திருக்குறள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருக்குறள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 மே, 2023

அரசு அலுவலகங்களில் நாள்தோறும் திருக்குறள் எழுதவேண்டும் தலைமைச் செயலாளர் ஆணை

 

 6

சென்னை, மே 10 - தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அய்ஏஎஸ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இரண்டு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். 

தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்கள், கழகம் மற்றும் வாரியத் தலைவர்களுக்கும் வெ. இறையன்பு எழுதியிருக்கும் கடிதத்தில், 

"தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள கரும்பலகையில், நாள்தோறும் ஒரு திறக்குறளை அதன் பொருளுடன் எழுதி வைக்க வேண்டும். மேலும், ஆங்கில அர்த்தத்துடன் கூடிய தமிழ் கலைச் சொற்களை காட்சிப்படுத்த வேண்டும்" என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதனை பின் பற்ற வேண்டும் என்றும், ஏற்கனவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் ஒரு சில அலுவலகங் களைத் தவிர்த்து மற்ற துறைகளில் இந்த உத்தரவு பின்பற்றப்பட வில்லை என்றும், இனிமேல் சரியாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 3 டிசம்பர், 2019

உலகத் தத்துவஞானி தந்தை பெரியார் நூலகம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு: அரபி மொழி பெயர்ப்பில் திருக்குறள் வெளியீடு

குவைத், டிச.1 உலகத் தத்துவஞானி தந்தை பெரியார் நூலகம் சார்பில் திருக்குறள் மாநாடு 29.11.2019 அன்று குவைத் ரிக்காயி நெய்வேலி ராசாராம் சீனியம்மாள் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு நூலகக் காப்பாளர் ச.செல்லபெருமாள் தலைமை வகித்தார்.

தமிழ்நாடான், முத்துகுமார் முன்னி லையில் நடைபெற்ற விழாவில் கலை நிகழ்ச்சிகளில்ஜென்சி ராபர்ட் கிழவனல்ல எங்கள் கிழக்கு திசை பாடலுக்கு பரதம் ஆடினார். ராஜ்குமார் குழுவினரின் டிக் டாக் நிகழ்ச்சி நடைபெற்றது. குவைத் இசுலா மிய தமிழ்ச் சங்கத்தின் குழந்தைகள் குறளை தமிழிலும் அரபி மொழி பெயர்ப் பையும் அழகாக சொல்லி மகிழ்ந்தனர்.

பானு இக்பால், ஜெசிமா சிராஜூதீன், கம்பளிபஷீர்(காயிதேமில்லத் பேரவை) புதுக்கோட்டை பஷீர்( பன்னாட்டு திமுக) ஆ.அறிவழகன் (விசிக)  மணிவாச கன் (மதிமுக) வாழ்த்துரை வழங்கினர்.  இரா.சித்தார்த்தன் (பெரியார்நூலகம்) முனைவர் அ.ஜாஹிர்உசேன் (சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர்) கவிஞர்.கலி.பூங்குன்றன் (திராவிடர் கழகத் துணைத் தலைவர்) சிறப்புரையாற்றினர்.

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் குறள் அரபி மொழி பெயர்ப்பை வெளியிட, குவைத் தொழில் அதிபர் ஹமூத் அல் ஹபீப்முனாவர் அவர்கள்  பெற்றுக் கொண்டார். பல்வேறு தமிழ் அமைப்பினர் பெருந்திரளாய் கலந்துகொண்டனர் பெருமளவில் பெண்கள் கலந்து கொண் டது சிறப்பாய் அமைந்தது.

விழாக்குழுவினர் அமானுல்லாஹ் அன்பரசன், சத்திரமனை அசன்முகம்மது ஆலஞ்சியார் இனிக்கும் தமிழ்  ரபீக் ராஜா சித்தார்த்தனுக்கு சிறப்பு செய்தனர். ‘‘திராவிட வேள்''  விருது சித்தார்த்தனுக்கும், ‘‘குறளொளி சுடர்'' விருது முனைவர் அ.ஜாஹிர் உசேன் அவர்களுக்கும், ‘‘திராவிட சுடரொளி'' விருது கவிஞர் கலிபூங்குன்றன் அவர்களுக்கும், பெரியார் பிஞ்சு தஞ்சை தீன.சித்தார்த்துக்கு ‘‘திராவிட தளிர்'' என்ற பட்டமும் வழங்கி மகிழ்ந்தது பெரி யார் நூலகம்.  விழாவை நெறியாளர் தொகுத்து வழங்கினார். வெற்றியூர் அன் பரசன் (விசிக) தொகுத்து வழங்கினார்.

 - விடுதலை நாளேடு, 1. 12. 19

வியாழன், 14 நவம்பர், 2019

குறளும் - பெரியாரும்!

இதோ ஒரு விளம்பரம்.

திருக்குறள்

கிரவுன் 1-க்கு 16 சைசில் 170 பக்கமுள்ள பாக்கெட் சைஸ் திருக்குறள் புத்தகம் திராவிடன் அச்சகத்தில் பதிப்பித்தது.

புத்தகம் 1-க்கு விலை அணா 0-5-0 விற்பனையா ளருக்கு 100-க்கு 25 வீதம் கழிவு தரப்படும்.

சொற்ப பிரதிகளே உள் ளன.

தேவை உள்ளவர்கள் முந்திக் கொள்ளவும்.

குறிப்பு: 14.1.1953 வரை யில் விளம்பரத்தில் குறள் விலை 6 அணா என்று போடப்பட்டிருந்தது. பிறகு கொள்முதல் பார்த்ததில் விலையில் சிறிது குறைக்க லாம் என்று தெரிய வந்தது. ஆகவே, விலையை இப் போது 5 அணாவாகக் குறைத்திருக்கிறோம். 5 அணாவுக்குத்தான் ஏஜண்டு கள் விற்க வேண்டும். வாங்குபவர்களும் இதைக் கவனித்து வாங்கவேண்டும். வாங்குகிற ஏஜெண்டுகள் தங்கள் கமிஷனையும் சிறிது விட்டுக் கொடுத்துதவினால் பொது மக்கள் ஏராளமாக வாங்கிப் படிக்க முடியும். பெரியார் சுற்றுப்பிரயாணத் தில் குறள் புத்தகம் கிடைக் கும்.

விடுதலை செயலகம்,

325 P.B.மவுண்ட் ரோடு,

சென்னை-2

(‘விடுதலை', 1.2.1953)

தந்தை பெரியார் திருக் குறளுக்கு எத்தகைய தொண்டாற்றினார் என்ப தற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்றே ஒன்று போதாதா?

பரண்மீது இருந்த குறளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர் பெரியார் என்பதற்கு திருக் குறளை மலிவுப் பதிப்பாகக் கொண்டு சென்ற ஆக்க ரீதியான செயல்தானே இது!

‘இதனை இதனால் இவன்முடிக்கும் என் றாய்ந்து அதனை அவன் கண் விடல்' என்ற குறள் மொழிப்படி, திருக்குறளை அனைத்துலகுக்கும் எடுத் தோதி, அதற்குச் சிறப்பு உண்டாக்கித் தர இப் பெரியார் ஒருவராலேயே முடியும் என்பதை உணர்ந்தே இயற்கையானது திருக்குறளை பெரியாரிடம் ஒப்படைத்திருக்கிறது' என்ற தந்தை பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டில் (15.1.1949) பேராசிரியர் சி.இலக்குவனாரின் கூற்றை இங்கு குறிப்பிடுவது முக்கிய மானது - சிறப்பானதேயாகும்.பார்ப்பனர்களின் சான்றுகள் தேவையில்லை.

‘நான் இந்து அல்ல - திராவிடனே - திருக்குற ளனே' என்று சொன்னவரும் தந்தை பெரியாரே!

(‘விடுதலை', 5.11.1948)

- மயிலாடன்

- விடுதலை நாளேடு 14 11 19

புதன், 13 நவம்பர், 2019

பாரதீய ஜனதாவே ரப்பர் ஸ்டாம்ப் எப்பொழுது வந்தது?

சென்னை, நவ.9ஆசியான் மாநாட்டிற்காக தாய்லாந்து சென்ற மோடி அங்கே அந்த மாநாட்டிற்கும் இதர வணிக ஒப்பந்தங்களுக்கும் தொடர் பில்லாமல்  திருக்குறளின் ‘தாய்’ மொழி பெயர்ப்பை வெளியிட்டார். இந்த செய்தியை வழக்கத்தை விட அதிகமாக முக்கியப் படுத்தவேண்டும் என்பது தான் பாஜகவின் திட்டமாக இருந்தது. இதையொட்டி தமிழகத்திலுள்ள முன்னணி அச்சு மற்றும் காட்சி ஊட கங்களுக்கு பிரதமர் அலு வலகத்திலிருந்தும், பாஜக தலைமையிலிருந்தும்- உத்தர வுகள் பறந்தன.

திருக்குறளை தாய்லாந்து மொழியில் மோடி வெளியிட் டது உண்மையாக இருக்க லாம். அது ஒரு விளம்பரத் திற்காகவே! 1964-ஆம் ஆண்டே ரமிலி பின் தக்கீர் என்ற மலாய் மொழி அறிஞர் மலாய் மொழியிலும், தாய் லாந்து  மொழியிலும் மொழி பெயர்த்துவிட்டார்.

இந்த நிலையில் மோடி தாய்லாந்து மொழியில் திருக் குறளை வெளியிட்டார் என்று தமிழக பாஜகவினர் பெருமை கொண்டாடி வரும் நிலையில், அவர்களே திரு வள்ளுவருக்கு காவி ஆடை அணிவித்து தங்களின் குயுக் தியை காட்டிவருகின்றனர்.

இவர்களின் இந்தச்செய லுக்கு தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பு வெளி வந்த நிலையில், தஞ்சை-பிள் ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை சில விசமிகள் அவமதித்துள்ள னர். இந்த இரண்டு நிகழ்வு களுக்கும் தொடர்பு இருப் பதை அடுத்து குறிப்பிட்ட அமைப்பினர்தான் இந்த வேலையைச் செய்துள்ளனர் என்று கூறி மக்கள் போராட்டம் நடத்திவருகின் றனர் மேலும். அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக வினர் மீண்டும் ஒரு படத்தை வெளியிட்டு 1800-களிலேயே திருவள்ளுவரை இந்து துற வியாக மதித்து புத்தகம் வெளியிட்டுள்ளனர் என்று கூறி அதனை நம்பவைக்க ரப் பர் ஸ்டாம்ப் அடையாளம் ஒன்று இருப்பதையும் காட் டியுள்ளனர்.

27.7.1865 என்ற தேதியிட்ட ஒரு ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை அந்த நூலில் உள்ளது.

இவர்களுக்கு ரப்பர் ஸ்டாம்ப் பற்றிய  வரலாறு தெரிந்திருக்கவாய்ப்பில்லை.

மனித இன நாகரீகம் தோன்றிய காலத்தில் இருந்தே முத்திரை வழக் கத்தில் வந்துவிட்டது, இதை எளிமையாக்க 1500-களில் கிறிஸ்தவ சபைகள் உல கெங்கும் மிசினரிகளை அமைத்து அதற்கு ஆணை களைப் பிறப்பிக்க  நீண்ட மரக்கட்டையின் அடியில் தேவைப்படும் எழுத்துக் களைச் செதுக்கி அதை மையில் நனைத்து காகிதத்தில் முத்திரை இடும் முறையை கொண்டுவந்தனர்., அதில் எழுத்துக்கள் தெளிவில்லாத காரணத்தால் 1880-களுக்குப் பிறகுதான் ரப்பர் ஸ்டாம்ப் கண்டுபிடிக்கப்பட்டது, முதல் முதலாக 1895-ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ராயல் வங்கி ரப்பர் ஸ்டாம்பு களை அலுவலகப் பயன் பாட்டிற்கு பயன்படுத்தியது,

அதன் பிறகு நீண்ட கால மாக ஒரே மாதிரியாக பயன் படுத்தப்பட்டு வந்த ரப்பர் ஸ்டாம்ப் கணினி பயன் பாட்டிற்கு வந்த பிறகு 1980-ஆம் ஆண்டுகளில் இருந்து பல்வேறு வடிவங்களில் பயன் படுத்தும் ரப்பர் ஸ்டாம்புகள் புழக்கத்திற்கு வந்தன,

முக்கியமாக இந்த நூலில் இருக்கும் ரப்பர் ஸ்டாம்ப் 1980களுக்குப் பிறகுதான் பிர பலமானது, மேலும் இதில் உள்ள எழுத்துக்கள் கணினி எழுத்துருவான டைம்ஸ் ரோமனில் உருவாக்கப்பட் டவை ஆகும்., திருவள்ளுவர் ஒரு இந்து மத வீரத் துறவி என நிறுவுவதற்கு எப்படி எல்லாம் பித்தலாட்டம்-மோசடி செய்கிறது காவிக் கூட்டம் என்பதைப் பார்த் தீர்களா?

- விடுதலை நாளேடு 9 11 19

தங்கக் கிண்ணத்தில் மலமா?

தந்தை பெரியார் திருக் குறளை இழிவுபடுத்தியதுபோல பார்ப்பனர்களும், பி.ஜே.பி., சங் பரிவார்களும் கூடிப் பேசி, ஒரே மாதிரியான கட்டுக்கதையை பொய்யைத் திட்டமிட்டுப் பரப்பி வருகிறார்கள். ஒரு பொய்யை திருப்பித் திருப்பிச் சொன்னால் உண்மையாகும் என்ற கோயபல்சின் குரு நாதர்கள் இவர்கள்.

தங்கத் தட்டில் உள்ள மலம் என்று பெரியார் திருக்குறளை சொன்னாராம். எங்கே சொன் னார்? ஆதாரம் காட்டுவீர் என்று திருப்பிக் கேட்டால், தொலைக்காட்சிகளில் காட்டுக் கூச்சல் போடுகிறார்கள். அரட்டை அடிக்கிறார்கள்.

முகநூலில் நாம் விடுத்த ஒரு சவாலுக்கு மூச்சுப் பேச்சு இல்லை.

அவர்களால் ஆதாரம் காட்ட முடியாது. ஏனென்றால், அது கடைந்தெடுத்த ‘அக்மார்க் பொய்!' உண்மை ஆதாரம் என்ன?

இதோ ஆதாரம் பேசுகிறது.

‘‘ஒரு சமயம் பெரியார் தஞ்சையில் ஒரு வாலிபர் சங்கக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அங்கு பேசிய தமிழன்பர் ஒருவர், ‘‘பெரியார் இராமாயணத்தைக் குறை கூறு வது தவறு என்றும், கலை யுணர்ச்சிக்காகவும் அதனைப் போற்ற வேண்டும்'' என்றும் கூறினார்.

அதற்குப் பெரியார் கூறிய பதில்:

‘‘நான் கலையுணர்ச்சியை யும், தமிழ் உணர்ச்சியையும் வேண்டாம் என்று கூறவில்லை. தங்கக் கிண்ணத்தில் அமேத் தியம் (மலம்) இருந்தால், தங்கக் கிண்ணம் என்பதற்காக அமேத் தியைப் புசிக்க முடியுமா? அது போல், கம்பராமாயணப் பாட்டு கள் சிறந்தவைதான். அவற்றில் உள்ள மூடநம்பிக்கைக்கும், தமிழர் இழிவுக்கும், ஆரியர் உயர்வுக்கும் ஆதாரமான வற்றை வைத்துக்கொண்டு எப்படி அவற்றைப் பாராட்ட முடியும்?'' என்றார்.''

ஆதாரம்: சாமி.சிதம்பரனார் எழுதிய ‘‘தமிழர் தலைவர்'', பக்கம் 162 (11 ஆம் பதிப்பு,15 ஆம் பதிப்பு பக்கம், 187).

கம்பராமாயணத்தைப்பற்றி பெரியார் சொன்னதை, திருக் குறளுக்குச் சொன்னதாக மோசடி செய்யும் பார்ப்பனரை இதன் மூலமாகத் தெரிந்து கொள்வீர்!

உண்மை இவ்வாறு இருக்க - பொய்யிலே பிறந்து, பொய் யிலே வளர்ந்து, பொய்யையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண் டவர்கள் மோசடியாக திருக் குறள்பற்றி பெரியார் இப்படி சொன்னார் என்று திரித்துப் பேசுவது - திரிநூலாருக்கே ஏகபோக உரிமையான இழிப் புத்தியாகும்.

ஆதாரத்தோடு எடுத்துக் காட்டிய பிறகு, பாரப்பனர்களோ, சங் பரிவார்களோ, பி.ஜே.பி. வட்டாரமோ அறிவு நாணயம் எள் மூக்கு முனை அளவுக்கு இருந்தால், என்ன செய்யவேண் டும்? பகிரங்க மன்னிப்புக் கூடக் கேட்கவேண்டாம் - தவறுக்கு வருந்தலாம் அல்லவா?

அதெல்லாம் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. புத்த ரையே மகாவிஷ்ணுவின் அவ தாரம் என்று ஆக்கிய (அ)‘யோக் கிய சிகாமணி'கள் ஆயிற்றே!

விநாயகன் என்று புத்த ருக்குப் பெயர் - அந்த விநாய கனை பிள்ளையார் ஆக்கிய வர்கள் ஆயிற்றே! சாஸ்தா என்று புத்தருக்குப் பெயர் - அந்த சாஸ்தாவை அய்யப்பன் ஆக்கிய (அ)‘யோக்கியர்கள்' என்னதான் செய்யமாட்டார்கள்?

- மயிலாடன்

- விடுதலை நாளேடு 13 11 19

திங்கள், 7 அக்டோபர், 2019

திருக்குறளைச் சிறுமைப்படுத்தியோர் மன்னிப்புக் கேட்க வேண்டும்!

தமிழிறைவன்
கடந்த 22.9.2019 அன்று 'தினமணி' ஞாயிறு இதழில் அறிவு சான்ற ஒரு பேனா, திருக்குறள் பற்றி நயவஞ்சகமான ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறது.
புகழ்வதைப் போலப் புகழ்ந்து, இகழ்வதை வஞ்சப் புகழ்ச்சி என்பார்கள். இது அந்த வகையைச் சேர்ந்தது.
முகத்துக்கு நேராகப் புகழ்ந்துவிட்டு முதுகில் குத்தும் கோழைத்தனம் இது.
'இந்த வாரம்' என்ற பகுதியில் 'கலா ரசிகன்' எழுதிய சிறு குறிப்பில் வள்ளுவரைப் பற்றியும், திருக்குறள் பற்றியும் மேற்சொன்ன வஞ்சப் புகழ்ச்சியும், முதுகில் குத்தும் கோழைத்தனமும் இடம்பெற்றிருக்கிறது.
திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் என்ற உரையாசிரியர் பற்றி தங்களுக்கே மிகவும் உரித்தான இனப்புத்தியோடு சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை.
"திருக்குறளுக்கு எத்தனை எத்தனையோ உரைகள் வெளிவந்தாலும் அவை யாவுமே பரிமேலழகர் உரையைச் சார்ந்தோ, அதனடிப்படையிலோ, அதன் உதவியுடனோ தான் எழுதப்பட்டிருக்கின்றன" என்று கலா ரசிகன் கூறும் கருத்து, திருக்குறளுக்கு உரை கண்ட மற்ற எல்லா அறிஞர்களையும் இழிவு படுத்துகின்ற கருத்தாகும்.
பழங்காலத்தில் திருக்குறளுக்குப் பத்து அறிஞர்கள் உரை கண்டனர், பரிமேலழகர் உட்பட.. பிற்காலத்திலும் பலர் திருக்குறளுக்கு உரை கண்டிருக்கின்றனர். இவர்கள் யாவரும் பரிமேலழகரைப் பார்த்தா உரை எழுதியுள்ளார்கள்? பரிமேலழகர் என்ன ஞான சூரியனா? மற்றவர்கள் யாவரும் அவரைப்பார்த்து உரை எழுதும் அளவுக்கு அறிவுத்திறனற்ற ஞான சூனியங்களா? இது அப்புலவர் பெருமக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அவமானம் அன்றி வேறென்ன?
எப்போதுமே அவர்கள் தங்கள் இனத்தார் என்றால், ஒன்றுமில்லாவிட்டாலும் உயர்த்திப் புகழ்வார்கள். மற்றவர்கள் மாமேதைகளாக இருந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். பாரதியாரை மகாகவி என்பார்கள். அதேசமயம் பாரதிதாசனாரைப் பற்றி ஒரு வார்த்தை புகழ்ந்து சொல்லமாட்டார்கள்.
இதற்கு அடுத்து வரும் ஒரு கருத்து இன்னும் பேதைமைத் தனமானது.
"பரிமேலழகரை அகற்றி நிறுத்தினால் திருக்குறள் இல்லை. திருக்குறளை அகற்றி நிறுத்தினால் தமிழும் இல்லை".
எழுதுவதற்குப் பத்திரிகை இருந்தால் எதையும் எழுதி விடலாம், யார் கேட்கப் போகிறார்கள் என்கிற இறுமாப்புத்தான் இது .
பரிமேலழகர் இல்லை என்றால் திருக்குறள் இல்லையாம். இதைக்கேட்டு நகைப்பதா? வருந்துவதா?
வள்ளுவப் பெருந்தகையின் வான் புலமை எங்கே? ஒரு வைதிக உரையாசிரியன் எங்கே?
வானுக்கும் பூமிக்கும் எட்டாத உயரமல்லவா இவர்கள் இருவருக்கும் இடையில்?
பரிமேலழகரையே எடுத்துக்கொள்வோம். பரியை விடவும் அதன் மேல் அமர்ந்துள்ள அழகர் உயர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும். அவர் ஏறும் பரி அவரைவிட மேம்பட்டதாக இருக்க முடியாது.
பள்ளிப் பிள்ளைகள் புத்தகத்திற்கு அட்டை போடுவார்கள். எவ்வளவு அழகான அட்டையாக இருந்தாலும் அது புத்தகத்தை விட உயர்ந்ததாக இருக்க முடியாது.
அதுபோல திருக்குறள் என்ற புத்தகத்துக்கு போடப்பட்ட வெறும் அட்டை தான் பரிமேலழகர் உரை. அதற்குமேல் அதற்கு ஒரு பெருமையும் இல்லை.
பரிமேலழகர் இல்லையென்றால் திருக்குறள் இல்லை என்று கூற முடிகிறதென்றால், இந்த மேதாவிலாசங்களை முகத்தில் அறைவது போலக் கேட்பதற்கு மானமுள்ள தமிழர்கள் இல்லை என்று பொருளாகிவிடும்.
திருவள்ளுவர் பரிமேலழகரை நம்பியா திருக்குறள் எழுதினார்?
திருக்குறள் ஓர் அறிவு விளக்கு. அணையாத ஒளிபடைத்த அறிவு ஞாயிறு. அதைப் பார்த்துக் குரைக்கின்றன சில பிராணிகள்.
பரிமேலழகர் இல்லையென்றால் திருக்குறள் இல்லாமலேயே போய்விடுமோ? எத்துணை நப்பாசை! நாக்கொழுப்பு?
"கம்பன் இல்லை என்றால் தமிழ் இல்லை" என்றும் சிலர் கூறுகின்றனர்.
அது என்னவோ தமிழ் என்றால் எவருக்கும் இளக்காரம் ஆகிவிட்டது!
அதற்கு நான் பதில் எழுதினேன். "கம்பன் மட்டுமல்ல, எந்தக் கொம்பன் இல்லாவிட்டாலும் தமிழ் என்றென்றும் இருக்கும்" என்று!
அதே பதிலைத்தான் பரிமேலழகர் இல்லை யென்றால் திருக்குறள் இல்லை என்று திருக்குறளை தரம் தாழ்த்த  விரும்புவோர்க்கும் சொல்கிறேன்.
பரிமேலழகர், உண்மையைச் சொல்லப்போனால், அவர் திருக்குறள் கருத்துக்களுக்கு எதிரி. திருக் குறளைத் திரித்துப் பேசிய திரிபுவாதி. முதல் நூல் ஆசிரியரது கருத்துக்களுக்கு மாறாக ஆரியக் கருத்துக்களைப் பூசி அலங்காரம் செய்ய நினைத்தவர்.
மூலநூலையே அவர் சில இடங்களில் திருத்தி மாற்றி அமைத்துள்ளார்.
எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் வள்ளுவர் தீட்டிய ஓவியத்தின் மீது சேற்றை அள்ளி வீசியிருக்கிறார்.
வள்ளுவர் 'மக்கட் பேறு' என்று அதிகாரத்திற்குப் பெயரிட்டு வழங்கினால் அதைப் "புதல்வரைப் பெறுதல்" என மாற்றி அமைத்தவர் அவர்.
தமிழ் நூல்கள் பலவற்றில் சொற்களைத் தங்களுக்கு ஏற்ப மாற்றியும் திருத்தியும் வெளியிட்ட மகானுபவர்கள் அவர்கள்.
'அறிவறிந்த மக்கட்பேறு' என்ற திருக்குறள் வரிக்கு "அறிவறிந்த என்றதனால் ஈண்டு பெண்மக்களையே ஒழித்து ஆண் மக்களையே குறித்தது" என்றவர் பரிமேலழகர்.
அதாவது அறிவு ஆண் மக்களுக்கே உரியது. பெண் மக்களுக்கு அது இயற்கையாகவே கிடையாது என்ற கருத்தின் விளைவு அந்த உரை.
இவ்வாறு அறிவுக்குப் பொருத்தமற்ற வகையில், பகுத்தறிவுக்கு ஒவ்வாத வகையில் வள்ளுவத்துக்கு வடமொழிக் கருத்துக்களை, வைதீகக் கோட்பாடுகளை ஏற்றி உரைத்தவர் பரிமேலழகர்.
இதைக் கருதியே நாமக்கல் கவிஞர் அவர்கள் 'திருவள்ளுவர் திடுக்கிடுவார்' என்று ஒரு நூலே எழுதினார்.
வள்ளுவத்துக்குச் செய்த இந்த இழிவு வான்புகழ் வள்ளுவரை ஈன்றெடுத்த தமிழ்மொழிக்கே, தமிழ்நாட்டிற்கே, தமிழ் மக்களுக்கே செய்த இழிவாகும். தமிழர்கள் இதைக் கண்டிக்க முன்வர வேண்டும்.
- விடுதலை நாளேடு - 7.10.19