புதன், 23 அக்டோபர், 2019

கல்வி நிறுவனங்களுக்குள் ஜாதி, மத ரீதியாகப் பிரிக்கும் ஏற்பாடா?

தமிழக  அரசின் தடுப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது

தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்து

சென்னை, அக்.23 தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி களில் மத ரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதைக் கண்காணிப்பதற்கும், அவ்வாறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக சுற்றறிக்கை அனுப் பப்பட்டுள்ளது. இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  கருத்து கூறியுள்ளார்.

தமிழகத்தில் மத ரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதைத் தடுக்குமாறு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்து மாணவர் முன்னணி, இந்து இளைஞர் முன்னணி என்ற பெயரில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களைத் திரட்டுவதாக தகவல் கிடைத் துள்ளது. இந்துப் புராணங்கள், இதிகாசங்கள், இந்துத் தலைவர்கள் பற்றிய பிரச்சாரங்கள் பள்ளிகளில் நடப்பதாக தகவல் வந்துள்ளனவாம்!

இந்து மாணவிகளை லவ் ஜிகாத் பெயரில் மற்ற மதத்தினர் கலப்பு மணம் செய்வதை தடுக்க இந்து அமைப்புகள் முயற்சி எடுக்கின்றனர்.

10 மாணவர்களைக் கொண்ட குழுக்களையும் இந்து மாணவர் முன்னணி அமைத்து வருவதாகவும் புகார் கிடைத்துள்ளது.

இந்து மாணவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் குழு அமைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

மாணவர்களை மதரீதியில் அணிதிரட்டுவது கல்வி நிலைய நிர்வாக விதிமுறைகளுக்கு எதி ரானது.

இதுகுறித்து அறிக்கை அளிக்க பள்ளிகளுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளர் எஸ்.வெங்கடேசன் அவசரக் கடிதம் அனுப்பி யுள்ளார்.

தமிழர் தலைவர் பேட்டி

இதுகுறித்து தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சன் செய்திகள் தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்ததாவது:

இது வரவேற்கத்தக்கது!

‘‘சில நேரங்களில் இப்படி வேகமாக சொல்வதும், பிறகு, சிலருடைய சல சலப்பைக் கண்டு பின்வாங்குவதுமாக இருக்கக்கூடியது - ஏற்கெனவே சில நிகழ்வுகள் நடைபெற்று இருக்கின்றன.

எனவே, ஜாதி ரீதியாகவோ, மத ரீதி யாகவோ அவர்களை அடையாளம் காட் டுவது, மாணவர்களை இப்படிப் பிரித்து, மதவெறி உணர்ச்சியூட்டுவது  என்பது விரும்பத்தக்கதல்ல. இது மதச்சார்பற்ற நாடு. எனவேதான், பிஞ்சு உள்ளத்தில் நஞ்சைப் பரப்பக்கூடாது.

இதில் உறுதியாக இருக்கவேண்டும். இதற்காக தமிழக அரசின் முயற்சியை வர வேற்கிறோம்'' என்று தனது பேட்டியில் கூறினார் திராவிடர் கழகத் தலைவர்.

-விடுதலை நாளேடு 23 10 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக