கண்டணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்டணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 ஏப்ரல், 2021

நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!


நேற்று (13.4.2021) நெடுஞ்சாலைத் துறையின் அறிக்கையில் ‘பெரியார் .வெ.ராநெடுஞ்சாலைபெயர் மாற்றப்பட்ட கொடுமையைப் போலவேஅண்ணா சாலை'யின் பெயரும் கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு' என்றும்சென்னை காமராசர் சாலை (கடற்கரை சாலை)யின் பெயரும் கிராண்ட் நார்தென் டிரங்க் ரோடுஎன்றும் குறிக்கப்பட்டிருப்பதாக நமக்கு சில தகவல்கள் வந்துள்ளன.

அதாவது ‘மவுண்ட் ரோடுஎன்பது ‘அண்ணா சாலைஎன்று மாற்றப்பட்ட நிலையில்மீண்டும் பெரியாருக்கு இழைக்கப்பட்ட அநீதியைஅண் ணாவுக்கும்காமராசருக்கும் செய்துள்ளனர்!

விமான நிலையத்தில் அண்ணாகாமராசர் பெயர்களும் அகற்றப்பட்டுஅப்படியே நீடிக்கும் கொடுமையில் மாற்றமில்லை.

விரைவில் இந்த அநியாய அக்கிரமங்களைக் கண்டித்துமாபெரும் மக்கள் போராட்டத்தைத் தொடங்க மக்களை தமிழ்நாட்டு .தி.மு.அரசு ஏனோ தூண்டுகிறது!

வீண் வம்பை விலைக்கு வாங்கவேண்டாம்!

அரசே இப்படி போராட்டங்களைத் தூண் டலாமாஅண்ணா பெயரில் கட்சி - ஆனால்அண்ணா பெயருக்கும் ஆபத்து என்றால்இதன் ‘‘மூலப் புருஷர்கள்'' யார்எந்தப் பின்னணியில் இந்த விஷமங்கள் விதைக்கப் பட்டன?

தமிழ்நாட்டு மக்களேஅறைகூவல்கள் எப்படி உருக்கொள்கின்றன பார்த்தீர்களா?

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

14.4.2021

பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்


சென்னைஏப். 14- பெரியார் .வெ.ராநெடுஞ்சாலையின் பெயர்  மாற்றப் பட்டுள்ளதற்கு தமிழக  தலைவர்கள் பலரும் கண்டன தெரிவித்துள்ளனர்விவரம் வருமாறு:

வைகோ கடும் கண்டனம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை வரு மாறு,

சென்னை மய்யத் தொடரி நிலை யம்ரிப்பன் மாளிகை அருகேநெடுஞ்சாலைத் துறையினர்கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று பெயர் பொறித்த பலகையைபுதிதாக நாட்டி இருக்கின்றார்கள்.

1979 ஆம் ஆண்டுதந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவைஓராண்டு தொடர் விழாவாக எம்.ஜி.ஆர்தலைமையில்  .தி.மு.அரசு கொண்டாடியது.

அப்போதுபூவிருந்தவல்லி நெடுஞ்சாலைஎன்ற பெயரை ‘‘பெரியார் .வெ.ராநெடுஞ்சாலை’’ என்று மாற்றமக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுமுதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அவ்வாறு பெயர் மாற்றம் செய்து அரசு ஆணை பிறப்பித்தார்.

ஆனால்எம்.ஜி.ஆர்.பெயரைச் சொல்லிக் கொண்டு ஆட்சி நடத்து கின்ற எடப்பாடி பழனிசாமி அரசுநெடுஞ்சாலைத் துறை இணைய தளத்தில்தந்தை பெரியார் பெயரை நீக்கிவிட்டு ‘‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு’’ என்று பெயர் மாற்றம் செய்து இருக்கின்றது.

ஆர்எஸ்எஸ் சங் பரிவார் வகுத்த வியூ கத்தின்படிடில்லி எஜமான் மோடி பிறப்பித்த ஆணையைஅடிமை எடப்பாடி நிறைவேற்றி இருக்கின்றார்தமிழ்நாட்டின் தன் மானத்தை அடகு வைத்துவிட்டார்.

ஏற்கெனவேசென்னை வான் ஊர்தி நிலையத்தில் இருந்துகாம ராசர் அண்ணா பெயரை நீக்கியதை யும் அடிமை எடப்பாடி அரசு கண்டு கொள்ளவில்லைஅதன் விளைவாகஇப்போது இந்த மாற்றம் நடந்தது இருக்கின்றது.

தமிழக முதலமைச்சர் மட்டும் அன்றி நெடுஞ்சாலைத் துறைக்கும் பொறுப்பு வகிக்கின்ற எடப்பாடிக்குசூடு சொரணை இருந்தால்தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளஇந்தப் பெயர் மாற்றத்தை உடனே நீக்க வேண்டும்; ‘‘பெரியார் .வெ.ராநெடுஞ்சாலை’’ என்ற பெயர் தொடர வேண்டும்.

தவறினால்மே மாதம் பொறுப்பு ஏற்கின்ற திமுக ஆட்சி தந்தை பெரியாரின் பெயரை மீண்டும் நிலைநிறுத்தும்.

இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள் ளார்.

இரா.முத்தரசன் கண்டனம்

சென்னை பெருமாநகரில் கடந்த 1979 ஆம் ஆண்டில்பெரியார் .வெ.ராநூற்றாண்டு விழாவை யொட்டிபொதுமக்களின் கோரிக் கையை ஏற்று அப்போதைய முதல மைச்சர் எம்.ஜி.ஆர்முன்முயற்சியில் பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு “பெரியார் .வெ.ராநெடுஞ்சாலை”  என பெயர் சூட்டப்பட்டதுகடந்த 42 ஆண்டுளாக மக்கள் பயன்பாட்டில் பெரியார் .வெ.ராநெடுஞ்சாலை என்ற பெயர் நிலைத்து நிற்கிறதுஇந்த நிலையில் பெரியார் .வெ.ராநெடுஞ்சாலை என்ற பெயரை நீக்கி விட்டு, “கிராண்ட் வெஸ்ட்ன் டிரங்க் ரோடு” என பெயர் மாற்றம் செய்து பெயர் பலகை வைக்கப்பட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

பாஜகவின் அதிகார மிரட்டலுக்கு அடிபணிந்து கிடந்த எடிப்பாடி ஆட்சியில் தந்தை பெரியாரின் சிலை கள் உடைக்கப்பட்டனபெரியார் பற்றி ஆபாசமாக பேசி இழிவுபடுத் தினர்கருப்புச் சட்டைக்கு காவி சாயம் பூசிப் பார்த்தனர்காவி ஆடை யுடுத்தி அவமதித்தனர்இந்த இழி செயலில் தொடர்ந்து ஈடுபட்ட கும்பலைக்  கட்டுப்படுத்த எடப்பாடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லைஇப்போது 40 ஆண்டு களுக்கும் மேலாக மக்களிடம் பழகிப் போனமுன்னாள் முதல்வர் எம்ஜி ஆரால் சூட்டப்பட்ட பெரியார் ..வெ.ராநெடுஞ்சாலை என்ற பெயர் மாற்றப்படுகிறது என்றால் முதல மைச்சர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு தெரியாமல் நடந்ததாயார் நிர்ப் பந்தம் கொடுத்ததுபெரியாரின் பெயரை தமிழ்நாட்டில் நீக்கும் துணிவு எப்படி வந்ததுஎவர் ஒருவரும் வெட்கப்படவில்லையாஇந்த அக்கிரமச் செயலை தடுக்கும் முதுகெலும்பு கொண்ட எவரும் ஆளும்தரப்பில் இல்லையாவெட் கம்வெட்கம்இதனை ஒரு கணமும் சகித்துக் கொள்ள முடியாதுஉடன டியாக பெயர் மாற்ற உத்தரவை ரத்து செய்துபெரியார் .வெ.ராநெடுஞ்சாலை என்ற பெயர் நிரந்தரமாக நீடிக்கும் என தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்


சென்னையில் உள்ள பெரியார் .வெ.ராநெடுஞ்சாலையின் பெயரை கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என மாற்றம் செய்து நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.

1979இல் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை பெரியார் .வெ.ரா.நெடுஞ்சாலை என்று மாற்றி அதற்கான ஆணையையும் வெளியிட்டவர் அதிமுக நிறுவனரும்முன் னாள் முதலமைச்சருமான மறைந்த எம்ஜிஆர் அவர்கள்அந்த எம்ஜி ஆரின் பாதையில் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாகக் கூறிக் கொண் டுள்ள தற்போதைய தமிழக அரசு பெரியார் .வெ.ராநெடுஞ்சாலை என்ற பெயரை மாற்றி உள்ளது கண்டனத்திற்குரியது.

மத்திய பாஜகவின் ஆட்டத்திற்கு அடிபணிந்து இந்த பெயர் மாற்றம் நடந்துள்ளது என்பது வெட்ட வெளிச்சமான உண்மையாகும்இந்த பெயர் மாற்றத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்க மாட்டார்கள்.

எனவே இந்த புதிய பெயரை உடனடியாக நீக்கிமீண்டும் பெரியார் .வெ.ராநெடுஞ்சாலை என பெயர் மாற்றம் செய்திட உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என தமி ழக அரசை மனிதநேய மக்கள் கட்சி யின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.

இரா.அதியமான் கண்டனம்

தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில்   பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் .வெ.ரா நெடுஞ்சாலை என பெயர் சூட்டப்பட்டு  அழைக் கப்பட்டு வருகின்றது.

தற்போது நெடுஞ்சாலையின் பெயர் இல்லாமல் நெடுஞ்சாலைத் துறையால் வைக்கப்பட்டடிருக்கும் அறிவிப்புப் பலகையில்  Grand Western Trunk Road  என குறிப்பிட்டு வைத்திருப்பதற்கு ஆதித்தமிழர் பேரவை சார்பில்  கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

தமிழகத்தின் பண்பாடுமொழிகலாச்சாரம் என அனைத்திலும் படையெடுப்பு நடத்தி அதை  தனக்கேற்றவாறு மாற்றிட துடிக்கும் மதவாத சக்திகளுக்கு முழு நேர வேலையாட்களாக மாறிய  தமிழ கத்தின் தற்போதைய காபந்து அர சாக செயல்பட்டு வருபவர்கள் உட னடியாக இந்தப் பெயரை பெரியார் .வெ.ரா நெடுஞ்சாலை என மாற்றி அறிவிப்பு பலகை வைத்திட நட வடிக்கை எடுக்க வேண்டும் என  ஆதித்தமிழர் பேரவை சார்பில் வலியுறுத்துகின்றேன்.

தமிழுக்காகவும்தமிழ் மண்ணின் சுயமரியாதைக்காகவும் அரும்பாடு பட்டு உழைத்தவர் தந்தை பெரியார்.

தமிழர்களின் இதயத்தில் ஆழப் பதிந்ததுள்ள தந்தை பெரியாரின் பெயரை அந்தந்த இடத்தில் படிப் படியாக நீக்கம் செய்யத் துடிக்கின்ற மத்திய பாஜக அரசு தனது தேர்தல் அறிக்கையிலே தமிழகத்தின் பெயரை மாற்றுவதற்கும் முனைப்பு காட்டி யுள்ளது.

இதற்கு துளியும் கூட கவலை தெரி விக்காத எடப்பாடி அரசு தற்போது தேர்தல் முடிந்து  காபந்து அரசாக செயல்பட்டு வரும் நிலையில் இந்தப் பெயர் நீக்கம்மாற்றம் செய்து தமிழர்களின் நெஞ்சத்தில் கோபத்தை வரவைத்துள்ளது இந்த எடப்பாடி அரசு.

மே 2 தேர்தல் முடிவுகள் வந்தபின் வரப்போகும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு இந்த நெடுஞ்சாலைக்கு மீண்டும் பெரியார் .வெ.ரா நெடுஞ்சாலை என பெயர் மாற் றிடும் என திமுக தலைவர் மரியா தைக்குரிய தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது தமிழக மக்களுக்கு பெரும் நம்பிக்கையை தருகின்றது.

தொடர்ந்து தமிழகத்திற்கும்தமி ழக மக்களுக்கும் இந்த காபந்து அரசு செய்துவரும் அனைத்து துரோகங் களுக்கும் இன்னும் சில நாட்களில் தமிழக மக்கள் சபையில் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

டி.டி.வி தினகரன் கண்டனம்


சென்னையில் பெரியார் .வெ.ராநெடுஞ்சாலை பெயரை தமிழக அரசு மாற்றி இருப்பதற்கு .மு.மு.பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட் டரில் கூறியுள்ள அவர், ‘சென்னை - பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்அவர் களால் சூட்டப்பட்டிருந்த தந்தை பெரியார் பெயரை நீக்கியிருக்கும் பழனிசாமியின் காபந்து அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

சிறுபான்மை மக்களுக்காக பிரதமரிடம் கோரிக்கை விடுத்த அறிஞர்கள் - கலைஞர்கள் மீது தேசத்துரோக வழக்கா?: தலைவர்கள் கண்டனம்

சென்னை,அக்.6, தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தளபதி மு.க.ஸ்டாலின்
“சிறுபான்மையினருக்கு எதிரான கும்பல் வன்முறையைத் தடுத்து நிறுத் துங்கள்” என்றும், “மத நல்லிணக்கத்தையும், சகிப்புத்தன்மையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்” என்றும் பிரதமருக்கு கடிதம் எழுதிய, புகழ்வாய்ந்த பல்துறை பிரமுகர்கள் 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்திருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன், நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி போன்ற கலை - அறிவுலகச் சான்றோர்களை எல்லாம் “தேசத் துரோகிகள்” என்று முத்திரை குத்த நினைப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாது; சமூக அக்கறை உள்ள அத்தகைய முன்னோடிகளை தேசத் துரோகிகள் என்று சொல்வதைவிடப் பேரபாயம் வேறு எதுவும் இருக்க முடியாது; இது மிகவும் வெறுத்து ஒதுக்க வேண்டிய முன்னுதாரணம் ஆகும்.
சர்வாதிகாரத்தை கையில் எடுத்தவர்கள், அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்ட வர்கள், கருத்துச் சுதந்திரத்திற்கு கைவிலங்கு போட்டவர்கள் எல்லாம் ஜனநாயகத்தின் முன்பு இதுவரை படுதோல்வி அடைந்ததுதான் வரலாறு என்பதை, மத்தியில் இருக்கும் பா.ஜ.க. அரசு உணர வேண்டும்.
“ஆட்சி அமைக்கக் கிடைத்திருக்கும்  பெரும்பான்மை, மக்கள் மனமுவந்து அளித்தது. அதை திருப்பி எடுத்துக் கொள்ளும் மாட்சிமை மிக்க அதிகாரமும் மக்களிடமே இருக்கிறது”. இதுதான் ஜனநாயகம் கட்டமைத்து வைத்துக்கொண் டுள்ள தற்காப்பு அரண். அதை மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி உணர்ந்து, 49 பேருக்கு எதிரான தேசதுரோக வழக் கினை உடனடியாகத் திரும்பப் பெறுவதற் கான நடவடிக்கைகளை எடுத்து, இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வைகோ
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமருக்கு மடல் தீட்டிய 49 பேர் மீதும் தேசத்துரோகம், பொதுத்தொல்லை, மத உணர்வுகளைப் புண்படுத்துதல் மற்றும் சமாதானத்தை மீறும் நோக்கத்துடன் அவமதிப்பது உள்ளிட்ட இந்திய தண் டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனநாயக நாட்டில், கருத்துரிமையை பறிப்பதும், மாற்று கருத்து கூறுவோரை தேசத் துரோகிகளாக சித்தரிப்பதும் பாசிசத் தின் அடையாளம் ஆகும். இத்தகைய போக்கை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும். அறிஞர்கள், பல்துறை விற்பன்னர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு அரசு மற்றும் அரசு அமைப்புகள், நீதிமன்றம் ஆகியவற்றின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறது. கடிதம் எழுதிய மனிதாபிமானிகள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.
வன்முறைக்கு எதிராக கடிதம் எழுதிய வர்களுக்கு ஜனநாயக உள்ளம் படைத்த வர்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இரா.முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக தேசத்துரோக குற்றம் சுமத்தி வழக்குப்பதிவு செய்திருப்பது என்பது எந்தவொரு ஆட்சியிலும் நடந்ததாக தெரியவில்லை.
நாட்டில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சியா?. அல்லது சர்வாதிகார ஆட்சியா? என்ற அய்யப்பாட்டை இவ்வழக்கு ஏற்படுத் தியுள்ளது. தேசத் துரோக வழக்குப்பதிவு செய்திருப்பதை கண்டிப்பதுடன் இதனை திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரகாஷ்ராஜ்
பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியவர்கள் மீது தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து திரைப்படக்கலைஞர் பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது:-
‘கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருப்பது திகைப் பை ஏற்படுத்துகிறது. சமூகத்தில் நல்ல நிலைமையில் இருப்பவர்களுக்கே இந்த நிலை என்றால் உதவியற்றவர்களின் நிலையும் அடித்தட்டு மக்களின் நிலையும் என்னவாக இருக்கும்.
மோடி ஒரு நாட்டின் தலைவரான பிறகு அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதை நிறுத்த வேண்டும். அவர் இரு தரப்பின் கருத்துகளையும் கேட்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி இது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் சமுதாயத்தில் அச்சத்தை தூண்டுகிறார்.
கேள்வி கேட்பதால் எங்களை நீதிமன்றங் களில் நிறுத்த முடியும் என்றால் யாரும் உண்மையை பேச முன்வர மாட்டார்கள்’ என பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.
ராஜிவ்மேனன்

இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜிவ் மேனன் ‘பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோக வழக்கு என்பது மிகவும் வருத்தமானது. கடிதம் எழுதுவதில் என்ன தேசதுரோகத்தை பார்த்தீர்கள்?’ என்று கேட்டுள்ளார்.
வெற்றிமாறன்
இயக்குனர் வெற்றிமாறன் இதுகுறித்து கூறும்போது ’பிரதமருக்கு கடிதம் எழுதுவது என்பது ஜனநாயக முறையிலும் நாகரீக முறையிலும் விடுக்கப்பட்ட கோரிக்கை. தங்களுடைய சமூக பொறுப்பை தான் அவர்கள் செய்தார்கள்’ என்று கூறி இருக்கிறார்.
இதேபோல், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, எஸ்.டி.பி.அய். கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஜி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்டோரும் மத்திய அரசின் நடவடிக் கைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
- விடுதலை நாளேடு, 6.10.19