கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 செப்டம்பர், 2024

மூடநம்பிக்கைப் பிரச்சாரம் செய்ய அனுமதித்தவர்கள்மீது உடனடி நடவடிக்கை எடுத்த கல்வி அமைச்சருக்குப் பாராட்டு – தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


விடுதலை நாளேடு Published September 6, 2024

 * கல்விக் கூடங்களில் ஆன்மிக மூடநம்பிக்கைப் பிரச்சாரமா?

* அரசமைப்புச் சட்டம் 51A(h) சரத்துக்கு விரோதம்
அரசு, கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் விழிப்போடு இருக்க வேண்டும்

அசோக் நகரில் செப்.9ஆம் தேதி சிறப்புக் கூட்டம் – ஆசிரியர் உரையாற்றுகிறார்
இந்திய அரசியலைமைப்பின் பிரிவு 51ஏ(எச்) வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை பரப்பவும், கல்விக் கூடங்களில் மூடநம்பிக்கைப் பிரச்சாரத்திற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு தி.மு.க. அரசைப் பாராட்டியும், “பகுத்தறிவும், மாணவர்களும்” என்ற தலைப்பில் அதே அசோக் நகர் பகுதியில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் வரும் 09.09.2024 திங்கள்கிழமை மாலை பொதுக்கூட்டம் நடைபெறும். தமிழர் தலைவர் பங்கேற்று உரையாற்றுகிறார்.
மேலும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்

கல்விக் கூடத்தில் மூடநம்பிக்கைப் பிரச்சாரம் செய்ய அனுமதித்தது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. சட்டத்திற்குப் புறம்பாக நடை பெறுவதைத் தடுப்பதில் அரசு, ஆசிரியர், கல்வியாளர்கள், பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஊக்க உரை (Motivational Speech) என்ற பெயரில் ‘‘பரம்பொருள் பவுண்டேஷன் மகாவிஷ்ணு’’ என்பவர் மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஆற்றிய உரையும், அது மாணவிகளிடம் ஏற்படுத்திய தாக்கமும் அந்த நிறுவனமே வெளியிட்ட காணொளியால் நேற்று (5.9.2024) சமூக ஊடகங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்விக் கூடத்தில் மூடநம்பிக்கைப் பிரச்சாரமா?
இதற்குச் சில நாள்களுக்கு முன்பே சைதாப்பேட்டை மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த இதே போன்ற நிகழ்விலும், குருகுலக் கல்வி, முன் ஜென்ம பலன், பாவம், புண்ணியம் என்று பேசி, அதன் பலன் தான் இப்பிறவியில் ஒருவரின் பிறப்பு என்றும் பேசியதைக் கண்டித்து, அங்கேயே பார்வை மாற்றுத் திறனாளியான சங்கர் என்ற தமிழாசிரியர் எதிர்க் கேள்வி எழுப்பியிருக்கிறார். எதிர்க் கேள்வி எழுந்ததுமே, உங்கள் பெயர் என்ன என்று கேட்டு அவரை மிரட்டத் தொடங்கி, குறைந்தபட்ச மனிதநேயமும், நாகரிகமும் இன்றி நடந்துகொண்ட காணொளியும் நேற்று இதனுடனே வெளியாகியது. இதனைக் கண்ட நாம் உள்பட அனைத்துத் தரப்பினரும் அதிர்ந்து போனோம்.

முதல் அமைச்சர், கல்வி அமைச்சரின் சீரிய பணிகள்
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காகவும், அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் கல்வியின் எல்லா வாய்ப்புகளும் போய்ச் சேர வேண்டும் என்பதற்காகவும், தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் அவர்களும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் சிறந்த முறையில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையில் பெருந்தொகை செலவு செய்யப்பட்டு, நிர்வகிக்கப்படும் துறை என்னும் அளவிற்கு பள்ளிக் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் அரசுப் பள்ளிகளில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்திருப்பது மிகுந்த எச்சரிக்கையுடன் நோக்கத் தக்கதாகும். இளம் பிஞ்சுகளிடம் மதவாத நஞ்சை விதைக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். இந்தியா முழுவதும் செய்து வரும் சதிச் செயலாகும். அதிலும், குறிப்பாக தமிழ்நாட்டைக் குறிவைத்துத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்-சும், அதன் அமைப்புகளும் செயலாற்றி வருவதையும், அதைத் தடுக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதையும் நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.

பல வேடங்களைத் தரிக்கும் ஆர்.எஸ்.எஸ்.,
பல வேடங்களைத் தரித்துக் கொள்வது ஆர்.எஸ்.எஸ்.சுக்குப் புதியதல்ல. கல்வியாளர், ஊக்க உரையாளர், யோகா பயிற்றுநர், பேச்சாளர் என்ற பல போர்வைகளில் பள்ளிகளை அவர்கள் குறிவைக்கின்றனர். தனியார் அமைப்புகளாகவும், சில தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரிலும், யோகா – உடற்பயிற்சி வகுப்புகள் என்ற பெயரிலும் நுழைய முயற்சிப்பதும், நாம் உள்ளிட்ட மதச்சார்பற்ற அமைப்பினர் சுட்டிக்காட்டுவதும், அதே நேரத்தில் அரசு அதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுத்து, உரிய சுற்றறிக்கைகள் ஆணைகள் மூலம் தடுத்துக் கொண்டு வருவதையும் அனைவரும் அறிவோம்.

தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரிலும், அதையொட்டிய பல்வேறு திட்டங்கள் என்ற பெயரிலும் ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்குத் தொடர்ந்து நெருக்கடிகளை, மறைமுகமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவற்றில் பல திட்டங்களை தமிழ்நாடு அரசு ஏற்க மறுக்கிறது. ஆளுநர் என்ற பெயரில் அதிகார அத்துமீறலில் ஈடுபடும் ஒருவர் தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையையும், பள்ளிக் கல்வித்துறையையும் குறிவைத்துக் காய் நகர்த்துகிறார்.
அறிவு விடுதலைக்காகவும், சமத்துவத்துக்காகவும் நடைபெறும் இந்தப் போர் சாமானியத்தில் ஓயக் கூடியதல்ல. தனியார் கல்வி நிறுவனங்களின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. அதை நோக்கியும் அரசு கவனத்தைச் செலுத்தி வருகிறது. செலுத்தவும் வேண்டும்.
இந்தச் சூழலில்தான் இந்த நிகழ்ச்சி அனைவரின் கொந்தளிப்புக்கும், கடுமையான கண்டனத்துக்கும் உடனடிக் காரணமாகி உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் மனநிலை என்ன என்பதையும், உச்சபட்ச விழிப்பு நிலையில் தமிழ்நாடு இருக்கி றது என்பதையும் இந்த எதிர்ப்புணர்வு பதிவு செய்திருக்கிறது.

அரசு சார்பில் உடனடி நடவடிக்கை!
தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அமெரிக்காவில் மிக முக்கியமான பயணத்தில் ஈடுபட்டிருந்தாலும், உடனடியாக இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்பதை உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். “தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான – அறிவியல் பூர்வமான கருத்துகளையும், வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட” தாம் ஆணையிட்டுள்ளதைத் தெரிவித்தும், “அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி!” என்று தம் அரசின் பாதையைத் தெளிவாகவும் தெரிவித்துள்ளார்.

நமது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேரிலேயே அப்பள்ளிக்குச் சென்று நிலைமையை விசாரித்து. துறை ரீதியான நடவடிக்கைகளை எடுத்து (இரண்டு பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.) உணர்வுப் பூர்வமாக எதிர்க் கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்கர் அவர்களையும் அழைத்துப் பாராட்டி அவரை அருகில் வைத்துக் கொண்டே செய்தியாளர்களைச் சந்தித்து உரிய விளக்கங்களையும், அரசின் நிலைப்பாட்டையும் தெரிவித்ததுடன், பள்ளியில் மிக மோசமாக நடந்துகொண்டு, ஆசிரியரை மிரட்டி, மூடநம்பிக்கைக் கருத்துகளை விதைத்த அந்தப் பேச்சாளர்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை மிகுந்த உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

சில தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தின விழா அன்று ஆசிரியர்களின் கால்களை மாணவர்கள் கழுவும் நிகழ்ச்சி என்று மாணவர்கள்மீது திணிக்கப்படும் அருவருப்பான நிகழ்ச்சி குறித்தும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ள அமைச்சர், இது தொடர்பான சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டு, இவை தடுக்கப்படும் என்று அறிவித்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும். பெற்றோர் காலைக் கழுவுங்கள் என்று சில பள்ளிகள் நடத்தும் நிகழ்ச்சி உள்பட எல்லா இழிவுகளும் ஒழிக்கப்பட வேண்டும்.
மாதிரிப் பள்ளிகள் என்பவையும் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனபதையும், எவ்விதத்திலும் ஒன்றிய அரசின் திட்டங்கள் வழியாக காவித்தனம் நுழையவோ, அதன் சாயல் கொண்ட திட்டங்களை நுழைக்கவோ இடம்கொடுத்துவிடக் கூடாது என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அரசுப் பள்ளி வளாகத்துக்குள் இருந்து கொண்டே ஆசிரியர்களை மிரட்டுவதா?
அரசுப் பள்ளி வளாகத்துக்குள் இருந்து கொண்டு ஆசிரியரை மிரட்ட இவர்களுக்கு எங்கிருந்து இந்தத் துணிச்சல் வருகிறது? அமைச்சரின் கொதிப்பு திராவிட இயக்க உணர்வின் வெளிப்பாடாகும். இதன் பின்னால் இருப்போர் யார்? யாருடைய தூண்டுதல் அல்லது ஊடுருவலில் இது நடக்கிறது என்பதையும் உரிய வகையில் கண்டுபிடித்துக் களைய வேண்டியது அவசியமாகும். இந்த நடவடிக்கையில் எத்தனை அதிகார மய்யங்கள் இருந்தாலும் தமிழ்நாடு அரசுக்குக் கருத்தியல் ரீதியாகவே பக்க பலமாக மக்கள் ஆதரவு உண்டு என்பதை இந்த ஒரே இரவில் மக்களும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சர் பொறுப்பேற்ற போதே ‘‘தி.மு.க. அரசு தந்தை பெரியாருக்குக் காணிக்கை’’ என்று அறிவித்தார். அதன் நீட்சியாகத் தான் முத்தமிழறிஞர் கலைஞரும், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் ஆட்சி நடத்தி வருகின்றனர். இத்தகைய ஊடுருவல் முயற்சிகள் வரலாறு நெடுக நடந்துவருகின்றன. அதற்கு உரிய பதிலை உடனடியாகச் செய்துள்ளது தான் ‘திராவிட மாடல்’ ஆகும்.

அரசமைப்புச் சட்டம் என்ன சொல்லுகிறது?
“It shall be the duty of every citizen of India to develop scientific temper, humanism and the spirit of inquiry and reform” என்று இந்திய அரசியமைப்புச் சட்டத்தின் பிரிவு 51A(h) ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இதைத் தான் வரையறுத்திருக்கிறது. தமிழ்நாடு அரசு எடுத்திருப்பது சட்ட ரீதியாகச் சரியான நடவடிக்கை ஆகும்.
ஆசிரியர் அமைப்புகள் இத்தகைய பிரச்சினைகளில் விழிப்போடு இருந்து, கல்வி நிலையங்களுக்குள் ஊடுருவ முயலும் மதவாதப் பாம்புகளை அடையாளம் காண வேண்டும்.

கல்வித் துறையின் மூலம் நவீன தமிழ்நாட்டைக் கட்டியெழுப்பியுள்ளோம். அந்தக் கோட்டைக்குள் இத்தகைய குள்ளநரிகளை அனுமதித்துவிடக் கூடாது. கல்வித் துறைக்குள்ளும் களைகள் முளைத்திருப்பின் அவற்றையும் களைந்தெறிய வேண்டிய அவசியம் உள்ளது.
ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.சில் இருக்கலாம் என்று ஒன்றிய அரசு அறிவிக்கை வெளியிட்டதன் பின்னணியில், இத்தகைய ஊடுருவல் நடவடிக்கைகளுக்கான நோக்கம் தான் உள்ளது. தமிழ்நாட்டில் வெளிப்படையாக அப்படி இருக்க முடியாது என்பதால் மறைமுகமாகச் செயல்படுவோர் உண்டு. அதனைக் கவனித்து ஊடுருவல்களைத் தடுத்து, மாணவ நாற்றுகளைக் காக்க வேண்டியது நம் கடமை.

சுயமரியாதை, பகுத்தறிவு உணர்வோடு உடனடியாகக் கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்கரும், தகவல் தெரிந்த உடனே நடவடிக்கைகள் எடுத்த தமிழ்நாடு அரசின் முதலமைச்சரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் நமது பாராட்டுக்குரியவர்களாவார்கள்.
அரசு, கல்வித் துறை, பெற்றோர் உள்ளிட்டோர்
விழிப்போடு இருக்க வேண்டும்
இது ஒரு நாள் இரு நாள் பிரச்சினையல்ல. “Eternal vigilance is the price of liberty”. அரசு, கல்வித் துறை, ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர், சமூக இயக்கங்கள் உள்ளிட்ட அனைவரும் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியமாகும்.

 

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
6.9.2024


செவ்வாய், 18 மே, 2021

கல்வித் துறையில் இயக்குநர் பதவியை ரத்து செய்யக்கூடாது!

புதிய கல்விக் கொள்கை: அமைச்சர்களை அழைக்காமல் அதிகாரிகளை மத்திய அரசு அழைத்ததால் தமிழக அரசு நிராகரித்தது சரியான முடிவே!

கல்வித் துறையில் இயக்குநர் பதவியை ரத்து செய்யக்கூடாது!

புதிய கல்விக்  கொள்கை என்னும் குலக்கல்வியை என்றைக்கும் தமிழகம் ஏற்காது - அதனைக் கைவிடுக!

மத்திய கல்வி அமைச்சரின் புதிய கல்விக் கொள்கைபற்றிய ஆலோ சனைக் கூட்டத்தில் மாநில அமைச்சர்களை அழைக்காமல்அதிகாரிகளை அழைத்தது சரியானதல்லஅதிகாரிகள் கொள்கை வகுப்பாளர்கள் அல்லர் - அந்த வகையில்தமிழ்நாடு அரசு அந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் நிராகரித்தது சரியானதேமத்திய பா..அரசு திணிக்க விரும்பும் புதிய தேசியக் கல்விக் கொள்கை - 2019 என்பது குலக் கல்வித் திட்டமே - இந்திசமஸ்கிருதத் திணிப்பே - கார்ப்பரேட்டுகளின்  நலனுக்கே என்பதால்தமிழ்நாட்டு மக்களும்தமிழ்நாடு அரசும் எந்த நிலையிலும் ஏற்கப் போவதில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

கல்வியில் சிறந்த தமிழ்நாடுஎன்ற பெருமையை குலைக்கும் வகையிலும்மீண்டும் புதுவகை மனுதர்மம் - குலதர்மம் கல்வித் துறையில் தனது கொடுங்கரங்களை நீட்டவுமான முயற்சியே புதிய கல்விக் கொள்கை என்னும் மத்திய கல்விக் கொள் கையாகும்.

இதற்குத் தமிழ்நாடு தொடக்கம் முதலே தனது எதிர்ப்பைப் பதிவு செய்தே வந் துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்தலைவர் உள்பட வெளிப்படையாகவே பிரகடனப்படுத்தி உள்ளனர்

மக்களாட்சி என்பதன் தனித்துவம் மாநில உரிமைகளின் பாதுகாப்புமுன்னே வேகமாகச் செல்லும் மாநிலத்தை பல ஆண்டுகள் பின்னே இழுப்பது போன்ற வைதான் இப்புதிய கல்விக் கொள்கை.

மத்தியில் ஆட்சி செய்யும் பா... - அதன் அரசியல் வழிகாட்டியும்ஆணை யருமான ஆர்.எஸ்.எஸ்வகுத்துத் தந்த கல்வித் திட்டம்தான் இது என்பதைஆர்.எஸ்.எஸ்தலைவர் உள்பட வெளிப் படையாகவே பிரகடனப்படுத்தி உள்ளனர்!

இதனை தமிழ்நாட்டில் பா..ஒன்றைத் தவிரமற்ற அத்துணைக் கட்சிகளும்பெரும்பாலான கூர்த்த மதி படைத்த கல்வி யாளர்களும் கடுமையாக எதிர்த்தே வந் துள்ளனர் - கடந்த ஓராண்டுக்கு மேலாக.

அரசமைப்புச் சட்டப்படி ‘கல்விஎன்பது மத்திய அரசின்கீழ் மட்டுமே உள்ள அதி காரம் அல்ல. (It is not in the Union List); ஒத்திசைவுப் பட்டியல் என்ற (Concurrent List) இல் உள்ள அதிகாரம் ஆனதால்மத்திய அரசுக்கு உள்ள உரிமை அளவு மாநிலங்களுக்கும் உண்டுமேலும் இந்தியா ஒரு கூட்டாட்சி (Union of States) என்ப தாலும்பல கலாச்சாரங்கள்பல மொழிகள் என்ற பன்முகத் தன்மை கொண்ட பரந்த நாட்டில்அவரவர் அவர்தம் மொழிபண்பாடுகலைநாகரிகம் இவற்றைப் பாதுகாக்க - பரப்ப - இளம்தலைமுறைகளை ஆயத்தப்படுத்த - அந்த மக்களின் உரிமை களைப் பாதுகாக்க கல்வி என்பது மிக முக்கியமானது ஆகும்!

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் விளக்கம்!

இதனை ஏதோ ஒற்றை ஆட்சியாகவே கருதிக்கொண்டு,  வகுக்கப்பட்டுத் திணிக் கப்படும் இக்கல்வித் திட்டத்திற்கு தமிழ் நாட்டின் எதிர்ப்பு ஏன் என்பதை நேற்று (17.5.2021) கூட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் தெளிவாக விளக்கி யுள்ளார்.

அதற்குமுன் உயர்கல்வித் துறை அமைச்சர் திரு..பொன்முடி அவர்களும்புதிய கல்விக் கொள்கையின் பல அம்சங் களை எங்களால் ஏற்க இயலாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

பொதுநலவாதிகளும் கடுமையாக எதிர்க்கின்றனர்

1. குலக்கல்வித் திட்டத்தை மறைமுக மாகப் புகுத்துதல்

2. கடந்த 54 ஆண்டுகளாக செயல் பாட்டில் இருந்துவரும் அறிஞர் அண்ணா பிரகடனப்படுத்திய இருமொழிக் கொள்கைக்கு வேட்டு வைத்துமும்மொழிக் கொள்கைத் திணிப்பு.

3. 22 மொழிகளை அரசமைப்புச் சட்டம் ஏற்றிருக்கும் நிலையில்மக்களிடம் ஒரு சதவிகிதம்கூட புழக்கத்தில் இல்லாத சமஸ் கிருதத்திற்கே முக்கியத்துவம்திணிப்பு.

4. கல்வியை அனைவருக்கும் கற்றுத் தருவதற்குப் பதிலாக, 5 ஆவது வகுப்பு, 8 ஆவது வகுப்பு நுழைவுத் தேர்வு - அதன் பின்னரும் கல்லூரிப் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு என்ற வடிகட்டும் பன்னாடை முறை திணிப்பு.

5. இட ஒதுக்கீடு என்ற சமூகநீதியை அறவே பறித்துஒப்புக்கு  ஏதோ கூறி சமூகநீதியைத் தகர்த்தல்.

6. இலவசக் கல்விஏழைஎளிய மற்றும் மக்களுக்கு இனி எட்டாக் கனி - கார்ப்ப ரேட்டுகளுக்குக் கதவு திறக்கும் கல்வி முறை என்று இத்திட்டம் தயாரிக்கப்பட் டிருப்பதால்அத்துணை பொதுநலவாதி களும் கடுமையாக எதிர்க்கின்றனர்.

இந்நிலையில்தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் முடிவுகள் வந்துகடந்த 7 ஆம் தேதிமுதலமைச்சர் திரு.மு..ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.ஆட்சிப் பொறுப்பேற்றுஅமைச்சர்கள் பல துறை களுக்குப் பொறுப்பேற்றுகரோனா கொடுந் தொற்றிலும் முதல்வர் தொடங்கி அனை வரும் ‘பம்பரமாகசுழன்று செயல்பட்டு வருகின்றனர் - கடும் சோதனைகளுக் கிடையில்!

தமிழ்நாடு பங்கேற்காமல்நிராகரித்து தவிர்த்துள்ளது!

இந்நிலையில்மத்திய கல்வி அமைச்சர் புதிய கல்வித் திட்டம்பற்றி விவாதிக்கும் கூட்டத்தினை மாநிலக் கல்வித் துறை அமைச்சர்களை அழைத்து நடத்துவதும் தானே அரசமைப்புச் சட்டப்படியும்ஜன நாயக முறைப்படியும் சரியானது. (5 மாநிலத் தேர்தல்கள் நடந்து முடிந்து புதிய அரசுகள் வந்துள்ள நிலையில்ஏதோ குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுவதுபோலவெறும் மாநிலபள்ளிக் கல்வித் துறை செயலாளர்களை மட்டுமே அழைத்து (அய்..எஸ்அதிகாரிகள்கூட்டம் அறிவித்தபோதுதமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்மாநிலக் கல்வி அமைச்சர்களை அழைத்து விவாதிப்பதே சரி என்ற கோரிக்கையை சில நாள் களுக்குமுன் வைத்ததைமத்திய அரசின் கல்வித் துறை அமைச்சர் கண்டுகொண்ட தாகக் காட்டிக் கொள்ளாமல்தானடித்த மூப்பாகவே அந்தக் கூட்டத்தை - தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்காமல் கூட்டம் நடத்தியதால்தமிழ்நாடு அக்கூட்டத்தில் பங்கேற்காமல்நிராகரித்து தவிர்த்துள்ளது!

இதுபற்றி  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்செய்தியாளர்களிடையே காரண காரியங்களையும் நன்கு விளக்கி யுள்ளார்!

கொள்கைபூர்வமாகவே

அறிவித்திருக்கிறார்கள்

தி.மு..வைப் பொறுத்தவரை - மத்திய அரசுடன் எப்படி உறவு (கூட்டாட்சி என்பதால்இருக்கும் என்பதை அறிஞர் அண்ணாகலைஞர் ஆட்சியில் விளக்க மாக - கொள்கைபூர்வமாகவே அறிவித் திருக்கிறார்கள்.

‘‘உறவுக்குக் கைகொடுப்போம் -

உரிமைக்குக் குரல் கொடுப்போம்!''

என்பதாகும்.

பிரச்சினைக்குரிய புதிய கல்விக் கொள்கையை எதிர்த்த நிலைப்பாட்டுடன் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.கூட்டணிக்கு வாக்களித்துள்ள நிலையில்அந்த அரசின் நிலைப்பாட்டை (ஷிtணீஸீபீமத்திய கல்வித் துறை அமைச்சர் அறியசரியான வழி - தமிழ்நாட்டு கல்வித் துறை அமைச்சரை அழைத்து அறிவதுதானே நியாயம்முறையானது?

ஒத்துழைப்பு நல்கும் கூட்டாட்சி'

பா...வே ஒரு புதிய ‘சொற்றொடரை'  ‘சிஷீஷீஜீமீக்ஷீணீtவீஸ்மீ திமீபீமீக்ஷீணீறீவீsனீ' - ‘ஒத்துழைப்பு நல்கும் கூட்டாட்சிஎன்ற சொற்றொடரை கையாளுகின்றனரேஅதன்படி மாறுபட்ட கருத்து ஏன் - அதற்கான காரண காரியங்கள் என்னவென்று ஆராய வாய்ப்பு பெறஅமைச்சர்கள்தானே தெளிவுபடுத்த முடியும்?

அய்..எஸ்அதிகாரிகள் முழு சுதந்திரம் பெற்றவர்கள் அல்லகொள்கை வகுப்பாளர்கள் அல்ல.

எனவேதமிழகத்தின் கரோனாவோடு போராடும் நிலையில்இப்படி மாநில உரிமைகளையும் பாதுகாப்பதும்தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தந்த ஆணையை (விணீஸீபீணீtமீசெயல்படுத்தும் வகையில்கடமையாற்றி வரும்போதுதமிழ்நாட்டு கல்விக் கண் குத்தப்படாமல் பாதுகாக்க எடுத்த எடுப்பிலேயே கவனமாக இருப்பது என்பது முக்கியம் என்பதை எடுத்துக்காட் டியுள்ள முதல்வர்அமைச்சர் பெருமக் களை நம் மக்கள் - கல்வியாளர்கள் பாராட்டுவர்!

கல்வித் துறையில் இயக்குநர் பதவியை ரத்து செய்யக்கூடாது!

மற்றொரு முக்கிய பிரச்சினை முதல்வர் அவர்களும்அரசும் மறுபரிசீலனை செய்யவேண்டும்.

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்களின் பதவிகளை ரத்து செய்துஅனைத்தும் ஒருங்கே ஆணையர் என்ற அய்..எஸ்அதிகாரியின் மூலம் என்று ஆக்குவது அதிகாரப் பரவலைத் தலைகீழாக்கிஒரே ஒருவரிடம் குவிப்பதுகல்வி வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும்!

அய்..எஸ்அதிகாரிகள் ஒரே துறையில் இருப்பவர்கள் அல்லர் - மாற்றப்படுபவர்கள்.

கல்வித் துறையில் ஆழ்ந்த அறிவும்அனுபவமும் பெற்றவர்களாலேயே சாதனை செய்ய முடியும்கல்விநெறிக் காவலர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் காமராசர் ஆட்சிக் காலத்தில் செய்த கல்விப் புரட்சிதான் இன்றைய மாபெரும் வளர்ச்சிக்கு அடித்தளம்எனவேஇந்தப் புதிய மாற்றத்தை ரத்து செய்தோமாற்றியோ பழையபடி இயக்குநர்கள்கல்வி அறிஞர் களால் நிர்வகிக்கப்படுவதே சிறந்த வளர்ச்சி யைப் பெருக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தும்.

இதே தத்துவம் பல ஆட்சித் துறை களிலும் பரவலானால் - ஆளுமை சிறந் தோங்கும் என்பது உறுதி!

மாண்பமை முதல்வர் இதுபற்றி காலந்தாழ்த்தாமல் விரைந்து மறு ஆய்வு செய்துஇயக்குநர்களை மீண்டும் கொண்டு வருவது அவசியம் ஆகும்.

கி.வீரமணி 

தலைவர்

திராவிடர் கழகம் 

சென்னை      

18.5.2021             

சனி, 19 டிசம்பர், 2020

கிருத்தவ கல்வி நிறுவனங்களில் பயிலும் பாஜக புள்ளிகளின் பிள்ளைகள்

*ராஜ் நாத்சிங்கின் மகன்* இங்கிலாந்தின் "லீட்ஸ்" பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்.

*நிர்மலா சீதாராமன் மகள்* "வாங்மயிபரகலா" அமெரிக்காவின் நார்த் வெஸ்ட் பல்கலைக்கழத்தில் படிக்கிறார்.

வெளி விவகார *அமைச்சர் ஜெய்சங்கரின் மகன்* "துருவ்" ஜியாஜ் டவுன் பல்கலைக்கழகத்திலும், மகள் "மேதா" டெனிசன் பல்கலைக்கழகத்திலும் படிக்கிறார்கள்.

*அமைச்சர் ப்யுஸ்கோயல் மகள்* "ராசிகா" மகன் "துருவ் "ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கிறார்கள்.

*அமைச்சர் பிரகாஷ் சவடேகர் மகள்* "அபூர்வா" பாஸ்ட்டன்  பல்கலைக்கழத்தில் படிக்கிறார்.

*அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மகள்* "ஆதித்யா " அமெரிக்காவின் கார்னகி பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்..

*அமைச்சர் சுஜேந்திர சிங் செகாவத் மகள்* "சுபாஷினி" ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்.

*அமைச்சர் ஜிஜேந்திரசிங்கின் மகள்* "அருனேதய் " ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கிறார்.

*அமைச்சர் சஞ்சய் தோத்ரா மகன்* "நகுல் " கார்னகி பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்.

*அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் மகள்* "திபோத்தமா " வார்விச் பல்கலைக்கழத்தில் படிக்கிறார்.

*இந்த தேசபக்தர்களின் பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் படிப்பது தான் "மேக் இன் இந்தியாவா?*
நம்ம புள்ளைங்க உன் சாமி பெருசா இல்ல என் சாமி பெருசானு அடிச்சுகிட்டு சாவுறானுங்க...

குறிப்பு : *இந்த கல்விக்கூடங்கள் அனைத்தும் கிருஸ்த்தவர்களால் உறுவாக்கப்பட்டது என்பதை கிருஸ்த்தவர்களை வசைபாடும் இராம அவதார காவிகள் நினைவில் கொள்ள வேண்டும்*.
- கட்செவி வழியாக