வெள்ளி, 31 டிசம்பர், 2021

2021ஆம் ஆண்டு - சில முக்கிய நிகழ்வுகள்

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!


நகரும் ஆண்டில் நலிவுகள் ஏராளம்!

வரும் புத்தாண்டை வலியில்லா வளமை தரும் புத்தாண்டாக ஆக்க  பகுத்தறிவால் பயணிப்போம்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

31.12.2021

செவ்வாய், 14 டிசம்பர், 2021

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டமும் மனுதர்மப் புத்தியும்

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி விவகாரம் விளக்கம் கோருகிறது பெண்கள் ஆணையம்


புதுடில்லி. டிச. 14 பெண்கள் விடுதலை குறித்து கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்வியை நீக்கு வதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் பாடத் திட்டத்தில் சேர்க்கப் பட்ட விவகாரம் குறித்து விளக் கம் கேட்டு அறிக்கை அனுப்பி யது டில்லி மகளிர் ஆணையம்.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாண வர்களுக்கான முதல் பருவத் தேர்வில் கடந்த 11-ஆம் தேதி நடை பெற்ற ஆங்கிலத் தேர்வுக்கான வினாத்தாளில், பெண்கள் தங்கள் கணவருக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற பொருளில் கேள்வி இடம்பெற்றது.

மேலும், மற்றொரு கேள் வியில்,  கணவனின் பேச்சை கேட்டால் தான் குழந்தைகளின் கீழ்படிதலை தாயால் பெற முடியும் என்றும்,  குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகா ரத்தை பெண் விடுதலை அழித்து விடுகிறது என்பது போன்ற கருத்துகள் இடம்பெற்றிருந்தது.

பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் விதமாக அமைந் துள்ள இந்த பத்தி வினா கேள்வி களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரம் இன்று நாடாளு மன்றத்திலும் எதிரொலித்தது.

இதுகுறித்து மக்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிபிஎஸ்இ தேர்வில் பெண்கள் மீதான வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கேள்வி இடம் பெற்றதற்கு “மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத் தினார். மேலும் இந்த கேள்வி களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில், சர்ச்சைக் குரிய இந்த கேள்விகளை கேள்வித்தாளில் இருந்து நீக்குவதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளதோடு, அந்த கேள்விக்கு அனைத்து மாணவர் களுக்கும் முழு மதிப்பின் வழங் கப்படும் என்று தெரிவித் துள்ளது. இந்த நிலையில் இந்த பிற் போக்குத்தனமான கேள்வி இடம் பெற்றது தொடர்பாக டில்லி மகளீர் ஆணையம் சிபிஎஸ்இ நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பி உள்ளது

திராவிடர் கழகத்தின்மீது தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் திரு.அண்ணாமலை டுவிட்டரில் அவதூறுப் பிரச்சாரம்!


காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் திரு.அண்ணாமலை டுவிட்டரில் - கட்சியின் அதிகாரப்பூர்வமான முறையில் நேற்று (13.12.2021) பிற்பகல் 12.48 மணிக்குக் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் விபத்தில் மரணித்தது குறித்து. திராவிடர் கழகத்தின் சார்பில் இரங்கலையும், வீர வணக்கத்தையும் 'விடுதலை' நாளேட்டில் 8.12.2021 அன்று வெளியிட்டுள்ளோம்.

உண்மை இவ்வாறு இருக்க, 'திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அதிகாரப்பூர்வமான துணை அமைப்புகள் ஜெனரல் பிபின் ராவத் இறந்தது சரிதான் என்று கொண்டாடி இருப்பதாக' தமிழ்நாடு பா.ஜ.க.வின் தலைவர் திரு.அண்ணாமலை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

எங்கு, எப்பொழுது திராவிடர் கழகம் பிபின் ராவத் இறந்தது சரிதான் என்று கொண்டாடியது என்று விளக்கப்படவில்லை என்பதிலிருந்தே, இது பொய்யானது என்பது வெளிப்படை.

திராவிடர் கழகத்தின்மீது பொய்யான வகையில் அபாண்டமாக அவதூறு பரப்பி, மக்கள் மத்தியில் திராவிடர் கழகத்தைப்பற்றி மோசமான அபிப்ராயம் உருவாகும் வகையில் செயல்பட்டுள்ளார்.

தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டு, 75 ஆண்டுகளுக்குமேல் - மக்கள் மத்தியில் நிலவும் தீண்டாமை, ஜாதி, மூடநம்பிக்கை இவற்றை எதிர்த்தும், சமூகநீதி, பெண்ணுரிமை, மதச்சார்பற்ற தன்மை, பகுத்தறிவுப் பிரச்சாரத்தையும், செயல் பாடுகளையும் மேற்கொண்டுவரும் அரசியல் சார்பில்லாத ஒரு சமூக சீர்திருத்த இயக்கத்தின்மீது அவதூறு பரப்பியுள்ள தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் திரு.அண்ணாமலைமீது சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசையும், குறிப்பாகக் காவல்துறையையும் கேட்டுக்கொள் கிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

14.12.2021

----++++----+++-----+-+++--++++++------+++--

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைமீது காவல்துறை ஆணையரிடம் கழகத்தின் சார்பில் புகார்

திராவிடர் கழகத்தின்மீது தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவதூறுப் பிரச்சாரம் குறித்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் துறை ஆணையரிடம் கழகத்தின் சார்பில் இன்று  (14.12.2021) கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் புகார் கொடுத்துள்ளார்.

வியாழன், 9 டிசம்பர், 2021

புலம்பெயர் தமிழர் நலனுக்காக புதிய இணையதளம்

புதன், 8 டிசம்பர், 2021

ராஜீவ் காந்தி கொலை - ஏழு ஆயுள் கைதிகள் பிரச்சினை! இனியும் தாமதம் செய்யாமல் ஆளுநர் விடுதலை செய்யட்டும்!

செவ்வாய், 7 டிசம்பர், 2021

பி.எப். காப்பீடு

https://lm.facebook.com/l.php?u=https%3A%2F%2Ftamil.gizbot.com%2Fnews%2Fpf-rule-change-now-your-epf-account-comes-with-rs-7-lakh-free-benefits-031609.html&h=AT2078R4jLBhSMcmTb5CfviGMGjhBFLqfXHS5lTn41hcDxcjVnqHV56H5z_MOjLgpCQTwd1Ppw2UGCH2jADxgWjQEIhwvhr9VDgZ37eNfh2MEy3dfFNqowjOHshcv0KFG_RV