சனி, 31 டிசம்பர், 2022

‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ 50 ஆம் ஆண்டு மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழா

சனி, 24 டிசம்பர், 2022

மீண்டும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை அமைக்க திராவிடர் கழகம் வேண்டுகோள்!அதற்காக தோழமைக் கட்சிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தவும் தயார்!

ஒப்புதல் வாக்குமூலம் ராமர் சேது பாலம் பற்றிய உறுதியான ஆதாரம் இல்லை!

தந்தை பெரியார் 49ஆம் ஆண்டு நினைவு நாள் மரியாதை - (24.12.2022)

பகுத்தறிவுப் பகலவனின் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர், அமைச்சர் கே.என்.நேரு மரியாதை

வியாழன், 22 டிசம்பர், 2022

எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கைப் பிரகடன நாள் கருத்தரங்கம்

தமிழக மூதறிஞர் குழு செயற்குழுக் கூட்டம் : தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது - புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு


தமிழக மூதறிஞர் குழுவின் (The Tamil Nadu Intellectuals' Forum)   செயற்குழுக் கூட்டம் 21.12.2022 அன்று சென்னை பெரியார் திடலில் நண்பகல் 12 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

செயற்குழுக் கூட்டத்திற்கு தமிழக மூதறிஞர் குழுவின் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை வகித்தார். கூட்டத்திற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நடைபெற்ற கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர். தலைவர் முனைவர் சு.தேவதாஸ், துணைத் தலைவர்கள்: நீதிபதி இரா. பரஞ்ஜோதி, வேண்மாள் நன்னன், செயலாளர்கள்: மா.செல்வராஜ், ஆ. வெங்கடேசன், துணைச் செயலாளர் பா. பன்னீர்செல்வம், பொருளாளர் முனைவர் த.கு.திவாகரன், செயற்குழு உறுப்பினர்கள்: எஸ். இராமநாதன், ந. ஜெயராஜ், ஆர். மாணிக்கம். செயற்குழு உறுப்பினர்கள் டிசம்பர் மாத இறுதியில் கூடி, தமிழக மூதறிஞர் குழுவின் வருங்காலச் செயல்பாடுகள் பற்றி கலந்துரையாடல் முடிவு செய்யப்பட்டது.

படையெடுப்புகளில் மிக ஆபத்தானது பண்பாட்டுப் படையெடுப்பே! நமது முதலமைச்சர் வழிகாட்டியுள்ளார்-பின்பற்ற என்ன தயக்கம்?

திங்கள், 19 டிசம்பர், 2022

வாழ்க இனமானப் பேராசிரியரின் தொண்டு!

கல்வி வளாகத்துக்கு அன்பழகனார் பெயர் சூட்டு விழா பேராசிரியர் க. அன்பழகனார் நூற்றாண்டு நினைவு வளைவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

இனமானப் பேராசிரியர் க.அன்பழகனாரின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்

நூற்றாண்டு நிறைவு விழாவில் பேராசிரியரின் படம் திறப்பு!

இனமானப் பேராசிரியர் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் புகழாரம்!

புதன், 14 டிசம்பர், 2022

அமைச்சராகப் பொறுப்பேற்ற மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தாய்க்கழகத்தின் பாராட்டும் - வாழ்த்தும்!

தமிழ்நாடு அமைச்சராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் தந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மரியாதை

வியாழன், 8 டிசம்பர், 2022

அட, அண்டப் புளுகு - அவுட்டுத் திரி ‘தினமலரே!'

சனி, 3 டிசம்பர், 2022

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி பிறந்த நாள் வாழ்த்து!


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (2.12.2022) தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90 ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, அவருடைய வாழ்விணையர் மோகனா அம்மையாருக்கும் பொன்னாடை அணிவித்தார். நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், முரசொலி செல்வம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியருக்குப் பொன்னாடை போர்த்தி பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். உடன்  திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் (சென்னை, 2.12.2022).

-------++++---++-+---++ 

தாய்க் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா நீடு வாழ்க!

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி!


நேரில் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார் (சென்னை, 2.12.2022)

சென்னை, டிச.2- திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க.தலைவர் முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் "தாய்க் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா நீடு வாழ்க!" என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-

'திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தர் என்ற பேரறிஞர் அண்ணாவின் புகழுரைக்கேற்ப, 10 வயது முதல் தந்தை பெரியாரின் இலட்சியத்தை முழங்கத் தொடங்கி, தொண்டறத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு, இளை யோருக்கு நிகராக சமூகநீதிப் போர்க்களத்தில் சளைக்காமல் போராடி, பகுத்தறிவு இனமான உணர்வினை ஊட்டி வரும் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களுக்கு அகவை 90 என்பதில் அகம் மிக மகிழ்கிறேன். ‘திராவிட மாடல்' அரசின் சமூகநீதிக் கொள்கை சார்ந்த அனைத்துத் திட்டங்களுக்கும், சட்டப் போராட்டங்களுக்கும் உறுதுணையாய் வழிகாட்டியாய்த் திகழும் ஆசிரியர் அய்யா அவர்கள் நூறாண்டு கடந்தும் நலமோடு வாழ்ந்திட நெஞ்சார வாழ்த்துகிறேன்.

-இவ்வாறு திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 90ஆம் ஆண்டு பிறந்த நாள் தலைவர்கள் வாழ்த்து (சென்னை கலைவாணர் அரங்கம் - 2.12.2022)


தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 90ஆம் ஆண்டு பிறந்த நாளன்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 'திராவிட இயக்கப் போர்வாள்' மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் 'எழுச்சித் தமிழர்' தொல். திருமாவளவன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத் தொடர்பு செயலாளர் கோபண்ணா, இந்திய கம்யூனிஸ்ட்   (மார்க்சிஸ்ட்) கட்சி மாநிலச் செயலாளர் 

கே. பாலகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்  ஆர். பிரியா, ஆகியோர் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  அவர்களுக்கு பொன்னாடை  அணிவித்தும் புத்தகங்கள் வழங்கியும்  வாழ்த்துகளை  தெரிவித்தனர்.

தமிழ்நாட்டின் மூத்த தலைவர் ஆசிரியர் அய்யா வீரமணி மேலும் நீண்ட காலம் வாழ்ந்து எங்களுக்கும், நாட்டுக்கும் வழிகாட்ட வேண்டும். பல்வேறு கட்சித் தலைவர்களின் வாழ்த்தும் பாராட்டும்!