புதன், 28 ஜூன், 2023

எமது உளமார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!- ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை


3

‘‘90 இல் 80'' என்று மிகக் குறுகிய காலத்தில் அறிவித்து, என்னை ஒப்புக்கொள்ளச் செய்து, வெகுசிறப்புடன் நேற்று (27.6.2023) சென்னை சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் மாலை 5.30 மணிக்குத் தொடங்கி இரவு 9.15 மணிவரை நடத்தப் பெற்ற நிகழ்ச்சி மனதளவில் எனக்கொரு புத்தாக்க இளமையைத் தந்த கொள்கை வெற்றி விழாவின் வெளிச்சம் ஆகும்!

சற்றும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி! நமது ‘திராவிட மாடல்' ஆட்சியின் மாண்புமிகு மானமிகு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தமது வாழ்த்துச் செய்தியை, தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தோழர் திருச்சி என்.சிவா மூலம் அனுப்பி, என்னை உணர்ச்சிவயப்பட வைத்த நமது முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாசம் கலந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

அந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊக்க உரை ஆற்றிய கவிஞர் கலி.பூங்குன்றன், திருச்சி என்.சிவா எம்.பி., எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன், சகோதரர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்,  கழகப் பொருளாளர் வீ.குமரேசன், வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் புத்தகம் தயாரித்து, விழா ஏற்பாடுகளிலும் கடுமையாக உழைப்பைத் தந்து விழா வெற்றிக்குக் காரணமான அத்துணைத் தோழர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றி!

பாசத்துடன் கைகூப்புடன்

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை 

28.6.2023 

தமிழர் தலைவரின் 90 வயதில் 80 ஆண்டு பொது வாழ்வு - பாராட்டு விழா


திராவிட இயக்கத்தின் சிப்பாய்கள் நாங்கள்: திருச்சி சிவா

90 வயதிலும்அவர் நடை, பேச்சு, செயல் குறையவில்லை:இரா.முத்தரசன்

பெரியார் மிசன் (Periyar Mission) உருவாக்கியவர் ஆசிரியர்: தொல்.திருமாவளவன்

16 வயதில் எடுத்த முடிவு உலக அதிசயம்: கலி.பூங்குன்றன்


22

சென்னை, ஜூன் 28- திராவிட இயக்க வரலாற்றில் மட்டுமின்றி உலக வரலாற்றிலும்கூட 90 வயதில் 80 ஆண்டுகள் பொது வாழ்க்கை என்ற விகிதாச்சாரத்தை பெற்ற ஒரே தலைவராக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இருக்கிறார். அந்த வரலாற்று சாதனை நாள் "90இல் 80 அவர்தான் வீரமணி!" என்ற சிறப்பு நிகழ்வாக சென்னை சர் பிட்டி தியாகராயர் அரங்கில் 27.06.2023 அன்று மாலை நடைபெற்றது.

80 ஆண்டுகாலம் ஒரே இயக்கம்! 

ஒரே தலைவர்!

நிகழ்வில் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் அவர் கள் வரவேற்புரை ஆற்றினார்.

அவர், கடலூர் மாவட்டத்தில் செட்டிக் கோயில் திடலில் ஒன்பது வயது நிரம்பிய சிறு பாலகனாக பொதுக்கூட்ட மேடையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேசத் தொடங்கிய நிகழ்வு என்பது அறிஞர் அண்ணாவின் "திராவிட நாடு" ஏட்டுக்கு நிதி வழங்கும் நிகழ்வு என்றும், அந்த வகையில் அவர் பேசத் தொடங்கிய முதல் கூட்டமே கொள்கை சார்ந்த கூட்டமாக இருந்தது என்றார். அன்று தொடங்கி இன்று வரை 80 ஆண்டுகாலமாக 'ஒரே இயக்கம்; ஒரே தலைவர்' என்ற சீரிய நோக்கத்தோடு பயணிக்கும் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியராக இருக்கிறார் என்றார். ஆசிரியரின் ஆசிரியர் திராவிட மணி அவர்கள் ஆசிரியர் அவர்களுக்கு "வீரமணி" என்று பெயர் சூட்டியது எவ்வளவு பொருத்தம் என்பதை அறிஞர் அண்ணாவின் கலிங்கராணி புதினத்தை எடுத்துரைத்து, நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார்.

16 வயதில் எடுத்த முடிவு உலக அதிசயம்!

வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்நிகழ்வுக்கு கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையேற்று தலைமை உரையாற்றினார். 

அவரது உரையில்: நீதிக்கட்சியின் தந்தையாக போற்றப் படும் சர் பிட்டி தியாகராயர் அவர்களின் பெயர் தாங்கிய அரங்கத்தில், அந்த இயக்கத்தின் வழிவந்த தலைவருக்கு நிகழ்ச்சி நடத்துவது என்பது வரலாற்று பொருத்தமான ஒன்று என்றும், 1949 இல் திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்தது. அப்போது ஆசிரியரை இந்த இயக்கத்திற்கு கொண்டு வந்த அவர்களின் மூத்த அண்ணன் கோவிந்தராசன் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சென்றார். அவர் மட்டுமின்றி, அன்றைக்கு இருந்த மூத்தவர் கள் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குச் சென்றனர். அந்த நிலையில் 16 வயதான ஒருவருக்கு - உளவியல் ரீதியாக தன்னை இயக்கத்திற்கு அழைத்து வந்தவர்கள் எங்கு செல்கிறார்களோ அங்கு தான் செல்வார். ஆனால் "திராவிடர் கழகம் தான் எனது இயக்கம்; எனது தலைவர் தந்தை பெரியார் தான்" என்று 16 வயதில் ஆசிரியர் எடுத்த முடிவு உலக அதிசயம் என்றார். 

2024 ஆம் ஆண்டு வந்தால் 50 ஆண்டுகள் அவரோடு பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்பதே தன்னுடைய வாழ்நாள் பெருமை என்றும், ‘விடுதலை' ஆசிரியராக 61 ஆண்டுகள் என்ற வரலாற்று சாதனை நம்முடைய ஆசிரி யரை தவிர யாருக்கும் இல்லை என்றார். அந்த சாதனை நிகழ்ந்த போது ஆசிரியரின் வயது 29 என்றும், நீங்கள் ‘விடுதலை' ஆசிரியராக பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் மட்டுமே ‘விடுதலை'யை நாளேடாக நடத்துகிறேன் என்று தந்தை பெரியார் சொன்னதையும், அதன் பிறகு நடந்த வரலாற்று சம்பவங்களை எல்லாம் எடுத்துரைத்து, இன்று ‘விடுதலை' தமிழர்களின் போர்வாளாக, நாளேடாக வருகிறது என்றால் அதற்கான அடித்தளம், காரணம் ஆசிரியர் என் பதை தமிழர்கள் நன்றி உணர்ச்சியோடு கூற கடமைப்பட்டி ருக்கிறோம் என்றார். அதே நேரத்தில் ஆசிரியர் விடுதலை ஆசிரியராக பொறுப்பேற்ற பிறகு "இது போல் ஒருவர் முன்பு வந்தார், இனிமேல் வரக்கூடும் என்று உவமை சொல்ல முடியாத ஒரு பொறுப்பை வீரமணி ஏற்றிருக்கிறார்" என்று பெரியார் சொன்னதை கூறி,இந்தளவிற்கு யாரையும் அய்யா பாராட்டியதாக தெரியவில்லை என்றார். 

‘விடுதலை' பொறுப்பை வீரமணியின் ஏகபோக பொறுப் பில் ஒப்படைக்கிறேன் என்று பெரியார் சொன்னதன் மூலம் ஆசிரியர் மீது அய்யாவுக்கு எவ்வளவு மதிப்பும், எதிர்பார்ப் பும் இருந்தது என்பதை புரிய முடிகிறது என்றார். பெரியாரின் நம்பிக்கையை ஆசிரியர் காப்பாற்றியதை நாம் கண்ணால் பார்க்கிறோம் என்பதற்கான எடுத்துக்காட்டு தான் ‘விடுதலை' இன்றைக்கு எட்டு பக்கங்களில், பல வண்ணங்களில் திருச்சி யில் மற்றொரு பதிப்பு என்ற வகையில் வெளி வருகிறது. அது மட்டுமின்றி, பெரியார் வைத்த நம்பிக்கையை 100க்கு 100 விழுக்காடு மெய்ப்பித்த பெருமை ஆசிரியருக்கு உண்டு என்றார். ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவன் நண்பன் யாரென்று கூறு என்பது பழமொழி! ஆனால் ஒருவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவன் எதிரி யார் என்று சொல் என்பதுதான் பெரியாரின் சிந்தனை. 

அதற்கான எடுத்துக்காட்டாக பழனியில் பார்ப்பனர்கள் மாநாடு நடந்ததையும், அப்போது ஆசிரியர் வீரமணி அவர் களை பார்ப்பனர்கள் பாடைத் தூக்கிச் சென்ற சம்பவத்தை கூறி, அது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, "ஒரு சூத்திரன் வீரமணியை பார்ப்பனர்கள் பாடைத் தூக்கி செல் கிறார்கள் என்றால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று பதில ளித்த ஆசிரியரின் கொள்கை உறுதியையும், பெரியாருக்குப் பிறகு இடஒதுக்கீடு, சமூக நீதி ஆகிய தளங்களில் எவ்வளவு வெற்றி பெற்று இருக்கிறோம் என்பதை சான்றுகளுடன் எடுத்துரைத்தார். ஆசிரியருக்கு முதல் இருதய அறுவை சிகிச்சை நடந்த போது பத்து ஆண்டுகள் மேலும் நீங்கள் வாழலாம் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் 32 ஆண்டுகள் அதற்கு மேல் ஆசிரியர் வாழ்ந்திருக்கிறார் என்றால், அதற்குக் காரணம் மருந்து, மாத்திரை அல்ல; இந்த இயக்கம், மக்கள், தமிழர்கள் என்று மிக உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்தார். இன்று மதவாத பாசிச சக்தியை வீழ்த்த ஒரே மாமருந்து பெரியார் தத்துவம் தான், அந்த தத்துவத்தை கொண்டு சென்று பாசிசத்தை வீழ்த்த நம் தலைவர் வழிகாட்டு கிறார் என்று தனது வாழ்த்தை பதிவு செய்து தம் உரையை நிறைவு செய்தார்.

21

90 வயதிலும் அவர் நடை, 

பேச்சு,செயல் குறையவில்லை!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவரது உரையில்;

கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் தன்னை குடும்ப உறுப்பினர் என்று அழைப்பதற்காகத் தான் பெருமை அடைவதாகவும், தந்தைக்கு விழா எடுத்து அதில் மகன் பேச வந்திருக்கிறேன் என்ற முறையில் தான் இந்த நிகழ்வை தான் எடுத்துக் கொள்வதாகவும் கூறினார். பத்து வயதில் பொது வாழ்வை தொடங்கி 80 ஆண்டுகள் தொடர்ந்து ஏற்றுக் கொண்ட லட்சியத்துக்காக, கொள்கைக்காக, எந்தவித தடு மாற்றமும் இல்லாமல் பயணிக்கும் மூத்த தலைவர்களில் ஒருவராக ஆசிரியர் இருக்கிறார் என்றும், அவருக்கு 90 வயது ஆகிறது என்று நாம் சொன்னால் கோபித்துக் கொள்வார் சைபரைத் தூக்கி பின்னால் போடுங்கள் (09) என்பார். பத்து வயதில் எப்படி இருந்தாரோ அப்படியேதான் இன்றும் இடை யறாது பேசுகிறார், இடையறாது சுற்றுப்பயணம் மேற்கொள் கிறார், இடையறாது எழுதுகிறார். மேலும், அடுத்த தலைமுறை யினரை கொள்கை வழியில் அரசியல்படுத்த பயிற்சி வகுப்பு களை எடுக்க செய்கிறார் என்றார்.

‘விடுதலை'யில் தேவையற்ற செய்திகள் எதுவும் வராது, ஆக்கப்பூர்வமான செய்திகள் மட்டுமே வரும். அந்த வகை யில் அய்யாவின் நம்பிக்கையை ஆசிரியர் எப்படி  காப்பாற்றி இருக்கிறார் என்பதை எடுத்துரைத்தார். தற்போது நடக்கும் அரசியல் சூழல்களை விவரித்து,  சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாவில் கருப்பு உடை அணியக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். 

ஆளுநருக்கு கருப்பு என்றால் அவ்வளவு பயம் என்றும், அதை சுட்டிக்காட்டி ‘விடுதலை'யில் வந்த செய்திகளை கூறி, கண்ணில் இருக்கும் கருவிழி கருப்பு அதற்கு என்ன செய்வார் என்று கேள்வி எழுப்பினார். பல்கலைக்கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில் தவறு இருக்கிறதா அல்லது காவல்துறை என்ன செய்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்றார். தனக்கு தனிப்பட்ட முறையில் ஏதேனும் சந்தேகங் கள், பிரச்சினைகள் இருந்தால் தகுந்த ஆலோசனைகளை ஆசிரியர் வழங்குவார் என்றும், அப்படி ஒரு பிரச்சினையைப் பற்றி ஆசிரியரிடம் சொன்னபோது "திறமையானவங்கள தேடாதீங்க; நம்பகமானவங்கள தேடுங்க" என்றார். அது எவ்வளவு ஆழம் பொதிந்தது என்பதை தான் உணர்ந்ததாக வும், அப்படி பெரியாருக்கு நம்பகமானவர் யார் என்றால் அது ஆசிரியர் வீரமணி தான் என்று பெருமையுடன் எடுத்துரைத்தார். 

அதேபோல் ‘ஜனசக்தி' இதழ் நட்டத்தில் போய்க் கொண்டிருக்கிறது, அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தித்தபோது தனது கட்சியின் பொதுச்செயலாளர் அதனை வார ஏடாக மாற்ற சொன்னபோது தான் தயங்கியதையும், ஆனால் ஆசிரியர் பத்திரிகையை குறித்து கேட்டுவிட்டு, 'துணிச்சலா வாரம்னு முடிவு எடுங்க' என்று சொன்ன உடனேயே தைரியமாக அந்த முடிவெடுத்தேன் என்றும் , அந்த வகையில் எல்லா நிலையிலும் தனக்கு ஆலோசனை வழங்குபவராக ஆசிரியர் இருக்கிறார் என்றார்.

இன்றைக்கு இருக்கக்கூடிய இந்திய அரசியல் சூழலில் வகுப்புவாத, சனாதன, ஆர்.எஸ்.எஸ் சக்திகளை எதிர்த்து நிற்பதில் ஆசிரியர் அனைவரையும் தலைமை தாங்குகிறார் என்றும், எல்லோரையும் இணைப்பது பெரிய செயல்; ஒருங் கிணைப்பாளர் என்ற பணி கடினமான பணி; அதை எல்லோ ராலும் செய்ய முடியாது. அந்தப் பணியில் ஆசிரியரின் பங்களிப்பு மிக முக்கியமானது என்றும் , இந்த அணியில் பெரும்பாலும் அனைவரும் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள். ஆனால் திராவிடர் கழகம் என்பது தேர்தலில் நிற்காத கட்சி. ஆனால் அதன் தலைவர் யார் வெற்றி பெறக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார் என்றும், அதனால் அனைவரையும் சரியாக ஒருங்கிணைக்கிறார் என்றார்.

90 வயதிலும் அவர் நடை ,பேச்சு ,செயல் குறையவில்லை என்றால் அதற்கு காரணம் அவர் ஏற்றுக் கொண்ட தத்துவம், கொள்கை, தலைவர் என்றார்.  சமத்துவ சமுதாயம் காண வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வோடு போராடிக் கொண்டிருக்கும் ஆசிரியர் அவர்கள் எங்களுக்கும், தமிழர் களுக்கும் வழிகாட்ட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கி றேன் என்று கூறிய நிறைவு செய்தார்.

Making of the leader என்று ஆசிரியர் வாழ்வை படமாகவே எடுக்க முடியும்!

கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் 

அ. அருள் மொழி அவர்கள் தனது வாழ்த்துரையில்;  

1943 ஆம் ஆண்டு மேசை மீது மேடை போட்டு 10 வயது சிறுவனாக ஆசிரியர் பேசிய வரலாற்று நாள் இன்று என்றும், இந்த நிகழ்ச்சியை நடத்துவதன் மூலமாக ஏராளமான வரலாற்று செய்திகள் வெளிவரும் என்றார். அய்யாவின் அடிச்சுவட்டில் என்ற வரலாற்றுச் செய்திகள் பொதிந்த நூலை ஆறு தொகுதிகள் ஆசிரியர் எழுதியிருக்கிறார் என்றும் , அதில் நான்கு அய்ந்து பகுதிகளில் மட்டும் தான் ஆசிரியர் அவர்களின் தனி வாழ்வு பற்றிய செய்திகள் இருக்கும் என்றும், அப்படித்தான் அவரின் வாழ்க்கை வரலாறு இந்த நாளில் தொடங்கி இருக்கும் என்றார். இதையெல்லாம் எண்ணிப் பார்த்தால் நம்ப முடியாததாக இருக்கிறது என்றும், முதன்முறையாக அய்யாவை பார்க்க காத்திருந்த ஒரு மாணவனின் மனநிலையை ஆசிரியர் விவரித்த பாங்கையும், கண்களில் எரிச்சலோடும் சோர்வோடும் அய்யாவை பார்க்க ஆசிரியர் காத்திருந்தார் என்றும், அதற்கு காரணம் இர வெல்லாம் தோரணங்கள் கட்டிக்கொண்டு, அவரது ஆசிரியர் திராவிட மணி அவர்கள் பணித்த வேலைகளை எல்லாம் செய்துவிட்டு வந்திருக்கிறார் என்பதை விளக்கி, சிறந்த ஜூனியராக ஆசிரியர் இருந்திருக்கிறார் என்றார். சிறந்த ஜூனியராக இருப்பவர்களால் சிறந்த சீனியராக வர முடியும் அதுபோல் சிறந்த தொண்டராக இருப்பவரால் தான் பின்நாளில் சிறந்த தலைவராக வர முடியும் என்றார்.  

முதல் நிகழ்விலேயே அய்யா செல்லும் ரிக்சா அருகில் நடந்து சென்றவர்கள் படையில் சிறுவனாக ஆசிரியர் இருந்ததையும், அங்கு பாம்பு பாம்பு என்று அனைவரும் சத்தமிட்டு யாரோ ஒருவர் தண்ணீர் பாம்பை தூக்கி வீசியதையும், அதேபோல் ரயில் நிலையத்தில் அய்யா ஏன் ரிக்சாவை திரும்ப சொன்னார் என்ற காரணத்தை சொல்லி, எடுத்து வந்த செருப்பை பத்திரமாக பெட்டிக்குள் வைத்துக் கொண்ட நிகழ்வுகளை எல்லாம் ஆசிரியர் எழுதிய எழுத்துக் களின் மூலம் விவரித்தார். அப்படியாக கொள்கைப் பாடத்தை நேரடியாக ஆசிரியர் எப்படி பயின்றிருக்கிறார் என்பதை விளக்கி, தன்மீது செருப்பு வீசி அவமானப்படுத்தலாம் என்று நினைத்தபோது அது தன் பணிக்கு கிடைத்த வரவேற்பாக பெரியார் எடுத்துக்கொண்ட மனநிலையை 10 வயது சிறுவன் மனதில் எப்படி பதிந்தது என்பதை ஆசிரியர் பதிவு செய்திருக் கிறார் என்றார். 

அதனால் தான் பாரதிதாசன் ஆசிரியரை பற்றி சரியாக பாடினார் என்றும், "இளமை வளமையை விரும்பும் என்பர்  இளமை எளிமையை விரும்பிய புதுமையை வீரமணியிடம் நேரில் கண்டுள்ளேன்" என்ற பாடல் வரிகளை மிக உணர்வு பூர்வமாக கூறினார். அய்யாவிடம் நேரில் இருந்து பழகிய நாள்கள் பொது வாழ்வில் தொல்லைகளையும் எதிர்ப்புகளை யும் எப்படி சந்திக்க வேண்டும் என்ற வகையில் ஆசிரியரை தயார்படுத்தி இருக்கிறது என்றும், ஒரு முழு நீள படம் பார்க்கிறோம் என்றால் 2 மணி நேர படத்தை விட இரண்டு நிமிடத்தில் ‘மேக்கிங் ஆப் த மூவி' (making of the movie) அடிப்படையில் படமாக்கினால் அதை தான் பலரும் ஆர்வமாக பார்ப்பார்கள் என்பதற்கான காரணங்களை கூறி, அதே போல் மேக்கிங் ஆப் த லீடர் (making of the leader) என்று ஆசிரியரின் வாழ்வை படமாகவே எடுக்க முடியும் என்றார். 

23

ஆசிரியரின் வாழ்வில் அவர் சந்தித்த கொள்கைப் பாடங் களை எல்லாம் பல்வேறு நிகழ்வுகளுடன் எடுத்துரைத்தார். குறிப்பாக நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தவிட்டுப் பாளையம் பகுதியில் பாரதிதாசன் அவர்கள் பேசிய நிகழ்வில் நடந்த சம்பவம், கோவை சூலூர் பகுதியில் கூட்டம் ஏற்பாடு செய்கிறோம் என்று சொல்லிவிட்டு கூட்டம் நடத்தாமல் இருந்தபோது உணவுக்குக் கூட வழியில்லாமல் அவர்கள் இருந்த நிலை, அப்போது ஆசிரியர் மற்றவருடன் சேர்ந்து அய்யாவுக்கு எழுதிய கடிதம், அதைத் தொடர்ந்து அய்யா அவர்கள் மணி ஆர்டர் மூலமாக அனுப்பிய ரூ.35, அதுபோல் திருநாகேஸ்வரம் பகுதியில் ஆசிரியர் பேசும்போது எழுந்த எதிர்ப்பு அந்த எதிர்ப்புக்கு பிறகு அவர் சத்தமாக ஆற்றிய உரை, அவர் முதுகில் வந்து விழுந்த சாணி என்று அடுக் கடுக்காக வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்து, "இன்றைக்கு whatsapp மூலமாக, வார்த்தைகள் மூலமாக மலம், சாணி அனைத்தையும் வீசுகிறீர்கள் ஆனால் அதை எல்லாம் நேரடியாக பார்த்து வளர்ந்து தலைவர்கள் தான் இந்த இயக் கத்தை உருவாக்கி இருக்கிறார்கள்" என்றார். ஆனால் அப்படி  விமர்சனங்களையும், ஏளனங்களையும் எழுதக்கூடியவர்கள் வீட்டில் யாராவது ஒருவர்  69 சதவீத இடஒதுக்கீட்டினை பயன்படுத்தி படித்து இருப்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள் என்றார். வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் ஏற்றமும் இறக்கமும் ஏற்படும். அப்படித் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் ஏற்பட்டாலும் "இறுதி வெற்றி நமக்கே" என்ற அந்த உறுதியை ஆசிரியர், அய்யாவிடம் பெற்று இருக்கிறார். அதற்கான சரியான சான்று தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவது குறித்த சமீபத்தில் வந்துள்ள தீர்ப்பு என்றார். இறுதி வெற்றி நமக்கே என்ற இரும்பு மனம் கொண்ட தலை வருக்கு நமது அன்பும் வாழ்த்தும் சொல்வது மட்டுமல்லாமல் அய்யாவின் அடிச்சுவட்டில் நூலை அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலா ளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். (முழு உரை 4ஆம் பக்கம் பார்க்க).

துணிச்சல் மிக்க பேராளுமை தான் ஆசிரியர்!

நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல். திருமா வளவன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவரது உரை யில்; பொதுவாழ்வில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும், பொது வாழ்வில் தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்று அனைவருக்கும் முன்மாதிரியாக வாழும் சாட்சியாக வாழ்ந்து காட்டுபவர்தான் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

சிறுவயதிலேயே பெரியாரின் நம்பிக்கையையும், அறிஞர் அண்ணாவின் பாராட்டையும் பெற்றிருக்கிறார் என்பது மிகப்பெரிய பெருமை என்றும், தமிழ் மண்ணின் அரசியலை புதிய திசைவழிப் போக்கில் செலுத்தியவர்கள் அய்யாவும் அண்ணாவும், அப்படிப்பட்ட ஆளுமைகளே வியந்து பார்த்த பேராளுமையாக பயணிப்பவர் தான் ஆசிரியர் அவர்கள் என்றார். 

தான் சட்டக் கல்லூரியில் படித்த போது ஈழ விடுதலைக்காக ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்ட போது ஆசிரியர் அவர்கள் திடலில் இவர்கள் முன்னால் பேசியதை நினைவுகூர்ந்து , ஈழத்தமிழர் விடுதலைக்கான போராட்டத்தில் விடுதலைப் புலிகள் பிரபாகரனை ஆசிரியர் அவர்கள் ஆதரித்ததையும் பிரபாகரன் அவர்களால் தான் சரியாக இதை கொண்டு செல்ல முடியும் என்று தொலைநோக்கோடு ஆசிரியர் சொன்னது பின்நாளில் அதுதான் நிலைத்து நின்றது என்பதையும் விவரித்து, பிரபாகரன் அவர்கள் பட்டினிப் போராட்டம் நடத் திய போது அப்போது அவரும் அருள்மொழி அவர்களும் சட்ட கல்லூரி மாணவர்கள் என்றும் அப்போது நடந்த வரலாற்று சம்பவங்களை எல்லாம் எடுத்துரைத்து, ஆசிரியர் அவர்கள் தான் பிரபாகரனின் பட்டினிப் போராட்டத்தை பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார் என்பதை விளக்கி, எவ்வளவு நிதானமாக அரசியலை கையாளுகிறார் என்ற பக்குவத்தை ஆசிரியரிடம் இதன் மூலமாக நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். 

எத்தனையோ சர்ச்சைகள் வந்த போதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் அவர்கள் மாறாக எழுதிய போதும் ஒருபோதும் ஆசிரியர் தன்னை விமர்சிக்கவில்லை என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி பெரியாருக்கு எதிராக இருக்கிறது என்று கட்டமைக்கப் பட்டாலும் எப்போதும் ஆசிரியர் தன்னை அரவணைத்து தான் சென்றிருக்கிறார் என்பதையும் உளப்பூர்வமாக எடுத்து ரைத்தார். அப்படிப்பட்ட தொலைநோக்குப் பார்வை, நிதா னம், விமர்சனங்கள் இருந்தாலும் அவதூறு பரப்பாத அணுகு முறையை ஆசிரியரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். 

இந்த களத்தில் திருமாவளவன் நமக்கு தோழமை சக்தி என்று ஆசிரியர் உணர்ந்தார். அரசியல் களத்தில் முத்தமிழறி ஞர் கலைஞர் நமக்கு பாதுகாப்பு அரணாக இருந்தாலும், அரசியலுக்கு அப்பாற்பட்டு நமக்கு பேரரணாக இருப்பது ஆசிரியர்தான் என்றார். எல்லா சூழ்நிலையிலும் உடனடியாக முடிவு எடுப்பவர் ஆசிரியர் என்றும், அப்படித்தான் தருமபுரியில் மிகப்பெரிய அந்த கலவரத்திற்கு மத்தியில் ஜாதி ஒழிப்பு மாநாட்டை கூட்டி அந்த மாநாட்டில் திருமாவளவன் பேசுவார் என்ற துணிச்சல் மிக்க முடிவை எடுத்த துணிச்சல் மிக்க பேராளுமை தான் ஆசிரியர் என்றார். 

ஒட்டுமொத்த தமிழகமும் வேறு நிலையில் இருந்த போது தனிப்பட்ட முறையில் விடுதலை சிறுத்தை கட்சி ஓர் ஆர் பாட்டத்தையோ, பொதுக் கூட்டத்தையோ கூட அங்கு நடத்த வாய்ப்பில்லை. ஆனால் திராவிடர் கழகம் சார்பில் மேடை போட்டு அந்த மேடையில் நான் பேசுவதற்கு பதிலாக தம்பி திருமாவளவன் பேசுவார் என்று கூறினார். அதனால்தான் அவர் பெரியாரின் வாரிசாக இருக்கிறார் என்றார் . அதேபோல் வள்ளலார் பற்றி ஆளுநர் கூறிய கருத்துக்கு எதிராக உடனடியாக முடிவு செய்து சனாதன எதிர்ப்பு மாநாட்டை வருகின்ற ஜூலை 7ஆம் தேதி வடலூரில் ஆசிரியர் அறிவித்திருக்கிறார். இந்த துணிச்சல்தான் தமிழர் தலைவர் என்றார். சமூகநீதிக்கு ஆபத்து வரும் நேரங்களில் எல்லாம் தன்னை போன்றவர்களைத் தட்டி எழுப்பி அந்த களத்திற்கு அழைத்து வருபவர் ஆசிரியர் என்றார். 

அது மட்டும் இன்றி, உடல் நிலையை சரியாக வைத்துக் கொள்வதில் இன்றும் வாழும் எடுத்துக்காட்டாக ஆசிரியரை தவிர யாரும் இல்லை என்றார். நேர்த்தியாக உழைக்கிறார், கடினமாக உழைக்கிறார்; பெரியாருக்குப் பின் இந்த இயக்கம் இருக்காது என்று அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் பெரியாருக்குப் பிறகு கல்வி நிறுவனங்கள் தொடங்கி அனைத்தும் பல்கி பெருகி வளர்ந்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக "பெரியார் உலக மயம்- உலகம் பெரியார் மயம்" என்று உறுதி ஏற்று, அந்த பெரியார் உலகத்தையும் காண இருக்கிறார். 

இவை அனைத்தும் எண்ணிப்பார்க்க முடியாத சாதனை கள். இதுதான் பெரியார் மிஷன் (ஜீமீக்ஷீவீஹ்ணீக்ஷீ னீவீssவீஷீஸீ) என்றார். அம்பேத்கருக்கு இந்திய அளவில் அப்படி ஒரு மிஷன் இல்லை. ஆனால் பெரியாருக்குப் பிறகு அதை எடுத்துச் செல்லும் , மிஷனை  வழிநடத்துபவராக ஆசிரியர் இருக்கிறார் என்றார். தந்தை பெரியாரை நேரடியாக பார்க்காத நமக்கு ஆசிரியர் முன் அமர்ந்திருக்கிறோம், அவர் இருக்கும் மேடையில் பேசுகிறோம் என்ற வாய்ப்பை எண்ணி தான் மகிழ்வதாகவும், ஆசிரியர் அவர்கள் நூற்றாண்டை கடந்தும் வாழ்வார், அவரது நூற்றாண்டு விழாவிலும் திருமாவளவன் பேச வருவார் என்றும், நீங்கள் இருக்கிற துணிச்சலில் தான் நாங்கள் பேசுகிறோம்; உங்களைப் பார்த்து இன்னும் இன்னும் ஊக்கம் பெறுகிறோம்; உங்கள் கனவை நினைவாக்க மூன்றாம் குழல் துப்பாக்கியாக விடுதலை  சிறுத்தைகளும் பணியாற்றுவோம் என்று சூளுரைத்து நிறைவு செய்தார்.

என்றைக்கும் திராவிடர் 

இயக்கத்தின் சிப்பாய்கள்!

வாழ்த்துரையின் நிறைவாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி என்.சிவா அவர்கள் வாழ்த்துரை வழங் கினார். முதலமைச்சர் அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியை முழுவதுமாக வாசித்து தனது உரையை தொடங்கினார். 

உள்ளத்திற்கு உவகை தரும் இனிய நாள் இது என்றும், இதைத்தவிர பெருமை தரும் நிகழ்வு வேறு எதுவும் இருக்க முடியாது என்றார். தான் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி யில் படித்தபோது அங்கு நடந்த வரலாற்று சம்பவங்களையும், தந்தை பெரியார், ஆசிரியர், கலைஞர் போன்றவர்கள் அங்கு வந்து உரையாற்றியதையும் மாலை நேரத்தில் விடுதியின் மாடியில் திராவிடர் இயக்க பேராளுமைகள் எல்லாம் வந்து உரையாற்றிய செய்திகளையும் பகிர்ந்து, அந்தக் கல்லூரி எப்படி திராவிடர் இயக்க கொள்கையில் தீவிரமாக இருந்தது என்று விளக்கி, எம்.ஜி.ஆர். பிரிந்து சென்ற போது அந்த கல்லூரி மாணவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் எப்படி நிலைத்து நின்றார்கள் என்பதை விவரித்தார். மாணவனாக இருந்த போது தான் மிசாவில் கைதான செய்தியை எடுத்துரைத்து, இதைவிட வேறு பேறு தனக்கு என்னவாக இருக்க முடியும் என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்பது தங்களுக்குக் கிடைத் திருக்கக் கூடிய ஒரு வாய்ப்பு தான். ஆனால், என்றைக்கும் இந்த திராவிட இயக்கத்தின் சிப்பாய்களாக இருக்கிறோம் என்பதே எங்களுக்கு பெருமை என்றார். மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் பெரியாரின் சிலை கூட அச்சம் தருகிறது என்றால் அவரின் பாசறை அப்படிப்பட்டது. பெரியாரிடம் பாடம் கற்றவர்கள் பலர்; பெரியாரிடம் பாடம் கற்று வெளியில் சென்றவர்கள் பலர். ஆனால் அவரின் நம்பிக்கையை பெற்று, அதே வழியில் பயணித்தவர்கள் மூவர்தான். அவர்கள்தான் பேரறிஞர் அண்ணா, முத்தமி ழறிஞர் கலைஞர், ஆசிரியர் வீரமணி ஆகியோர் என்றார். 

நீங்கள் தான் எங்களுக்கு எல்லாம்!

இந்த நாளில் உங்களுக்கு நிறைய பரிசுகள் தர வேண்டும். நாங்கள் போர்த்திய பொன்னாடைகள் எல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பது எங்களுக்குத் தெரியும் ஆனால் அதைவிட ஒரு பரிசை உங்களுக்கு தருகிறோம். பெரியார் பல்கலைக்கழகத்தில் நேற்று வந்த சுற்றறிக்கையும், அதனைத் தொடர்ந்து இன்றைக்கு கருப்புச் சட்டைக்கு தடை இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.

இதுதான் ‘திராவிட மாடல்'. இதுதான் இன்று உங்களுக்கு நாங்கள் தரும் பரிசு. இதைவிட எது உங்களுக்கு மகிழ்ச்சியை தந்துவிடப் போகிறது என்றார். சத்தமே இல்லாமல் பெரும் புரட்சிகளை நமது முதல்வர் செய்து வருகிறார் என்றும், அதில் ஒரு பகுதிதான் ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்றிய போது எந்தவித உணர்ச்சியும் காட்டிக் கொள்ளாமல், அவர் பேசி முடித்த பிறகு அவை குறிப்பில் அது எதுவும் இடம் பெறாது என்று கூறி, அவர் வெளிநடப்பு செய்த போது சிரித்த அந்த சிரிப்பு அது எந்த வகையானது என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. 

ஆளுநரின் அதிகாரம் கொண்டு கருப்புச் சட்டைக்கு தடை விதித்தார். ஆனால் நான் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல மைச்சர் என்ற முறையில் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி இன்றைக்கு அந்த சுற்றறிக்கையை முதலமைச்சர் நீக்கி இருக் கிறார் என்றும், ஆசிரியர் எப்போது சென்றாலும் முதலமைச்சர் அவரை பார்ப்பார்; ஆசிரியர் எப்போது பேசினாலும் அவர் பேசுவார். காரணம் "நீங்கள் தான் எங்களுக்கு எல்லாம்" என்று உணர்வுபூர்வமாக கர ஒலிகளுக்கு மத்தியில் எடுத்துரைத்தார். 

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரம் பற்றி தான் பேசியதை வந்த உடனே எடுத்துக்கூறி, தனது மகிழ்வை வெளிப்படுத்தி வலிமையாக ,சுருக்கமாக அதே நேரத்தில் சுருக்கென்று சொன்னீர்கள் என்றார் ஆசிரியர். அதுதானே நம் பாணி. ஆசிரியரைப் பற்றி நினைக்கிற போது தனக்கு ஆச்சரியமாக இருக்கும் செய்திகளை பட்டியலிட்டு, 

10 வயதில் மேடையில் பேசியிருக்கிறார்;

11 வயதில் திருமணத்திற்கு வாழ்த்துரை வழங்கி இருக்கிறார்;

12 வயதில் பொதுக் கூட்டத்திற்கு தலைமை ஏற்று இருக்கிறார்;

13 வயதில் மாநாட்டில் உரையாற்றி இருக்கிறார்;

27 வயதில் கழகத்தின் பொதுச்செயலாளர்;

29 வயதில் விடுதலை ஆசிரியர்;

45 வயதில் திராவிடர் கழகத்தின் தலைவர் 

என்றால் அரசியல் கட்சிகளில் 50 ஆண்டுகள் ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் கலைஞர் அவர்கள், ஒரு சமூக இயக்கத்திற்கு 45 ஆண்டு காலம் ஒரே தலைவராக இருந்து வருபவர் நமது ஆசிரியர் என்றார். இத்தனையையும் சிந்திக்கின்ற போது அந்த சிறு வயதில் இவரை அங்கீகரித்த இந்த இயக்கம் எவ்வளவு போற்றத்தக்கது என்பதை எடுத்து ரைத்தார்.  இத்தனைப் பணிகளுக்கு மத்தியிலும் கல்வியிலும் அவர் தளர்ச்சி அடையவில்லை என்பதை பெருமிதத்தோடு, ஆசிரியர் பெற்ற பட்டங்களை எல்லாம் விளக்கிப் பேசினார். விடுதலைக்கு ஆசிரியராக தமிழர் தலைவர் பொறுப்பேற்ற போது 'வரவேற்கிறேன்' என்று அய்யா எழுதிய அறிக்கை யையும், 1956 இல் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் பொதுச் செயலாளராக நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை 'தம்பி வா தலைமை ஏற்க வா' என்று அண்ணா அழைத்ததையும் பொருத்திப் பார்த்து இந்தப் பாங்கு பெரியார், அண்ணா, கலைஞர், ஆசிரியர் என்று நமக்கு ஊக்கமளிக்க கூடியதாக இருக்கிறது என்றார். வீரமிக்க தலைவர்களாக நீங்கள் இருந் தீர்கள் அதனால் நாங்கள் வீரமாக இருக்கிறோம் என்று கலை ஞர் எழுதிய வரிகளை மேற்கோள்காட்டி எடுத்துரைத்தார். 

இன எதிரிகளின் கோட்டைக்கே சென்று, துக்ளக் சோவுக்கு ஆசிரியர் அளித்த பேட்டியை எடுத்துரைத்து, "சீண்டக் கூடிய வகையில் நான் கேள்வி கேட்டாலும் அவர் உணர்ச்சிவசப்படாமல் தன் கருத்தை வலியுறுத்துவதிலேயே கவனமாக இருந்தார்" என்று எதிர் தரப்பும் பாராட்டக்கூடிய வகையில் ஆசிரியர் பயணித்த விதத்தை விளக்கினார். 1982இல் மம்சாபுரத்தில் ஆசிரியருக்கு எதிராக தாக்குதல் நடந்த போது தான் தி.மு.க. இளைஞர் அணி பொறுப்பில் இருந்ததாகவும், பல பேர் அதைக் கண்டு கொந்தளித்த போது நம்முடைய தலைவர்கள் ஒருபோதும் வன்முறையில் ஈடுபடு வதை விரும்ப மாட்டார்கள், தீவிர பிரச்சாரத்தால் தான் அவர்களை நாம் சந்திக்க வேண்டும் ; அதை தான் இவர்க ளிடம் நாம் கற்றிருக்கிறோம் என்று தான் எடுத்துரைத்ததை விளக்கினார்.

மிகுந்த மகிழ்வோடு தனக்கு ஆசிரியரின் நடை ரொம்ப பிடிக்கும் என்றார். ஒவ்வொருவரின் நடையும் ஒவ்வொரு விதமாக இருக்கும் என்பதை விளக்கி ஆசிரியர் நடப்பது நடையா அல்லது ஓடுகிறாரா என்று தெரியாது என்றார். தனது மகள் தொலைக்காட்சியில் பார்த்து இவரை போல் நீங்கள் இருக்க வேண்டும்; சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னதை எல்லாம் மிக கலை நயத்தோடு விவரித்தார். ஆசிரியரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஏராளமான செய்திகள் இருந்தாலும் தற்போது கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான செய்தி ஆவணப்படுத்துதல். இந்த திறமை கலைஞரிடம் பார்த்திருக்கிறோம் அதற்குப் பிறகு ஆசிரி யரிடம் தான் பார்க்கிறோம். இந்த திறமை தான் உங்களை வரலாற்றில் நிரந்தரமாக வைக்க இருக்கிறது என்றார். இந்த இயக்கத்தில் இருப்பது தான் எங்களுக்கு கம்பீரம். இன்று நானும் திருமாவளவன் போன்றவர்களும் எதிரிகளின் தலைமை இடத்தில் இரண்டு எதிரிகளை நேரடியாக சந்தித்து அங்கு சென்று பேசுகிறோம் என்றால் அது உங்களிடம் பெற்ற ஊக்கம் என்றார். 

எங்கள் பொக்கிஷம் ஆசிரியர் ; 

அவரை பாதுகாப்பது அம்மா மோகனா தான்!

அவருக்கே உரிய பாணியில், பொதுப் பெயர்களை எல்லாம் தனிப் பெயராக மாற்றி காட்டியது இந்த இயக்கம் தான். தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர், ஆசிரியர் என்று அதனை அடுக்கடுக்காக விளக்கினார் பள்ளியில் பணியாற்றுபவர்கள்  ஆசிரியராக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு என்றுமே நீங்கள் தான் ஆசிரியர் என்றார்.  இவரை பாராட்டக்கூடிய இதே நேரத்தில் 90 வயதி லும் இவ்வளவு இளமையாக ஆசிரியர் இருப்பதற்கு முழு முதற் காரணம் அவரது வாழ்விணையர் அம்மா மோகனா தான் என்றும், அந்த அம்மையாருக்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்றார். நமது பொக்கிஷம் ஆசிரியர்  அந்த ஆசிரியரை பாதுகாப்பவர் அந்த அம்மா தான் என்றார். நான் ஒன்று சொல்கிறேன் பெரியாரையும் கலைஞரையும் நீங்கள் வெல்லப் போகிறீர்கள் 100 ஆண்டைத் தாண்டி வாழ்வீர்கள் அந்த நூற்றாண்டு விழாவிற்கும் நான் வருவேன் என்று கூறி நிறைவு செய்த அவரின் உரை அனைவரும் புதுத் தெம்பினை பெரும் அளவில் அவரது உரை அமைந்தது.

என்னைத் தட்டிக் கொடுக்கின்ற நிகழ்ச்சி!

என்னைத் தட்டிக் கொடுக்கின்ற நிகழ்ச்சி தான் இது என்றும், முதலமைச்சரின் வாழ்த்துச் செய்தி தன்னை மிகவும் உணர்ச்சிவயப்பட வைத்தது என்றும், அரசியலில் இது மிக முக்கியமான காலகட்டம் இதில் எப்படி பயணிக்க வேண்டும் என்பதை விளக்கி,  90, 90 என்று சொல்லுகிறீர்கள் இந்த 90 அந்த 80-ஆல் தான் கிடைத்தது என்று வரலாற்று சிறப்பு வாய்ந்த பேருரையை, வழிகாட்டுதலுரையை, இயக்கத் தோழர்கள் மட்டுமின்றி தமிழின உணர்வாளர்கள் அனை வரும் புது உணர்ச்சியைப் பெரும் வகையில் ஆசிரியர் ஏற்புரை ஆற்றினார். 

நிகழ்வில் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் 

ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒவ்வொருவர் பேசும் முன்பும் வரலாற்றுக் குறிப்புகளோடு இணைப்புரை வழங்கினார். நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்கள் நன்றி கூறினார்.

தொகுப்பு: சே.மெ.மதிவதனி

ஒருங்கிணைப்புக்கும், வெற்றிகரமான முன்னெடுப்புகளுக்கும் ஆசிரியர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல் மிகமிக அவசியம்! தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி!

 நெருக்கடி நிலை காலத்தில் மட்டுமல்ல, எந்தவொரு நெருக்கடி என்றாலும் எனக்கு நல்லாசானாக, நட்புரிமையுடன் ஆலோசனைகள் வழங்கி வருபவர் தாய்க் கழகத்தின் தலைவரான ஆசிரியர் அய்யா!

தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி!

1

சென்னை, ஜூன் 28 நெருக்கடி நிலை காலத்தில் மட்டு மல்ல, எந்தவொரு நெருக்கடி என்றாலும் எனக்கு நல்லாசானாக, நட்புரிமையுடன் ஆலோசனைகள் வழங்கி வருபவர் தாய்க் கழகத்தின் தலைவரான ஆசிரியர் அய்யா! வலிமையான ஒருங்கிணைப்புக்கும், முன்னெடுப்புகளுக்கும் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல் மிகமிக அவசியம் என்று தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

அவருடைய வாழ்த்துக் கடிதம் வருமாறு:

சுயமரியாதை என்று சொல்லப்படும் தன்மானத் துடன், ஒவ்வொரு மனிதரும் வாழ்வுரிமை பெற வேண்டும் என்பதே திராவிட இயக்கத்தின் இலட்சியம். தனி மனிதர்களுக்குத் தன்மானம் கிடைக்கப் பெற வேண்டும் என்றால், இயக்கத்தை வழிநடத்துபவர் களுக்குத் தன்மானத்தைவிட இனமானமே பெரிதாக இருக்கும். இருக்க வேண்டும்.

தலைமைப் பண்புக்கு இலக்கணமாகத் திகழும், நீண்ட பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!

தன் மீது வீசப்படும் சொற்களையும், கற்களையும் எதிர்கொண்டு, எதிரிகளின் வசவுகளை உரமாக்கிக் கொண்டு, உயர்ந்து வளர்ந்து, பழமும், நிழலும் தரும் மரமாக நிலைத்து நிற்பதே திராவிட இயக்கத்திற்கான தலைமைப் பண்பு. அத்தகைய தலைமைப் பண்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்து, நீண்ட பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரராக இருப்பவர்தான் நம் மதிப்பிற்குரிய மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள். 

2

90 வயதில் 80 ஆண்டு பொதுவாழ்வு என்கிற பெருமையைத் திராவிட இயக்கத்தில் அன்றி, வேறு எந்த இயக்கத்திலும் காண்பது அரிது! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது 94 ஆண்டு கால வாழ்வில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்கார ராகத் திகழ்ந்தவர். இனமானப் பேராசிரியர் அவர்கள் தனது 96 ஆண்டு கால வாழ்வில் ஏறத்தாழ அதே அளவிலான பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர். இன்று நம் மதிப்பிற்குரிய மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களும் அத்தகைய பெருமைக்குச் சொந்தக்கார ராகத் திகழ்கிறார்.

நூற்றாண்டு கடந்த திராவிட இயக்கத்தில் முக்கால் நூற்றாண்டைக் கடந்த பொது வாழ்வு என்பது நம் தலைவர்களுக்கு வாய்த்தது என்பது, நமக்குப் பெரு மையாக மட்டுமல்ல, இந்தச் சமுதாயத்திற்குப் பெரும் பயனாகவும் அமைந்துள்ளது.

மிகப் பெரும் மாற்றத்தை, தான் வாழும் காலத்திலேயே நிகழ்த்திக் காட்டியவர் 

புரட்சியாளர் தந்தை பெரியார்

தன்னலமற்ற தொண்டறத்தால்தான் சமுதாயச் சீர் திருத்தத்தை உருவாக்க முடியும் என்று தனது 95 வயது வரை ஓயாமல் பயணித்து, மக்களிடம் பரப்புரை மேற்கொண்டு, மிகப் பெரும் மாற்றத்தை, தான் வாழும் காலத்திலேயே நிகழ்த்திக் காட்டியவர் புரட்சியாளர் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரின் சிந்தனைகளை அவர் கண் முன்னாலேயே சட்ட வடிவமாக்கிக் காட்டியவர் பேரறி ஞர் அண்ணா. தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலும், பெரியாருக்குப் பிறகும் அவரது சிந்தனைகளைச் சட்டங்களாகத் திட்டங்களாகத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

சுயமரியாதை - சமூகநீதி என்ற தண்டவாளங்களின் மீது வேகம் குறையாமல் ஓடுகின்ற இரயில்கள்!

திராவிடர் கழகத்திற்கும் திராவிட முன்னேற்றத் திற்கும் பாதை சற்று மாறுபட்டாலும் இலக்கு ஒன்றுதான். இரு இயக்கங்களுமே சுயமரியாதை - சமூகநீதி என்ற தண்டவாளங்களின் மீது வேகம் குறையாமல் ஓடுகின்ற இரயில்கள்.

10 வயதிலேயே, திராவிடர் கழக மேடை மீது போடப்பட்டிருந்த மேசை மீது ஏறி நின்று பகுத்தறிவை முழங்கிய மாணவரான ஆசிரியர் அய்யாவின் முழக்கம் இன்று வரை ஓயாமல் தொடர்கிறது. அது என்றும் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். நம் விருப்பம்.

தந்தை பெரியாரின் 

முழு நம்பிக்கையைப் பெற்றவர்!

நமது இயக்கத்திலே, தந்தை பெரியாரிடம் இருந்து நற்சான்றை மட்டுமல்ல, அவரது முழுமையான நம்பிக் கையையும் பெற்றவர் ஆசிரியர் அய்யா அவர்கள். பெற்ற நம்பிக்கையை இன்றளவிலும் முழுமையாகக் காப்பாற்றி வருகிறார்.

தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் எனும் ஆலமரத்தை பாதுகாப்பதுடன் பல புதிய விழுது களையும் உருவாக்கி, இந்தக் கொள்கை ஆலமரம் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் தொண்டாற்றி வருபவர் நம் ஆசிரியர் அய்யா அவர்கள்.

ஆசிரியர் அய்யா அவர்களின் பெரும்பணி என்பது ஒரு பெரும் சாதனை!

பேரறிஞர் அண்ணா பொறுப்பு வகித்த, குத்தூசி குருசாமி போன்றவர்கள் பொறுப்பு வகித்த ‘விடுதலை' நாளேட்டின் ஆசிரியராக 60 ஆண்டுகளைக் கடந்து பணியாற்றி வரும் ஆசிரியர் அய்யா அவர்களின் இந்தப் பெரும்பணி என்பது ஒரு பெரும் சாதனை!

தன்னிடம் தந்தை பெரியார் ஒப்படைத்த இயக் கத்தை, பத்திரிகையை, நிறுவனங்களை பன்மடங்கு பெருக்கி, பகுத்தறிவுப் பயணத்தைப் பழுதறத் தொடர்ந்து, தொண்டால் பொழுதளக்கும் மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு என் வாழ்த்துகளை மட்டுமல்ல, வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு நல்லாசானாக, நட்புரிமையுடன் ஆலோசனைகள் வழங்கி வருபவர்!

நெருக்கடி நிலைக்கால ‘மிசா' சிறைவாசத்தில் நான் சித்திரவதைகளை எதிர்கொண்ட போது, என் தோள் பற்றித் துணைநின்ற தோழமைத் தலைவர் நம் ஆசிரியர் அய்யா. அந்த நெருக்கடி நிலைகாலத்தில் மட்டுமல்ல, எந்தவொரு நெருக்கடி என்றாலும் எனக்கு நல்லா சானாக, நட்புரிமையுடன் ஆலோசனைகள் வழங்கி வருபவர் தாய்க் கழகத்தின் தலைவரான ஆசிரியர் அய்யா அவர்கள்.

இன்று அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை இந்திய ஒன்றியம் சந்தித்து வரும் நிலையில், வலிமையான ஒருங்கிணைப்புக்கும், வெற்றிகரமான முன்னெடுப்புகளுக்கும் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல் மிக மிக அவசியம்.

அரசியல் குறித்த ஆலோசனைகள் மட்டுமல்ல, வாழ்வியலுக்கான ஆலோசனைகளையும் அவரிட மிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். 90 வயதிலும் இளைஞருக்குரிய வேகத்துடனும், சுறுசுறுப்புடனும் அவர் செயலாற்றுவதை வியப்புடன் பார்க்கிறேன்.

'பெரியார் உலகம்' முழுமை பெற்று  அவர் தலைமையில் திறப்பு விழா காண வேண்டும்!

தாய்க் கழகமான திராவிடர் கழகத்தைக் கட்டிக்காத்து வரும் ஆசிரியர் அய்யா அவர்கள் தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தையும் தாண்டி, நூற்றாண்டு விழா கொண்டாடி, இன்னும் பலப்பல ஆண்டுகள் இதே சுறுசுறுப்புடனும் வேகத்துடனும் செயலாற்றி எங்களை வழிநடத்த வேண்டும். அவர் சிந்தனையில் உருவாகிச் செயல்வடிவம் பெற்று வரும் 'பெரியார் உலகம்' முழுமை பெற்று அவர் தலைமையில் திறப்பு விழா காண வேண்டும். பெரியாரையும் அவரது பகுத்தறிவுச் சிந்தனைகளையும் உலகமயமாக்கும் அவரது பெரும் பணி தொடரவேண்டும் எனத் தெரிவித்து, நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

நன்றி! 

- இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனங்கள் சட்டப்படி செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!


வெற்றிக்கனி பறித்த முதலமைச்சர் - இந்து சமய அறநிலையத் 
துறை அமைச்சர் - அதிகாரிகளுக்கு நமது பாராட்டும் - நன்றியும்!
லட்சியப் பயணத்தில் தந்தை பெரியார் பெற்ற பெருவெற்றி இது!
ஜாதி, தீண்டாமை ஒழிப்புக் களத்தில் மற்றுமோர் அமைதிப் புரட்சி இது!

2

தமிழ்நாடு அரசின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனங்கள் சட்டப்படி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்றும்முதலமைச்சர் மு..ஸ்டாலின்அமைச்சர் பி.கே.சேகர்பாபுவழக்குரைஞர்கள்அதிகாரிகள் ஆகியோருக்குப் பாராட்டுத் தெரிவித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்அவரது அறிக்கை வருமாறு:

page01-04%20web

திராவிட மாடல்ஆட்சி என்ற பெருமைக்குரிய ஆட்சியாக தி.மு.ஆட்சியின் மகுடத்தில் மற்றுமோர் ஒளிமுத்து நேற்று (27.6.2022) சென்னை உயர்நீதிமன்றத்தினால் பதிக்கப்பட்டிருக்கிறது என்று எழுதினால்அது மிகையல்லவரலாற்று உண்மையாகும்.

1970 இல் சட்டத் திருத்தம்
    ஜாதிதீண்டாமை ஒழிய வழிவகுக்கும் வகையில்அனைத்து ஜாதியினரும் அர்ச் சகராகும் உரிமை பெற்றவர்கள் - அவர் களுக்குரிய கல்வியைப் பெற்ற நிலையில்தமிழ்நாடு அரசின் சமத்துவக் கொள்கைக்கு தமிழ்நாட்டு சனாதன வைதீக பார்ப்பனர்கள்இதனைக் கடுமையாக 1970 முதலே - கலைஞர் ஆட்சியிலிருக்கும்போது பரம் பரை அர்ச்சகர் நியமன முறையை செல்லாததாக்கிஅதற்குரிய தகுதி படைத்த எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

இளையபெருமாள் கமிட்டி
    இது தந்தை பெரியாரின் ஜாதி - தீண் டாமை ஒழிப்பை செயல்படுத்திக் காட்டிய அமைதிப் புரட்சிக்கான வழிமுறையாகும்அதுமட்டுமல்லஅந்த மசோதாவை தமிழ் நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றியபோதுஅதன் நோக்கமும்காரணமும் (Objects and Reason for Bill) என்ற முகப்பில்அதற்குமுன் இருந்த - ஒன்றிய அரசு நியமித்த தீண்டாமை ஒழிப்புக்கான அனைத்திந்திய கமிட்டி - இளையபெருமாள் கமிட்டி என்று அழைக் கப்பட்ட கமிட்டியின்முக்கிய பரிந்துரையை ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக தமிழ்நாடு அரசால் - (‘திராவிட மாடல்என்ற காரணத்தாலும்தத்துவத் தாலும்நிறைவேற்றி வைக்கப்படுகிறது என்று கூறிநிறைவேற்றினார்.

உச்சநீதிமன்றம் வைத்த நிபந்தனை
    இதை எதிர்த்து சிறீபெரும்புதூர் ஜீயர்காஞ்சி சங்கராச்சாரியார் (ஜெயேந்திரர்), இராஜகோபாலாச்சாரியார் முயற்சிகளைப் பின்னணியாகக் கொண்டு இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு - சென்னை உயர்நீதி மன்றத்திற்கே செல்லாமல்,  நேரடியாக எடுத்துச் சென்றுஅந்நாளில் பிரபலமாக இருந்த பல்கிவாலா என்ற மூத்த வழக்குரை ஞரை வைத்தும்மற்ற சீனியர் வக்கீல்களை வைத்தும் வாதாடினார்கள்தமிழ்நாடு கொண்டு வந்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டமும்பாரம்பரிய அர்ச் சகர் நியமன முறை செல்லாது என்பதுமான சட்டமும் செல்லும் என்று தீர்ப்பளித்துவிட்டாலும்அர்ச்சகர்களை நியமிக்கும்போது அவர்கள் ஆகமப் பயிற்சி பெற்றவர் களாகவே இருப்பது முக்கியம் என்று ஒரு நிபந்தனை விதித்தார்கள்.

69 சதவிகித அடிப்படையில்,
பார்ப்பனர் முதல்,ஆதிதிராவிடர்வரை...
    அதை மீண்டும் கலைஞர் 2006 இல் முதலமைச்சரான நிலையில்ஜஸ்டீஸ் .கே.ராஜன் தலைமையில் அறநிலையப் பணி களில் மிகுந்த அனுபவம் வாய்ந்த வல்லுநர் களை இணைத்துகுழு போட்டுஅவர்கள் தந்த அறிக்கையின்படிஇரண்டு அர்ச்சகர் பயிற்சியைசிவஆகமம்வைகனாச ஆக மம் போன்ற சிவன் கோவில்விஷ்ணு கோவில் அர்ச்சகர் தகுதிக்கேற்ப பாடத் திட்டங்கள்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.  69 சதவிகித அடிப்படையில்பார்ப் பனர் முதல்ஆதிதிராவிடர்வரை அனைத்து ஜாதி மாணவர்களும், 210 பேர் படித்து முடித்தாலும்இதையும் எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மீண்டும் அர்ச்சகர் சங்கம் முதலியன இணைந்து - பார்ப்பனர்கள் வழக்குப் போட்டுநீண்ட காலம் நடந்து, 2015 இல் தீர்ப்பு கிடைத்ததுஅதிலும்தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் நியமனம் - அனைத்து ஜாதியினருக்கும் வாய்ப்பளிக்கும் தீண் டாமை ஒழிப்பு அம்சம் அடங்கிய சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்ததுதனிப்பட்ட முறையில் - யாராவது இந்த நியமனம்மூலம் பாதிக்கப்பட்டால்அவர் தனது உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்திற்குச் சென்று பரி காரம் தேடிக்கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தனர்.

இதையும் தங்களுக்கே வெற்றி என்பது போலகுட்டையைக் குழப்பினர் பார்ப் பனர்களும்பல ஊடகங்களும் (ஏன் சில ஓய்வு பெற்ற நீதிபதிகளும்கூட). நாம் தெளிவுபடுத்தி தி.மு..வுக்கு இது வெற்றி என்பதை விளக்கி எழுதினோம்பேசினோம்.

‘‘தந்தை பெரியாரை அரசு மரியாதை யுடன் புதைக்க முடிந்த தம்மால்தமது அரசால் - அவர் நெஞ்சில் தைத்த முள்ளை - (அனைத்து ஜாதியினர் அர்ச்சகராவதை)  எடுக்க முடியாமல் புதைக்க வேண்டிய தாயிற்றே'' என்ற ஆதங்கத்தைத் தெரிவித்துவருந்தினார் முத்தமிழ் அறிஞர் முதலமைச்சர் கலைஞர்.

ஒரு துளி ரத்தம் சிந்தாத அமைதிப் புரட்சி
    அந்த ஆதங்கத்தைப் போக்கினார் - அவருக்குப் பிறகு இடைவெளி ஏற்பட் டாலும்மீண்டும் ஆட்சிக்கு வந்த ‘முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின்என்று கம் பீரமாக உச்சரித்துப் பதவியேற்ற நமது முதலமைச்சர்ஒரு பெரிய சமூகப் புரட்சியை ஒரு துளி ரத்தம் சிந்தாத அமைதிப் புரட்சி - அரசுப் புரட்சியாக - 14.8.2021 இல் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதி - ஆதிதிராவிடர் உள்பட அர்ச்சகர் நியமனங்கள் செய்து வரலாறு படைத்தார்.

இதை எதிர்த்து இப்போதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் போட்டனர் பார்ப்பனர்கள்!

அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமை யில் (முதல் அமர்வுநேற்று முன்னாள் (26.6.2022) அருமையான தீர்ப்பு வழங்கிதமிழ்நாடு அரசின் அர்ச்சகர் நியமனங்கள் சட்டப்படி செல்லுபடியாகும்காரண முறைப் படி - அறங்காவலர்களும்அவர்கள் இல் லாத கோவில்கள் உரிமை பெற்ற தக்கார் களாலும் இந்த நியமனங்கள் முறைப்படியே நடைபெற்றுள்ளன என்று தெளிவுபடுத்திய தோடுமுந்தைய உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் படிதான் நியமனங்கள் நடைபெற்றுள்ளன என்றும் கூறியிருக்கிறது.

லட்சியப் பயணத்தில் தந்தை பெரியார் பெற்ற பெருவெற்றி  இது!

ஜாதிதீண்டாமை ஒழிப்புக் களத்தில் மற்றுமோர் அமைதிப் புரட்சி இது!

முன்பு உச்சநீதிமன்றத் தீர்ப்பின் இறுதி யில் குறிப்பிட்டபடிதனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாக எவராவது இதுபோன்ற நியமனங்களின்போது கருதினால்அவர்கள் நீதிமன்றம் சென்று பரிகாரம் தேடிக்கொள் ளலாம் என்று கூறியிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம்அரசு வழக்குரைஞர் அருண்நடராஜன் ஆகியோர் சிறப்பாக வாதாடினர்.

நமது பாராட்டும்நன்றியும்!
    இந்த வெற்றிக் கனியைப் பறித்த நமது முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு..ஸ்டாலின்அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அத் துறை அதிகாரிகள்சட்ட நிபுணர்கள் அனைவருக்கும் நமது பாராட்டும்நன்றியும்!

எஞ்சிய நியமனங்கள் உடனடியாக தொடரப்படவேண்டும்பயிற்சிப் பள்ளியும்பணிகள் தேர்வும் தொடரப்படவும்வேண்டும்!

 கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்சென்னை
28.6.2022


திங்கள், 26 ஜூன், 2023

வள்ளலாருக்குக் காவி வண்ணமா? சனாதனச் சழக்கருக்கு நமது வன்மையான கண்டனம்


17

தமிழ்நாடு ஆளுநர் திட்டமிட்டே, வேண்டுமென்றே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு நாளும் சவால் விடுவது போல அபத்தக் கருத்துகளை வெளியிட்டு சனாதனச் சண்டப்பிரசங்கம் செய்கிறார்.

சங்கியாக, சண்டித்தனம் செய்து வருகிறார்!

வள்ளலாருக்கு இப்போது ஜெயந்தியாம்! எது நுழைகிறது பார்த்தீர்களா?

வடலூர் வள்ளலார் சனாதனத்தின் முழுக் கருத் தாளர் என்ற முழுப் பொய் புரட்டை முன்னால் நிறுத்திப் பேசி வம்பளக்கிறார்!

'மதமான பேய்

பிடியா திருக்கவேண்டும்...'

''நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே

மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ

விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே''

''வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்

சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்க விலை

என்ன பயனோ இவை.'' 

''கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்

கண்முடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக...

கூறுகின்ற சமயம் எலாம் மதங்கள் எலாம் பிடித்துக்

கூவுகின்றார் பலன் ஒன்றுங்கொண்டறியர் வீணே

நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்

நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்'

வேதநெறி ஆகமத்தின் நெறியபு ராணங்கள்

விளிம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உள அனைத்துங் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணரஉணர்த் தினையே சித்தமே''

என்று ஆறாம் திருமுறையில்  ஒப்புதல் வாக்குமூலம் போல், தனது முந்தைய கருத்துகளுக்கெல்லாம் விடை கொடுத்து விடுதலை கண்ட வித்தகரை சனாதனச் சழக்கராகக் காட்டி, வெள்ளை அணிந்த எம் வள்ளல் பெருமானை காவிச் சாய வேட்டி உடுத்திட்டவராகக் காட்டும் - பச்சை திரிபுவாதம் செய்யும் ஆர்.என். ரவியின் தில்லுமுல்லுப் பிரச்சாரத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

"யானையைத் தடவிப் பார்த்து வர்ணனை கூறிய அய்வர்" என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. நாடு  தழுவிய கண்டனம் வெடிக்கட்டும்.

- கி. வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்

சென்னை

22.6.2023

வரும் 7.7.2023 அன்று மாலை வடலூரில் வள்ளலார் விழா  பெருந்திரளாக மக்கள் பங்கேற்கும் வகையில் நடைபெறும். தலைவர் பெருமக்கள் பங்கேற்கிறார்கள். 

கணவன் சம்பாத்தியம் ஒரு பக்கம் என்றால், மனைவி செய்யும் 24 மணிநேர உழைப்பும் ஒரு சம்பாத்தியம்தான்!- ஆசிரியர் அறிக்கை,



சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் பாராட்டுதலுக்குரிய நல்ல தீர்ப்பு!

1

கணவன் சம்பாதிக்கிறான் என்றால், 24 மணிநேரம் வீட்டுப் பணிகளை செய்துகொண்டு இருக்கிறாரே மனைவி, அதுவும் சம்பாத்தியம் தானே என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கிருஷ்ணன் ராமசாமி அவர்கள் வழங்கிய தீர்ப்பினை வரவேற்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில நாள்களுக்குமுன் வந்துள்ள ஒரு வழக்கின் முக்கிய தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரவேற்றுப் பாராட்டவேண்டிய தீர்ப்பாகும்!

வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பி வைத்த தொகையைப் பயன்படுத்தி வாங்கிய சொத்துகளில் மனைவிக்கு உரிமையில்லை என்று கணவன் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. (கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியில் உள்ள குடும்ப வழக்கு).

நீதிபதியின் சிறப்பான தீர்ப்பு!

இதனை விசாரித்துத் தீர்ப்புக் கூறிய ஜஸ்டீஸ் திரு.கிருஷ்ணன் இராமசாமி அவர்கள்,

‘‘குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என விடுமுறையில்லாமல் இல்லத் தரசிகள் பார்க்கும் வேலை 24 மணிநேர வேலை யாகும். அதனை கணவனின் 8 மணிநேர உத்தி யோகத்துடன் ஒப்பிட முடியாது;

கணவனும் - மனைவியும் குடும்ப வாகனத் தின் இரட்டைச் சக்கரங்கள்; கணவன் சம்பாத் தியம்மூலம் தன் பங்கை வழங்குகிறார். இல்லத்து நிர்வாகியாக உள்ள மனைவி குடும்பத்தைக் கவனித்துத் தன் பங்கை வழங்குகிறார். எனவே, சம்பாதித்த சொத்தில் மனைவிக்கும் உரிமை உள்ளது. குடும்பத்தைக் கவனிக்கும் இல்லத் தரசிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அளிக்கும் பங்களிப்பை அங்கீகரித்து எந்தச் சட்டமும் இயற்றப்படவில்லை. ஆனால், அந்தப் பங்களிப்பை நீதிமன்றம் அங்கீகரிப்பதற்கு எந்தச் சட்டமும் தடை விதிக்கவில்லை'' என்று தமது தீர்ப்பில் மிக அருமையாக எழுதி, ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சி, மகளிர்மீதான ஆண் ஆதிக்கச் சுரண்டலுக்கும், ஆதிக்க எஜமானத் தனத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துக் காட்டியுள்ளார்!

மனுதர்மத்தை எடுத்துக்காட்டும் நீதிபதிகள்!

மனுதர்மத்தைப் பின்பற்ற வேண்டுமென சில உயர்நீதிமன்ற நீதிபதிகள் (குஜராத் உயர்நீதி மன்றம்) வெளிப்படையாகவே வர்ணாஸ்ரமத் திற்கு வக்காலத்து வாங்கி பகிரங்கப் பிரகடனம் செய்கிறார்கள்!

அண்மையில், காதலித்த பெண்ணை கைவிட்ட கயவனைப்பற்றி அந்தக் காரிகை போட்ட வழக்கில் ‘அவரைத் திருமணம் செய்துகொண்டால், அவருக்குள்ள ‘செவ்வாய்த் தோஷம்' காரணமாக என் குடும்பம் செத்துவிடும்'' என்ற ஒரு ‘புருடா -டிபென்ஸ்' அவிழ்த்துவிட்ட வழக்கில் (அலகாபாத்) அதைக் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர்,

‘‘ஜோதிடர் இது சம்பந்தமாக ஆய்ந்து அவரது முடிவினை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென்று'' ஓர் ஆணை பிறப்பித்தார். அதை உச்சநீதிமன்றம் தடை (Stay) விதித்து, அறிவியல்  மனப்பான்மை பரப்புதல் ஒவ்வொரு வரின் கடமையாகும் என்ற 51-ஏ(எச்) பிரிவினை சுட்டிக்காட்டி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைக் காப்பாற்றியுள்ளது பாராட்டத்தக்கது!

மக்கள் தொகையில் சரி பகுதியாக உள்ள மானுடத்தின் முக்கிய கூறான மகளிரை அடிமைகள், சம்பளம் கேட்க முடியாத வாழ்நாள் வேலைக்காரர்கள், ‘‘புனிதக் கட்டு- சடங்கு'' (Sacrament) விவாகத்தில் பிணைக்கப்பட வாழ் நாள் கொத்தடிமைகளாக்கி உள்ளதை எதிர்த்து, தந்தை பெரியார் இந்த மண்ணில் பிரச்சாரம், போராட்டம், தீர்மானங்கள்மூலம் இடையறாது செய்த கிளர்ச்சி இன்று எல்லா மன்றங்களிலும் இந்தக் கருத்தோட்டத்தின் வெற்றி வெளிச்சத் திசையைக் காட்டுகிறது!

1929 செங்கற்பட்டு - மாகாண 

முதல் சுயமரியாதை மாநாட்டிலேயே தீர்மானம்!

1929 இல் முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில், அதற்குமுன் 1925 முதலே அவ் வியக்கம் தொடங்கிய அறிவுப் பிரச்சாரம்மூலம் சனாதனத்தின் அஸ்திவாரத்தையே தகர்த்தவர் தந்தை பெரியார். இப்படிப்பட்ட சம உரிமை  சிந்தனை உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்பு கள்மூலம் அவ்வப்போது முற்போக்குச் சிந்தனை கொண்ட நீதிபதிகள்மூலம் வெளியாவது நாட்டின் வருங்காலம்பற்றிய நம் கவலையைப் போக்குவதாக உள்ளது! நம்பிக்கை தருவதாக உள்ளது!

கணவன் இறந்த பிறகு அவரது சொத்து களைக்கூட மனைவி அனுபவிக்க முடியாது செய்ய ‘கற்பு' என்ற ஒரு விலங்கு பூட்டி ஆணாதிக்கம் மேலாதிக்கம் செய்தது - இப்போது மாறியது. ‘‘இராமநாதபுரம் விதவை வழக்கு'' (Ramnad widow case) என்று பெயர் உள்ள ஒரு பழைய வழக்கு.

பிறவி பேதம் என்பது ஜாதி மட்டுமல்ல - பெண்ணடிமையும்தான்!

ஒப்பற்ற சிந்தனையாளரான தந்தை பெரியார் தனது சமூகப் புரட்சி இயக்கத்தின் முக்கிய கொள்கையாக ‘‘பிறவி பேத ஒழிப்பை''  முன்னிறுத்தினார்.

‘‘பிறவி பேதம் ஒழிப்பு என்றால், ஜாதி உயர்வு - தாழ்வு பேதம் மட்டுமல்ல; ஆண் - பெண் பிறவி பேத ஒழிப்பையும் உள்ளடக்கியதுதான்'' என்று கூறி, அந்த இலக்கு நோக்கி தமது இலட்சியப் போராட்டங்களை நடத்தினார் தந்தை பெரியார்.

இப்போது அக்கருத்துகள் - அறிவியல் இறுதியில் வெற்றி பெறுவதுபோல, தக்க வெற்றியைப் பெறுகின்றன!

‘பெரியார்' என்ற தத்துவம் அங்கிங்கெனாதபடி எங்கும் ஒளி வீசுகிறது!

கவியரசர் கண்ணதாசன் பாடினார்,

‘‘நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்வார் - பெரியார்!

நெறிகெட்டு வளைந்ததையெல்லாம் நிமிர்த்தி வைப்பார்!'' என்று.

பெரியார் ராமசாமியும் - 

நீதிபதி ராமசாமியும்!

முற்போக்குத் தீர்ப்புச் சொன்னவர் நீதிபதி இராமசாமி! அன்று பெரியார் இராமசாமி - இன்று நீதிபதி கிருஷ்ணன் இராமசாமி!

எவ்வளவு எதிர்பாராத எதார்த்தப் பொருத்தம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

26.6.2023