கலைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 ஜூன், 2024

கழகத் தலைவரின் ‘‘கலைஞர் நூற்றாண்டு’’ நிறைவு நாள் அறிக்கை



Published June 2, 2024, விடுதலை நாளேடு

கொள்கையில் சமரசமற்ற போராளி கலைஞரால்
தமிழ்நாடு இந்தியாவிற்கே கலங்கரை விளக்கமாக ஒளிர்கிறது!
திராவிடத்தின் தேவையைத் திக்கெட்டும் பரப்புவோம்!

சமரசமற்ற கொள்கைப் போராளியான முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு நாளில், திராவிடத்தின் தேவையைத் திக்கெட்டும் பரப்புவோம் என்ற உறுதி எடுப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், முத்தமிழறிஞர் மானமிகு கலைஞரின் நூற்றாண்டு நிறைவு நாள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னை ஒரு வரியில் சுய விமர்சனம் செய்த ஓய்வற்ற உழைப்பின் ஒப்பற்ற தலைவர் பல்கலைக் கொள்கலனான நூற்றாண்டு நிறைவு விழா நாயகர் கலைஞரின் 101 ஆம் ஆண்டு பிறந்த நாள் (3.6.2024).
‘(திருக்)குவளை’யில் பிறந்து குவலயத்தையே தனது புகழ் எல்லையாக்கிக் கொண்ட – எதிர்நீச்சல் போராளியாக – உடலால் மறைந்த பிறகும்கூட, இட ஒதுக்கீட்டுக்காக (தனது உடலை அடக்கம் செய்யும் இடத்துக்காக) நீதிமன்றத்தில் போராடி வென்று, அண்ணாவுக்குப் பக்கத்தில் இடம்பிடித்த அவரது பெருமை வியக்கத்தக்கது!
அவர்தான் அண்ணாவின் ஆட்சியை, அய்யா வழியில் நடத்தி, அகிலமே கவனித்து, பாராட்டும் வகையில், அரசினை நடத்தியதும், அவரது சாதனைகளால் பலன் பெறாத குடும்பங்களே தமிழ்நாட்டில் இருக்காது என்பதும் மறுக்க முடியாத உண்மை!

மானமிகு கலைஞரின் சமூகநீதி – சுயமரியாதை – சமத்துவம் – பகுத்தறிவுக் கோட்பாடுகள்!
சமூகநீதி – சுயமரியாதை – சமத்துவம் – பகுத்தறிவு இவையெல்லாம் அவர் தந்தை பெரியார் என்ற நம் அறிவு ஆசானிடமும் – அவர்தம் தலைமகன் அறிஞர் அண்ணாவிடமும், ‘‘ஈரோட்டுக் குருகுலவாசத்திலும்’’ கற்றுக்கொண்டவர் என்பதால், எந்த எதிர்ப்பையும் துச்சமென எண்ணி, துணிவாற்றி, இன்பம் பயக்கும் வினையின்மூலம் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி யினர், சிறுபான்மையினர், மக்கள் தொகையின் சரி பகுதியான மகளிர் – இவர்களுக்கு, புது வாழ்வு அளித்த புரட்சியாளர் ஆவார்!
தந்தை பெரியார் தொலைநோக்கோடு, அறிஞர் அண்ணா வுக்குப் பின் முதலமைச்சராக மானமிகு கலைஞர்தான் பொறுப்பேற்கவேண்டும் என்று அவருக்கு அன்புக் கட்டளையிட்டதே ஓர் அரிய எடுத்துக்காட்டு!
பிறகு திணிக்கப்பட்ட நெருக்கடி காலத்தின் அடக்குமுறை – இயக்கத்தின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததோ என்று பலரும் கணித்து, அஞ்சிய நேரத்தில், அவரது தலைமைதான் – அவரது ஆட்சியை ஒருமுறை, இருமுறை திட்டமிட்டே இழக்கச் செய்து, கழக முக்கிய பொறுப்பாளர்களையும் கைது செய்து, காராக்கிரகத்தில் அடைத்ததோடு, ஏடுகளில் தணிக்கை என்ற கருத்து சுதந்திரத்திற்கும் கல்லறை கட்ட நினைத்த கோரத்தாண்டவத்தை, அவரது துணிச்சல்தான் வென்று காட்டியது.

சமரசமற்ற அரசியல் நிலைப்பாடு!
சமரசமற்ற அவரது அன்றைய அரசியல் நிலைப்பாடும் – கொள்கைவயப்பட்ட கோணல் இல்லாப் பயணமுமே அதனைத் தக்க வகையில் எதிர்கொண்டது; வென்று நின்றது!
“மற்றொரு பகுதியை என் தம்பி கருணாநிதி எழுதுவார்” என்று கூர்த்த மதியோடு அண்ணா சொன்னதும் உண்மை யாயிற்று!
சாதனை சரித்திர நாயகராக, காலத்தை வென்று கடமையாற்றிய கலைஞரின் புகழ் என்றும் குன்றின்மேல் ஒளிவிளக்காக ஓங்கிப் பிரகாசிக்கிறது!

திராவிடத்தின் தேவையும் – பயணமும்!
அவர் ‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை’ என்பதற்கேற்ப, சாதனையாளராக, இன்றைய ஆளுமைமிக்க அடக்கம் நிறை முதலமைச்சராக மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற உழைப்பின் ஊற்றை அடையாளம் காட்டிச் சென்றதால், தமிழ்நாடு இந்தியாவிற்குக் கற்றிடமாகி – கலங்கரை வெளிச்சமாக – வழிகாட்டுகிறது!
எனவே, திராவிடத்தின் தேவையையும், புகழையும் திக்கெட்டும் பரப்பிட உறுதி ஏற்போம்!
பயணங்கள் தொடரட்டும்!
பயன்கள் குவியட்டும்!

சென்னை தலைவர்,
2.6.2024 திராவிடர் கழகம்

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட தலைவர் கலைஞர் - உருவப்படத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்து பெருமிதம்

 

சென்னைஆக. 3- இந்த நாள் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள்சமூக சீர்த்திருத் தங்களுக்கு வித்திட்ட தலைவர் கலைஞர் என அவரது உருவப்படத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் திறந்து வைத்து பெருமிதம் கொண்டார் இந்திய குடியரசுத் தலைவர் மாண்புமிகு திருராம்நாத் கோவிந்த் அவர்கள்

 சென்னை மாகாணமாக முன்பு தமிழ்நாடு இருந்தபோதுமுதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை 1921-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதுஅந்த வகையில்,தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இது நூற்றாண்டு விழாவாகும்இந்த விழாவுடன் தமிழ்நாடு முதல் அமைச்சராக 5 முறையும்சட்டமன்ற உறுப்பினராக 13 முறையும் இருந்த மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமழ் அறிஞர் கலைஞரின் உருவப்படம் திறப்பு விழாவையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கான கோலாகல விழாசென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூட்ட அரங்கத்தில் நேற்று (2.8.2021) மாலை 5 மணிக்கு நடைபெற்றதுவிழாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார்முதலமைச்சர்மு..ஸ்டாலின் முன்னிலை வகித் தார்தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார்.

அதைத்தொடர்ந்து மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்புரை ஆற்றினார்அப்போது அவர் பேசியதாவது:-

இன்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கலைஞர் அவர்களின் உருவப் படத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடை கிறேன்உண்மையில் இது ஒரு முக்கியத்துவம் மிக்க நாள்முன்னர்மெட்ராஸ் சட்டமன்ற கவுன்சில் என்று பெயரிடப்பட்டிருந்த அவை யின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

ஆகஸ்டு மாதம் என்பது நமது தேசிய நாள்காட்டியில் சிறந்ததொரு மாதமாகும்ஏனெனில்இது நமது சுதந்திர தினத்தின் ஆண்டு நிறைவையும் குறிக்கிறதுவிடுதலைக்கு பிறகான ஆண்டுகளில்தேசம் பல துறைகளில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதுமக்களும்தலைவர்களும் இணைந்து மேற்கொண்ட பணிகளினால் இது சாத்தியமானது.

மெட்ராஸ் சட்டமன்ற கவுன்சிலின் வரலாறு, 1861-ஆம் ஆண்டு காலத்தையது என்பதை நீங்கள் அறிவீர்கள்ஆலோசனை அமைப்பாக அக்காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு தான், 1921-ஆம் ஆண்டில்சட்டத்தை இயற்றும் சட்டப்பேரவையாக உருவாக்கப்பட்டதுகால னித்துவ ஆட்சியின் கீழ்அத்தகைய அமைப்பு செயல்படுவதற்குபல வரையறைகளும்சவால்களும் நிச்சயம் இருந்தன.

மக்களின் நீதிக்கட்சி

தமிழ்நாடுகேரளாகருநாடகாஆந்திரப் பிரதேசம்தெலங்கானாஒடிசாலட்சத்தீவு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மெட்ராஸ் பிரசிடென்சியின் மக்களால் இந்த புதிய தொடக்கம் வரவேற்கப்பட்டதுவிடுதலை போராட்ட இயக்கத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்களின் கனவுகளும்விருப்பங்களும் புதிய சட்டமன்றம் மூலம் வெளிப்பட முடிந்ததுமக்கள் தங்கள் கனவுகளை நனவாக்கும் ஒரு தளமாகஆரம்ப கட்டத்தில் மக்கள் வாக்குகளை வென்ற நீதிக்கட்சி இருந்ததுசட்டமன்ற கவுன்சில்பின்வரவிருக்கும் காலத்திற்கான பல சட்டங்களை இயற்றியது.

மெட்ராஸ் சட்டமன்றம்ஒரு முழுமையான பிரதிநிதித்துவ ஜனநாயக வடிவ ஆட்சியாளு மைக்கான விதைகளை விதைத்ததுநாட்டு விடு தலைக்கு பிறகு இதற்கான பலன்கள் கிடைத்தன.

தேவதாசி முறையை ஒழித்தல்

ஆளுகையில் கவனம் செலுத்தி ஏழைகளை மேம்படுத்துவதற்கும்சமூகத் தீமைகளை ஒழிப்பதற்கும் ஜனநாயகத்தின் வேர்களை ஊன்றி வளரச் செய்த பெருமை இந்த சட்டமன்றத்திற்கு உண்டுதேவதாசி முறையை ஒழித்தல்கைம்பெண் மறுமணம்பள்ளிகளில் மதிய உணவுநிலமற்றவர்களுக்கு விவசாய நிலம் வினியோகம் ஆகியவை சமூகத்தை மாற்றியமைத்த சில புரட்சிகர எண்ணங்களாகும்.

இங்கு யார் ஆட்சி செய்தாலும் மாநிலத்தின் நலன் என்ற கருத்தாக்கமே இந்த சட்டமன்றத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளதுதமிழ்நாட்டு மக்களின் முற்போக்கு சிந்தனையை எடுத்துக் காட்டுகின்ற வகையில்மிகச்சிறந்த தமிழ்க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் ஒரு சில வரிகளை இங்கே நான் மேற்கோள் காட்ட விரும் புகிறேன். “மந்திரம் கற்போம்வினைத்தந்திரம் கற்போம்வானை அளப்போம்கடல் மீனை யளப்போம்சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம்சந்திதெரு பெருக்கும் சாத்திரம் கற்போம்“.

நிலவின் இயல்புகள்

இதை இவ்வாறு விளக்கலாம்வேதம்அறிவியல் இரண்டையும் கற்றுக்கொள்வோம்நாம் வானத்தையும்பெருங்கடல் களையும் ஆராய்வோம்நிலவின் இயல்புகள் என்ன வென்று நாம் தெரிந்து கொள்வோம்நமது தெருக் களைத் தூய்மையாக்குவது குறித்தும் அறிந்து கொள்வோம்.

மண்ணின் மிகச்சிறந்த தலைமைகளை சட்டமன்றத் தில் பெருமைப்படுத்தும் பாரம் பரியம் உள்ளது என்பதை அறிவது உண்மையில் மகிழ்ச் சியளிக்கிறதுதிருவள்ளுவர்காந்தியார்சி.ராஜகோபாலாச் சாரிசி.என்.அண்ணாதுரைகே.காமராஜ்.வி.ராமசாமிபி.ஆர்.அம்பேத்கர்முத்துராம லிங்கத் தேவர்முகமது இஸ்மாயில் சாஹிப்எம்.ஜி.ராமச் சந்திரன்ஜெ.ஜெயலலிதாஎஸ்.எஸ்.ராமசாமி..சிதம்பரனார்பி.சுப்ப ராயன் மற்றும் ஓமந்தூர் பி.ராமசாமி போன்ற பல தலைவர்களின் படங்கள் இப்பேரவையில் ஏற்கெனவே உள்ளன.

மக்கள் நலனுக்காக கலைஞர்

இப்போது இந்த புகழ்பெற்ற மண்டபத்தில் தம்முடைய வாழ்நாள் முழுவதையும் மாநிலத் தின் மக்கள் நலனுக்காக அர்ப்பணித்த கலைஞர் அவர்களது உருவப்படமும் இருக்கும்நான் இங்கு வந்தபோதுகாந்தியடிகளின் மனசாட்சிக் காவலராக திகழ்ந்தவரும்சுதந்திர போராட்ட வீரர்களில் சிறந்த தலைவருமான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்குடியரசுத் தலைவர் மாளிகையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் அவர்அவருடைய வருகை இந்த மதிப்பிற்குரிய அரங்கினையும் அலங்கரித்ததுஅவர் சென்னை மாநிலத்தின் முதல் பிரதமர் அல்லது முதல மைச்சர் ஆவார்அவருக்கு பின் வந்தவர்களும்முன்மாதிரியாக திகழ்ந்த அரசியல் தலைவர்கள்.

இருப்பினும்ராஜாஜிக்குப் பின் வந்தவர் களில்கலைஞர் தான் நீண்ட காலம் ஆட்சி செய்தார்இதனால் தமிழ்நாட்டில் ஒரு தனி முத்திரை பதித்துச் சென்றார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்காக...

இந்தியாவிடுதலைக்காக போராடிக் கொண்டிருந்தபோதுகலைஞர் தனது இளமைப் பருவத்திலேயேதனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்அவர் சமீபத்தில் தான் நம்மை விட்டுப்பிரிந்தார்உயர்ந்த லட்சியங்களுடன் கூடிய சிறுவனாக இருந்தபோதுதாழ்த்தப்பட்டவர்களுக்காகஏழைஎளிய மக்களுக்காக அவர் பணியாற்றத் தொடங்கியபோதுநீண்டகாலமாக வெளி நாட்டு ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாஅன்னிய ஆட்சியாளர்களால் சுரண்டப்பட்டு வறுமையிலும்கல்வியறிவின்மையாலும் சிக்கலில் இருந்தது.

அவர் தமது இறுதி மூச்சின்போதுஇந்த மண்ணும்இதன் மக்களும் அனைத்து துறை களிலும் வியக்கத்தக்க முன்னேற்றத்தையும்வளர்ச்சியையும் அடைந்துள்ளதாக திருப்தி அடைந்திருக்க வேண்டும்தமது நீண்ட காலஆக்கபூர்வமான வாழ்க்கையில் தாம் விழித் திருக்கும் ஒவ்வொரு கணத்தையும் மாநில மக்களின் சேவைக்காகவும்தேசத்தின் சேவைக் காகவும் செலவிட்டோம் என்பதும் அவருக்கு திருப்தியளித்திருக்கும்.

செம்மொழிக்காக...

தமிழ் இலக்கியம் மற்றும் சினிமாவுக்கு அவர் அளித்த பங்களிப்புகள் பற்றி நான் என்ன சொல்ல முடியும்?. எனக்கு தெரிந்த விஷயம் என்னவென்றால்மொழி மீது ஆர்வம் கொண்ட அரசியல் தலைவர்கள் வெகு குறைவுஅவரைப் பொறுத்தவரைஅவரது தாய்மொழி வழிபாட்டுக்குரியதுதமிழ்நிச்சயமாகமனிதகுலத்தின் மிகச்சிறந்தமிகப் பழைமையான மொழிகளுள் ஒன்றாகும்உலகம் முழுமையும் அதன் வளமான பாரம் பரியத்தில் பெருமை கொள்கிறதுஆனால்அது செம்மொழியாக அதிகாரபூர்வ அங்கீகாரம் பெறுவதை உறுதி செய்தவர் கலைஞர்.

தனிச்சிறப்பு வாய்ந்த தலைவர்

கலைஞர் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு தலை வராக திகழ்ந்தார்நமது தேசிய இயக்கத்தின் தலைவர்களுடன் நமக்கு இருந்த கடைசி இணைப்புகளில் அவரும் ஒருவர்விடுதலை பெற்று 75-ஆவது ஆண்டு நிறைவை நாடு கொண்டாடும்போதுஇத்தகைய தலைவர்கள் குறித்தே எனது எண்ணங்கள் செல்கின்றன. .

அவர்கள் தாய்நாட்டின் மீது கொண்ட மதிப்பிலும்மரியாதையிலும் ஒன்றுபட்டிருந் தனர்ஒவ்வொருவரும் அவரவர் வழியில்இந்திய தாய்த்திரு நாட்டிற்கு சேவை செய்ய பாடுபட்டனர்ஒரு ஆற்றில் வெவ்வேறு கிளை நதிகள் ஒன்றிணைவது போலஅவர்கள் அனை வரும் நாட்டு விடுதலைக்காக ஒன்றி ணைந்தனர்.

அவர்கள் அனைவரும் காந்தியிடம் ஒரு சங்கமத்தைக் கண்டனர்காந்தியார் நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் சிறந்தவைகள் அனைத்தின் ஆளுமையாகவும் திகழ்ந்தார்.

டாக்டர் அம்பேத்கர்

டாக்டர் அம்பேத்கரைப் பற்றி சிந்தியுங்கள்எத்துணை உயர்ந்த மேதைஎத்தகைய தொலைநோக்குஆனால் வரலாற்றுப் புத்தகங் களில் எழுதப்பட்ட ஒவ்வொரு பெயருடனும்எண்ணற்ற மற்றவர்கள் பெயர்கள் பதிவு செய்யப்படவில்லைஅவர்கள் ஒரு சுதந்திர நாட்டில் வாழ்வதற்காக தங்கள் வசதிகளைதொழில்களைசில சமயங்களில் தங்கள் உயிரையே தியாகம் செய்தனர்.

நிகழ்காலத்தையும்எதிர்கால முன்னேற்றத் தையும் புரிந்துகொள்ளகடந்த காலத்துடன் தொடர்ந்து ஈடுபடுமாறு நான் இளைஞர்களைக் கேட்டுக்கொள்கிறேன்காந்தியார்சுப்பிரமணிய பாரதி மற்றும் பிறரின் வாழ்க்கையில்உங்கள் மனதில் எழும் கேள்விகளுக்கான பதில்களைக் காண்பீர்கள்நமது சமீபத்திய வரலாற்றில் இளம் தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுவதை நான் காண்கிறேன்தெரிந்த மற்றும் தெரியாத விடுதலை போராட்ட வீரர்களுடன் தொடங்கிய பணிகள் தொடரும் என்ற நம்பிக்கையை அவர்கள் எனக்கு அளிக்கிறார்கள்இந்த நூற் றாண்டில் இந்தியா தனது ஞானத்தால் உலகிற்கு வழி காட்டும்இவ்வாறு அவர் பேசினார்.

அதன் பின்னர் பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி நன்றியுரை ஆற்றினார்மாலை 6 மணிக்கு விழா இனிதே நிறைவடைந்ததுவிழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜிஅமைச்சர்கள்எம்.பி., எம்.எல்..க்கள்பல்வேறு கட்சி தலைவர்கள்சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை மண்டபத்தில் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் படம் திறப்பு

 

 

மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் நேற்று (2.8.2021) தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டுசட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மேனாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் படத்தைத் திறந்து வைத்தார்இவ்விழாவில்மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின்,  பேரவைத் தலைவர் மு.அப்பாவுபேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிதிராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணிஅமைச்சர் பெருமக்கள்நாடாளுமன்றமற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்கட்சித் தலைவர்கள்முக்கிய பிரமுகர்கள்தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர்  அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

கலைஞர் நினைவுநாள் சிந்தனைகள் (1924-2018) (சாதனை)

 


கலைஞர் எழுதிய புதினங்கள்

1. வெள்ளிக்கிழமை (இரண்டாம் பதிப்பு) 1968

2. சுருளிமலை (அய்ந்தாம் பதிப்பு) 1968

3. வான்கோழி 1978

4. புதையல் 1975

5. ஒரே ரத்தம் 1980

6. ஒரு மரம் பூத்தது

7. அரும்பு (குறும் புதினம்) 1983

8. பெரிய இடத்துப் பெண் (குறும் புதினம்)

9. சாரப்பள்ளம் சாமுண்டி (குறும் புதினம்)

10. நடுத்தெரு நாராயணி (குறும் புதினம்) 1953

வரலாற்று புதினங்கள்

1. பலிபீடம் நோக்கி 1947

2. ரோமாபுரிப் பாண்டியன் 1974

3. பொன்னர் - சங்கர் அண்ணன்மார் வரலாறு 1988

4. பாயும் புலி பண்டாரக வன்னியன் 1991

5. தென்பாண்டிச் சிங்கம் 1983

6. தாய் - காவியம்

உரை ஓவியங்கள்

1. குறளோவியம் (குறுநூல்) 1956

2. குறளோவியம் (முதல் பதிப்பு) 1985

3. தேனலைகள் மூன்றாம் பதிப்பு 1982

4. சங்கத் தமிழ் (கவிதை நடை விளக்கம்)

(முதல் பதிப்பு) 1987

5. திருக்குறள் கலைஞர் உரை

(முதல் பதிப்பு) 1996

6. தொல்காப்பியப் பூங்கா 2003

கடிதங்கள்

1. கலைஞர் கடிதம் தொகுதி -1 1986

2. கலைஞர் கடிதம் தொகுதி -2 1986

3. கலைஞர் கடிதம் தொகுதி -3 1986

4. கலைஞர் கடிதம் தொகுதி -4 1986

5. கலைஞர் கடிதம் தொகுதி -5 1986

6. கலைஞர் கடிதம் தொகுதி -6 1986

7. கலைஞர் கடிதம் தொகுதி -7 1986

8. கலைஞர் கடிதம் தொகுதி -8 1986

9. கலைஞர் கடிதம் தொகுதி -9 1986

10. கலைஞர் கடிதம் தொகுதி -10 1986

11. கலைஞர் கடிதம் தொகுதி -11 1996

12. கலைஞர் கடிதம் தொகுதி -12 1996

13. கலைஞர் கடிதங்கள் ( முழுவதும் ) அச்சில்

கவிதைகள்

1. கவிதையல்ல 1945

2. முத்தாரம்

(சிறையில் எழுதிய

கவி வசனங்களின் தொகுப்பு)

3. அண்ணா கவியரங்கம் 1968

4.  Pearls (Translation) 1970

5. கவியரங்கில் கலைஞர் 1971

6. கலைஞரின் கவிதைகள் 1977

7.வாழ்வெனும் பாதையில்,

கவியரங்கக் கவிதை

8. கலைஞரின் திரை இசைப்பாடல்கள் 1989

9. கலைஞரின் கவிதை மழை 2004

கட்டுரை நூல்கள்

1. உணர்ச்சி மாலை 1951

2. பெருமூச்சு 1952

3. விடுதலைக்கிளர்ச்சி

(இரண்டாம் பதிப்பு) 1952

4. களத்தில் கருணாநிதி 1952

5. பேசும் கலை வளர்ப்போம் 1981

6. பூந்தோட்டமும் - இனமுழக்கமும் 1986

7. யாரால்யாரால்யாரால்?

(முதல் பதிப்பு) 1981

8. மலரும் நினைவுகள் 1996

9. இலங்கைத் தமிழாஇது கேளாய்! 1981

10. திராவிடசம்பத்து 1951

11. தலைதாழாச் சிங்கம் தந்தை பெரியார் 1985

12. உரிமையின் குரலும் - உண்மையின் தெளிவும்

13. இருளும் ஒளியும்

14. சரித்திரத் திருப்பம்

15. உண்மைகளின் வெளிச்சத்தில் 1983

16. மயிலிறகு 1993

17. அகிம்சா மூர்த்திகள் 1953

18. அல்லி தர்பார் 1953

19. இன முழக்கம்

20. உணர்ச்சி மாலை

21. கருணாநிதியின் வர்ணனைகள் 1952

22. சுழல் விளக்கு 1952

23. துடிக்கும் இளமை

24. நாடும் நாடகமும் 1953

25. விடுதலைக் கிளர்ச்சி 1952

சிறுகதைகள்

1. சங்கிலிச் சாமியார் 1945

2. கிழவன் கனவு 1948

3. பிள்ளையோ பிள்ளை 1948

4. தப்பிவிட்டார்கள் 1952

5. தாய்மை 1956

6. கண்ணடக்கம் 1957

7. நாடும் நாடகமும் 1953

8. முடியாத தொடர்கதை 1982

9. கலைஞரின் சிறுகதைகள்

1977, 1982

10. கலைஞரின் சிறுகதைகள்

(நான்காம் பதிப்பு) 1991

11. 16 - கதையினிலே 1995

12. நளாயினி

13. பழக்கூடை 1979

14. வாழ முடியாதவர்கள்

15. தேனலைகள் 1985

16. ஒருமரம் பூத்ததுசிறுகதைகள், 1979

வரலாறுதன் வரலாறு

1. இனியவை இருபது (முதல் பதிப்பு) 1973

2. இந்தியாவில் ஒரு தீவு 1978

3. ஆறுமாதக் கடுங்காவல் 1985

4. நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)

முதல் பதிப்பு 1975

5. நெஞ்சுக்கு நீதி (இரண்டாம் பாகம்)

முதல் பதிப்பு 1987

6. நெஞ்சுக்கு நீதி (மூன்றாம் பாகம் -

முதல் பதிப்பு) 1997

7. நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்)

முதல் பதிப்பு 2003

8. நெஞ்சுக்கு நீதி (அய்ந்தாம் பாகம்)

முதல் பதிப்பு ஜூன் 2013

9. நெஞ்சுக்கு நீதி (ஆறாம் பாகம்)

முதல் பதிப்பு அக்டோபர் 2013

10. கையில் அள்ளிய கடல்

(பேட்டிகளின் தொகுப்பு) 1998

பொன்மொழிகள் சிந்தனைக் கருத்துகள்

1. சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்கள்

முதல் பதிப்பு) 1978

2. வைரமணிகள் (இரண்டாம் பதிப்பு) 1982

3. கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள் 1996

4. கலைஞரின் நவமணிகள் 1984

5. சிந்தனை ஆழி 1953

6. கலைஞரின் கருத்துரைகள்

(முதல் தொகுப்பு) 1967

7. கலைஞரின் கருத்துரைகள் 1971

8. கலைஞரின் உவமைக் களஞ்சியம் 1978

9. கலைஞரின் சொல்நயம் 1984

10. கலைஞரின் சின்ன சின்ன மலர்கள்

முதல் பதிப்பு 1994

11. கலைஞரின் முத்தமிழ் - சிந்தனைத்துளிகள்

12. கலைஞர் உரையில் கண்டெடுத்த முத்துக்கள்

13. கலைஞரின் உவமை நயங்கள் 1972

நாடக உலகம்

(எழுதியும் நடிக்கவும் பெற்றவை)

1. சாந்தா (பழனியப்பன்

(நான்காம் பதிப்பு) 1943

(நச்சுக்கோப்பை) 1985

2. மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்) 1953

3. மணிமகுடம் (இரண்டாம் பதிப்பு) 1956

4. தூக்கு மேடை 1951

5. உதயசூரியன் (இரண்டாவது பதிப்பு) 1959

6. ஒரே முத்தம் (இரண்டாவது பதிப்பு) 1964

7. திருவாளர் தேசியம்பிள்ளை

(இரண்டாவது பதிப்பு)1967

8. சிலப்பதிகார நாடகக் காப்பியம் 1967

9. பரதாயணம் 1978

10. புனித இராஜ்யம் 1979

11. நான்மணிமாலை (குறு நாடகங்கள்)

12. காகிதப்பூ 1966

13. பரப்பிரம்மம் 1953

14. நானே அறிவாளி 1971

15. அனார்கலி 1967

16. சாக்ரடீஸ் 1967

17. உன்னைத்தான் தம்பி

18. சேரன் செங்குட்டுவன் 1978

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

1.கலைஞரின் சட்டமன்ற உரைகள் - 1

2. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -2

3. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -3

4. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -4

5. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -5

6. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -6

7. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -7

8. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -8

9. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -9

10. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -10

11. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -11

12. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -12

திரையுலக படைப்பில்

கலைஞரின் பங்களிப்பு

1.  ராஜகுமாரி (வசனம்) 11.4.1946

2.  அபிமன்யூ (வசனம்) 6.5.1948

3. மருதநாட்டு இளவரசி

  (கதைவசனம்) 2.4.1950)

4. மந்திரி குமாரி

  (கதைவசனம்பாடல்) 24.6.1950

5. தேவகி(கதைவசனம்) 21.6.1951

6. மணமகள் ( திரைகதைவசனம்) 15.8.1951

7. பராசக்தி

  (திரைக்கதைவசனம்பாடல்) 17.10.1952

8. பணம் (திரைக்கதைவசனம்) 27.12.1952

9. நாம் (கதை வசனம்) 05.03.1953

10. திரும்பிப் பார் (கதைவசனம் ) 10.7.1953

11. மனோகரா (திரைக்கதைவசனம்) 03.3.1954

12. மலைக்கள்ளன்

  (திரைக்கதைவசனம்) 22.7.1954

13. அம்மையப்பன் (கதைவசனம்) 24.9.1954

14. ராஜா ராணி (கதைவசனம்) 25.2.1956

15. ரங்கோன்ராதா

(திரைக்கதைவசனம்பாடல்) 1.11.1956

16. புதையல் ( கதை வசனம்) 16.5.1957

17. புதுமைப்பித்தன் (கதைவசனம்) 2.8.1957

18. குறவஞ்சி (கதைவசனம்பாடல்) 4.3.1960

19. எல்லாரும் இந்நாட்டு மன்னர்

   (வசனம்)1.7.1960

20. அரசிளங்குமரி (கதைவசனம்) 1.1.1961

21. தாயில்லாப் பிள்ளை

   (திரைக்கதைவசனம்) 18.8.1961

22. இருவர் உள்ளம்

(திரைக்கதைவசனம்) 29.3.1963

23. காஞ்சித் தலைவன்

   (கதைவசனம்பாடல்) 26.10.1963

25. பூம்புகார்

   (திரைக்கதைவசனம்பாடல்) 18.9.1964

26. பூமாலை (கதைவசனம்பாடல்)23.10.1965

27. அவன் பித்தனா?

   (திரைக்கதைவசனம்பாடல்)12.8.1966

28. மறக்க முடியுமா

  (திரைக்கதைவசனம்பாடல்) 12.8.1966

29. மணிமகுடம்(கதைவசனம்) 9.12.1966

30. தங்கத்தம்பி (கதைவசனம்) 9.1.1967

31. வாலிப விருந்து (கதைவசனம்) 2.6.1967

32. எங்கள் தங்கம் (கதை) 9.10.1970

33. பிள்ளையோ பிள்ளை

    (கதைவசனம்) 23.6.1972

33. அணையாவிளக்கு (கதை) 15.8.1975

34. வண்டிக்காரன் மகன்

    (திரைக்கதைவசனம்) 30.10.1978

35. நெஞ்சுக்கு நீதி

(கதைவசனம்பாடல்) 27.4.1979

36. ஆடு பாம்பே (கதைவசனம்) 30.6.1979

37. குலக்கொழுந்து (கதைவசனம்) 23.1.1981

38. மாடிவீட்டு ஏழை

    (திரைக்கதைவசனம்)22.8.1981

39. தூக்குமேடை

    (கதைவசனம் பாடல்) 28.5.1982

40. காகித ஓடம்

    (திரைக்கதைவசனம்) 14.1.1986

41. பாலைவன ரோஜாக்கள்

   (திரைக்கதைவசனம்) 1.11.1986

42. நீதிக்குத் தண்டனை 1.5.1987

43. ஒரே ரத்தம்

   (கதைவசனம்பாடல்) 8.5.1987

44 மக்கள் ஆணையிட்டால்

   (திரைக்கதைவசனம்பாடல்) 29.1.1988

45. பாசப்பறவைகள்

   (திரைக்கதைவசனம்) 29.4.1988

46. இது எங்கள் நீதி

    (திரைக்கதைவசனம்பாடல்) 8.11.1988

47. பாடாத தேனீக்கள்

    (திரைக்கதைவசனம்பாடல்) 8.11.1988

48. தென்றல் சுடும்

   (திரைக்கதைவசனம்) 10.3.1989

49 பொறுத்தது போதும்

    (திரைக்கதைவசனம்) 15.7.1989

50. நியாயத் தராசு

    (திரைக்கதைவசனம்) 11.8.1989

51. பாசமழை (கதைவசனம்) 28.10.1989

52. காவலுக்குக் கெட்டிக்காரன்

   (திரைக்கதைவசனம்) 14.1.1990

53 . மதுரை மீனாட்சி

    (திரைக்கதைவசனம்பாடல்) 24.2.1993

54. புதிய பராசக்தி

   (திரைக்கதைவசனம்) 23.3.1996

55. மண்ணின் மைந்தன்

   (திரைக்கதைவசனம்) 4.3.2005

56 பாசக்கிளிகள்

   (திரைக்கதைவசனம்) 14.1.2006

57. உளியின் ஓசை

   (திரைக்கதைவசனம்) 4.7.2008

58. பெண்சிங்கம்

   (திரைக்கதைவசனம்) 3.6.2010

59. இளைஞன்

   (திரைக்கதைவசனம்)14.1.2011

60. பொன்னர் சங்கர்

   (திரைக்கதைவசனம்) 9.4.2011

பாடல்கள் இடம்பெற்ற படங்கள்

1950 - மந்திரி குமாரி

1952 - பராசக்தி

1953 - நாம்

1954 - அம்மையப்பன்

1956 - ராஜா ராணி

1956 - ரங்கோன் ராதா

1960 - குறவஞ்சி

1963 - காஞ்சித்தலைவன்

1964 - பூம்புகார்

1965 - பூமாலை

1966 - மறக்க முடியுமா ?

1979 - நெஞ்சுக்கு நீதி

1982 - தூக்கு மேடை

1987 - வீரன் வேலுத்தம்பி

1987 - ஒரே ரத்தம்

1988 - மக்கள் ஆணையிட்டால்

1988 - இது எங்கள் நீதி

1993 - மதுரை மீனாட்சி

தொலைக்காட்சித் தொடர்கள்

தொலைக்காட்சித் தொடராக வெளியான கலைஞரின் நாவல்

1. தென்பாண்டிச் சிங்கம்

2. இராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான்

(கலைஞர் 92 வயதில் வசனம் எழுதி - கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான தொடர்)

குறளோவியம்

அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில், ‘குறளோவியம்’ என்ற தலைப்பில்திருக்குறளுக்கு கலைஞர் எழுதியுள்ள விளக்க உரைகலைஞர் அவர்களின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாகும்திருக்குறளுக்கு உரை எழுதிய பலரும் பெண்ணடிமைத் தனத்தோடு பொருள் விளக்கம் கூறியுள்ள நிலையில்பெண்களை உயர்வாகக் கூறி உரை எழுதியவர் கலைஞர் மட்டுமே.

178 நூல்கள்

சங்கத்தமிழ்’, ‘தொல்காப்பிய உரை’, ‘இனியவை இருபது’, ‘மேடையிலே வீசிய மெல்லியப் பூங்காற்று’, ‘மலரும் நினைவுகள்’, ‘கலைஞரின் கவிதை மழை’, ‘இளைய சமுதாயம் எழுகவே’ உட்பட 178 நூல்களை கலைஞர் எழுதியிருக்கிறார்

நெஞ்சுக்கு நீதி

உடன்பிறப்புகளுக்கு கலைஞர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில்தனது வாழ்க்கை நிகழ்வுகளை 6 தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார் தலைவர் கலைஞர்.

92 வயதில் வசனகர்த்தா

கலைஞர் கடைசியாக வசனம் எழுதிய தொடர்கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘சிறீ ராமானுஜர்’ ஆகும். ‘சிறீ ராமானுஜர்’ தொலைக்காட்சித் தொடருக்காகதனது 92ஆவது வயதில் வசனம் எழுதத் தொடங்கினார் கலைஞர்.