குடியுரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடியுரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 டிசம்பர், 2019

குடியுரிமை மசோதாவை நிறைவேற்றினால் மோடி, அமித்ஷாவுக்கு தடை விதிக்க பரிந்துரை

அமெரிக்க மத சுதந்திர ஆணையம் எச்சரிக்கை

வாஷிங்டன், டிச.11 இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், பிரதமர் மோடி, அமித்ஷா வுக்கு தடை விதிக்கும்படி அமெரிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என  அமெரிக்காவைச் சேர்ந்த, ‘சர்வதேச மத சுதந்திர ஆணையம்’ எச்சரித் துள்ளது.

திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் இந்த சட்ட திருத்தத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் ‘சர்வதேச மத சுதந்திர ஆணையம்’ மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத் துள்ளது.

அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா தவறான திசையில் எடுக்கப்பட்ட பயங்கரமான திருப்பமாகும்.

இது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் இந்திய அரசியல் சாசனத்திற்கும், மதச்சார்பற்ற இந்தியாவின் புகழ் பெற்ற வரலாற் றுக்கும் எதிரானது.  இந்த மசோதா மதப்பாகுபாட்டை உருவாக்கக் கூடியது. தனது நாட்டு குடிமகன்களுக்கு இந்திய அரசு மதச் சோதனையை நடத்துகிறது. குடி யுரிமை மசோதாவால் பல முஸ்லிம்கள் பாதிக்கப் படுவார்கள். எனவே, நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிற தலைமை பொறுப்பில் இருப்பவர்கள்மீது தடை விதிப்பு நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அமித்ஷாவின் பெயரை நேரடியாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இந்த ஆணையம், ‘பிற தலைமை பொறுப்பில் இருப்பவர்கள்’ என்ற வாசகத்தின் மூலம்  பிரதமர் மோடியின் பெயரை மறைமுகமாக சுட்டிக்காட் டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோடிக்கு விசா வழங்க கூடாது என்றதும் இதுதான்

கடந்த 1998 இல் உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையம், வெளிநாடுகளில் நடக்கும் மத சுதந்திர விதிமீறல்களை ஆய்வு செய்து, அதற்கான பரிந்துரைகளை அமெரிக்க அதிபர், வெளியுறவுத் துறை மற்றும் அமெரிக்க நாடாளு மன்றத்திற்கு வழங்கும். கடந்த 2002இல் கோத்ரா வன்முறையை தொடர்ந்து, அப்போதைய குஜராத் முதல்வரான நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா மறுக்கப்பட வேண்டும் என 2005இல் பரிந்துரைத்தது இந்த ஆணையம்தான்.

- விடுதலை நாளேடு 11 12 19

அய்.நா. சட்ட விதிப்படி தேசிய குடியுரிமைச் சட்டமும் ஒரு இனப்படுகொலைதான்!


வாஷிங்டன், டிச.11 தேசிய குடியுரிமைச் சட்டமும் ஒரு இனப்படுகொலைதான் என்று அய்.நா. சட்ட விதி கூறுகிறது.

இனப்படுகொலை என் பது  ஒரு இனத்தை பகுதி யாகவோ அல்லது முழுமை யாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப் பதாகும்.

அய்.நா. சட்ட விதி 2 இன்படி

இது குறித்து 1948 இல் அய்க்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடை செய்யப்பட்ட, தண்டனைக் குரிய மற்றும் குற்றமுறை செயலாக அய்.நா. சட்ட விதி 2 இன்படி அறிவித்துள்ளது.

இதன்படி ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழு மையாகவோ,

மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற் றுமை போன்ற காரணங் களால்,

உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது,

கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது,

இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பைத் தடுப்பது,

குழந்தைகளை இடம் பெயரச் செய்வது,

அதிகாரத்தின் மூலம் மக் களைப் பிரித்து உரிமைகள் கிடைக்காமல் செய்வது,

வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட் டுவது போன்றவை குற்ற முறை செயல்களாக, இனப் படுகொலைக் குற்றங்களாக  பன்னாட்டு தடைச்சட்டத் தின்படிக் குற்றச்செயலாகும்.

இக்கொடுஞ்செயல் புரி வோரைத் தண்டிக்க பன் னாட்டுக் குற்றவியல் நீதிமன் றம் 2002 இல் கொண்டு வரப்பட்டது. இந்நீதிமன்றம் விசாரணை செய்து தண் டனை அளிக்க உடன்படிக் கையின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வு டன்படிக்கையில் கையொப் பமிட நீதிமன்ற ஆணையத் தால் பன்னாட்டு உறுப்பினர் களை அழைத்தும் இன்னும் ஒருவரும் கையொப்பமிட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

- விடுதலை நாளேடு 11 12 19