்கருவி
  • கொள்கை பரவல்
  • கோ.தங்கராசு
  • கோகுல்ராஜ்
  • கோத்ரா
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோரிக்கை
  • கோவிட்- 19
  • கோவில்
  • கோவை
  • ச்டாலின்
  • சகுனம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சங்கரையா
  • சங்கொலி
  • சட்ட எரிப்பு
  • சட்ட மன்றம்
  • சட்ட வரைவு
  • சட்ட விழிப்புணர்வு
  • சட்டசபை
  • சட்டத்திருத்தம்
  • சட்டம்
  • சட்டமன்ற தீர்மானம்
  • சத்திரியர்
  • சதி
  • சந்தா
  • சந்திப்பு
  • சந்துரு பரிந்துரை
  • சபரிமலை
  • சம்புகன்
  • சமசுக்கிருதம்
  • சமசுகிருதம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக நீதி நாள்
  • சமூகநீதி
  • சமூகநீதி அணி
  • சமூகநீதி நாள்
  • சரஸ்வதி
  • சனாதனம்
  • சாக்கோட்டை
  • சாகித்ய அகாடமி
  • சாதனை
  • சாதி
  • சாதி சான்றிதழ்
  • சாமி
  • சாமியார்
  • சாய்பாபா
  • சாலை
  • சான்றிதழ்
  • சிஏஏ
  • சிங்கப்பூர்
  • சிங்கப்பெருமாள் கோவில்
  • சிங்காரவேலர்
  • சித்தராமய்யா
  • சித்தராமையா
  • சித்திரபுத்திரன்
  • சிந்துவெளி
  • சிபிஎஸ்இ
  • சிபிஎஸ்சி
  • சிலம்பம்
  • சிலை
  • சிலை திறப்பு
  • சிறப்பு
  • சிறப்பு கூட்டம்
  • சிறை
  • சீட்
  • சீனா
  • சுகாதாரத்துறை
  • சுடுகாடு இடுகாடு
  • சுதந்திரப் போராட்ட வீரர்
  • சுந்தரம்
  • சுற்றறிக்கை
  • சூத்திரன்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • செக்கடி குப்பம்
  • செங்கல்பட்டு
  • செம்மொழி
  • செம்மொழி இலக்கிய விருது
  • செம்மொழி நூலகம்
  • செய்தி
  • செய்யாறு
  • செயலி
  • செயற்குழு
  • செல் எண்கள்
  • சென்னை
  • சேது
  • சேது கால்வாய்
  • சேது பாலம்
  • சேலம்
  • சேலம் மாநாடு
  • சொர்க்கவாசல்
  • சோசலிசம்
  • சோனியா
  • ஞானபீட விருது
  • டாக்டர்
  • டி ஆர் பாலு
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டெல்லி
  • டைம்ஸ்
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா
  • தகவல் தொழில் நுட்பக்குழு
  • தகைசால் தமிழர்
  • தகைசால் தமிழர் விருது
  • தங்கம் திருட்டு
  • தஞ்சை
  • தடுக்க சட்டம்
  • தடுப்பு
  • தடுப்பு சட்டம்
  • தடுப்பூசி
  • தடை மறுப்பு
  • தண்டனை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியாரின் பெயர்
  • தமிழ்
  • தமிழ் அர்ச்சனை
  • தமிழ் இணையம்
  • தமிழ் கட்டாயம்
  • தமிழ் சங்கம்
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ் பண்பாட்டு மாதம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் மாநாடு
  • தமிழ் மொழி
  • தமிழ் வீரர்கள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு முதல்வர்
  • தமிழ்மொழி வாழ்த்து
  • தமிழர்
  • தமிழர் தலைவர்
  • தமிழில் குடமுழுக்கு
  • தர்மபுர ஆதீனம்
  • தர்மபுரி
  • தர்மம்
  • தலைப்பு உரை
  • தலைமை
  • தலைமை நீதி
  • தலையங்கம்
  • தலைவர்கள்
  • தள்ளுபடி
  • தனியார் நிறுவனங்கள்
  • தனியார்மயம்
  • தாய்லாந்து
  • தாழ்த்தப்பட்டோர்
  • தி.மு.க. அரசு
  • தி.மு.க. மாணவரணி
  • திடல்
  • திமுக
  • தியாகராயர் நகர்
  • திராவிட இயல்
  • திராவிட தேசியம்
  • திராவிட மாடல்
  • திராவிடப் பாரம்பரியம்
  • திராவிடம்
  • திராவிடம் வென்றது!
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திரிபு வேலை
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருமாவேலன்
  • திருமுருகன் காந்தி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளூர்
  • திருவாடுதுறை
  • தில்லி
  • திவாகரன்
  • திறப்பு
  • தினகரன்
  • தினசெய்தி
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமணி கதிர்
  • தினமலர்
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்லக்
  • துக்ளக்
  • துக்ளக் பதிலடி
  • துணை முதலமைச்சர்
  • துயர் துடைப்பு
  • துயர்துடைப்பு
  • துரை.சந்திரசேகரன்
  • துரைமுருகன்
  • துளக்
  • தெலுங்கானா
  • தென் சென்னை
  • தேசிய கல்வி
  • தேசிய சட்டக் கல்லூரி
  • தேர்தல்
  • தேர்தல் அறிக்கை
  • தேர்தல் பத்திரம்
  • தேர்வாணையம்
  • தேர்வு
  • தேவதாசி
  • தேவாரம்
  • தொடக்கம்
  • தொண்டு
  • தொப
  • தொல்.திருமாவளவன்
  • தொழில்படிப்பு
  • தொழிலாளர்
  • தொழிலாளர் கொள்கை
  • தொழிலாளர் போராட்டம்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • நகை
  • நடராசன்
  • நடுவன் அரசு துறை
  • நடைபாதைக் கோயில்கள்
  • நம்பிக்கை
  • நரபலி
  • நரிக்குறவர்
  • நரேந்திரர்
  • நல வாரியம்
  • நவராத்திரி
  • நன்கொடை
  • நன்றி
  • நாகநாதன்
  • நாகை
  • நாங்குநேரி
  • நாத்திகம்
  • நால்வர்
  • நிகழ்வுகள்
  • நிதி
  • நியமனம்
  • நிர்மலா
  • நிறைவு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவுநாள்
  • நீக்கம்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீதிக்கட்சி
  • நீதித்துறை
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதி மோகன்
  • நீதிபதிகள்
  • நீதிமன்றம்
  • நீரிழிவு
  • நீலச் சட்டை பேரணி
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூலகம்
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு விழா
  • நெய்வேலி
  • நெல்லை
  • நேர்காணல்
  • நோபல் பரிசு
  • பக்தி
  • பகவத் கதை பாராயணம்
  • பகவத்கீதை
  • பகுத்தறிவாளர் கழக மாநாடு
  • பசு
  • பஞ்சாப்
  • படத்திறப்பு
  • படம் திறப்பு
  • பண்பாட்டுப் படையெடுப்பு
  • பணி
  • பணிஓய்வு
  • பணிநிறைவு
  • பணிபுரியும் பெண்கள்
  • பணியாளர்
  • பணியிடை நீக்கம்
  • பதக்கம்
  • பதவி உயர்வு
  • பதவி ஏற்பு
  • பதவியேற்பு
  • பதில்
  • பதிலடி
  • பதிவு
  • பயணம்
  • பயிலரங்கம்
  • பரதம்
  • பரப்புரை
  • பரப்புரை திட்டம்
  • பரிசுத் தொகை
  • பல்கலைக்கழகம்
  • பல்லக்கு
  • பல்லாவரம்
  • பலகை
  • பவழ விழா
  • பழங்குடியினர்
  • பள்ளி
  • பள்ளிக்கல்வித்துறை
  • பஜனை
  • பா.இயேசுராஜா
  • பா.ஜ.க
  • பா.ஜ.க.
  • பாட திட்டம்
  • பாடம்
  • பாண்டே
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பன பக்தி!
  • பார்ப்பன வெறி
  • பார்ப்பனத் திமிர்
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் எதிர்ப்பு
  • பாரத ரத்னா
  • பாரதிதாசன் விருது
  • பாரம்பரிய சின்னம்
  • பாராட்டு
  • பாராட்டு விழா
  • பாலபிரஜாபதி
  • பாலம்
  • பாலியல் லீலை
  • பாலியல் வன்கொடுமை
  • பாவாணர்
  • பாஜக
  • பி.எப்.
  • பிச்சை
  • பிணை
  • பிபிசி
  • பிரதமர்
  • பிராமண – சூத்திரப் போராட்டம்
  • பில்கிஸ் பானு
  • பிள்ளையார் ஊர்வலம்
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பு
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற இதழ்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறந்தநாள் அறிக்கை
  • பிறமொழி கற்றோர்
  • பின்னணி
  • பிஜேபி அரசு
  • பீகார்
  • புகழாரம்
  • புகார்
  • புத்தக வெளியீடு
  • புத்தகக் காட்சி
  • புத்தாண்டு
  • புதிய கல்வி
  • புதிய கல்வி கொள்கை
  • புதிய சட்டம்
  • புதிரை வண்ணார்
  • புதுச்சேரி
  • புதுடில்லி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்டு இமாலயப்புரட்டு
  • புலம்பெயர் தமிழர்
  • புலவர்
  • புலவர் வீரமணி
  • புலால் உணவு
  • புழல்
  • புறக்கணிப்பு
  • பூணூல்
  • பூமி பூஜை
  • பெங்களூரு
  • பெட்ரண்ட் ரஸல்
  • பெண்
  • பெண் ஏன் அடிமையானாள்?
  • பெண்கள்
  • பெண்கள் ஆணையம்
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு
  • பெண்களுக்கு இட ஒதுக்கீடு
  • பெண்ணுரிமை
  • பெரம்பூர் பி.சபாபதி
  • பெரியார்
  • பெரியார் 1000
  • பெரியார் உலகத்திற்கு நன்கொடை
  • பெரியார் உலகம்
  • பெரியார் களம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் நினைவிடம்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பணி
  • பெரியார் பல்கலைக்கழகம்
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் மண்
  • பெரியார் லைஃப்
  • பெரியார் விருது
  • பெருமை
  • பெல்
  • பேட்டி
  • பேரடை
  • பேரணி
  • பேராசிரியர்
  • பேரிடர்
  • பேருந்து
  • பொங்கல்
  • பொதுக்குழு
  • பொதுத்தேர்வு
  • பொருளாதாரம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பு
  • போட்டித் தேர்வு
  • போதைப் பொருள்
  • போராட்டம்
  • மக்களவை உறுப்பினர்
  • மக்களவைத் தேர்தல்
  • மகப்பேறு விடுப்பு
  • மகளிர்
  • மகளிர் உரிமைத் தொகை
  • மகளிர் நாள்
  • மகாராணி
  • மகாவீரர்
  • மஞ்சை வசந்தன்
  • மடையர்
  • மணல் திட்டு
  • மணவழகர் மன்றம்
  • மணவிழா
  • மணிப்பூர்
  • மணிமண்டபம்
  • மணியம்மையார்
  • மணியரசன்
  • மத்திய அரசு
  • மதச்சார்பின்மை
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதவாதம்
  • மது குடி
  • மராட்டியம்
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவக் கல்லூரி
  • மருத்துவக் கல்வி
  • மருத்துவம்
  • மருத்துவமனை
  • மருத்துவர்
  • மலம்
  • மலர்
  • மலன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மழை
  • மழை வெள்ளம்
  • மறியல்
  • மறுப்பு
  • மறைவு
  • மறைவு நாள்
  • மனித உரிமை
  • மனித சங்கிலி
  • மனுதர்ம யோஜனா
  • மனுதர்மம்
  • மனுஷ்யபுத்திரன்
  • மனைவி சம்பளம்
  • மாணவர்
  • மாணவர் கழகம்
  • மாணவர்கள்
  • மாநாடு
  • மாநில அரசு
  • மாநில அரசுப் பணி
  • மாநிலங்களவை
  • மாம்பழம்
  • மார்கழி
  • மாலனுக்கு பதிலடி
  • மாற்றம்
  • மாற்றுத்திறனாளி
  • மாற்றுவோம்
  • மிரட்டல்
  • மின்சாரம்
  • மீட்பு
  • மீனவர்
  • மு க ஸ்டாலின்
  • மு.க. ஸ்டாலின்
  • மு.க.ஸ்டாலின்
  • முத்துக்கூத்தன் நூற்றாண்டு
  • முத்தையன்
  • முதல்வர்
  • முதல்வர் விஜய்
  • முதலமைச்சர்
  • முரசொலி
  • முருகன்
  • முற்பட்டோர்
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூடநம்பிக்கைப் பிரச்சாரம்
  • மூடப் பண்டிகை
  • மூதறிஞர் குழு
  • மே நாள்
  • மொழி
  • மொழிகள்
  • மொழிப்போர்
  • மோசடி
  • யாகம்
  • யாழ்ப்பாணம்
  • யுனெசுகொ
  • யுஜிசி விதிமுறை
  • ரங்கராஜ்
  • ரசல்
  • ரமணர்
  • ரயில்வே
  • ரஜினி
  • ராகுல் காந்தி
  • ராணுவம்
  • ராமதாஸ்
  • ராமர் கோயில்
  • ராஜஸ்தான்
  • ரிசர்வ் வங்கி
  • லெனின்
  • வ.உ.சி.
  • வங்கதேசம்
  • வங்கி
  • வட்டாட்சியர்
  • வட இந்தியா
  • வட மாநிலம்
  • வடநாடு
  • வடமாநிலங்கள்
  • வரவு செலவு
  • வரவேற்பு
  • வரி
  • வருகை
  • வழக்கு
  • வழக்கு விசாரணை
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன் கொடுமை
  • வன்கொடுமை
  • வன்புணர்வு
  • வன்முறை
  • வன உயிரியல் பூங்கா
  • வா உ சி
  • வாரியம்
  • வாரியார்
  • வாழ்த்து
  • வி.பி.சிங்
  • விசாரணை
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை90
  • விடுதலைப் போர்
  • விடுமுறை
  • விபத்து காப்பீட்டுத் திட்டம்
  • விமானநிலையம்
  • வியப்பு
  • விருது
  • விருதுநகர்
  • விலக்கு
  • விவசாயி
  • விவேகானந்தர்
  • விழா
  • விளக்கம்
  • விளையாட்டு
  • விஜயபாரதம்
  • விஸ்வகர்மா திட்டம்
  • வீட்டு நிகழ்ச்சிகள்
  • வீட்டுமனை
  • வெள்ளம்
  • வெள்ளை அறிக்கை
  • வெளியேற்றம்
  • வெற்றி
  • வேங்கை வயல்
  • வேதம்
  • வேர்ல்ட் ரெக்கார்ட்
  • வேலை நேரம்
  • வேலைவாய்ப்பு
  • வைக்கம்
  • வைக்கம் நூற்றாண்டு
  • வைகோ
  • வைரசு
  • வைரமுத்து
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜாதி உணர்வு
  • ஜாதி கொடுமை
  • ஜாதி நீக்கம்
  • ஜாதி பெயர்
  • ஜாதி பேதம்
  • ஜாதி முறை
  • ஜாதி வெறி
  • ஜாதியப் பாகுபாடு
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு
  • ஜூனியர் விகடன்
  • ஜெர்மன்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • ஹிந்தி எதிர்ப்பு
  • ஹிந்தி எழுத்து அழிப்பு
  • ஹிந்துத்துவா
  • CAB&NRC

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (15)
    • ▼  ஆகஸ்ட் (2)
      • இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அண...
      • தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை ‘‘முதலில்’’ பாடுவதைச் ...
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2025 (23)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (6)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)

சிறப்புடைய இடுகை

அமெரிக்கா - வாஷிங்டன் நகரில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது

வரவேற்புரை என்னும் தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க மேரிலாண்ட் மாகாணத்தின் 8-ஆம் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி ஜாமி ரஸ்கின் அவர்களுக்கு தமி...

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (15)
    • ▼  ஆகஸ்ட் (2)
      • இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அண...
      • தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை ‘‘முதலில்’’ பாடுவதைச் ...
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2025 (23)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (6)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.