ஞாயிறு, 29 மே, 2022

அரசு பேருந்துகளில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பயணம்: அதிகாரிகளுக்கு உத்தரவு


சென்னை, மே 29 அரசு பேருந்துகளில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணத்தை செயல்படுத்த அனைத்து மேலாளர்களுக்கும் முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:போக்கு வரத்து துறையின் மானியக்கோரிக்கை மீது சட்டமன்ற பேரவையில் கடந்த மே 5ஆம் தேதி நடந்த விவாதத்திற்கு பின் போக்குவரத்து துறை அமைச்சர் கீழ்க்கண்ட அறிவிப் பினை வெளியிட்டார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். (தற்போது 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது) மேற்கண்ட அறிவிப்பினை உடனடியாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உருவச் சிலையினை நேற்று (28.05.2022) தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு அவர்கள் திறந்து வைத்தார்.

செவ்வாய், 10 மே, 2022

தருமபுர ஆதீனம் பல்லக்குச் சவாரி பிரச்சினை: மனிதனை மனிதன் சுமக்கும் அநாகரிகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்

ஞாயிறு, 8 மே, 2022

உயிர்மை' ஆசிரியர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்குப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விருது

உயிர்மை' ஆசிரியர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்குப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விருதினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்

'உயிர்மை' ஆசிரியர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்குப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விருதினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். புரட்சிக்கவிஞரின் ''உலகுக்கோர் அய்ந்தொழுக்கம்'' என்ற நூலினை தமிழர் தலைவர் வெளியிட, கவிஞர் மனுஷ்யபுத்திரன் பெற்றுக்கொண்டார்.  பேராசிரியர் ந.இராமநாதன் அவர்கள் தொகுத்த ''பெரியார் பாடங்கள்- 3''  நூலினை பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் வெளியிட, முனைவர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி பெற்றுக்கொண்டார் (சென்னை பெரியார் திடல், 29.4.2022).


பெரியார் திடலா? இளைஞர்களின் கருங்கடலா?

குமரி முதல் சென்னை வரை ஒலித்திட்ட வீரமணியோசை