கருத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 அக்டோபர், 2021

நேற்று மாலை ஓர் அ(ரு)றிவியின் ஓசை!

 

தொகுப்புமின்சாரம்


* 'முடித்துக் காட்டுவோம்!' என்ற அந்தத் திண்மைதிட சித்தம்தான் நமது மூலதனம்!

* எண்ணிக்கையல்ல முக்கியம்எண்ண பலம்தான் முதன்மையானது!

* எடுத்த எந்த காரியத்திலும் நாம் தோற்க வில்லை - தோற்கவும் விடுவதில்லை.

* உழைப்புக்கு நேரமில்லை.

* குடி செய்வார்க்குப் பருவமும் இல்லை.

* உலகைப் பெரியார் மயமாக்குவோம்பெரியாரை உலக மயமாக்குவோம்!

* இனி வரும் உலகம் பெரியார் உலகமே!

* பெரியாரே இனிவரும் உலகம்!

* இதற்கான பிரச்சாரக் கருவிகள்தாம் 'விடுதலை' 'உண்மைஏடுகளைப் பரப்புதலும் - சந்தா சேகரித்தலும்.

* நேர்மையே நமது அணிகலன் - அதுவே தலைசிறந்த படைக்கலன்!

* அரசு அதிகாரத்துக்குள் பெரியார் சென்றதில்லைஆனால் அரசை மக்கள் மத்தியில் - வீதிகளில் நின்று நடத்தியவர்.

* சட்டமன்றத்திற்குப் பெரியார் சென்ற தில்லைஆனால் சட்டமன்றத்தில் சட் டங்கள் அவர் விருப்பப்படிகருத்துப்படி நிறைவேற்றம்.

* பெரியார் ஒரு சமூக விஞ்ஞானம் - விஞ்ஞானிவிஞ்ஞானத்துக்கு எல்லை இல்லைஅது வளரும் - விரியும்!

* பெரியார் ஒரு ஜீவநதி தத்துவவாதிசமூகநீதிப் போராளி.

 அவர்தம் உயர் எண்ணங்களை நாளை உலகுக்கு அறிவிப்போம் - அதற்கான வரலாற்றுக் காட்சியகம்தான் - கருவூலகம் தான் சிறுகனூர் "பெரியார் உலகம்!"

* அமெரிக்காவின் வாசிங்டனில் கறுப்பர்கள் விடுதலை பெற்ற வரலாற்றை விவரிக்கும் அருங்காட்சியகம் போன்றதுசிறுகனூரில் உருவாகவிருக்கும் பெரியார் உலகம்!

* பஞ்சமர்களும்சூத்திரர்களும்பெண் களும் இங்கே எப்படி ஒடுக்கப்பட்டார்கள் - தடைகளை உடைத்து விடுதலை பெற்றார்கள் என்பதை விளக்கும் வரலாற்று சமூகநீதி வகுப்பறையே பெரியார் உலகம்.

* பெரியாருக்காக அல்ல பெரியார் உலகம்!

* நம்மை நாம் உயர்த்திக் கொள்ள நமது நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்திடவே!

* சமூகவலைதளங்களில் பிரச்சாரம் நடக் கட்டும் - நடக்கட்டும்!

* உங்களால் பெரியார் உலகம் - நம்மால் பெரியார் உலகம் - மக்களால் பெரியார் உலகம் - நன்றி காட்ட நன்கொடை தாரீர்!

* அறிவின் சிரிப்பு பெரியார் உலகம்!

* உங்கள் புன்னகை எப்போது?

* கண்ணுக்குத் தெரிந்த கருஞ்சட்டையினர் உண்டு.

* கண்ணுக்குத் தெரியாத பெரியார் பற்றா ளர்கள் உண்டு.

* 'அவர் இல்லை என்றால் நாங்கள் எங்கேஎன்று சொல்பவர்கள் எங்கும் உண்டு - அந்தக் கண்ணுக்குத் தெரியாதவர்களையும் அணுகுவீர்!

* நாள் ஒன்றுக்கு ஒரு மணி - வாரம் ஒன்றுக்கு ஒரு நாள்.

* களத்தில் இறங்குவீர்கடமையாற்றுவீர்காரியத்தை முடிப்பீர்!

* திட்டமிட்டால் திரளும் நிதி - தயங்காதீர்!

* நன்கொடையாளர்களில் இரு வகைபெருந்த (தொ)கையாளர்கள் ஒருவகைரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.1000 என நன்கொடை தருவோர் இன்னொரு வகைசிறுதுளி பெரு வெள்ளம் என்பதை மறவாதீர்!

* வீதிவீதியாக வீடு வீடாக நன்கொடை திரட்டுவீர்.

* உள்ளந்தோறும் பெரியார் - இல்லந்தோறும் பெரியார் - பெரியார்!

* எடுத்துச் செல்வோம் - கொடுத்து மகிழ்வார் நம்மின மக்கள்எட்டு பேரிடம் செல்லுவோம் நான்கு பேர் நல்காவிடினும் பிரச்சாரம் தானே!

* பெரியாருக்கு நன்றி என்பதைவிட நம்மை நாமே உயர்த்திக் கொள்கிறோம்.

* பெரியாரின் தோள்மீது நாம் நிற்கும்போது நாம் உயரமாகத் தெரிவோம் - ஆம் நம் உயர்வுக்கு அந்தத் தோள்கள்தானே மூல ஊற்று.

* உங்களின் பேரப் பிள்ளைகள் உங்கள் பெயரைப் பெருமையாக சொல்லட்டும்!

* அதோ கம்பீரமாகப் பொலிகிறதே - ஒளிர் கிறதே - அந்தப் பெரியார் உலகம் உருவாக் கத்திற்கு எங்கள் பாட்டன் நன்கொடை அளித்திருக்கிறார்  அவரின் பங்கும்  இதில் இருக்கிறது என்று உற்சாகத்துடன் நம் பேரப் பிள்ளைகளும் சொல்லி கைதட்டி மகிழ வேண்டாமா?

* "வணக்கம் - பெரியார் உலகம்!"

திராவிடர் கழகத் தலைவர் ஆற்றிய கருத்துரை அருவியில் கிடைத்த முத்துக்கள் இவை -  மாநில அளவிலான கழகக் கலந்துரையாடல்  (காணொலிகூட்டத்தில் (5.9.2021) மாலை)

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

மொழியின் அடையாளத்தை மறைக்கும் நடவடிக்கை கூடாது

 

ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றக் கிளை சரமாரி கேள்வி

மதுரைஆக.10- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளவும்பழங்கால தொல்லி யல் மற்றும் நினைவுச்சின்னங்களை பாதுகாக்கக் கோரியும் பலர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு செய்தி ருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிரு பாகரன்எம்.துரைசாமி ஆகியோர் முன் நேற்று (9.8.2021) விசாரணைக்கு வந்ததுஅப்போது ஒன்றிய அரசுத் தரப்பில்உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுவிரிவான அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது எனக் கூறப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், ‘‘கல்வெட்டியல் துறையை ஒன்றிய அரசு மூடுவதற்கான நடவடிக்கையை எடுப்பதைப் போல தெரிகிறதுசுமார் ஒரு லட்சம் கல்வெட் டுகளில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியைச் சேர்ந்தவைதமிழ் கல்வெட்டுகளை ஏன் மைசூருவில் பாதுகாக்க வேண்டும்கருநாடக அரசு டன் ஏற்கெனவே காவிரி பிரச்சினை உள்ளது.

எனவேமைசூருவிலுள்ள கல்வெட் டுகளை தமிழ்நாட்டில் வைத்து ஏன் பாதுகாக்கக் கூடாதுசமஸ்கிருதத்தில் எத்தனை கல்வெட்டுகள் உள்ளனபார்சி மற்றும் அரபு மொழியில் எத்தனை கல்வெட்டுகள் உள்ளனதிராவிட மொழி கல்வெட்டுக்கள் எனக் கூறிஇங்கு சமஸ்கிருத மொழிக்கான கல்வெட்டியல் அலுவலரை நியமிக்க வேண்டிய தேவை என்னதமிழ் மொழி என்பதற்கு பதிலாக திராவிட மொழி எனக்கூறி குறைக்கக் கூடாது’’ என்றனர்இதற்கு ஒன்றிய அரசுத் தரப்பில்இது அரசின் கொள்கை முடிவு தொடர்புடையது எனக் கூறப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ‘‘ஒரு மொழியின் அடையாளத்தை மறைக் கும் வகையில் நடவடிக்கை இருக்கக் கூடாதுஅனைத்து மொழிகளும் முக்கியமானவை தான்இதற்கென முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக் கப்பட வேண்டும்’’ என்றனர்.

பின்னர் நீதிபதிகள், ‘‘தொல்லியல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட 760 பணியிடங்களில் மண்டல வாரியாக எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள் ளனஅதில் கல்வெட்டியல் துறைக் கென எத்தனை இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளனஉடையாளூரில் ராஜராஜ சோழனின் நினைவிடம் குறித்து அறிவியல்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து ஒன்றிய அரசின் தரப்பில் அறிக்கையளிக்க வேண்டும்ஒன்றிய தொல்லியல் துறையின் கல் வெட்டியல் துறை அதிகாரி ஆஜராக வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.