புதன், 22 ஜூன், 2022

இராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே ஒப்பந்தப் பணி என்ற 'அக்னிபாத்' திட்டம் இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியுள்ளது

நடந்து முடிந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 47 ஆயிரம் மாணவர்கள் தமிழில் தோல்வி என்பது அதிர்ச்சிக்குரியது

வியாழன், 9 ஜூன், 2022

கிண்டி வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் 10ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு


சென்னை, ஜூன் 9 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வருகிற 10ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் வீர ராகவராவ் நேற்று (8.6.2022) வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து வருகிற 10.6.2022 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. 

முகாமில் 30 வயதிற்கு உட்பட்ட 8ஆம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2, அய்டிஅய், டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வி தகுதி உடைய அனைவரும் கலந்துகொள்ளலாம்.  இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு பணி காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளை ஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையப் பத்திரம் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் அறிவிப்பு