செவ்வாய், 28 ஜனவரி, 2020

தினமலரே, நாங்கள் சூத்திரர்களாக இருக்க வேண்டுமா?

மறுப்பு! - மறுப்பு!!

தினமலரே, நாங்கள் சூத்திரர்களாக இருக்க வேண்டுமா?

'ஆம்! தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஹிந்து மதத்தை எதிர்த்தவர்கள்தான். அண்ணல் அம்பேத்கர் "நான் ஹிந்துவாகப் பிறந்தேன்; ஆனால் அதே நேரத்தில் ஹிந்துவாக சாகமாட்டேன்" என்று சொன்னதோடு பல லட்சம் மக்களோடு ஹிந்து மதத்துக்கு முழுக்குப் போட்டார்.

ஹிந்து என்று ஒப்புக் கொண்டால் பார்ப்பனர் அல்லாதார் தங்களை சூத்திரர்கள் என்றே ஒப்புக் கொள்ள வேண்டும். சூத்திரர்கள் என்று ஒப்புக் கொண்டால் வேசி மக்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.

தந்தை பெரியார் மட்டுமல்ல - மானத்தை மதிக்கும் பார்ப்பனர் அல்லாதார் 'ஹிந்து'க் கடவுள்களையோ, சாஸ்திரங்களையோ ஏற்றுக் கொள்ள முடியுமா? நாங்கள் இன்றைக்கும் சூத்திரர்களாகவே இருக்க வேண்டும் என்பதுதான் 'தினமலர்' திரிநூல்களின் இன வெறியா?

பிரிவினைவாதிகள் யார்?

'விடுதலை' பத்திரிகை செய்தி என்று போட்டு அதில் 'விடுதலை'யில் வெளி வராத வரிகளைப் போடலாமா? 'ராமன் சக்தியை நம்பாத இவர்கள் ஈ.வெ.ரா.வின் கூற்றான 'கடவுளை மற, மனிதனை நினை' என்பதைப் பின்பற்ற வேண்டும்' இந்த வரிகள் 'விடுதலை'யில் வெளிவந்துள்ளதா?

எவ்வளவுக் கேவலமான அறிவு நாணயமற்ற கும்பல் இது.

ஒரு அய்ந்து நாள்கள் இடைவெளியிலேயே இப்படித் திரித்து வெளியிடுவது தான் திரிநூல்களின் பத்திரிகா தருமமா? 'அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி' என்று பத்தினித்தன்மைக்குப் புதுவித தர்மம் கற்பிக்கும் கைபர் கணவாய் கும்பல் அல்லவா?

சரி, அடுத்து வருவோம், ராம பிரானை நம்புபவர்கள், இசட் பிரிவுப் பாதுகாப்பை விரும்புவது ஏன் என்ற கேள்விக்கு என்ன பதில்?

"மனிதனை நினை என்பது எந்த மனிதனை என்பதையும் விளக்கினால் நன்றாக இருக்கும். உங்களுக்குத்தான் மனிதர்களில் பலரைப் பிடிக்காதே, எங்கிருந்தோ வந்தவர்கள் என்று கூறி பிரிவினைவாதம் பேசுவீர்களே" என்றும் ஒரு முன்னுரையையும் கொடுத்துள்ளது 'தினமலர்'.

தனிப்பட்ட முறையில் எந்த மனிதரையும் நாங்கள் வெறுப்பதில்லை. ஒரு முறை எழுத்தாளர் சிவசங்கரி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களை பேட்டி கண்டபோது - வினா ஒன்றை எழுப்பினார்.

"நீங்கள் ஏன் ஆன்டி பிராமினா இருக்கிறீர்கள்" என்பதுதான் அந்தக் கேள்வி; அப்பொழுது 'விடுதலை' ஆசிரியர் சொன்ன பதில் என்ன தெரியுமா? "வீ ஆர் புரோ-ஹியூமன் (Pro-Human). எனவே ஆன்டி பிராமின் (Anti Brahmin)" என்று பதில் கூறினார். மனிதர்களைப் பிறப்பின் பெயரால் பிரிவினை செய்தது யார்? ஹிந்து மதம் தானே - அந்த பிரிவினை கூடாது என்பது திராவிடர் கழகம் தானே - ஏன் தலைகீழாகப் புரட்டுகிறீர்கள்?

நீங்களும் பிராமணராக இருக்கக் கூடாது - மனிதனாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை.

ஓ! புரட்டல் வாதம் தானே 'தினமலர்' கூட்டத்தினுடையது!

- விடுதலை நாளேடு  19 1 20


சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் நடந்தது என்ன?

ரஜினிக்கு மறுப்பு

'தி டைம்ஸ் ஆப் இந்தியா'வுக்கு

தமிழர் தலைவர் பேட்டி

'துக்ளக்' 50-ஆம் ஆண்டுவிழா நிறைவு நிகழ்வில், 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த திராவிடர் கழகத்தின் நிகழ்ச்சி குறித்து உண்மைக்கு மாறான  செய்தியை கூறிய ரஜினிகாந்த் திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் 'டைம்ஸ் ஆப் இந்தியா'விற்கு கி.வீரமணி அளித்த பேட்டியில், "ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறுகிறார்கள். அப்படி வருபவர் மீதான நம்பகத்தன்மை அற்றுப் போய் விட்டது. அரசியலுக்கு வருகிறேன் என் பவர் பிறரின் உணர்வுகளுக்கு மதிப் பளிக்கவேண்டும். தந்தை பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய உண்மைக்கு மாறான கருத்தால் பெரியாரைப் பின்பற்றுபவர் களின் மனதைப் புண்படுத்தி விட்டார். தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெரி யாரின் பற்றாளர்கள் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்" என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: "ரஜினி காந்த் உண்மைக்கு மாறாகக்  கூறி உள்ளார். மேடையில் சோ வைப் புகழ்கிறேன் என்று  சோ 'துக்ளக்' கில் எழுதாத ஒன்றையும், 'துக்ளக்'கில் அச்சிடாத ஒன்றை குறித்தும் ரஜினிகாந்த் பேசியுள்ளார். இவ்வாறு அவரைப் பேசத் தூண்டியது யார்? எங்கிருந்து அவருக்கு இப்படி பேசுமாறு உத்தரவு வந்தது?. ரஜினி யின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.

மேலும் மக்களிடையே அவர்மீதான நம்பிக்கையும் போய்விட்டது. இவர் கூறியுள்ளது 49-ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் நிகழ்வு ஆகும். இரண்டாம் நாள் கடவுளர் படங்கள் வாகனங்களில் மூடநம்பிக்கை குறித்து விழிப்புணர்வு ஊட்டும் வகையில் கொண்டு வரப்பட்டன. அப்போது பெரி யாருக்குக் கருப்புக்கொடி காட்டிய ஜன சங்கத்தினர்(இன்றைய பாஜக) பெரியார் மீது செருப்பை வீசினார்கள். ஆனால் அப்போது பெரியார் வாகனம் முன்னே சென்றுவிட்டது, அந்த செருப்பு கடவுளர் படங்கள் கொண்டுவந்த வாகனத்தின் மீது விழுந்துவிட்டது. இதுதான் நடந்தது" என்று கூறினார்.

ரஜினி 'துக்ளக்' விழாவில் பேசியதாவது:  "1971இல் சேலத்தில் சிறீராமச்சந்திர மூர்த்தி யையும், சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ 'துக்ளக்' அட்டையில் போட்டு கடுமையாக விமர் சித்தார். இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டார்.  அது 50 ரூபாய்க்கு 'பிளாக்'கில் விற்றது" என்று கூறியிருந்தார்.

தந்தை பெரியார் மீது ரஜினிகாந்த் கூறிய இந்த உண்மைக்கு மாறான கருத் திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பெரியாரிய அமைப்புகள் பல மாவட்டங்களில் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

- விடுதலை நாளேடு 19 1 20

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் திராவிடர் திருநாள் பண்பாட்டு மீட்டுருவாக்கமே இதன் நோக்கம்!

தமிழர் தலைவர் கருத்துரை

சென்னை,ஜன.18 தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் 26 ஆம் ஆண்டு திராவிடர் திருநாள் வெகு நேர்த்தியோடு நடைபெற்றது. வீர விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள், ‘பெரியார் விருது’ அளிப்பு என்று பல அம்சங்களுடன் திராவிடர் பண்பாட்டுத் திருவிழாவாக அமைந்தது.

நம் இனத்தின் பண்பாட்டு மீட்டுரு வாக்கமே இந்த விழாவின் நோக்கம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 25ஆண்டுகளாக தமிழர்களை ஆரிய ஆதிக்கத்திலிருந்து மீட்டு, திரா விடர்களின் பண்பாட்டைப் பேணிக் காத்திடும் வகையில் திராவிடர் திருநாள், தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தை பெரியார் பெயரில் பல்துறை வல்லுநர்களை, சாதனையா ளர்களை அடையாளம் கண்டு, அவர் களின் சாதனைகள் மேன்மேலும் தொடர பெரியார் விருது அளிக்கப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்டவர் களுக்கு பெரியார் விருது அளிக்கப் பட்டுள்ளது.

16.1.2020 மற்றும் 17.1.2020 ஆகிய இரு நாள்கள் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 26ஆம் ஆண்டு விழா திராவிடர் திருநாள் சென்னை வேப்பேரி பெரியார் திடலில்  எழுச்சியுடன் நடை பெற்றது.

திராவிடர் திருநாளில் சிறப்பு சேர்க் கும் வகையில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருவள்ளுவர் 2050’’ சிறப்புக் கண்காட்சி, ஓவியர் பகலவனின் ஓவியக் கண்காட்சி அனைவரையும் கவர்ந்தது. சிறப்புக் கண்காட்சி முகப்பில் அமைக்கப் பட்டிருந்த திருவள்ளுவர் முழு உருவச் சிலை அருகில் பார்வையாளர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் படங்களை எடுத்துக்கொண்டனர்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று (17.1.2020) நடைபெற்றன.  கழகக் குடும்பத்தினர் பங்கேற்ற கோலாகல குடும்ப விழா நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. பெரியார் பிஞ்சுகள், மகளிர், இளைஞர்கள் விளை யாட்டுப் போட்டிகள், உறியடிப் போட் டிகளில் தொடர்ந்து உற் சாகத்துடன் பங்கேற்றனர். பரிசுகளையும் வென்றனர்.

சிலம்பாட்டம் வீரவிளையாட்டுகள், தப்பாட்டம்

லோகன் ப்ளாக் பாய்ஸ் வழங்கும் தப் பாட்டம், சொல்லிசை, கானா, பீட் பாக்சிங், ஹிப்ஹாப் கலை நிகழ்ச்சிகள், பெரியார் வீரவிளையாட்டுக் கழகம் வழங்கும் சிலம் பாட்டம் ஆகியவற்றை கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

வீரவிளையாட்டுக் குழுவினரைப் பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

கிடா ஆடு கண்காட்சி அமைத்த குழு வினரை கழகப் பொதுச்செயலாளர் பாராட்டி சிறப்பு செய்தார்.

நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் திராவிடர் திருநாள், தமிழ்ப்புத்தாண்டு விழா, ‘பெரியார் விருது’ வழங்கும் விழா இரண்டாம் நாள் நிகழ்வுக்கு தலைமை யேற்று கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார்.

க.பார்வதி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த் தினி, பசும் பொன் செந்தில்குமாரி, கு.தங்க மணி, செ.கனகா, வி.வளர்மதி, மு.நாகவள்ளி, மு.ராணி, நதியா, ராணி ரகுபதி, பூவை செல்வி,  க.வனிதா, க.சுமதி, த.மரகதமணி, பொன்னேரி செல்வி, இளையராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்புரை ஆற்றினார்.

மாநில மகளிர் பாசறை செயலாளர்  வழக்குரைஞர் பா.மணியம்மை அறிமுகவுரை ஆற்றினார்.

நூல்கள் வெளியீட்டு விழா

‘பெரியார் அம்பேத்கர் நட்புறவு ஒரு வரலாறு’ (நன்கொடை ரூ.220), ‘தமிழில் பெயரிடுவோம்’ (நன்கொடை ரூ.50), ‘குடியுரிமைத் திருத்தச்சட்டம் கூடாது ஏன்?’ (நன்கொடை ரூ.40) ஆக மொத்த நன்கொடை ரூ.290. திராவிடர் திருநாள் சிறப்புத் தள்ளுபடியுடன் ரூ.250க்கு 3 நூல்களும் வழங்கப்பட்டன.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நூல்களை வெளியிட, பேராசிரியர் கருணானந்தம் பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் நூல்களை தமிழர் தலைவரிடமிருந்து மகிழ்வுடன் பெற்றுக் கொண்டனர்.

நூல்களைப் பெற்றுக் கொண்டவர்கள்

வழக்குரைஞர் சு.குமாரதேவன், தாம் பரம் ப.முத்தையன், புலவர் பா.வீரமணி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வழக்குரை ஞர் ந.விவேகானந்தன், புழல் இராசேந்திரன், போளூர் பன்னீர்செல்வம், துரைமுத்து, மகிழ்க்கோ, எண்ணூர் வெ.மு.மோகன், மாணிக்கம், ஆவடி தமிழ்மணி, கண்ணப்பன் மற்றும் பலர் நூல்களைப் பெற்றுக்கொண் டனர்.

‘கெடுப்பதூவும் எடுப்பதூவும்!’ என்னும் தலைப்பில் பேராசிரியர் அரசு செல்லையா (அமெரிக்கா) கருத்துரையாற்றினார்.

நூற்றாண்டு விழா கண்டுள்ள பெரியார் பெருந்தொண்டர் பெங்களூரு வீ.மு.வேலு அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்பு செய்தார்.

பெரியார் பெருந்தொண்டர் வீ.மு.வேலு ஏற்புரையில் என்றும் பெரியார் தொண் டனாக பணியாற்றுவேன் என்றார்.

பெரியார் விருதுகளை வழங்கி

தமிழர் தலைவர் சிறப்புரை

டாக்டர் வி.ஜி.சந்தோஷம், பேராசிரியர் அ.கருணானந்தன் ஆகியோருக்கு ‘பெரியார் விருது’களை வழங்கி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப் பிலிருந்து தமிழர்களின், திராவிடர்களின் பண்பாட்டை மீட்டுருவாக்குவதே இவ் விழாவின் நோக்கம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள். விருது பெற்ற டாக்டர் வி.ஜி.சந்தோஷம், பேராசிரியர் அ.கருணானந்தன் ஏற்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சிகளை மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ.மதிவதனி தொகுத்து வழங்கினார்.

ஓவியா அன்புமொழி நன்றி கூறினார்.

திராவிடர் திருநாளின் இரண்டு நாள் நிகழ்ச்சிகளையும் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தார்.

கழகப் பொருளாளர் வீ.குமரேசன், எழுத்தாளர் மஞ்சை வசந்தன், மோகனா அம்மையார்,  மருத்துவர் மீனாம்பாள், சுதா அன்புராஜ், த.க.நடராசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

திராவிடர் திருநாள் பொங்கல் விழா - குடும்ப விழா- (சென்னை- 17.1.2020)




-  விடுதலை நாளேடு 18 1 20

என்ன சொல்கிறார் நடிகர்? இவையும் ரஜினிகாந்தைப் பற்றிதான் - ஏடுகளில் வந்ததுதான் -2

இதுபோன்ற ஏராள தகவல்கள் உண்டு. பெரியார் படம் பார்த்த பின் அவர்மீது மதிப்பும், மரியாதையும் ஆயிரம் மடங்கு உயர்ந்தது என்று சொன்னது - பாபா திரைப்படத்தில் பெரியாரை மட்டம் தட்டி, ராஜாஜியோடு ஒப்பிட்ட பாடலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் வழக்குத் தொடுத்தபோது, ரஜினி வருத்தம் தெரிவித்தது - பாடல் ஆசிரியர் வாலி நேராக பெரியார் திடலுக்கு வந்து வருத்தம் தெரிவித்தது போன்று ஏராளம் கைவசம் உண்டு, தேவைப்பட்டால் சந்திப்போம்!

- விடுதலை நாளேடு 23 1 20

'முரசொலி' தலையங்கம் [28.1.2020] பெரியார் - மரணத்திற்குப் பின்னும் நிலைத்து வாழ்கிறார்; வாழ்வார்!


1971-ஆம் ஆண்டு பெரியாரின் சேலம் மாநாடு தமிழ்நாட்டின் 'பெரு'மக்களாலும், ஏடுகளாலும் மறுமதிப்பு செய்யப்பட்டு, மறுவாசிப்புக்கு உட்படுத்தப் பட்டன - மறுமதிப்புகள் ஒப்பாய்வுக்குரியன. ஒரு கனவானின் அந்த மாநாட்டு விமர்சனம் அத்தகைய தாய் இருந்தது. அதையொட்டி உத்திரமேரூர் அருகே பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு நபர் கைதும் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு யார் காரணம்? எவர் காரணம்? இதன் பின்புலம் என்ன என்று நாம் தெரியாதவர்கள் இல்லை.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பெரியாரைத் ‘தங்கத் தேரில் அறிவின் தேக்கம்' என்பார். அவர் ‘இடித்தாலும் வானம், எரிந்தாலும் மின்னல், அடித்தாலும் சூறை அனல்தான், பிடித்தாலும் குன்றான இவ்வீரன் குன்றான் - நிலைகுலையான்' என்றும் சொல்வார். பெரியார், வர்ணாசிரமத்தின் 5, 4 ஆம் படிகளுக்கான மக்களின் வழிகாட்டி, பஞ்சம, சூத்திர ஜாதிகளின் புருஷரில் உத்தமன் அவர்; அதாவது நமக்குப் புரு ஷோத்தமன்! நம் மக்கள், தொகையில் பெரும்பான் மையினராய் இருந்தும் மவுடீகிகளாய் இருக் கிறார்களே, என்று வருந்தியவர் அவர்.

பெரியார் அவர்தம் வாழ்நாளில் கிளர்ச்சி, போராட்டம், சிறை என்பதைத் தவிர வேறெதுவும் அவருக்குத் தெரியாது. பஞ்சம, சூத்திர மக்கள் உயர்வுக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். அதற்காக அவர் அறிமுகம் இல்லாத மக்களுக்குப் பரிந்துரைக் கடிதம் கொடுத்தவர்; உயர்த்தியவர். ஓயாமல் அம்மக்களுக்காகச் சுற்றுப்பயணம் செய் தவர். சொல்லடிகளுக்கு - கல்லடிகளுக்குக் கவலைப் படாதவர். தாக்குதல்களை ஏற்று இறுதி வரை - மரண பரியந்தம் வரை பொது வாழ்வைத் தொடர்ந்தவர்.

கடைசிக் கட்டத்தில் படுக்கையில் கிடந்த போதும் 'ஒரு நிகழ்ச்சிக்குத் தேதியைக் கொடுத்து விட்டேன், அதில் கலந்து கொண்டு விட்டு மருத்துவமனைக்கு திரும்பி விடுகிறேன்' என்று மருத்துவரிடம் அனுமதி கோரியவர். ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள் ளுங்கள் என வெள்ளைக்கார ஆளுநர் இருமுறை அழைத்தபோதும் மறுத்தவர். அதிகார ஆசை இல் லாதவர். அதிகாரத்தில் இருப்பவரை தம்வயப்படுத்தி மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தவர்.

இந்திய சமூக அமைப்பில் நாம் எங்கே சிக்கி இருக்கிறோம் என்பதைக் கண்டறிந்து நமக்குச் சொன்னவர். நமக்கு வழங்கப்பட்ட இடத்தையும், அதற்குரிய உண்மையான பொருளையும் எடுத்துக் காட்டியவர். வெகுமக்களாக இருக்கிற நாம் - பொருள் உற்பத்தியில் ஈடுபட்டு உழைக்கிற நம் சக்தியை அறியாத ஆதிக்கவாதிகளுக்கு அதன் உன்னதத்தைத் தமது பரப்புரையின் மூலம் எடுத்தோதி திடுக்கிட வைத்தவர். ஒருகட்டத்தில் ‘வெளியேறு' என்று ஒரு பிரகடனத்தை முன்வைத்தவர்.

நமது எதிரிகள் எத்தகையவர்கள் என்பதை கிரிப்ஸ் தூதுக்குழுவுக்கு எடுத்துரைத்தவர். எங்கள் அரசியல் அதிகாரத்தை உங்கள் பார்வையின் கீழ் வைத்துக் கொண்டு எங்கள் இன மக்களைக் காப்பாற்றுங்கள் எனத் தீர்மானத்தின் மூலம் வெள்ளையனைக் கோரியவர். நமது சுதந்திரத்தை ஆதித்தாய் தீயை காப்பாற்றியது போல காக்க முயன்றவர். நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் - 'அவிசாரி' போயிருந்தால் உங்களுக்காகச் செய்து இருப்பேனே தவிர எனக்காக அல்ல என்று பகிரங்கமாக சொன்னவர்.

சமூகம் ஏற்றுக் கொண்ட முறைகளும், மரபுகளும் 'சமன்மைக்கு’ எதிராக உள்ளன, ஆகவே, அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்து அதனை அழிக்க முற்பட்ட வர் தம்மை 'அழிவு வேலைக்காரன்' என்று தமது பொதுப்பணியை விமர்சனம் செய்தவர். வேத, உபநிடத, இதிகாச, புராண, இலக்கியங்கள் எதுவும் மக்கள் வாழ்க்கைக்கு ஆக்கம் தருவதாக இருக்க வேண்டும். அதன் அறிவுரைகள் உண்மைக்கு மாறா னதாக - மனித குலத்திற்கு எதிராக இருக்குமானால் அவற்றை நிராகரியுங்கள் என்று அறிவைக் கொளுத்தியவர்.

பெரியார் தமது பரப்புரையின் போது இறுதியில் 'நான் சொல்வதாலேயே இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை. நான் சொல் வதைச் சீர்தூக்கி ஆராய்ந்துப் பாருங்கள், உண்மை இருப்பின் ஏற்று கொள்ளுங்கள்' என்றே சொன்னார். பெரியார் ஆட்சி அதிகாரம் இல்லாத ஒரு மனிதராக இருந்தவர், அவருடைய எச்சங்களாகப் பெரியார் இயக்கங்கள் இருக்கின்றன. அவரின் கொள்கையை அவர்கள் பரப்பி வருகிறார்கள், பெரியார் இறந்து 47 ஆண்டுகள் ஆகி விட்டன, ஆனால், அவரின் கொள் கைகளோ அல்லது அவரின் பணிகள் பற்றியோ பேசப்படும்போது ஆதிக்க சக்திகள் துடிதுடித்துப் போகின்றன.

ஏடுகளும், ஊடகங்களும், பேரிரைச்சல் இடு கின்றன. ஒரு குறிப்பிட்ட சாரார்கள் அதிகமாகப் பேசுகிறார்கள். பெரியார் கூறாததை, அவர் இயக்கம் செய்யாததைத் திரித்துச் சொல்கிறார்கள். அதற்குப் புதுப் பொருளைக் கற்பிக்கிறார்கள். வானமே இழந்து விழுமளவுக்கு அவர்கள் பேரொலி எழுப்பினாலும் நம் பக்கம் வெற்றி சங்கநாதம் ஊதப்படுகிறது. போர் முரசம் அதிருவது போல் பஞ்சம, சூத்திர மக்கள் மரித்தும் வாழும் அம்மானுடனுக்காக - அவரின் கொள்கைக்காக அணிவகுத்து நின்று விட்டார்கள்.

படை, இரண்டு அணிகளாக நிற்கின்றன. எள்ளும் பச்சையரிசியுமாக, பளிச் சென்றுத் தெரிகிறது. ஆக, ஒரு கனவான் இப்போது பெரியார் நடத்திய நிகழ்ச்சியைப் பற்றி தப்பும் தவறுமாகப் பேசியதன் விளைவு - எவனோ ஒருவன் உத்திரமேரூர் பக்கம் பெரியாரின் சிலையை உடைத்துள்ளான். அதைச் சில மணி நேரங்களில் சரி செய்துவிட்டார்கள் என்று செய்தி வருகிறது. அந்தக் கனவான் முரசொலி ஏட்டையும் பேசினார். தி.மு.க.காரன் கையில் வைத்திருப்பான் முரசொலி ஏடு - என்று பேசினார். அடுத்து ‘அறிவாளி' வைத்திருக்கும் ஏடொன்றின் பெயரைச் சொன்னதன் விளைவு - முரசொலியை வைத்திருப்பவர் யார் என்று பொருள் ஆகிறது - அந்தக் கனவானின் பேச்சுப்படி! ஆகவே, 'திமிர் வாதக்காரர்களை' தோற்றுவிப்பதற்கு நமது எதிரி களுக்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்.

நம்மை தஸ்யூக்கள், தாசர்கள், கருப்பர்கள், சூத்திரர்கள், அசுரர்கள் எனத் தொடங்கி 'திராவிடப் பொறுக்கிகள்' வரை ஏசி முடித்து இருக்கிறார்கள். அதாவது ‘இன' இழிவுப்படுத்தி இருந்தார்கள்; படுத்தியும் வருகிறார்கள். பின்னர் ‘ராட்சசர்கள்' வேறு; ‘அசுரர்கள்’ வேறு என்றார்கள். அசுரர்கள் ராட்சசர்கள் அல்ல என்றனர். அசுரர்கள் தேவர்களுக்குப் பகைவர் என்றனர். இவர்கள் இருவகை தேவர்களுக்கும் பகைவர்கள் என்றனர். அதே ஆட்டத்தை ‘அந்தக் காலத்திற்குப்’ பிறகு இந்தக் கனவான் மூலமாக நமது அரசியல் எதிரிகள் ‘இந்தக் காலத்தில்' மீண்டும் தொடங்கி இருக்கின்றனர்,

1971 - தேர்தலின்போது பெரியார் மாநாட்டின் ஊர்வலப் பிரச்சினையைக் கிளப்பினார்கள். இப் போது இன்னும் ஓர் ஆண்டில் தேர்தல் வரப் போகிறது, இப்போதும் அதே முழக்கத்தை அதே பாணியில் கிளப்பி இருக்கிறார்கள். நம்மை தமிழக மக்களிடமிருந்து அந்நியப்படுத்த ஓர் ஆதிக்கச் சக்தி தன் முயற்சியை ஒரு கனவானின் வழி தொடங்கி இருக்கிறது. நம் முன்னோர் வகுத்த சூத்திரம் வேலை செய்ய தொடங்கிவிட்டது. பெரியாரின் பிறந்த நாளைக் கொண்டாடாத ஆட்சியாளர்கள்கூட கனவானை எதிர்க்கிறார்கள்.

நாம் ஜனநாயக யுகத்தில் இருக்கிறோம். நம் ஆசான்மார்கள் ‘அவர்களை'ப் பற்றி எல்லாவற்றை யும் நமக்குக் கற்பித்துச் சென்று இருக்கிறார்கள். முதன்முதலில் மான்கொம்பைக் கூர்தீட்டி எழுத்து களைப் பானை ஓட்டில் எழுதிய இனம் - நம் இனம்! சிந்து முதல் வைகையை தாண்டி ஏழ்பனை நாடு களும் நம் நாடுகளாக இருந்தவை. இந்தப் பரம் பரையில் வந்தவன் முரசொலிதான் வைத்திருப்பான்; அது அவனின் வெற்றி வேற்கை! (வேல் +கை),

பெரியாரும், அவர் கொள்கையும் அவர் மரணத்திற்குப் பின்னும் பேசப்படுகிறது என்பது தொடர் நிகழ்மை; ஏனெனில் ‘சநாதனம்' இருக்கும் வரையும் அந்நிகழ்மை இருந்தே தீரும். ஆகவே பெரியார் மரணத்திற்குப் பின்னும் நிலைத்து வாழ்கிறார்; வாழ்வார்! முரசொலியும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

- விடுதலை நாளேடு 28 1 20

வெள்ளி, 24 ஜனவரி, 2020

ரஜினியின் பின்ப(பு)லம் என்ன?

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினார் நடிகர் ரஜினிகாந்த்

மின்சாரம்

ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கு என்பார்கள். அது ரஜினிகாந்த் என்ற நடிகருக்குத் துல்லியமாகப் பொருந்திவிட்டது.

'துக்ளக்' ஆண்டு விழாவில் துக்ளக் ஆசிரியர் திருவாளர் 'சோ' ராமசாமியைப் புகழ்ந்து தள்ள வேண்டும் என்ற உந்துதலில் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் சொன்னதை நம்பி தந்தை பெரியார் மீது அவதூறு சேற்றை அள்ளி வீசினார்.

பிரச்சினை எரிமலைக் குழம்பாக வெடித்துச் சிதறிய நிலையில், நாலாப்பக்கங்களிலிருந்தும் கணைகள் கனலாகத் தாக்கிய கட்டத்தில், எதையாவது சொல்லித் தீரவேண்டும் என்ற நிலையில் ஒரு சில செய்தியாளர்களை மட்டும் அழைத்து, தன்னிலை விளக்கத்தை அளிக்க முயற்சி செய்துள்ளார்.

1971 ஜனவரி 23, 24 நாள்களில் சேலத்தில் திராவிடர் கழகத் தின் சார்பில் நடத்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு, அதனை ஒட்டிய பேரணி குறித்து 'துக்ளக்' விழாவில் உளறிக் கொட்டியதுதான் வம்பாகப் போய்விட்டது.

இதற்கு முன்பும்கூட எதையாவது ஒன்றைச் சொல்லி விட்டு, அது பிரச்சினையானவுடன் நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்று புலம்பியதுண்டு.

'துக்ளக்' தனக்குக் குரல் கொடுக்கும் என்று மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகிவிட்டது.

'துக்ளக்' ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் என்ன பேசினார்?

"1971இல் சேலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும், சீதாவை யும் உடையில்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ 'துக்ளக்' அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார். அதனால் தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால் 'துக்ளக்' பத்திரிகையை கைப்பற்றினார்கள். இந்த இதழை மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். பிளாக்கில் விற்றது. இப்படித்தான் கலைஞர் பிரபலமாக்கினார்". இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

குருமூர்த்தி அய்யர்வாளோ அல்லது அந்த அக்ரகார வட்டாரமோ சொல்லிக் கொடுத்ததைத்தான் கிளிப் பிள்ளைப் பாட்டு போல் ஒப்பித்தார்.

ராமன், சீதையின் படங்கள் நிர்வாணமாகத்தான் சேலத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் கொண்டு வரப்பட்டன என்று இந்தக் கூட்டத்தை நம்பிதான் சொல்லித் தொலைத்தார்.

“துக்ளக்" மட்டும் தான் தைரியமாக சேலம் மாநாட்டுப் படங்களை வெளியிட்டது என்றும் அடித்துக் கூறினார்.

பிரச்சினை வெடித்து வெளிச்சத்துக்கு வந்த நிலையில் அந்தப் படங்கள் வெளிவந்த (?) 'துக்ளக்' இதழை ரஜினியின் கையில் கொடுத்து, செய்தியாளர்களிடம் 'வெளுத்துவாங்கு' என்று கொம்புச் சீவி அனுப்பி இருக்க வேண்டும் அல்லவா?

அதுதான் இல்லை. சட்டியில் இருந்தால் தானே அகப்பை யில் வரும்.

செய்தியாளர்களை ரஜினி சந்திக்கும்போது சேலம் படங்கள் வெளிவந்ததாகக் கூறப்பட்ட 'துக்ளக்' இதழோடு கம்பீரமாக வருவார் என்று எதிர்பார்த்தவர்கள் முகத்தில் கரியைத் தடவியதோடு, தனக்குத்தானும்கூட நன்றாக அரைத்த கரியை அப்பிக் கொண்டு விட்டாரே!

தான் 'தைரியமாக'ச் சொல்லக் காரணமாக விருந்த 'துக்ளக்' கைக் கொண்டு வரவில்லை. 'அவுட்லுக்' என்ற ஓர் இதழைக் கையில் வைத்து மந்திரவாதிபோல தளுக்குக் காட்டினார். 'இதோ பார் ஆதாரம்' என்றார்.

இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த 'அவுட்லுக்' இதழின் தொடக்கமே 1995 அக்டோபர் தான். 1971இல் நடந்த சேலம் நிகழ்ச்சிக்கு ஆதாரம் 1995 ஆம் ஆண்டு வந்த 'அவுட்லுக்' இதழாம்!

மேலும் கூடுதல் நகைச்சுவை என்ன தெரியுமா? நடிகர் எடுத்துக்காட்டியது 2017 நவம்பர் 20ஆம் தேதி 'அவுட்லுக்' இதழை. அந்த இதழிலாவது நடிகர் ரஜினிகாந்த் சொன்ன சேலம் படங்கள் இருந்தனவா? அதுவும் இல்லை.

சிரியுங்கள்! சிரியுங்கள்!! நன்றாகச் சிரியுங்கள்!!! விலா நோகச் சிரித்துத் தொலையுங்கள்!!!!

நடிகரின் சிறுபிள்ளைத்தனத்தை நினைத்துச் சிரிப்பதா? பரிதாபப்படுவதா? நீங்களே முடிவு செய்யுங்கள்.

என்ன செய்வது, இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய 'பரிதாபமே' நமக்கு.

சொல்லப்பட்டது - கேட்கப்பட்டது என்பதையெல்லாம் வைத்து ஒரு பொது நிகழ்ச்சியில் பேசுபவர் ஒரு பொறுப்பான ஆசாமியாக இருக்க முடியுமா?

ரஜினியை பற்றி கூட ஏராள தகவல்கள் உண்டே! எடுத்துக்காட்டுக்கு இதோ ஒன்று:

சென்னை விமான நிலையத்தில் அவர் செய்த கலாட்டாதான் அது:

குருமூர்த்திக்கு ரஜினி மீது என்ன வஞ்சமோ, இப்படி 'பழி தீர்த்து'க் கொண்டு விட்டார் என்று கூடச் சொல்லலாமே!.

இதில் கூடுதலான இன்னொரு நகைச்சுவையும் உண்டு. 'அவுட்லுக்' என்பது 'இந்து' குழுமத்தைச் சேர்ந்ததாம்! கூறுகிறார் நடிகர். எங்கே போய் முட்டிக் கொள்வதோ?

இப்படித் தத்து பித்து என்று உளறிவிட்டு, நான் கேள்விப் பட்டதைத்தான் சொல்கிறேன் என்று கூறி, 'இன்னும் சிறிது நேரம் இருந்தால் என்னென்ன கேள்விகளைக் கேட்பார்களோ, நாமும் உளறித் தொலைப்போமோ?' என்ற பதட்டத்தில் 'ஆளை விடுங்கள் சாமி!‘ என்று இடித்துப் புடைத்து விட்டுக் கம்பியை நீட்டிய காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் அறிவார்கள்.

சேலம் ஊர்வலத்தின் போது, அதனை எதிர்த்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய ஜனசங்கத்தினர் ஊர்வலத்தில் சென்ற பெரியாரை நோக்கி வீசப்பட்ட செருப்பைப் பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு எந்தவிதப் பதிலையும் சொல்லாதது ஏன்? இதுதான் ரஜினிகாந்தின் அறிவு நாணயத்துக் கான சரியான சாட்சியாம்.

இதற்குப் பதில் சொல்லாததன் மூலம் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் முனை முறியாத முழு எதிர்ப்புக்கும், படு வெறுப் புக்கும் ஆளாகிவிட்டாரே!

சேலம் நிகழ்வு மறுக்கக்கூடிய சம்பவம் அல்ல. மறக்க வேண்டிய சம்பவம் என்று தனது வீட்டின் அருகில் நடைபெற்ற பேட்டியில் கூறியுள்ளாரே நடிகர்.

மறக்க வேண்டிய ஒன்றை மறக்காமல் ஏன் நினைவு படுத்துகிறார்? ஒரு இரண்டு நிமிடப் பேட்டியில் கூட முரண்பாடு இல்லாமல் பேச முடியவில்லையே இவரால்? இந்த லட்சணத்தில் அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடிக்கப் போகிறாராம்! நல்ல தமாஷ்!!

இராமனை வைத்து பெரியாரை சிறுமைப்படுத்தலாம் என்ற நப்பாசையில் மண் விழுந்துவிட்டதே - என் செய்வது!

'துக்ளக்'கின் துணிவைப் பற்றி சிலாகித்த குருமூர்த்தி வட்டாரத்து வார்த்தைகளை நம்பி வாய் நீளம் காட்டிய ரஜினி யின் நிலை  - எவ்வளவு பெரிய பரிதாபத்தின் பள்ளத்தாக்கில் குப்புற விழுந்து விட்டது.

இப்பொழுதாவது இந்தக் கூட்டத்தின் நம்பகத் தன்மை எத்தகையது என்பதைத் திருவாளர் ரஜினிகாந்த் உணர்வாரா?

இது ஒருபுறம் இருக்கட்டும் - இப்பொழுது தந்தை பெரியாரை சிறுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இதே நடிகர் 'பெரியார் மீது எனக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் ஆயிரம் மடங்கு உயர்ந்துவிட்டது!' என்று சொன்னார் என்றால் நம்ப மாட்டீர்கள்தானே!

அதையும்கூட நாளை பார்த்துவிடலாமே!

- விடுதலை நாளேடு, 22 1 20

ஆசிரியர் வீரமணி ஒப்புக்கொண்டாரா?

மீண்டும் பாண்டேயின் மோசடி!

இன்று (21.1.2020) காலை நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்த காணொலி ‘புதிய தலைமுறை' தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்டவுடன், அந்தத் தொலைக்காட்சியில் பேசிய கோலாகல சீனிவாசன் என்பவர், “பெரியார் ராமனைச் செருப்பால் அடித்தார் என்பதை திராவிடர் கழகத் தலைவர் வீரமணியே ஒப்புக் கொண்டிருக்கிறார். அப்படி அவர் பேசிய பேச்சு சமூக ஊடகங்களில் ஓடிக் கொண் டிருக்கிறது” என்று திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்படி சமூக ஊடகங்களில் ஒரு காணொலியை உலவ விட்டிருப்பது ‘தந்தி' தொலைக்காட்சியிலிருந்து துரத்தப்பட்ட ரங்கராஜ் பாண்டே என்பவர் நடத்தும் ‘சாணக்யா' என்ற யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள காணொலியாகும். ஆசிரியர் வீரமணி அவர்களை ‘தந்தி' தொலைக் காட்சி சார்பாக பேட்டி எடுக்கும்போது ரங்கராஜ் பாண்டே எடிட்டிங் மூலம் என்ன பித்தலாட்டம் செய்தாரோ, அதே போன்ற பித்தலாட்டத்தைத் தான் இந்தக் காணொ லியிலும் செய்திருக்கிறார் என்பது இப் போது அம்பலப்பட்டிருக்கிறது.

ரஜினி..பெரியார்.. திமுக.. | பாண்டே பார்வை (https://www.youtube.com/watch?v=VW2HyifDwis) என்ற அந்தக் காணொலியின் 7:54 ஆம் நிமிடத்தில் “பெரியார் ராமனைச் செருப்பால் அடிச் சாரு... செருப்பால அடிச்சாங்க... தேர்தல் நேரத்தில... தமிழ்நாட்டில! (கட்) அடிச் சதுக்கு முன்னால 138; அடிச்சதுக்குப் பிற்பாடு 183 அதுதான் மிக முக்கியம். இந்த ரிசல்ட் வந்தவுடன... அதுதான் திமுகவுக்கு அதிகபட்சம்...'' என்று அந்தக் காணொலி செல்கிறது.

இப்படி ஆசிரியர் கி.வீரமணி பேசியது உண்மையா?

இல்லை. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசுவதாக ‘சாணக்யா' யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள இந்தக் காணொலி, பெரியார் வலைக்காட்சியின் காணொலியிலிருந்து எடுத்து வெட்டி வெட்டி சேர்க்கப்பட்ட ஒன்றாகும்.

அதன் மூலக் காணொலி எது?

பெரியார் திடலில் 27.3.2018 அன்று நடைபெற்ற  ‘‘இராமன் - இராமாயணம் - இராமராஜ்யம்” தொடர் சொற்பொழிவின் இரண்டாம் நிகழ்வில் பேசிய பேச்சை யூடியூப் வலைதளத்தில் 29.3.2018 அன்று  பெரியார் வலைக்காட்சி பதிவேற்றியுள்ளது. அந்தப் பேச்சின் முக்கிய பகுதிகள் “இராமனை செருப்பால் அடித்தாரா பெரியார்?” என்ற தலைப்பில் தனிக் காணொலியாக 2018 ஜூன் 22 அன்று பதிவேற்றப்பட்டுள்ளது.

அதில் சேலம் மாநாடு குறித்து, இந்திரா காந்தியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்பதையும், அதற்கு இந்திரா காந்தி அளித்த பதிலையும் குறித்து விளக்குகிறார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

https://www.youtube.com/watch?v=jfxs051c7r8 என்ற இணைப்பில் உள்ள அந்தக் காணொலியின் 7:09 ஆம் நிமிடத்திலிருந்து அந்தப் பகுதி வருகிறது. அதில்,  ‘‘பெரியார் ராமனைச் செருப்பால் அடிச் சாரு... செருப்பால அடிச்சாங்க... தேர்தல் நேரத்தில... தமிழ்நாட்டில... அதை அங்க பொறுத்துக்கிட்டு இருக்காங்க... ஒன்னுமே நடவடிக்கை எடுக்கல” என்று பத்திரிகை யாளர்கள் இந்திரா காந்தியிடம் கேட்டதாக வும், அதற்கு இந்திரா காந்தியின் பதிலையும் திராவிடர் கழகத் தலைவர் எடுத்துச் சொல்கிறார். ஆனால், இதை வெட்டி, “பெரியார் ராமனைச் செருப்பால் அடிச்சாரு... செருப்பால அடிச்சாங்க... தேர்தல் நேரத்தில... தமிழ்நாட்டில! (கட்) அடிச்சதுக்கு முன்னால 138; அடிச்சதுக்குப் பிற்பாடு 183 அதுதான் மிக முக்கியம். இந்த ரிசல்ட் வந்தவுடன... அதுதான் திமுகவுக்கு அதிகபட்சம்...” என்று ஆசிரியர் கி.வீரமணி பெரியார் ராமனைச் செருப்பால் அடித்தார் என்று ஒப்புக் கொண்டதைப் போல எடிட் செய்து மோசடியாக ஒரு காணொலிப் பதிவை உலவ விட்டிருக்கிறார்கள்.

ரங்கராஜ் பாண்டே என்னும் மோசடிப் பேர்வழியின் இத்தகைய மோசடிகளை நாம் ஏற்கெனவே அம்பலப்படுத்தியிருந் தாலும், மீண்டும் மீண்டும் இத்தகைய ஊடக மோசடியைப் பரப்பி வருகிறது வெட்கங்கெட்ட ஆரியக் கும்பல். மோசடிக் காரர்களைத் தோலுரிப்போம். உண்மையை எடுத்துரைப்போம்!

- விடுதலை நாளேடு 21 1 20

ரஜினி ஆயுதமாக இருப்பது யாருக்காக?

"தி டைம்ஸ் ஆஃப் இந்தியா" ஆங்கில ஏட்டிற்கு தமிழர் தலைவர் ஆசிரியரின் அதிரடி பேட்டி!

தந்தை பெரியார் பற்றி அவதூறாக நடிகர் ரஜினிகாந்த் பேசியதையும், மன்னிப்பு கேட்க மறுத்து உண்மைக்கு மாறாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த தையும், கண்டித்து தமிழ்நாடே கொந் தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழின் செய்தியாளர் டி.கோவர்தன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை பேட்டி கண்டுள்ளார். அதன் சில பகுதிகள் இங்கே:

கேள்வி: இந்துக் கடவுள்களின் உருவப் படங்கள் நிர்வாண வடிவத்தில் சித்தரிக்கப் பட்டு 1971ஆம் ஆண்டு சேலத்தில் நிகழ்ந்த ஊர்வலத்தின் போது எடுத்துச் செல்லப் பட்ட தாக கூறப்படுவதை நீங்கள் மறுக்கிறீர்களா?

பதில்: புராணங்களில் சித்தரிக்கப் பட்டுள்ள பாத்திரங் களைத் தான் நாங்கள் வெளிப்படுத்தி இருந்தோம். ராமனையும் சீதை யையும் நிர்வாணக் கோலத்தில் சித் தரிக்க வேண்டிய அவசியமே எங்களுக்கு ஏற்படவில் லையே! ஆனால் அய்யப்பன், ஸ்கந்தன் இருவருடைய கேலிச்சித்திரங் களை புராணக் கதைகளின் படி அமைத்து இருந்தோம். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பேரணி அது. எனவே புராணக் கதைகளில் உள்ளதுபோல் அமைத்து இருந்தோம். தங்கள் உணர்வுகளை அது புண்படுத்துவதாக சிலர் எங்கள் மீது வழக்கு தொடுத்தனர். ஆனால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

உருவப் படங்களுக்கு காலணி மாலைகள் அணிவிக்கப் படவே இல்லை. அப்படி சில ஊடகங்கள் கூறியிருந்தால் இதோ எங்கள் கேள்வி! பெரியாரின் ஊர்வலத்தின் போது காலணி வீசி எறியப்பட்டதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? அது எந்த பெரியார் தொண்ட ருடைய காலணியும் அல்ல. எந்தக் கோயிலில் இருந்தும் எந்தச் சிலையும் வெளியே எடுத்துச் செல்லப்படவு மில்லை உடைக்கப்படவுமில்லை. அப்படிப்பட்ட செயல்பாட்டில் பெரியார் ஈடுபடவுமில்லை. அவருடைய கருத்தை தெளிவு படுத்துவதின் நோக்கமே அந்த நிகழ்வு.

ராமாயணம் பற்றியோ, தனது கொள்கைகளைப் பற்றியோ பெரியார் எழுதியுள்ள நூல்கள் எவற்றையும் நாங்கள் மறுக்கவில்லை. ராமராஜ்யம் குறித்து யார் இப்போது பேசினாலும் நாங்கள் துரிதமாகக் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா? தவம் செய்த சம்பூகன் ஒரு சூத்திரன் என்ப தாலேயே அவன் தலை துண்டிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களே, இன்று அப்படிப் பட்ட ஒரு செயலை சட்டம் அனுமதிக்குமா? ராமனால் பல துன்பங்களுக்கு ஆளான சீதையை சந்தேகித்ததோடு நிற்காமல் அவளை எரியும்  நெருப்பில் இறங்க வைத்து ராமன் அக்னிப் பரீட்சையும் செய்ததாகச் சொல்கிறார்களே... இன்று அப்படியெல்லாம் நடந்தால் சட்டம் வேடிக்கை பார்க்குமா?

கேள்வி: ரஜினிகாந்த் உண்மைகளைத் திரித்து கூறியிருப்பதாக ஏன் கண்டனம் தெரிவிக்கிறீர்கள்?

பதில்: "பெரியாரின் இயக்கம் விமர்சனத்திற்கு அப்பாற் பட்டது" என்று நாங்கள் ஒரு போதும் சொல்லவில்லை. கருத்துக்கள் கூற எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் அவை திரிக்கப்பட்டவை யாக, உண்மைக்குப் புறம்பானவையாக இருந்தால் நிச்சயமாக கடுமையாகவே எதிர்ப்போம். இந்தச் சர்ச்சைக்கு பின்னால் மறைந்திருப்பது ஏதோ ஒரு அதிகாரத் துஷ்பிரயோகச் சக்தி. பெரியாரியம் எல் லாவற்றையும் எதிர்கொள்ளும் என்பது உறுதி.

ஒரு கட்சி ஆரம்பிக்கும் முனைப்பில் உள்ள ரஜினிகாந்த் அதற்கான தளம் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஏதோ ஓர் உண்மையை வெளிப்படுத்து வதாக எண்ணிக் கொண்டு, உண்மை களைத் திரித்துக் கூறியுள்ளார் அவர். பிரச் சினையே அதுதான். அவருடைய பேச்சில் ஓர் உள்நோக்கம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. யாரோ எழுதித் தந்த வசனத்தை இவர் தன் குரலில் வாசித்து வருகிறார் என்பதும் புரிகிறது.

உலகமே போற்றும் ஒரு மாமனிதரான பெரியாரை தங்கள் சுயநலத்திற்காக களங் கப்படுத்துவதை வன்மையாகக் கண்டிக் கிறோம்.

கடந்த செவ்வாயன்று ரஜினி பத்திரிகை யாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டி ருந்தபோதே 'துக்ளக்' குரு மூர்த்தி ட்விட் டரில் அதுபற்றி அறிவித்து எல்லோரையும் அதைப் பார்க்கச் சொன்னதன் மர்மம் என்ன? தமிழக அரசியல் நிலவரம் குறித்து கடுகளவு தெரிந்து வைத்திருப்பவர்களுக் குக் கூட புரிந்திருக்குமே!

அய்ம்பது வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வைப் பற்றி இப்போது கிளறியிருப்பது யாருடைய விஷமம்? அவரை ஆதரித்துப் பேசி வருபவர்கள் யார் யார் என்பதை கவனித்தாலே இது புரியும்.

பெரியாரையும் திராவிட இயக்கத் தையும் எதிர்த்து வந்த சோ ராமசாமி ஒரு செய்தியாளரிடம் கூறியது பற்றிய பத்திரிகைச் செய்தியைத்தான் ஆதார மாகக் காட்டியுள்ளார் ரஜினிகாந்த். 1971ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் திமுக வின் வெற்றியைத் தடுக்கும் முயற்சியில் சோ இறங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சி அந்தக் காலக்கட்டத்தில் அவர்களுக்கு துருப்புச் சீட்டாக பயன்பட்டது. ஆனால் அவர்களுடைய எண்ணம் ஈடேறவில்லை.

ராமனை வைத்து அரசியல் செய் தார்கள் அன்று. இன்றும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அன்று நடந்த போரில் வெற்றிவாகை சூடிக் கொண்டது நாங்கள். இன்றைய போரிலும் வெற்றிக்கனி எங்களுக்கே!

கேள்வி: ஏன் அடிக்கடி பெரியாருக்கு எதிராக ஏதாவது ஒரு பிரச்சினை எழுந்து வருகிறது?

பதில்: அவர் மீது இறைக்கப்படும் புழுதி எங்களைப் பொறுத்தவரை பெரியாரியம் எனும் பயிர் மேலும் மேலும் செழித்து வளர அவர்கள் வழங்கும் சிறந்த உரம்! பெரியாரின் சிந்தனைகளையும் கொள்கை களையும் விமரிசியுங்கள். ஏற்றுக் கொள் கிறோம். எதையும் திரித்துக் கூறினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

உணர்வுகள் புண்படுவதாக புலம்பு கிறவர்கள் ஜாதிக் கொடுமைகளால் புண் படுகிறவர்களைப் பற்றி சிந்திப்பதுண்டா? ஜாதி ஒழிப்புக்குத் தடையாக உள்ள தீயசக்தி களைத் தான் நாங்கள் எதிர்த்து வருகிறோம். டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தியதைத் தானே நாங்களும் செய்து வருகிறோம்! வர்ணாஸ்ரம தர்மம் நிலைக்க வேண்டும், ராமராஜ்யம் வர வேண்டும் என்றெல்லாம் பிதற்றிக் கொண்டிருப்ப வர்களால் தான் அடிக்கடி பெரியாரை வம்புக்கிழுப்பதால் ஏதாவது ஒரு தேவை யற்ற பிரச்சினை முளைத்துக் கொண்டே இருக்கிறது. இந்த அவல நிலையைப் போக்காமல் ஜாதிகளை எப்படி ஒழிப்பது?

கேள்வி: பெரியாரியத்தின் தாக்கம்.. வலிமை குறித்து தங்களின் விளக்கம்?

பதில்: பெரியாரியத்தின் வீரியம் ஒருநாளும் வலிமை இழக்காது. அதன் தாக்கம் இம்மியளவும் குறையாது. பெரி யாரியம் என்பதே கூர்மை குறையாத போர்வாள். அதற்கு மேலும் கூர்மைச் சேர்க்க வேண்டிய அவசி யமே இல்லை! மேல்நோக்கி எறியப்பட்ட பூமராங் எனும் சாதனம் மீண்டும் கீழே வருவதுபோல் பெரியாருக்கு எதிராக யார் செயல் பட்டாலும் உண்மை நிலை மாறாது; காலமே அவர்களைத் தண்டிக்கும்.

பெரியாரைப் பற்றி அவதூறாக பேசியவர் தன் செயலுக்காக வருந்த வில்லை. தான் பேசியது உண்மைக்குப் புறம்பானது என்று தெரிந்தபின்னும் அதை ஒப்புக்கொள்ளும் துணிவு அவ ருக்கு இல்லை என்றால் அவரை ஆட்டு விக்கும் சக்தி எதுவென்று புரிகிறதல் லவா?  அதற்குப் பின்னர் ஓர் அதிகார மய்யம் இருப்பதைத்தான் அவரது செயல் காட்டுகிறது. அதிகார மய்யம் அவரைக் கட்டுப்படுத்தி ஆட்டுவிக்கிறது. ரஜினியைப் பார்த்து அனுதாபப்பட வேண்டியுள்ளது.  யாருக்கோ ஆயுதமாக ரஜினி இருந்து வருகிறார்.

பெரியார் என்றோ உலகமயமாகி விட்டவர். அவர் எல்லா காலத்திற்கும் தேவைப்படுகிறவர். மறைந்தது அவரு டைய உடல். வாழ்ந்து கொண்டிருப்பது அவருடைய உயர்ந்த கொள்கைகள். விமர்சனங்களைக் கண்டு பெரியார் ஒரு நாளும் அஞ்சியதில்லை. இன்று அவரது கொள்கைகள் நிலைத்து இருக்கின்றன. பெரியார் ஒரு தனி மனிதரல்ல. அவர் ஒரு சமுதாயச் சீர்திருத்த நிறுவனம்!

நன்றி: 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா'

ஜனவரி 23, 2020

- விடுதலை நாளேடு, 23.1.20

காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையை உடைத்த காலிகள் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், ஜன.24  உத்திர மேரூர் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத் திரமேரூரை அடுத்த சாலவாக்கம், களியப்பட்டியில் பெரியார் சிலை உள்ளது. நேற்று இரவு வந்த காலிகள் பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்தி சென்றனர். இன்று காலை பெரியார் சிலை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச் சியடைந்துள்ளனர்.

பெரியார் சிலை உடைப்பில் ஈடுபட்ட வன்முறையாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள், திராவிடர் கழகம், திமுக, விடுதலை சிறுத் தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர்  கண்டனப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட் டுள்ளது.

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போராட்டம் நடைபெறாமல் இருக்க அப்பகுதி யில் காவல்துறையினர் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காவல்துறைத் தலைமை இயக் குநருக்கும், தலைமைக் கழகத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட் டுள்ளது.

1998ஆம் ஆண்டு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் இந்த பெரியார் சிலையை திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி  மு.க.ஸ்டாலின் கண்டனம்

தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியுள் ளதாவது:

“95 ஆண்டுகாலம் தமிழகத் திற்காக குரல் கொடுத்த, போராடிய தந்தை பெரியாரை இழிவு படுத்துவதென்பது வேதனைக்குரிய ஒன்று. அந்தச் செயலில் ஈடு பட்டோர் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.’’ என்றார்.

- விடுதலை நாளேடு 24 120

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும் - தேசிய மக்கள் தொகைப் பதிவேடு திட்டத்தைக் கைவிடவும் கோரி

பிப்ரவரி 2 முதல் 8 ஆம் தேதிவரை ‘‘கையெழுத்து இயக்கம்!''

தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, ஜன.24 குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு திட்டத்தைக் கைவிடவும் வலியுறுத்தி வரும் பிப்ரவரி 2 ஆம் தேதிமுதல் 8 ஆம் தேதிவரை பொதுமக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கத்தை நடத்துவது என்று தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று (24.1.2020) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடை பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

மதச்சார்பற்ற முற்பாக்குக் கூட்டணி சார்பில், 2020 பிப்ரவரி 2ஆம் தேதி முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை மக்கள் இயக்கமாக “கையெழுத்து இயக்கம்”.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக - மத அடிப்படையில் - நாட்டைப் பிளவுபடுத்தும் மனப்பான்மை யுடன், “குடியுரிமைத் திருத்தச் சட்டம் -2019” (சிஏஏ) “தேசிய மக்கள் தொகைப் பதிவேடு” (என்பிஆர்) மற்றும் “தேசியக் குடிமக்கள் பதிவேடு” (என்ஆர்சி) ஆகியவற்றை, ஜனநாய கத்திற்குப் புறம்பான வகையில், மக்கள்மீது திணித்து - அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி- மாணவர்களையும், மக்களையும் போராட்டக் களத்தில் தள்ளி - நாடு சந்தித்து வரும் பொருளாதாரச் சீரழிவுகளில் இருந்து தேசிய அளவில் கவனத்தைத் திசை திருப்பவும் - தனது பிற்போக்கு அடிப்படைவாத சித்தாத்தத்தை நிறைவேற்றவும் மத்திய பா.ஜ.க. அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு  அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், பொதுக்கூட்ட மேடைகளிலும், பேட்டிகளிலும் “தேசியக் குடிமக்கள் பதி வேட்டை” (என்ஆர்சி) தயாரித்தே தீருவோம் என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷாவும், அதை ஆமோதித்த பிரதமரும் இப்போது, “தேசிய மக்கள் தொகை பதிவேடு” (என்பிஆர்)  மட்டுமே தயாரிக்கப்படுகிறது என்று கூறி நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சி செய்து  வருகிறார்கள். “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எக்காரணம் கொண்டும் திரும்பப் பெற மாட்டோம்”என்று அதிகார ஆதிக்க எண்ணத்துடன் பேசி வருகிறார் உள்துறை அமைச்சர். “தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி)  தயாரிக்கும் திட்டம் இல்லை”என்று மறைத்து வருகிறார் பிரதமர்.

முரண்பாடானது

“தேசியக் குடிமக்கள் பதிவேடு” (என்ஆர்சி)  தயாரிக்க 1) பெயர், 2) தந்தை பெயர், 3) தாய் பெயர், 4) பாலினம், 5) பிறந்த தேதி,  6) பிறந்த இடம், 7) தற்காலிக, நிரந்தர வீட்டு முகவரி, 8) திருமண விவரம் 9) பெற்றோர் பிறந்த தேதி மற்றும் இடம்  உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் திரட்டப்பட உள்ளன.  இந்த தகவல்கள் “தேசிய மக்கள் தொகைப் பதிவேடு” (என்பிஆர்) தயாரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள “என்ஆர்சி கையேடு” படிவத்திலும் கேள்விகளாக கேட்கப்பட்டு - கட்டாயமாக சேகரிக்கப்படுகின்றன. “கணக்கெடுப்பின்போது ஆவண ஆதாரங்கள் கொடுக்க வேண்டியதில்லை” என்று மத்திய அரசின் விளம்பரங்களிலும், மத்திய அமைச்சர்களும் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். ஆனால் என்பிஆர் கையேட்டில் (NPR Manual) “பிறந்த தேதி, பிறந்த இடம்” உள்ளிட்ட பல்வேறு விவரங்களுக்கு பத்து ஆவணங்கள் வரை மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் சேகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. “தாய், தந்தையரின்” பிறந்த தேதி உள்பட “சேகரிக்க வேண்டிய தகவலில் பிறந்த தேதி மிக முக்கியமானது” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. “பிறந்த தேதியில் குழப்பம் இருந்தால் அதுபற்றி விசாரணை நடத்த அவர்களின் பண்டிகைகள் பற்றி விசாரிக்கலாம்”என்று கூறி சுதந்திர தினம், குடியரசு தினம் தவிர 32 பண்டிகைகள் என்பிஆர் கையேட்டில் (NPR Manual) இடம் பெற்றுள்ளது. அதில் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களின் பண்டிகைகள் ஏதும் இடம்பெறாதது, “குடிமக்களை சந்தேகத்திற்குரியவர் களாக (Doubtful) பதிவு செய்யலாம்” என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம், “தகவல் அளிக்காதோர் மீது வழக்குப் போடும் அதிகாரம்” இவை அனைத்தும் நேர்மையான மக்கள் தொகை கணக் கெடுப்பின் அறிகுறிகளாக இல்லை.

குடிமகன் என்பதை வரிசையில் நின்று நிரூபிக்கவேண்டுமா?

பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கை வாக்குறுதியை நிறை வேற்ற - நாட்டை,  போராட்ட மயமாக்கும் ஆபத்தான முயற்சி யில் ஈடுபட்டிருப்பதாகவே இந்தக் கூட்டம் கருதுகிறது. ஆகவே, வெளியிடப்பட்டுள்ள “NPR Manual” முழுக்க முழுக்க தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கவே என்ற அச்சத்தை நிரூபிக்கும் வகையிலேயே, மத்திய பா.ஜ.க அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு குடி மகனும் “நான் இந்த நாட்டுக் குடிமகன்” என்று,  வரிசையில் நின்று, கூறிட வேண்டிய நெருக்கடியை மத்திய பா.ஜ.க. அரசு உருவாக்கியுள்ளது என்றால் - இதற்கு முழு முதல் காரணம் மாநிலங்களவையில் அ.தி.மு.க மற்றும் பா.ம.க. எம்.பி.க்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து, வாக் களித்ததே!

ஆனால் ஈழத்தமிழர்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி விட்டு - “தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (NPR) நடத்துவதில் சிறுபான்மையினர் மத்தியில் ஒரு பொய்யான அச்சத்தை எதிர்க்கட்சியினர் ஏற்படுத்துகிறார்கள்”என்று கூறி, முதலமைச்சர் திரு..பழனிசாமி அவர்கள் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்.

இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை?

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு மற்றும் கூட்டுக்குழுக்களில் எல்லாம் பங்கேற் றிருந்த அ.தி.மு.க, இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை குறித்தோ, இரட்டைக் குடியுரிமை குறித்தோ எதுவுமே பேசாமல் வாய்மூடி இருந்தது. குடியுரிமை கேட்டு இலங்கைத் தமிழர் தொடர்ந்த வழக்கில் “இந்தியாவில் இலங்கைத் தமிழர் களுக்கு குடியுரிமை வழங்க முடியாது”என்று உயர்நீதிமன் றத்திலேயே கூறிவிட்டு - இப்போது பா.ஜ.க.வுக்குத் துணையாக வாக்களித்த துரோகத்தை மறைக்க, இந்திய மற்றும் இலங்கைக் குடியுரிமைச் சட்டங்களில் இல்லாத “இரட்டைக் குடியுரிமையை கோரியுள்ளோம்” என்று, பொறுப்பற்ற முறையில் முதல மைச் சரும் - அ.தி.மு.க அமைச்சர்களும் தொடர்ந்து கடைந்தெடுத்த பொய்தனைச் சொல்லி வருகிறார்கள்.

தங்கள் மக்களைக் காப்பாற்ற கேரள மாநிலம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. கேரளா, பஞ்சாப் மாநில சட்டமன்றங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்குவங்கம் மற்றும் ராஜஸ்தான் மாநிலச் சட்டமன்றங்கள் இன்னும் சில நாட்களில் தீர்மானம் நிறைவேற்றப் போகிறது. “என்.பி.ஆர். எங்களுக்கு வேண்டாம்” என்று கேரள அமைச் சரவை தீர்மானமே போட்டுவிட்டது.  ஆனால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்”எனக் கொடுத்த தனிநபர் தீர்மானத்தை அனுமதித்து, விவாதம் நடத்தக்கூட அ.தி.மு.க அரசு டில்லிக்குப் பயந்து, முன்வர வில்லை. மாநில அரசின் உரிமைகளை மத்திய பா.ஜ.க. அரசிடம் அடகுவைத்து, “மண்டியிட்டு” சரணாகதி அடைந்து விட்ட அ.தி.மு.க ஆட்சியின் நோக்கையும் போக்கையும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறது.

பன்முகத்தன்மை சிதைப்பு

ஆகவே குடியுரிமைச் சட்ட விதிகளின் அடிப்படையில்  என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவற்றைத் தயாரித்து - இந்தியா வின் பாரம்பரியமான பன்முகத் தன்மையைச் சிதைத்து - வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நல்லிணக்கம் போற்றும்  மக்கள் மத்தியில் - பேதத்தையும், பிளவையும் உண்டாக்கி - தமது அடிப்படைவாதச் சித்தாந்தத்தை ஈடேற்றுவதற்குத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசையும், சுயநலத்தோடு அதற்குத்  துணைபோகும் அ.தி.மு.க அரசையும் அனைத்துக் கட்சிகளின் இந்தக்  கூட்டம்  வன்மையாகக்  கண்டிக்கிறது.

“தமிழ்நாட்டில் என்.பி.ஆர்-அய் அனுமதிக்கமாட்டோம்” என்று முதலமைச்சர் திரு. பழனிச்சாமி அமைச்சரவை கூட்டத்தை உடனடியாக கூட்டி  - தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இத்துடன் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படுமானால், அதுகுறித்து, எவ்வித தகவல்களையும் அளிக்க வேண்டாமென பொதுமக்களை அனைத்துக் கட்சிகளின் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

கையெழுத்து இயக்கம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், என்.ஆர்.சிக்கு வழிகோலும் என்.பி.ஆர் தயாரிப்பதை நிறுத் தக் கோரியும், அனைவரது எதிர்வினைச் சிந்தனைகளையும் ஒருமுகப்படுத்தி, மாபெரும் மக்கள் இயக்கம் ஒன்றை முன் னெடுக்கும் வகையில், 2020 பிப்ரவரி 2ஆம் தேதி (ஞாயிறுக் கிழமை) முதல் பிப்ரவரி 8ஆம் தேதி (சனிக்கிழமை) வரை “கையெழுத்து இயக்கம்” நடத்திடுவது என்றும்; அப்படிப்  பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்களை,  அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் - மேதகு குடியரசுத் தலைவர் அவர்களைச் சந்தித்து அளித்து, தமிழக மக்களின் ஏகோபித்த எண்ணத்தின் அடிப்படையில், நடவ டிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவது என்றும்; அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

மக்கள் இயக்கமான “கையெழுத்து இயக்கத்திற்கு” அனைத்துத் தரப்பு மக்களும், தங்கள் பேராதரவினை வழங்கிட வேண்டுமென அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.

இவ்வாறு அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கலந்துகொண்டவர்கள்

திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு எம்பி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,  துணைப் பொதுச்செயலாளர் சத்தியா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.ஆர்.இராமசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், துணை செயலாளர் வீரபாண்டியன், இந்திய  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய யூனியன் முசுலீம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன்,  இந்திய யூனியன் முசுலீம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், செயலாளர் ரவிக்குமார் எம்பி, மனிதநேயமக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, அய்.ஜே.கே. ஜெயசீலன், கொங்குநாடு கட்சி ஈஸ்வரன் உள்பட பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டனர்.

- விடுதலை நாளேடு 24 1 20

புதன், 22 ஜனவரி, 2020

மனித உரிமைப் பிரகடனமும்இந்தியாவில் மனித உரிமைகளும்

பன்னாட்டு மனித உரிமைநாள்: டிச.10

மனித உரிமைப் பிரகடனமும்

இந்தியாவில் மனித உரிமைகளும்

பூவை புலிகேசி

1948 ஆம் ஆண்டு டிசம்பர் பத்தாம் நாள் அய்க்கிய நாடுகள் சபை கூடி மனிதர்கள் அனைவரும் சுதந்திரத்துடனும் அமைதி யுடனும் வாழ சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை (Universal Declaration of Human Rights)   வெளியிட்டது. அந்த நாளைக் குறிக்கும் வகையில் 1950 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் பத்தாம் நாள் மனித உரிமைகள் நாளாக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு தனிமனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும், மற்ற மனிதர்களையும் வாழ வேண்டும் என்ற நெறிமுறையை உணர்த்துவதுதான் இந்த பிரகடனத்தின் நோக்கமாகும்.

மனித உரிமைகள் என்பது இரக்கப்பட்டு கொடுக்கின்ற அருட்கொடை அல்ல. ’பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் திருவள்ளுவரின் கூற்றுப்படி பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்பதை மனித உரிமை பிரகடனத்தின் முதலாம் சரத்து கூறுகிறது. அதாவது

"All human beings are born free and equal in dignity and rights"என்கிறது.

இந்த மனித உரிமை பிரகடனத்தை ஏற்றுக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அய்க்கிய நாடுகள் மன்றம் மனித உரிமை தொடர்பான 10 உடன்படிக் கைகளை வெளியிட்டது. அவை

1. பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள்

2. குடிமை மற்றும் அரசியல் உரிமைகள்

3. இனப்பாகுபாடுகளை ஒழித்தல்

4. நிறவெறியை எதிர்த்து முறியடித்தல்

5. பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளை நீக்குதல்

6. கொடூரமான தண்டனை முறைகளை ஒழித்தல்

7. குழந்தை தொழிலாளர் ஒழிப்பு

8. விருப்ப ஒத்திசைவு ஒன்று அரசியல் உரிமைகள்

9. விருப்ப உத்தி செய்வோர் இரண்டு மரண தண்டனை ஒழிப்பு

10. குடிபெயர்ந்தவர்கள் உரிமை

இவற்றில் முதல் 7 உடன்படிக்கைகளை ஏற்று இந்தியா கையொப்பமிட்டு உள்ளது.

இதன் அடிப்படையில் இந்திய அரசு மனித உரிமை பாதுகாப்பு சட்டம்-1993 என்ற ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.

அதில் மனித உரிமைகள் என்றால் "அரசியலமைப்புச் சட்டத்தால் உத்திர வாதம் அளிக்கப்பட்டு, சர்வதேச உடன் படிக்கைகள் உள்ளடக்கப்பட்டு, இந்தியா வில் உள்ள நீதிமன்றங்களால் செயல்படுத்த தக்க தனிநபரின் வாழ்க்கை சுதந்திரம், சமத்துவம் மற்றும் மதிப்பு போன்றவற்றிற்கு தொடர்புடைய உரிமைகள்" என்று விளக் கம் அளித்துள்ளது. ஆனால் நடை முறை யில்  மனித உரிமை எந்த அளவிற்கு உள் ளது என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தர வாதம் படுத்தப்பட்டுள்ள கருத்துரிமைக்கு இன்று என்ன நிலை மனித உரிமை ஆர்வலர்கள் கவலையுடன் சிந்திக்க வேண்டும்.

பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல் கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி,  கவுரி லங் கேஷ் ஆகியோர் படுகொலை கருத்துரி மைக்கு எதிரானது அல்லவா?

அதுமாத்திரமல்ல மனிதன் தான் விரும்பும் உணவை உண்ணும் உரிமை இன்று உள்ளதா?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாத்திரி யில் 70 வயதான முகமது வீட்டிற்குள் மாட்டுக்கறி சமைத்து சாப்பிடுவதாக கருதப்பட்டதால் அடித்துக் கொல்லப் பட்டார். பின்னர் அது மாட்டுக்கறி அல்ல என்று ஆய்வுகளின் மூலம் நிரூபணமானது. ஒருவர் தாம் விரும்பிய உணவை உண்ணும் உரிமை  மதத்தின் பேரால் பறிக்கப்படுகிறது.

நீட் என்னும் கொடுவாள் உயர் கல்வி உரிமை மறுக்கப்பட்டதால் அனிதா, பிரதீபா, சுபசிறீ என்று எத்தனை உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன.

அறிவாசான் தந்தை பெரியார் கூறுவது தான் நினைவிற்கு வருகிறது.

" தாளில் சர்க்கரை என்று எழுதி நாக்கில் தடவினால் இனிக்குமா?" என்பார் தந்தை பெரியார்.

அதுபோல எத்தனை மனித உரிமை சட் டங்களை ஏற்றிருந்தாலும் செயலில் இருக் கின்றனவா?

எனவே சட்டத்தின்படி மட்டுமல்ல  நியாயத்தின் படியும் மனித உரிமை செயல் வடிவில் நிலைநாட்ட வேண்டுமானால், இந்தியாவின் முதல் மனித உரிமைப் போராளிகள் மனித உரிமையை நிலை நிறுத்திய மனித உரிமைப் போராளி தந்தை பெரியாரின் வழியில், அதிகார வர்க்கமே அச்சம் கொள்ளும் வகையில் மனித உரிமைப் போரில் களமாடும், அமெரிக்க மனிதநேய அமைப்பால் விருது அளிக்க பட்டு  பாராட்டப்பட்ட , "வாழ்நாள் மனித நேய சாதனையாளராம்" தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி காட்டும் திசை வழியில் மனித உரிமையை நிலைநாட்ட இந்நாளில் சூளுரைப்போம்.

- விடுதலை ஞாயிறு மலர், 7. 11.19

விஜயபாரதத்துக்கு ‘விடுதலை’யின் பதில்கள் ‘விடுதலை’யின் கேள்விக்கு???

கேள்வி: சுவாமி விவேகானந்தரின் நல்லதொரு அமுத மொழி?

பதில்: பூக்களாக இருக்காதே... உதிர்ந்திடுவாய்... செடிகளாக இரு... பூத்துக்கொண்டே இருப்பாய்.

(‘விஜயபாரதம்‘, 9.8.2019, பக்கம் 35)

விவேகானந்தர் இதை மட்டுமா சொல்லி யிருக்கிறார்.

இதோ விவேகானந்தர்.

மதச் சண்டைகளும், ஜாதி வேற்றுமை களும், கலகங்களும் பல்குவதற்கு ஒரு பெருங்கருவியாய் இருந்ததும், இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும்.  சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால், இப்போராட்டங்களும் தொலைந்து போகு மென்று வருந்திக் கூறினார் விவேகானந்தர்.

(மறைமலை அடிகளாரின் ‘தமிழர் மதம்‘, பக்கம் 24)

கேள்வி: கைலாஷ், மானசரோவர் யாத்திரை பற்றி?

பதில்: கைலாயம் என்பது இமய மலையில் உள்ளது. இதன் உயரம் 6638 மீட்டர். சிந்துநதி பிரமாண்டமான சட்லஜ் நதிகள் இங்குதான் உற்பத்தி யாகிறது. மானசரோவர் என்பது அங்குள்ள பிரமாண்டமான ஏரி. சீன எல்லை யைக் கடந்துதான் கைலாயம் செல்லவேண்டும்.

சிவன், பார்வதி தேவியுடன் உறையும் இடம், தமிழ்நாட்டில் ஈரோட்டில் இருந்துதான் கைலாஷ் யாத்திரைக்கு அதிகமான பேர் சென்று வரு கிறார்கள். ஏதோ ஈ.வெ.ரா. பிறந்த மண் என்பதெல்லாம் ஹம்பக்.

(‘விஜயபாரதம்‘, 9.8.2019, பக்கம் 35)

மானசரோவர் - அதாவது கைலாஷைப் பற்றி விஜயபாரதம் ‘ஆகா’ எப்படியெல்லாம் சிலாகித்து எழுதுகிறது. சிவன் பார்வதி உறையும் இடமாம்.

அந்த இடம் இப்பொழுது யாரிடம் இருக்கிறது? எந்த நாட்டின் கீழ் இருக்கிறது? அதுதான் முக்கியம். அந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்தால் ‘விஜயபாரதம்‘ வகையறாக்கள் வண்டி வண்டியாக அள்ளி விடும். சிவ - பார்வதி உறையும் இடத்தில் வண்டவாளம் பல்லிளித்து விடும்.

வானதி பதிப்பகம் வெளியிட்ட - சவுரி எழுதிய ‘‘இந்தியாவின் கலையும், கலாச்சாரமும்‘’ என்ற நூலின் பக்கம் 145, 146 என்ன சொல்லுகிறது?

இதோ:

திருக்கைலயங்கிரி என்று தமிழ் இலக்கியம் போற்றும் திரிக்கைலாய மலை உள்ள பிரதேசம்தான் பூலோக சொர்க்கம். இது திப்பெத் பகுதியில் உள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு உள்பட்ட எல்லைப் பிராந் தியம், ‘கைலாஸ் மானஸரோவர்’ எனும் இப்பிரதேசம்.

பாரதத்தின் கலை - கலாசார ஆன் மீகத் துறைகளுக்கு ஆதார சக்தியாக விளங்கி வந்திருக்கிறது இந்தப் பூலோக சொர்க்கம். இதற்குப் பாரதத்தில் வழங்கிய புராதனப் பெயர் ‘த்ரிவிஷ்டபம்‘ (தீப்பெத்). சிருஷ்டியின் தொடக்கம் இப்பிரதேசத்தில்தான் ஏற்பட்டது என்று ரிக் வேதம் கூறுகிறது. பூமியில் பேரதிர்வு ஏற்பட்டு, இமயமலை எழுந்ததும், கடல்கள் உருவானதும் இப்பகுதியிலிருந்துதான். ரிக் வேதத்தில் இத்தகவலைத் தரும் பல சூக்தங்கள் இருக்கின்றன. ‘த்ரய:ஸுபர்ணா உபரஸ்ய மாயூ நாகஸ்ய ப்ருஷ்ட்டே, அதி வீஷ்ட பிச்ரிதா:--’’ என்று தொடங்கும் சூக்தம், இந்தக் கருத்தை வெளியிடுகிறது.

‘‘மூன்று தைவ சக்திகள் - அக்னி இடிமின்னல், சூரியன் இங்கு ஒன்று சேர்ந்து இயங்கியதால் ஜீவராசியின் சிருஷ்டி தொடங்கியது. இதுதான் சொர்க்க லோகம்; இங்கு அமிர்த சக்தி இருக்கிறது. ஜீவர்கள் இந்த அமுத சக்தியைப் பெற்று வளர்கின்றன. இதனாலேயே இப்பகுதியை ‘த்ரவிஷ்டபம்‘ (மூன்று தைவ சக்திகள் ஒருமித்த சொர்க்கம்) என்று அழைக்கிறோம்.

மகாபாரதத்தில் வியாச முனிவர் இந்த திப்பெத் பிரதேசத்தை ‘த்ரதவிஷ்டபம்‘ என்றே குறிப்பிட்டு, ஆரிய வர்த்தத்தின் நடுப்பகுதி, மிகப் புனிதமான புண்ய பூமி என்று கூறியிருக்கிறார். கிம்புருஷ வர்ஷம், கின்னரதேசம், கந்தர்வ லோகம் என்றெல்லாம் இப்பகுதியில் உள்ள பிரதேசங்களை வர்ணிக் கிறார். கைலாஸ பர்வதத்தை ‘ஹேம் கூடம்‘’ என்று மகாபாரதமும் ‘கிரௌஞ்ச பர்வதம்‘ என்று வால்மீகி ராமாயணமும் குறிப்பிடுகின்றன.

ஏழாம் நூற்றாண்டில் இங்கு ஆட்சி புரிந்து வந்த ஸோங் வத்ஸன் ஸகம்போ எனும் திப்பெத்திய அரசனின் காலத்திலிருந்து 1954 இல் சீனா இந்நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வதற்கு முன்பு வரையில் பாரதத்தின் பகுதி போலவே இங்கு இந்திய யாத்திரிகள் போய் வந்து கொண்டிருந்தார்கள். கைலாஸ் - மானஸரோவர் பகுதியிலுள்ள மகன்ஸர் கிராமத்திலிருந்து பாரதம் 1948-க்கு முன்பு வரைக்கும் கிஸ்தி வசூல் செய்து கொண்டிருந்தது. 1950 வாக்கில் இப்பகுதியுடன் கிட்டத்தட்ட எண்பதாயிரம் சதுர மைல் பரப்புள்ள இந்தியப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டதால், 1962  இல் ஏற்பட்ட சீனப் படையெடுப்பிற்கப் பின் கைலாஸ் மானஸரோவர் புனித யாத்திரை தடைப்பட்டுவிட்டது.

- திரு.சவுரி எழுதிய ‘‘இந்தியாவின் கலையும், கலாச்சாரமும்‘’ என்ற நூல், பக்கம் 145, 146, (வானதி பதிப்பக வெளியீடு)

பூலோக சொர்க்கம் என்று போற்றப்படு கின்ற இடம்!

சிவபெருமான் உறைவதாகக் கூறப்படு கின்ற இடம்!

மூன்று தைவ சக்திகள் ஒன்று கூடுவதாகக் கூறப்படும் இடம்.

இவ்வளவு அற்புத சக்தி வாய்ந்த இடத்தை அந்நியன் எப்படி ஆக்கிரமித்தான் - அதுவும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனான சீனாக்காரனால் எப்படி ஆக்கிர மிக்க முடிந்தது? அவன் படை எடுத்து வந்த நேரத்தில் சிவபெருமான் என்ன செய்து கொண்டிருந்தான்? திரிபுரத்தை அவன் சிரித்தே அழித்ததாகக் கதை கட்டி இருக் கின்றார்களே - அந்த அபார சக்தி என்ன ஆயிற்று? உண்மையிலேயே சிவபெருமான் என்று ஒருவன் இருந்து அவன் அபார சக்தி உடையவனாகவும் இருப்பது உண்மையானால், சீனாக்காரன் அந்த இடத்தைக் கைப்பற்றி இருக்க முடியுமா?

இதற்கெல்லாம் ‘விஜயபாரதம்‘ விலா வாரியாக பதில் சொன்னால், அதற்குப் பெயர் தான் அறிவு நாணயம் என்பது.

கேள்வி: திருவள்ளுவர் ஒரு ஹிந்துவா?

பதில்: சந்தேகமென்ன? அவர் ஹிந்துதான்.

அவருக்கு சென்னை மயிலாப் பூரில் கோவில் கட்டி ஹிந்துக்கள் வழிபாடு செய்து வருகிறார்களே! அது சரி, எங்காவது ஒரு முஸ்லிமோ, கிறிஸ்துவரோ தன் வீட்டில் வள்ளுவர் படம் வைத்திருப்பதைப் பார்த்து இருக்கிறீர்களா?

- ‘விஜயபாரதம்‘, 22.11.2019, பக்கம் 35

திருவள்ளுவர் காலம் என்ன? 2000 ஆண்டுகளுக்குமுன் ஹிந்து மதம் என்ற ஒன்று உண்டா?

உங்கள் லோகக் குரு மூத்த சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் வாக்குமூலத்தைக் கொடுத்தால் அதை அப்படியே அட்சரம் பிறழாமல் ‘ஆம் என்க!’ என்று ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா!

பெரியவாள் சொன்னால் அது தெய் வத்தின் குரலாயிற்றே! ஆம் இதுவும் வானதி பதிப்பகம் வெளியிட்டதுதான். மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் அருள்வாக்கை எல்லாம் தொகுத்து வெளியிடப்பட்டதுதான். ‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகம் 167 ஆம் பக்கத்தைப் புரட்டுங்கள்.

‘‘நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று மொழிப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோமோ அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பற்றியது’’ என்று “திருவாய்” மலர்ந்துள்ளாரே!

வெள்ளைக்காரன் இங்கு வந்தது எப்போது?

திருவள்ளுவர் வாழ்ந்தது எப்போது?

திருவள்ளுவருக்கு மயிலாப்பூரில் கோவில் இருக்கிறதாம். அதை எப்பொழுது, யார் கட்டினார்கள்?

கோவிலை - அதுவும் ஹிந்து மதத்தில் கோவில் கட்டுவது என்பது மிகவும் மலி வான விடயமாயிற்றே. ஒருவனுடைய கொள் கையை ஒழிக்கவேண்டுமானால், அவனைக் கடவுளாக்கிட வேண்டும் என்பார்களே - அதுதான் திருவள்ளுவர் விடயத்திலும்.

சனாதன, வருண தருமத்தை ஒழிக்க வந்த கவுதம புத்தரையே மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று சொன்ன கூட்டம் எதைத்தான் செய்யாது?

பிள்ளையாரிலேயே தான் எத்தனை எத்தனைப் பிள்ளையார்? வேப்ப மரத்துக்குக் கீழிருந்தால், அது வேம்படி விநாயகர்; கடன்கார விநாயகர், ஒரு பெண்ணின் குறியில் துதிக்கையை வைத்திருந்தால், வல்லபைக் கணபதி - வெட்கக்கேடு.

கேள்வி: ‘கூடங்குளம் அணுக்கழிவு மையம் போன்ற பாதுகாப்பு இல்லாத திட்டங்களை அரசு செயல்படுத்தக் கூடாது’ என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளாரே?

பதில்: காஞ்சிப் பெரியவர் போல ஃபேன் இல்லாமல், கார் இல்லாமல் கால்நடையாக ஊர் ஊராகப் போகிறவர்கள் கூடங்குளத் திட்டம் - ஏன் மின்சாரமே வேண்டாம் என்று கூறலாம். ஆனால், அவர்கூட, தனக்கு வேண்டாமென்றாலும், மற்றவர்களுக்கு மின்சாரம் தேவை என்பதால், கூடங்குளம் வேண்டாம் என்று கூறமாட்டார்.

‘துக்ளக்‘, 3.7.2019, பக்கம் 17

சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஃபேன் இல் லாமல், கார் இல்லாமல் கால்நடையாகப் போனார் - இருக்கட்டும்.

சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி இருந்தபோது ஜூனியர் சங்கராச் சாரியாராகவும், அவர் மறைந்த பிறகு மூத்த சங்கராச்சாரியாராகவும் இருந்த ஜெயேந்திர சரஸ்வதி கால்நடையாகப் போகவில்லையே! காரிலும், விமானத்திலும்தானே பறந்தார். அவர்மீது ‘துக்ளக்‘குக்கு என்ன கோபம்?

கிண்டலா? கேலியா?

-  விடுதலை ஞாயிறு மலர் 7 12 19

உத்தரப் பிரதேசம்-தமிழ் நாடு ஓர் ஒப்பீடு

மத்திய சுகாதார துறை நாடாளுமன்றத் தில் அளித்துள்ள விபரங்களின் படி உத்தரப் பிரதேசத்தில் மிகவும் மோசமான பொது சுகாதார அவசர நிலை நிலவுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் மொத் தம் 3,621 மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதோ வெறும் 1,344 மருத் துவர்கள் மட்டுமே. காலியிடங்கள் 2,277.

கூடுதலாக 213 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மின்சார வசதி இல்லை. மக்கள் சென்று சேருவதற்கு உரிய சாலை வசதி 459 ஆரம்ப சுகாதார நிலையங்க ளுக்கு கிடையாது. 270 சுகாதார நிலையங் களுக்கு தண்ணீர் வசதி இல்லை. இவை அனைத்தும் அங்கே அமைக்கப்பட்டுள்ள 942 ஆரம்ப சுகாதார நிலையங்களை அடிப்படையாகக் சொல்லப்பட்டவை ஆகும். ஆனால் உண்மையில் உத்தரப் பிரதேசம் இந்தியாவின் பெரிய மாநிலமா கும். ஏறக்குறைய தமிழ்நாட்டை விட இரண்டு மடங்கு பெரிது. அங்கே மொத்த நாடாளுமன்ற தொகுதிகள் 80. நியாயமாக அங்கே இருந்து இருக்க வேண்டியது 5,000 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 15,000 துணை சுகாதார நிலையங்களும் ஆகும். ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டில் 1,835 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 8,712 துணை சுகாதார நிலையங்களும் உள்ளன. மருத்துவர்கள் தோராயமாக 5,500 பேர் இவ்விடங்களில் பணியாற்று கின்றனர். காலி பணியிடங்கள் ஏதுமில்லை.

தமிழகத்தில் தொடர்ந்து திராவிட ஆட்சியில் தமிழ் நாடு சீரழிந்து விட்டது, குஜராத் மாடல் உத்தரப்பிரதேச மாடல் என்று எல்லாம் மதவாதிகள், ஜாதியவாதி கள் மற்றும் பிரிவினைவாதிகள் தொடர் பொய் பரப்புரைகளைச் செய்து வருகின்ற னர். தற்போது யூ டியூப் மற்றும் முகநூலில் பலர் இரவு பகலாக இதே வேலையாக இருந்து வருகின்றனர். சிலர் இந்த வேலை யைத் தொடர எனக்கு பணம் அனுப்புங் கள் என்று வெளிப்படையாகவே கேட்டு வருகின்றனர்.

இவர்கள் எல்லாம் ஒன்று திருத்தணி எல்லையைகூட தாண்டாதவராக இருக்க வேண்டும், இல்லையென்றால் மன நோயாளிகளாக இருக்கவேண்டும் என் பது குறிப்பிடத்தக்கது.

-  விடுதலை ஞாயிறு மலர் 30 11 19

செவ்வாய், 21 ஜனவரி, 2020

'ஜெகத்குரு' பட்டம் கொடுத்தவர்கள் யார்?

'தினமலர்' வார மலர் - ஜனவரி 5,2020

தமிழர் தலைவர்பற்றி பார்ப்பனர்கள் கவலைப் படத் தேவையில்லை.

ஜெகத்குரு என்ற அடைமொழி போட்டுக் கொண்டாடித் தீர்க்கிறீர்களே (இதில் ஜெயிலுக்கும் பெயிலுக்கும் போனவரும் உண்டு) சங்கராச் சாரியார்களுக்கு அந்தப் பட்டம் கொடுத்தவர்கள் யாராம்? சொல்லு சொரணை கெட்ட தினமலரே!

 - , விடுதலை நாளேடு 11 1 20

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

தினமலரே, நாங்கள் சூத்திரர்களாக இருக்க வேண்டுமா?


'ஆம்! தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஹிந்து மதத்தை எதிர்த்தவர்கள்தான். அண்ணல் அம்பேத்கர் "நான் ஹிந்துவாகப் பிறந்தேன்; ஆனால் அதே நேரத்தில் ஹிந்துவாக சாகமாட்டேன்" என்று சொன்னதோடு பல லட்சம் மக்களோடு ஹிந்து மதத்துக்கு முழுக்குப் போட்டார்.

ஹிந்து என்று ஒப்புக் கொண்டால் பார்ப்பனர் அல்லாதார் தங்களை சூத்திரர்கள் என்றே ஒப்புக் கொள்ள வேண்டும். சூத்திரர்கள் என்று ஒப்புக் கொண்டால் வேசி மக்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.

தந்தை பெரியார் மட்டுமல்ல - மானத்தை மதிக்கும் பார்ப்பனர் அல்லாதார் 'ஹிந்து'க் கடவுள்களையோ, சாஸ்திரங்களையோ ஏற்றுக் கொள்ள முடியுமா? நாங்கள் இன்றைக்கும் சூத்திரர்களாகவே இருக்க வேண்டும் என்பதுதான் 'தினமலர்' திரிநூல்களின் இன வெறியா?

பிரிவினைவாதிகள் யார்?

'விடுதலை' பத்திரிகை செய்தி என்று போட்டு அதில் 'விடுதலை'யில் வெளி வராத வரிகளைப் போடலாமா? 'ராமன் சக்தியை நம்பாத இவர்கள் ஈ.வெ.ரா.வின் கூற்றான 'கடவுளை மற, மனிதனை நினை' என்பதைப் பின்பற்ற வேண்டும்' இந்த வரிகள் 'விடுதலை'யில் வெளிவந்துள்ளதா?

எவ்வளவுக் கேவலமான அறிவு நாணயமற்ற கும்பல் இது.

ஒரு அய்ந்து நாள்கள் இடைவெளியிலேயே இப்படித் திரித்து வெளியிடுவது தான் திரிநூல்களின் பத்திரிகா தருமமா? 'அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி' என்று பத்தினித்தன்மைக்குப் புதுவித தர்மம் கற்பிக்கும் கைபர் கணவாய் கும்பல் அல்லவா?

சரி, அடுத்து வருவோம், ராம பிரானை நம்புபவர்கள், இசட் பிரிவுப் பாதுகாப்பை விரும்புவது ஏன் என்ற கேள்விக்கு என்ன பதில்?

"மனிதனை நினை என்பது எந்த மனிதனை என்பதையும் விளக்கினால் நன்றாக இருக்கும். உங்களுக்குத்தான் மனிதர்களில் பலரைப் பிடிக்காதே, எங்கிருந்தோ வந்தவர்கள் என்று கூறி பிரிவினைவாதம் பேசுவீர்களே" என்றும் ஒரு முன்னுரையையும் கொடுத்துள்ளது 'தினமலர்'.

தனிப்பட்ட முறையில் எந்த மனிதரையும் நாங்கள் வெறுப்பதில்லை. ஒரு முறை எழுத்தாளர் சிவசங்கரி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களை பேட்டி கண்டபோது - வினா ஒன்றை எழுப்பினார்.

"நீங்கள் ஏன் ஆன்டி பிராமினா இருக்கிறீர்கள்" என்பதுதான் அந்தக் கேள்வி; அப்பொழுது 'விடுதலை' ஆசிரியர் சொன்ன பதில் என்ன தெரியுமா? "வீ ஆர் புரோ-ஹியூமன் (Pro-Human). எனவே ஆன்டி பிராமின் (Anti Brahmin)" என்று பதில் கூறினார். மனிதர்களைப் பிறப்பின் பெயரால் பிரிவினை செய்தது யார்? ஹிந்து மதம் தானே - அந்த பிரிவினை கூடாது என்பது திராவிடர் கழகம் தானே - ஏன் தலைகீழாகப் புரட்டுகிறீர்கள்?

நீங்களும் பிராமணராக இருக்கக் கூடாது - மனிதனாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை.

ஓ! புரட்டல் வாதம் தானே 'தினமலர்' கூட்டத்தினுடையது!

- விடுதலை நாளேடு 19 1 20


உத்திரமேரூர் அருகே 18ஆம் நூற்றாண்டு 'சதிகல்' கண்டெடுப்பு

உத்திரமேரூர், ஜன. 19- உத்திர மேரூர் அருகே, 18ஆம் நூற் றாண்டை சார்ந்த, இரண்டு, 'சதிகல்' கண்டெடுக்கப்பட்டு உள்ளது.உத்திரமேரூர் வர லாற்று ஆய்வு மய்யத் தலை வர் சு. பாலாஜி தலைமையில், தமிழர் தொன்மம் குழு அமைப்பாளர் வெற்றித் தமி ழன் ஆகியோர், உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அடுத்த, எடமிச்சி கிராமத் தில், கள ஆய்வு மேற்கொண்டு இரண்டு, 'சதிகல்' கண்டெடுத் துள்ளனர்.

இதுகுறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மய்யத் தலை வர் சு.பாலாஜி கூறியதாவது:

போரில் வீர மரணம டைந்த கணவரின் உடலோடு, அவனது மனைவி தீ மூட்டி, உயிரை மாய்க்க உடன் கட்டை ஏறும் நிகழ்விற்கு, 'சதி' என்று பெயர். மரணத்தை தழுவிய கணவன், மனைவி யின், நினைவை போற்றும் வகையில், அவர்களது உரு வங்களை சிற்பமாக செதுக்கி வழிபடுவர். இதற்கு. 'சதி கல்' என்று பெயர்.

எடமிச்சி கிராம குளக் கரையில், உடைந்த நிலையில், இரண்டு சதிகற்களை கண் டறிந்தோம். அதில், ஒரு சதிக் கல்லில், எட்டு வரிகள் கொண்ட கல்வெட்டு உள்ளது.

அதில், விஷ வருஷம், ஆனி மாதம், செந்தாமள் சிவலோகம் என, உள்ளது. சில வரிகள் சிதைவுற்று உள் ளன. இது, 1706ஆம் ஆண்டு, செந்தாமள் என்ற பெண், கணவன் இறந்தவுடன், தீ மூட்டி உடன்கட்டை ஏறி யுள்ளார் என, அறிய முடி கிறது. செந்தாமள் உருவம் வலது பக்கமும், அவரது கணவர் உருவம் இடது பக் கமாக உள்ளது.

இரண்டாவது சதிகல்லில், வலது பக்கம் கணவனின் உருவமும், இடப்பக்கம் மனைவியின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.

இவை, 18ஆம் நூற்றாண் டைச் சார்ந்தது. எங்களது கள ஆய்வில், உத்திரமேரூர் பகுதியில், முதன்முதலாக கல் வெட்டுடன் கூடிய, 'சதிகல்' இங்கே நேற்றுமுன்தினம் கண்டெடுத்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

- விடுதலை நாளேடு 19 1 20

சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் நடந்தது என்ன?

ரஜினிக்கு மறுப்பு

'தி டைம்ஸ் ஆப் இந்தியா'வுக்கு

தமிழர் தலைவர் பேட்டி

'துக்ளக்' 50-ஆம் ஆண்டுவிழா நிறைவு நிகழ்வில், 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த திராவிடர் கழகத்தின் நிகழ்ச்சி குறித்து உண்மைக்கு மாறான  செய்தியை கூறிய ரஜினிகாந்த் திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் 'டைம்ஸ் ஆப் இந்தியா'விற்கு கி.வீரமணி அளித்த பேட்டியில், "ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறுகிறார்கள். அப்படி வருபவர் மீதான நம்பகத்தன்மை அற்றுப் போய் விட்டது. அரசியலுக்கு வருகிறேன் என் பவர் பிறரின் உணர்வுகளுக்கு மதிப் பளிக்கவேண்டும். தந்தை பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய உண்மைக்கு மாறான கருத்தால் பெரியாரைப் பின்பற்றுபவர் களின் மனதைப் புண்படுத்தி விட்டார். தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெரி யாரின் பற்றாளர்கள் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்" என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: "ரஜினி காந்த் உண்மைக்கு மாறாகக்  கூறி உள்ளார். மேடையில் சோ வைப் புகழ்கிறேன் என்று  சோ 'துக்ளக்' கில் எழுதாத ஒன்றையும், 'துக்ளக்'கில் அச்சிடாத ஒன்றை குறித்தும் ரஜினிகாந்த் பேசியுள்ளார். இவ்வாறு அவரைப் பேசத் தூண்டியது யார்? எங்கிருந்து அவருக்கு இப்படி பேசுமாறு உத்தரவு வந்தது?. ரஜினி யின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.

மேலும் மக்களிடையே அவர்மீதான நம்பிக்கையும் போய்விட்டது. இவர் கூறியுள்ளது 49-ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் நிகழ்வு ஆகும். இரண்டாம் நாள் கடவுளர் படங்கள் வாகனங்களில் மூடநம்பிக்கை குறித்து விழிப்புணர்வு ஊட்டும் வகையில் கொண்டு வரப்பட்டன. அப்போது பெரி யாருக்குக் கருப்புக்கொடி காட்டிய ஜன சங்கத்தினர்(இன்றைய பாஜக) பெரியார் மீது செருப்பை வீசினார்கள். ஆனால் அப்போது பெரியார் வாகனம் முன்னே சென்றுவிட்டது, அந்த செருப்பு கடவுளர் படங்கள் கொண்டுவந்த வாகனத்தின் மீது விழுந்துவிட்டது. இதுதான் நடந்தது" என்று கூறினார்.

ரஜினி 'துக்ளக்' விழாவில் பேசியதாவது:  "1971இல் சேலத்தில் சிறீராமச்சந்திர மூர்த்தி யையும், சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ 'துக்ளக்' அட்டையில் போட்டு கடுமையாக விமர் சித்தார். இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டார்.  அது 50 ரூபாய்க்கு 'பிளாக்'கில் விற்றது" என்று கூறியிருந்தார்.

தந்தை பெரியார் மீது ரஜினிகாந்த் கூறிய இந்த உண்மைக்கு மாறான கருத் திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பெரியாரிய அமைப்புகள் பல மாவட்டங்களில் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

 -  விடுதலை நாளேடு 19 1 20

செவ்வாய், 14 ஜனவரி, 2020

தமிழ் ஆண்டு (திருவள்ளுவர் ஆண்டு)

தமிழ் உலகில் தமிழ் ஆண்டு என்னும் பெயரில் வழக்கில் இருக்கின்ற பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழில் இல்லை. அவை பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், தமிழ் மண், மாடி, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை.

எனவே, தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில், தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது, திருவள்ளுவர் காலம் தி.மு.31; தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்தார்கள்.

இந்த முடிவை 13.1.1935 ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில், தலைமை தாங்கிய தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்து ஆண்டுடன் 31 கூட்ட வேண்டும் என்று கூறி, திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார். 1925+31=1966. அதை அறிஞர் அவை ஏற்றுக் கொண்டது. அன்று தொட்டு அறிஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. (பக்கம் 117, திருவள்ளுவர் நினைவு மலர் 1935)

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை: இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். ஏழு கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ், புதன் - அறிவன்; சனி - காரி.

ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. 2007+31=2038. தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. நாம் பின்பற்றவும் பரப்பவும் வேண்டும்.

உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒப்பற்ற உயிர்ப்பாற்றல் நான்கு. தமிழ் மொழி, தமிழ் மறை, தமிழ் ஆண்டு, தமிழர் திருநாள். இவற்றைப் போற்றிப் புரந்து பின்பற்றிப் பரப்பினால் தமிழர் நலவாழ்வு, வள வாழ்வு, பெருவாழ்வு, புகழ் வாழ்வு பெற முடியும்.

தமிழ் ஆண்டு முறையைப் பின்பற்றுவோம் -- நாம்

தமிழர் என்று நிலை நாட்டுவோம்.

தரணி முழுதும் வாழ்கின்ற தமிழர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

-  விடுதலை ஞாயிறு மலர், 11.1.20

திங்கள், 13 ஜனவரி, 2020

தமிழர் விழா!

தந்தை பெரியார்

பொங்கல் விழா எதற்குக் கொண்டா டப்படுகிறது என்பது இன்னமும் பலருக்கு தெரியாது. உண்மையில் தமிழர்களுக்கு என்று தமிழர்களின் நாகரிகம் பண்பு இவைகளுக்குப் பொருத்தமான பண் டிகை ஒன்று கூடக்கிடையாது.

அப்படி இருந்தும் நம் மக்களுக்கு பண்டிகைகளுக்கு அளவே இல்லாது பல பண்டிகைகள் இருந்து வருகின்றன.

முதலில் அப்பண்டிகைகளின் பெயர் களைப் பார்த்தால் அவை அத்தனையும் சமஸ்கிருத பெயராகவே இருக்கும். தமி ழர்களுக்கென்றும் தமிழர்களின் பண்பு நாகரீகம் கலாச்சார பழக்கவழக்கம் இவைகளைக் கொண்டதாகவும் ஒரு பண்டிகை இருக்குமானால் அதற்கு தமிழிலேயே பெயர் இருக்கவேண்டும். ஆனால், வட மொழியில் இருக்குமானால் எப்படி தமிழர்களுக்குண்டான பண் டிகையென்று கூறமுடியும்?

பொங்கல் பண்டிகை

ஏதோ பொங்கல் பண்டிகை என்று கூறும் முறையில் தமிழ்ப் பெயராக இருப் பதும் அன்றி நம் மக்களுக்கு ஏற்ற பண்டிகையாகவும் இருக்கிறது. மேலும் இதற்கு கூட பார்ப்பனர்கள் சங்கராந்தி என்று பெயர் கொடுத்து அப்பண்டிகைக் காக கட்டுக்கதைகளை இயற்றிவிட்டு அது இந்திரனுக்குக் கொண்டாடப்படும் பண்டிகை என்பதாக மாற்றிவிட்டார்கள். பண்டிகைகள் ஒவ்வொன்றையும் எடுத்து ஆராய்ந்து பார்த்ததில் இப்பண்டிகையை மட்டும்தான் பார்ப்பனப் பண்டிகையிலி ருந்து  தமிழர் பண்டிகையாக மாற்றம் செய்ய முடிந்தது. தமிழர்களின் பண்புக் கேற்றவண்ணம் அதன் அவசியத்தையும், கொண்டாடும் முறையையும் விளக்கி வருகிறோம்.

உழவர் திருநாள்

இப்பண்டிகை நம் மக்களில் பெரும் பான்மையானவர்களாகிய விவசாயிக ளுக்குண்டான பண்டிகையாகும். அவர் கள் இந்த ஆண்டு முழுதும் விவசாயம் செய்து தானியங்களைத் தங்கள் இல்லத் தில் கொண்டு வந்து அத்தானியத்தை முதன்முதலாக சமைத்து உண்ணும் பொழுது தாங்கள் சந்தோஷமாக இருக் கும் அறிகுறியைக் காட்டும் முறையில் இப்படிக் கொண்டாடுகிறோம். இது வரைப் பார்ப்பனர்களின் முறைப்படி கொண்டாடப்பட்ட முறைகள் அறிவுக் கும் பண்புக்கும் பொருத்தமற்றதாகும் என்பதை விளக்கி நம்முடைய பழக்க வழக்கங்களுக்கு ஏற்றவண்ணம் கொண் டாடும் முறையை பின்பற்றுகிறோம்.

உறவைக் கூட்டும் விழா

இந்நன்னாளில் ஒருவருக்கொருவர் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்ள தங்கள் நண்பர்களுக்கும் உற வினர்களுக்கும் வாழ்த்துக் கடிதங்கள் அனுப்புகிறார்கள். இப்பண்டிகை மட்டும் தான் தமிழர்களுக்கென்று உள்ள பண் டிகை.

இதைத் தவிர மற்றவை யாவும் பார்ப் பனப் பண்டிகைகள். அப்பண்டிகைகள் அத்தனைக்கும் கூறப்படும் கதைகள் அறிவுக்குப் பொருத்தமற்றவைகள். நாகரீக காலத்திற்கு ஏற்றவை அல்ல. அப்போது காட்டுமிராண்டித்தனம் மலிந்த காலத்தில் அதற்கேற்றவண்ணம் பார்ப்பனர்கள் கதைகளைக் கட்டிவிட் டார்கள்.

அறிவுக்கு அளவுகோல்

இப்போது விஞ்ஞானம் மலிந்த காலம்; ஆராய்ச்சியாளர்கள் மிகுந்து அதிசய - அற்புதங்கள் பலவற்றை சாதித்துக்காட்டும் காலம். இப்படிப்பட்ட ஆராய்ச்சிக் காலத்தில் புராணக்கதைகள் இருப்பது சிறிதும் அறிவுக்குப் பொருத்தமற்றதாகும்.

அவைகள் இன்னமும் நிலைத்து நிற்பதன் காரணம் நம்முடைய முட்டாள் தனம் எத்தனை டிகிரி இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறதே அன்றி அறிவின் தரத்தைக் காட்டுவதில்லை...

சேலம் நகராண்மைக் கழகக் கல்லூரி விழாவில் ஆற்றிய உரையிலிருந்து

- 'விடுதலை', 26.01.1954

- விடுதலை நாளேடு, 11.1.20

எங்களுக்கு ஆசிரியர் தமிழர் தலைவர்


- மா.பால்ராசேந்திரம்-

சிந்தனா சக்தி சிறிதுமின்றி மக்களுக்குத்

தம்தோள் உழைப்பிலே நம்பிக்கை தானுமின்றி

ஊறும் பகுத்தறிவை இல்லா தொழித்துவிட்டுத் திரிந்திடும் மக்கள் பெருங்கூட்டத்திற்குப் பெரியாரியலை நாளும் கற்றுக் கொடுத்திடும் பகுத்தறிவியல் ஆசிரியர் எங்கள் தமிழர் தலைவராவார்.

ஆசு + இரியர். மனத்துள் கிடக்கும் மாசினை அகற்றும் ஆசிரியர். அழுக்காறு, அவா, வெகுளி இன்னாச்சொல், வஞ்சகம், பொறாமை, அறிவிலித்தனம் ஆகிய மாசுகளைப் பகுத்தறிவுப் போதனைகளால் விரட்டி அடிக்கும் பண்பட்ட ஆசிரியர்.

இன்னார் இனியரெனக் கொள்ளாது, மொத்தத் தமிழர்க்கும் நன்னெறி காட்டிடும் நல்லாதனராவார். இவர் இயற்கையாய்க் கருவழிப் பெற்ற அறிவோடு தந்தை பெரியாரின் தொடர்பு வழிப்பெற்ற பகுத்தறிவை நிரம்பக் கொண்டு பெரியார் பணி முடிக்கும் பேராசிரியராவார்.

அதுமட்டுமின்றி, திருவள்ளுவரின்

“மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்

யாஉள முன்னிற் பவை”,

எனும் குறள்வழி நின்று இயற்கையறிவோடு நூல்கள் பல தேடிக் கொணர்ந்த மிக்க நுட்பமான அறிவோடு எதிர்வினையாடி, கேட்போர் வியக்கும் வண்ணம், பொருந்தும் பொருளோடு செறிந்த கருத்தினைக் கூறிப் பெரியாரியலை மக்களிடம் தடங்கலின்றிக் கொண்டு சேர்ப்பித்திடும் நாநலம் பெற்ற ஆசிரியர்,

புரியாத கருத்துக்களை அவரின் விளக்கமான விரிவுரையால் அறிந்து தெரிந்து தெளிவு பெறலாம்.

“மனிதன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?” என்பது அவரிடம் கேட்கப்பட்ட வினாவாகும். . .

“மனிதனாக மனிதத் தன்மையுடன், மனித நேயத்துடன், ‘எம்பதி’ என்ற ‘‘ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்’’ என்று நடந்து கொள்ள வேண்டும்”, என்ற சிறந்த விடையினைத் தந்தவர் எங்கள் ஆசிரியர்.

இன்றைய காலகட்டத்திற்குத் தேவையானதைப் பல்லாண்டுகட்கு முன்பே சொல்லி வைத்தவர் எங்கள் ஆசிரியர்,

“இளம்பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை ஒழிக்கத் தீர்வு என்ன?” என்ற வினா அவரிடம் கேட்கப்பட்டது. அடிமைத்தளை அறுத்தல் வேண்டும்.  வலுவான சட்டங்களைக் காலதாமதமின்றிச் செயல்படுத்தித் தண்டிக்க வேண்டும்.  விரும்பியவர்களுக்கு இலவசத் துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும். வாலாட்டம் தானே அகலும் என்று விடை பகர்ந்தார்.

என்றைக்குமே எந்தநிலையிலும் எங்கள் ஆசிரியர் பகுத்தறிவில் குழப்பமிருந்ததில்லை.

‘அன்பே சிவம்‘ என்றார் திருமூலர். ‘அறிவே தெய்வம்‘ என்றார் பாரதியார். எது சரி? என்ற வினாவிற்குக் குழப்பமில்லாது ‘கடவுள் ஒரு குழப்பம்‘ என்றார் பெரியார் என்று தெளிவோடு தெளிவில்லாதோர் புரிந்திடப் பதில் தந்தார்.

‘வெள்ளையர் ஒருவர் இந்துவாக மதம் மாறச் சம்மதித்தால் அவரை எந்த ஜாதியில் சேர்ப்பது? அவருக்கு எந்த வர்ணத்தின் தர்மங்களைப் புகட்டுவது?’

வினா, விநோதமானதுதான். எங்கோ, எவரிடமோ கேட்க வேண்டிய வினாதான். ஆனாலும், எங்கள் ஆசிரியர் தமக்கே உரிய சியசிந்தனையுடன் விளக்கவுரை பகர்ந்தார். சிக்கலான கேள்வி. எப்படியிருந்தாலும் அவர் பிராமண ஜாதியில், வர்ணத்தில் சேர்க்கப்பட முடியாது என்பது உறுதி. சமயோசிதத்தில் வர்ண தர்மங்களை அவரே கற்றுக்கொள்ள முடியும் என்று.

இந்தியாவில் பொருளாதாரச் சீரழிவு நடைபெற்று வரும் இக்காலத்தில் எங்கள் ஆசிரியர், அதற்கான காரணங்களை முன் வைக்கிறார். அதனை எடுத்துக்கொண்டால் இந்தியர் சமூகம் பலன்பெறும்.

“இந்தியப் பொருளாதார வளர்ச்சி, குறைவதற்குப் பொருளாதாரக் கொள்கை மட்டும்தான் காரணமா?” என்று கேட்கப்பட்டக் கேள்விக்கு, ஆசிரியரின் பதில்,

“1) ஜாதி முறை 2) தலைவிதி நம்பிக்கை 3) பொருளாதாரக் கொள்கை. இவைகளின் கூட்டுதான் காரணங்கள் என்பதாகும்” என்றார். இவைகளை ஆளுபவர்கள், நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்தோர் உற்றுநோக்கித் தீயன அகற்றி, நல்லன கொண்டால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்பதுதானே உண்மை.

பார்ப்பனீயத்தை வென்றுதான் நம் உரிமைகளைப் பெற்றிருக்கிறோம். இன்னமும் குறைகளோடுதான் இச்சமூகம் வாழ்ந்து வருகிறது. அதற்கான போராட்டங்கள் விரைவு படுத்தப்படுமா? என்ற எண்ணத்துடன் கேட்கப்பட்ட ஒரு வினா.

“ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டு வாழ்ந்தபோது தமிழன் உரிமை காக்கப் போராடி வெற்றி பெற்றது போல, இன்று பார்ப்பனீயத்துடன் போராடி வெல்லத் தயங்குவதேன்?

தயக்கமில்லாத் தலைவரின் முன் வினவப்பட்ட வினா தயக்கம் ஏன் என்று. “ஆங்கிலேயர்கள் நாணயமான எதிரிகள். பார்ப்பனீயம் வஞ்சகம், சூது, வாது, அய்ந்தாம் படை ஆளுமை கொண்ட ஓர் அமைப்பு. ஆதலால், போராடி வெல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், அதே நேரத்தில் முடியாததுமல்ல” என்ற தன்வலிமை, தன்னைச் சார்ந்து இயங்கிடும் இயக்கத் தொண்டர்களின் வலிமை எப்படிப்பட்டது என்பதனை நினைந்து உறுதியுடன் வெல்வோம் என்று விடையாகத் தந்தார்.

‘தமிழர் பண்பாடு என்றால் என்ன?’ தெரிந்தெடுத்த வினாவினைத்தான் எங்கள் ஆசிரியரால் மதிக்கப்படும் எழுத்தாளர் அம்மையார் கேட்டார்.

“ஆரியக் கலாச்சாரம் வேறு, தமிழர் பண்பாடு வேறு தான். தாயை, தமக்கையை, மகளை வாடி, போடி என்று அழைக்காத ஒரு பண்பாடே தமிழர் பண்பாடு” என்றாரே பார்க்கலாம். இதுபோன்ற விடையினை யார்தான் தந்திருக்க முடியும்? எங்கள் பகுத்தறிவு ஆசிரியரால்தான் தரமுடியும். நாங்களும் அவரின் பதிலால் தமிழர் பண்பாட்டின் கூறுகளைத் தெளிவுடன் புரிந்து கொண்டோம்.

‘மனிதன் பகுத்தறிவினை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்‘ என்பதற்கான நிகழ்வொன்றைச் சொல்லுங்கள்’ என்றொரு வினா.

“காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதனின் லீலைகளுக்குப் பிறகும் பக்தியா? கோவிலுக்குச் செல்லலாமா? என்ற நடந்த முறைகேடான செய்தியினைச் சான்றாக்கிப் பகுத்தறிவுப் பரவலுக்கு விடை பகர்ந்து மானிடச் சமூகத்திற்கு நல்வழி காட்டியவர்.

‘குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாய்ச் சுற்றும் உலகு’ என்பார் திருவள்ளுவர்,

பொய்யிலப்புலவன் கூற்றின்படி நம் ஆசிரியர் தன்னளவில் பிறர் விரல் நீட்டிக்காட்டிக் குற்றஞ் சாட்ட முடியாதவராய்த் திகழ்ந்து கொண்டு, தான் சார்ந்த மக்கள் சமூகத்தின் உயர்வுக்கும் நற்செயல் செய்து வாழ்ந்து வருகின்றவர் தானே. அவரை உலகம் தம் சுற்றமாய்க் கொண்டு கொண்டாடி மகிழத்தானே செய்யும் அதனால்தான் இந்நாட்டில் யாருக்கும் கிடைக்காத பெருமை, தந்தை பெரியாரின் சீரிய தொண்டராம் நம் ஆசிரியப் பெருந்தகைக்கு “மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்” என்ற விருதினை உலக மனிதநேயர் கூட்டமைப்பு வழங்கிக் தம் அமைப்பினையும், தம்மையும் பெருமைக்குள்ளாக்கி வரலாற்றைச் செம்மைப்படுத்திக் கொண்டது.

இந்நாளில் அகவை 87 காணும் எங்கள் ஆசிரியர்! ‘சொலல் வல்லன் சோர்விலன்’ எனப் பசுமரத்தாணி’ போல் எவர் மனதிலும், எது பற்றியும் மாசின்றிப் பதியும் வண்ணம் கருத்தினை எளிதாய்க்கூறிப் பயன் எய்தச் செய்திடும் ஆசிரியர். எங்களுக்கு ஆசிரியர், என்றும் எங்கள் ஆசிரியராய், நல்ல உடல்நலம் உடையோராய் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்திட வாழ்த்தி நிறைவு செய்கிறேன்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும் அந்தத் தாய் தனது மக்களில்- உடல் நிலையில் இளைத்துப்போய், வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போசனையைவிட எப்படி அதிகமான போசனையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத்தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் பார்ப்பனரிடமும், மற்ற வகுப்புக் களிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

(தந்தை பெரியார், ‘விடுதலை’,1.1.1962)

விடுதலை’,4.1.20)


70 ஆண்டு குடியரசின் இலட்சணம்!

தாழ்த்தப்பட்ட அமைச்சர்களும் கோவிலுக்குள் நுழைய முடியவில்லையே!

இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் குமுறல்!

கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட  இமாச்சலப் பிரதேச மாநில அமைச்சர்  ராஜீவ் சைசால், கோவிலுக்கு வெளியே நின்றிருந்த காட்சி.

சிம்லா, ஜன. 13 இமாச்சலப் பிரதேசத்தின் சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாட் டுத்துறை அமைச்சர் ராஜிவ் சைசால் மாநிலத்தின் இட ஒதுக்கீடு தொடர்பான சிறப்பு சட்டமன்ற கூட்டத்தின் போது தன்னை கோவிலில் நுழைய விடாமல் அவமானப்படுத்திவிட்டனர். என்னை மட்டுமல்ல, பல அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வரு கின்றனர் என்று புலம்பியுள்ளார்.

மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், அப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இந்த இடஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு மட் டும் வழங்கப்பட வேண்டுமென அரச மைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

எனினும், இந்த இடஒதுக்கீட்டை 1960-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 10 ஆண்டு களுக்கும் மத்திய அரசு நீட்டித்து வந்தது. அந்த வகையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை நீட்டித்து கடந்த 2010-ஆம் ஆண்டு இயற் றப்பட்ட சட்டம், வரும் 25-ஆம் தேதியோடு நிறைவடைகிறது.

‘‘எம் ஓட்டுநர் கோவிலுக்குள் போகலாம்;

நான் போக முடியாது!''

இதையடுத்து, இந்த இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் அரசமைப்புச் சட்ட (126-ஆவது) திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநில சட்டப் பேரவைகளிலும் இந்த இடஒதுக்கீடு நீட்டிப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு வருகிறது.  இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவைக் கூட்டத்தின்போது மத்திய அரசின் இந்த சட்டம் மாநிலத்தில் நடை முறைப்படுத்த விவாதம் நடைபெற்றது. அப்போது சமூக நீதி மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராஜீவ் சைசால் கூறும் போது, “நானும் சட்டமன்ற உறுப்பினரான வினோத் முகோரும் கோவி லுக்குச் சென்றோம் (கோவில் பெயர் குறிப் பிடப்படவில்லை). அப்போது கோவி லுக்கு வெளியே வந்த கோவில் நிர்வாகிகள் எங்களை கோவில் வாசலில் இருந்து பல மீட்டர் தூரம் வெளியே நிற்குமாறு மிரட் டினார்கள்.

என்னுடன் வந்த பாதுகாவலர்கள் மற்றும் உதவியாளர்கள் கோவிலுக்குள் சென்று வந்துவிட்டனர், அங்கு நின்று கொண்டு இருந்த எங்களுக்கு மிகுந்த அவமானமாகப் போய்விட்டது,  எனது ஓட்டுனர் கோவிலுக்குள் சென்று வந்த பிறகு நாங்கள் அங்கு நிற்பதைப் பார்த்து ஒன்றும் கூறாமல் நின்றுவிட்டார்” என்று வேதனையுடன் கூறினார். அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கின்னரூ ஜகத் சிங் நெஹி என்பவர், ‘‘உண்மைதான் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் இது போன்று பல கோவில்களில் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு அவமானப் படுத்தப்பட்டுள்ளனர்'' என்று கூறினார்.

இதற்குப் பிறகும் பேசிய சைசால் சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் கேபினெட் தகுதி பெற்ற என்னைப் போன்ற அமைச்சருக்கே இந்த அவமான சூழ்நிலை என்றால், மற்றவர்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டிருப்பார்கள். இந்த இழிநிலை எப்போதுதான் முடிவிற்கு வரும் என்று கண்கள் கலங்க சபையில் பேசினார். மேலும் அவர் பேசும் போது, சீக்கிய மதகுரு இந்த பேதங்களை நீக்க அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிடும் முறையையும் (லங்கர்), அனைவரும் ஒன்று சேர்ந்து வணங்கும் முறையையும் கொண்டுவந்தார். இதன் மூலம் சீக்கியர்களிடம் ஜாதிய முறை ஒழிந்தே போனது என்று கூறினார்.

இது தொடர்பாக மற்றொரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சுக்வீந்தர் சிங்சாக்கு  கூறும் போது, “நமது மாநில கேபினெட் தகுதி பெற்ற அமைச்சரை கோவிலில் நுழையவிடாமல் தடுத்தவர்களை தாழ்த் தப்பட்ட பழங்குடியினர் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும். இது போன்ற நிலை வரக்கூடாது என்று தான் ராஜீவ் காந்தி சிறப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார்'' என் றார்.

கோவில்களில் தீண்டாமை இன்றும் உள்ளது -முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்

தனக்கு ஏற்பட்ட இந்த அவமானமான நிகழ்வு குறித்து அமைச்சர் ராஜிவ் சைசால் கூறியதும், சிறிது நேரம் அவையே அமைதி யானது. அதன் பிறகு முதல்வர் ஜெயராம் தாக்கூர் பேசிய போது, “சைசால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது வேதனை எங்களுக்குப் புரிகிறது, அவரைப்போலவே அவையில் உள்ள பலரின் வேதனைகளையும் நான் கணக்கில் எடுத்துள்ளேன்.  சில இடங்களில் நானும் இதே போன்ற ஒரு நிலையை சந்தித்துள்ளேன். தாழ்த்தப்பட்ட வர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உணவு வழங்கும் போது தனிவரிசை மற்றும் தனி பாத்திரம் கொடுப் பதும் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இதற்கான மாற்றங்கள் அடிமட்டத்தில் இருந்து வரவேண்டும். இன்னும் நிறைய தூரம் நாம் செல்லவேண்டியுள்ளது'' என்றார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆசா குமாரி பேசும் போது முதல்வர் இவ்விவகாரத்தை சாதாரணமாகப் பேசுவது போல் தெரிகிறது, மாநிலம் முழுவதுமே இந்த தீண்டாமை தொடர்கிறது.  ஒரு சில இடங்களில் மட் டும் நடக்கிறது என்பது போல் உள்ளது முதல்வரின் பேச்சு என்று கூறினார்

இதனை அடுத்து சிபிஅய்(மார்க்சிஸ்ட்) சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் சின்கா பேசும்போது, மாநிலத்தில் தீண்டாமையை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் தீண்டாமை நீடிப் பது அவமானகரமான ஒன்றாகும் என்று கூறினார்.

அப்போது பேசிய பாஜக உறுப்பினர்கள் காங்கிரஸ் ஆட்சியின் போதும் தீண்டாமை இருந்தது இப்போதுமட்டும் புதிதாக தோன்றியது போன்ற நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்றனர்.

இதற்குப் பதிலளித்து காங்கிரஸ் உறுப் பினர் ஆசாகுமாரி பேசும் போது, “காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் ஒரு வாரம் நடைபெறுகிறது, உறுப்பினர்கள் அனைவருமே பேச வாய்ப்புகள் தரப்படுகின்றன. ஆனால் இங்கே ஒரு நாள் அதுவும் சில மணி நேரம் மட்டுமே சட்டமன்ற கூட்டம் நடைபெறு கிறது. இச்சபையில் இருக்கும் அனைத்து உயர்ஜாதியில்லாத உறுப்பினர்கள் தாங்கள் தீண்டாமையால் பாதிக்கப்பட்டோம் என்றுகூறுகிறார்கள். ஆனால், அவர்கள் பேசுவதற்கு அரசு அனுமதி மறுத்து, சபையை விரைவில் முடித்துவிடப் பார்க் கிறது. இதுதான் பாஜகவினரின் தீண்டா மையை ஒழிக்கும் நடைமுறையா என்று கூறினார். இதனை அடுத்து சபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

2017-ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநில சட்டமன்றத்திலும் கோவில்களில் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் அளித்தனர். அப் போதைய மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ் மீது திடீர் பாசம் கொண்டவருமான தருண் விஜய் சில தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு உத்தராகண்டில் உள்ள கோவில்களுக்குச் சென்றார். அப் போது கோவில் நிர்வாகத்தினர் அவருடன் வந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்ட நபர்கள் மீது கல்லெறிந்தனர். அதன் பிறகு அவருடன் சென்ற தாழ்த்தப்பட்ட நபர்கள் ஊரில் இருந்து ஒதுக்கிவைக்கப் பட்டனர். இது தொடர்பாக ‘‘தைனிக் பாஸ்கர்'' என்ற இந்தி இதழில் செய்தி வந்த பிறகும், இது தொடர்பாக தருண் விஜய் எந்த கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு 13 1 20

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

சண்டி மாடு சவுண்டிகள் திருந்துவதில்லை!

எங்கள் அமைப்பில் பாசிசம் கிடையாது - மாறாக பார்ப்பனீய பாசிசத்தை பச்சையாகத் தோல் உரிக்கக் கூடியது. 'தீண்டாமை க்ஷேமகரமானது' என்று கூறும் பேர்வழிகளை, லோகக் குரு சங்கராச்சாரியார் என்று கூறும் பாசிசத்தின் முகத்திரையைக் கிழிக்கக் கூடியது. நாட்டின் பெரும்பான்மையான மக்களை சூத்திரர்கள் என்று எழுதி வைத்து (வேசிமகன்  - ஆதாரம் மனுதர்மம் அத்தியாயம் - 8, சுலோகம் - 415) இழிவு படுத்தும் ஈனத்தனமாம் பாசிசத்தை மட்டை ஒன்று கீற்று  இரண்டாகக் கிழிக்கக் கூடியது. பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று தன்னைப் பெற்றெடுத்த தாயையும் சேர்த்து கூறும் (அத்தியாயம் - 9,  சுலோகம் - 32) கீதையைக் கிழித்துக் காட்டியவர் எங்கள் தலைவர் வீரமணியாவார்! எவ்வளவு சூடு கொடுத்தாலும் சண்டி மாடு  சவுண்டிகள் திருந்துவதில்லை என்று திருப்பதி ஏழுமலை யானிடம் சத்திய வாக்குக் கொடுத்துள்ளார்களோ, வெட்கக் கேடு! வெட்கக்கேடு!!
- விடுதலை நாளேடு, 12.1.20

அவுட்டுத் திரிகள் துள்ள வேண்டாம்!

திராவிடர் கழகம் அரசியல், பதவிப் பக்கம் செல்லாத அமைப்பு என்பது ஊருக்கும் உலகுக்குமே தெரிந்த ஒன்று; ஆனால் இந்த அடிப்படைப் பாடம் கூடப் படிக்காததுகள் எல்லாம் பத்திரிக்கை நடத்த வந்திருப்பதுதான் பரிதாபம்!
முதல் அமைச்சர் பதவியை ஏற்க இரு முறை வெள்ளைக்கார கவர்னர் பெரியாரின் கதவைத் தட்டியபோதுகூட "'அட்ரஸ்' தெரியாமல் வந்து  விட்டீர்கள், என்னுடைய பணி இந்த சமூகத்தை மாற்றியமைக்கும் சமூகப் புரட்சிப் பணி" என்று பதவிகளை உதறித் தள்ளிய தந்தை பெரியார் கண்ட இயக்கம் திராவிடர் கழகம்! அதே நேரத்தில் ஆட்சியில் இருப்பவர்களிடம் சாட்டையைச் சுழற்றி வேலை வாங்கும் இடத்தில் இருப்பது திராவிடர் கழகம்; "இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை!" என்று முதல் அமைச்சர் அண்ணா சொன்னதையும், "தந்தை பெரியார் மொழியில் சொல்லுகிறேன். இது நான்காம் ஜாதி மக்களின் சூத்திரர்களின் ஆட்சியே" என்று முதல் அமைச்சர் கலைஞர் சட்டப் பேரவையில் அறிவித்ததும் நினைவில் நிற்கட்டும்!
அரைகுறை 'தினமலர்'கள், அவுட்டுத் திரிகள் ரொம்பவும் துள்ள வேண்டாம்!
- விடுதலை நாளேடு, 12.1.20

சனி, 11 ஜனவரி, 2020

திருப்பூரில் ‘விடுதலை' சந்தா வழங்கும் விழா - கே.சுப்பராயன் எம்.பி.,க்குப் பாராட்டு விழா

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு

97 வயது காணும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களை மேடைக்கு அழைத்து சால்வை அணிவித்துப் பாராட்டினார் கழகத் தலைவர் (திருப்பூர், 9.1.2020).

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கோவை வசந்தம் கு.இராமச் சந்திரன் அவர்களைச் சந்தித்து சால்வை அணிவித்து நலம் விசாரித்தார் கழகத் தலைவர் (கோவை, 9.1.2020).

திருப்பூர், ஜன.10 நேற்று (9.1.2020) திருப்பூரில் ‘விடுதலை' சந்தா வழங்கும் விழா - கே.சுப்பராயன் எம்.பி. பாராட்டு விழா நடை பெற்றது. நிகழ்ச்சியின் விவரம் வருமாறு:

வரவேற்புரை: இரா.ஆறுமுகம் (திருப்பூர் மாவட்டத் தலைவர்)

தலைமை: யாழ்.ஆறுச்சாமி (திருப் பூர் மாவட்டச் செயலாளர்)

மானமிகுவாளர்கள்: பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தின் தலைவர் பொத்தனூர் க.சண் முகம், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), க.செல்வராஜ் (திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர்), வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலா ளர், திராவிடர் கழகம்), இரா.குண சேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), த.சண்முகம் (அமைப்புச் செயலாளர்), மு.ரவி (மாவட்டச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி), செ.முத்துக் கண்ணன் (மாவட்டச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), இல.அங்ககுமார் (பெரியார் இயக் கங்களின் கூட்டமைப்பு), சு.துரை சாமி (பெரியார் இயக்கங்களின் கூட்டமைப்பு), ஊமை.ஜெயராமன் (அமைப்புச் செயலாளர்), ச.இன்பக் கனி (துணை பொதுச்செயலாளர்), வே.செல்வம் (அமைப்புச் செயலா ளர்), பழனி பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்), பி.கே.ஆர்.கவுதமன் (தலைவர், பெரியார் மருத்துவக் கழகம்), ஆ.பாண்டியன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்), இரா.கருணாகரன் (கோவை மண்டலத் தலைவர்), மா.சந்திரசேகரன் (கோவை மண் டல செயலாளர்), சு.வேலுச்சாமி (மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர்), மு.வேணுகோபால் (நீலமலை மாவட்டத் தலைவர்), ச.சிற்றரசு (கோவை மாவட்டத் தலைவர்), க.கிருஷ்ணன் (தாராபுரம் மாவட்டத் தலைவர்), மு.நாகேந் திரன் (நீலமலை மாவட்டச் செய லாளர்), க.சண்முகம் (தாராபுரம் மாவட்டச் செயலாளர்), அரங்க.வெள்ளியங்கிரி (மேட்டுப்பாளை யம் மாநகரச் செயலாளர்), பா.மா.கருணாகரன் (திருப்பூர் மாநக ரச் செயலாளர்)

நன்றியுரை: இல.பாலகிருஷ்ணன் (திருப்பூர் மாநகரத் தலைவர்)

துரைசாமி (திருப்பூர் பகுத்தறி வாளர் கழக பொறுப்பாளர், ஓய்வு பெற்ற ஆசிரியர்), தகடூர் தமிழ்ச் செல்வி (மாநில மகளிரணி செய லாளர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்)

நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு: வன்னிப்பட்டு தமிழ்ச்செல்வம், டி.கே.டி.நாகராஜன் (திமுக மாநகர செயலாளர்)

விடுதலை ஆசிரியரிடம் விடு தலை சந்தா வழங்கியோர்

கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர்), பொத்தனூர் க.சண்முகம் (பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவர்), வீ.அன்பு ராஜ் (பொதுச் செயலாளர்), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப் பாளர்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), த.சண்முகம் (அமைப் புச் செயலாளர்), ஊமை.ஜெய ராமன் (அமைப்புச் செயலாளர்), பழனி பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்) பொறியாளர் ச.இன் பக்கனி (துணை பொதுச்செயலா ளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), த.சீ.இளந் திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), இரா.செந்தூரப் பாண்டியன் (மாணவர் கழக அமைப்பாளர்) மற்றும் கோவை மண்டல மாவட்ட பொறுப்பாளர் கள் அனைவரும் சேர்ந்து விடுதலை  சந்தாக்களை விடுதலை ஆசிரியர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் களிடம் பலத்த கர ஒலிக்கிடையே வழங்கினர்.


திருப்பூரில் நடைபெற்ற கொள்கைத் திருவிழா

மேற்கு ஆப்பிரிக்கா கானா நாட்டில் இயங்கிவரும் பெரியார் ஆப்பிரிக்கன் ஃபவுண்டேஷன் நிறுவனர் தலைவர் கே.சி. எழிலரசன் தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் திரட்டப்பட்ட 200 விடுதலை சந்தாக்களை தமிழர் தலைவரிடம் வழங்கினார்கள்.

திருப்பூர் எம்.பி. கே. சுப்பராயன் 'விடுதலை' ஓர் ஆண்டு சந்தா மற்றும் புத்தகத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

'விடுதலை' சந்தா வழங்கு விழா, திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே. சுப்பராயன் எம்.பி. அவர்களுக்குப் பாராட்டு விழா ஆகிய இரு விழாக்களும் திருப்பூர் இராயபுரத்தில் நேற்று (9.1.2020) வெகு சிறப்புடன், நேர்த்தியுடன் விழாக் கோலமாக நடைபெற்றன.

கூட்டம் நடக்கும் இராயபுரம் பகுதியில் கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. மாலை 5 மணிக்கே 'மந்திரமா? தந்திரமா?' நிகழ்ச்சியை புரபசர் ஈட்டி கணேசன் நடத்தத் தொடங்கினார். தொடக்கத்தில் கொஞ்சம் பேர்தான் கூடியிருந்தனர். அவர் நிகழ்ச்சிகளைத்தொடங்கிய பத்து நிமிடங் களிலேயே ஏராளமான மக்கள் கூடி விட்டனர். இளைஞர்கள், சிறுவர்களை அவரது நிகழ்ச்சி பெரிதும் ஈர்த்தது.

மந்திரம் என்று சொல்லி மக்களை மோசடியாக ஏமாற்றும் கபடவேட தாரிகளின் முகத்திரையைக் கிழிக்கும் நிகழ்ச்சி யாக அது அமைந்திருந்தது.

பார்வையாளர்களாக இருந்த சிறுவர்களையும் மேடைக்கு அழைத்து, அவர்களையும் பங்கேற்கச் செய்து, தந்திர காட்சிகளைச் செய்து காட்டி பொது மக்களைப் பிரமிக்கச் செய்தார்.

இறுதியாக அவற்றை எப்படி தந்திரமாக செய்தேன் என்பதையும்  விளக்கிக் காட்டியபோதுதான் சாயி பாபாக்கள் உள்ளிட்ட 'மந்திரவாதிகள்' என்று கருதப்படுபவர்களின் ஏமாற்றுத்தனத்தைப் பொது மக்கள் புரிந்து கொண்டு பலத்த கரஒலி எழுப்பினர். அவருக்குக் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் பயனாடை அணிவித்துச் சிறப்பு செய்தார்.

சரியாக 6.30 மணிக்கெல்லாம் விழா மேடையில் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. எந்த ஊரிலும் இல்லாத ஒன்றை திருப்பூர் காவல்துறை அரங்கேற்றியது. இரவு 9 மணிக்குள் கூட்டத்தை முடித்து விட வேண்டுமாம். தேர்தல் பிரச்சாரத்துக்குக்கூட இரவு 10 மணி வரை அனுமதிக்கும் காவல்துறை - திருப்பூரில் மட்டும் இந்த வேடிக்கையான ஆணையைப் பிறப்பித்தது ஏன் என்று தெரியவில்லை.

கழகத் தலைவர் கூட்டத்தின் தொடக்கத்தில் சுட்டிக் காட்டியது போல, 'சட்டங்களையும், ஆணைகளையும் மதிக்கக் கூடிய திராவிடர் கழகம் - இந்த விழாவையும் இரவு 9 மணிக்குள் முடிப்போம்' என்று கூறியதற்கிணங்க பல்வேறு நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கி இரவு 9 மணிக்குள் நேர்த்தியாக விழா நிறைவேற்றி முடிக்கப்பட்டது.

'மந்திரமா? தந்திரமா?' நிகழ்ச்சியைத் தொடர்ந்து 30 மணித் துளிகள் தமிழ் மண்ணின் கலாச்சார கலையான பறையிசை நிகழ்ச்சி தூள் கிளப்பியது. அந்தக் கலைஞர் களுக்குக் கழகத் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.

திருப்பூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் யாழ் - ஆறுச்சாமி நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். மாவட்டக் கழகத் தலைவர் இரா. ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். திருப்பூர் மாநகர திராவிடர் கழகத் தலைவர் இல. பாலகிருஷ்ணன் நன்றி கூறினார் (மற்ற விவரம் தனியே காண்க).

நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் மாவட்ட செயலாளர் மு. இரவி சி.பி.எம். மாவட்ட செயலாளர் செ. முத்துக்கண்ணன், பெரியார் இயக்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த இல. அங்ககுமார், ஆசிரியர் துரைசாமி (பகுத்தறி வாளர் கழகம்), திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் முதலி யோரும் உரையாற்றினர்.

- விடுதலை நாளேடு 10 1 20

கல்விச் சுற்றுலாவுக்காக சாதவாகனா பல்கலைக்கழக மாணவர்கள் பெரியார் திடலுக்கு வருகை!

சென்னை, ஜன.10, சாதவாகனா- பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள், தங்கள் பேராசிரியர்களுடன் சென்னை பெரியார் திடலுக்கு கல்விச்சுற்றுலாவாக வருகை தந்து சுற்றிப்பார்த்தனர்.

தெலங்கானா கரீம்நகரில் உள்ள, சாதவாகனா பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பயிலும் 19 இருபால் மாணவர்கள் சென்னை பெரியார் திடலுக்கு பேராசிரியர்கள் யஸ்வந்த் ராவ், சூரப்பள்ளி சுஜாதா ஆகியோருடன் 8.1.2020 அன்று பிற்பகல் 2:45 மணிக்கு வருகை தந்தனர். தங்களின் வாகனத்திலிருந்து இறங் கியதுமே அவர்கள் கழகப் பொருளார் வீ.குமரேசன் அவர்களை எதிர்கொள்ளவேண்டி வந்தது. அவரோடு தங்களை உற்சாகத்துடன் அறிமுகப் படுத்திக் கொண்டனர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு பெரியார் வலைக்காட்சியின் பொறுப்பாளர் உடுமலை வடிவேல்  பெரியார் திடலைச் சுற்றிக்காட்டினார்.

பேராசிரியர் சூரப்பள்ளி சுஜாதா மாணவர் களுக்கு பெரியார் நினைவிடத்திலுள்ள கல்வெட்டுகள் ஒவ்வொன்றிலிருக்கும் ஆங்கில வாசகங்களைப் படித்து, அதை தெலுங்கில் மாணவர்களுக்கு மொழிபெயர்த்துக் கூறினார். ஒவ்வொரு மொழிபெயர்ப்புக்கும் மாணவர்கள் உணர்ச்சியுடன் கைதட்டினர். தொடர்ந்து பெரியார் காட்சியகத்தையும் சுற்றிப்பார்த்தனர்.

பெரியார் திடலிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு புறப்படும்போது, மெரினா கடற்கரையிலுள்ள திராவிடர் இயக்கத்தின் தலைவர்களின் நினைவிடங்களையும் பார்வையிட்டபின் இரவே தெலங்கானா திரும்பத் திட்டமிட்டுள்ளதாக பேராசிரியர் சூரப்பள்ளி சுஜாதா குறிப்பிட்டார்.

- விடுதலை நாளேடு 10 1 20

முஸ்லிம்களுக்குக் குடியுரிமை மறுப்பு: அன்று கோல்வால்கர் எழுதியதை இன்று மோடி செய்கிறார்

திருப்பூர் விழாவில் தமிழர் தலைவர் உரை வீச்சு

தொகுப்பு: மின்சாரம்

திருப்பூர், ஜன.10 சிறுபான்மையினர் குடியுரிமையும் இன்றி வாழத் தயாராகவேண்டும் என்று அன்று ஆர்.எஸ்.எஸ். குருநாதர் கோல்வால்கர் சொன் னார்; அதனைத்தான் அவர் வழிவந்த மோடி தலை மையிலான ஆட்சி செய்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (9.1.2020) திருப்பூரில் நடைபெற்ற ‘விடுதலை' சந்தா வழங்கும் விழா - இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்பராயன் அவர்களுக்குப் பாராட்டு விழாவில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

 

தோழர் சுப்பராயன் அவர்கள் குறைந்த நேரத் தில் பேசினாலும், அவருடைய பேச்சு மிகவும் சிறப்பானது- அவருடைய பேச்சோடுகூட இந்த நிகழ்ச்சியைக்கூட முடித்துவிடலாம் என்று கருதுகி றேன். அந்த அளவுக்குச் சுருக்கமான சிறப்பான உரை அது.

தேனீக்களாக உழைத்த

தோழர்களுக்குப் பாராட்டு

இந்த நிகழ்ச்சியில் கழகத் தோழர்கள் தேனீக் களாக சுற்றித் திரிந்து சந்தாக்களை சேர்த்து அளித் துள்ளீர்கள். அவர்களுக்கெல்லாம் பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘விடுதலை' என்பது ஒரு கொள்கை ஏடு. ஒரு கொள்கை ஏட்டை 85 ஆண்டுகாலம் நடத்துவது என்பது சாதாரணமானதல்ல. ‘ஜனசக்தி'யை நாளேடாக நடத்த முடியவில்லை; ‘தீக்கதிர்‘ தாக் குப் பிடித்துக்கொண்டு இருக்கிறது; ‘முரசொலி' நடக்கிறது.

நாம் சினிமா செய்திகளைப் போடுவதில்லை. ராசி பலன் போட்டால் காசு பலன் கிடைக்கும்; அதை நாம் செய்ய முடியாது.

‘விடுதலை' வெறும் காகிதமல்ல - ஆயுதம்!

இது வெறும் காகிதமல்ல - கொள்கை ஆயுதம்!

தாமதமாகத்தான் பெரியாரைப் புரிந்துகொண் டோம் என்று ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை தோழர் சுப்பராயன் இங்கே கொடுத்தார். தாமதமானாலும் சரியாகப் புரிந்துகொள்வதுதான் முக்கியமானதாகும் (பலத்த கரவொலி).

திருப்பூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் அவர்களுக்கு கழகத் தலைவர் பயனாடை அணிவித்து கழக நூல்களை வழங்கினார். திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.செல்வராஜ் அவர்களுக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்து மகிழ்ந்தார்.

வாக்காளர்களுக்கும் பாராட்டுகள்!

இந்தப் பாராட்டு விழா தோழர் சுப்பராயனுக்கு மட்டுமல்ல; எவ்வளவு அதிகார பலம், ஆட்சி பலம், பண பலம், பத்திரிகைப் பலம் இவற்றையெல்லாம் கடந்து மக்கள் வாக்களித்துள்ளார்களே, அந்த வாக் காளர்களுக்கும், பொது மக்களுக்கும் சேர்த்துதான் இந்தப் பாராட்டு.

அன்று கோல்வால்கர் சொன்னதுதான்!

மேலும் ‘நீட்' தேர்வால் ஏற்பட்டுள்ள அநீதிகள் குறித்தும், மத்திய அரசின் முடிவுகளுக்கெல்லாம் தாளம் போடும் தமிழக அரசு குறித்தும் விரிவாகப் பேசினார் கழகத் தலைவர்.

இன்றைக்குக் குடியுரிமை தொடர்பான சட்டங் களை மத்திய பி.ஜே.பி. அரசு நிறைவேற்றியுள்ளது. ஆர்.எஸ்.எஸின் குருநாதரான கோல்வால்கர் - We or Our Nationhood Defined எனும் நூலில் சிறுபான்மையினர் குடியுரிமையின்றியும் வாழ வேண்டும் என்று எழுதினாரே - அதனுடைய தொடர்ச்சிதான் என்றும் ஆதாரத்தோடு குறிப் பிட்டார்.

(முழு உரை பின்னர்)

 - விடுதலை நாளேடு 10 1 20