பிறந்த நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிறந்த நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

உலகத் தமிழர்களின் ஒருமித்த குரல்! புரட்சிக்கவிஞரின் பிறந்த நாளை உலகத் தமிழ் மொழி நாளாக அறிவித்திடுக!

  

புரட்சிக்கவிஞர் பிறந்தநாளில் ‘திராவிட மாடல்' அரசுக்கு நமது வேண்டுகோள்!

1

புரட்சிக்கவிஞரின் பிறந்த நாளை ‘உலகத் தமிழ் மொழி நாளாக' அறிவிக்கவேண்டும் என்பது புரட்சிக்கவிஞர் பிறந்தநாளில் ‘திராவிட மாடல்' அரசுக்கு நமது வேண்டுகோளும், உலகத் தமிழர்களின் வேண்டுகோளுமாகும் என்று  திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இன்று (29.4.2023) நமது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களது 133 ஆவது ஆண்டு பிறந்த நாள் பெருவிழா!

திராவிடர்தம் ஒப்பற்ற திருவிழா! இலக்கியப் பேரின்ப விழா!!

 தமிழ் மொழியும், இலக்கியமும் எத்தனையோ கவிஞர்களையும், ‘பாவேந்தர்களையும்‘, ‘கவிச்சக்ர வர்த்திகளையும்' கண்டுள்ளது.

சுயமரியாதை சூறாவளிக் கவிஞர்

ஆனால், இவரின் தனித்தன்மை, புரட்சிக்கவிஞர் என்பதே! 

தந்தை பெரியார்போல மற்றவர் நுழைய அஞ்சிய ஜாதி, மத, மூடநம்பிக்கைகளை எதிர்த்து தமது ஆற்றலை, அறிவை, ஆளுமையை எழுச்சி பெற இறுதி வரை வருமானம், புகழ்வேட்டை இவற்றைத் துறந்து, தந்தை பெரியார்தம் இலக்கியக் குரலாய் இறுதிவரை வாழ்ந்த சுயமரியாதை சூறாவளிக் கவிஞர் இவர்!

அடர்ந்த மூடநம்பிக்கைக் காட்டை அழிக்க, ஜாதி விஷ மரங்களை வெட்டிச் சாய்க்க, பெண்ணடிமையை அறுத்தெறிய, மானுடம் தழைத்தோங்கி புது உலகம் காண, தனது கவித்திறனை முனை மழுங்காத போர்க் கருவியாக, புரட்சி ஆயுதங்களாக ஆக்கி, புதுத்தடம் பதித்த முற்போக்குக் கவிஞர் இவர்!

எனவேதான் இவர் ‘புரட்சிக்கவிஞர்!'

மற்றவர் எளிதில் எட்ட முடியாத புரட்சியின் உச்சம் இவர்!

புகழும் பெயரும் அவருக்குத் துச்சம்!

திராவிடர் இயக்கத்தின் தனித்த 

‘தகைசால்' பெருமை!

தந்தை பெரியார் கொள்கைகளை, லட்சியங்களை சாகா இலக்கியங்களாக்கி சரித்திரம் படைத்த மேதை இவர்!

அச்சம் அவரைக் கண்டு அச்சப்பட்டே ஓடும்!

அப்படிப்பட்ட ஒப்பற்ற கவிஞரைப் பெற்ற பெருமை, திராவிடர் இயக்கத்தின் தனித்த ‘தகைசால்' பெரு வெளிச்சம்!

புரட்சிக்கவிஞருக்கு இணை ஏது?

மானுடப் பார்வையோடு மண்ணின் சுயமரி யாதையை விளைச்சல் நிலமாக்கிய மகத்தான புரட்சிக் கவிஞருக்கு இணை ஏது?

கூலிக்குப் பாடிய கவிஞன் அல்ல அவர்!

குவலயத்தையே புரட்டிப் போட ஏடெடுத்த ஏந்தல் அவர்!

‘உலகத் தமிழ் மொழி நாளாக' பிரகடனப்படுத்தி வரலாறு படைக்கவேண்டும் ‘திராவிட மாடல்' அரசு!

அவரது இந்த நாளை - உலக  மொழிகள் எல்லாம் தாய்மொழி நாளாக ஒவ்வொரு நாளைக் கொண்டாடி மகிழும் வாய்ப்புப் பெற்ற நிலையில், நமது ‘திராவிட மாடல்' அரசு, புரட்சிக்கவிஞர் பிறந்த நாளை ‘உலகத் தமிழ் மொழி நாளாக' பிரகடனப்படுத்தி, வரலாறு படைக்கவேண்டுமென்ற கோரிக்கை உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கின்ற காரணத்தால், அவர்களது விருப்ப விழைவை - வேண்டுகோளை நமது முதலமைச்சர் பரிசீலித்து, அறிவித்து, வரலாறு படைத்தால், அதைவிட ‘திராவிட மாடல்' ஆட்சி சாதனைக்கு வேறு ஏது சிகரம்?

அன்புடன் வேண்டுகிறோம்!

வாழ்க புரட்சிக்கவிஞர்!

வருக அவர் காண விரும்பிய உலகு!!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

29.4.2023 

புதன், 1 மார்ச், 2023

ஆண்டு 70 காணும் சமூகநீதி சரித்திர நாயகராம் மாண்புமிகு மானமிகு முதலமைச்சரை தாய்க்கழகம் உச்சிமோந்து வாழ்த்தி மகிழ்கிறது!


* உழைப்பால் உயர்நிலையை அடைந்த உன்னதத் தலைவர் 

* அடுத்த தலைமுறை - 2024 மக்களவைத் தேர்தல் அவரின் இலக்கு!

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி   தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் முதலமைச்சர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முதலமைச்சருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து, புத்தகங்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் 

கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் 

வீ. அன்புராஜ், வழக்குரைஞர் த.வீரசேகரன், பொருளாளர் வீ. குமரேசன் மற்றும் தி.மு.க. முன்னணி தலைவர்கள்  உள்ளனர். 

(சென்னை பெரியார் திடல், 1.3.2023)


சனி, 1 ஜனவரி, 2022

95 வயதுவரை ஓய்வின்றி உழைத்தவர் தந்தை பெரியார் அவரது தொண்டனாகிய எனக்கும் ஓய்வு இல்லை

 

ஜாதி ஒழிக்கப்படும்வரை நமக்கு ஓய்வே கிடையாது

தமது பிறந்த நாள்  விழாவில் தமிழர் தலைவர் சூளுரை!

நமது சிறப்புச் செய்தியாளர்

 சென்னைடிச.3 95 வயது வரை ஓய்வின்றி உழைத்த தந்தை பெரியார் வழிவந்த எனக்கு ஓய்வு என்பது கிடையாதுஜாதி - சட்டப்படி ஒழிக்கப்படும்வரைகடைசி மூச்சு இருக்கும்வரை எம் பணி தொடரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா (2.12.2021) ஏற்புரையில் அவர் கூறியதாவது:

பிறந்த நாள் விழா வேண்டாம் என்று கூறுவதுதான் என் வழக்கம்ஆனால்இவ்வாண்டு கொண்டாட வேண்டும் என்று நானே சொன்னேன்என்ன காரணம்கழகத் தோழர்களைகுடும்பங்களைச் சந்தித்து நீண்ட காலம் ஆயிற்று.

கொள்கை உறவுகள் என்று சொல்லும்போது எல்லாக் கட்சிகளிலுமே இருக்கிறார்கள்அவர்களை எல்லாம் சந்திக்க இது ஒரு வாய்ப்பு.

கரோனா என்னையும்என் வாழ்விணையரையும் பாதித்ததுநாங்கள் குணம் பெறக்கூடாது என்று பிள்ளை யாரை சிலர் வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள்எந்தப் பிள்ளையாரைநம்மால் வீதிகளில் உடைக்கப்பட்ட பிள்ளையாரை.

தந்தை பெரியார் மறைந்து 48 ஆண்டுகள் ஓடி விட்டனஅன்னையார் மறைந்த 43 ஆண்டுகள் ஓடி விட்டனஆனாலும்அவர்கள் வகுத்த கொள்கை வழி பயணித்துக்கொண்டு இருக்கிறோம்.

தந்தை பெரியார் 1973 டிசம்பர் 24 இல் மறைந்தார் என்றால், 1974 ஜனவரி 6 ஆம் தேதி திருச்சியிலே கழகப் பொதுக்குழு கூடி முடிவு எடுத்தோம்சூளுரை மேற்கொண்டோம்.

''தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை அவர் போட்டுத் தந்த பாதையில் எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல் வென்று முடிப்போம்!'' என்பதுதான் அந்த உறுதிமொழியாகும்.

தந்தை பெரியார் தேதி கொடுத்துகலந்துகொள்ள முடியாமல் போன அந்தத் திருவண்ணாமலையிலிருந்தே உறுதிமொழி பொதுக்கூட்டங்களில் அம்மா அவர்களும்நாங்களும் பயணித்தோம்.

நம்முடைய போர் 5000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டதுஏகலைவன் கட்டை விரல் வெட்டப்பட்டதும்சம்பூகன் தலை வெட்டப்பட்டதும் முதலே இனப் போராட்டம்வருணாசிரம எதிர்ப்புப் போராட்டம் தொடங்கப்பட்டு விட்டது.

இப்பொழுது ஒரு முக்கிய காலகட்டம் - திராவிட மாடல் ஆட்சி - இந்தியாவிலேயே சிறந்த முதல் மாநிலம் - சிறந்த முதலமைச்சர் - நமக்குக் கிடைத்திருக்கிறார்வெற்றிடம் என்றனர்கழகம் இல்லா ஆட்சி என்றனர்நடிகரைத் தேடினர்எல்லாம் பகற்கனவாயிற்றுஒவ் வொரு நாளும் நாமெல்லாம் தலைநிமிர்ந்து நிற்கும் அளவுக்கு சாதனை குவிக்கும் ஆட்சி தமிழ்நாட்டில்.

இந்த ஆட்சியின் திராவிட தத்துவம் இந்தியா முழு வதும் பரவிட வேண்டும்அதற்காக நாம் உழைக்க வேண்டும்.

இங்கே நமது கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள் உரிமை எடுத்துக்கொண்டு சொன்னார். 89 வயதிலும் அதிக சுற்றுப்பயணம் தேவையாகுறைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

தயவுசெய்து என்னைக் கிழவனாக்கி விடாதீர்கள்நான்நாம் ஏற்றுக்கொண்ட தலைவர் தந்தை பெரியார் 95 வயதுவரை - கடைசி மூச்சு அடங்கும்வரை உழைத்தார்.

அய்யா சொல்லுவார்மற்றவர்களுக்கெல்லாம் இரண்டு கால்கள் - எனக்கோ ஆறு கால்கள்எனது இருபக்கமும் தலா ஒரு தோழர் - அவர்கள் இருவரின் நான்கு கால்கள்எனது இரு கால்கள்ஆக மொத்தம் ஆறு கால்கள் என்பார் அய்யா.

இயற்கையான வழியில் சிறுநீர் கழிக்க முடியாத நிலையில்அறுவை சிகிச்சை செய்யப்பட்டுஅந்தப் பகுதியில் ஓட்டை போடப்பட்டுஒரு குழாய் வழியாக சிறுநீர் வாளியில் உள்ள ஒரு பாட்டிலில் போய் வடியும்அதனையும் ஒரு பக்கத்தில் சுமந்துகொண்டுபயணத்தைக் குறைக்காமல்மக்களை சந்தித்து தன் பிரச்சாரத்தை செய்துகொண்டுதானே இருந்தார்.

அப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதுஅந்தக் குழாய் கொஞ்சம் விலகினாலும் வலி தாங்க முடியாமல் துடிதுடித்துப் போவார்புரண்டு புரண்டு உடலை அசைத்து வலியைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டு, 'ஆகவே தோழர்களே!' என்று ஆரம்பித்துவிடுவாரே!

அய்யா கடைசியாக மரண சாசனமாக சென்னை தியாகராயர் நகரில் ஆற்றிய உரையின்போதுகூட அந்த நிலை ஏற்பட்டதுண்டே!

அந்தத் தலைவரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட தொண்டன் நான்இந்நிலையில்என் சுற்றுப்பயணத்தைக் குறைத்துக்கொள்ளச் சொல்லுவது நியாயமா?

நீங்கள் சொன்ன கருத்தை நான் குறைகூறவில்லைஎதற்கும் மேல்முறையீடு உண்டு அல்லவாஉங்கள் கோரிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த இயந்திரம் இயங்கிக் கொண்டே இருக்கவேண்டியதுதான்  இயந்திரம் இயங்காவிட்டால் பழுதாகிவிடுமேஇங்கே மின்சாரமும் இருக்கிறது.

இன்னும் இந்த நாட்டில் ஜாதி இருக்கிறதேவருணாசிரமம் இருக்கிறதே - இது தேசிய அவமானம் அல்லவா!

1924 ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தபோதே கேரளா வரை சென்று தீண்டாமையை எதிர்த்து வைக்கத்தில் போராடவில்லையா?

அந்தத் தீண்டாமை ஒழிப்பின் தொடர்ச்சிதான்ஒரு கட்டம்தான்சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நமது மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகருக்கான ஆணை செயல்படுத்தப்பட்டு இருப்பது (பலத்த கரவொலி).

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17 ஆம் பிரிவு தீண்டாமை ஒழிக்கப்படுவதாக Untouchability is Abolished  என்று சொல்லுகிறதுஇதே இடத்தில் 1973 டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன?

தீண்டாமை Untouchability ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி சிணீstமீ ஒழிக்கப்படுகிறது என்று இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்படவேண்டும் என்று தீர்மானிக்கப்படவில்லையாஜாதியிலிருந்து தோன்றுவதுதானே தீண்டாமை.

அந்தத் தீர்மானம் செயல்படும்வரை நமக்கு ஓய்வு இல்லைஎனவேஉங்கள் தீர்ப்பை மறு ஆய்வு செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உங்களையெல்லாம் பார்க்கும்பொழுது எனது பேட்டரி சார்ஜ் ஏறுகிறதுஎன்னை நீங்கள் பார்க்கிறபொழுது உங்களுக்கு சார்ஜ் ஏறுகிறது என்றார் கழகத் தலைவர் (முழு உரை விரைவில்).

வெள்ளி, 8 அக்டோபர், 2021

‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை'' நூல் வெளியீட்டு விழாவில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., விளக்கவுரை

 தமிழ்ச் சமூகத்திற்குக் கொடையளித்திருக்கிறார் தமிழர் தலைவர் பி.ஜே.பி.பற்றி எழுதாமல் - ஆர்.எஸ்.எஸைப்பற்றி ஏன் எழுதவேண்டும்?

‘‘ஆர்.எஸ்.எஸ்என்னும் டிரோஜன் குதிரை'' நூல் வெளியீட்டு விழாவில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., விளக்கவுரை

சென்னைசெப்.14 பி.ஜே.பி.பற்றி எழுதாமல்ஆர்.எஸ்.எஸைப்பற்றி ஏன் எழுதவேண்டும்என்பதற்கான விளக்கத்தை அளித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள்.

‘‘ஆர்.எஸ்.எஸ்என்னும் டிரோஜன் குதிரை’’

புத்தக வெளியீட்டு விழா!

கடந்த 8.9.2021  அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘‘ஆர்.எஸ்.எஸ்என்னும் டிரோஜன் குதிரை'' புத்தக வெளியீட்டு விழாவில்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன் எம்.பி., அவர்கள் சிறப்புரையாற்றினார்..

அவரது சிறப்புரை வருமாறு:

இந்த நூல் வெளியீட்டு விழாவிற்குத் தலைமை வகித்து நெறிப்படுத்திக் கொண்டிருக்கின்ற திராவிடர் கழகத் துணைத் தலைவர் அண்ணன் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக் கின்ற நம் அனைவரையும் வரவேற்று சிறப்பித்திருக்கின்ற திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் மானமிகு பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,

அய்யா அவர்களின் - தமிழர் தலைவரின்

ஆர்.எஸ்.எஸ்என்னும் டிரோஜன் குதிரை என்னும் நூலை வெளியிட்டுசிறப்புரை வழங்கி விடைபெற்று சென்றி ருக்கின்ற மக்களவை உறுப்பினர் மானமிகு தயாநிதி மாறன் அவர்களே,

புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்திருக்கின்ற திராவிட முன்னேறக் கழகத்தின் மாநில செய்தித் தொடர்பு இணை செயலாளர் வழக்குரைஞர் ராஜீவ்காந்தி அவர்களே,

எனக்கு முன்னர் இங்கு வாழ்த்துரை வழங்கி இந் நிகழ்வை சிறப்பித்திருக்கின்ற சட்டப்பேரவை உறுப் பினர் வழக்குரைஞர் பரந்தாமன் அவர்களே,

நன்றியுரையாற்றவிருக்கின்ற தங்கை மணியம்மை அவர்களேநிறைவாக நம்மிடையே சிறப்புரை வழங்க விருக்கின்ற நூலாசிரியரும்தமிழர் தலைவருமான அய்யா அவர்களே,

வழக்கம்போல இந்த அரங்கில் திரண்டுஇந்த நிகழ்வையும் சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற தமிழ்ச் சொந்தங்களேஜனநாயக சக்திகளேஉங்கள் அனை வருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பது என்னுடைய கடமை!

நேற்று நான் புதுடில்லிக்குப் புறப்படுகின்றபொழுதுநம்முடைய கவிஞர் அவர்கள் தொலைப்பேசியில் தொடர்புகொண்டுஅய்யா அவர்களின் இந்த நூல் வெளியீட்டு விழா குறித்து என்னிடத்தில் கூறினார்.

நான் இன்றிரவுதான் கடைசி விமானத்தைப் பிடித்து சென்னைக்கு வருவதாகத் திட்டமிட்டு இருந்தேன்.

அய்யா அவர்களின் அந்தத் தகவலை கேட்டதும்உடனே வருகிறேன்தமிழர் தலைவரின் அந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பது என்னுடைய கடமை - அந்த வாய்ப்பை நான் நழுவவிடமாட்டேன் என்று ஒப்புதல் அளித்தேன்.

இந்த நிகழ்விற்குப் பிறகுஇன்னும் சில நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கவேண்டும்நீண்ட நேரம் பேசவேண்டும் என்கிற பேராவல்தமிழர் தலைவர் அவர்கள் இந்தக் கரோனா கொடுந்தொற்றின் நெருக்கடி சூழலிலும்நேரத்தை எந்த அளவிற்குப் பயனுள்ள அளவில் செலவிட்டிருக்கிறார் என்பதை எண்ணி வியந்து போகிறேன்பெருமைப்படுகிறேன்.

தமிழ்ச் சமூகத்திற்குக் கொடையளித்திருக்கிறார் தமிழர் தலைவர்

ஓய்வாக இருக்கவேண்டும் என்று சோர்ந்து வீழ்ந்து விடாமல்இந்தச் சூழலிலும்கூட காலத்திற்கான தேவை யைக் கருதிஇந்த நூலைப் படைத்துதமிழ்ச் சமூகத் திற்குக் கொடையளித்திருக்கிறார்.

பி.ஜே.பி.யைப்பற்றி எழுதாமல்ஆர்.எஸ்.எசைப்பற்றி ஏன் எழுதவேண்டும்நாட்டை ஆண்டு கொண்டிருப்பது பி.ஜே.பி. - நம்மோடு களத்தில் மல்லுக் கட்டி நிற்பது பி.ஜே.பிஆகவேபி.ஜே.பிஎன்ற அரசியல் கட்சியைப்பற்றி எழுதாமல்அதை அம்பலப்படுத்த முனையாமல்ஆர்.எஸ்.எஸ்.பற்றி எழுதவேண்டிய தேவை என்னஇதை நாம் கூர்ந்து நோக்கவேண்டும்ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.

40 ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கிப் படித்த முதல் நூல்  ‘‘ஆர்.எஸ்.எஸ். - ஓர் அபாயம்‘’

40 ஆண்டுகளுக்கு முன்னால்என் நினைவைத் திரும்பிப் பார்க்கிறேன்இதே பெரியார் திடலில், 1980-களில் நான் வாங்கிப் படித்த முதல் நூல் என்று கருது கிறேன், ‘‘ஆர்.எஸ்.எஸ்ஓர் அபாயம்'' என்கிற நூல் - பெரியார் திடலில் வாங்கிய புத்தகம்அப்பொழுது நான் கல்லூரி மாணவன்.

40 ஆண்டுகளுக்குப் பிறகுமீண்டும் இதே பெரியார் திடலில் ஆர்.எஸ்.எஸ்.பற்றி ஒரு நூல் எழுதத் தேவை எழுந்துள்ளதுஅதுவும் தமிழர் தலைவர் அவர்களேஅந்த நூலை எழுதவேண்டிய ஒரு தேவை எழுந்துள்ளது.

அந்த நூலை வெளியிட்டுபெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பை நான் பெரியார் திடலில் பெற்றிருக்கிறேன் என்பதை எண்ணிப் பார்க்கிறேன்.

40 ஆண்டுகளுக்கு முன்பும் - 40 ஆண்டுகளுக்குப் பின்பும்!

40 ஆண்டுகளுக்கு முன்பும்ஆர்.எஸ்.எசை மக்களுக்கு அடையாளப்படுத்த வேண்டிய தேவை இருந்தது - அம்பலப்படுத்தவேண்டிய தேவை இருந்தது.

40 ஆண்டுகளுக்குப் பின்பும் ஆர்.எஸ்.எசை மக்களிடத்தில் தோலுரித்துக் காட்டவேண்டிய தேவை உள்ளது.

பாரதீய ஜனதா கட்சி என்பதுஆர்.எஸ்.எஸ்பெற்ற பிள்ளை - ஆர்.எஸ்.எஸ்என்கிற நாற்றங்காலில் வளர்ந்து நிற்கின்ற ஒரு மாமரம் - பெரிய மரம் - நச்சு மரம்.

ஆர்.எஸ்.எசைப் புரிந்துகொண்டால்தான்பி.ஜே.பியைப் புரிந்துகொள்ள முடியும்ஆகவேதான்பெரியார் திடல்திராவிடர் கழகம் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்குறித்த விவரங்களைத் திரட்டிஅடுத்தடுத்த தலை முறைக்கு சமர்ப்பித்துக் கொண்டே - ஒப்படைத்துக் கொண்டே இருக்கிறது.

இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்.சின் செயல்திட்டங்கள் என்னவாக இருக்கின்றன என்பதை அம்பலப்படுத்தக் கூடிய வகையில்தயாநிதி மாறன் அவர்கள் சொன்ன தைப்போலஓர் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு என்று சொல்லுகிற வகையில்பல்வேறு தலைப்புகளின்கீழ்மிக அருமையான ஒரு நூலை நமக்கு அளித்திருக்கிறார்அருளியிருக்கிறார் நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்கள்.

1925 இல் தோன்றிய இரண்டு முக்கிய இயக்கங்கள்!

தன்னுடைய பதிப்புரையில் குறிப்பிடுகிறார், 1925 இல் இந்திய சமூகச் சூழலில்இரண்டு முக்கிய இயக்கங்கள் - கருத்தியல் சார்ந்த இயக்கங்கள் தோன்றினஒன்றுஆர்.எஸ்.எஸ்., இன்னொன்று சுயமரியாதை இயக்கம்பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில்இந்தத் தமிழ் மண்ணில் தோன்றிய இயக்கம்இரண்டும் நேர் எதிர் துருவங்களில் இயங்கக் கூடிய இயக்கங்கள்.

ஆர்.எஸ்.எஸ்இயக்கம் உருவாகுவதற்கு முன்பேமதம் சார்ந்த அமைப்புகள் பல தோன்றியிருக்கின்றனஆர்.எஸ்.எஸ்தோன்றுவதற்கு அரை நூற்றாண்டு களுக்கு முன்பே ஆரிய சமாஜம் தோன்றியதுதயானந்த சரசுவதி சாமிகள் உருவாக்கிய அமைப்பு.

ஹிந்து மதத்தைச் சீர்திருத்தவேண்டும் என்கின்ற அடிப்படையில் உருவாக்கிய அந்த அமைப்பு ஹிந்து என்கிற  கருத்தியலை  இங்கே கட்டமைத்த இயக்கம்.

சுவாமி விவேகானந்தரும்கூட ஹிந்து என்று சொல்கிறபொழுதுநமக்குள் ஒரு சக்தி பிறக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்குஅந்த சொல்லாடலை வெகுவாக மக்களிடத்திலே கொண்டு போய்ச் சேர்த் தவர்ஹிந்து மகாசபை தோன்றியது.

இப்படி பல இயக்கங்கள் தோன்றினாலும்கூடஅந்த இயக்கங்கள் எல்லாவற்றையும்விடஆர்.எஸ்.எஸ்என்கிற இயக்கம்தான் இன்றைக்கு மிகப்பெரிய அளவிலே பேசு பொருளாக மாறியிருக்கிறது.

உண்மையில் ஆர்.எஸ்.எஸ்.தான் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது

ஆர்.எஸ்.எஸ்என்கிற அந்த இயக்கம் - இன்றைக்கு இந்திய ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடிய அள விற்கு வலிமை பெற்றிருக்கிறதுபி.ஜே.பிஆட்சியில் அமர்ந்திருக்கிறது என்றாலும்உண்மையில் ஆர்.எஸ்.எஸ்.தான் அமர்ந்திருக்கிறது.

பிரதமர் வேட்பாளராக யார் என்று அடையாளப் படுத்தக் கூடிய இடத்தில்பி.ஜே.பி.யின் முன்னணித் தலைவர்கள் இல்லைஆர்.எஸ்.எஸின் முன்னணித் தலைவர்கள்தான் இருக்கின்றார்கள்.

நாடாளுமன்றத்தில் எந்த சட்ட மசோதாவைத் தாக்கல் செய்யவேண்டும் என்று பி.ஜே.பி.யின் தலை வர்கள் முடிவு செய்கிறார்கள் என்பதைவிடஆர்.எஸ்எஸ்.சின் தலைவர்கள்தான் முடிவு செய்கிறார்கள்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இயற்றவேண்டும் - அதை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் என்று பி.ஜே.பிவிரும்பியது என்பதைவிட,

ஆர்.எஸ்.எஸ்விரும்பியது - ஆர்.எஸ்.எஸ்.தான் அதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான் இயல்பான உண்மை - எதார்த்தமான உண்மை.

ஆர்.எஸ்.எஸைப் புரிந்துகொள்ளுங்கள் என்கிற அடிப்படையில்...

ஆகவேதான்தமிழர் தலைவர் அவர்கள் ஆர்.எஸ்எஸைப் புரிந்துகொள்ளுங்கள் என்கிற அடிப்படையில்இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்எப்படியெல்லாம் ஹிந்துத் றதுவா கொள்கையை உயர்த்திப் பிடிக்கிறது - அதனு டைய நோக்கம் என்னஹிந்து ஒற்றுமை என்றால்அதனுடைய நோக்கம் என்ன?

ஹிந்துத்துவா என்ற கோட்பாடு எதை நோக்கியதாக இருக்கிறது?

எண்ணிக்கை அடிப்படையில் அவர்கள் சிறுபான்மையினர்

பார்ப்பனர்கள் மூன்றே சதவிகிதம்பேர் என்று நாம் திரும்பத் திரும்பச் சொல்கிறோம்அவர்கள் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்கள்மிகமிக சிறுபான்மை சமூகத் தைச் சார்ந்தவர்கள்.  எண்ணிக்கை அடிப்படையில் அவர்கள் சிறுபான்மையினர்ஆனால்கருத்தியல் அடிப்படையில் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.

கருத்தியல் சார்ந்த பெரும்பான்மையாக அவர்கள் இருக்கிறார்கள்அதற்கான யுக்திகள் - கருத்தியல் சார்ந்த பெரும்பான்மையை கட்டமைப்பதற்கான யுக்திகள்தான் ஆர்.எஸ்.எஸ்கையாளக்கூடிய பல்வேறு வழிமுறைகள்.

அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட தற்காலத்து வளர்ச்சிதான் ஹிந்துத்துவா என்ற கருத்தியல் வளர்ச்சிபுதிதாக இன்றைக்கு உருவாக்கியிருக்கிற ஒரு கோட்பாடு.

இவர்கள் எல்லோருக்கும் அடிப்படையான கருத்தியல் என்பது சனாதனம்.

அதனுடைய நேரிடையான பொருள் என்பது - நிலையானது - அழிவில்லாதது என்று பொருள்.

ஆனால்அந்த அழிவில்லாதது என்னவென்றால்நானே படைத்த நால் வருண தருமத்தை என்னாலேயே மாற்ற முடியாது என்பதுதான்.

மாற்ற இயலாதது - அழிக்க முடியாதது - இது இயங்கியலுக்கே முரணானதுஇயங்கியல் போக்குக்கு எதிரானதுஎல்லாம் மாறும் என்பதுதான் இயங்கியல்.

நான்கு வருணம் என்கிற சமூகப் பாகுபாடு மாறாது

ஆனால்மாறவே மாறாது - யாராலும் மாற்றவே முடியாது - சனாதனத்தின் அடிப்படை அதுதான்.

என்ன மாறாது?

பிறப்பின் அடிப்படையிலான உயர்வு - தாழ்வு என்கிற இந்த சமூக பாகுபாடு - சமூக வேறுபாடு மாறாது.

நான்கு வருணம் என்கிற இந்த சமூகப் பாகுபாடு மாறாதுநான்கு வருணங்களில் பிராமண வர்ணம் என்கிற அந்தப் பார்ப்பனர்கள்தான் எல்லோரையும்விட உயர்ந்தவர்கள் என்கிற இந்த நிலைப்பாடு மாறாது - இந்தக் கருத்தியல் மாறாது.

ஒவ்வொருவருக்குமான வருணதர்மம் என்று சொல்லக்கூடிய வருணம் சார்ந்த தொழில் மாறாது - அதைத்தான் அவர்கள் செய்யவேண்டும் - செய்யக் கடமைப்பட்டவர்கள்இறைவன் அப்படி அதை நியமித்திருக்கிறான் - தீர்மானித்திருக்கிறான் - நிர்ணயித் திருக்கிறான்அது மாறாது.

ஆகவேசனாதனம் என்கிற சொல் எவ்வளவு பெரிய கோட்பாட்டை உள்ளடக்கியதாகக் கொண்டிருக்கிறதுஅதை அவர்கள் தங்களுக்கான கருத்தியலாக வளர்த்த காலத்தில்அது  பார்ப்பனியம்.

தங்களுக்கே உரியது என்று அவர்கள்  அதை கையில் எடுத்த காலம் - பார்ப்பனியமாக அதை வளர்த் தெடுத்தது.

ஹிந்து என்கிற சொல்லாடல் அவர்களுக்குத் தேவைப்படுகிறது

அது தங்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய வகையில்மேலும் வளர்த்தெடுக்கப்படவேண்டியசெழுமைப்படுத்தவேண்டிய தேவையைப் பெறுகிறது  அப்பொழுதுதான் அது ஹிந்துயிசமாக மாறுகிறது.

ஹிந்து என்கிற சொல்லாடல் அவர்களுக்குத் தேவைப்படுகிறதுபிராமணர்கள் - பிராமணரல்லாத வர்கள் அல்லது பார்ப்பனர்கள் - பார்ப்பனரல்லாதவர்கள் என்று ஒரு மிகப்பெரிய இடைவெளி இருந்த சூழலில்பார்ப்பனரல்லாதவர்களை ஹிந்துக்களாக தம்மோடு அரவணைத்துக் கொள்வதன்மூலம்தான்அணிதிரட்டிக் கொள்வதன்மூலம்தான் தங்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்கிற தேவை பார்ப்பனர்களுக்கு எழுகிறது.

அதனால் அவர்கள் திட்டமிட்டு வளர்த்தவளர்த்தெடுத்த செழுமைப்படுத்திய அடுத்த நிலைதான் ஹிந்துயிசம் என்கிற அரசியல்அது ஒரு ஆன்மிகம் அரசியல் சார்ந்ததுகல்ச்சுரல் அன்ட் பிரிச்சுவல் என்ற தளத்திலே மட்டும் ஒருங்கிணைப்பதற்கு மட்டும் பயன்படுத்தியது.

உன் தெய்வமும் ஹிந்து தெய்வம்தான்உன் கலாச்சாரமும் ஹிந்து கலாச்சாரம்தான்உன் வழிபாட்டு முறையும் ஹிந்து வழிபாட்டு முறைதான் என்று கலாச் சார தளத்திலே ஆன்மிக தளத்திலே இணைத்துக் கொள்வதற்கான ஒரு கோட்பாடாக அதை வளர்த் தெடுக்கிறார்கள்.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும் - அதைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும் - அப் பொழுது தான் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

பெருந்தெய்வங்களோடு சிறு தெய்வங்களை இணைத்தது கலாச்சாரத் தளம்.

சிவன் - பெருமாள் அல்லது சிவன் - விஷ்ணு என் கிற பெருந்தெய்வ வழிபாடுகளோடு முருகன் போன்ற குலதெய்வ வழிபாடுகளை இணைத்துக் கொண்டார்கள்முனீஸ்வரன் போன்ற குலதெய்வ வழிபாடுகளை இணைத்துக் கொண்டார்கள்.

நம்முடைய கலாச்சாரத்தை - நடுகல் வழிபாட்டுக் கலாச்சாரத்தை....

நம்முடைய முன்னோர்களை எண்ணிநாம் நடுகல் நட்டு அவர்களை வழிபடுகிற வழிபாட்டு முறையைக் கையாண்டு வந்த நம்முடைய கலாச்சாரத்தை - நடுகல் வழிபாட்டுக் கலாச்சாரத்தை - அவர்களின் பெருந்தெய்வ வழிபாட்டுக் கலாச்சார முறையோடு இணைத்துக் கொண்டார்கள்.

கலாச்சார தளத்திலேஆன்மிகத் தளத்திலே இணைத்துக் கொண்டார்கள்இணைப்பதற்கு இவர் களும் இடங்கொடுத்தார்கள்இயைந்து போனார்கள்இணங்கிப் போனார்கள்.

இன்றைக்குக் குலதெய்வ வழிபாட்டு முறையே அருகி வருகிறதுமுருகனும் ஹிந்துக் கடவுளாக ஏற்கப் பட்டுவிட்டான்சிவபெருமானுக்குப் பிள்ளையாக அறிவிக்கப்பட்டு விட்டான்.

மதவழி தேசியத்தைக் கட்டமைப்பதற்கு...

ஆகவேபெருந்தெய்வ வழிபாட்டு முறையும்சிறுதெய்வ வழிபாட்டு முறையும் அல்லது குலதெய்வ வழிபாட்டு முறையும் இணைக்கப்பட்ட வரையில்அந்தக் கலாச்சார தளத்திலே அல்லது ஆன்மிக தளத்திலே அது ஹிந்துயிசமாக வளர்ந்த நிலையில்தங்களுடைய பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறதுஅதிகார வலிமையைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டிய தேவை இருக்கிறதுஅரசியல் தளத்திலே ஆளுமை செலுத்தவேண்டிய தேவை இருக்கிறது என்கிற சூழலில்இங்கே ஒரு மதவழி தேசியத்தைக் கட்டமைப்பதற்குஅரசியல் தளத்தில் திட்டமிட்டுவளர்த்துக்கொண்ட இன்றைய தத்துவம் தான்இன்றைய கோட்பாடுதான் ஹிந்துத்துவா என்பது.

ஹிந்துத்துவா என்பது மிகமிக அண்மைக்காலத்திலே இவர்கள் வலிந்து உருவாக்கிக் கொண்ட ஒரு கோட்பாடு.

எல்லாம் ஆர்.எஸ்.எஸ்செயல்பாட்டுத் தளத்திலே தீர்மானிக்கப்பட்டவைஆட்சி அதிகாரத்தைக் கைப் பற்றுவதற்காக இவர்கள் உருவாக்கிய அமைப்புதான் ஜனசங்கம் என்பது.

ஜனசங்கம்தான்பின்னாளில் பாரதீய ஜனதா கட்சியாக மாறுகிறதுஜனசங்கம் தேர்தலில் நின்ற பொழுதுஇரண்டே இரண்டு இடங்களில் வெற்றி பெற்றதுஅதன் பிறகு அவர்கள் பாரதீய ஜனதா கட்சி என்று ஓர் அரசியல் பிரிவை உருவாக்கிஹிந்துராஷ்டிம் என்கிற ஒரு புதிய கருத்தை முன்வைத்துஹிந்துக்களை எல்லாம் ஒருங்கிணைத்துஹிந்துப் பெரும்பான்மை வாதத்தின் அடிப்படையில்ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது.

ஹிந்து பெரும்பான்மையை வலிந்து திரட்டுவது...

எனக்கு இஸ்லாமியர்களின் வாக்கு தேவையில்லை என்றுகிறித்துவர்களின் வாக்கு தேவையில்லை என்றுமுஸ்லிம் வெறுப்பையும்கிறித்துவ வெறுப்பையும் - அதற்கான மூலாதாரமாக வைத்துஹிந்து பெரும் பான்மையை வலிந்து திரட்டுவதுஅதற்கு அவர்களுக்கு பாபர் மசூதி இடிப்பு என்பது ஒரு ஸ்டேட்டஜி.

பாபர் மசூதி இடிப்புக்கு முன் நிகழ்ந்த ஒன்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் - வரலாற்று நிகழ்வு அதுமண்டல் பரிந்துரையை வி.பி.சிங் அவர்கள் நடை முறைப்படுத்தியபொழுது பாரதீய ஜனதா கட்சி கையாண்ட யுக்தியை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கல்விவேலை வாய்ப்பு கேள்விக்குறி

ஷெட்யூல்டு காஸ்ட் அண்ட் ஷெட்யூல்டு டிரைப்ஸ் மக்களுக்கான இட ஒதுக்கீடு என்பது புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் மூலமாக அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கல்விவேலை வாய்ப்பு கேள்விக்குறியாக மாறுகிறது.

அப்பொழுதே புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்இதை முக்கியமான கோரிக்கையாக வைக்கிறார்பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் குறித்து ஒரு கமிட்டி அமைக்கப்படவேண்டும் என்றுகாங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலம்தான்ஆனால்அது நடைமுறைக்கு வரவில்லை.

(தொடரும்)