அய்.நா. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அய்.நா. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 ஏப்ரல், 2021

சமூகநீதி - ஈழத் தமிழர் பிரச்சினைக் குறித்து தமிழர் தலைவரின் இரு அறிக்கைகள்


 அய்.நா.வில் வரும் ஈழத் தமிழர் படுகொலை தொடர்பான கண்டனத் தீர்மானத்தின்மீது இலங்கைக்கு ஆதரவாக மத்திய பா..அரசு செயல்படுவதா?

ஈழத்தில் இறுதி கட்ட அரசப் பயங்கரவாதப் போரில் ஈவு  இரக்கம் சிறிதுமின்றி ஈழத் தமிழர்கள் இலட்சக்கணக்கில் இனப் படுகொலை  (Genocide) செய்யப்பட்டனர்  என்பது உலகறிந்த உண்மை.

இதனைக் கண்டிக்கும் வகையில்  நாளை (22.3.2021) அய்.நா.வின் மனித உரிமை ஆணை யத்தில் கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்தின்மீது இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக செயல்பட இருக்கிறது என்ற செய்திஅதிர்ச்சியை அளிக்கிறது.

பா.... ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படும் என்று நம்பியவர்களை நினைத்தால் நமக்குப் பரிதாபமும் - வேதனையும்தான் மிஞ்சுகிறது.

உலகெங்கும் உள்ள மனித உரிமையாளர்கள்மனிதநேயர்கள்உலகெங்கும் வாழும் பல கோடி தமிழர்களின்குறிப்பாக தமிழ் நாட்டில் வாழும்  தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களின் கண்டனத் துக்கும்வெறுப்புக்கும்எதிர்ப்புக்கும் இந்திய அரசு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

மறுபரிசீலனை செய்யட்டும் இந்திய அரசு!

இந்திய அரசு தன் முடிவை மறுபரிசீலனை செய்து மனிதப்படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிரான நிலையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத் துகிறோம்.

இல்லையெனில் அதன் பார தூர விளைவுகளை இந்திய அரசு ஏற்கும் நிலை உலகளவில் ஏற்படும் என்றும் சுட்டிக் காட்டுவது நமது கடமையாகும்.

ஏழு பேர் விடுதலையில்கூட உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியும்மாநில அரசு பரிந்துரை செய்தும்ராஜீவ் காந்தி படுகொலை சம்பந்தப்பட்ட இந்த விட யத்தில் காங்கிரஸ்கூட மறுப்பு சொல்லாத போதும் மத்திய பா..அரசு எதிர்நிலை எடுத்து  அவர்களை விடுதலை செய்ய இன்னமும் மறுக்கிறதுஅதைத் தட்டிக் கேட்க தமிழக .தி.மு.அரசுக்கும் தெம்பில்லை.

குறிப்பாகச் சொல்லப் போனால் தமிழர் விரோத நடவடிக்கை என்றால் அதில் மத்திய பா..அரசு மார்தட்டி முன் வரிசையில் நிற்கும் என்பதைத் தமிழர்கள்  இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பிரச்சினையில் ...தி.மு.அரசின் நிலைப்பாடு என்னபா...வை விழுந்து விழுந்து ஆதரிக்கும் கட்சிகளின் நிலைப்பாடு என்னநாடே எதிர்பார்க்கிறது!

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம் 

வியாழன், 25 மார்ச், 2021

இலங்கைக்கு எதிரான அய்.நா. தீர்மானம்: பாஜகவின் தமிழர் விரோதப்போக்கு!


இலங்கை அரசுக்கு எதிரான அய்.நா.தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு எதிராக, அங்கு 2009  இறுதிப்போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கும், போர்க் குற்றங்களுக்கும் இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும், முறையான விசாரணை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தி பிரிட்டன், கனடா உள்ளிட்ட 6 நாடுகள் அய்.நா. மனித உரிமை அவையில் கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ளன.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் அய்.நா. மனித உரிமைகள் அவையில் நிறைவேறியுள்ளது ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தில் மிக முக்கியமான கட்டமாகும்.

ஆனால், இந்தியாவை ஆளும் பா.ஜ.க. அரசோ எதிலும் இரட்டைப் போக்கு, இரட்டை நாக்கு என்னும் வகையில் இதிலும் இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளது கண்டனத்திற்குரியதாகும்.

இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்ததன் மூலம் பா.ஜ.க.வின் தமிழர் விரோதப் போக்கும், துரோகமும் உலக அரங்கில் அம்பலப்பட்டுவிட்டது.

தமிழர்கள் புரிந்துகொள்ளட்டும்!

கி.வீரமணி  

தலைவர்,

திராவிடர் கழகம்

23.3.2021          

சனி, 19 அக்டோபர், 2019

பிரேமலதா உரிமைக்குரல்



மதுரை அருகே கார்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் (அப்பா லாரி ஓட்டுநர், அம்மா விவசாயக் கூலி) பிரேமலதா என்ற மாணவி. 2011 ஆம் ஆண்டில் இளமனூர் ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார்.

அய்.நா. மனித உரிமைக் கவுன்சில் சார்பில், மனித உரிமைக் கல்வியை மாண வர்கள் எப்படிக் கற்கிறார்கள், அதன்மூலம் அவர்களிடம் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்பதுபற்றி ஆவணப்படம் எடுக்க வந்த போது, மாணவி பிரேமலதா பேசினார்.

ஜாதி ரீதியான பாகுபாடு, பாலினப் பாகுபாடுபற்றி அவர் பேசினார்.

எட்டு வருடங்களுக்குப் பிறகு ஜெனீவா மனித உரி மைக் கவுன்சிலிடமிருந்து அழைப்பு வர பிரேமலதா ஜெனீவா சென்றார். இந்தியா சார்பில் சென்ற ஒரே மாணவி இவர்தான் - ஜெனீவாவில் அவர் என்ன பேசினார்?

அவர் வாயாலேயே கேட் போம்:

‘‘நம் ஊரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், பெண்கள் படும் துன்பங்கள், ஜாதிப் பாகுபாடுகள், கல்வி கற்க பட்டியல் சமூக மக்கள் படும் இன்னல்கள் பற்றிப் பேசினேன். ‘நீட்' போன்ற தேர்வுகளால் அனிதா தற்கொலை செய்து கொண்டதையும், இதுபோன்ற தேர்வுத் தடைகளால் பட்டியல் சமூக மாணவர்கள் உயர்கல்வி படிக்க முடியாமல் போவதை யும் பேசினேன். மேலும் ‘நீட்' போன்ற தேர்வுகளைத் தடை செய்ய இந்தியாவை வற்புறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.''

- ‘‘ஜூனியர் விகடன்'', 16.10.2019, பக்கம் 38-39

இந்திய அரசின் மானம் ஜெனீவாவரை கப்பலேறி விட்டது. ஜாதி காப்பாற்றப்பட வேண்டும் என்ற கொள் கையை அடிப்படையாகக் கொண்ட பா.ஜ.க. நாட்டை ஆள்கிறது. அந்த வகையில் பார்த்தால், மாணவி பிரேமலதா ஜெனீவா வரை சென்று அய்.நா.வின் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசுக்குச் சாட்டையடி கொடுத்து முகத்திலும் கரியைத் தடவி விட்டார் (வெட்கம், மகாவெட்கம்!)

‘நீட்'டைப்பற்றியும் நெற்றி யடி கொடுத்திருக்கிறார். இட ஒதுக்கீட்டை நேரடியாக ஒழிக்க முடியாத பார்ப்பன சக்திகள் ‘நீட்' போன்ற அகில இந்தியத் தேர்வுகளை நடத்தி, அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட மக்களை ‘உதைத்து' வெளியே தள்ளுகிறார்கள்.

பிளஸ் டூ தேர்வில் 1200 மதிப்பெண்ணுக்கு 1176 மதிப் பெண் பெற்ற அனிதாவும், 1125 மதிப்பெண் பெற்ற பிரதீபாவும் தற்கொலை செய்துகொண்டது தான் மிச்சம்.

‘நீட்' வந்த பிறகு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படித்த மாணவர்கள் பெற்ற இடங்கள் அய்ந்தே அய்ந்து; என்னே கொடுமை!

‘நீட்' இல்லாதபோது சி.பி. எஸ்.இ. மாணவர்கள் பெற்ற இடங்கள் 62. ‘நீட்' வந்த பின் பெற்ற இடங்கள் 1,220. அதா வது 20 மடங்கு அதிகம்.

புரிகிறதா ‘நீட்'டின் சூழ்ச்சி?

பிரேமலதா உரிமைக் குரல் ஓங்குக!

- மயிலாடன்

- விடுதலை நாளேடு 19 10 19