பெரியார் உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியார் உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

அறிவுலகப் பேராசான் தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் கட்டுமானப் பணி தொடக்கம்


Published September 14, 2024, விடுதலை நாளேடு

 தூண்கள் அமைக்கும் பணிக்கு கான்கிரீட் கலவை போடும் பணியை திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்தார். உடன் பொறியாளர்கள் கழக நிருவாகிகள், தோழர்கள் உள்ளனர்.

திருச்சி, செப். 14 சமூக நீதிக்கும், சுயமரியாதைக்கும் வித்திட்ட அறிவுலகப் பேராசான் தந்தை பெரியாரின் கொள்கையை பறைசாற்றும் விதமாக திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகம் பணிகள் தமிழர் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதல்படி, படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது. முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று (14.9.2024) காலை 10.30 மணியளவில் பெரியார் சிலைக்கான பீடம் அமைக்கும் பணிக்கான அடித்தளம் (கான்கிரீட்) அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பேராசிரியர் ப.சுப்பிரமணியன், ஜெயபிரகாஷ், செந்தமிழ்குமார், கார்த்திக், ரமேஷ்பாபு, பாண்டியன், ஆல்பர்ட், ஞா.ஆரோக்கியராஜ், மு.சேகர், சங்கிலிமுத்து, மகாமணி, கனகராஜ், ராஜசேகர் ஆகிய கழகத் தோழர்களும் ஓசன் (ளிசிணிகிழி) குழு அரிகரன், ராம் பிரசாத், காசி, ரகுமான் உள்ளிட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு பெரிய காலம் (தூண்) உள்ளடக்கி மொத்தம் 28 தூண்கள் அமைக்கப்பட் டுள்ளது. இன்று (14.9.2024) மூன்று தூண் கள் அமைக்கும் வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதத்திற்குள் அனைத்து தூண்களும் கான்கிரீட் போடப்பட்டு முடிக்கப்படும். மேலும் 4 லட்சம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட தண்ணீர் தொட்டி அமைக்கும் பணியும் தொடங் கப்பட்டுள்ளது.

30 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள பெரியார் உலகம் வளாகத்தில் 95 அடி உயரத்தில் பெரியார் சிலை அமையவுள்ளது. இதில் நூலகம், ஆய்வகம், பயிலரங்கம், குழந்தைகளுக்கான பூங்கா உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்களுடன் அமைக்கப் படவுள்ளன.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரியார் உலக பணி நவீன தொழில்நுட்பத்தோடு தொடங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பெரியார் பற்றாளர்கள், பெரியார் தொண்டர் களும் இப்பணிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். அரசு அனுமதியோடு முறையாக நடைபெற்று வரும் பெரியார் உலகத் தின் கட்டுமான பணிகளின் முதல் கட்டபணி தொடங்கியது. இந்நிகழ்வில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் இனிப்பு வழங்கினார். முதல்கட்டமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பெரியார் உலகம் செல்வதற்கான அணுகு சாலை (சர்வீஸ்ரோடு) 4.41 மீட்டர் தூரத்திற்கு 7.2 மீட்டர் அகலத்திற்கு அழகிய புல்வெளிகளுடன் அமைக்கப்பட்டி ருக்கிறது. புல் வெளிகள் மட்டும் 6.78 மீட்டருக்கு அமைக்கப் பட்டுள்ளது. பெரியார் உலகத்தின் நுழைவாயில் 9 மீட்டரிலும், வெளியே செல்வதற்கான வழி 9 மீட்டர் அளவிலும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இப்பணியை ஈரோட்டைச் சேர்ந்த எம்.எம். கட்டுமான நிறுவனம் செய்து வருகிறது.

தனி உலகமாக அமையவுள்ள பெரியார் உலகத்தின் கட்டு மான பணிகள் பல்வேறு மூத்த பொறியாளர்கள் கண் காணிப்போடு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

பெரியார் உலகத்திற்கு நன்கொடை

 நன்கொடை

தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தையன்,  முநாகவள்ளி , குஞ்சம்மாள் பக்கிரிசாமிமுகனிமொழி,  சிறீஜித்மணிமாறன்ஓவியா ஆகியோர் தங்கள் குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.1,00,000/- (காசோலைதமிழர் தலைவர் ஆசிரியர் கிவீரமணி அவர்களிடம் வழங்கினர்.  (சென்னை பெரியார் திடல் - 18.9.2021)

புதன், 1 செப்டம்பர், 2021

கழகக் குடும்பத்தவர்களுக்கும் - திராவிடப் பெருங்குடி மக்களுக்கும் மிக்க மகிழ்ச்சியை அளிக்கும் தித்திக்கும் செய்தி!


கழகக் குடும்பத்தவர்களுக்கும், திராவிடப் பெருங்குடி மக்களுக்கும் மிக்க மகிழ்ச்சியை அளிக்கும் தித்திக்கும் செய்தி என்று  தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள நன்றி  அறிக்கை வருமாறு:

திருச்சி சிறுகனூர் ‘‘பெரியார் உலகம்'' என்ற தந்தை பெரியாரின் 95 அடி உயரச் சிலை, 40 அடி பீடம், அந்த வளாகத்தில் குழந்தைகள் பூங்கா, நூலகம் முதலியனவும் அமைக்கப்படுவதற்குரிய தமிழ்நாடு அரசின் ஆணை (நிலை எண்) 524, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார  நிறுவனத்தின் விண்ணப்பத்தை ஆழ்ந்து பரிசீலித்து உரிய ஆணையாக வழங்கப்பட்டுள்ளது என்பதை எல்லையற்ற மகிழ்ச்சியுடன், கழகத் தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பல்வேறு துறைகளின் தடையில்லா சான்றிதழ் பெற்று (2008 இல் தொடங்கிய பணி) கடந்த ஆட்சியின் இறுதியில் பிறப்பிக்கப்பட வேண்டிய, சென்ற அ.தி.மு.க. ஆட்சியில், 2017 முதல் 2021 வரை 4 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த அரசு அனுமதி ஆணை - இன்றைய முதலமைச்சர் செயல்மிகு மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சியில் விடியலைத் தந்தது!

‘‘ஸ்டாலின்தான் வந்தாரு

விடியலைத் தந்தாரு!''

என்பதை மிகுந்த நன்றிப் பெருக்குடன் தமிழ்கூறும் நல்லுலகம் கொண்டாடி மகிழ்ச்சியடைவது உறுதி.

முதலமைச்சருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நமது நன்றி! நன்றி!! நன்றி!!!.


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

30.8.2021

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

‘‘பெரியார் உலகம்'' அமைக்கத் தேவைப்படும் தமிழ்நாடு அரசு அனுமதி ஆணையை அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் நேரில் நன்றி!


பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் திருச்சி சிறுகனூர் 'பெரியார் உலகம்' என்ற தந்தை பெரியாரின் 94 அடி உயர சிலை, 40 அடி பீடம், அந்த வளாகத்தில் குழந்தைகள் பூங்கா, நூலகம் முதலியனவும் அமைக்கப்படுவதற்குத் தேவைப்படும் தமிழ்நாடு அரசின் ஆணையை அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று (30.8.2021) மாலை முதலமைச்சர் அவர்களின் இல்ல அலுவலகத்தில் அவரை நேரில் சந்தித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை போர்த்தி பெரியார் நூல்களை வழங்கி நன்றி தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

பெரியார் உலகம்: களப்பணியாளர்களாக மாறி, கச்சிதமாக வாகை சூடுவோம் வாரீர்! வாரீர்!!


பெரியார் உலகம் - களப்பணியாளர்களாக மாறிகச்சிதமாக வாகை சூடுவோம் வாரீர்வாரீர்என்று  தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பெரியார் உலகம் ஒரு திராவிட அறிவியல் உலகம்.

தலைமுறைகளைத் தாண்டிதத்துவங்களால் தலைநிமிர்ந்த மானுடத்தின் சுயமரியாதை எழுச்சியை அனைத்து மக்களுக்கும் அறிவு விளக்கமாக விளக்கும் அரிய அருங்காட்சியகக் கருவூலம்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை -  வயது இடைவெளி சிறிதுமின்றிசில மணி நேரத்தில் பல நூற்றாண்டுச் சாதனைகளை கற்பிக்கும் கல்விக் கூடமான கலைக்கூடம்!

பெரியார் ஒலிக்காட்சியகங்கள் - குழந்தைகள் பூங்கா - நூலகம் - காலக்குறியீட்டில் புதுமை வரலாறு பெ.மு. - பெ.பிஉள்பட!

உலக மக்களை ஈர்க்கும் வண்ணம் புதுமை பூத்துக் குலுங்கும் புத்தாக்கங்கள்!

நம் ‘அறிவின் தேக்கமாம்அய்யாவின் அருந்தொண்டால் எப்படி புழுவினும் கேடாய் மிதிக்கப்பட்டவர்களின் எழுச்சிக்குப் பிறகுஎப்படி மதிக்கப்படுகிறார்கள் -  ஆயுதம் ஏந்தா அமைதிப் புரட்சிமூலம் என்ற வரலாற்றுச் சுவடுகளைக் காட்டிகாணும் மக்களுக்குக் கல்லூரி எனக் கற்றுக் கொடுக்கும் காலம் தந்த அறிவுக்கொடை!

பணிகள் தொடங்கிவிட்டன -

பங்களிப்புகள் பொங்கி வர வேண்டாமா?

பெரியார் சகாப்தத்தின் பெருமிதப் பூரிப்பில் உள்ள என்னருந் தோழர்களே,

கடமை மறவா கருஞ்சட்டை உறவுகளே,

களப் பணியாளர்களாக மாறிடுவோம்!

கச்சிதமாக முடித்து - வாகை சூடுவோம்வாரீர்வாரீர்!!

உங்களது முதல் களப்பணியாளன்,

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

31.8.2021