பார்ப்பன ஆதிக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்ப்பன ஆதிக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 பிப்ரவரி, 2020

மத்திய அரசின் உயரதிகாரங்களில் பார்ப்பன ஆதிக்கம் பாரீர்!

ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், உயர்ஜாதியினருக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளியை நிரப்புவது அவசர

அவசியமாகும்!

அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து போராட வீதிக்கு வாரீர்!

உயர் அதிகார வர்க்கத்தில் உயர்ஜாதி பார்ப்பனர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த ஆதிக்கத்தை வீழ்த்த அனைத்துத் தரப்பினரும் அணிதிரள வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்  தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

மத்திய அமைச்சகங்களில் உள்ள உயர் பதவிகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்ற அடிப்படையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. திப்பேந்து அதிகாரி மக்களவையில் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.

அக்கேள்விக்கு எழுத்துமூலம் மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் பதில் அளித்துள்ளார்.

அதிர்ச்சி தரும் அந்தப் புள்ளி விவரங்களைத் தனியே காண்க!

புள்ளிவிவரங்கள்

உணர்த்துவது என்ன?

இந்தப் புள்ளி விவரங்கள் உணர்த்துவது என்ன? தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங் குடியினருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் சட்டப்படி இட ஒதுக்கீடு இருப்பதாக சொல்லப்பட்டாலும், அவர்களுக்கு உரிய சட்டப்படியான இட ஒதுக்கீடு விகிதாசாரம் அளிக்கப்படவில்லை என்பது இதன்மூலம் வெட்ட வெளிச்சமாக, அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிட்டதே!

உண்மை விவரம் இவ்வாறு இருக்க, எவ்வளவு காலத்துக்கு இன்னும் இட ஒதுக்கீடு என்று கேள்வி கேட்போர் ஒருபக்கம்; உயர்ஜாதியினரில் ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்று கூறி அவசர அவசரமாக ஒரு வார காலத்திற்குள் சட்டம் இன்னொரு பக்கம் என்பது - எண்ணிப் பார்க்கவே முடியாத - இரத்தக் கொதிப்பு ஏற்படுத்தக் கூடிய உயர்ஜாதி பார்ப்பனர் ஆதிக்கம் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

உயர்ஜாதி ஏழைகளுக்கு

இட ஒதுக்கீடா?

இந்த உயர்ஜாதி ஆதிக்கம் போதாது என்று கூறி, தனியார்த் துறைகளிலிருந்தும் இணைச் செயலாளர்கள் பதவிக்கு நேரி டையாக நியமனம் என்பது சமூக அநீதியின் உச்சம் அல்லவா! இத்தகைய நியமனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்பது கவனிக்கத்தக்கதாகும்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஏணி வைத் தாலும் எட்ட முடியாத அளவுக்கு வெகுச் சிறுபான்மையினரான பார்ப்பன உயர் ஜாதியினரின் அதிகார வர்க்க ஆதிக்கம் உச்சத்தில் கொடி கட்டிப் பறக்கிறது.

இடைவெளியை நிரப்ப வேண்டாமா?

இந்த இடைவெளியை நிரப்புவது என்பதுதான் உண்மையான சமூகநீதியாக இருக்க முடியும்.

இதைப்பற்றி நாடாளுமன்றத்தில் சமூக நீதியில் அக்கறை உள்ள கட்சிகளின் உறுப்பினர்கள் போர்க் குரல் எழுப்பிட வேண்டும்.

இட ஒதுக்கீடு விலக்கு அளிக்கப்பட் டுள்ள அத்துணைத் துறைகளிலும்  சட்டப்படியான விகிதாச்சாரத்தில் இட ஒதுக்கீடு கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.

நாரா நாச்சியப்பன்

தலைமையிலான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தவேண்டும்!

நாரா நாச்சியப்பன் தலைமையில் அமைந்த நாடாளுமன்ற நிலைக்குழு அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படை யில் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதில் தவறு செய்கிற அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இட ஒதுக்கீடு செயல்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகள் ஆன நிலையிலும், உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை என்ற நிலையில், தேசிய புதிய கல்வி என்றும், ‘நீட்' என்றும் கூறி ஒடுக்கப்பட்ட மக்கள் தலையெடுக்க முடியாத அளவுக்குத் தடைச் சுவர்களை எழுப்பி வருவது எத்தகைய அபாயகரமான பார்ப்பனத் தன்மை கொண்டது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

1925 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் எச்சரித்த ‘பிராமினோகரசி!'

1925 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் எச்சரித்த அந்த ‘பிராமினோகரசி' என்பது எத்தகைய தொலைநோக்கு என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை

அடுத்து நடைபெற இருக்கக் கூடிய நாடாளுமன்றத் தொடரில் இந்தப் பிரச் சினைக்கான தீர்வுக்கு வழிகாணும் வகை யில், அனைத்து மாநிலங்களில் உள்ள சமூகநீதியின்மீது அக்கறை உள்ள கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு: UR - UNDER - REPRESENTED IN GOVT JOBS - இட ஒதுக்கீடு அளிக்கப்படாதது என்று சொல்லப்படுவதன் பொருள் - உயர்ஜாதியினருக்கானது என்று பொருள்!

அகில இந்திய அளவில்

இயக்கம்

மண்டல் குழுப் பரிந்துரையை அமல் படுத்த கோரி தேசிய அளவில் இயக்கம்  நடத்தியதுபோல் நடத்திடவேண்டும்; இல்லையேல், அகில இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து இயக்கம் காணவேண்டிய அவசியம் ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். வீதிக்கு வந்து போராடுவோம், வாரீர்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

15.2.2020

சனி, 23 நவம்பர், 2019

பார்ப்பன ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கிறது! பறக்கிறது!!

மத்திய அரசின் செயலாளர்கள் 82 இல் எஸ்.சி. எண்ணிக்கை வெறும் 4

20 அய்அய்எம் நிறுவனங்களில் பேராசிரியர்கள் எஸ்.சி. எண்ணிக்கை வெறும் 11 பேர் மட்டுமே

என்று தணியும் இந்தக் கொடுமையின் துயரம்?

புதுடில்லி,நவ.23 மத்திய அரசுத் துறை செயலாளர்களில்  82 பேர்களில் தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர் வெறும் 4 பேர்களே. 20 அய்அய்எம் நிறுவனங்களில் தாழ்த்தப் பட்ட, பழங்குடியினர் வெறும் 11 பேர்களே என்கிற அதிர்ச்சிகர தகவல் நாடாளுமன்றத்தில் வெளியாகி யுள்ளது.

மத்திய அரசுத்துறைகளில் உயர்பதவிகளுக்கானப் பணியிடங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனமாகிய அய்அய்எம் கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கான பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர்கள், முசுலீம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்று நாடாளு மன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச் சர்கள் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயர் பதவிகள், பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படுவதில்லை என்றும் நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் பதிலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

கே.சோமநாத்பிரசாத்

நாடாளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.சோமநாத்பிரசாத் எழுப்பிய கேள் விக்கு, மத்திய பணியாளர், பொது குறைகளை மற்றும் ஓய்வூதியத்துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் குறிப்பிடுகையில்,

மத்திய அரசுத் துறைகளில் செயலாளர் பதவிக் கான 82 பணியிடங்களில் நான்கு இடங்களில் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் உள்ளதாகவும், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவன மாகிய 20 அய்அய்எம் நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் 11 பேர் மட்டுமே உள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் அதிகாரத்துறை, நிலவளங் கள்  துறை, மருந்தியல் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை ஆகிய துறைகளில் செயலா ளர்களுக்கான பணியிடங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர்  மட்டுமே உள்ளனர்.

உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள நிலை

அரசுத்துறைகளில் அதிகாரமிக்க உயர் பதவியிடங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர் களுக்கு  பிரதிநித்துவம் அளிக்கப்படாதது மட்டு மன்றி, உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களுக் கான பணியிடங்களிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

பர்தாப் சிங் பாஜ்வா

மாநிலங்களவையில், காங்கிரஸ் கட்சியின் உறுப் பினர் பர்தாப் சிங் பாஜ்வா எழுப்பிய கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ்போக்ரியால் நிஷாங்க் பதில் அளித்தார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின்கீழ் இயங்கும் உயர்கல்வி நிறுவனமாகிய 20 அய்அய்எம் கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்களில் ஒட்டு மொத்தமாக வெறும் 11 இடங்களில் மட்டுமே தாழ்த் தப்பட்ட, பழங்குடியினத்தவர் உள்ளனர். அதன்படி, அகமதாபாத், கொல்கத்தா அய்அய்எம் கல்லூரிகள் உள்பட 12 அய்அய்எம் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர்கூட நியமிக்கப்படவில்லை.

பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட 5 அய்அய்எம் கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்களில் தாழ்த் தப்பட்ட அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் களுக்கு  ஓரிடம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, கோழிக்கோடு, ஷில்லாங், ஜம்மு ஆகிய அய்அய்எம் கல்லூரிகளில்பேராசிரியர் பணியிடங்களில் இரண்டு இடங்கள் மட்டும் தாழ்த்தப் பட்ட, பழங்குடியினத்தவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக உத்தரவு

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கடந்த 20.11.2019 அன்று அய்அய்எம் இயக்குநர்களுக்கு சுற்றறிக்கைமூலம் உத்தரவு அனுப்பியுள்ளது. மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர்களுக்கான இட ஒதுக்கீடு) சட்டம் 2019இன்படி,தாழ்த்தப்பட்டவர் களுக்கு 15 விழுக்காடு, பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடு, சமூக அளவிலும், கல்வியிலும் பிற் படுத்தப்பட்டவர்களுக்கு (இதர பிற்படுத்தப்பட்டவர் களுக்கு) 27 விழுக்காடு, பொருளாதாரத்தில் நலி வுற்றவர்களுக்கு 10 விழுக்காடு என்கிற இடஒதுக்கீடு கட்டாயம். அந்த அடிப்படையிலேயே எதிர்காலத்தில் அனைத்து பணிநியமனங்களிலும், ரோஸ்டர் முறையிலேயே இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த அரை நூற்றாண்டு காலமாகவே அய்அய்எம்  உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கும் உயர் கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களின் நிய மனங்களில்  இடஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படா மலேயே இருந்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான பணியிடங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாத நிலையே உள்ளது.

முந்தைய அனைத்து உத்தரவுகளையும் கடந்து 20.11.2019 தேதியிட்ட உத்தரவின்படியே  மத்திய அரசு குறிப்பிட்டுள்ள இடஒதுக்கீட்டின்படி பேராசி ரியர்கள் பணியிடங்களில் நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

கே.உசைன் தல்வாய்

அரசுத் துறைகளில் செயலாளர்கள், இணை செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள், துணை செயலாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கான இடங் களில் தாழ்த்தப்பட்டவர்கள், முசுலீம்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும்  பழங்குடியினர் உள் ளிட்டவர்களின் பிரதிநிதித்துவம்குறித்த தகவல்களை அளிக்குமாறு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கே.உசைன் தல்வாய் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

மத்திய அமைச்சர் பதில் கூறுகையில், உயர் பதவிக் கான பணியிடங்களில் உள்ளவர்களின் இடஒதுக்கீட்டு தகவல்கள் பராமரிக்கப்படுவதில்லை என்றார்.

பிரதிநித்துவம்குறித்த தகவல்கள் பணிநியமனத்தின் தொடக்கத்தில் திரட்டப்பட்டவையே ஆகும். உயர் பதவிக்கான பணியிடங்களில் பணிநியமனம், பதவி உயர்வில் இடஒதுக்கீட்டுப்பிரிவினரின் பிரதிநிதித்துவத் தகவல்கள் பராமரிக்கப்படுவதில்லை என்று அமைச்சர் பதிலில் குறிப்பிட்டார்.

- விடுதலை நாளேடு 23 11 19