வெள்ளி, 11 அக்டோபர், 2019

150 ரயில்கள் இயக்கம் தனியார் வசம் போகிறது


150 ரயில்கள் இயக்கம் தனியார் வசம் போகிறது
புதுடில்லி, அக்.11 150 ரயில்களின் இயக் கத்தையும், 50 ரயில்வே நிலையங்களின் பராமரிப்பையும் தனியார் வசம் ஒப்படைப்பது குறித்த திட்டத்தை உருவாக்குவது தொடர்பான பணிக் குழுவை ரயில்வே அமைச்சகம் வியாழக்கிழமை அமைத்தது.
இதற்கான உத்தரவை ரயில்வே அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. அந்த உத்தரவில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:
அய்ம்பது ரயில் நிலையங்கள் உலகத் தரத்தில் மேம்படுத்துவது, உலகத் தரமுள்ள தொழில்நுட்பத்து டன் கூடிய 150 ரயில்களை இயக்குவது தொடர்பான திட்டத்தை வகுக்க, மத்திய செயலாளர்கள் அடங்கிய அதிகாரமளிக்கப்பட்ட குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ரயில்வே வாரியத் தலைவர், நீதி ஆயோக் தலைவர், நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி, மத்திய பொருளாதார விவாகரத் துறைச் செயலாளர், ரயில்வே நிதி ஆணையர், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலாளர் ஆகியோர் இடம் பெறுவர். ரயில்வே பொறியியல் வாரிய உறுப்பினர், ரயில்வே போக்குவரத்து வாரிய உறுப்பினர் ஆகியோரும் பணிக்குழு வில் இடம்பெற வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர்வி.கே. யாதவுக்கு நீதி ஆயோக் தலைமை செயல் அதி காரி (சிஇஓ) அமிதாப் காந்த் கடிதம் அண்மையில் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் உள்ள 400 ரயில் நிலை யங்களை உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக மாற்ற ரயில்வே துறை முயற்சித்து வருகிறது. இதுவரை சில ரயில் நிலையங்களே அவ்வாறு மாற்றப்பட்டுள்ளன. அதையடுத்து இந்த விவகாரம் குறித்து ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. குறைந்தபட்சம், 50 ரயில் நிலையங் களை உலகத் தரம் வாய்ந்தவையாக விரைவில் மாற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அமைச்சர் கருதினார். அண்மையில், 6 விமான நிலையங்களை தனியாருக்கு ஒப்ப டைத்ததற்கும் மத்திய குழு அமைக்கப்பட்டது. அதே போன்று இந்தத் திட்டத்துக்கும் பணிக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தடங்களில் ரயில் களை இயக்கும் பணியை தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைப்பது குறித்து ஏற்கெனவே ரயில்வே அமைச்சகம் விவாதித்து வருகிறது. முதல்கட்டமாக 150 ரயில்களை தனியார் நிறுவனங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர் பான திட்டத்துக்கு விரைந்து செயல் வடிவம் அளிக்க பணிக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிக் குழுவில் ரயில்வே பொறியியல் வாரிய உறுப்பினர், ரயில்வே போக் குவரத்து வாரிய உறுப்பினர் ஆகி யோரும் இடம்பெற வேண்டும் என்று அமிதாப் காந்த் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
லக்னோ - புதுடில்லி இடையே கடந்த அக்.4 ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வரும் தேஜஸ் விரைவு ரயில்தான் ரயில்வே துறை நேரடியாக இயக்காத முதல் ரயிலாகும். எனினும், தேஜஸ் விரைவு ரயிலை இயக்கி வருவது ரயில்வே துறையின் துணை நிறுவனமான அய்.ஆர்.சி.டி.சி. என்பது குறிப்பிடத்தக்கது.
டில்லியில்  29.9.2019 அன்று நடந்த ரயில்வே அமைச்சகக் கூட்டத் தில்  ரயில்களை தனியார் மூலம் இயக்க திட்டமிடப்பட்டது. முதலில் சில பெருநகரங்களிலும் அதன் பிறகு இந்தியாவின் ரயில்வேதுறையையே ஒட்டுமொத்தமாக தனியாருக்கு கொடுக்க முடிவெடுக்கப்பட்டது.
இது குறித்து ரயில்வேத்துறை தொழிற்சங்கங்கள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ரயில் கட்டணம் உயர்த் தப்படலாம் என்று அவை அச்சம் தெரிவித்துள்ளன.
நாட்டின் பொதுத்துறை நிறுவ னங்கள் தனியார் மயமாக்கப்படுகிறது என்றும், ஆட்குறைப்பு நடைபெறுவ தாகவும் தொடர்ந்து கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ரயில்வே துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
''இந்தியாவில் எண்ணற்ற மக்கள் ரயிலை தங்கள் நண்பராக பாவிக் கின்றனர். பல ஆண்டுகளாக இந்த நட்பு  தொடர்கிறது. இவ்வாறான நிலையில் ரயில் தனியார் மயமாக்கி னால் நட்பு அறுந்துவிடும்
தனியார் மயமாக்கல் மூலம் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது அதிகபட்ச கட்டண நிர்ணயங்கள் காலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டு, வேறு வழியின்றி புதிய கட்டணங் களை மக்கள் ஏற்கக்கூடிய நிலை வரலாம். அது ரயில்களை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தும்.''
ரயில்வே தனியார் மயமென்பது மிகவும் கொடுமையானது
2016- ஆம் ஆண்டு மும்பையில் ரயில்வே துறை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ரயில்வே துறையை தனியா ரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக எதிர்க்கட்சி கள் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றன. ரயில்வேவிற்கும், எனக் கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு. ரயில்வேயைத் தனியார் மயமாக்குவது என்பது என்னைப் பொறுத்தவரை மிகவும் கொடுமையானதாகும்.  ரயில் வேத் துறையின் எந்தவொரு பிரிவு அல்லது பகுதியையும் தனியார்மய மாக்கும் முயற்சியை அரசு எடுக்காது என்று கூறியிருந்தார்.
- விடுதலை நாளேடு,11.10.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக