நடைபாதைக் கோயில்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடைபாதைக் கோயில்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

சட்ட விரோத கோயில்களும் நீதிமன்ற தீர்ப்புகளும்

 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என். கிருபாகரன், தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு ஓர் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது.

"சாலைகளை ஆக்கிரமித்து கோவில்களைக் கட்ட வேண்டும் என்று எந்தஒரு மதக் கடவுளும் சொல்லவில்லை. ஆனால் மதத்தின் பெயரை எந்தெந்த வகையிலோ எல்லாம் தவறாகப் பயன்படுத்துவது மனிதன் மட்டும்தான்" என்று நறுக்குத் தெறித்ததுபோல தீர்ப்பில் கூறி இருக்கின்றனர்.

வேலூர் நாராயணன் அவர்கள் சென்னை மாநகர மேயராக இருந்தபோது நடைபாதைக் கோயில்களை எல்லாம் சரமாரியாக இடித்துத் தள்ளினார். ப. உ.சண்முகம் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதும் இந்தத் 'திருப்பணி' நடைபெற்றது.

கடவுள், கோயில்கள் ஒழுக்கக் கேடான அணுகு முறைகளில் சட்ட விரோதமாக உருவாக்கப்படுவதைப் பற்றி யாருக்கும் வெட்கமில்லை.

சென்னை சைதாப்பேட்டையில் மாடல் பள்ளி எதிரே மிக முக்கியமான பகுதியில், நான்கு வழிப்பாதையில் ஒரு பாதையையே முழுமையாக அடைத்துக் கோயில் கட்டப் பட்டுள்ளது.  செங்கற்பட்டு முதன்மைச் சாலையிலும் இந்த யோக்கியதைதான். (குருக்களுக்கும் குடியிருப்பும் உண்டு).

சென்னையில் மக்களின் நடைபாதைகளில் எங்கு பார்த்தாலும் கோயில்கள் - கண்டிப்பாக உண்டியல்கள் உண்டு. அன்றாடம் உண்டியல் வசூல் யாருக்குப் போய் சேர்கிறது? சமூக விரோத காரியங்கள் இந்தக் கோயில்களை ஒட்டி நடந்து கொண்டுதான் உள்ளன. காவல்துறைக்குத் தெரியாமல் நடக்க முடியாதே! எப்படி இவற்றையெல்லாம் அனுமதிக்கிறார்கள் என்பது முக்கியமான கேள்வியாகும்.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில், "தமிழ் நாட்டில் 77,450 கோயில்கள் அனுமதியின்றிக் கட்டப்பட் டுள்ளன. இக்கோயில்கள் அகற்றப்பட வேண்டும். இதனைச் செயல்படுத்தாத மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வர வேண்டும்" என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததுண்டு (14.9.2010).  11 ஆண்டுகள் ஓடி விட்டன. உச்சநீதிமன்றத் தீர்ப்பு மதிக்கப்பட்டதா?

உச்சநீதிமன்றமாவது நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி, அதன் மீது நடவடிக்கையைத்தான் எடுத்ததா?

ஏனிந்த நிலை? சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதானே. கோயில் - குளம் என்றால் சட்டமும், தீர்ப்பும் நழுவி விடுமா?

நடைபாதைக் கோயில்களால் மக்களுக்கு எவ்வளவு இடையூறு என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. விபத்துக்கள் பெரும்பாலும் நடப்பதற்கு இந்த நடைபாதைக் கோயில்களும் முக்கிய காரணம்தானே.

கோயில் என்பது ஒரு சுரண்டலுக்கான வியாபார கருவியாகி விட்டது என்பது உண்மையிலும் உண்மை.

இதில் என்ன வெட்கக் கேடு என்றால் ஆக்கிரமிப்புகள் என்று சொல்லி, குடிசைகளையும், ஏன் கான்கிரீட் வீடுகளையும், கடைகளையும் கண் மூடித்தனமாக இடித்துத் தள்ளும் அரசு இயந்திரம் - கோயில்களை மட்டும் அப்படியே விட்டு விட்டு செல்வதையும் பார்க்க முடிகிறது.

சர்வ சாதாரணமாகப் பொது மக்கள் கோயில் மட்டும் நடுநாயகமாக நிற்பதைப் பார்க்க முடிகிறது.  உயிருள்ள மனிதனின் குடியிருப்புகளை இடிக்கலாமாம். ஆனால் குழவிக் கல்லுக் கடவுள் குடியிருப்பதாகக் கூறப்படும் கோயில்களை மட்டும் இடிக்கக் கூடாதா? இது என்ன சட்டம் - ஒழுங்கு முறை? இப்படி சட்டமும், அரசு இயந்திரமும் ஒரு சார்பாக நடந்து கொண்டால் சட்டத்தின்மீதும், அதனைச் செயல் படுத்தும் அரசுமீதும் எப்படி நம்பிக்கையும் மரியாதையும் ஏற்படும்?

கோயில்களை இடித்தால் எந்தக் கடவுள் கேட்கப் போகிறது? நேர்மையான அதிகாரிகளால் சட்டப்படி இடிக்கப்பட்ட கோயில்களில் இருந்த எந்தசாமி   அல்லது கடவுள் அதிகாரிகள் முடியைப் பிடித்துத் தடுத்தது?

கோயில்கள் பக்திக்கானது என்பதெல்லாம் வெறும் வாய்ப் பேச்சுதான் - உண்மையில் வியாபாரத்துக்காக ஏற்பாடு செய்யப்படுபவைதான்.

இதில் என்ன கொடுமை என்றால் அரசு நிலத்தில் அனுமதியின்றிக் கட்டப்படும் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அமைச்சர்களே கலந்து கொண்டதுதான்!

உயர்நீதிமன்றமும் சொல்லிவிட்டது. உச்சநீதி மன்றமும் கூறிவிட்டது. அரசுகள் என்ன செய்யப் போகின்றன என்பதுதான் முக்கிய கேள்வியாகும்.

இப்பொழுதுள்ள அரசு சட்டப்படி நியாயப்படி நடந்து கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

வெள்ளி, 8 நவம்பர், 2019

பாதைகளை மறித்துக் கட்டப்பட்ட கோவில்களை அகற்ற அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

‘இந்து' ஏடு வெளியிட்டுள்ள அரசாணைகள்

சென்னை, நவ. 8  அரசு நிலங் கள், சாலைகள், தெருக்கள், பூங்காக்கள் போன்றவற்றில் அனுமதியின்றி சட்டவிரோத மாக கட்டப்பட்ட வழி பாட்டுத் தலங்களை இடிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து பொதுநலவழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று அரசிடம் கேள்வி கேட்டுள்ளது.

பேராசை கொண்ட நபர் கள் மற்றும் நில ஆக்கிரமிப்புக் கும்பல்கள் அரசு நிலம் மற் றும் பொதுச்சொத்துக்களை அபகரித்துக் கொண்டு அங்கு கோவில்களைக் கட்டி, அதன்மூலம் அங்கு பிரச் சினைகளை உருவாக்கி, அவ் விடங்களை தங்களதாக்கிக் கொள்ள திட்டமிட்டுள்ளன. இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழ கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் எம்.கண்ணதாசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.  சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு  நீதிபதி எம்.சத்ய நாராயனன், என்.சேசசாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசு வழக்குரைஞரான ஜெயபிரகாஷ் நாராயணனி டம் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர்; மேலும் தமிழக அரசிடமும் ஆக்கிர மிப்பு நிலங்களில் உள்ள கோவில்களை அகற்ற அரசு இதுவரை மேற்கொண்ட நட வடிக்கை என்ன என்றும் கேட்டனர்.

நிலங்களை ஆக்கிரமிக்க வும், மோசடியாக பணம் சேர்க்கவும் திடீரென்று சாலைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கோவில்கள் முளைத்து வருகின்றன. இதனால் வாகன போக்குவரத்து நெரி சல் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்திற்குப் பெரிதும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற வழிப்பாட்டுத் தலங்கள் மோசடிக்காகவும் நிலத்தை அபகரிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படு கிறது. இது தொடர்பாகவே பொதுநலவழக்கு தொடரப் பட்டது. இவ்வாறு கட்டப் பட்ட கோவில்களை இடித்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டு மென்று 2003, 2005, 2010 போன்ற ஆண்டுகளில் தொடர்ந்து வழக்குகள் தொடரப்பட்டன. 2005-ஆம் ஆண்டு ராமகிருஷ்ணன் என் பவர் கோவையில் உள்ள வருமான வரித்துறை அலுவ லகத்தின் வளாகத்தில் கட் டப்பட்ட கோவிலை இடிக் கக் கோரி ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் அரசு நிலங்களில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களில் முன்பு நடந்த வழக்குகள் குறித்தும் அதன் தீர்ப்புத் தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என் றும் கேள்வி எழுப்பினர்.

முக்கியமாக அரசு கடந்த ஆண்டு தாக்கல் செய்த சட்டவிரோத கோவில் உள் ளிட்ட இதர வழிபாட்டுத் தலங்களின் பட்டியலை சுட்டிக்காட்டினர். அதில் இந்துமதக்கோவில்கள் 3003, கிறிஸ்தவ மதக் கோவில் மற்றும் தர்காக்கள் போன் றவை 140 என்று பட்டி யலிடப்பட்டுள்ளது.

மாநில அரசு 1968 முதல் அரசு அலுவலகங்களில் கட வுள் வழிபாட்டுச் சின்னங்கள், படங்கள், சிலை உள்ளிட்ட வற்றை வைக்கக் கூடாது; அரசு நிலங்களில் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங் கள் கட்டக் கூடாது என்று அரசாணை வெளியிடப்பட் டுள்ளது. ஆனால், இது தொடர்ந்து மீறப்பட்டு வரு கிறது. அரசு அலுவலகங் களில் எந்த மத விழாக்களும் கொண்டாடப்படக் கூடாது. மதச்சார்பற்ற அரசு மதம் தொடர்பான விவகாரங் களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என அரசு திட்ட வட்டமாக அறிவித்துள்ளது. ஆனால் அரசின் இந்த உத் தரவுகள் தொடர்ந்து மீறப் பட்டுக் கொண்டு வருகிறது என்று மனுதாரர் குறிப்பிட் டிருந்தார்.

இதனைத் தொடந்து நீதி பதிகள் கூறியதாவது:  ‘‘சாலை கள், அரசு நிலங்கள் ஆகிய வற்றை ஆக்கிரமித்து கட்டப் பட்டுள்ள வழிபாட்டுத்தலங் களை அகற்றுவது தொடர் பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது தொடர்பாக டிசம்பர் 6 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட் டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் வக்பு வாரியம் மற் றும்பேராலயங்களின் அமைப்புகளையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ள னர். இதையடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். எந் தெந்த ஆண்டுகளில் அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட் டன என்பதை இன்றைய ‘இந்து' ஆங்கில ஏடு விரி வாகவே வெளியிட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் வழிபாடு தொடர்பான படங் கள், சிலைகள் உள்ளிட்ட எந்த ஒரு மதச் சின்னங்களும் இருக்ககூடாது. 26.4.1968 தமி ழக அரசாணை வெளியீடு

இதே விதியை வலியுறுத்தி 13.12.1993- ஆம் ஆண்டுமீண்டும் ஒரு ஆணை வெளியிடப் பட்டது

இதே கருத்தை வலியுறுத்தி மத்திய அரசின் உள்துறை அமைச்சரகம் 4.5.1994- ஆம் ஆண்டு அனைத்து மாநில அரசாங்களுக்கும் அரசு அலு வலகங்களில் மதம் தொடர் பான எந்த ஒரு சின்னம், படம், சிலைகள் இருக்கக் கூடாது என்று உத்தர விட் டது.

29.1.1997-ஆம் ஆண்டு  மதம் தொடர்பான எந்த ஒரு விழாவும் அரசு அலுவலங் களில் கொண்டாடக்கூடாது என்று மத்திய அரசு மாநில அரசிற்கு கடிதம் மூலம் உத் தரவிட்டது.

29.92009- இல் உச்ச நீதிமன்றம், அரசு மற்றும் பொது நிலங்களில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கோவில்களை அகற்றிட உத்தரவிட்டது.

17.3.2010-- சென்னை உயர்நீதிமன்றம் மாநில அரசு 1968-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையைக் கட் டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட் டது.

31.1.2018-- அரசு மற்றும் பொது இடங்களில் கட்டப் பட்ட வழிபாட்டுத்தலங்களை அகற்றுவது தொடர்பாக மாநில நீதிமன்றங்கள் கண்காணிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.

22.2.2019- தமிழகம் முழுவதும் அரசு மற்றும் பொது நிலங்களை ஆக்கிர மித்துக் கட்டப்பட்ட வழி பாட்டுத்தலங்களின் எண்ணிக்கை 3168 என்று பட்டியலிட்டுக் கூறியுள்ளது.

- விடுதலை நாளேடு 8 11 19