வெள்ளி, 30 ஜூலை, 2021

கோயில்களில் தமிழில் அர்ச்சனைக்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்ய தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

 

சென்னைஜூலை 30- ஆகம விதிகளின்படி கோயில்களில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த வர்களை மட்டுமே அர்ச்சகர் களாக நியமிக்க வேண்டும் எனவும்தமிழில் அர்ச்சனை செய்ய எதிர்ப்பு தெரிவித்தும் தொடரப்பட்ட வழக்கை தள் ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி யுள்ளது.

இதுதொடர்பாக சென்னை சிஅய்டிநகரைச் சேர்ந்த எஸ்.சிறீதரன்உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளனஇதில் 500 கோயில்களில் மட்டுமே ஆகம விதிகள் முறையாக கடை ப்பிடிக்கப்படுகிறதுஆகம விதி களின்படி குறிப்பிட்ட சமுதா யத்தைச் சேர்ந்தவர்கள் மட் டுமே கோயிலின் கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனைபூஜை கள் செய்ய முடியும்.

எனவேஆகம விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கும் கோயில்களில்குறிப்பிட்ட சமு தாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே கோயில் அர்ச்சகர் களாக நியமிக்க வேண்டும்ஆனால் இதை மீறி அர்ச்சகர் பயிற்சி முடித்து விட்டால் ஆட்சியமைத்த 100 நாட்களில் அனைத்து ஜாதியினரையும் அனைத்து கோயில்களிலும் அர்ச்சகர்களாக நியமிப்போம் என தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் தெரிவித்து இருப்பது ஏற்புடையதல்ல.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு குறிப்பிட்ட சமூகத் தினரிடையே குழப்பத்தை ஏற் படுத்தும்அதுபோல தமிழில் அர்ச்சனை செய்ய அனுமதித் தால் அதன் மூலமும் மற்ற சமு தாயத்தைச் சேர்ந்தவர்களை கோயில் கருவறைக்குள் மறை முகமாக அனுமதிப்பதுபோல் ஆகிவிடும்.

எனவேதமிழில் அர்ச்சனை செய்ய தடை விதித்துஆகம விதிகளைக் கடைப்பிடிக்கும் கோயில்களில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு

இந்த வழக்குதலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங் கிய அமர்வில் விசாரணைக்கு வந்ததுஅப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்குரைஞர் பி.முத்துக்குமார் ஆஜராகி, "வாச்சாரியார்கள் தொடர்ந்த ஒரு வழக்கில் ஆகம விதிகளின் படி பயிற்சி முடித்தவர்கள் கோயில் அர்ச்சகர் ஆகலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளதுஎனவே அதற்கு முரணாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை ஆரம்பக் கட் டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என கோரினார்.

அதையடுத்து இதுதொடர் பான உச்சநீதிமன்ற உத்தரவு களை ஆய்வு செய்துவிட்டு வாதங்களை முன்வைக்க மனு தாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி கள்வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்து உள்ளனர்.

தேவாரப் பெருமை இதுதானா? -சித்திரபுத்திரன்

 

 12.08.1944 - குடிஅரசிலிருந்து...

மூன்றாம் திருமுறை திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகங்களின் திருவாலவாய்ப்பண் - கவுசிகம் என்னும் தலைப்பில்,

3ஆம் பாட்டு

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்

திண்ணகத் திருவாலவா யாயருள்

பெண்ணகத்தெழிற் சாக்கியப் பேயமண் டெண்ணற் கற்பழிக்கத் திருஉள்ளமே

என்பதாகும்இதன் கருத்து என்ன?

திருஞானசம்பந்தர் தமிழ்நாட்டில் ஆரியப் பிரசாரம் செய்தவற்கு முன்புதமிழ்நாட்டில் இருந்த மக்கள் யார்திராவிடர்கள்தானா - அல்லவா?

அந்தத் திராவிட மக்கள்தானே இந்தச் சம்பந்தர் முதலிய பார்ப்பனர்கள் பிரசாரத்தாலும்ஜாலவித்தைகளாலும் பலாத்கார கொடுமைச் செயல்களாலும் சைவர்களாக ஆனார்கள்.

இந்தத் திராவிடர்களின் (பெண்களைமனைவிகளைத்தானே கற்பழிக்கத்திரு உளமே என்று சம்பந்தர் பாடினதுஅல்லது வேறு யாரையாவதாஅல்லது இதற்கு வேறு பொருளாஎன்கின்ற விவரத்தைப் பண்டிதர்கள்சைவப் பண்டிதர்கள் அல்லது கிருபானந்த வாரியார்திரு.வி.கலியாண சுந்தர முதலியார் போன்ற சைவ அன்பர்கள் விளக்கினால் கட்டுப்பாடுடையவனாக இருப்பேன்.

27 விழுக்காடு இட ஒதுக்கீடு திமுக ஆட்சி அமைந்ததும் சமூக நீதிப் போராட்டத்தின் முதல் கட்ட வெற்றி

 

முதலமைச்சர் மு..ஸ்டாலின்

சென்னை,ஜூலை30- இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்க ளுக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீடு தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி என்று குறிப் பிட்டுள்ள முதல் அமைச்சர் மு..ஸ்டாலின், 50 விழுக்காடும் இட ஒதுக்கீட்டை பெற அரசு தொடர் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்இது குறித்து அவர் நேற்று(29.7.2021) வெளியிட்ட அறிக்கை:

ஒன்றிய அரசுப்பள்ளிகளி லும் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 விழுக் காடுமாக உயர்த்த வேண்டும் என்று திமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்மண் டல் ஆணையத்தின் பரிந்து ரைகள் அமலுக்கு வந்து கால் நூற்றாண்டு ஆனபின்னரும் முழுமையாக செயல்வடிவம் பெறவில்லைஇந்த நிலையில் இன்று (29.7.2021) ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆறுதல் தருவதாக உள்ளதுசமூக நீதி வரலாற்றில் முக்கிய நகர்வாக உள்ளது.

மாநிலங்கள் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கும் 15 விழுக்காடும்மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் இளங் கலை இடங்களிலும், 50 விழுக் காடு முதுநிலை மருத்துவ இடங்களிலும் இதர பிற்படுத் தப்பட்ட மாணவர்களுக்கு 27 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கும் ஒன்றிய அரசின் முடிவு தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும்குறிப்பாக திமுகவின் சமூக நீதி போராட் டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

திமுக தொடர்ந்த வழக்கில் தான் சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு ஜூலை 27ஆம் தேதி அகில இந்திய தொகுப் புக்கு அளிக்கப்படும் மருத் துவக்கல்வி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமை உள்ளது என்ற வரலாற்றுச்சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. 2021-_2022 ஆம் கல்வியாண்டில் இருந்து மொத்தம் 4,000 இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைக்கப் போவதை திமுகவின் சட்டரீதியான சமூக நீதிப்போராட்டம் மூலம் உறுதி செய்து சாதனை படைத் துள்ளது.

திமுக ஆட்சி அமைந்ததும் கிடைத்துள்ள சமூக நீதிப் போராட்டத்தின் இந்த முதல் வெற்றியில் தமிழ்நாட்டில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கல்வி அகில இந்திய தொகுப் பில் 27 விழுக்காடும் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள் ளது என்றாலும், 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்படி பிற் படுத்தப்பட்டோருக்கான 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங் கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் அழுத்தமான கோரிக்கையாகும்அதை அடை யும் வரை திமுகவின் தலைமையிலான அரசு தொடர் நட வடிக்கை மேற் கொள்ளும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.ஸ்டாலின் தனது அறிக் கையில் கூறியுள்ளார்.

சாலைகளை ஆக்கிரமித்து கோயில்களா?

 

உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

சென்னை,ஜூலை30- சாலைகளை ஆக்கிரமித்து கோயில்கள் கட்ட வேண்டுமென்று எந்தக் கடவுளும் கேட்பதில்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை ஓட்டேரி பகுதியில் நடைபாதைகள் மற்றும் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில்கள் மற்றும் கடைகளை அகற்றக் கோரி செம்பியத்தைச் சேர்ந்த தேவ ராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று (29.7.2021)  நீதிபதிகள் என்.கிருபாகரன்டி.விதமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்ததுஅப்போது மனுதாரர் தரப்பில்,

பாதசாரிகள் சாலையில் நடக்க முடியாத அளவுக்கு நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனகோயில்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதை பயன்படுத்தி அதன் அருகிலேயே நடைபாதை கடைகளும் ஆக்கிரமித்து விடுகின்றனஎனவே ஓட்டேரி பகுதியில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகள் மற்றும் கோயில்களை அகற்ற உத்தரவிட வேண்டும்” என்று கூறி அதற்கான ஒளிப்படங்களையும் தாக்கல் செய்தார்.  மேலும் உயர் நீதிமன்றத்தின் வெளியே நடை பாதையை ஆக்கிர மித்து அமைக்கப்பட்டிருந்த கோயில்நீதிமன்ற உத்தர வுப்படி அகற்றப்பட்டதாகவும் சுட்டிக் காட்டினார்.

அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “சாலைகளை ஆக்கிரமித்து கோயில்கள் கட்ட வேண்டுமென எந்த கடவுளும் கேட்பதில்லைஆனால் மதத்தின் பெயரை எந்தெந்த வகையில் தவறாக பயன்படுத்த முடியுமோ அந்தந்த வகையில் தவறாக பயன்படுத்துவது மனிதன் மட்டுமே” என வேதனை தெரிவித்தனர்பின்னர் நீதிபதிகள் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுவிசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

ஹரப்பா நகரமான தோலாவிரா உலக பாரம்பரிய சின்னமாக தேர்வு : யுனெஸ்கோ அறிவிப்பு

 

புதுடில்லி,ஜூலை30- ஹரப்பா நகரமான தோலாவிராவை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது.

சீனாவின் புசோவ் நகரில் நடைபெற்று வரும் யுனெஸ்கோ உலக பாரம் பரியக் குழுவின் 44-ஆவது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள் ளதுஇந்தக் கூட்டத்தின் போது தான் தெலங் கானா மாநிலத்தில் உள்ள காக்கதீய ருத்ரேஸ் வரா கோயிலை (ராமப்பா கோயில்உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்தது.

தற்போது குஜராத் மாநிலம் கட்ச் பகுதியி லுள்ள மிகப் பழைமையான ஹரப்பா நகரமான தோலாவிராவையும் உலக பாரம்பரிய சின் னங்கள் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த் துள்ளது.

உலகின் மிகப் பழைமை யான நாகரிகமாக சிந்து சமவெளி நாகரிகம் போற் றப்படுகிறதுஇந்திய துணைக் கண்டம் முழு வதும் சிந்துசமவெளி மக்கள் வாழ்ந்திருந்தது பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கைவிடப்பட்ட நகரங்கள்

பாகிஸ்தானில் மட்டு மல்லாமல் சிந்துசமவெளி நாகரிகத் தடங்கள்கை விடப்பட்ட நகரங்கள் வட இந்தியாவின் பல இடங்களில் இருக்கின் றனகுறிப்பாகபாகிஸ் தான் எல்லையில் குஜ ராத் மாநிலத்தின் கட்ச் பிராந் தியத்தில் உள்ள தோலா விரா மற்றும் அகமதாபாத் நகர் அருகே உள்ள லோத்தல் ஆகிய நகரங்கள் உள்ளனஇதில் மிக முக்கியமான தாக கருதப்படுவது தோலா விரா நகரம்தான்.

தோலாவிரா நகரம் என்பது சதுப்பு நிலமாக பாலைவனமாக விரிந்து பரந்து கிடக்கும் குஜராத் தின் ரான் ஆப் கட்ச் என்ற பகுதியின் நடுவே அமைந்துள்ளதுசிந்து சமவெளி மக்கள்பாலை வனத்துக்குள் மிக செழிப் பான வாழ்க்கையை திட் டமிட்டு வாழ்ந்துள்ளனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வியப்பளிக்கும்

சேமிப்பு கட்டமைப்பு

தோலாவிராவின் மிகப் பெரிய ஆச்சரிய மான விஷயம் என்ன வென்றால் பிரமாண்ட நீர் சேமிப்பு கட்டமைப்பு என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தோலாவிரா நகரத் தின் கட்டமைப்பு இன் றைய நவீனத்தைவிட மிக அற்புதமானதாக திட்ட மிட்டு கட்டப்பட்டுள்ள தாக தொல்பொருள் ஆய் வாளர்கள் தெரிவிக்கின் றனர்நிலத்தின் கீழே அமைந்துள்ள நீர் கட்ட மைப்புகள் பிரம்மாண்ட மாக உள்ளன.

தோலாவிரா நகரத் தின் அருகே மழைக்காலங் களில் பெருக்கெடுத்து ஓடிய மான்சர் ஆற்று வெள்ளத்தை அப்படியே தங்கள் நகருக்குள் திசை திருப்பி சேமித்து தோலாவிராவில் வாழ்ந்த சிந்துசமவெளி மக்கள் பயன்படுத்தி உள்ளனர்கால்வாய்நிலத்தின் கீழே பெரும் நீர்த்தொட்டிகள் என தோலாவிராவில் அமைந்துள்ளன.

இந்த அமைப்புகளை ஆய்வுசெய்த பின்னரே உலக பாரம்பரியச் சின் னங்கள் பட்டியலில் தோலாவிரா சேர்க்கப் பட்டதுஇதற்கான முறையான அறிவிப்பை யும் யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது.

மருத்துவக் கல்வி: அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% முதற்கட்ட வெற்றியே!


69%  சட்டப்படி - தீர்ப்புப்படி இட ஒதுக்கீடு கிடைப்பதற்குப் போராடுவோம்-ஒன்றிணைந்து செயல்பட்ட முதலமைச்சர் மற்றும் அனைவருக்கும் நன்றி!

முழு வெற்றி கிட்டும்வரை நமது போராட்டம் தொடரும்!

மருத்துவக் கல்வியில் முதுநிலைப் பட்டப் படிப்பில் 27% இட ஒதுக்கீடு அளிக்க ஒன்றிய அரசு முன் வந்துள்ளது முதற்கட்ட வெற்றியே! 69% அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை நமது போராட்டம் தொடரும்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்அவரது  அறிக்கை வருமாறு:

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 142 ஆவது பிரிவைப் பயன்படுத்திமருத்துவக் கல்வி வசதிகள் வளர்ச்சி பெறாத வடகிழக்கு மற்றும் வட மாநிலங்களில் உள்ளவர்கள் மருத்துவர்களாவதற்கு உதவும் வகையில்உச்சநீதிமன்றம்மருத்துவக் கல்வியில் வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் ‘மத்திய தொகுப்புஎன்ற ஒன்றை உருவாக்கிதங்களுக்குள்ள மொத்த மருத்துவப் படிப்புக் கான இடங்களில் - எம்.பி.பி.எஸ்போன்ற பட்டப் படிப்பிற்கான 15 சதவிகிதமும்மேல் பட்டப் படிப்பிற்கான (எம்.டி., எம்.எஸ்போன்றவை) 50 சதவிகிதமும் (முதலில் 25 சதவிகிதம்பிறகு 50 சதவிகிதம்ஆண்டுதோறும் தரவேண்டும் என்ற ஒரு ஆணையைப் பிறப்பித்துஅது அமலில் இருந்து வருகிறது.

அவ்வாறு மத்திய தொகுப்பின்மூலம் பெறப்பட்ட இடங்களை ஒன்றிய அரசு - ஒதுக்கீடு முறையில் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று ஆணையிட்டது உச்சநீதிமன்றம்.

ஒன்றிய அரசின் தவறான முடிவு!

ஒன்றிய அரசுஒதுக்கீடு முறையில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கவேண்டும் என்பதைமுழுமையாக செய் யாமல், (2008) முந்தையஇன்றைய ஒன்றிய அரசுகள் ஆதிதிராவிடர்பழங்குடியினர் (எஸ்.சி., எஸ்.டி.,) என்ற பிரிவுக்கு மட்டும் அமல்படுத்திவிட்டு  (அதையும் முழு மையாகப் பின்பற்றியுள்ளார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி.பி.சிஎன்ற இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு அளிக்காமலேஇதை நடைமுறைப்படுத்திஉயர்ஜாதியினரே எஞ்சிய எல்லா மருத்துவ இடங்களை யும் ஏகபோகமாக அனுபவித்த கொடுமை தொடர்ந்தது!

சலோனா குமாரி என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாய மருத்துவர் - இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு இந்த அநீதிக்குப் பரிகாரம் தேடஅப்பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது! (2015).

இதற்கிடையில் எத்தனையோ சம்பவங்கள் - சட்டப் பிரச்சினைகள் என்றாலும், ‘நீட்தேர்வு என்று திணிக் கப்பட்டுள்ள இந்த தேர்வு வந்த பிறகு - 2016 இல் இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் திருத்தப்பட்டது. (பிரிவு 10-D கொண்டு வரப்பட்டது.) அதன்கீழ் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை(Notification) 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ‘தேசிய மருத்துவ ஆணையச் சட்டம்' 2019 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டுநடைமுறைப் படுத்தப்பட்டது.

அதன்படி இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத் தின்கீழ் தரப்பட்ட அறிவிக்கைகள் தொடரிலும்

(21.12.2010) - அந்த அறிவிக்கையில் இட ஒதுக்கீடு அந்தந்த மாநிலங்களில் உள்ள சட்டங்களின்படியே தொடரும் என்று சொல்லப்பட்டுள்ளதுஇவை எல்லாம் எந்த அல்லல்பாட்டுக்கும் இடமில்லாமல்சட்டத்திலும்விதிகளிலும் கண்டுள்ளன!

இதைச் செயல்படுத்தாமல் - பிற்படுத்தப்பட்ட சமூக மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடே - மத்திய தொகுப்பில் தராத கொடுமை தொடர்ந்து வந்தது.

இதை திராவிடர் கழகம் (‘விடுதலை'யில்முதல் முதலில் அறிக்கையாக வெளியிட்டதுஇந்த சமூக அநீதியை அம்பலப்படுத்தியது! (8.5.2020, 16.5.2020).

சமூக அநீதிக்கு எதிராக ஒன்றாக திரண்ட தமிழ்நாடு!

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நிலை யில்,  தி.மு.., அதன் தலைவர் தளபதி தி.மு.ஸ்டாலின் அவர்களும் அறிக்கை வெளியிட்டுஅனைத்து ஒத்தக் கருத்துள்ள அரசியல் கட்சிகளும் (பா..தவிர), சமூக அமைப்புகளும் ஓரணியில் திரண்டன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த சமூக அநீதிக்குப் பரிகாரம் தேட வழக்குத் தொடர்ந்தோம்!

இந்த வழக்கு அந்நாளைய தலைமை நீதிபதி சாஹிநீதிபதி இராமமூர்த்தி ஆகியோர் அமர்வுமுன் விசார ணைக்கு வந்தது!

தி.மு..வின் சார்பில் மூத்த வழக்குரைஞர் வில்சன் அவர்களும்தி..வின் சார்பில் மூத்த வழக்குரைஞர் தியாகராஜன் அவர்களும்அதுபோல பல அரசியல் கட்சியினரும் தனித்தனியே வழக்குகளைத் தொடுத் தனர்.

ஆளுங்கட்சியாக அப்போது .தி.மு..வும்தமிழ்நாடு அரசும்கூட இறுதியில் இணைந்தது.

தமிழ் மண் - சமூகநீதி மண் - பெரியார் மண் என்பது உலகுக்கே பளிச்சிட்ட நிலையில்விவரமாக கேட்டு தீர்ப்பளித்த தலைமை நீதிபதி (பிறகு அவர் ஓய்வு பெற்றார்அமர்வு தெளிவான தீர்ப்பளித்தது.

69 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பதே சரியானது - சட்டப்படியானது!

1. மத்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்.

2. சென்னை உயர்நீதிமன்றம் -அவர்களே ஒப்புக் கொண்டபடி ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை - தமிழ்நாட்டில் 1993 ஆண்டு 9 ஆம் அட்டவணைப் பாதுகாப்பில்  சட்டமாகிஅமலில் உள்ளபடி 69 சத விகிதப்படி இடங்களை பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் அளிக்கவேண்டும் என்று கூறியதுஒரு கமிட்டி அமைத்து மூன்று மாதங்களில் தர ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டதுஅவ்வாண்டு ஓடிய நிலையில்வரும் 2021 ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தவேண்டும் என்று தெளிவுபடுத்தியது.

அதற்குப் பிறகு ஒன்றிய அரசின் மருத்துவ சுகாதாரத் துறை ஏதேதோ சாக்குப் போக்குகளைக் கூறிபிற்படுத் தப்பட்டவர்களின் உரிமையை ஏற்க மறுத்தே வந்தது.

ஒரு கட்டத்தில்எஸ்.சி., எஸ்.டி.,யினருக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு என்றும்கூட கூறத் தயங்கவில்லை!

அதன் பிறகு தி.மு.., நீதிமன்ற அவமதிப்பு என்ற வழக்கைத் தொடுத்ததில்சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஒரு மாதத்திற்குள் ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை பதில் அளிக்கவேண்டும் என்று கண்டிப்பான ஆணை வெளியிட்டதுஅதன் பின்னும் அசையவில்லைமறுமுறை மேலும் அவகாசம் கேட்ட போதுமீண்டும் ஒரு மாதம் அவகாசம் தந்துஅதற்குள் முடிவு தெரிவிக்க கண்டிப்பான உத்தரவு போட்டது.

இதற்கிடையில் தமிழ்நாடு முதலமைச்சரான மு..ஸ்டாலின் அவர்கள்டில்லியில் பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்துப் பேசி,  வற்புறுத்திய கோரிக் கைகளில் இதுவும் முக்கிய இடம்பெற்றது.

இதனை நாடாளுமன்றத் தி.மு.உறுப்பினர்களும்அதன் தலைவர் டி.ஆர்.பாலுவும்மாநிலங்களவையில் அதன் தலைவர் திருச்சி சிவாமூத்த வழக்குரைஞர் வில்சன் போன்றவர்களும் வலியுறுத்தினர்.

பிறகுதான் பிரதமர் தனது கோப்பில் இப்பிரச்சினைக்கு முக்கிய முன்னுரிமை தரக் கூறினார்அதன்படி, 27 சதவிகித இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய தொகுப்பில் மருத்துவப் படிப்பில் தரப்படும் என்பதைக் கூறிவசதி குறைந்த ஏழைகளுக்குமுன் னேறிய ஜாதியினருக்கு பத்து விழுக்காடு ஒதுக்கீட்டையும் இணைத்தே அறிவித்தார்.

(.பிபோன்ற சில மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் உயர்ஜாதிபிற்படுத்தப்பட்ட ஆகிய இரு சாரர்களின் வாக்கு வங்கி களைக் குறி  வைத்தது என்பது வெள்ளிடை மலை).

இது முழு வெற்றியல்ல!

தமிழ்நாட்டிற்கும்சமூகநீதிக்கும் கிடைத்த வெற்றி இது என்றாலும்முழு வெற்றி அல்லஇது மறைக்கப்படக் கூடாத உண்மையாகும்!

69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படிதமிழ்நாட்டிற்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 விழுக்காடு தருவதற்குப் பதில், 50 சதவிகிதப்படியே - 27 விழுக்காடுதான் தர ஒப்புக் கொண்டுள்ளார்கள்!

இது சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையை முழுமையாக செயல்படுத்தியதாகாது என்றாலும்கூடமூடப்பட்ட சமூகநீதிக் கதவு பிற்படுத்தப்பட்டோருக்கு கொஞ்சம் திறக்கப்பட்டிருக்கிறது - முழுமையாக அல்ல என்றாலும்இது முதற்கட்ட வெற்றிஇதன் பலன் இந்தியாவிலுள்ள அனைத்துப் பிற்படுத்தப்பட்ட சமூ கங்களும் அனுபவிக்கக் கூடிய திராவிட இயக்க அருங் கொடையாகக் (தந்தை பெரியாரால் முதல் அரசமைப்புச் சட்டத் திருத்த கொடைபோலகொள்ளலாம்ஒன்றிய அரசுக்கும் நன்றி!

முதலமைச்சர் உள்பட அனைவருக்கும் நன்றி!

மூடப்பட்ட கதவு திறக்கப்பட்டுள்ளதுதொடங்கப் படாத புதுக் கணக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் தொடங்கப்பட்டுள்ளது!

சமூகநீதியின் ஒரு களத்தில் ஒரு பகுதி வெற்றி!

சமூகநீதிப் போராட்டக் களத்தில்  தொடர்ந்து நின்று போராட வேண்டியவர்களே நாம்!

இதற்குக் காரணமான அத்துணைக் கட்சிகளுக்கும்அமைப்புகளுக்கும் குறிப்பாக தி.மு.., தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின்அரசியல் கட்சிகள் எல்லோருக்கும் நன்றி!

கிடைத்த இடங்களைவிட பறிபோன இடங்களை எண்ணினால் நெஞ்சம் பதறுகிறதுஅதுகுறித்து தனியே பிறகு எழுதுவோம்!

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை      

30.7.2021