மணிப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மணிப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 ஜூலை, 2023

தாய்நாடு என்று பெருமை பேசும் பா.ஜ.க. அரசு தாய்க்குலத்திற்கு செய்வது என்ன - பெருங்கேடு அல்லவா? - மக்களவை உறுப்பினர் கனிமொழி


மக்களவை உறுப்பினர் கனிமொழி

17

சென்னை, ஜூலை 24- தாய்நாடு என்று பெருமை பேசும் பா.ஜ.க. அரசு பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியுள்ளதாக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார். மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூர வன்முறையைக் கண் டித்து, திமுக மகளிரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று (23.7.2023) ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

திமுக துணைப் பொதுச் செய லாளர் கனிமொழி தலைமை வகித் தார். இதில், மக்களவை உறுப் பினர்கள் தமிழச்சி தங்கபாண் டியன், கலாநிதி வீராசாமி, சட்டப் பேரவை உறுப்பினர் நா.எழிலன், தி.மு.க. மகளிரணித் தலைவர் விஜயா தாயன்பன், செயலர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டரணிச் செயலர் நாமக்கல் ராணி, மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமாரி, சென்னை மேற்கு மாவட் டச் செயலர் நே.சிற்றரசு உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி பேசியதாவது:

மணிப்பூர் கலவரமும், வன் முறையும் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்றன. கோயில், தேவாலயங்கள் உடைக்கப்பட் டுள்ளன. கிராமங்கள் பற்றி எரி கின்றன, பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகி உள்ளனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் மணிப் பூர் சென்றபோதும், அமைதி ஏற்பட வில்லை.

நமது பிரதமரோ வெளிநாடு களுக்கு பயணம் மேற்கொண்டு, தலைவர்களை சந்தித்துப் பேசி, இந்தியாவில் மதக் கலவரங்கள் இல்லை, மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர் என்று பொய் சொல்லிக் கொண்டிருந்தார்.

வார்த்தைகளால் சொல்ல முடியாத கொடுமைகளுக்கு பெண்கள் உள்ளான காட்சிப் பதிவு வெளியான பிறகுதான், பிரதமர் மவுனத்தைக் கலைத்தார். அப்போதும் நாடாளு மன்றத்துக்குள் வந்து, பேசத் தயா ராக இல்லை. ஜனநாயகத்தை அவ மதிக்கும் வகையில், நாடாளுமன் றத்தின் வெளியே மட்டும் பேசி னார் பிரதமர்.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்கக்கூட பாஜக தயாராக இல்லை. ஒவ்வொரு நாளும் `பாரத் மாதா கி ஜே' என்று கூறுகின்றனர். ஆனால், அவர்கள் எந்த மாதா வைக் காப்பாற்றுகிறார்கள். மணிப் பூரில் பாதிக்கப்பட்ட பெண்கள் தாய் மார்கள் இல்லையா? பெண்ணை மதிக்கத் தெரிந்த சமூகத்தை உருவாக்குவதுதான் ஆட்சியாளர் களின் கடமை.

ஆனால், இது பாஜகவினருக்குப் புரிவதில்லை. பெண்களுக்கு எது நடந்தாலும் பரவாயில்லை என்று கருதும் அரசும், நடந்ததை தெரிந்து கொள்ள அக்கறையில்லாத அரசும் ஆட்சியில் இருக்க அருகதையற் றவை.

மணிப்பூர் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று, ஆட்சியில் இருப் போர் தலைகுனிந்து, பதவி விலக வேண்டும். ஆனால் செய்ய மாட் டார்கள். 

மனசாட்சி இருந்தால் தானே நடவடிக்கை எடுப்பார்கள். தாய் நாடு என பெருமை பேசும் பா.ஜ.க. அரசு, பெண்களுக்கு பாது காப்பற்ற நிலையை உருவாக்கி யுள்ளது.

இது அரசியல் இல்லை. தலைமுறையினரின் பாதுகாப்புக் காகத்தான் பேசுகிறேன். தேர்தலுக் காக நிகழ்த்தப்பட்ட கலவரங் களில், நியாயம் கிடைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராடிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு கனிமொழி பேசினார்.

வெள்ளி, 21 ஜூலை, 2023

மணிப்பூர் நிகழ்வுகளுக்குப் பிறகும் நாட்டை ஆள பி.ஜே.பி.,க்குத் தகுதி உண்டா? - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை


மணிப்பூர் நிகழ்வுகளுக்குப் பிறகும் 
நாட்டை ஆள பி.ஜே.பி.,க்குத் தகுதி உண்டா?

நாகரிகம் - ஜனநாயகம்- மதச்சார்பின்மை - சமூகநீதி பேணும் மக்களே, வாக்குச் சீட்டால் பாடம் கற்பிப்பீர்!

மணிப்பூரில் கடந்த 80 நாள்களாக மக்கள் வேட்டையாடப்பட்டும் ஒன்றிய அரசோ, மாநில அரசோ பாராமுகம்  மட்டுமல்லாமல், துணைபோகும் நிலையைக் கண்ட பிறகும், நாகரிகம், ஜனநாயகம், மனித உரிமைகளில் நாட்டம் கொண்ட மக்கள் இந்த ஆட்சியை அனுமதிக்கலாமா? நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வாக்குச் சீட்டால் பாடம் கற்பிப்பீர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இந்தியாவில்தான் இருக்கிறோமா?
நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா அல்லது காட்டுமிராண்டி விலங்குகள் உலவும் காட்டில்தான் வாழ்கிறோமா என்ற வினாவை இந்திய மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் நடக்கும் நிகழ்வுகள் நிர்வாணமாகத் தெரிவிக்கின்றன.
கடந்த 80 நாள்களாக அம்மாநிலத்தில் சிறுபான்மை பழங்குடி மக்கள் குறி வைத்துத் தாக்கப்படுகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பி.ஜே.பி. ஆட்சி இதற்குத் தூண்டுகோலாகவும், துணை போவதாகவும் இருக்கிறது என்று பாதிக்கப்பட்ட மக்களும், அனைத்துக் கட்சியினரும் ஒரே குரலில் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த ஒன்பது ஆண்டுகாலமாக சிறுபான்மை சமூக மக்களும், எஸ்.சி., எஸ்.டி.,  என்று கூறப்படும் ஒடுக்கப்பட்ட மக்களும் படும் அவதிக்கும், உயிர்ப் பலிக்கும் அளவேயில்லை.

ஒடுக்கப்பட்டோர் படுகொலைகள்!
பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் கொல்லப்பட்டது கொஞ்சமா நஞ்சமா? மீசை வைத்திருந்தார், குதிரைமேல் வந்தார், திருவிழாவை வேடிக்கை பார்க்க வந்தார் என்றெல்லாம் கூடக் குற்றஞ்சாட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் அடித்துக் கொல்லப்படவில்லையா? இதன் பின்னணியில் சங் பரிவார்கள் இல்லையா?
இவற்றிற்கெல்லாம் உச்சக்கட்ட சாட்சியாக மணிப்பூர் கொழுந்துவிட்டு எரிகிறது.

சமூகநீதியைக் கவனிக்கவேண்டாமா?
மைதேயி சமூகத்தவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து குகி பழங்குடி மக்கள் மே 3 ஆம் தேதி பேரணி நடத்தினார்கள். இதன் பின்னணியில் உள்ள சமூகநீதியை நியாயக் கண்கொண்டு பார்க்க வேண்டாமா? 

வந்தேறிகள் என்று வெறியைக் கிளப்புவதா?
பெரும்பான்மை மக்களாக இருக்கக்கூடிய மைதேயி சமூகத்தைச் சார்ந்தவர்கள் சிறுபான்மையாக இருக்கக்கூடிய பழங்குடியினரை வீடு புகுந்து தாக்கியும், படுகொலை செய்தும், வீடுகளை இடித்தும், தீ வைத்தும் கோர தாண்டவம் ஆடியுள்ளனர். வந்தேறிகள் என்று வெறியைத் தூண்டுகிறார்கள்.
ஒன்றியத்திலும், மாநிலத்திலும் இரட்டை என்ஜின் ஆட்சியின் (பிரதமர் திருவாய் மலர்ந்த பி.ஜே.பி. ஆட்சி) யோக்கியதை இதுதானா?
80 நாள்கள் இந்தக் கொடூரம் நடந்தும், பிரதமராக இருக்கக் கூடியவர் தலையிடவில்லை - திருவாய் மலரவில்லை. இராணுவத்தை அனுப்பி கட்டுக்குள் கொண்டுவரவில்லை என்றால், நாகரிகமான நாட்டில்தான் வாழ்கிறோமா? நாகரிகமான ஆட்சிதான் நம்மை ஆளுகிறதா என்ற கேள்விதான் எழுகிறது.
மே 4 ஆம் தேதி நடந்த கொடுமை குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், மே 14 ஆம் தேதி ஒன்றிய அரசுக்கும், தேசிய மகளிர் உரிமை ஆணையத்திற்கும் புகார் அளிக்கப்பட்டும், முதல் 15 நாள்கள் காவல் நிலையங்களில், முதல் தகவல் அறிக்கைகூட (எஃப்.அய்.ஆர்.) பதிவு செய்யப்படவில்லை என்பது எத்தகைய கொடூரம்! நிர்வாகச் சீர்கேடு!!
மணிப்பூர் கலவரம் உலக அரங்கில் இந்தியாவைத் தலைக்குனிய செய்துவிட்டது.

நாட்டையே உலுக்கிய வீடியோ!
எந்த அளவுக்குப் போயிருக்கிறது என்பதற்கு 19.7.2023 அன்று வெளிவந்த வீடியோ காட்சி நாட்டையே உலுக்கிவிட்டது.
மணிப்பூரில் வெறிபிடித்த ஒரு கும்பலால் இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வு அது. பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் காலிகளிடம் எங்களைப் பிடித்துக் கொடுத்தவர்கள் காவல்துறையினர்தான் என்று கண்ணீரும், கம்பலையுமாகக் கூறியிருப்பது நம் உயிர் ஓட்டத்தையே உறைய வைக்கிறது. உச்சநீதிமன்றமும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் விவாதிக்கவேண்டாமா?
நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதம் நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தால், அதற்கு அனுமதி மறுப்பாம் - நாடாளுமன்றம் ஒத்தி வைப்பாம்! இது என்ன ஜனநாயகம்?

வாக்காளர்களே உங்கள் கடமை என்ன?
நெஞ்சம் பொறுப்பதில்லையே - இனியும் ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சி தொடர - மீண்டும் அதிகாரத்தில் அமர கிஞ்சிற்றும் உரிமை இல்லை - தகுதியில்லை.
நாகரிகமும், மனித உரிமையும், ஜனநாயகமும், மதச்சார்பின்மையும், சமூகநீதியும் உயிர்ப் பிழைக்க ‘‘இந்திய’’ மக்களே ஒரே குரலில் எழுவீர்! வாக்குச் சீட்டால் பாசிசத்திற்கு மரணவோலை எழுதுவீர்! எழுதுவீர்!!

கி.வீரமணி,
தலைவர், 
திராவிடர் கழகம்
21.7.2023