முதல்வர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதல்வர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

பெரியார் உலகத்திற்கான நன்கொடையை, பெரியார் திடலுக்குத் தி.மு.க.வின் தலைமைக் கழகப் பொறுப்பாளர்களுடன் வருகை தந்து முதல்வர் அளிப்பு

 

எமது ஆழமான அன்புமிகு நன்றிகள்!



தமிழர் தலைவர் ஆசிரியரின் நன்றி அறிக்கை!

கடந்த 4.10.2025 அன்று செங்கல்பட்டு – மறைமலைநகரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவுரை நிகழ்த்திய நமது 'திராவிட மாடல்' ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், திருச்சி சிறுகனூரில் பல கோடி ரூபாய் திட்டமான பெரியார் உலகத்திற்கு, தமது அரசின் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தைப் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக அளிப்போம் என்று அறிவித்து, மக்களை வியப்பு, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.

அந்த அறிவிப்பின்படி இன்று (18.10.2025) காலை 10.30 மணிக்குப் பெரியார் திடலுக்குத் தி.மு.க.வின் தலைமைக் கழகப் பொறுப்பாளர்களுடன் வருகை தந்து, அறிவித்தார் . ரூபாய் ஒரு கோடியே 50 லட்சத்திற்கும் கூடுதலாக, மொத்தம் ஒரு கோடியே 70 லட்சத்து 20 ஆயிரத்திற்கான காசோலையை அளித்து, சிறிது நேரம் உரையாடி விட்டுச் சென்றது, அவரது தலைமைப் பண்பு, மற்றவர்களுக்கு எவ்வளவு எடுத்துக்காட்டப்பட்டது என்பதற்கான முக்கியச் சான்று நடவடிக்கையாகும்.

''சொன்னதைச் செய்வோம்; செய்வதையே சொல்வோம் – சொல்லாததையும் செய்வோம்!''

பெரியார் திடலுக்கு நேரில் வந்து அளித்தது எவ்வளவு பெரும் பண்பு என்பதோடு, அறிவித்து
14 நாட்களிலேயே அதை அத்தனை பேரிடமிருந்தும் திரட்டி, ''சொன்னதைச் செய்வோம்; செய்வதையே சொல்வோம் – சொல்லாததையும் செய்வோம்'' என்று நிரூபிக்கும் ஓர் எடுத்துக்காட்டு அல்லவா?

தாய்க்கழகம், உச்சிமோந்து வரவேற்று, வாழ்த்தி, தனது பெருநன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது!

நம் நன்றி – பெரு நன்றி!

''உலகம் பெரியார் மயம் – பெரியார் உலக மயம்!''

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை 

18.10.2025       

சனி, 6 ஜனவரி, 2024

பிரதமர் மோடி அவர்களுக்கு “வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்” கொடுத்து வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

!


Published January 3, 2024

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் 38 ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் திருச்சியில் நடைபெறும் அரசு விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேற்று (2.1.2024) திருச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பொன்னாடை அணிவித்து, “வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்” ஆங்கில பதிப்பு புத்தகம் வழங்கி வரவேற்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் பெருமக்கள் உடனிருந்தனர்.

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

"துரோணாச்சாரி காலமல்ல இது ஏகலைவன் காலம்!"- முதல்வர் ஸ்டாலின்


WhatsApp%20Image%202023-08-26%20at%2015.13.08

இந்தியாவில் இரண்டுவகை குழந்தைகள் உள்ளனர்.

ஒரு வகை உயர்ஜாதி பணக்கார  வீட்டுக் குழந்தைகள்! அவர் களின் காலை உணவே நெய்யில் இனிப்புச்சுவைகலந்து செய்யப்பட்ட பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை கலவைகள், இக்குழந்தைகள் பெரு நகரங்களின் உயர் குடியிருப்புகளில்  உள்ளனர். 

அதே நேரத்தில் 100க்கு 50 குழந்தைகளில் பெரும்பாலோர்களின் பெற்றோர்கள் பெரும் சுமைகளுக்கு இடையே குழந்தைகளுக்கு உணவு கொடுத்து தாங்களும் உணவைத் தயார் செய்து வேலைக்குச் செல்வார்கள். 

இதர 100க்கு 46 குழந்தைகளின் நிலை மிகவும் பரிதாபமானது. அவர்களுக்கு காலை ஆகாரம் என்பது தண்ணீரும் கடைகளில் கிடைக்கும் சிப்ஸும் பிஸ்கட்டும் தான். 

பெரும்பாலான தாய்மார்கள் நகரங்களிலும் கிராமங்களிலும் அதிகாலை வேலைக்குச் செல்லவேண்டிய நெருக்கடியில் குழந் தைகளுக்கு உணவு சமைத்துக் கொடுக்க நேரமின்மையால் பள்ளி செல்லும் பாதையில் உள்ள கடைகளில் கிடைக்கும் தின் பண்டங்களை வாங்கித்தந்து அதனை சாப்பிடச் சொல்லி சென்று விடுவார்கள். மதிய உணவு பள்ளிகளில் கிடைத்துவிடுகிறது. இரவு மட்டும் தான் வீட்டு உணவு; இதுதான் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்துக் குடும்பங்களிலும்!

தமிழ்நாட்டில் ஏராளமான ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குழந்தைகள் கல்வி கற்று இன்று சமுதாயத்தில் உயர் பதவிகளை அலங்கரிக்க முக்கிய காரணமாக திகழ்ந்த மதிய உணவுத் திட்டம் தற்போது புதிய உருவம் பெற்று காலை சிற்றுண்டி திட்டமாக விரிவடைந்துள்ளது.

இந்தியாவில் இந்த ஜாதியினர்தான் படிக்க வேண்டும், இந்த ஜாதியினர் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்று மேலோங்கி இருந்த ஜாதிய ஒடுக்குமுறையை தகர்க்க உருவானது நீதிக்கட்சி - அன்று சென்னை மாகா ணத்தில்  உயர்ஜாதியினரின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடியது.

கல்விக்கே ஜாதிய படிநிலைகளை தகர்த்து எறியும் சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய சிறுவர்களுக்கு கல்வி வழங்க முடிவு செய்தது அன்றைய நீதிக்கட்சி அரசு. ஆனால், காலம் காலமாக இருந்த ஜாதி ஒடுக்குமுறைகளால் வறுமையில் வாடி கூலித்தொழில் செய்து வந்த மக்கள் தங்கள் பிள்ளைகளையும் வேலைக்கே அனுப்பி வந்தனர்.

முறையான உணவு கூட இல்லாத அவர்களின் வலியை உணர்ந்த நீதிக்கட்சியின் ஆட்சியாளர் சர்.பிட்டி தியாகராயர் மதிய உணவு திட்டத்தை தொடங்க முடிவு செய்தார். சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சி பள்ளியில் கடந்த 1920ஆம் ஆண்டு இதே செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி இந்தத் திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக தொடங்கப்பட்டது. இதற்கு கிடைத்த வெற்றியையடுத்து 4 பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப் பட்டது. ஒருவேளை உணவு கிடைத்த நிலையில் கஷ்டப்பட்ட குடும்பங் களைச் சேர்ந்தவர்கள்,   பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பி வைத்தார்கள். இப்படி அந்த ஏழைக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைத்தது.

இந்த உணவுத் திட்டத்தின் பலன்களை உணர்ந்த காமராஜர், தமிழ்நாடு முழுவதும் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.  இவ்வளவுக்கும் அன்று முதல் இன்றுவரை ஒன்றிய அரசு பொருளாதார உதவிக் கரம் நீட்டவில்லை. இந்த திட்டத்தால் மாநிலம் முழுவதும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி கற்கத் தொடங்கினார்கள். அதன் பிறகு மேனாள் முதலமைச்சர் எம்ஜிஆர். திருச்சி பாப்பாக்குறிச்சியில் கடந்த 1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மதிய உணவு திட்டத்தை சத்துணவுத் திட்டமாக தரம் உயர்த்தினார். 

இந்தத் திட்டம் வெறும் .பசி தீர்க்கும் ஒன்றாக இருந்ததையும் குழந்தைகள் தொடர்ந்து ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்படு வதையும், அதற்காக பெரும் நிதி ஒதுக்கப்படுவதையும்  கவனத்தில் கொண்டு  ஊட்டச்சத்துடன் ஏழை மாணவர்கள் இருக்க, இந்த சத்துணவு திட்டத்தில் முட்டைகளை வழங்க முடிவு செய்தார் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர். 

1989இல் 2 வாரத்துக்கு ஒரு முட்டை என்ற திட்டத்தை கொண்டு வந்த அவர், 1998 ஆம் ஆண்டு வாரம் ஒரு முட்டை, 2006 ஆம் ஆண்டு வாரம் 2 முட்டை, 2007 ஆம் ஆண்டு வாரம் 3 முட்டை என அதிகரித்து 2008 ஆம் ஆண்டு மாணவர்கள் பள்ளிக்கு வரும் 5 நாட்களும் முட்டை வழங்க உத்தரவிட்டார். முட்டை சாப்பிட விரும்பாத மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்கினார்.

அவருக்குப் பின் வந்த ஜெயலலிதா. பள்ளி மாணவர்களுக்கு  கலவை சோறு திட்டத்தைக் கொண்டு வந்தார். இதனால் மாணவ மாணவிகள் தினசரி விதவிதமான கலவை கொண்ட உணவு வகைகளை  சாப்பிட்டனர். அதே போல் முட்டை உணவும் வெவ்வேறு வகையாக மாற்றம் செய்யப்பட்டது. 

அதன் பிறகு  தமிழ்நாட்டின் மதிய உணவுத்திட்டத்திற்கு இருண்ட காலம் வரத் துவங்கியது. உணவுத்திட்டத்தில் ஹிந்துத்துவ அமைப்புகளின் தலையீடு காரணமாக - ஏற்கெனவே வட இந்தியாவில் தோல்வி அடைந்த வருணாஸ்ரமத்தை தீவிரமாக ஆதரிக்கும் பிறரை கடைப்பிடிக்க வலியுறுத்தும் - இஸ்கான் அமைப்போடு சேர்ந்து  உணவுத் திட்டத்தை கொண்டு வர  முயற்சி செய்தனர். ஆனால் தமிழ்நாட்டில் மதவாதத்திற்கும் இட மில்லை மதவாதத்தை உணவில் திணிக்கும் திட்டத்திற்கும் ஆதரவில்லை - இதனால் அது முழுமைபெறவில்லை. 

அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு  திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி  சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்தது, அதன் பிறகு மதிய உணவுத் திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது மட்டுமல்லாமல் புதிய வடிவம் எடுக்கத்துவங்கியது

2022 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா பிறந்த நாளன்று காலைச் சிற்றுண்டித் திட்டத்தை அறிமுகம் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  இந்தத் திட்டம் தொடர்பான அறிவிப்பை சட்ட மன்றத்தில் வெளியிட்டபோதே இதற்கு வரவேற்பு அதிகரித்தது. தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு  இந்த காலை சிற்றுண்டித் திட்டம் பெரும் வாய்ப்பாக அமைந்தது. இந்தியாவில் தமிழ்நாடு மட்டும் தான்  மதிய உணவு அமைப்பாளர்களை பணியமர்த்தியுள்ளது. 

இதன் பலன்  ஆற்றல் மிக்க கல்வி அறிவு மிக்க ஒரு பெரும் தலைமுறையை தமிழ்நாடு கொண்டிருக்கும். எதிர் காலத்தில் இந்தியாவின் பிற மாநிலங்களை அனைத்து துறையிலும் பின்னுக்குக்குத்தள்ளி தமிழ்நாட்டை  முன்னேற்றப்பாதையில் கொண்டுவர - கல்வி அறிவு வளம் கூடிய பெரும் இளைஞர் படைகள் தெற்கிலிருந்து புறப்படும். முக்கியமாக சுகாதாரம் தொடர்பான நிதி குறிப்பாக ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படும் தொகை வேறு நல்ல திட்டங் களுக்கு செல்லும் வகையில் ஆரோக்கியமான சமூகம் தெற்கில் உருவாகும்.

இதில் ஒரு விழுக்காடு முதலீடு செய்தால் பிற்காலத்தில் 9 விழுக்காடு பயன் கிடைக்கும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு. 'ஏகலைவனுக்கு வில் கற்றுக் கொடுக்க மறுத்தார் துரோணாச்சாரி. ஆனாலும் தானாக முயன்று உழைத்து வில் வித்தை வீரன் ஆனான் ஏகலைவன். அதைக் கூடப் பொறுக்காமல் வர்ணாசிரமப் புத்தியோடு ஏகலைவனின் கட்டை விரலைக் காணிக்கையாக கேட்டுப் பெற்றார். துரோணாச்சாரியார். அதனைத்தான் பொருத்தமான நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் இது. துரோணாச்சாரி காலமல்ல - ஏகலைவன் காலம் என்றார். சமூகநீதித் திட்டம் என்றார். சமூகநீதிக்கான சரித்திர நாயகர் என்று முதலமைச்சரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பாராட்டியது தான் எத்தகைய தொலைநோக்கு!

புதன், 28 ஜூன், 2023

ஒருங்கிணைப்புக்கும், வெற்றிகரமான முன்னெடுப்புகளுக்கும் ஆசிரியர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல் மிகமிக அவசியம்! தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி!

 நெருக்கடி நிலை காலத்தில் மட்டுமல்ல, எந்தவொரு நெருக்கடி என்றாலும் எனக்கு நல்லாசானாக, நட்புரிமையுடன் ஆலோசனைகள் வழங்கி வருபவர் தாய்க் கழகத்தின் தலைவரான ஆசிரியர் அய்யா!

தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி!

1

சென்னை, ஜூன் 28 நெருக்கடி நிலை காலத்தில் மட்டு மல்ல, எந்தவொரு நெருக்கடி என்றாலும் எனக்கு நல்லாசானாக, நட்புரிமையுடன் ஆலோசனைகள் வழங்கி வருபவர் தாய்க் கழகத்தின் தலைவரான ஆசிரியர் அய்யா! வலிமையான ஒருங்கிணைப்புக்கும், முன்னெடுப்புகளுக்கும் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல் மிகமிக அவசியம் என்று தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

அவருடைய வாழ்த்துக் கடிதம் வருமாறு:

சுயமரியாதை என்று சொல்லப்படும் தன்மானத் துடன், ஒவ்வொரு மனிதரும் வாழ்வுரிமை பெற வேண்டும் என்பதே திராவிட இயக்கத்தின் இலட்சியம். தனி மனிதர்களுக்குத் தன்மானம் கிடைக்கப் பெற வேண்டும் என்றால், இயக்கத்தை வழிநடத்துபவர் களுக்குத் தன்மானத்தைவிட இனமானமே பெரிதாக இருக்கும். இருக்க வேண்டும்.

தலைமைப் பண்புக்கு இலக்கணமாகத் திகழும், நீண்ட பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!

தன் மீது வீசப்படும் சொற்களையும், கற்களையும் எதிர்கொண்டு, எதிரிகளின் வசவுகளை உரமாக்கிக் கொண்டு, உயர்ந்து வளர்ந்து, பழமும், நிழலும் தரும் மரமாக நிலைத்து நிற்பதே திராவிட இயக்கத்திற்கான தலைமைப் பண்பு. அத்தகைய தலைமைப் பண்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்து, நீண்ட பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரராக இருப்பவர்தான் நம் மதிப்பிற்குரிய மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள். 

2

90 வயதில் 80 ஆண்டு பொதுவாழ்வு என்கிற பெருமையைத் திராவிட இயக்கத்தில் அன்றி, வேறு எந்த இயக்கத்திலும் காண்பது அரிது! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது 94 ஆண்டு கால வாழ்வில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்கார ராகத் திகழ்ந்தவர். இனமானப் பேராசிரியர் அவர்கள் தனது 96 ஆண்டு கால வாழ்வில் ஏறத்தாழ அதே அளவிலான பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர். இன்று நம் மதிப்பிற்குரிய மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களும் அத்தகைய பெருமைக்குச் சொந்தக்கார ராகத் திகழ்கிறார்.

நூற்றாண்டு கடந்த திராவிட இயக்கத்தில் முக்கால் நூற்றாண்டைக் கடந்த பொது வாழ்வு என்பது நம் தலைவர்களுக்கு வாய்த்தது என்பது, நமக்குப் பெரு மையாக மட்டுமல்ல, இந்தச் சமுதாயத்திற்குப் பெரும் பயனாகவும் அமைந்துள்ளது.

மிகப் பெரும் மாற்றத்தை, தான் வாழும் காலத்திலேயே நிகழ்த்திக் காட்டியவர் 

புரட்சியாளர் தந்தை பெரியார்

தன்னலமற்ற தொண்டறத்தால்தான் சமுதாயச் சீர் திருத்தத்தை உருவாக்க முடியும் என்று தனது 95 வயது வரை ஓயாமல் பயணித்து, மக்களிடம் பரப்புரை மேற்கொண்டு, மிகப் பெரும் மாற்றத்தை, தான் வாழும் காலத்திலேயே நிகழ்த்திக் காட்டியவர் புரட்சியாளர் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரின் சிந்தனைகளை அவர் கண் முன்னாலேயே சட்ட வடிவமாக்கிக் காட்டியவர் பேரறி ஞர் அண்ணா. தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலும், பெரியாருக்குப் பிறகும் அவரது சிந்தனைகளைச் சட்டங்களாகத் திட்டங்களாகத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

சுயமரியாதை - சமூகநீதி என்ற தண்டவாளங்களின் மீது வேகம் குறையாமல் ஓடுகின்ற இரயில்கள்!

திராவிடர் கழகத்திற்கும் திராவிட முன்னேற்றத் திற்கும் பாதை சற்று மாறுபட்டாலும் இலக்கு ஒன்றுதான். இரு இயக்கங்களுமே சுயமரியாதை - சமூகநீதி என்ற தண்டவாளங்களின் மீது வேகம் குறையாமல் ஓடுகின்ற இரயில்கள்.

10 வயதிலேயே, திராவிடர் கழக மேடை மீது போடப்பட்டிருந்த மேசை மீது ஏறி நின்று பகுத்தறிவை முழங்கிய மாணவரான ஆசிரியர் அய்யாவின் முழக்கம் இன்று வரை ஓயாமல் தொடர்கிறது. அது என்றும் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். நம் விருப்பம்.

தந்தை பெரியாரின் 

முழு நம்பிக்கையைப் பெற்றவர்!

நமது இயக்கத்திலே, தந்தை பெரியாரிடம் இருந்து நற்சான்றை மட்டுமல்ல, அவரது முழுமையான நம்பிக் கையையும் பெற்றவர் ஆசிரியர் அய்யா அவர்கள். பெற்ற நம்பிக்கையை இன்றளவிலும் முழுமையாகக் காப்பாற்றி வருகிறார்.

தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் எனும் ஆலமரத்தை பாதுகாப்பதுடன் பல புதிய விழுது களையும் உருவாக்கி, இந்தக் கொள்கை ஆலமரம் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் தொண்டாற்றி வருபவர் நம் ஆசிரியர் அய்யா அவர்கள்.

ஆசிரியர் அய்யா அவர்களின் பெரும்பணி என்பது ஒரு பெரும் சாதனை!

பேரறிஞர் அண்ணா பொறுப்பு வகித்த, குத்தூசி குருசாமி போன்றவர்கள் பொறுப்பு வகித்த ‘விடுதலை' நாளேட்டின் ஆசிரியராக 60 ஆண்டுகளைக் கடந்து பணியாற்றி வரும் ஆசிரியர் அய்யா அவர்களின் இந்தப் பெரும்பணி என்பது ஒரு பெரும் சாதனை!

தன்னிடம் தந்தை பெரியார் ஒப்படைத்த இயக் கத்தை, பத்திரிகையை, நிறுவனங்களை பன்மடங்கு பெருக்கி, பகுத்தறிவுப் பயணத்தைப் பழுதறத் தொடர்ந்து, தொண்டால் பொழுதளக்கும் மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு என் வாழ்த்துகளை மட்டுமல்ல, வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு நல்லாசானாக, நட்புரிமையுடன் ஆலோசனைகள் வழங்கி வருபவர்!

நெருக்கடி நிலைக்கால ‘மிசா' சிறைவாசத்தில் நான் சித்திரவதைகளை எதிர்கொண்ட போது, என் தோள் பற்றித் துணைநின்ற தோழமைத் தலைவர் நம் ஆசிரியர் அய்யா. அந்த நெருக்கடி நிலைகாலத்தில் மட்டுமல்ல, எந்தவொரு நெருக்கடி என்றாலும் எனக்கு நல்லா சானாக, நட்புரிமையுடன் ஆலோசனைகள் வழங்கி வருபவர் தாய்க் கழகத்தின் தலைவரான ஆசிரியர் அய்யா அவர்கள்.

இன்று அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை இந்திய ஒன்றியம் சந்தித்து வரும் நிலையில், வலிமையான ஒருங்கிணைப்புக்கும், வெற்றிகரமான முன்னெடுப்புகளுக்கும் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல் மிக மிக அவசியம்.

அரசியல் குறித்த ஆலோசனைகள் மட்டுமல்ல, வாழ்வியலுக்கான ஆலோசனைகளையும் அவரிட மிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். 90 வயதிலும் இளைஞருக்குரிய வேகத்துடனும், சுறுசுறுப்புடனும் அவர் செயலாற்றுவதை வியப்புடன் பார்க்கிறேன்.

'பெரியார் உலகம்' முழுமை பெற்று  அவர் தலைமையில் திறப்பு விழா காண வேண்டும்!

தாய்க் கழகமான திராவிடர் கழகத்தைக் கட்டிக்காத்து வரும் ஆசிரியர் அய்யா அவர்கள் தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தையும் தாண்டி, நூற்றாண்டு விழா கொண்டாடி, இன்னும் பலப்பல ஆண்டுகள் இதே சுறுசுறுப்புடனும் வேகத்துடனும் செயலாற்றி எங்களை வழிநடத்த வேண்டும். அவர் சிந்தனையில் உருவாகிச் செயல்வடிவம் பெற்று வரும் 'பெரியார் உலகம்' முழுமை பெற்று அவர் தலைமையில் திறப்பு விழா காண வேண்டும். பெரியாரையும் அவரது பகுத்தறிவுச் சிந்தனைகளையும் உலகமயமாக்கும் அவரது பெரும் பணி தொடரவேண்டும் எனத் தெரிவித்து, நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

நன்றி! 

- இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புதன், 1 மார்ச், 2023

ஏற்றமிகு 7 திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 

சென்னை, மார்ச். 1- மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனை கட்டடங்களுக்கு அடிக்கல் உட்பட ஏற்றமிகு 7 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நேற்று (28.2.2023) நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்ட லின் பங்கேற்று,  ஏற்றமிகு 7 திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது, முதலமைச்சர் பேசியதாவது: திமுக ஆட்சி அமையும் முன்பே நான் கூறியபடி, பொருளாதாரம், வேளாண்மை, குடிநீர், கல்வி, நகர்ப்புற வளர்ச்சி, சமூக பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி ஆகிய 7 இலக்குகளை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடர்கிறோம். ஆட்சிப் பொறுப் பேற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான புதியமுதலீடுகளை ஈர்த்துள்ளோம். ரூ.2,563 கோடியில் ஊரக குடிநீர் திட்டங் களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம். ரூ.18,815 கோடி மதிப்பில் 446 குடிநீர் திட்டப் பணிகள், ரூ.4,499 கோடியில் 23 பாதாள சாக்கடை திட்டங்களுக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.49,385 கோடியில் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக 7 திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. மனிதர்களே மனிதக் கழிவுகளை அகற்றும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க தலித் இந்திய வர்த்தக தொழிற்சங்கத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாதாள சாக்கடை திட்ட பராமரிப்பு, கழிவுநீர் அகற்றும் பணியை நவீன இயந்திரங்கள் மூலமாக மேற் கொண்டு, உயிரிழப்புகளை முற்றிலும் தவிர்க்க திட்டமிட் டுள்ளோம்.தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்க ளது குடும்பத்தினரை தொழில் முனைவோராக ஒருங்கி ணைத்து செயல்படுத்துவதற்கான முன்னோடி திட்டம் சென்னை பெருநகர பகுதியில் செயல்படுத்தப் படும். தூய்மைத் தொழிலாளர் களை தொழில் முனைவோராக மாற்றுவதற்காக, தலித் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்புடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் தூய்மைப் பணியாளர் குடும்பத்தினருக்கு, நவீன கருவிகள், வாகனங்கள் வழங்கப்படுவதோடு, திறன் மேம் பாட்டு பயிற்சிகளும் அளிக்கப் படும். முதலில் சென்னையிலும், தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கும் இத்திட்டம் படிப்படியாக விரிவு படுத்தப்படும்.

அடுத்தது, சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் அருமை யான திட்டம். 3ஆவதாக, மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க உள்ளோம். அடுத்து, திருநங்கைகளுக்கு மாத உதவித் தொகை ரூ.1,000இல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. 5ஆவதாக பல் வேறு துறைகளில் உள்ள பணியிடங்களில் இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது.அடுத்தது, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். இதன் அடுத்த கட்டமாக, தற்போது செயல்படுத் தப்பட்டு வரும் 36 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 433 பள்ளிகளுக்கு நாளை முதல்விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம் 56,098 மாணவர்கள் கூடுதலாக பயனடைவார்கள். 7ஆவது திட்டமாக,ரூ.1,136.32 கோடியில் 44 இடங்களில் புதிய மருத்துவமனை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட் டப்படுகிறது. வளமான, வலிமையான, வறுமை ஒழிந்த, சமத்துவ, சுயமரியாதை தமிழ்நாடு எனது லட்சியம். ‘எனது ஏற்றம் மிகு தமிழ்நாடு’ என்று ஒவ்வொருவரும் பெருமையுடன் அழைக்கும் நிலையை உருவாக்க அனைவரும் உழைப்போம். இவ்வாறு முதல மைச்சர் பேசினார்.

இதில், அமைச்சர்கள் கே.என். நேரு, ரகுபதி, மு.பெ.சாமிநாதன், கீதாஜீவன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை, நகராட்சி நிர்வாக செயலர் சிவ்தாஸ்மீனா, செய்தித் துறை செயலர் செல்வராஜ், செய்தித் துறை இயக்குநர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள், ‘‘ஹேப்பி பர்த்டே டூ யூ'' என்று பாடி, பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க, முதலமைச்சரும் அவர்களை வணங்கி வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார்.

திங்கள், 19 டிசம்பர், 2022

இனமானப் பேராசிரியர் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் புகழாரம்!

சனி, 3 டிசம்பர், 2022

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி பிறந்த நாள் வாழ்த்து!


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (2.12.2022) தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90 ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, அவருடைய வாழ்விணையர் மோகனா அம்மையாருக்கும் பொன்னாடை அணிவித்தார். நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், முரசொலி செல்வம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியருக்குப் பொன்னாடை போர்த்தி பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். உடன்  திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் (சென்னை, 2.12.2022).

-------++++---++-+---++ 

தாய்க் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா நீடு வாழ்க!

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி!


நேரில் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார் (சென்னை, 2.12.2022)

சென்னை, டிச.2- திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க.தலைவர் முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் "தாய்க் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா நீடு வாழ்க!" என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-

'திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தர் என்ற பேரறிஞர் அண்ணாவின் புகழுரைக்கேற்ப, 10 வயது முதல் தந்தை பெரியாரின் இலட்சியத்தை முழங்கத் தொடங்கி, தொண்டறத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு, இளை யோருக்கு நிகராக சமூகநீதிப் போர்க்களத்தில் சளைக்காமல் போராடி, பகுத்தறிவு இனமான உணர்வினை ஊட்டி வரும் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களுக்கு அகவை 90 என்பதில் அகம் மிக மகிழ்கிறேன். ‘திராவிட மாடல்' அரசின் சமூகநீதிக் கொள்கை சார்ந்த அனைத்துத் திட்டங்களுக்கும், சட்டப் போராட்டங்களுக்கும் உறுதுணையாய் வழிகாட்டியாய்த் திகழும் ஆசிரியர் அய்யா அவர்கள் நூறாண்டு கடந்தும் நலமோடு வாழ்ந்திட நெஞ்சார வாழ்த்துகிறேன்.

-இவ்வாறு திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிறு, 31 ஜூலை, 2022

ஒரே நாடு ஒரே மொழி என்போர் நாட்டின் எதிரிகள்

திங்கள், 11 ஜூலை, 2022

விடுதலை'க்கு 10 ஆண்டு சந்தாக்களை வழங்கினார் முதலமைச்சர்!

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

துப்புரவுத் தொழிலாளராகப் பணியைத் தொடர்ந்த ஒருவர் முதலமைச்சராவது பெருமைக்குரியது - காங்கிரசின் முடிவு வரவேற்கத்தக்கது!

 பஞ்சாபில் சமூகநீதிக் கொடி உயர்கிறது

துப்புரவுத் தொழிலாளராகப் பணியைத் தொடர்ந்த ஒருவர் முதலமைச்சராவது பெருமைக்குரியது - காங்கிரசின் முடிவு வரவேற்கத்தக்கது!

தமிழர்  தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள சமூகநீதி அறிக்கை

பஞ்சாப் மாநிலத்தில் துப்புரவுத் தொழிலாளராகப் பணியைத் தொடர்ந்த ஒருவர் முதலமைச்சராவது வரவேற்கத்தக்கதுஅகில இந்திய காங்கிரசின் இந்த முடிவு பாராட்டத்தக்கது என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  சமூகநீதி அறிக்கை வருமாறு:

பஞ்சாப் மாநிலத்தில் சமூகநீதி (தந்தை பெரியார் பிறந்த நாள்)  நாள் காலகட்டத்தில் மலர்ந்துகாயாகிகனிந் துள்ளதுபஞ்சாபில் இன் னமும் ஜாதிய அடை யாளங்களும்அதன் தாக்கங்களும் உண்டு.

சீக்கிய மதத்தினரிடம் இங்குள்ள கிறித்துவ மதத்தில் எப்படி ஜாதி முறை என்பது ஊடுருவி இன்னமும் ஆதிக்கம் செலுத்தும் வேதனையான நிலை உள்ளதோஅதேபோல்  பஞ்சாபியர்களிடமும் உண்டுஉயர்ஜாதிபிற்படுத்தப்பட்டோர் (.பி.சி.), தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.,) போன்ற பிரிவினரும் உண்டு.

மிகவும் வரவேற்கத்தக்கது

இந்நிலையில்அங்கு காங்கிரஸ் ஆட்சி நடை பெற்று வரும் நிலையில்முதலமைச்சர் கேப்டன் அமிரீந்தர்சிங் பதவி விலகிய நிலையில்புதிய முதலமைச்சராக சரண் ஜித் சிங் சன்னி அவர்கள் ஒருமனதாகத் தேர்வு செய்யப் பட்டு இருப்பது மிகவும் வரவேற்கத் தக்கது.

சமூகநீதிக் கொடி கம்பீரமாகப் பஞ்சாபில் பறக்கிறது என்பதற்கும்பெரியார் - அம்பேத்கர் - மங்குராம் போன்ற சமூகப் புரட்சியாளர்களின் லட்சியப் பயணங் கள் இன்றும் தொடருகின்றன என்பதற்கான எடுத்துக் காட்டு இது ஆகும்.

புதிய முதலமைச்சராகத் தேர்வாகியுள்ள மாண்புமிகு சரண்ஜித்சிங் சன்னி அவர்கள் துப்புரவுத் தொழிலாளராக களப் பணி செய்த அணியினைச் சார்ந்தவராவார்அவர் பொது வாழ்க்கையில் உள்ளாட்சி நிறுவனத் தேர்தலில் வென்றுபிறகு தொடர்ந்த தொண்டினால்மாநில தொழில்நுட்பத் துறை அமைச்சராகிய அனுபவம் பெற்றவருமாவார்!

காங்கிரஸ் தலைமையைப் பாராட்டுகிறோம்!

சமூகநீதிக்கு இடம் தந்த காங்கிரஸ் தலைமையைப் பாராட்டுகிறோம்!

2007 ஆம் ஆண்டு முதல் முறையாக சம்கவுர் சாகிப் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார் சரண்ஜித் சிங் சன்னி.

அதற்குமுன் - இந்த 58 வயதானவர் - பஞ்சாபின் கரன் நகராட்சித் தலைவராக இருமுறை பதவி வகித்தவர் ஆவார்.

2012-2017 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அதேதொகுதியில் (சம்கவுர் சாகிப் தொகுதிஇருந்து வெற்றி பெற்றார். 2015 இல் பஞ்சாப் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியவர்!

உயர்ஜாதி ஆணவத்தின் வெளிப்பாடு

பஞ்சாபில் இப்படி ஓர் அமைதியான அரசியல் சமூகப் புரட்சி ஏற்பட்டுள்ளது பாராட்டத்தக்கதுபழுத்த நிர்வாக அனுபவம் கொண்ட இவரைக் கொச்சைப்படுத்த அம்மாநில பா...வினர் ஏதோ ஆதாரமில்லாத பழைய செய்திகளை மீண்டும் உலாவவிட்டிருப்பது - உயர்ஜாதி ஆணவத்தின் வெளிப்பாடு அல்லாமல் வேறு என்ன?

தமிழ்நாடு சமூகநீதி மண் - இந்தப் புதிய மாற்றத்தை வரவேற்றுப் பாராட்டுவதோடு - அவரை வாழ்த்தி மகிழ்கிறது!

சில உயர்ஜாதி ஏடுகளும்ஊடகங்களும் இவருக்கு எதிரான சில செய்திகளைப் பரப்பி தங்களது எரிச்சலுக்கு வடிகால் தேடுகின்றன!

இதன்மூலம் காங்கிரஸ் தலைமை அருமையான சாதனை புரிந்ததோடு, ‘‘நாங்கள் அடுத்து ஆட்சிக்கு வந்தால்தலித் ஒருவரை முதல்வராக்குகிறோம்'' என்ற பா...வினரின் கூப்பாட்டினையும் இந்த ‘ஊசி'யின் மூலம் வெடித்த பலூனாக்கி விட்டதுஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டது - மகிழ்ச்சிக்குரியது!

 

 

சென்னை                                      தலைவர்

20.9.2021             திராவிடர் கழகம்.