தமிழ் மலர்

மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சமூக நீதி
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • திராவிடர் இனம்
  • தமிழ் உலகு
  • சிந்தனை செய்வோம்
  • மகளிர் மாண்பு
  • தென் சென்னை திராவிடர் கழகம்
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 பிப்ரவரி, 2022

ஹிப்போ கிரேட்டிக் பெயரால் எடுக்கப்படும் உறுதிமொழியை சமஸ்கிருத நூலில் காணப்படும் ‘ஷராக் ஷாபாத்' பெயரில் மாற்றமா?


உலகம் முழுவதும் மருத்துவர்கள் 
   February 14, 2022 • Viduthalai

எல்லாவற்றிலும் பார்ப்பனக் கலாச்சாரப் படையெடுப்பா?

மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவை என்ற நிலையும் நாளை வருமோ?

உலகம் முழுவதும் மருத்துவர்கள் ஹிப்போ கிரேட்டிக் பெயரால் எடுக்கப்படும் உறுதிமொழியை புராதன சமஸ்கிருதத்தில் காணப்படும் ஒருவரின் பெயரால் எடுக்கப்படவேண்டும் என்று ஒன்றிய அரசு மாற்றுவது பார்ப்பன சமஸ்கிருதக் கலாச்சாரத்தைத் திணிப்பதாகும். மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்கவேண்டும் என்ற பழைய நிலையைக் கூடக் கொண்டு வந்தாலும் வருவார்கள் - பார்ப்பனக் கலாச்சாரத் திணிப்பைக் கண்டித்துத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

மருத்துவர்கள், நம் நாட்டில் மருத்துவக் கல்லூரியில் படித்து பட்டம் (எம்.பி.பி.எஸ்.) பெறுகிறபொழுது, வெள்ளைக் கோட்டை அணியும்போது, மருத்துவத்தை ஒரு தொண்டறப் பணியாகச் செய்வதுபற்றிய ஓர் உறுதிமொழியை எடுப்பது பல காலமாக இருந்துவரும் ஒன்று.

ஹிப்போ கிரேட்டிக் பெயரில் மருத்துவர்கள் உலகெங்கும் எடுக்கும் உறுதிமொழி!

கிரேக்கத்தின் பிரபல டாக்டரான ஹிப்போ கிரேட்டிக் (Hippocratic Oath) பெயரிலான உறுதிமொழி என்று அதற்குப் பெயர்.

பிரபல மருத்துவரான ஹிப்போகிரேட்டிக் கிரேக் கத்தில் 460 முதல் 377 (BCE - Before Common Era)  வரை வாழ்ந்தவர். ‘மருத்துவத்தின் தந்தை' (Father of Medicine) என்று அழைக்கப்படுபவர். அவர் பெயரால் மருத்துவப் பட்டதாரிகள் தங்களது மருத்துவப் பணி தொடங்குமுன் எடுக்கும் உறுதிமொழி, அதற்குரிய நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதை அவர் களுக்கு அறிவுறுத்தும் ஓர் உறுதிமொழியாகும்.

உலகமெங்கும் இந்த உறுதிமொழி, நாட்டு எல்லை களைத் தாண்டி காலங்காலமாய்க் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சமஸ்கிருத பாட நூலிலிருந்து கொண்டுவரப்படும் உறுதிமொழி!

ஆட்சி தங்கள் கையில் சிக்கிக் கொண்டது என்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி, ஒற்றைக் கலாச்சாரத்தை - நாட்டின் பன்மொழி, பன்மத, பன்முகப் பண்பாட்டை அழித்து - புகுத்திடும் ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை இதிலும் புகுத்திட, ஒரு முயற்சி உருவாவதுபற்றி நேற்று (13.2.2022) சில நாளேடுகளில் வந்துள்ள தகவல், நாட்டை சமஸ்கிருத மயமாக்குகின்ற வகையில் மற்றொரு திணிப்பைப் புகுத்த நேஷனல் மெடிக்கல் கவுன்சில் (NMC) என்ற ஒன்றிய அரசின் அமைப்பு இதனை மாற்றி - ‘ஹிப்போகிரேட்டிக் ஓத்' என்பதற்குப் பதிலாக,  ‘ஷராக் ஷாபாத்' (Charak Shapath)  என்ற ஓர் உறுதி மொழியை - மாற்றம் செய்யவேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.

இந்த உறுதிமொழி ‘ஷராக்கா சமதி' என்ற வட மொழியான சமஸ்கிருத மொழிப் பாட நூலான பழைய கால ஏடாக இருப்பதிலிருந்து எடுக்கப்படுகிறதாம்!

இதையே சட்டமாக்க முடிவு செய்து, 14.2.2022 முதல் செயல்படுத்த  NMC என்ற நேஷனல் மெடிக்கல் கவுன்சில் முடிவு செய்து, அமல்படுத்தப் போகிறதாம்!

‘ஷராக்கா'  (Charaka)  என்பவர் நமது நாட்டு புராதன மருத்துவராம்; இந்த ‘ஷராக் ஷபாத்' நெறிமுறைப்படி, ஒரு பெண்ணை ஒரு மருத்துவர் சிகிச்சை அளிக்க அழைத்தால், அவருடன் ஒரு ஆண் கட்டாயம் இருக்க வேண்டுமாம்! இல்லையென்றால், ஆண் டாக்டர் பெண் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கக் கூடாதாம்; முடியாதாம்!

ஆனால், ஹிப்போகிரேட்டிக் உறுதிமொழியில் அப்படி ஏதும் இல்லை. (உறுதிமொழியிலேயே ஆண் கடவுளும் - பெண் கடவுளும்கூட இடம்பெற்றிருக் கிறார்கள்; நாத்திகமும் இல்லை அது).

கைப்பேசி என்பது சுதேசியா?

‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளேட்டில் இதுபற்றி வந்துள்ள ஒரு செய்தியில், ‘‘நம் தாய் நாட்டைச் சேர்ந் தவர் ‘ஷராக்கா'  (Charaka) விதேசியாக ஹிப்போ கிரேட்டிக் இருக்கிறார். சுதேசியாக  ‘ஷராக்' முனிவர் இருக்கிறார்'' என்கிறது. தற்போது ஆர்.எஸ்.எஸ். என்று பயன்படுத்தும் எழுத்து சுதேசியா? முனிவர்கள் காலத் தில் கைப்பேசியோ (Cell Phone), தொலைக்காட்சியோ (Television) உண்டா?

‘மனதின் குரல்' (மங்கி பாத்)  பேசுகிறாரே நமது பிரதமர், அந்த வானொலியை எந்த ரிஷி கண்டு பிடித்தார்? அந்நியன் - விதேசி என்று ஒதுக்கிவிட முடியுமா? ஸ்டெதஸ்கோப்,B.P. கருவியெல்லாம் முனிபுங்கவர்கள் கண்டுபிடிப்பா?

நம் நாட்டு ராணுவத்திற்குத் தேவையான போர் விமானங்களுக்கு - ரஃபேல் வெளிநாட்டு விமானங்களை அல்லவா விலை கொடுத்து வாங்குகிறோம். வில்லும்- வேலுமா பயன்படுத்த முனைகிறோம்?

நம் நாட்டில் இப்போது பெரிய அளவில் வைக்கப் படும் தலைவர்கள் சிலை - பெருந்தலைவர்களின் சிலைகளேகூட வெளிநாட்டிலிருந்துதானே இறக்குமதி!

நமது குடியரசுத் தலைவர், பிரதமர் பயணம் செய்யும் விமானமும், கார்களும் சுதேசிகள்தானா?

அவையெல்லாம் இருக்கும்போது ஹிப்போ கிரேட்டிக் உறுதிமொழி மட்டும் அந்நியமாகத் தெரிகிறது என்பதற்கு மூலகாரணம், அதன்மூலம் ஒரு பண்பாட்டுத் திணிப்பு - Cultural Imposition).

மருத்துவம் படிக்க

மீண்டும் சமஸ்கிருதம் வருமா?

சமஸ்கிருத மயமாக்கிடும் - ஆர்.எஸ்.எஸ். செய்திடும் ஒரே மொழி, ஒரே பண்பாடு சமஸ்கிருத கலாச்சாரத்தின் திணிப்பிற்கான திட்டத்தின் செயலாக்கம்தான் இது!

இது இப்படியே தொடர்ந்தால் எங்கே போவோம்?

நாளை, மருத்துவப் படிப்புக்கு மனு போட சமஸ் கிருதம் படித்த தகுதி மீண்டும் நுழைக்கப்பட்டால், அதிசயமோ, அதிர்ச்சியோ அடையவேண்டாம்! மருத் துவக் கனவாளர்களே, நுகத்தடியை சுமக்க தயாராவீர்!

நாடு எங்கே போகிறது?

கி.வீரமணி 

தலைவர், 

திராவிடர் கழகம்

சென்னை       

14.2.2022            


இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:27 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆசிரியர் அறிக்கை, மருத்துவம்

வெள்ளி, 30 ஜூலை, 2021

மருத்துவக் கல்வி: அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% முதற்கட்ட வெற்றியே!


        July 30, 2021 • Viduthalai

69%  சட்டப்படி - தீர்ப்புப்படி இட ஒதுக்கீடு கிடைப்பதற்குப் போராடுவோம்-ஒன்றிணைந்து செயல்பட்ட முதலமைச்சர் மற்றும் அனைவருக்கும் நன்றி!

முழு வெற்றி கிட்டும்வரை நமது போராட்டம் தொடரும்!

மருத்துவக் கல்வியில் முதுநிலைப் பட்டப் படிப்பில் 27% இட ஒதுக்கீடு அளிக்க ஒன்றிய அரசு முன் வந்துள்ளது முதற்கட்ட வெற்றியே! 69% அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை நமது போராட்டம் தொடரும்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது  அறிக்கை வருமாறு:

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 142 ஆவது பிரிவைப் பயன்படுத்தி, மருத்துவக் கல்வி வசதிகள் வளர்ச்சி பெறாத வடகிழக்கு மற்றும் வட மாநிலங்களில் உள்ளவர்கள் மருத்துவர்களாவதற்கு உதவும் வகையில், உச்சநீதிமன்றம், மருத்துவக் கல்வியில் வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் ‘மத்திய தொகுப்பு' என்ற ஒன்றை உருவாக்கி, தங்களுக்குள்ள மொத்த மருத்துவப் படிப்புக் கான இடங்களில் - எம்.பி.பி.எஸ். போன்ற பட்டப் படிப்பிற்கான 15 சதவிகிதமும், மேல் பட்டப் படிப்பிற்கான (எம்.டி., எம்.எஸ். போன்றவை) 50 சதவிகிதமும் (முதலில் 25 சதவிகிதம், பிறகு 50 சதவிகிதம்) ஆண்டுதோறும் தரவேண்டும் என்ற ஒரு ஆணையைப் பிறப்பித்து, அது அமலில் இருந்து வருகிறது.

அவ்வாறு மத்திய தொகுப்பின்மூலம் பெறப்பட்ட இடங்களை ஒன்றிய அரசு - ஒதுக்கீடு முறையில் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று ஆணையிட்டது உச்சநீதிமன்றம்.

ஒன்றிய அரசின் தவறான முடிவு!

ஒன்றிய அரசு, ஒதுக்கீடு முறையில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கவேண்டும் என்பதை, முழுமையாக செய் யாமல், (2008) முந்தைய, இன்றைய ஒன்றிய அரசுகள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் (எஸ்.சி., எஸ்.டி.,) என்ற பிரிவுக்கு மட்டும் அமல்படுத்திவிட்டு  (அதையும் முழு மையாகப் பின்பற்றியுள்ளார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி) ஓ.பி.சி. என்ற இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு அளிக்காமலே, இதை நடைமுறைப்படுத்தி, உயர்ஜாதியினரே எஞ்சிய எல்லா மருத்துவ இடங்களை யும் ஏகபோகமாக அனுபவித்த கொடுமை தொடர்ந்தது!

சலோனா குமாரி என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாய மருத்துவர் - இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு இந்த அநீதிக்குப் பரிகாரம் தேட, அப்பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது! (2015).

இதற்கிடையில் எத்தனையோ சம்பவங்கள் - சட்டப் பிரச்சினைகள் என்றாலும், ‘நீட்' தேர்வு என்று திணிக் கப்பட்டுள்ள இந்த தேர்வு வந்த பிறகு - 2016 இல் இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் திருத்தப்பட்டது. (பிரிவு 10-D கொண்டு வரப்பட்டது.) அதன்கீழ் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை(Notification) 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ‘தேசிய மருத்துவ ஆணையச் சட்டம்' 2019 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, நடைமுறைப் படுத்தப்பட்டது.

அதன்படி இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத் தின்கீழ் தரப்பட்ட அறிவிக்கைகள் தொடரிலும்

(21.12.2010) - அந்த அறிவிக்கையில் இட ஒதுக்கீடு அந்தந்த மாநிலங்களில் உள்ள சட்டங்களின்படியே தொடரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இவை எல்லாம் எந்த அல்லல்பாட்டுக்கும் இடமில்லாமல், சட்டத்திலும், விதிகளிலும் கண்டுள்ளன!

இதைச் செயல்படுத்தாமல் - பிற்படுத்தப்பட்ட சமூக மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடே - மத்திய தொகுப்பில் தராத கொடுமை தொடர்ந்து வந்தது.

இதை திராவிடர் கழகம் (‘விடுதலை'யில்) முதல் முதலில் அறிக்கையாக வெளியிட்டது. இந்த சமூக அநீதியை அம்பலப்படுத்தியது! (8.5.2020, 16.5.2020).

சமூக அநீதிக்கு எதிராக ஒன்றாக திரண்ட தமிழ்நாடு!

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நிலை யில்,  தி.மு.க., அதன் தலைவர் தளபதி தி.மு.க. ஸ்டாலின் அவர்களும் அறிக்கை வெளியிட்டு, அனைத்து ஒத்தக் கருத்துள்ள அரசியல் கட்சிகளும் (பா.ஜ.க. தவிர), சமூக அமைப்புகளும் ஓரணியில் திரண்டன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த சமூக அநீதிக்குப் பரிகாரம் தேட வழக்குத் தொடர்ந்தோம்!

இந்த வழக்கு அந்நாளைய தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி இராமமூர்த்தி ஆகியோர் அமர்வுமுன் விசார ணைக்கு வந்தது!

தி.மு.க.வின் சார்பில் மூத்த வழக்குரைஞர் வில்சன் அவர்களும், தி.க.வின் சார்பில் மூத்த வழக்குரைஞர் தியாகராஜன் அவர்களும், அதுபோல பல அரசியல் கட்சியினரும் தனித்தனியே வழக்குகளைத் தொடுத் தனர்.

ஆளுங்கட்சியாக அப்போது அ.தி.மு.க.வும், தமிழ்நாடு அரசும்கூட இறுதியில் இணைந்தது.

தமிழ் மண் - சமூகநீதி மண் - பெரியார் மண் என்பது உலகுக்கே பளிச்சிட்ட நிலையில், விவரமாக கேட்டு தீர்ப்பளித்த தலைமை நீதிபதி (பிறகு அவர் ஓய்வு பெற்றார்) அமர்வு தெளிவான தீர்ப்பளித்தது.

69 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பதே சரியானது - சட்டப்படியானது!

1. மத்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்.

2. சென்னை உயர்நீதிமன்றம் -அவர்களே ஒப்புக் கொண்டபடி ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை - தமிழ்நாட்டில் 1993 ஆண்டு 9 ஆம் அட்டவணைப் பாதுகாப்பில்  சட்டமாகி, அமலில் உள்ளபடி 69 சத விகிதப்படி இடங்களை பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் அளிக்கவேண்டும் என்று கூறியது. ஒரு கமிட்டி அமைத்து மூன்று மாதங்களில் தர ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது. அவ்வாண்டு ஓடிய நிலையில், வரும் 2021 ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தவேண்டும் என்று தெளிவுபடுத்தியது.

அதற்குப் பிறகு ஒன்றிய அரசின் மருத்துவ சுகாதாரத் துறை ஏதேதோ சாக்குப் போக்குகளைக் கூறி, பிற்படுத் தப்பட்டவர்களின் உரிமையை ஏற்க மறுத்தே வந்தது.

ஒரு கட்டத்தில், எஸ்.சி., எஸ்.டி.,யினருக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு என்றும்கூட கூறத் தயங்கவில்லை!

அதன் பிறகு தி.மு.க., நீதிமன்ற அவமதிப்பு என்ற வழக்கைத் தொடுத்ததில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஒரு மாதத்திற்குள் ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை பதில் அளிக்கவேண்டும் என்று கண்டிப்பான ஆணை வெளியிட்டது. அதன் பின்னும் அசையவில்லை. மறுமுறை மேலும் அவகாசம் கேட்ட போது, மீண்டும் ஒரு மாதம் அவகாசம் தந்து, அதற்குள் முடிவு தெரிவிக்க கண்டிப்பான உத்தரவு போட்டது.

இதற்கிடையில் தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்கள், டில்லியில் பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்துப் பேசி,  வற்புறுத்திய கோரிக் கைகளில் இதுவும் முக்கிய இடம்பெற்றது.

இதனை நாடாளுமன்றத் தி.மு.க. உறுப்பினர்களும், அதன் தலைவர் டி.ஆர்.பாலுவும், மாநிலங்களவையில் அதன் தலைவர் திருச்சி சிவா, மூத்த வழக்குரைஞர் வில்சன் போன்றவர்களும் வலியுறுத்தினர்.

பிறகுதான் பிரதமர் தனது கோப்பில் இப்பிரச்சினைக்கு முக்கிய முன்னுரிமை தரக் கூறினார். அதன்படி, 27 சதவிகித இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய தொகுப்பில் மருத்துவப் படிப்பில் தரப்படும் என்பதைக் கூறி, வசதி குறைந்த ஏழைகளுக்கு, முன் னேறிய ஜாதியினருக்கு பத்து விழுக்காடு ஒதுக்கீட்டையும் இணைத்தே அறிவித்தார்.

(உ.பி. போன்ற சில மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் உயர்ஜாதி, பிற்படுத்தப்பட்ட ஆகிய இரு சாரர்களின் வாக்கு வங்கி களைக் குறி  வைத்தது என்பது வெள்ளிடை மலை).

இது முழு வெற்றியல்ல!

தமிழ்நாட்டிற்கும், சமூகநீதிக்கும் கிடைத்த வெற்றி இது என்றாலும், முழு வெற்றி அல்ல. இது மறைக்கப்படக் கூடாத உண்மையாகும்!

69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி, தமிழ்நாட்டிற்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 விழுக்காடு தருவதற்குப் பதில், 50 சதவிகிதப்படியே - 27 விழுக்காடுதான் தர ஒப்புக் கொண்டுள்ளார்கள்!

இது சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையை முழுமையாக செயல்படுத்தியதாகாது என்றாலும்கூட, மூடப்பட்ட சமூகநீதிக் கதவு பிற்படுத்தப்பட்டோருக்கு கொஞ்சம் திறக்கப்பட்டிருக்கிறது - முழுமையாக அல்ல என்றாலும், இது முதற்கட்ட வெற்றி. இதன் பலன் இந்தியாவிலுள்ள அனைத்துப் பிற்படுத்தப்பட்ட சமூ கங்களும் அனுபவிக்கக் கூடிய திராவிட இயக்க அருங் கொடையாகக் (தந்தை பெரியாரால் முதல் அரசமைப்புச் சட்டத் திருத்த கொடைபோல) கொள்ளலாம்! ஒன்றிய அரசுக்கும் நன்றி!

முதலமைச்சர் உள்பட அனைவருக்கும் நன்றி!

மூடப்பட்ட கதவு திறக்கப்பட்டுள்ளது, தொடங்கப் படாத புதுக் கணக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் தொடங்கப்பட்டுள்ளது!

சமூகநீதியின் ஒரு களத்தில் ஒரு பகுதி வெற்றி!

சமூகநீதிப் போராட்டக் களத்தில்  தொடர்ந்து நின்று போராட வேண்டியவர்களே நாம்!

இதற்குக் காரணமான அத்துணைக் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் குறிப்பாக தி.மு.க., தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சிகள் எல்லோருக்கும் நன்றி!

கிடைத்த இடங்களைவிட பறிபோன இடங்களை எண்ணினால் நெஞ்சம் பதறுகிறது. அதுகுறித்து தனியே பிறகு எழுதுவோம்!

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை      

30.7.2021            

இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:37 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆசிரியர் அறிக்கை, இட ஒதுக்கீடு, மருத்துவம்

புதன், 9 டிசம்பர், 2020

மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சை செய்ய ஆயுர்வேதத்திற்கு இடம்கொடுப்பது வருணாசிரமப் பார்வையே!


அலோபதி அறுவை சிகிச்சை முறையில் ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள நிலையில் பின்னோக்கிப் பயணிப்பதை கைவிடவேண்டும்!

டாக்டர்கள் எதிர்ப்புப் போராட்டம் நியாயமானதே!
----------------------------------------------------------

மத்திய அரசின் நல்வாழ்வுத் துறை, ‘நீட்’ தேர்வைப் பிடிவாதமாகத் திணிப்பதற்குச் சொல்லப்படும் ஒரு காரணம் தரமான மருத்துவர்களை உருவாக்கவேண்டும்; நோயாளிகளின் உயிரோடு விளையாடக் கூடாது என்பது மிகமிக முக்கியம் என்று ஒருபுறம் கூறிக் கொண்டே, மறுபுறத்தில்...!

கண்டனத்துக்குரிய கேலிக் கூத்து!

ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கான தகுதியுண்டு என்று ஒரு மருத்துவ விதிகளை மாற்றி, மிக்சியோபதி (Mixopathy) என்று பெயர் கொடுத்திருப்பதைவிட கண்டனத்திற்குரிய கேலிக்கூத்து வேறு இல்லை!

ஆயுர்வேதத்தின்மீது - மற்ற பிரிவுகளை (சித்த வைத்தியம், யுனானி போன்றவற்றின்மீது காட்டாத தீவிர ஆர்வம்)விட அதிகமான அதீத அக்கறை காட்டுவதற்கு மூலகாரணம், அது சமஸ்கிருத கலாச்சாரத்திலிருந்து உருவான ஒன்று என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கை அஜெண்டாதான் என்பது உலகறிந்த ரகசியம்!
மத்திய அரசு சித்த வைத்தியத்திற்கு ஒதுக்கிடும் தொகைக்கும், ஆயுர்வேதத்திற்கு ஒதுக்கும் நிதியும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. அதற்குக் காரணம், இது தமிழ்ப் பண்பாடு - கலாச்சாரம் அடிப்படையைக் கொண்டது என்பதுதான்!

மருத்துவத்திலும் வருணாசிரமப் பார்வையா?

மருத்துவத்தில்கூட இப்படி ஒரு வர்ணாசிரம சிந்தனை ஓட்டம் வேடிக்கையானது.
அலோபதி என்ற ஆங்கில முறை வைத்தியத்தில்கூட, Physician என்ற மருந்துமூலம் குணப்படுத்தும் முறை மருத்துவப் படிப்பினைப் படித்தவர்களுக்கு அறுவை சிகிச்சை நடைமுறை கிடையாதே! அதனால்தானே, Physician’s Cure, Surgeon’s Cure - மருந்துமூலம் குணப்படுத்தும் மருத்துவம், அறுவை சிகிச்சைமூலம் நோயைக் குணப்படுத்தும் சிகிச்சை என்று இரண்டு முறைகள் காலங்காலமாக செயற்பாட்டில் உள்ளது!
அப்படி அதிலேயே இருக்கிறபொழுது, மருத்துவப் பட்டப் படிப்பும், அதற்கேற்ப M.D., - M.S., என்று பிரித்து சொல்லிக் கொடுக்கப்படுகிற நிலை உள்ளது!
அறுவை சிகிச்சை செய்வதில் முக்கிய பங்கு  - மயக்க மருந்து (Anaesthesia) கொடுப்பதாகும். அதன் அளவு, நோயாளியின் தன்மைக்கேற்ப அளவீடு பார்த்து கவனமாகக் கொடுத்து, வலி உபாதையிலிருந்து நோயாளிக்கு இதமான முறையில் அறுவை சிகிச்சைமூலம் குணப்படுத்த அதற்கென்றே தனிப்படிப்பு படித்து தகுதி பெறுகிறார்கள் ஆங்கில மருத்துவ முறையில் மருத்துவர்கள்.

நாட்டில் ஜனத்தொகையைக் குறைக்க ஏற்பாடா?

ஆயுர்வேத டாக்டர்கள் இதனை எப்படிக் கையாளுவார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி. மேலும் பல சிக்கலான உடற்கூறு நுணுக்கங்களை அறிந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில், இப்போது ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்தால், மிகப்பெரிய உயிர்க்கொல்லி ஆகி, நாட்டில் ஜனத்தொகையைக் குறைக்கத்தான் உதவுமே தவிர, மற்றபடி பயன்படாது! விபரீதமான மத்திய அரசின் இந்தத் திட்டத்தை எதிர்த்து டாக்டர்கள் எதிர்ப்பு காட்டுவது, மக்கள் நலன் கருதியே தவிர, அவர்களுக்காக அல்ல!

மத்திய அரசு இந்த விபரீத யோசனை - திட்டத்தைக் கைவிடவேண்டும்!

மருத்துவத்தில் - மருந்து கொடுத்து குணப்படுத்தும் ஆயுர்வேதத்தைப் பயன்படுத்தட்டும்; அதுபோல, மற்ற முறைகளிடத்தும் பாரபட்சம் காட்டாமல் - மாற்றாந்தாய் மனப்பான்மையோடு சித்த வைத்தியம், யுனானி போன்றவற்றில் நியாயமாக நடந்துகொள்ள வேண்டியது மிகமுக்கியம்!

முன்னோக்கிச் செல்லவேண்டும் - பின்னோக்கி அல்ல!

21 ஆம் நூற்றாண்டில் அறிவியல் மருத்துவவியலின் வளர்ச்சி, முன்னோக்கி செல்லவேண்டுமே தவிர,  பின்னோக்கி, ஆதிகாலத்தின் அறுவை சிகிச்சைக் காலத்தை நோக்கிப் போவது வளர்ச்சி அல்ல; விபரீத விளையாட்டு - அதுவும் மக்களின் - நோயாளிகளின் உயிருடன் என்பது விரும்பத்தகாத விபரீத நிலை!

டாக்டர்களின் எதிர்ப்பு நியாயமானதே!

எனவே, மத்திய அரசு இந்தத் திட்டத்தை கைவிடுவதே சாலச் சிறந்தது - மற்ற வழிகளில் ஆயுர்வேதத்தை ஊக்கப்படுத்தட்டும்; இப்படி ஒரு அபாயகரமான முயற்சியில் ஈடுபடக் கூடாது. மறுபரிசீலனை செய்வது அவசியம், அவசரம்!
டாக்டர்களின் எதிர்ப்பு நியாயமானது - தேவையானதும்கூட!

கி.வீரமணி,
தலைவர், 
திராவிடர் கழகம்.

9.12.2020 
சென்னை.
இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:32 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அறிக்கை, ஆயுர்வேதம், மருத்துவம்
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

செங்காந்த மலர்

செங்காந்த மலர்
தமிழ் நாட்டு மலர்
Powered By Blogger

2026 பெரியார் விருது பெற்றோர்களுக்கு பாராட்டு

2026 பெரியார் விருது பெற்றோர்களுக்கு பாராட்டு
பெரியார் மய்யம், சென்னை, 17.01.2026

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அளிக்கவேண்டிய நிதியை அளிக்க மறுப்பது தி.மு.க. ஆட்சிக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கும் நோக்கம்தானே! ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து வரும் 3 ஆம் தேதி கழக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

எனக்கு பிடித்தவை

  • 2.வாழ்வியல் சிந்தனைகள்
  • 1.தமிழர் தலைவர்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

Translate மொழிபெயர்

Wikipedia

தேடல் முடிவுகள்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • வாகை சூடிய வாசிங்டன்
    கலி. பூங்குன்றன் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாட்டின் 2ஆம் நாளில் கருத்துக்களம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்கத்...
  • இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அணி; மற்றொன்று சமூகநீதிக்கு (இட ஒதுக்கீட்டுக்கு) எதிரான அணி!
      ‘‘ஊன்றிப் படியுங்கள், உண்மையைப் பரப்புங்கள்!’’ உயர்ஜாதிக் கூட்டம் இடஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது! இந...
  • கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பால் சிவந்தது சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
    சென்னை, பிப்.7  உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் பொருளாதாரச் சி...
  • தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘‘செம்மொழி இலக்கிய விருதுடன்’’ தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை!
      ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சரின் அறிவிப்பு –‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்’ அவர் என்பதை உலகறியச் செய்யும் எடுத்துக்காட்டு துணைவேந்தர்...
  • சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு: 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
    நகைகள் மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டபோது நான்கு கிலோவுக்கும் அதிகமான தங்கம் மாயமானது அம்பலமானது. - திருவனந்தபுரம்: சபரிமலை ...
  • இதுதான் பார்ப்பன பக்தி! மது குடித்துவிட்டு ஆபாச நடனமாடிய நான்கு அர்ச்சகர் பார்ப்பனர்கள்-அறநிலையத் துறை நடவடிக்கை
    சிறீவில்லிபுத்தூர், ஜூன் 26 விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள பெரிய மாரி யம்மன் கோயிலி...
  • ஜாதியப் பாகுபாட்டைத் தடுக்கும் யுஜிசி விதிமுறைகளை எதிர்த்து வடமாநிலங்களில் பார்ப்பன மாணவர்கள் போராட்டம்!
      பார்ப்பனர்களைப் புரிந்துகொள்வீர்! புதுடில்லி, ஜன. 28  பல்கலைக்கழக மானியக் குழு ஜனவரி 13, 2026 அன்று வெளியிட்ட ‘‘உயர்கல்வி நிறு வனங்களில் ...
  • இன்று புரட்சியாளர் லெனின் மறைவு நாள் (21.01.1924)
      இன்று புரட்சியாளர் லெனின் மறைவு நாள் (21.01.1924) சோவியத் யூனியனின் தந்தை என்று அழைக்கப்படும் புரட்சியாளர் விளாடிமிர் லெனின் அவருடைய 102-ஆ...
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஏட்டுக்குத் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அளித்த பேட்டி
      இன்றைய நிலையில், பெரியாரின் பொருத்தப்பாடு என்ன? பார்ப்பனீய எதிர்ப்பு ஏன் என்பது உள்பட ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேட்டுக்கு விடையளித்தார் தி...
  • அமெரிக்கா மாநாட்டில் பங்கேற்ற தோழர்கள் தமிழகம் திரும்பினர்
    அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில்  செப்டம்பர் 21, 22 ஆகிய நாள்களில் அமெரிக்க மனித நேயர் அமைப்பும், பெரியார் பன்னாட்டு அமைப்பும் ஒருங்கிணைந்த...

லேபிள்கள்

  • 10% ஒதுக்கீடு
  • 100 நாள் வேலை
  • 100நாள்வேலை
  • 2020
  • 2021
  • 2024
  • 27%
  • 60 ஆண்டு
  • 7 திட்டங்கள்
  • 91
  • அக்னிபாதை
  • அகவிலைப்படி
  • அஞ்சலகம்
  • அண்ணா
  • அண்ணா பல்கலை
  • அண்ணா பல்கலைக்கழகம்
  • அண்ணாமலை
  • அணி
  • அதிபர்
  • அதிரடி அன்பழகன்
  • அநீதி
  • அபராதம்
  • அபாயம்
  • அம்பத்தூர்
  • அம்பேத்கர்
  • அமிர்தலிங்கம்
  • அமிர்ஷா
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்.அய்.டி
  • அய்.அய்.டி.
  • அய்.ஏ.எஸ்.
  • அய்.நா.
  • அய்.பி.எஸ்
  • அய்தராபாத்
  • அய்யப்பன் கோயில்
  • அயோத்தி
  • அயோத்திதாசர்
  • அயோத்திதாசர் மணி மண்டபம்
  • அர்ச்சகர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சகர் பார்ப்பனர்
  • அரக்கோணம்
  • அரசமைப்பு சட்டம்
  • அரசாணை
  • அரசு
  • அரசு அலுவலகங்கள்
  • அரசு அறிவிப்பு
  • அரசுப் பணி
  • அரபு மொழி
  • அவதூறு
  • அவமதிப்பு
  • அளிப்பு
  • அறநிலையத் துறை
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிவிப்பு
  • அறைஞாண்
  • அன்பழகனார்
  • அனுமதி மறுப்பு
  • அனுமான்
  • அனைத்து கட்சி கூட்டம்
  • அனைத்து சாதியினர்
  • அனைத்து ஜாதி
  • அனைத்து ஜாதியினர்
  • அனைத்துக் கட்சிக் கூட்டம்
  • அனைத்துக்கட்சி
  • அனைத்துக்கட்சி கூட்டம்
  • அஷ்டமி நவமி
  • ஆ.ராசா
  • ஆகமம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி பேட்டி
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியர்அறிக்கை
  • ஆட்சி
  • ஆணவக் கொலை
  • ஆணவக் கொலை தடுப்பு சட்டம்
  • ஆணவப் படுகொலை
  • ஆணை
  • ஆந்திரா
  • ஆபத்து
  • ஆபாச நடனம்
  • ஆய்வரங்கம்
  • ஆய்வுக்குழு
  • ஆயுத பூஜை
  • ஆயுர்வேதம்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்ப்பாட்ட அறிவிப்பு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரப்பா
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆளுநர் விருந்து
  • ஆன்மிக சொற்பொழிவு
  • ஆன்மீகம்
  • ஆனந்த விகடன்
  • ஆனைமுத்து
  • இ.டபில்யூ.எசு
  • இச்சை
  • இசை
  • இட ஒதிக்கீடு
  • இட ஒதுக்கீடு
  • இடிப்பு
  • இணையதளம்
  • இந்தி
  • இந்தி அழிப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்திய இராணுவம்
  • இந்து சட்டம்
  • இந்து தமிழ் திசை
  • இந்து தமிழ்திசை நாளேடு
  • இந்து திருமணம்
  • இந்து நாளேடு
  • இந்து மாநாடு
  • இந்துத்துவா
  • இந்துமதப் பண்டிகைகள்
  • இந்துமதம்
  • இமாம் பசந்த்
  • இரங்கல்
  • இரங்கல் அறிக்கை
  • இரயில் எரிப்பு
  • இரயில்வே
  • இராசு
  • இராமராஜ்யம்
  • இராமன்
  • இராமன் பாலம்
  • இராமன்கோயில்
  • இராமாயணம்
  • இராஜஸ்தான்
  • இல்லத்திறப்பு
  • இலங்கை
  • இலவசம்
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இன்பக்கனி
  • உ.பி.
  • உ.வே.ச
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பு
  • உச்சநீதிமன்றம்
  • உடல்
  • உடைப்பு
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உயர் நீதிமன்ற தீர்ப்பு
  • உயிரிழப்பு
  • உரம்
  • உரிமை
  • உரிமைத்தொகை
  • உரை
  • உலகத் தமிழ் மாநாடு
  • உள்ஒதுக்கீடு
  • உறுதிமொழி
  • ஊத்துக்கோட்டை
  • ஊதியம்
  • ஊரக வளர்ச்சி
  • ஊழல்
  • எச்சரிக்கை
  • எடைக்கு எடை
  • எதிர்ப்பு
  • எழுத்தியல்
  • எழும்பூர்
  • எழும்பூர் ரயில் நிலையம்
  • என்எல்சி
  • ஒப்பீடு
  • ஒப்புதல்
  • ஒரே மொழி
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றிய அரசு
  • ஓசூர்
  • ஓதுவார்
  • ஓபிசி
  • ஓய்வூதியம்
  • க்யூஆர் கோட்
  • கச்சத்தீவு
  • கட்டுமானத் தொழிலாளர்
  • கடவுள்
  • கடவுள் மறுப்பு
  • கடன்
  • கடிதம்
  • கடைசி
  • கண்டணம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டனம்
  • கண்ணதாசன்
  • கம்யூனிஸ்ட்
  • கமலஹாசன்
  • கர்நாடகம்
  • கர்நாடகா
  • கர்ப்பூரி தாகூர்
  • கருணை வேலை
  • கருத்தரங்கம்
  • கருத்தியல் பயிற்சி
  • கருத்து
  • கருத்துப்படம்
  • கருத்துரை
  • கருநாடக மாநிலம்
  • கரோனா
  • கல்
  • கல்வி
  • கல்வி அமைச்சர்
  • கல்வி நிலையம்
  • கல்வி வளாகம்
  • கல்வெட்டு
  • கலந்துரையாடல்
  • கலாச்சாரம்
  • கலி பூங்குன்றன்
  • கலிபூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் சிலை
  • கலைஞர் நூற்றாண்டு நூலகம்
  • கலைஞருடன் – ஒரு நேர்காணல்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கவிதை
  • கவியரங்கம்
  • கவுதமன்
  • கழக நூல்கள்
  • கழகம்
  • கழுதை
  • கன்னிமேரா
  • கனடா
  • கனிம நிலங்கள்
  • கனிமொழி
  • காணொலி
  • காந்தி
  • காப்பீடு
  • காமராஜர்
  • காரணம்
  • காரல் மார்க்ஸ்
  • காலை உணவு
  • காலை சிற்றுண்டி
  • கி.வீரமணி
  • கி.வீரமணி அறிக்கை
  • கியூட்
  • கிரிமிலேயர்
  • கிருஷ்ணகிரி
  • கீழ்ப்பாக்கம்
  • கீழடி
  • குடந்தை
  • குடியரசுத் தலைவர்
  • குடியிருப்பு
  • குடியுரிமை
  • குடியுரிமை சட்டம்
  • குடியுரிமை திருத்தச் சட்டம்
  • குடியுரிமைச் சட்டம்
  • குமரி முதல்
  • குமுதம்
  • குலக்கல்வி
  • குவைத்
  • குழந்தை
  • குழந்தை திருமணம்
  • குழந்தை தொழிலாளர்
  • குழந்தையின்மை
  • குற்றச்சாட்டு
  • குற்றம்
  • குறள்
  • குன்றக்குடி அடிகளார்
  • குஜராத்
  • கூட்டம்
  • கூட்டமைப்பு
  • கூடுவாஞ்சேரி
  • கேதார்நாத்
  • கேந்திர வித்யாலயா
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி
  • கைது
  • கைபேசி
  • கொடும்பாவி எரிப்பு
  • கொடுமை
  • கொரோணா
  • கொலை
  • கொலை முயற்சி
  • கொலைக்கருவி
  • கொள்கை பரவல்
  • கோ.தங்கராசு
  • கோகுல்ராஜ்
  • கோத்ரா
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோரிக்கை
  • கோவிட்- 19
  • கோவில்
  • கோவை
  • ச்டாலின்
  • சகுனம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சங்கரையா
  • சங்கொலி
  • சட்ட எரிப்பு
  • சட்ட மன்றம்
  • சட்ட வரைவு
  • சட்ட விழிப்புணர்வு
  • சட்டசபை
  • சட்டத்திருத்தம்
  • சட்டம்
  • சட்டமன்ற தீர்மானம்
  • சத்திரியர்
  • சதி
  • சந்தா
  • சந்திப்பு
  • சந்துரு பரிந்துரை
  • சபரிமலை
  • சம்புகன்
  • சமசுக்கிருதம்
  • சமசுகிருதம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக நீதி நாள்
  • சமூகநீதி
  • சமூகநீதி அணி
  • சமூகநீதி நாள்
  • சரஸ்வதி
  • சனாதனம்
  • சாக்கோட்டை
  • சாகித்ய அகாடமி
  • சாதனை
  • சாதி
  • சாதி சான்றிதழ்
  • சாமி
  • சாமியார்
  • சாய்பாபா
  • சாலை
  • சான்றிதழ்
  • சிஏஏ
  • சிங்கப்பூர்
  • சிங்கப்பெருமாள் கோவில்
  • சிங்காரவேலர்
  • சித்தராமய்யா
  • சித்தராமையா
  • சித்திரபுத்திரன்
  • சிந்துவெளி
  • சிபிஎஸ்இ
  • சிபிஎஸ்சி
  • சிலம்பம்
  • சிலை
  • சிலை திறப்பு
  • சிறப்பு
  • சிறப்பு கூட்டம்
  • சிறை
  • சீட்
  • சீனா
  • சுகாதாரத்துறை
  • சுடுகாடு இடுகாடு
  • சுதந்திரப் போராட்ட வீரர்
  • சுந்தரம்
  • சுற்றறிக்கை
  • சூத்திரன்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • செக்கடி குப்பம்
  • செங்கல்பட்டு
  • செம்மொழி
  • செம்மொழி இலக்கிய விருது
  • செம்மொழி நூலகம்
  • செய்தி
  • செய்யாறு
  • செயலி
  • செயற்குழு
  • செல் எண்கள்
  • சென்னை
  • சேது
  • சேது கால்வாய்
  • சேது பாலம்
  • சேலம்
  • சேலம் மாநாடு
  • சொர்க்கவாசல்
  • சோசலிசம்
  • சோனியா
  • ஞானபீட விருது
  • டாக்டர்
  • டி ஆர் பாலு
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டெல்லி
  • டைம்ஸ்
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா
  • தகவல் தொழில் நுட்பக்குழு
  • தகைசால் தமிழர்
  • தகைசால் தமிழர் விருது
  • தங்கம் திருட்டு
  • தஞ்சை
  • தடுக்க சட்டம்
  • தடுப்பு
  • தடுப்பு சட்டம்
  • தடுப்பூசி
  • தடை மறுப்பு
  • தண்டனை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியாரின் பெயர்
  • தமிழ்
  • தமிழ் அர்ச்சனை
  • தமிழ் இணையம்
  • தமிழ் கட்டாயம்
  • தமிழ் சங்கம்
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ் பண்பாட்டு மாதம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் மாநாடு
  • தமிழ் மொழி
  • தமிழ் வீரர்கள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு முதல்வர்
  • தமிழ்மொழி வாழ்த்து
  • தமிழர்
  • தமிழர் தலைவர்
  • தமிழில் குடமுழுக்கு
  • தர்மபுர ஆதீனம்
  • தர்மபுரி
  • தர்மம்
  • தலைப்பு உரை
  • தலைமை
  • தலைமை நீதி
  • தலையங்கம்
  • தலைவர்கள்
  • தள்ளுபடி
  • தனியார் நிறுவனங்கள்
  • தனியார்மயம்
  • தாய்லாந்து
  • தாழ்த்தப்பட்டோர்
  • தி.மு.க. அரசு
  • தி.மு.க. மாணவரணி
  • திடல்
  • திமுக
  • தியாகராயர் நகர்
  • திராவிட இயல்
  • திராவிட தேசியம்
  • திராவிட மாடல்
  • திராவிடப் பாரம்பரியம்
  • திராவிடம்
  • திராவிடம் வென்றது!
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திரிபு வேலை
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருமாவேலன்
  • திருமுருகன் காந்தி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளூர்
  • திருவாடுதுறை
  • தில்லி
  • திவாகரன்
  • திறப்பு
  • தினகரன்
  • தினசெய்தி
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமணி கதிர்
  • தினமலர்
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்லக்
  • துக்ளக்
  • துக்ளக் பதிலடி
  • துணை முதலமைச்சர்
  • துயர் துடைப்பு
  • துயர்துடைப்பு
  • துரை.சந்திரசேகரன்
  • துரைமுருகன்
  • துளக்
  • தெலுங்கானா
  • தென் சென்னை
  • தேசிய கல்வி
  • தேசிய சட்டக் கல்லூரி
  • தேர்தல்
  • தேர்தல் அறிக்கை
  • தேர்தல் பத்திரம்
  • தேர்வாணையம்
  • தேர்வு
  • தேவதாசி
  • தேவாரம்
  • தொடக்கம்
  • தொண்டு
  • தொப
  • தொல்.திருமாவளவன்
  • தொழில்படிப்பு
  • தொழிலாளர்
  • தொழிலாளர் கொள்கை
  • தொழிலாளர் போராட்டம்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • நகை
  • நடராசன்
  • நடுவன் அரசு துறை
  • நடைபாதைக் கோயில்கள்
  • நம்பிக்கை
  • நரபலி
  • நரிக்குறவர்
  • நரேந்திரர்
  • நல வாரியம்
  • நவராத்திரி
  • நன்கொடை
  • நன்றி
  • நாகநாதன்
  • நாகை
  • நாங்குநேரி
  • நாத்திகம்
  • நால்வர்
  • நிகழ்வுகள்
  • நிதி
  • நியமனம்
  • நிர்மலா
  • நிறைவு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவுநாள்
  • நீக்கம்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீதிக்கட்சி
  • நீதித்துறை
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதி மோகன்
  • நீதிபதிகள்
  • நீதிமன்றம்
  • நீரிழிவு
  • நீலச் சட்டை பேரணி
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூலகம்
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு விழா
  • நெய்வேலி
  • நெல்லை
  • நேர்காணல்
  • நோபல் பரிசு
  • பக்தி
  • பகவத் கதை பாராயணம்
  • பகவத்கீதை
  • பகுத்தறிவாளர் கழக மாநாடு
  • பசு
  • பஞ்சாப்
  • படத்திறப்பு
  • படம் திறப்பு
  • பண்பாட்டுப் படையெடுப்பு
  • பணி
  • பணிஓய்வு
  • பணிநிறைவு
  • பணிபுரியும் பெண்கள்
  • பணியாளர்
  • பணியிடை நீக்கம்
  • பதக்கம்
  • பதவி உயர்வு
  • பதவி ஏற்பு
  • பதவியேற்பு
  • பதில்
  • பதிலடி
  • பதிவு
  • பயணம்
  • பயிலரங்கம்
  • பரதம்
  • பரப்புரை
  • பரப்புரை திட்டம்
  • பரிசுத் தொகை
  • பல்கலைக்கழகம்
  • பல்லக்கு
  • பல்லாவரம்
  • பலகை
  • பவழ விழா
  • பழங்குடியினர்
  • பள்ளி
  • பள்ளிக்கல்வித்துறை
  • பஜனை
  • பா.இயேசுராஜா
  • பா.ஜ.க
  • பா.ஜ.க.
  • பாட திட்டம்
  • பாடம்
  • பாண்டே
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பன பக்தி!
  • பார்ப்பன வெறி
  • பார்ப்பனத் திமிர்
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் எதிர்ப்பு
  • பாரத ரத்னா
  • பாரதிதாசன் விருது
  • பாரம்பரிய சின்னம்
  • பாராட்டு
  • பாராட்டு விழா
  • பாலபிரஜாபதி
  • பாலம்
  • பாலியல் லீலை
  • பாலியல் வன்கொடுமை
  • பாவாணர்
  • பாஜக
  • பி.எப்.
  • பிச்சை
  • பிணை
  • பிபிசி
  • பிரதமர்
  • பிராமண – சூத்திரப் போராட்டம்
  • பில்கிஸ் பானு
  • பிள்ளையார் ஊர்வலம்
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பு
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற இதழ்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறந்தநாள் அறிக்கை
  • பிறமொழி கற்றோர்
  • பின்னணி
  • பிஜேபி அரசு
  • பீகார்
  • புகழாரம்
  • புகார்
  • புத்தக வெளியீடு
  • புத்தகக் காட்சி
  • புத்தாண்டு
  • புதிய கல்வி
  • புதிய கல்வி கொள்கை
  • புதிய சட்டம்
  • புதிரை வண்ணார்
  • புதுச்சேரி
  • புதுடில்லி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்டு இமாலயப்புரட்டு
  • புலம்பெயர் தமிழர்
  • புலவர்
  • புலவர் வீரமணி
  • புலால் உணவு
  • புழல்
  • புறக்கணிப்பு
  • பூணூல்
  • பூமி பூஜை
  • பெங்களூரு
  • பெட்ரண்ட் ரஸல்
  • பெண்
  • பெண் ஏன் அடிமையானாள்?
  • பெண்கள்
  • பெண்கள் ஆணையம்
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு
  • பெண்களுக்கு இட ஒதுக்கீடு
  • பெண்ணுரிமை
  • பெரம்பூர் பி.சபாபதி
  • பெரியார்
  • பெரியார் 1000
  • பெரியார் உலகத்திற்கு நன்கொடை
  • பெரியார் உலகம்
  • பெரியார் களம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் நினைவிடம்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பணி
  • பெரியார் பல்கலைக்கழகம்
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் மண்
  • பெரியார் லைஃப்
  • பெரியார் விருது
  • பெருமை
  • பெல்
  • பேட்டி
  • பேரடை
  • பேரணி
  • பேராசிரியர்
  • பேரிடர்
  • பேருந்து
  • பொங்கல்
  • பொதுக்குழு
  • பொதுத்தேர்வு
  • பொருளாதாரம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பு
  • போட்டித் தேர்வு
  • போதைப் பொருள்
  • போராட்டம்
  • மக்களவை உறுப்பினர்
  • மக்களவைத் தேர்தல்
  • மகப்பேறு விடுப்பு
  • மகளிர்
  • மகளிர் உரிமைத் தொகை
  • மகளிர் நாள்
  • மகாராணி
  • மகாவீரர்
  • மஞ்சை வசந்தன்
  • மடையர்
  • மணல் திட்டு
  • மணவழகர் மன்றம்
  • மணவிழா
  • மணிப்பூர்
  • மணிமண்டபம்
  • மணியம்மையார்
  • மணியரசன்
  • மத்திய அரசு
  • மதச்சார்பின்மை
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதவாதம்
  • மது குடி
  • மராட்டியம்
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவக் கல்லூரி
  • மருத்துவக் கல்வி
  • மருத்துவம்
  • மருத்துவமனை
  • மருத்துவர்
  • மலம்
  • மலர்
  • மலன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மழை
  • மழை வெள்ளம்
  • மறியல்
  • மறுப்பு
  • மறைவு
  • மறைவு நாள்
  • மனித உரிமை
  • மனித சங்கிலி
  • மனுதர்ம யோஜனா
  • மனுதர்மம்
  • மனுஷ்யபுத்திரன்
  • மனைவி சம்பளம்
  • மாணவர்
  • மாணவர் கழகம்
  • மாணவர்கள்
  • மாநாடு
  • மாநில அரசு
  • மாநில அரசுப் பணி
  • மாநிலங்களவை
  • மாம்பழம்
  • மார்கழி
  • மாலனுக்கு பதிலடி
  • மாற்றம்
  • மாற்றுத்திறனாளி
  • மாற்றுவோம்
  • மிரட்டல்
  • மின்சாரம்
  • மீட்பு
  • மீனவர்
  • மு க ஸ்டாலின்
  • மு.க. ஸ்டாலின்
  • மு.க.ஸ்டாலின்
  • முத்துக்கூத்தன் நூற்றாண்டு
  • முத்தையன்
  • முதல்வர்
  • முதல்வர் விஜய்
  • முதலமைச்சர்
  • முரசொலி
  • முருகன்
  • முற்பட்டோர்
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூடநம்பிக்கைப் பிரச்சாரம்
  • மூடப் பண்டிகை
  • மூதறிஞர் குழு
  • மே நாள்
  • மொழி
  • மொழிகள்
  • மொழிப்போர்
  • மோசடி
  • யாகம்
  • யாழ்ப்பாணம்
  • யுனெசுகொ
  • யுஜிசி விதிமுறை
  • ரங்கராஜ்
  • ரசல்
  • ரமணர்
  • ரயில்வே
  • ரஜினி
  • ராகுல் காந்தி
  • ராணுவம்
  • ராமதாஸ்
  • ராமர் கோயில்
  • ராஜஸ்தான்
  • ரிசர்வ் வங்கி
  • லெனின்
  • வ.உ.சி.
  • வங்கதேசம்
  • வங்கி
  • வட்டாட்சியர்
  • வட இந்தியா
  • வட மாநிலம்
  • வடநாடு
  • வடமாநிலங்கள்
  • வரவு செலவு
  • வரவேற்பு
  • வரி
  • வருகை
  • வழக்கு
  • வழக்கு விசாரணை
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன் கொடுமை
  • வன்கொடுமை
  • வன்புணர்வு
  • வன்முறை
  • வன உயிரியல் பூங்கா
  • வா உ சி
  • வாரியம்
  • வாரியார்
  • வாழ்த்து
  • வி.பி.சிங்
  • விசாரணை
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை90
  • விடுதலைப் போர்
  • விடுமுறை
  • விபத்து காப்பீட்டுத் திட்டம்
  • விமானநிலையம்
  • வியப்பு
  • விருது
  • விருதுநகர்
  • விலக்கு
  • விவசாயி
  • விவேகானந்தர்
  • விழா
  • விளக்கம்
  • விளையாட்டு
  • விஜயபாரதம்
  • விஸ்வகர்மா திட்டம்
  • வீட்டு நிகழ்ச்சிகள்
  • வீட்டுமனை
  • வெள்ளம்
  • வெள்ளை அறிக்கை
  • வெளியேற்றம்
  • வெற்றி
  • வேங்கை வயல்
  • வேதம்
  • வேர்ல்ட் ரெக்கார்ட்
  • வேலை நேரம்
  • வேலைவாய்ப்பு
  • வைக்கம்
  • வைக்கம் நூற்றாண்டு
  • வைகோ
  • வைரசு
  • வைரமுத்து
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜாதி உணர்வு
  • ஜாதி கொடுமை
  • ஜாதி நீக்கம்
  • ஜாதி பெயர்
  • ஜாதி பேதம்
  • ஜாதி முறை
  • ஜாதி வெறி
  • ஜாதியப் பாகுபாடு
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு
  • ஜூனியர் விகடன்
  • ஜெர்மன்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • ஹிந்தி எதிர்ப்பு
  • ஹிந்தி எழுத்து அழிப்பு
  • ஹிந்துத்துவா
  • CAB&NRC

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (15)
    • ▼  ஆகஸ்ட் (2)
      • இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அண...
      • தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை ‘‘முதலில்’’ பாடுவதைச் ...
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2025 (23)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (6)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)

சிறப்புடைய இடுகை

அமெரிக்கா - வாஷிங்டன் நகரில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது

வரவேற்புரை என்னும் தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க மேரிலாண்ட் மாகாணத்தின் 8-ஆம் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி ஜாமி ரஸ்கின் அவர்களுக்கு தமி...

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (15)
    • ▼  ஆகஸ்ட் (2)
      • இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அண...
      • தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை ‘‘முதலில்’’ பாடுவதைச் ...
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2025 (23)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (6)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.