செங்கல்பட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செங்கல்பட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 ஜூன், 2023

செங்கை சுந்தரம் இளைய மகள் சு.புவியரசி - மெ.வெங்கடேஷ் இணையேற்பு விழா


22.6.23ம் நாள் பகல் 1.00 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக தலைவர் பூ.சுந்தரம் அவர்களின் இளைய மகள் சு.புவியரசி B.Sc., மெ.வெங்கடேஷ் B.E., ஆகியோர்களுக்கு சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் மிக எளிய முறையில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் கழக தோழர்கள் மற்றும் மணமக்கள் உறவினர்கள் முன்னிலையில் மிக சிறப்பாக திருமணம் நடைபெற்றது.
பரப்புரை செயலாளர் அ.அருள்மொழி, பிரின்ஸ் என்.ஆர். எஸ். பெரியார், வழக்கறிஞர் பா. மணியம்மை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மணமக்கள் வாழ்க.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து

1

சுந்தரம், ஆனந்தி ஆகியோரின் மகள் புவியரசிக்கும் - பொறியாளர் வெங்கடேசுக்கும் ஜாதி மறுப்பு இணையேற்பு விழா நடைபெற்றது. மணமக்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன்:  மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார். 

(பெரியார் திடல் - 22-06-2023)

செவ்வாய், 20 அக்டோபர், 2020

மறைவு - நன்கொடை - படத்திறப்பு

மறைவு

October 10, 2020 • Viduthalai • மற்றவை
செங்கல்பட்டு மாவட்ட கழகத் தோழர் ம.கருணாநிதி அவர்களின் தாயார் ம.அஞ்சலா (வயது 81) அவர்கள் 7.10.2020 அன்று அதிகாலை செங்கல்பட்டு அருகிலுள்ள வல்லம் என்ற ஊரில் காலமானார்.  மாலை 4 மணி அளவில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட கழகத்தின் சார்பிலும் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பிலும் மாலை வைத்து மரியாதை செய்யப்பட்டது. கலியப்பேட்டை தமிழ் மணி, செங்கல்பட்டு இராஜேந்திரன், தன சேகரன், செம்பியன், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, பேரமனூர் கழகத் தோழர்கள் சு. விஜயராகவன். கி.நீலகண்டன், கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க தலைவர் த.ரமேஷ், துணைத்தலைவர் கோ.குமாரி மற்றும் கழகத் தோழர்களும் கோத்ரேஜ் தொழிற்சாலை தொழிலாளர்களும் மரியாதை செலுத்தினர்.
October 17, 2020 • Viduthalai • மற்றவை


7.10.2020இல் மறைந்த தனது தாயார் ம.அஞ்சலா (வயது-81) அவர்களின் படத்திறப்பு (18.10.2020, வல்லம், செங்கல்பட்டு) நிகழ்ச்சியின் நினைவாக அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000/- நன்கொடையாக வழங்கினார் செங் கல்பட்டு மாவட்ட கழகத் தோழர் ம.கருணாநிதி.