திமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது தி.மு.க. அரும்பெரும் 36 வாக்குறுதிகளை கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!



Published March 20, 2024, விடுதலை நாளேடு

சென்னை, மார்ச் 20- திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.3.2024) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப்பதில் அளித்தார். அடுத்து, இந்தியா கூட்டணியில் தமிழ்நாட்டில் திமுக போட்டி யிடுகின்ற 21 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். புதிதாக 11 பேருக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

முன்னதாக திமுக தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர், திமுக துணைப்பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப் பினருமான கவிஞர் கனிமொழி தேர்தல் அறிக்கையை தயா ரிப்பதில் பொதுமக்கள் பங்களிப்புகுறித்து விரிவாக எடுத் துரைத்து, அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து, தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இன்று (20.3.2024) காலை வழங்கினார்.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் 10 ஆண்டுகால பாசிச பாஜக அரசை வீழ்த்த, நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். தமிழ் நாட்டிலும் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 21 தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுகிறது.
இந்தத் தேர்தலுக்கு முன்னதாக கனிமொழி எம்.பி தலை மையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப் பட்டது. இக்குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர் களது குரல்களையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தது. இதனைத் தொடர்ந்து இன்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில் இடம் பெற்ற முக்கிய வாக்குறுதிகள்:

1. மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்படும்.
2. ஆளுநர் பதவி தேவையில்லை என்றாலும், அப்பதவி இருக்கும் வரையில் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனை பெற்றே ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆளுநர் களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.
3. உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக் கப்படும்.
4. புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும்.
5. ஒன்றிய அரசுப் பணிகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப் படும்.
6. ஒன்றிய அரசு அலுவகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.
7. அனைத்து மாநில மொழிகளது வளர்ச்சிக்கும் சம அளவு நிதி வழங்கப்படும்.
8. திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
9. தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்க்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.
10. ரயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
11. புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.
12. நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.
13. நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
14. இந்தியா முழுவதும் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர்உரிமைத் தொகை ரூபாய்.1000/ வழங் கப்படும்.
15. தமிழ்நாட்டிற்கு ‘ நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக் கப்படும்.
16. மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச் சிக்கு குழு அமைக்கப்படும்.
17. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்
18. பா.ஜ.க அரசின் தொழிலாளர் நல விரோத சட்டங்கள் மறு சீரமைப்பு செய்யப்படும்.
19. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
20. வங்கிகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகை இல்லாத போது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.
21. குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும்.
22. ஒன்றிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் படும்.
23. ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.
24. வேளாண் விளைபொருள்களுக்கு மொத்த உற்பத்திச் செலவு பிளஸ் 50 சதவீதம் என்பதை வலியுறுத்தி விவசாயி களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் (விஷிறி) செய்யப்படும்.
25. இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
26. விமானக் கட்டணம் நிர்ணயிப்பது முறைப் படுத்தப்படும்.
27. LPG சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் விலை ரூ.75 மற்றும் டீசல் விலை ரூ.65-ஆக குறைக்கப்படும்.
28. பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது.
29. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து 150-ஆகவும், ஊதியம் ரூ.400-ஆகவும் உயர்த்தப்படும்.
30. ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான IIT, IIM, IISc, IIARI ஆகியவை தமிழ்நாட்டில் புதியதாக அமைக்கப்படும்.
31. பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்படும்.
32. ஒரே நாடு -ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.
33 . மாணவர்களுக்கு வட்டியில்லாத கல்விக் கடனாக 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
34. ரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.
35. இசுலாமியர் மற்றும் இதர சிறுபான்மையினர் மேம்பாடு குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி பரிந்துரைகள் செயல் படுத்தப்படும்.
36. சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக் கப்படும்.

 

தி.மு.க. வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை, மார்ச் 20 நாடாளுமன்ற தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டி யலை தி.மு.க. இன்று (20-3-2024) வெளியிட்டுள்ளது.
முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று (20-3-2024) வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-

வட சென்னை – கலாநிதி வீராசாமி
தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
மத்திய சென்னை – தயாநிதிமாறன்
சிறீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
காஞ்சிபுரம் (தனி) – க.செல்வம்
அரக்கோணம் – எஸ்.ஜெகத்ரட்சகன்
வேலூர் – கதிர் ஆனந்த்
தருமபுரி – அ.மணி
திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை
ஆரணி – தரணி வேந்தன்
கள்ளக்குறிச்சி – மலையரசன்
சேலம் – செல்வ கணபதி
ஈரோடு – பிரகாஷ்
நீலகிரி (தனி) – ஆ.இராசா
கோவை – கணபதி ராஜ்குமார்
பொள்ளாச்சி – கே.ஈஸ்வரசாமி
பெரம்பலூர் – அருண்நேரு
தஞ்சாவூர் – முரசொலி
தேனி – தங்க தமிழ்செல்வன்
தூத்துக்குடி – கவிஞர் கனிமொழி
தென்காசி (தனி) – ராணி சிறீகுமார்

சனி, 30 ஜனவரி, 2021

தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி !


மத்திய  பா..ஆட்சிக்கு அடிபணியும் .தி.மு.ஆட்சி!

அடுத்தகட்ட தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கப் போகிறார் தளபதி ஸ்டாலின்

‘‘திராவிடம் வெல்லும்'' -சென்று வருகவென்று வருக!! 

மாநில உரிமைகளைப் பலி கொடுத்து மத்திய பா..ஆட்சிக்கு அடிபணியும் .தி.மு.ஆட்சி ஒருபக்கம்வலுவான கூட்டணியை அமைத்து கொள்கை ரீதியான தேர்தல் பிரச்சாரத்தின் அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்க உள்ளார் - கூட்டணியின் தலைவரும்தி.மு.தலைவருமான தளபதி மு..ஸ்டாலின். ‘‘‘திராவிடம் வெல்லும்' - சென்று வருகவென்று வருக!!'' என்று வாழ்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் - தாய்க் கழகத்தின் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெறும் .தி.மு..வின் ஆட்சி என்பது டில்லியில் உள்ள மத்திய பா...வுக்கும்ஆர்.எஸ்.எஸ்இயக் கத்திற்கும் கொத்தடிமைபோல் நடந்துமாநில உரிமை களை அறவே பறிகொடுத்துவெளி வேடத்திற்குத் தாங்களும் ஏதோ திராவிட இயக்கக் கொள்கைகளைப் பின்பற்றுவதாக இரட்டை வேடம் போடும் ஓர் ஆட்சி என்பது - ‘நீட்தேர்வு தொடங்கிவிவசாயிகள் விரோத மூன்று (சர்வாதிகாரசட்டங்கள்வரை எடுத்துள்ள நிலைப்பாட்டின்மூலம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது!

எம்.ஜி.ஆர்பாடிய பாடல்!

.தி.மு.நிறுவனர் எம்.ஜி.ஆர்நடித்த படங்களில் பாடிய பாட்டு இவர்களுக்கே முழுப் பொருத்தமாக அமைந்துள்ளதுபோல இன்றுள்ள மிச்ச சொச்ச மாதங்களுக்கான காவி ஆட்சி எடப்பாடியார் தலைமையில் நடைபெற்று வருகிறது.

‘‘எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...

உத்தமர் போலவே நடிக்கிறார்

பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்

பகல் வேஷம் காட்டி

பாமர மக்களை வலையினில் மாட்டி''

என்ற வரிகளை நினைவூட்டுவதாகவே உள்ளது.

மத்தியில் உள்ள பா..அரசுக்கு இதுபோல் ஒரு நல்ல வாய்ப்பு எந்த மாநிலத்திலும் கிட்டியதில்லை.

ஆட்சிக்கு வராமலேயே அவர்கள் மிரட்டியும்உருட்டியும் தமிழ்நாட்டில் ஆட்சி செய்கிறார்கள்!

எந்த சட்டங்களை நாடாளுமன்றத்தில் மத்திய பா..அரசு கொண்டு வந்தாலும்அதற்குக் கைதூக்கும் கைகாட்டிகளைப்போல் நிறைவேற்ற துணை போகிறது - தமிழக .தி.மு.அரசு.

மத்தியில் ஆளுவோரிடம் உறவுடன் இருப்பது - கூட்டாட்சி தத்துவத்தின்படி தவறல்லஆனால்மாநில மக்களின் உரிமைகளை அடகு வைத்துவிட்டார்கள் என்பதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டுமூன்று விவசாய சட்டங்களான மாநில உரிமைகளை முற்றிலும் பறிமுதல் செய்த கபளீகரச் சட்டங்கள்!

எதிர்க்கட்சிகள்மீது வழக்குகள்!

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் மீதெல்லாம் வழக்குகள் - அவை கொலை முயற்சி வழக்கு போன்ற தவறான அதிகார துஷ்பிரயோக அழிவழக்குகள்!

‘‘கிராம சபை அதுவும் குடியரசு நாளில்கூட கூட்டக் கூடாது - கரோனா தொற்றுப் பரவும் அபாயம் காரண மாக'' என்று கூறிவிட்டு,  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத் திறப்பு நிகழ்ச்சிக்கு பல்லாயிரம் பேரைத் திரட்டி கூட்டநெரிசலில் ஒருவர் உயிரிழக்கும் அளவுக்குக் கூட்டத்தைக் கூட்டுவது இரட்டைக் குரல்இரட்டை நிலைப்பாடு அல்லவா!

காரணம் வெளிப்படைமடியில் கனம் - எனவே மத்திய ஆட்சிக்கு - அதன் ‘‘கண் ஜாடையைப் பார்த்தே சரணம் பாடும்'' வேதனைமிக்க நிலை.

அம்மா பெயரைச் சொல்லிக்கொண்டு

சரணாகதி அடையலாமா?

அம்மா ஆட்சி', ‘அம்மா ஆட்சிஎன்று மூச்சுக்கு முந்நூறு முறை உச்சரிக்கும் இவர்கள்தங்கள் மன சாட்சியைக் கேட்டுப் பார்க்கட்டும்அந்த அம்மையார் (ஜெயலலிதா ஆட்சியில்டில்லி சென்னைக்கு வந்ததே தவிரஅவர் சரணாகதி அடையவில்லை என்பதற்கு ‘நீட்தேர்வு விலக்கே ஓர் எடுத்துக்காட்டு.

தமிழ்நாட்டு மக்கள்ஆட்சி மாற்றத்தை ஆவலோடு எதிர்நோக்குகின்றனர்!

உதைத்த காலுக்கு முத்தமிடுவதுபோல, ‘மிஸ்டு கால்கட்சியான பா...வோடு கூட்டணியாம்ஆனால்கூட்டணி வேறாம் - கொள்கை வேறாம் - விளக்கம் தருகிறார் .தி.மு..வின் முதல்வர்!

அதேநேரத்தில்எதிர்க்கட்சித் தலைவரும்அடுத்த முதல்வராவதற்கு  முழு உரிமையும்தகுதியும் பெற்ற வருமான தி.மு.தலைவர் தளபதி மு..ஸ்டாலினைப்பற்றி கடுமையாக விமர்சிக்கிறார்!

தமிழகம் ரூ.6 லட்சம் கோடி கடனில் உள்ளது!

கடன்பட்டார் நெஞ்சம் கலங்குவதாகத் தெரிய வில்லைகாரணம்போகும்போது கஜானாவைக் காலி செய்து மட்டும் போகாமல்கடனும் வைத்தால்வருகிற புதிய ஆட்சி - தி.மு.ஆட்சி திண்டாடட்டுமே என்ற ‘பரந்தமனமே!(?)

முதற்கட்ட கிராம மக்கள் சபைக் கூட்டங்களை தமிழ்நாடு எங்கும் நடத்திய தி.மு.தலைவர் சந்திப்பு களில் கூடியது - மக்கள் பெருந்திரள் என்ற பொங்குமாங்கடல்!

அடுத்தகட்ட பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் தளபதி மு..ஸ்டாலின்

அடுத்தகட்ட பிரச்சாரத்தை நாளை (29.1.2021) சகோதரர் தளபதி மு..ஸ்டாலின் திருவண்ணாமலை யிலிருந்து தொடங்குகிறார்.

இதற்குமுன்பாக அவர் மக்கள் குறைகளை மனுக்களாகப் பெற்றுஅதற்கு ஒப்புகை சீட்டு வழங்கி - ஆட்சிக்கு வந்த 100 நாளில் அவற்றிற்குத் தீர்வு கண்டுஎப்படி இந்த மக்கள் நல தி.மு.அரசு செயல்படும் என்ற புதுமைத் திட்டத்தை அறிவித்தார்.

மக்களாட்சி மாண்பின் ஒளி திக்கெட்டும் பாய்கிறது - இதன்மூலம்!

தி.மு.கூட்டணியை சில ஊடகங்கள் துணை கொண்டு கலகலக்க வைக்கும் திட்டத்தையும் ஒரு பேட் டியின்மூலம் காலி செய்துவிட்டார் தி.மு.தலைவர்.

தி.மு.தலைமையில்

வலுவான கூட்டணி!

வலுவுள்ள கூட்டணி - அவரவர் உரிமையை மதித்துப் போற்றும் சுயமரியாதைக் கூட்டணி எங்கள் கூட்டணி - பங்கீடுகளும்மற்றவைகளும் முறையோடு இருக்கும்என்று தெளிவுபடுத்தி விட்டார்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள்தமிழ்நாட்டுச் சுற்றுப்பயணத்தில் தி.மு.தலைவர் மு..ஸ்டாலின்தான் எங்கள் முதல மைச்சர் வேட்பாளர் என்று உறுதிபடக் கூறிஎதிர்க் கட்சிகளின் பிரித்தாளும் தன்மைக்கு ஆப்படித்து விட்டார்!

மேலும் இப்போது நடைபெறுவது லட்சியப் போர் என்றும்தமிழ்நாட்டு மொழிகலாச்சாரத்தை பா..., ஆர்.எஸ்.எஸ்கையகப்படுத்த ஒருபோதும் துணை போக முடியாது என்பதையும் தெளிவுபடுத்தி விட்டார்!

சில மாயக் குதிரைகளை நம்பிய காவிகளும்ஒற்றை ஓடுகாலிகளும் ஏமாற்றத்தின் உச்சியில் இருந்து உருண்டு கொண்டுள்ளனகுருமூர்த்தி போன்ற அரசியல் புரோக்கர்களின் கனவு ‘பொய்யாய் பழங்கதையாய்'ப் பிசுபிசுத்து விட்டது!

தங்களுடைய திட்டங்களைக் கூறி வாக்கு சேகரிக்க வக்கும் வகையுமின்றி கேலிகிண்டல்மூலம் ஊடக வெளிச்சத்தில் பிழைக்கும் நிலைதான் ஆளும் கூட்டணிக்கு உள்ள யதார்த்த நிலை!

இந்த சூழலில் இரண்டாம் கட்ட பிரச்சாரப் பயணத் தைத் திருவண்ணாமலையிலிருந்து தொடங்கும் தி.மு.தலைவர் சகோதரர் தளபதி மு..ஸ்டாலின் அவர் களுக்குத் தாய்க் கழகத்தின் வாழ்த்துகள்!

‘‘திராவிடம் வெல்லும்!''

சென்று வருகவென்று வருக!

சென்று வருகவென்று வருக!!

திராவிடம் வெல்லும்என்ற நம்பிக்கை ஒளி - தந்தை பெரியார்அறிஞர் அண்ணாமுத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரிடம் கற்ற பாடங்களும்பெற்ற அனுபவங்களும்கொள்கை லட்சிய தடங்களும் உங்கள் பயணத்தை எளிதாக்கும்!

வெற்றி வாகை சூடும்!

திராவிடம் வெல்லும்என்ற முழக்கம் திக்கெட்டும் கேட்கட்டும்தமிழ்நாடு மீட்கப்படட்டும்!

 

 

 கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

28.1.2021

செவ்வாய், 3 மார்ச், 2020

தி.மு.க முற்றிலு மான ஒரு நாத்திக இயக்கம் அல்ல.

பிற இதழிலிருந்து...

‘தங்களது தேர்தல் உத்தியின் ஒரு பகுதியாக நாட்டார் தெய்வ வழி பாட்டை தி.மு.க கையிலெடுக்கப் போகிறது’ என்ற தகவல், பல்வேறு தரப்பினரிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கடவுள் மறுப்புக் கொள்கையை பிரதானமாகக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத்தின் தலைவர்

கி.வீரமணியைச் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.

“ 'பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த வரதராஜன், உயர்நீதிமன்ற நீதிபதி யாக ஆனதற்கு கருணாநிதிதான் காரணம்’ என்று குறிப்பிட்டுப் பேசிய தி.மு.க எம்.பி-யான ஆர்.எஸ்.பாரதி, ‘அது, அரிஜனங்களுக்கு கலைஞர் போட்ட பிச்சை’ என்றார். அவரது பேச்சை பலரும் கண்டித்தார்கள். நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை?’’

‘‘அவர் சொன்ன கருத்தில் தவறு இல்லை. அவர் பயன்படுத்திய வார்த்தையில்தான் பிரச்சினை. உட னடியாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலையிட்டதையடுத்து ஆர்.எஸ்.பாரதி தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டார். அதற்குமேல் அது பற்றிப் பேச வேண்டியதில்லை.”

‘‘இதுவே ஹெச்.ராஜா போன்ற பா.ஜ.க. தலைவர்கள் எவராவது இப்படிப் பேசியிருந்தால் நீங்கள் அமைதியாக இருந்திருப்பீர்களா?’’

“ஹெச்.ராஜா உயர் நீதிமன்றத்தை விமர்சித்து சர்ச்சையாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, பிறகு வருத்தம் தெரிவித்தார். அதனால், நீதிமன்றம் அவரை விட்டுவிட்டது. அடுத்ததாக, பெரியார் குறித்து ஆட்சேபனைக்குரிய ஒரு கருத்து ஹெச்.ராஜாவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. அதற்கு கண்டனங்கள் எழுந்தன. ‘அதைப் பதிவிட்டது நான் அல்ல, என் அட்மின்’ என்று அவர் சொன்ன பிறகு, அதை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை.”

“தேர்தல் ஆலோசகராக பிரஷாந்த் கிஷோரை தி.மு.க அமர்த்தியுள்ளது குறித்து?”

“தேர்தல் முறைகள் இன்றைக்கு நிறைய மாறியுள்ளன. தற்போது, தேர்தலில் தகவல் தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, அதில் யார் கெட்டிக்காரரோ அவரை அழைத்து ஆலோசிக்கின் றனர். அதில் எந்தத் தவறும் இல்லை. தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுப்பதற்கு மட்டுமே அவர் வந்துள்ளார்; தி.மு.க-வின் கொள்கை வகுப்பாளராக அல்ல.”

“ஆனால், அவரது வழிகாட்டலில் நாட்டார் தெய்வ வழிபாட்டை ஊக்கு விப்பதற்கான முயற்சிகளை தி.மு.க எடுத்து வருகிறது என்று சொல்லப் படுகிறது.   அதை நீங்கள் ஏற்கிறீர்களா?’’

‘‘அதுபற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தால் மட்டுமே என் னால் கருத்து சொல்ல முடியும். யூகங் களுக்கெல்லாம் பதில் சொல்ல முடி யாது. அடிப்படைக் கொள்கைகளில் அவர்கள் மாறுகிறார்கள் என்றால், அதுபற்றிப் பேசலாம். அவர்கள் எந்தக் காலத்திலும் அடிப்படைக் கொள்கையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், அது பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய மூவராலும் வளர்த்தெடுக்கப் பட்ட இயக்கம். மேலும், அவர்கள் செய்வது சரியா என்பதை வெளி யிலிருந்து நாங்கள் பார்த்துக் கொண் டிருக்கிறோம். திராவிட இயக்கம் ஒருபோதும் பாதை மாறாது... மாறவும் விட மாட்டோம்.”

“தி.மு.க-வின் பெருந்தலைவர்கள் பலர் பக்திமயமாக கோயில் கோயிலாகச் செல்கின்றனரே?”

“கடவுள் இல்லை’ என்று நாங்கள் சொல்கிறோம். அவர்களோ, `ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என் கிறார்கள். எனவே, தி.மு.க முற்றிலு மான ஒரு நாத்திக இயக்கம் அல்ல.”

“தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, நல்ல நேரம் பார்க் காமல் எதையும் செய்வதில்லை என்று சொல்லப்படுகிறது. பகுத் தறிவுப் பிரச்சாரம் ஊருக்கு மட்டும் தானா?”

‘‘குடும்பத்தினர் அனைவரும் பகுத்தறிவுக் கொள்கைக்குள் வர வேண்டும் என்பது எங்கள் ஆசை. அதற்காக யாரையும் நாங்கள் கட்டா யப்படுத்த முடியாது. ஜெயலலிதா, கடவுள் பக்தி கொண்டவராக இருந்தார். ஆனாலும், அவரின் சமூகநீதிக் கொள்கைக்காக அவரை நாங்கள் ஆதரித்தோம். அப்படித் தான் இதையும் பார்க்க வேண்டும். ஒருவருக்கு பகுத்தறிவுச் சிந்தனை வரவில்லையென்றால், அது அவர் களின் பலவீனம். காலம் வரும்போது அந்த பலவீனம் சரியாகும். உத்தரவு போட்டோ, கட்டாயப்படுத்தியோ யாருக்கும் பகுத்தறிவுச் சிந்தனை யைப் புகுத்த முடியாது.”

'சிறுதெய்வம்’ அல்ல... ‘நாட்டார் தெய்வம்’

‘கடந்த 26.2.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில், `அடேங்கப்பா ஆன்மிக அரசியல் - எங்க ஊரு மாரியாத்தா! ஸ்டாலின் எடுக்கும் தாரை தப்பட்டை’ என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டி ருந்தோம். கட்டுரை முழுவதுமே ‘சிறுதெய்வ வழிபாடு’ என்றே குறிப் பிட்டிருந்தோம். கட்டுரை வெளி யானதுமே அறிவுத்தளங்களிலிருந்து கருத்து தெரிவித்த பலரும், “மக்கள் ஒருபோதும் ‘சிறுதெய்வம்’ என்ற பெயரைப் பயன்படுத்தியதில்லை. சிறுதெய்வம் என்ற சொல்லில் உள்ள ‘சிறு’ என்கிற முன்னொட்டு எந்தப் பொருளில் தொனிக்கிறது, அதை யார் பயன்படுத்துகிறார்கள் என் பதைப் பொறுத்து அதன் அரசியல் முற்றிலும் மாறிவிடுகிறது. தமிழின் முக்கியமான ஆய்வாளர்களான தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணி யன், அ.கா.பெருமாள் போன்றோர் ‘சிறுதெய்வம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டாம் என்றே குறிப்பிடுகிறார்கள். ‘நாட்டார் தெய்வம்’, ‘மக்கள் தெய்வம்’, ‘கிராமிய தெய்வம்’, ‘மண்ணின் தெய்வம், ‘மண்ணின் சாமி’ போன்ற பல மாற்றுச் சொற்கள் இன்று வழங்கப்பட்டுவருகின்றன” என்று தெரிவித்திருக்கிறார்கள். இனி, ‘சிறுதெய்வம்’ என்பதைத் தவிர்த்து, ‘நாட்டார் தெய்வம்’ என்கிற சொல் லையே விகடனிலும் பயன்படுத் துவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி:  'ஜூனியர் விகடன்' 4.3.2020

-  விடுதலை நாளேடு 29.2. 20

புதன், 9 அக்டோபர், 2019

திமுகவுக்கு உதயசூரியன் சின்னம் வந்தது எப்படி?

திமுகவுக்கு உதயசூரியன் சின்னம் கொடுத்தவர்கள் வன்னியரா? இதோ உதயசூரியன் உருவான வரலாறு
-------------------------------------

தி.மு.கழகத்தின் தேர்தல் சின்னமாக ‘உதயசூரியன்’ சின்னத்தைக் கொடுத்ததே வன்னியர்கள்தான் என்று சமீபகாலமாக மாங்காய்கள் வெம்பிக் கொண்டிருக்கின்றனர்.

கொள்கைச் செம்மல் ஏ.கோவிந்தசாமி அவர்கள் வன்னியர் குலத்தில் பிறந்தார்கள் என்பதைத் தவிர்த்து இன்றைய மாங்காய்களுக்கும், அவருக்கும் என்ன சம்பந்தம் என்பது தெரியவில்லை.

1952ல் ஏ.கோவிந்தசாமி அவர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் தலைமையிலான உழைப்பாளர் பொதுநலக் கட்சி (Tamil Nadu Toilers' Party) சார்பாகதான் போட்டியிட்டாரே தவிர, திமுக சார்பில் அல்ல. அத்தேர்தலில் திமுக போட்டியிடாத நிலையில் ஏ.ஜி அவர்களுக்கு திக மற்றும் திமுகவினர் தேர்தல் பணி செய்து வெற்றி பெற வைத்தார்கள். அந்தத் தேர்தலில் அவருக்கு வழங்கப்பட்ட சின்னம் ‘சேவல்’. டிடிபி கட்சி, தேர்தல் அங்கீகாரம் பெறாத கட்சியாக இருந்தமையால் போட்டியிட்டவர்கள் சுயேட்சை சின்னமான ‘சேவல்’ சின்னத்தைப் பெற்று போட்டியிட்டார்கள். அந்த தேர்தலின் போது ‘உதயசூரியன்’ சின்னமும் சுயேட்சை சின்னம்தான். அந்தச் சின்னத்திலும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டதுண்டு.

ஏ.கோவிந்தசாமி எம்.எல்.ஏ ஆன நிலையில் டிடிபி கட்சியும், காமன்வீல் கட்சியும் மைனாரிட்டி ராஜாஜிக்கு ஆதரவாக காங்கிரஸில் சேர்ந்தனர். இந்த முடிவை ஏற்காத ஏ.ஜி, உழவர் கட்சி என்கிற புதிய கட்சியை உருவாக்கினார் (திருக்குறள் முனுசாமி கூட இந்தக் கட்சியில் இருந்தார் என்று வாசித்த நினைவு). 1953ல் மும்முனைப் போராட்டம் நடந்தபோது திமுக முன்னணியினர் பலரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் எம்.எல்.ஏ.வான ஏ.ஜி தாமாகவே முன்வந்து திமுகவில் இணைந்தார். திமுக கொள்கைகளை சட்டமன்றத்தில் முழங்கினார்.

அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலிலும் எம்.எல்.ஏ.வான ஏ.ஜி, ஜில்லா போர்டு பதவிக்கு போட்டியிட்டார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட சுயேட்சை சின்னம் உதயசூரியன் (நகராட்சி மற்றும் நகராட்சி வார்டுகள் தவிர்த்த உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சின்னம் இல்லை, சுயேட்சை சின்னம்தான்).

1957ல் திமுக முதன்முறையாக சட்டமன்றத்தில் போட்டியிட்டது. அரசியல் கட்சி அங்கீகாரம் இல்லாத நிலையில் திமுக வேட்பாளர்கள் சுயேட்சை சின்னங்களில்தான் போட்டியிட வேண்டியிருந்தது. அறிஞர் அண்ணா கூட சேவல் சின்னத்தில்தான் போட்டியிட்டார். கலைஞர் உட்பட சிலருக்குதான் உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. 112 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் திமுக வென்றது.

இதையடுத்து அரசியல் கட்சி அங்கீகாரம் பெற்ற பிறகு 1958ல்தான் திமுக, தேர்தல் கமிஷனிடம் ‘உதயசூரியன்’ சின்னத்துக்கு விருப்பம் தெரிவித்து, அச்சின்னத்தைப் பெற்றது.

உதயசூரியன் சின்னத்தை திமுக விரும்பிக் கேட்டதற்கு காரணம் ஏ.கோவிந்தசாமியோ, அவர் ஜில்லா போர்ட் தேர்தலில் இச்சின்னத்தில் வெற்றி பெற்றதோ அல்ல.

காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து வெளியேறி பெரியார் சுயமரியாதை இயக்கம் நடத்தத் தொடங்கியிருந்தார். 1929ல் செங்கல்பட்டில் இந்த இயக்கத்துக்கு மாநாடு நடந்தது. அப்போது மாநாட்டுக் கொடியில் சூரியன் உதிப்பதைப் போன்ற சின்னத்தை உருவாக்கி இருந்தார்கள். சூரியக் கதிர்களில் திராவிட இயக்கத் தலைவர்களின் படங்கள் வரையப்பட்டிருக்கும்.

பின்னர் ரெட்டைமலை சீனிவாசன் இயக்கத்தினரும் உதயசூரியனை தங்கள் சின்னமாக கொடியில் பொறித்தார்கள். ‘ரெட்டை மலை’ என்கிற பெயர் சீனிவாசனுக்கு இருந்ததால் இருமலைகளை வரைந்து அதற்கு நடுவே சூரியனை வரைவார்கள். எனவே இக்கட்சியினரேகூட சூரியக்கட்சி என்று அழைக்கப்பட்டார்கள். ‘உதயசூரியன்’ என்று பத்திரிகையும் நடத்தி இருக்கிறார்கள்.

இவ்வகையான வரலாற்றுப் பின்னணியின் அடிப்படையிலேயே உதயசூரியன் சின்னத்தை கேட்டுப் பெற்றார் பேரறிஞர் அண்ணா. மற்றபடி கொள்கைச் செம்மல் ஏ.கோவிந்தசாமி அவர்கள், உள்ளாட்சித் தேர்தலில் இச்சின்னத்தில் போட்டியிட்டதற்கும், பின்னர் திமுகவுக்கு உதயசூரியன் ஒதுக்கப்பட்டதற்கு எவ்வித நேரடித் தொடர்புமில்லை.

1957ல் சுயேட்சை சின்னமான உதயசூரியன் சின்னத்தில் வென்றவர்களில் ஒரே ஒருவர்தான் 1962ல் திமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமாக அது உருவெடுத்தபோது, அதிலும் நின்று வென்றார். (அதாவது 1957ல் சூரியன் சின்னத்தில் நின்ற கலைஞர் தவிர்த்த திமுகவினர் எவரும் 1962ல் வெல்லவில்லை).

1957ல் தொடங்கி 2016 வரை 13 முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே ஒரே கட்சி, ஒரே சின்னம் என்று சாதனை படைத்தவர் கலைஞர். 60 ஆண்டு காலமாக ஒரு கட்சி, ஒரே சின்னத்தில் போட்டியிடும் பெருமையையும்bu இந்தியாவிலேயே திமுக மட்டும்தான் பெற்றிருக்கிறது.
நன்றி. ..............இவண் சி.ரமேஷ் வழக்கறிஞர் மாந்தாங்கல் இராணிப்பேட்டை