திங்கள், 14 அக்டோபர், 2019

கடவுள் மறுப்பு வாசகங்கள் - தீர்ப்பு

'விஜயபாரதத்துக்கு' மட்டும்தான் மனம் புண்படுமா? 

பெரியார் சிலைப் பீடங்களில் இடம் பெற்றுள்ள கடவுள் மறுப்பு வாசகங்கள் பக்தர்களின் மனத்தைப் புண்படுத்துவதாக வும், உடனே அவற்றை நீக்கி உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெய்வ நாயகம் என்பவர் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக் குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் வழக்கை விசாரித்து மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்கள் (4.9.2019). கடவுள் உண்டு என்று கூறுவதற்கு ஒருவருக்கு உரிமை உண்டென்றால், அதனை மறுத்துக் கூறுவதற்கும் உரிமை உண்டென்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தீர்மானமாகக் கூறிவிட்டனர். இதனைப் பொறுக்கமாட்டாத ஆர். எஸ்.எஸ். வார இதழான விஜயபாரதம் (20.9.2019) லபோ திபோ என்று குதித்துத் தலையங்கம் தீட்டியுள்ளது. * 'கடவுள் இல்லை' என்று சொல்வதற்கு உரிமை உண்டு என்பதில் மாறு பட்ட கருத்து இல்லை. ஆனால் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று சொல்ல அரசியல் சாசனம் அனுமதிக் கிறதா என்ற கேள்விக்கு நீதிமன்றம் பதில் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். * கோயிலுக்கு சென்று சாமி கும்பிடு கிற ஹிந்துக்கள் மட்டுமல்ல... சர்ச்சுக்கு சென்று வழிபாடு செய்கிறவர்கள், மசூதிக் குச் சென்று தொழுகை நடத்துகிறவர்கள் என எல்லோரும் இவர்கள் கணக்கில் காட்டுமிராண்டிகளா என்பதையும் விளக் கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். * ஆழ்வார்களும் நாயன்மார்களும் வள்ளலாரும் ரமண மகரிஷியும் விவே கானந்தரும் அரவிந்தரும் இவர்கள் கணக்கில் முட்டாள் என்று சொல்ல வரு கிறார்களா என்பதைத் தெளிவுபடுத்தி யிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த வக்கிர வாசகம் மக்கள் மனதைப் புண்படுத்தி வருகிறது என்பது கற்றறிந்த நீதிபதிக்கு உறைக்கவில்லையே என்பது தான் சோகம். - என்று ஆர்.எஸ்.எஸ். வார இதழான விஜயபாரதம் மனம் மிகவும் புண்பட்டுப் போய் ஒப்பாரி வைக்கிறது. அதே நேரத்தில் ஒன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். கடவுள் மறுப்பாளர் களையும், புத்தர், சமணர்களையும் பற்றி இவர்களின் புராணங்களும், இதிகாசங்க ளும், பக்தி இலக்கியங்களும் எப்படியெல் லாம் எழுதியும், திட்டியும் தீர்த்துள்ளன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? தந்தை பெரியார் தனது இறுதி உரையிலேயே கூட (19.12.1973, சென்னை தியாகராயர் நகர்ப் பொதுக் கூட்டத்தில்) இது பற்றிக் குறிப்பிட்டுள்ளாரே!). நான் பேச்சை தொடங்குவதற்கு முன்பாக, நமது நண்பர் உயர்திரு. வீரமணி அவர்கள், நம்முடைய கழக லட்சியச் சொல்லை விளக்கினார்கள். நானும் விளக்கும்படி கேட்டுக்கொண்டேன். அதிலே, நம் கழகத் தோழர்களுக்கு ஒன்றும் கஷ்டம் இருக்காது. புதிதாக வருபவர்களுக்கும், பகுத்தறிவைப்பற்றி கவலைப்படாமல், மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கும் கொஞ்சம் சங்கடம் ஏற்பட்டிருந்தாலும் இருக்கலாம். என்னடா, இவன் கடவுளை இப்படி எல்லாம் சொல்லுகிறான் என்று. கடவு ளைச் சொல்கிறதோடு இருக்காமல் கட வுளை நம்புகிறவர்களைக்கூட முட்டாள் பயல் என்று சொல்லுகிறானே - இது என்னடா என்று சிலபேருக்குக் கோபம் வரலாம். கடவுள் சங்கதியை எடுத்தால் ஒருத்தனுக்கு ஒருத்தன் - நம்பிக்கைக் காரனும், நம்பிக்கை இல்லாதவனும் அவனை இவன் முட்டாள் என்று சொல் லித்தான் ஆகணும். இவனை அவன் முட்டாள் என்று சொல்லித்தான் ஆக வேணும். ஆனாலும், நாங்கள் பகுத்தறிவை அடிப்படையாக வைத்துக் கடவுள் சங்கதி பேசுகிறதனாலே கொஞ்சம் மரியாதை யாகப் பேசுவோம்; மானத்தோடு பேசு வோம். பகுத்தறிவு இல்லாதவனுங்க, கொஞ்சம் கடுமையாகத்தான் பேசுவா னுங்க - நம்மைவிட மோசமாக. உதாரணமாக சொல்கிறேன். நாலா யிரப் பிரபந்தம் பாடின ஆழ்வார்கள் - தேவாரம், திருவாசகம் எல்லாம் பாடின நாயன்மார்கள் - இந்தப் பசங்க சொன் னதைவிட நாங்கள் அதிகமாகச் சொல்ற தில்லை. அதை மனசிலே வைத்துக் கொள் ளுங்கள். நாம் இவனைத்தான் திட்டு கிறோமே தவிர, இவனுடைய புத்தியைத் தான் திட்டுகிறோமே தவிர, அந்தப் பசங்க சொன்னதுபோல, அவர்கள் பெண் டாட்டி, பிள்ளைகளை நாம் ஒன்னும் குறை சொல்லவில்லை. நீங்கள் நினைக் கணும், என்னடா, இப்படிச் சொல்கிறானே என்று சில பேருக்குக் கோபம் இருக்கும். ஆனால், அவனுக, நாலாயிரப் பிர பந்தம் பாடியிருக்கிறவன், கடவுள் இல் லைங்கிறவனை எல்லாம் கொல்ல வேணும்; அதுதான் கடவுள் பக்தனுக்கு அடையாளம் அப்படின்னு அவன் பாடியிருக்கிறான். தேவாரம் பாடினவன், கடவுள் இல்லை என்கிறவன் பெண் டாட்டிக் கிட்டேயெல்லாம் நான் படுக் கணும்; கடவுளே, எனக்கு அந்த வசதி பண்ணிக்கொடுன்னு கேட்டிருக்கிறான். யார் என்று கேட்பீர்கள்; பேர்கூடச் சொல்வேன் (பின்னால் இருந்து ஒருகுரல் சொல்கிறது சம்பந்தன் என்று) - சம்பந்தர் என்கிற ஒரு பக்தன் - பக்தருன்னு அந்த அயோக்கியப் பயல். அவன் சொல்லி இருக்கிறான், கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டிக்கிட்டேயெல்லாம் நான் படுக்கணும் என்று. கடவுளைக் கேட் கிறான், இசைத்து வை என்று. நாலாயிரப் பிரபந்தத்திலே ஓர் ஆழ்வார் - தொண்டரடிப் பொடியார் - தொண்டரடிப் பொடிங்கிறவன் - கடவுள் இல்லை என்கிறவனை எல்லாம் வெட்டு, வெட்டு, வெட்டு என்கிறான். இது பாட் டிலே நடந்தது. காரியத்திலே எவ்வளவு நடந்திருக்கு தெரியுமா? கடவுளைப்பற்றி அறிவைக் கொண்டு ஆராய்ந்து பாருங்கடான்னு சொல்லி, சிந்தியுங்கடான்னு சொன்னான் - அவ் வளவு பச்சையாகக்கூட சொல்லவில்லை, புத்தன். நம்பி விடாதீங்க... சிந்தியுங்கன் னான். கடவுள் நம்பிக்கைக்காரப் பசங்க அவனுங்களை என்ன பண்ணுனாங்க? வெட்டுனானுங்க! வெட்டி, வெட்டி, தலை ஒரு பக்கம், முண்டம் ஒரு பக்கம் குவிச் சானுங்க. இந்த வெட்டினதும், குவிச்சதும் கோவிலிலே எல்லாம் இன்னும் சித்திர மாக இருக்கிறது; கல்லிலே அடித்து வைத் திருக்கிறான் - ஒருவன் காலைப் பிடிக் கிறான், ஒருவன் தலையைப் பிடிக்கிறான், ஒருவன் வெட்டுறான். இன்னொரு கூட்டம், சைவக் கூட்டம் - அவனுங்க, கழுவேத்துணானுங்க, கடவுள் இல்லை என்று சொன்னவனை யெல்லாம். கழுவு நிறுத்தி - நிர்வாணமாக ஆக்கி - ஆசனத்திலே உட்டு, மூளை தலைக்கு மேல வருகிறாற் போலக் கழுவேற்றினார்கள். எத்தனைப் பேரை, எண்ணாயிரம் பேரை. இன்றைக்கு அது உற்சவம் நடக்கிறது - தினமும்; வருசந் தோறும் புராணம் இருக்கிறது; சரித்திரம் இருக்கிறது. ஆனதினாலே, கடவுள் இருக்கிறது என்று சொல்ற அயோக்கியப் பசங்களைப் போல, நாங்கள், அவ்வளவு அசிங்கமாகப் பேசவில்லை. முட்டாள், மடையன் என்று சொல்லுகிறோம். அதை நாங்கள் ருஜுப் பண்ணுவோம். நம் ஜனங்களுக்குப் புரியாததினாலே, என்ன இந்தப் பசங்க இப்படி பேசுகிறார்களே என்று நினைப்பீர்கள். அது புரியாதது என்று சொல்லமாட்டேன் - மானமில்லாத தன்மை.  தனது இறுதிப் பேருரையில் கூட தந்தை பெரியார் இவ்வாறு பேசியுள்ளாரே - ஒரே ஒரு வரியையாவது மறுக்க முடி யுமா? மண்ண கத்திலும் வானிலும் எங்கு மாய்த் திண்ண கத்திரு வாலவா யாய்அருள் பெண்ண கத்தெழில் சாக்கியப் பேய்அமண், பெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே என்று சைவ சமயக் குரவர்களில் ஒருவனான திருஞான சம்பந்தர் என்னும் சிறுவன் (16 வயதிலேயே அற்ப ஆயுளில் பரிதாப மரணம்!). ஜைன, பவுத்தர்களின் அழகிய பெண்களைக் கற்பழிக்க கட வுளே அருள்புரி வாயாக என்று பாடி யிருக்கிறானே. அதுபோலவா பெரியார் சிலையின் கீழ் உள்ள வாசகம் அமைந் துள்ளது? குற்றாலக் குறவஞ்சி என்னும் பக்தி சொட்டும் இலக்கியத்தில் ஒரு பாடல்: தேவருக் கரியார் மூவரிற் பெரியார் சித்திர சபையார் சித்திர நதிசூழ் கோவிலிற் புறவிற் காவினி லடங்காக் குருவிகள் படுக்கும் குளுவனு நானே. காதலஞ் செழுத்தார் போதநீ றணியார் கைந்நரம் பெடுத்துக் கின்னரந் தொடுத்துப் பாதகர் தோலால் பலதவி லடித்துப் பறவைகள் படுக்கும் குறவனு நானே. ஒருகுழை சங்கம் ஒருகுழை தங்கம் உரியவி நோதர் திரிகூட நாதர் திருநாமம் போற்றித் திருநீறு சாற்றுந் திரிகூட நாமச் சிங்கனு நானே. (திரிகூடராசப் பக்கவிராமம் திருத்திய பதிப்பு, 1981) பொதுத்தமிழ் - மேனிலை இரண்டா மாண்டு பாடத்தில் கூட இடம் பெற்றிருக் கிறதே. பொருள்: அடியார்கள் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி வழுத்தும் - சிவ பெருமானின் திருநீற்றை அணியாதவர் களின் கைந்நரம்பினை எடுத்துக் கின்ன ரம் என்ற இனிய யாழில் தொடுத்து, நீறில்லா நெற்றியினையுடைய தீவினை யாளர்களுடைய (பாவிகளுடைய) தோலி னால் செய்யப்பட்ட தவிலினை அடித்துப் பறவைகளைப் பிடிக்கின்ற குறவனும் நானே. இந்தப் பாடலுக்கு என்ன பதில் விஜயபாரதமே - சங்கபரிவார்களே! மனம் உங்களுக்கு மட்டும்தானா? மற்றவர்களுக்குக் கிடையவே கிடை யாதா?
- விடுதலை ஞாயிறு மலர், 21.9. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக