சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

தமிழர் தலைவரை சந்தித்தார் திருச்செந்தூர் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தலைமை ஆசிரியர்

 

திருச்செந்தூர் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தலைமை ஆசிரியர் மீ.பாலமுருகன்பழனி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தலைமை ஆசிரியர் இரா.முருகானந்தம்தங்களிடம் பயின்ற மாணவர்கள் பெ.கணேசன்தேசண்முகம்மா.சிவஞானப் பிரகாஷ் ஆகியோருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். (பெரியார் திடல், 17-08-2021)

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

தமிழ்நாடு முதலமைச்சருடன் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பினர் சந்திப்பு

 

சென்னைஆக.10- அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் நல சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி வெளி யிட்டுள்ள செய்திக்  குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

நமது அகில இந்திய பிற்படுத்தப் பட்ட பணியாளர் நல சங்க கூட்ட மைப்பின் நிர்வாகிகள் நேற்று (9.8.2021) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்தோம்.

மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில்பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில்இப்பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கச் செய்ததுடன்,  நீதிமன்றத்திலும் திறம் பட எடுத்துரைத்துஓபிசி பிரிவினர்க்கு 27 இட ஒதுக்கீடு கிடைத்திட வழிவகை செய்தமைக்குநமது அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்ட மைப்பின் சார்பில்  முதலமைச்சர் அவர் களுக்கு நமது அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பணியாளர் நல சங்க கூட்டமைப்பின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டோம்.

ஒன்றிய அரசில் பிற்படுத்தப்பட் டோர்க்கான முக்கிய கோரிக்கை களை நிறைவேற்றிட ஒன்றிய அரசை வலியுறுத்திட வேண்டும் என   முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தோம்.

1.  2021இல் ஜாதிவாரி கணக்கெ டுப்பு ஒன்றிய அரசு நடத்திட வேண்டும்.

2. இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பின ரில் கிரிமிலேயர் பிரிவினர் குறித்து ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்திட வேண்டும்

3. அரசுடைமையாக்கப்பட்ட ஒன்றிய அரசு வங்கிகளில் தமிழ்நாடு இளைஞர்க ளுக்குப் பறி போகும் வேலை வாய்ப்புகள்.

4. அப்ரண்டிஸ் பயிற்சிக்கான நியமனத்தில் ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு முறையாக நிறைவேற்றப்படவில்லை.

5. நாகையில் சிபிசிஎல் நிறுவனம் 50 சதவீத தனியார் முதலீட்டில் துவக்கப்பட் டாலும்இட ஒதுக்கீடும்உள்ளூர் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.

வெள்ளி, 13 மார்ச், 2020

ஜெர்மன் நாட்டிலிருந்து பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

ஜெர்மன் நாட்டு கொலோன் பல்கலைக்  கழகத்தைச் சார்ந்த பி.எச்.டி. ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர் ஸ்வென் வொர்ட்மென் (பெரியார் பன்னாட்டு மய்யம், ஜெர்மனி கிளை) இன்று (13.3.2020) சென்னை - பெரியார் திடலில் தமிழர் தலைவரைச் சந்தித்து உரையாடினர். தந்தை பெரியார் பற்றியும் அவர் நிறுவிய இயக்கமான திராவிடர் கழகம் பற்றியும்,  அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நூற்றாண்டு பற்றியும் சுருக்கமாக, ஆழமாக தமிழர் தலைவர் எடுத்துரைத்தார். வருகை தந்த மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார்.  தமிழர் தலைவரைச் சந்தித்த குழுவில் ஸ்வென் வொர்ட்மென் உடன் பேராசிரியை குல்கார்தி பார்போசா, பி.எச்.டி ஆராய்ச்சி மாணவர்கள் ரெனாபி தாவலோஸ், பெரினா யோகராஜா, டொமினிக் க்ரோப் அடங்குவர். பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடம், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் நூல் நிலையம் ஆகியவற்றை குழுவினர் சுற்றிப் பார்த்தனர்.

 - விடுதலை நாளேடு 13 3 20