கல்வெட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வெட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

மொழியின் அடையாளத்தை மறைக்கும் நடவடிக்கை கூடாது

 

ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றக் கிளை சரமாரி கேள்வி

மதுரைஆக.10- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளவும்பழங்கால தொல்லி யல் மற்றும் நினைவுச்சின்னங்களை பாதுகாக்கக் கோரியும் பலர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு செய்தி ருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிரு பாகரன்எம்.துரைசாமி ஆகியோர் முன் நேற்று (9.8.2021) விசாரணைக்கு வந்ததுஅப்போது ஒன்றிய அரசுத் தரப்பில்உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுவிரிவான அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது எனக் கூறப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், ‘‘கல்வெட்டியல் துறையை ஒன்றிய அரசு மூடுவதற்கான நடவடிக்கையை எடுப்பதைப் போல தெரிகிறதுசுமார் ஒரு லட்சம் கல்வெட் டுகளில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியைச் சேர்ந்தவைதமிழ் கல்வெட்டுகளை ஏன் மைசூருவில் பாதுகாக்க வேண்டும்கருநாடக அரசு டன் ஏற்கெனவே காவிரி பிரச்சினை உள்ளது.

எனவேமைசூருவிலுள்ள கல்வெட் டுகளை தமிழ்நாட்டில் வைத்து ஏன் பாதுகாக்கக் கூடாதுசமஸ்கிருதத்தில் எத்தனை கல்வெட்டுகள் உள்ளனபார்சி மற்றும் அரபு மொழியில் எத்தனை கல்வெட்டுகள் உள்ளனதிராவிட மொழி கல்வெட்டுக்கள் எனக் கூறிஇங்கு சமஸ்கிருத மொழிக்கான கல்வெட்டியல் அலுவலரை நியமிக்க வேண்டிய தேவை என்னதமிழ் மொழி என்பதற்கு பதிலாக திராவிட மொழி எனக்கூறி குறைக்கக் கூடாது’’ என்றனர்இதற்கு ஒன்றிய அரசுத் தரப்பில்இது அரசின் கொள்கை முடிவு தொடர்புடையது எனக் கூறப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ‘‘ஒரு மொழியின் அடையாளத்தை மறைக் கும் வகையில் நடவடிக்கை இருக்கக் கூடாதுஅனைத்து மொழிகளும் முக்கியமானவை தான்இதற்கென முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக் கப்பட வேண்டும்’’ என்றனர்.

பின்னர் நீதிபதிகள், ‘‘தொல்லியல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட 760 பணியிடங்களில் மண்டல வாரியாக எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள் ளனஅதில் கல்வெட்டியல் துறைக் கென எத்தனை இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளனஉடையாளூரில் ராஜராஜ சோழனின் நினைவிடம் குறித்து அறிவியல்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து ஒன்றிய அரசின் தரப்பில் அறிக்கையளிக்க வேண்டும்ஒன்றிய தொல்லியல் துறையின் கல் வெட்டியல் துறை அதிகாரி ஆஜராக வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

சனி, 28 செப்டம்பர், 2019

சிவகங்கை அருகே பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

, செப்.28 சிவகங்கை அருகே கோவானூரில் உள்ள ஊருணி படித்துறையில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வா ளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், கோவானூர் பகுதியில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு, தொல்லியல் ஆய்வாளர்கள் கொல்லங்குடி புலவர் காளிராசா, ராமநாதபுரம் மோ. விமல் ராஜ் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கோவானூரில் உள்ள ஊருணி படித்துறையில் பழைமையான 6 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அவை அனைத்தையும் படியெடுத்த பின்னர் கல்வெட்டு ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியது:
கோவானூர் முகப்பில் உள்ள ஊருணியின் கிழக்குக் கரையில் படித்துறையும், வடக்கில் ஒரு வரத்துக் கால்வாயும் உள்ளன. அந்த ஊருணி படித்துறையில் வெவ்வேறு தகவல்களைக் கொண்ட பழைமையான கல்வெட்டுகள் 6 துண்டுகளாக காணப்படுகின்றன.
மேலும், அங்குள்ள மற்றொரு கல்வெட்டில் கி.பி.1216 முதல் கி.பி.1244 வரை மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் "பூமருவிய திருமடந்தையும் புவிமடந்தையும்' எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தி 9 வரிகளில் உள்ளன. இதில், தஞ்சையும், உறந்தையும் செந்தழல் கொளுத்தியது, மாளிகையும், மண்டபமும் இடித்தது உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
இக்கல்வெட்டுகளில், அரசின் வரிக் கணக்கை நிர்வகிக்கும் திணைக்கள நாயகம் பற்றியும், உழக்குடி முத்தன், தச்சானூருடையன், வீரபஞ்சான், முனையத்தரையன், அழகனான வானவன், விழயராயன், வந்தராயன் ஆகிய அரசு அதிகாரிகளின் பெயர்களும் பொறிக்கப் பட்டுள்ளன.
மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்று, கீழ்க்கூற்று, மதுரோதய வளநாடு, கீரனூர் நாடு, காஞையிருக்கை ஆகிய நாடுகளும், நல்லூர், மிழலைக் கூற்றத்து தச்சனூர், புல்லூர்க்குடி, மதுரோதய வளநாட்டு புறப்பற்று, காஞையிருக்கை உழக்குடி ஆகிய ஊர்களும் கல் வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கல்வெட்டில் வேலி, இருமா ஆகிய நில அளவுகளைக் குறிக்க குறியீடுகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. நெடில் எழுத்துகள் பெரும்பாலும் கல்வெட்டில் வருவதில்லை. ஆனால் இங்குள்ள ஒரு கல்வெட்டில் நீக்கி நீக்கி என்ற சொல் நெடிலாகவும், மற்றொன்றில் நிக்கி நிக்கி என குறிலாகவும் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர, இந்தப் பகுதியில் சங்க காலத்தைச் சேர்ந்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் அதிகளவில் காணப்படுகின்றன.
-  விடுதலை நாளேடு, 28.9.19