ஒற்றைப்பத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒற்றைப்பத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 மே, 2021

கேதார்நாத்?


 உத்தரகாண்டில் உள்ள ஒரு கோவில் கேதார்நாத். கடந்த 17 ஆம் தேதி அக்கோவில் திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி சார்பில் முதல் பூஜை நடத்தப்பட்டது.

உண்மை என்னவென்றால், கரோனா காரணமாக கடந்த ஆறு மாதங்களாகக் கோவில் திறக்கப்படவில்லை என்பதுதான்.

இப்பொழுதாவது நம் மக்களுக்கு புத்தி வருமா என்று தெரியவில்லை. கோவிட்-19 என்னும் வைரசுக்குமுன் சர்வ சக்திக் கடவுள்கள் சர்வ ‘சரண்டர்!'

உத்தரகாண்ட் முதலமைச்சர்  தீரத்சிங் கூறியதுதான் வயிறு குலுங்கும் தமாஷோ தமாஷ்! ‘‘கேதாரீஸ்வரர் கோவில் நடை திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும்படி பிரார்த்தனை செய்கிறேன்'' என்று சொன்னதுதான் அந்தத் தமாஷ்!

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல பகுதிகளும் 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 மற்றும் 17 தேதிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டன.

ஜூன் 16, 2013 அன்று மாலை  கேதார்நாத் கோவிலுக்கு அருகில் பெரும் சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை அடுத்து மந்தாகினி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து கட்டுக்கடங்காது பெரும் பாறைகளையும் அடித்துக் கொண்டு ஓடியது. வெள்ளத்தில் சிக்கிய கேதார்நாத் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டன.

நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். கேதார்நாத்திலுள்ள கடைகள், விடுதிகள் மற்றும் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்தன.

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் பகுதியை மொத்தமாக அழித்துவிட்டது, சுமார் 40-க் கும் மேற்பட்ட மலைக்கிராமம் முற்றிலும் அழிந்துவிட்டது.  மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கின.

வெள்ளப் பெருக்கில் சிக்கிய 25,000  குஜராத்திகளை மோடி மீட்டதாகக் கூறி 2014 ஆம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்து சமூகவலைதளம் மற்றும் பாஜக ஹிந்துத்துவ ஆதரவு ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

தன்னை நாடி வந்த ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்ற முடியாத கேதாரீஸ்வரர்தான் பக்தர்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பாராம், ஹி...! ஹி...!!

இதில் கவனிக்கவேண்டிய அண்டப் புளுகு - ஆகாயப் புளுகு ஒன்று உண்டு.

ரீடிஃமெயில் டாட் காம் செய்திப் பிரிவு குஜராத் அதிகாரிகளிடம் கேதார்நாத் பிரச்சினையில் குஜராத் அரசு எப்படி செயல்பட்டது என்று கேட்டபோது, நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த குஜராத் மாநில அதிகாரி ஒருவர் அளந்து கொட்டியதைக் கேளுங்கள்! கேளுங்கள்!!

பூகம்ப இயற்கைப் பேரழிவை ஏற்கெனவே அனுபவித்த குஜராத் பேரிடர் மீட்புக் குழு திறமையானது என்றும், அதன் திறமையை வைத்து முதலமைச்சர் மோடியால் காப்பாற்றப்பட்ட குஜராத்திகள் 25 ஆயிரம் பேர்களாம்!

கேட்பவன் கேனயனாக இருந்தால், எருமை மாடு ஏரோப்பிளான் ஓட்டியது என்பானாம். அதேபோல், என்ன சொன்னார்கள்?

டேராடூனுக்கும் - கேதார்நாத்துக்கும் இடைப்பட்ட தூரம் 221 கி.மீ. 7 பேர் முதல் நெருக்கி அமர்ந்தால் 10 பேர் பயணம் செய்யும் ஒரு சில ‘இன்னோவா' கார்மூலம் இரண்டே நாளில் 25 ஆயிரம் குஜராத்திகளை மீட்டார் மோடி என்று சொன்னது நினைவில் இருக்கிறதா?

‘நட்ட கல்லும் பேசுமோ!' - சித்தர் சிவவாக்கியம்.

 - மயிலாடன்

வியாழன், 24 செப்டம்பர், 2020

விவேகானந்தர்

ஒற்றைப் பத்தி: விவேகானந்தர்
September 23, 2020 • Viduthalai • மற்றவை


‘‘வீரத்துறவி விவேகானந்தர், விவேகானந்தர்'' என்று நீட்டி முழக்குகிறீர்களே- ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், பி.ஜே.பி.யின ரும்- கல்விக் கூடங்களுக்கெல் லாம் ‘விவேகானந்தர் ரதம்' என்ற பெயரால் மாணவர்களிடத்தில் விவேகானந்தரைக் கொண்டு சேர்க்கிறார்களே - அவரின் மற் றொரு பக்கத்தைப் பார்க்கத் தவறுவது ஏன்?

அமெரிக்காவில் சென்று அவர் உரையாற்றியதுகூட ஹிந்து மதத்தைப் பற்றியல்ல - பிராமண மதத்தைப்பற்றிதான் பேசினார்.

இன்றைக்கு இட ஒதுக்கீட் டுக்கு எதிராகவும், கல்வி குறித் தும் ‘சங்கிகள்' பேசுகிறார்களே, அதுபற்றியும் அவர் கூறுவது என்ன?

இதோ:

  1. ‘‘ஏ, பிராமணர்களே, பிரா மணர்களுக்குக் கீழ் ஜாதியின ரைவிட நன்றாகப் படிக்கின்ற திறமை இருக்கிறதென்றால், பிரா மணர்களின் படிப்பிற்காக எந்தப் பணமும் இனி செலவழிக்காதீர் கள்; எல்லாவற்றையும் கீழ் ஜாதியினருக்காக செலவிடுங்கள். உதவியற்றவர்களுக்குக் கொடுங் கள். ஏனெனில், அவர்களுக்குத் தான் எல்லா செல்வமும் தேவைப்படுகிறது. பிராமணன் பிறவியிலேயே அறிவாளி என் றால், எந்த உதவியும் இல்லாமல் அவனே படித்துக் கொள்ள முடியும். பிறவியிலேயே அறி வாளி அல்லாத பிறர் எல்லா போதனைகளையும், ஆசிரியர் களையும் பெறட்டும். இதுதான் நான் புரிந்துகொண்ட நீதியும், பகுத்தறிவுமாகும். (நூல்: கொழும்பு முதல் அல்மோரா வரை பக்கம் 139, 140).
  2. 1901 மார்ச் 31 ஆம் நாள் டாக்காவில் பகோஜ் பள்ளியின் திறந்த வெளி மைதானத்தில் விவேகானந்தர் ஆற்றிய உரை யிலிருந்து....

பிராமணர்களுக்கு ஒரு வார்த்தை: உங்கள் குலப்பெரு மையும், பாரம்பரியப் பெருமித மும் வீணே, அதை விட்டொழி யுங்கள். உங்கள் சாஸ்திரத்தின்படி பார்த்தால் இப்போது உங்களிடம் பிராமணத்துவம் இல்லை. ஏனெ னில் நீண்ட காலமாக நீங்கள் மிலேச்ச அரசின்கீழ் வாழ்ந்து விட்டீர்கள், உங்கள் முன்னோ ரின் வார்த்தைகளில் உங்களுக்கு நம்பிக்கையிருக்குமானால், இந்தக் கணமே தூஷாக்கினியில் (உமியைக் குவித்து வைத்து மூட் டுகின்ற தீ) பிரவேசித்து உங்கள் பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்து கொள்ளுங்கள்.

குமாரில பட்டர் பவுத்தர் களை ஒழிக்க விரும்பி முதலில் பவுத்தர் ஆனார். பின்னர் பலரை வாதத்தில் வென்றார். பலரது மரணத்திற்குக் காரணமானார். தமது பாவங் களைக் கழுவுவதற் காக தூஷாக் கினியில் வீழ்ந்து உடலை மாய்த்துக் கொண்டார். அவரைப் போன்ற நெஞ்சத் துணிவு உங்களுக்கு இல்லா விடில் உங்கள் பலவீனத்தை ஒப்புக் கொள்ளுங்கள். எல்லோ ருக்கும் உத விக்கரம் நீட்டுங்கள். அறிவின் கதவை திறவுங்கள். தளர்த்தப் பட்ட பாமர மக்களின் நியாயமான உரிமைகளையும், சலுகை களையும் மீண்டும் ஒரு முறை வழங்குங்கள்.''

இந்த விவேகானந்தரை அறிவீர்களா?

 - மயிலாடன்

திங்கள், 16 டிசம்பர், 2019

பொங்கி எழுந்த மனைவி!

உறவினர் ஒருவருக்கு, 10 ஆண்டுகளுக்கு முன் திரு மணம் நடந்தது. தம்பதிய ருக்கு, குழந்தை பாக்கியம் இல்லை. இதை கருத்தில் கொண்டு, முக்கிய உறவினர் கள் ஒன்று கூடி ஆலோசித்து, அந்த கணவருக்கு, இரண் டாம் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.

இதையறிந்த மனைவி, ‘குழந்தை வேண்டி, கணவர் இன்னொரு திருமணம் செய்து கொள்வதில், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை; ஆனால், அதற்கு முன், நாங்கள் இருவரும், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.'

‘அப்போது தான், இருவ ரில் யாருக்கு குறையுள்ளதென தெரிய வரும்...' என்று, பிடி வாதமாக வற்புறுத்தினார். அதற்கு சம்மதித்து இருவரும், மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

பரிசோதனை முடிவில், பெண்ணுக்கு எந்த குறையும் இல்லை; கணவருக்கு தான் பிரச்சினை. இரண்டாம் திரு மணம் செய்து கொண்டாலும், குழந்தை பிறக்க, 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என, தெரிய வந்தது.

இதையறிந்த அந்த பெண், ‘வாரிசு வேண்டும் என, என் கணவருக்கு இரண் டாம் திருமணம் செய்து வைக்க துடித்தீர்களே... இப்போது, அவரிடம் தான் குறை என்பது தெளிவாகி யுள்ளது; என்னிடம் குறை ஏதுமில்லை என்று உறுதியாகி விட்டது. இந்நிலையில், என்ன செய்யப் போகிறீர்கள்... எனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறீர்களா...' என, உற வினர்களிடம் ஆவேசப்பட் டார்.

உறவினர்கள் திகைத்து, வாயைடைத்து நின்றனர்.

அப்பெண், பழம் பஞ்சாங்கமாக, மவுனமாகி இருந் தால் என்னவாகி இருக்கும்?

தற்சமயம், நிலைமை உணர்ந்து, மீண்டும் ஆலோ சித்து, உறவுக்குள் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்வது என, ஒரு மனதாக முடிவெடுத்துள்ளனர்.

பெண்களே... எப்போது, எதற்கு, எப்படி நம் மவு னத்தை கலைக்க வேண்டுமோ, அப்போது பொங்கி எழுங்கள். துணிவு தான் ஆயுதம் என்பதையும், மறந்து விடக் கூடாது.

- எஸ். ராஜேந்திரன்,

தஞ்சாவூர்.

(‘தினமலர்', 6.10.2019)

கவனிக்கவும் - இனமல ரான ‘தினமலரிலேயே' இப்படி ஒரு வாசகரின் கடிதம்.

விபச்சாரம் என்றால் பெண்ணை ஒழுக்கம் கெட் டவள் என்பது; அதில் சம் பந்தப்பட்ட ஆணைக் கண்டு கொள்ளாமல் இருப்பது.

குழந்தைப் பேறு இல்லை என்றால், மலடி என்று வசை பாட்டுப் பாடுவது பெண் களைத்தானே!

அர்த்தமுள்ள இந்து மதத் தின் பெண்மீதான கேவலப் பார்வையே இது.

இதுபற்றி தந்தை பெரியார் கூறுவது என்ன?

‘‘பெண்களால் ‘ஆண்மை' என்ற தத்துவம் அழிக்கப்பட வேண்டும்.''

- ‘குடிஅரசு', 12.8.1928

- மயிலாடன்

- , விடுதலை நாளேடு 14 12 19

‘பாபாயணம்!'

‘‘இரட்டையரான நாங்கள் மருத்துவம் படித்து வருகிறோம். முதலாமாண்டு தேர்வில் நாங் கள் இருவரும் ஒரு தேர்வை சரியாக எழுதவில்லை. ‘பாபா கண்டிப்பாகத் தேர்ச்சி பெறச் செய்வார்' என்று நான் நம்பி னேன். தேர்வு முடிவுகள் ஒரு வியாழன் அன்றுதான் வெளி யாகின. நாங்கள் இருவரும் குறிப்பிட்ட அந்தப் பாடத்தில் ஒரே மதிப்பெண் (110) பெற்றுத் தேர்ச்சி பெற்றோம். அன்று இரவு உறங்கச் செல்வதற்கு முன் என் கைப்பேசி செயலியில் நான் ஒரு மேற்கோள் படித்தேன். ‘சாய் பாபாவை மறக்காதே, நீ 100 எதிர்பார்த்தால் அவர் 110 ஆகத் தருவார்' என்றது வாசகம்.''

- மு.வர்ஜிதி, ரீமா

(‘ஆனந்தவிகடன்', 11.12.2019, பக்கம் 94)

‘பாபாயணம்' என்னும் தலைப்பில் இப்படியொரு செய் தியை ‘ஆனந்தவிகடன்' வெளியிட்டுள்ளது.

‘குமுதம்' இதழ் மறைந்த சங்கராச்சாரியார்பற்றி ஒவ் வொரு இதழிலும் அற்புத மகாத் மியங்களை அவிழ்த்து விடு கிறது என்றால், ‘ஆனந்தவிகடன்' இதழோ பழைய சாய்பாபாவை தூசு தட்டி வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

அற்புதங்கள், அதிசயங் களை அவிழ்த்துவிடாவிட்டால், கடவுளானாலும் சரி, பாபாக் களாக ஆனாலும் சரி, சாமியார் களாக ஆனாலும் சரி, சங்கராச் சாரியார்களானாலும் சரி மக்கள் மத்தியில் போனி ஆகாது. இந்த இரகசியத்தை சரியாகத் தெரிந்து வைத்துள்ள ஊடகங்கள், மக் களை மதி மயக்கத்திலேயே வைத்திருந்தால்தான் ‘கல்லாவும்' கட்டலாம்; தங்களுக்கென்றுள்ள அக்ரகாரக் கலாச்சாரத்தையும் - சேதாரம் இல்லாமலும் ஒப்பேற்றலாம் என்ற முறையில் உண்மைக்கு மாறானவற்றை ஊதி ஊதி - வானத்தில் வண்ண வண்ண பலூன்களாகப் பறக்க விடுகிறார்கள்.

புட்டபர்த்தி சாய்பாபாவை நினைத்த மாத்திரத்திலேயே நோய்கள் தீரும் என்று  செய்தி பரப்பினார்கள். பல டாக்டர்கள், இன்ஜினியர்கள் அதற்காகவே என்று ஏற்பாடு.

ஆனால், அதே புட்டபர்த்தி சாய்பாபா, சாதாரண மனிதர் களுக்கு ஏற்படும் நோய்களாலும், உடல் உபாதைகளாலும் பல மாதங்கள் படுக்கையில் இருந் தார் என்பது தெரிந்த செய்தி. (கேலி செய்யவில்லை - நடப் பைத்தான் சொல்லுகிறோம்).

அற்புத பகவானுக்கு இது ஏன் நடந்தது என்று சிந்தித்தால், அதற்குப் பெயர்தான் பகுத்தறிவு - ஆனால், ‘‘பக்தி வந்தால் தான் புத்தி போய்விடுகிறதே!''

‘ஆனந்த விகடன்' வெளியிட்ட சாய்பாபாபற்றிய சங்கதி -மிகவும் ஆபத்தானது. படிக்கும் மாணவர்களைத் தவறான திசைக்கு இழுத்துச் செல்லும் மாபெரும் குற்ற நடவடிக்கை.

சாய்பாபாவை நினைத்தால் மார்க்குகள் குவியும் என்று தவறான வழியைக் காட்டலாமா? இதுதான் பத்திரிகா தர்மமா?

பக்தியை - புத்தியை இவ்வளவுக் கீழிறக்கத்திற்குக் கொண்டு செல்லலாமா?

- மயிலாடன்

- விடுதலை நாளேடு 13 12 19

நவமியில் தொடங்கிய நல்ல காரியம்?

பழைய இதழ்களைப் புரட்டிக்கொண்டு இருந்த போது தினமணிக் கதிரில் வெளிவந்த இந்த செய்தி தட்டுப்பட்டது.

‘‘1927 இல் கதர்ப் பணிக் காக காந்திஜி கோவைக்கு வந்தார். கோவை பகுதியில் கதர்ப் பணியைத் தீவிரமாக எடுத்து நடத்தியவர் அய்யா முத்து.

அவர் இராமகிருஷ்ண வித்யாலயம் என்ற பள்ளிக் கட்டிடத்துக்கு காந்திஜியிடம் அடிக்கல் நாட்ட வேண்டினார்.

காந்திஜியும் ஒப்புக் கொண்டு, முதல் நாள் இரவு தங்கிவிட்டு, மறுநாள் காலை அடிக்கல் நாட்டுவதாகச் சொன்னார். ஆனால், உடன் இருந்தவர்களுக்கு அந்த நாள் பிடிக்கவில்லை. கார ணம், முதல் நாள் அஷ்டமி.

மறுநாள் நவமி. நவமியில் நல்ல காரியம் தொடங்குவதை அவ்வளவாக விரும்பமாட் டார்கள். கல்வியாளர் அவி னாசிலிங்கம் கூட அய்யா முத்துவிடம் நவமியில் அடிக்கல் நாட்ட வேண்டாமே என்றார்.

உடனே அய்யாமுத்து, ‘‘காரியம் ரொம்ப நல்ல காரியம். அதைத் தொடங்கி வைப்பவரோ ரொம்ப ரொம்ப நல்லவர். எதுவும் நடந்து விடாது'' என்றாராம்.

ஏற்பாடு செய்தபடியே நவமியில் அடிக்கல் நாட்டி னார் காந்திஜி. இன்று கோவை யில் பிரகாசமாய் விளங்கு கிறது இராமகிருஷ்ண வித் யாலயம்.''

- ஜெ.அன்பு பாலாஜி, திருச்சி

‘தினமணிக்கதிர்', 21.7.2013

மேற்கண்ட நிகழ்வுக்கும், நமது கழகத்துக்கும் என்ன சம்பந்தம்? காந்தியார் சம் பந்தப்பட்டது. இராம கிருஷ்ண வித்யாலய பள்ளி சம்பந்தப்பட்டது.

இவர்கள் எல்லாம் நம் பிக்கையாளர்கள்தான். இந்த நிலையில், இப்பள்ளியின் அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது வைதீகர்கள் அஞ்சி நடுநடுங்கும் நவமியிலாகும்.

‘கெட்ட நாளில்' காந்தி யாரால் தொடங்கப்பட்ட பள்ளி நொடிந்துவிட்டதா - துலங்கவில்லையா? நல்ல படியாகத்தானே வளர்ந்தி ருக்கிறது. இதற்குப் பிறகாவது நல்ல நேரம், கெட்ட நேரப் பித்துக்குளித்தனத்தை விட் டுத் தொலைக்கக் கூடாதா?

இதில் இன்னொரு கேள் வியும் இருக்கத்தான் செய் கிறது. நவமி என்பது இராமன் பிறந்த நாள்தானே!

‘அஷ்டமி' என்பது கிருஷ் ணன் பிறந்த நாள்தானே (கோகுலாஷ்டமி).

கடவுள்கள் பிறந்த நவமி யும், அஷ்டமியும் கெட்ட தானது எப்படி?

ஓ, கடவுள்களே அறிவுப் பற்றாக்குறையால் பிறப்பிக் கப்பட்ட கெட்ட விஷயங் கள்தானே!

- மயிலாடன்

- விடுதலை நாளேடு 12 12 19

புதன், 20 நவம்பர், 2019

ரமண ரிஷி ?

*- மயிலாடன் -*

‘தினகரன்' வசந்தம் இணைப்பில் (17.11.2019) ‘‘நினைத்தாலே நடக்கும்!'' என்ற தலைப்பில் ரமணர் அற்புதம் என்று விலா வாரியாக வாரி கொட்டியுள்ளது.
‘‘பகவான் ரமணர் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந் தார். எளிய உணவுதான். தயிர்ச் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ‘‘நார்த்தங்காய் ஊறுகாய் இருக்கிறதா?'' என்று கேட்டார். இல்லை என்று சொன்னதுமே எந்தப் புகாரும் இல்லாமல் சாப்பிட்டு எழுந்தார்.
ஆசிரம நிர்வாகிக்கு தகவல் போனது. அவர் தர்ம சங்கடப் பட்டார். உடனடியாக மதுரையில் இருந்த பக்தர் ஒருவருக்கு,  ‘‘ஒரு கூடை நார்த்தங்காய் உடனே அனுப்பவும்'' என்று கடிதம் எழுதினார்.
கடிதத்தைப் பார்த்த ரமண ருக்குக் கோபம் வந்தது (‘மகா னுக்கு' எல்லாம் கோபம் வர லாமோ!) ‘‘இவர்களுக்கெல்லாம் முக்தி, நார்த்தங்காயில் தான் கிடைக்கும் போலிருக்கு. இல் லேன்னா இதையெல்லாமா யார் யார் கிட்டேயோ கேட்டு லெட்டர் போடுவாங்க. நமக்கு வரணும்னு விதி இருந்தா, அதுவே வரும். உங்க இஷ்டம்போல ஆசிர மத்தை நடத்துங்க!'' என்று சொல்லிவிட்டு, அந்தக் கடிதத் தைத் தூக்கிப் போட்டார்.
இந்தச் சம்பவம் நடந்து கொண்டிருந்தபோதே பக்தர் ஒருவர் இரண்டு கூடைகளோடு ஆசிரமத்துக்குள் நுழைந்தார்.
அவரை சிரித்தவாறே எதிர்கொண்ட பகவான்,
‘‘என்ன கூடையில் நார்த்தங்காயா?'' என்று கேட்டார். (எல்லாம் சொல்லி வைத்து நடக்கும்போலும்!)
அந்தப் பக்தர் ரயில்வே துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். ரயிலில் முக வரியின்றி பார்சலுக்கு ஏற்றப் பட்டிருந்த இரண்டு கூடைகளைத் தான் ஆசிரமத்துக்கு எடுத்து வந்திருந்தார். அதற்குள் என்ன இருக்குமென்றுகூட அவருக்குத் தெரியாது. (இது முறைகேடு அல்லவா!)

அந்தப் பக்தர் சந்தோஷத் தோடு ஒரு கூடையைத் திறந்து பார்த்தார்.
நார்த்தாங்காயேதான். இன்னொரு கூடையிலே ஆரஞ்சுப் பழம் இருக்கலாம். ஆரஞ்சிலே ஊறுகாய் போட்டா சகிக்காது; இரண்டு பழங்களும் கலந்துடாம கவனமா இருங்க'' என்றார் ரமணர்
*‘‘இதெல்லாம் அற்புதமா, இல்லை என்றால் தற்செயலா நடந்ததா சாமி?''* என்று நடந்த அத்தனை சம்பவங்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரம நிர்வாகி  கேட்டார்.

‘‘அறிஞர்களின் இதயங்களில் பொக்கிஷமாக விளங்கும் பிரக்ஞை சிந்தாமணியாகும். கற்பகவிருட்சத்தைப்போல அது நினைக்கப்படுவது அத்தனையும் நிறைவேற்றி வைக்கும்'' என்று யோக வாசிஸ்டத்திலிருந்து ஒரு பாடலைச் சொன்னார்'' இதுதான் ‘தினகரன்' வசந்தம் தரும் செய்தி.

இந்தப் பிரக்ஞையாபதிக்கு ஆசிரமத்தில் நார்த்தங்காய் ஊறுகாய் இருக்கிறதா? இல்லையா? என்பதுகூடத் தெரியவில்லை என்பதுதான் விதர்ப்பமான கேள்வி.
அது சரி, இப்படிப்பட்ட மகான் மரணம் அடைந்தது எப்படி? குத்திக் காட்டுவது நம் நோக்கமன்று. ஆனால், மகானு மல்ல - புடலங்காயும் அல்ல. சராசரி மனிதனுக்கு ஏற்படுவது போன்ற பொல்லா நோய் வந்து மரணமடைந்ததுதான் ‘மகான்' என்ற சொல்லாடலைத் தோலுரிக்கிறது.
ரமணரின் முதுகுத்துண்டில் என்புருக்கி நோய் இருந்தது. பிறகு முதுகுதண்டுவடத்தில் சர்கோமா எனும் புற்றுநோய்க் கட்டி புறப் பட்டது. நான்கு முறை அறுவை சிகிச்சை செய்து அகற்றியும், அகலாமல் வளர்ந்த வண்ணம் இருந்தது. கதிரியக்கச் சிகிச் சைக்கும் அது கட்டுப்படவில்லை. மூலிகை சிகிச்சைக்கும் முடங்க வில்லை. ஹோமியோபதியையும் ஏற்றுக் கொள்ளவில்லை. நோய் முற்றிய நிலையில், 14.4.1950 அன்று மாலை மரணமடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதற்குமேல் வாசகர் சிந்தனைக்கு....!

*நன்றி : "விடுதலை" நாளேடு 18.11.2019*

வியாழன், 14 நவம்பர், 2019

குறளும் - பெரியாரும்!

இதோ ஒரு விளம்பரம்.

திருக்குறள்

கிரவுன் 1-க்கு 16 சைசில் 170 பக்கமுள்ள பாக்கெட் சைஸ் திருக்குறள் புத்தகம் திராவிடன் அச்சகத்தில் பதிப்பித்தது.

புத்தகம் 1-க்கு விலை அணா 0-5-0 விற்பனையா ளருக்கு 100-க்கு 25 வீதம் கழிவு தரப்படும்.

சொற்ப பிரதிகளே உள் ளன.

தேவை உள்ளவர்கள் முந்திக் கொள்ளவும்.

குறிப்பு: 14.1.1953 வரை யில் விளம்பரத்தில் குறள் விலை 6 அணா என்று போடப்பட்டிருந்தது. பிறகு கொள்முதல் பார்த்ததில் விலையில் சிறிது குறைக்க லாம் என்று தெரிய வந்தது. ஆகவே, விலையை இப் போது 5 அணாவாகக் குறைத்திருக்கிறோம். 5 அணாவுக்குத்தான் ஏஜண்டு கள் விற்க வேண்டும். வாங்குபவர்களும் இதைக் கவனித்து வாங்கவேண்டும். வாங்குகிற ஏஜெண்டுகள் தங்கள் கமிஷனையும் சிறிது விட்டுக் கொடுத்துதவினால் பொது மக்கள் ஏராளமாக வாங்கிப் படிக்க முடியும். பெரியார் சுற்றுப்பிரயாணத் தில் குறள் புத்தகம் கிடைக் கும்.

விடுதலை செயலகம்,

325 P.B.மவுண்ட் ரோடு,

சென்னை-2

(‘விடுதலை', 1.2.1953)

தந்தை பெரியார் திருக் குறளுக்கு எத்தகைய தொண்டாற்றினார் என்ப தற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்றே ஒன்று போதாதா?

பரண்மீது இருந்த குறளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர் பெரியார் என்பதற்கு திருக் குறளை மலிவுப் பதிப்பாகக் கொண்டு சென்ற ஆக்க ரீதியான செயல்தானே இது!

‘இதனை இதனால் இவன்முடிக்கும் என் றாய்ந்து அதனை அவன் கண் விடல்' என்ற குறள் மொழிப்படி, திருக்குறளை அனைத்துலகுக்கும் எடுத் தோதி, அதற்குச் சிறப்பு உண்டாக்கித் தர இப் பெரியார் ஒருவராலேயே முடியும் என்பதை உணர்ந்தே இயற்கையானது திருக்குறளை பெரியாரிடம் ஒப்படைத்திருக்கிறது' என்ற தந்தை பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டில் (15.1.1949) பேராசிரியர் சி.இலக்குவனாரின் கூற்றை இங்கு குறிப்பிடுவது முக்கிய மானது - சிறப்பானதேயாகும்.பார்ப்பனர்களின் சான்றுகள் தேவையில்லை.

‘நான் இந்து அல்ல - திராவிடனே - திருக்குற ளனே' என்று சொன்னவரும் தந்தை பெரியாரே!

(‘விடுதலை', 5.11.1948)

- மயிலாடன்

- விடுதலை நாளேடு 14 11 19

புதன், 13 நவம்பர், 2019

தங்கக் கிண்ணத்தில் மலமா?

தந்தை பெரியார் திருக் குறளை இழிவுபடுத்தியதுபோல பார்ப்பனர்களும், பி.ஜே.பி., சங் பரிவார்களும் கூடிப் பேசி, ஒரே மாதிரியான கட்டுக்கதையை பொய்யைத் திட்டமிட்டுப் பரப்பி வருகிறார்கள். ஒரு பொய்யை திருப்பித் திருப்பிச் சொன்னால் உண்மையாகும் என்ற கோயபல்சின் குரு நாதர்கள் இவர்கள்.

தங்கத் தட்டில் உள்ள மலம் என்று பெரியார் திருக்குறளை சொன்னாராம். எங்கே சொன் னார்? ஆதாரம் காட்டுவீர் என்று திருப்பிக் கேட்டால், தொலைக்காட்சிகளில் காட்டுக் கூச்சல் போடுகிறார்கள். அரட்டை அடிக்கிறார்கள்.

முகநூலில் நாம் விடுத்த ஒரு சவாலுக்கு மூச்சுப் பேச்சு இல்லை.

அவர்களால் ஆதாரம் காட்ட முடியாது. ஏனென்றால், அது கடைந்தெடுத்த ‘அக்மார்க் பொய்!' உண்மை ஆதாரம் என்ன?

இதோ ஆதாரம் பேசுகிறது.

‘‘ஒரு சமயம் பெரியார் தஞ்சையில் ஒரு வாலிபர் சங்கக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அங்கு பேசிய தமிழன்பர் ஒருவர், ‘‘பெரியார் இராமாயணத்தைக் குறை கூறு வது தவறு என்றும், கலை யுணர்ச்சிக்காகவும் அதனைப் போற்ற வேண்டும்'' என்றும் கூறினார்.

அதற்குப் பெரியார் கூறிய பதில்:

‘‘நான் கலையுணர்ச்சியை யும், தமிழ் உணர்ச்சியையும் வேண்டாம் என்று கூறவில்லை. தங்கக் கிண்ணத்தில் அமேத் தியம் (மலம்) இருந்தால், தங்கக் கிண்ணம் என்பதற்காக அமேத் தியைப் புசிக்க முடியுமா? அது போல், கம்பராமாயணப் பாட்டு கள் சிறந்தவைதான். அவற்றில் உள்ள மூடநம்பிக்கைக்கும், தமிழர் இழிவுக்கும், ஆரியர் உயர்வுக்கும் ஆதாரமான வற்றை வைத்துக்கொண்டு எப்படி அவற்றைப் பாராட்ட முடியும்?'' என்றார்.''

ஆதாரம்: சாமி.சிதம்பரனார் எழுதிய ‘‘தமிழர் தலைவர்'', பக்கம் 162 (11 ஆம் பதிப்பு,15 ஆம் பதிப்பு பக்கம், 187).

கம்பராமாயணத்தைப்பற்றி பெரியார் சொன்னதை, திருக் குறளுக்குச் சொன்னதாக மோசடி செய்யும் பார்ப்பனரை இதன் மூலமாகத் தெரிந்து கொள்வீர்!

உண்மை இவ்வாறு இருக்க - பொய்யிலே பிறந்து, பொய் யிலே வளர்ந்து, பொய்யையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண் டவர்கள் மோசடியாக திருக் குறள்பற்றி பெரியார் இப்படி சொன்னார் என்று திரித்துப் பேசுவது - திரிநூலாருக்கே ஏகபோக உரிமையான இழிப் புத்தியாகும்.

ஆதாரத்தோடு எடுத்துக் காட்டிய பிறகு, பாரப்பனர்களோ, சங் பரிவார்களோ, பி.ஜே.பி. வட்டாரமோ அறிவு நாணயம் எள் மூக்கு முனை அளவுக்கு இருந்தால், என்ன செய்யவேண் டும்? பகிரங்க மன்னிப்புக் கூடக் கேட்கவேண்டாம் - தவறுக்கு வருந்தலாம் அல்லவா?

அதெல்லாம் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. புத்த ரையே மகாவிஷ்ணுவின் அவ தாரம் என்று ஆக்கிய (அ)‘யோக் கிய சிகாமணி'கள் ஆயிற்றே!

விநாயகன் என்று புத்த ருக்குப் பெயர் - அந்த விநாய கனை பிள்ளையார் ஆக்கிய வர்கள் ஆயிற்றே! சாஸ்தா என்று புத்தருக்குப் பெயர் - அந்த சாஸ்தாவை அய்யப்பன் ஆக்கிய (அ)‘யோக்கியர்கள்' என்னதான் செய்யமாட்டார்கள்?

- மயிலாடன்

- விடுதலை நாளேடு 13 11 19