வெள்ளி, 4 அக்டோபர், 2019

விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை தவணை முறையில் வழங்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை

சென்னை, அக். 4- விபத்தில் பாதிக் கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகையை மாதாந்திர தவணை அடிப்படையில் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக் கால தடைவிதித்து உத்தரவிட்டுள் ளது.

மோகன் என்பவரின் விபத்து தொடர்பாக திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் இழப்பீடு கோரி 3 வழக்குகள் தொட ரப்பட்டது. இது குறித்து சம்மந்தப் பட்ட சோழமண்டலம் காப்பீடு நிறுவனம் சென்னை உயர்நீதிமன் றத்தில் வழக்கு  தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந் துரு தலைமையில் ஒரு விசாரணை குழுவை அமைத்து போலி இழப் பீடுகள் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்த முறை கேடுகள் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி சந்துரு குழு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், விபத்து வழக்கு தொடர்பாக தீர்ப்பாயங்களில் உள்ள 56 வழக்கு ஆவணங்கள் காணவில்லை என்றும் 7  வழக் குரைஞர்கள் விபத்து வழக்குகளை கோருவதில் முறைகேடுகளை செய் ததாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில் கடந்த ஆகஸ்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக சிபிசிஅய்டி விசா ரணை நடத்த வேண்டும். முறை கேட்டில் ஈடுபட்ட 7  வழக்குரை ஞர்கள் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.  இழப்பீடு பெறுபவர்களுக்கு வருடாந்திர முதலீட்டு திட்டத்தின் அடிப்படை யில் மாதாமாதம் தவணை முறையில் பணத்தை அவர்களின் கணக்கில் காப்பீட்டு நிறுவனங்கள் வைப்புச் செய்ய வேண்டும். அந்த தொகையை சம்மந்தப்பட்டவர்கள்  வங்கியில் சென்று பெற்றுக்கொள்ளலாம். இந்த உத்தரவு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட வேண் டும் என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அனைத்து தீர்ப்பாயங்களுக்கும், டிஜிபிக்கும்  அனுப்ப வேண்டும் என்று உத்தர விட்டார். இதையடுத்து, நீதிபதி பி.என்.பிரகாஷின் உத்தரவை எதிர்த்து சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றவளாகத்தில் உள்ள ‘லா அசோசியேஷன்’ சார்பில் அதன் தலைவர் செங்குட்டுவன் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் சரண், ஏ.எஸ்.போபண்ணா ஆகி யோர் முன்னிலையில் விசார ணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விபத்து இழப்பீடு தொகையை தவணை முறையில் செலுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.

இதுகுறித்து வழக்குரைஞர் வி.எஸ்.சுரேஷ் கூறும்போது, உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இழப்பீடு கோருபவர்களுக்கு பெரும் நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது. கடன் வாங்கி மருத்துவ  சிகிச்சை பெறு பவர்களுக்கு இழப்பீடு தொகை முழுமையாக கிடைத்தால்தான் நல்லது. தவணை முறையில் கிடைத் தால் எதுவும் செய்ய முடியாது. ஏழ்மையில் உள்ளவர்களை இந்தத் திட்டம் பாதிக்கக்கூடும். பாதிக்கப் பட்டவருக்கு  உடனடியாகவும் முழு மையாகவும் இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டால்தான் சிகிச்சைக்கு உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

- விடுதலை நாளேடு, 4 .10 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக