தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 பிப்ரவரி, 2026

பெரியார் என்றால் பார்ப்பனர்கள் பதறுகிறார்கள் – பெரியார் இன்னும் இவர்களைப் பதறடித்துக் கொண்டே இருப்பார்!




* நாடாளுமன்றத்தில் கலைஞானி கமல்ஹாசன் பேசியதில் என்ன குற்றம்?  தந்தை பெரியார் கூறிய கருத்தைத் திரித்துப் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
* தந்தை பெரியார் கூறுவதை எல்லாம் ஒப்புக் கொள்கிறார்களா?  தமிழை நீஷப் பாைஷ என்றும், சமஸ்கிருதத்தைத் தேவ பாைஷ என்றும் கூறுவோர் யார்?
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வினருக்குத் தமிழ்மீதும், தமிழர்மீதும் இருப்பது வயிற்றெரிச்சல்! தந்தை பெரியாருக்கு இருப்பதோ தாய்க் கோழியின் எரிச்சல்!

மாநிலங்களவையில் ‘‘கலைஞானி’’ கமல்ஹாசன் மிகச் சரியாகத் தான் பேசி இருக்கிறார். தந்தை பெரியாரைப்பற்றி திரித்துப் பேசிய,   நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  முதல் பிஜேபியினர் அனைவரும் பதறுகின்றனர். பெரியார் அந்தக் கூட்டத்தை இன்னும் பதறடித்துக் கொண்டுதான் இருப்பார் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நாடாளுமன்ற மாநிலங்களவையில், தனது முதல் ‘கன்னி’ உரையைச் (Maiden Speech) சிறப்பாக நிகழ்த்தியிருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்   ‘‘கலைஞானி’’ கமல்ஹாசன் அவர்கள். தன்னுடைய உரையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, காந்தியார் உள்ளிட்டோரைத் தன்னுடைய ஆசான்களாகவும், தாத்தா, தந்தையராகவும் முன்னிறுத்தி அவர் ஆற்றிய உரை வரவேற்கத்தக்கதாகும்.

நிதி அமைச்சருக்குக் கமல்ஹாசன் எதிர்ப்பு!

எஸ்.அய்.ஆர்., நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் தன்னுடைய உரையில் குறிப்பிட்ட தோழர் கமல்ஹாசன், கடந்த ஆண்டு 2025 ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆற்றிய உரையில் தமிழ் பற்றித் தெரிவித்த கருத்துகளுக்குக் கடும் மறுப்பையும் பதிவு செய்துள்ளார்.

‘தமிழன் பிச்சையெடுக்க மாட்டான்; அதிலும் உங்களிடம் பிச்சையெடுக்க மாட்டான். பிச்சையெடுத்துப் பழக்கப்பட்டவர்கள், அது உதவாதென்று, பின்னர் உண்டியலை நீட்டியது வரை’, தன் கோபத்தை நாடறிய வெளிக்காட்டி அமர்ந்தார் கமல்ஹாசன்.

கடந்த ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  பேசியது அவருடைய கருத்தில்லை என்றும், பெரியாரின் கருத்தையே அவர் எடுத்துக் காட்டியதாகவும் பா.ஜ.க.வினர் ஊடகங்களில் விளக்கமளிக்கின்றனர்.

தந்தை பெரியார் பெயரைக் குறிப்பிடாமலேயே நிதியமைச்சர் அம்மையார் பேசினாலும்   எந்தச் சூழலில் அவர் பெரியாரைத் துணைக்கழைத்தார்?

ஒன்றிய கல்வி அமைச்சரின் சண்டித்தனம்!

தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தர முடியாது என்று சண்டித்தனம் செய்தார்; தேசியக் கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் நிதி வழங்கப்படும் என்று கட்டாயப்படுத்த முயற்சித்தார். தமிழ்நாடு அதைக் கண்டித்தது. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் அதனைக் கண்டித்தனர்.

அதன் நியாயத்தை உணராத தர்மேந்திர பிரதான், தமிழர்களை ‘நாகரிகமற்றவர்கள், ஜனநாயகமற்றவர்கள்’ என்று அவையிலேயே பேசினார். கொதித்தெழுந்த நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழர்களைக் கொச்சைப்படுத்திய அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், பதவி விலக வேண்டும் என்றும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்கள். அவரது வார்த்தைகள் அவைக் குறிப்பில் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டாலும், அவர் மன்னிப்புக் கேட்கவில்லை. வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.

தந்தை பெரியார் பேச்சைத் திரித்துப் பேசிய நிர்மலா சீத்தாராமன்

அந்த நிலையில் தான், தாங்கள் பின்வாங்கிய கோபத்துடன், தர்மேந்திர பிரதானுக்கு வக்காலத்து வாங்கி நாடாளுமன்றத்தில் பேசினார் நிதியமைச்சர் அம்மையார். அதில், “தமிழ்நாடு போற்றிக் கொண்டாடும் ஒரு முக்கியமான தலைவர், நான் அவர் (பெரியார்) பெயரைச் சொல்லப் போவதில்லை, அவர் தமிழைப் பற்றி குறை சொல்லவில்லையா?  அவரை எப்படி இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்’’ என்று பேசிவிட்டு, ஆதாரம் காட்டுவதாகச் சொல்லி, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வினரின் வழக்கத்தைப் போல, தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல், தந்தை பெரியார் எழுதியவற்றை முன் – பின் வெட்டிவிட்டு,  நடுவில் சில வரிகளை மட்டும் சுட்டிக் காட்டிப் பேசினார்.

காலம் காலமாக இந்துத்துவவாதிகள் ஓட்டித் தேய்ந்துபோன அதே பழைய கிராமபோன் தட்டை இவர் நாடாளுமன்றத்தில் ஓட்டினார். நாடாளுமன்றத்தில் பேசுபவர் கொஞ்சம் ஆதாரத்துடன், சரியான தரவுகளுடன் பேச வேண்டாமா? அவர் இரண்டு தேதிகளில் ‘‘விடுதலை’’யில் செய்தி வந்ததாகச் சுட்டிக் காட்டினார்.

வாட்ஸ் அப் வதந்திகளை நம்பும் பரிதாபத்துக்குரிய நிதி அமைச்சர்

27.11.1943 ‘‘விடுதலை’’யில் தந்தை பெரியார் எழுதியதாக எதையோ படித்தார். முடிந்தால் அம்மையார் அந்த நாள் ‘விடுதலை’யை எடுத்துக் காட்டலாமே! முடியாது. ஏனெனில், 1943 செப்டம்பர் மாதத்திலிருந்து விடுதலை ஏடு யுத்தப் பிரச்சாரத்திற்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தான் மீண்டும் அது பெரியாரின் கைகளுக்கு வருகிறது. ஆனால், வாட்ஸ் அப் வதந்திகளைப் பரப்புவோர் அதையே ஆதாரமாகக் காட்டி நாடாளுமன்றத்திலும் பேசி அதன் மாண்பைக் கெடுக்கலாமா?

மற்றொரு தேதியில் தந்தை பெரியார் எழுதிய தலையங்கத்தை எடுத்துக் காட்டுகிறார். அதிலாவது ‘அறிவு நாணயம்’ இருக்க வேண்டாமா? ‘துக்ளக்’கில் வந்த ஒரு துண்டுப் பகுதியை எடுத்துப் படித்த அவர், அதிலேயே ‘தமிழ் படித்தால் பிச்சை கூட எடுக்க முடிய வில்லை’ என்று ஒரு ‘புலவர் பாடியிருப்பதாகப் பெரியார் சுட்டிக் காட்டியிருப்பதை’த் தமிழில் படித்துக்காட்டிவிட்டு, ஆங்கிலத்தில் அதைச் சொல்லும்போது, பெரியாரே அப்படிச் சொன்னது போல் திரித்துப் பேசினாரே! ஏன்?

தந்தை பெரியார் பேசியதை எல்லாம்
ஒப்புக் கொள்கிறார்களா?

‘பெரியார் பேசியதைத் தானே நிர்மலா அம்மையார் எடுத்துக்காட்டினார்’ என்று சொல்வோர், ‘மற்றொரு புலவரின் பாடலைத் தானே பெரியார் எடுத்துக்காட்டினார்’ என்ற உண்மையை மறைப்பதேன்? 16-ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் என்பவர் எழுதிய தனிப் பாடல் ஒன்றைத் தானே பெரியார் சுட்டிக்காட்டுகிறார். அதை நியாயமாக எடுத்துச் சொல்வதில் என்ன தயக்கம்? அதைத் திரிப்பானேன்?

அதன் வரலாறு தெரியாதவர் இப்படிப் பேசுவது எவ்வகையில் நியாயம்?

‘தந்தை பெரியார் தமிழைப் பற்றி இப்படிச் சொல்லிவிட்டார், அப்படிச் சொல்லிவிட்டார்; அதனால் தர்மேந்திர பிரதான் சொன்னது தவறில்லை’ என்ற தொனியில் தானே அந்த அம்மையார் பேசினார். அப்படியென்றால் பெரியார் பேசியதையெல்லாம் ஒப்புக் கொள்கிறார்களா? பெரியாரின் கருத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? அதே கட்டுரையில், பெரியார், ‘ஏன் தமிழ் இலக்கியங்களை ஏற்க மறுக்கிறேன்’ என்று எழுதுகிறாரே! இவர்கள் இப்போது தூக்கிக் கொண்டு வரும் அகஸ்தியரைக் கிழித்துப் போட்டிருக்கிறாரே! அவற்றைப் பற்றிப் பேசுவோமா?

பெரியாருக்கு யாரும் உரை எழுத வேண்டியதுமில்லை; விளக்கம் சொல்ல வேண்டியதுமில்லை. தந்தை பெரியாரின் எழுத்தை, பேச்சை முழுமையாகப் படித்தாலேயே அதற்கான காரண, காரியங்கள், நோக்கங்கள் (அவருக்கு உள்நோக்கம் எதுவுமில்லை; அவர் என்றும் வெளிப்படையானவரே, அவருடைய கருத்துகள் எல்லாம் வெளிப்படையானவையே!) அனைத்தும் எளிதில் விளங்கிவிடுமே!

தமிழர்கள்மீது தந்தை பெரியாருக்கு
இல்லாத அக்கறையா?

யார் தமிழர்களைப் பற்றிப் பேச, தமிழைப் பற்றிப் பேச அருகதை உடையவர்? ‘தமிழருக்காக நான் பலிகடா ஆகிறேன்’ என்று தன் 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு தெருத்தெருவாய் அலைந்து பிரச்சாரத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்ட பெரியாருக்குத் தமிழர்கள் மீது இல்லாத அக்கறையா? தமிழர்கள் வளர்ச்சி அடைய, பகுத்தறிவு பெற, மான உணர்வு பெற எவையெல்லாம் தடை என்று கண்டறிந்து, அவற்றைத் தகர்த்தெறிந்த தளகர்த்தர் அவர். தமிழர்கள் நல் வாழ்வு வாழத் தமிழும், ஆங்கிலமும் வேண்டும் என்று அவர் முன்மொழிந்ததைத் தானே அண்ணா சட்டமாக்கினார். அதனால் தானே இன்று தமிழர்கள் உலகம் முழுக்க அறிவியலில் வெற்றிக் கொடி நாட்டுகின்றனர்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். – பாஜ.க. காரர்கள் செய்வது என்ன? ஆங்கிலத்துக்குப் பதில் ஹிந்தியை, சமஸ் கிருதத்தைத் திணித்து தமிழர் தம் வளர்ச்சியைத் தடுத்து, மீண்டும் மனுவாதத்தின் பிடியில் தள்ள முயல்வது தானே அவர்களின் நிலைப்பாடு! அதற்குத் தடையாகத் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும், அவர்கள் தந்த சமூக நீதியும், கல்வியும் இருக்கிறது என்பதால் தானே இவற்றையெல்லாம் ஒழிக்க நினைக்கிறார்கள்.

தமிழை நீஷ பாைஷயாக்கி, தீட்டு மொழியாக்கி, சமஸ்கிருதத்தை – வடமொழி ‘‘தேவபாைஷ’’யாக்கிய பேதவாதிகள் ஆணவக்காரர்கள் யார்? மொழி மற்றும் சமத்துவத்தை ஏற்காதவர்கள் யார்?

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யினருக்கு
தமிழ்மீதும், தமிழர்மீதும் வயிற்றெரிச்சல்!

ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வினருக்குத் தமிழ் மீதும், தமிழர் மீதும் இருப்பது வயிற்றெரிச்ச்சல்! தந்தை பெரியாருக்கு இருந்தது தாய்க் கோழியின் எரிச்சல்! முட்டையிட்ட கோழிக்குத் தானே வலி தெரியும். பார்ப்பனர்களுடனும் போராடி, அதைப் புரிந்துகொள்ளத் தமிழர்களின் அறிவுடனும் போராடி, படிப்படியாய்த் தமிழர்களைத் தூக்கி நிறுத்தியவருக்குத் தானே தடைகள் எங்கே என்று தெரியும். ‘‘தமிழின் வளர்ச்சிக்கும், தமிழர்தம் வளர்ச்சிக்கும் தடையாக இருப்பவை தமிழ் இலக்கியங்களே ஆனாலும், அவற்றை ஒழித்தாக வேண்டும்’’ என்ற பெரியாரின் சிந்தனை – ஒரு சமூக மருத்துவரின் சிந்தனை! நம்முடல் தான் எனினும், புற்று வந்த பகுதியை வெட்டி வீசுவதில்லையா? அழுகிப் போன திசுக்களை அடியோடு நறுக்கி எறிவதில்லையா? அப்படித்தான் பெரியாரும் – தமிழருக்கும், தமிழுக்கும் கேடு செய்தவற்றை ஒழிக்கச் சொன்னார் – தனக்கே உரிய அறுவைச் சிகிச்சை நிபுணரின் முடிவோடு!

ஈரோடு தமிழன்பன் கூறியதுதான்
நினைவிற்கு வருகிறது

மறைந்த மகாகவி ஈரோடு தமிழன்பன் சொன்னது போல, தந்தை பெரியார் நடத்தியவை யாவும் ‘அக்கறைக் கலவரங்கள்!’ ஒரு தாய்ப்புலி தன் குட்டியைக் கவ்வுவது போல தமிழர்களைக் கவ்விய கருணை மறவர் தந்தை பெரியார். அவரைத் திரித்தும், புரட்டியும் பேசுவதை ஒருபோதும் ஒப்ப முடியாது. கடந்த ஆண்டே இதற்கு நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க.துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் பதில் அளித்துவிட்டார்.

எனினும், ஓராண்டு கடந்தாலும் தன் தமிழ்க் கோபத்தைக் காட்டி, போலியாகத் தமிழர்கள் மீது அக்கறையுடன் நடிப்பவர்களுக்கு, நண்பர் கமல்ஹாசன் காட்டமாகப் பதில் அளித்துள்ளார். அவர் சுட்டிக்காட்டி யதைப் போல, தமிழன் பிச்சையெடுக்க மாட்டான். திராவிட இயக்கம் பிச்சையெடுக்க விடாது! அதிலும், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் பிச்சையை ஒரு நாளும் ஏற்காது. உரிமையைக் கேட்கும்; மக்களுக்கு உரிமை கொடுக்கும்; உடைமையைப் பொதுவாக்கும்.

“தமிழன் என்றொரு இனமுண்டு – தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்று பாடிய நாமக்கல் கவிஞர் அடுத்தடுத்த வரிகளில் அதைச் சரியாகவே விளக்குகிறார்.

“மானம் பெரிதென உயிர்விடுவான்; மற்றவர்க்காகத் துயர் படுவான்; தானம் வாங்கக் கூசிடுவான்; தருவது மேலெனப் பேசிடுவான்”

பிச்சை எடுப்பதுதான் பார்ப்பனர்களின் தர்மம் என்று அவாளின் மகா பெரியவாள் கூறியதை மறுக்கிறார்களா?

பூதானம், கோதானம், அன்னதானம், சொர்ணதானம் வாங்கியே பழக்கப்பட்டுவிட்டவர்கள் போலல்ல; ‘உண்டியலில் போடாதீர்கள் – அர்ச்சகர் தட்டில் போடுங்கள்’ கோயிலில் போய் பக்தர்களிடம், ‘தங்களவர்’களுக்காகச் சிறீவைகுண்டத்தில் ‘பரிந்துரை செய்தவர்கள்’ போலல்ல.

”ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;

கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று” என்பது பழந்தமிழர் மரபு.

பிக்‌ஷாந்தேகிகளுக்கு அது உகந்ததல்ல; அவர் களுக்குப் போடுங்கள் என்று பரிந்துரைப்போருக்கும் உகந்ததல்ல என்பதும் நமக்கு நன்கு தெரியும்.

மகா மகா பெரியவர் ‘‘பிராமணர்’’களுக்கு  என்ன அறிவுரை கூறுகிறார். ‘‘பிச்சையெடுத்தல் தான தர்மம் அதை விட்டு விட்டார்களே’’ என்று ‘தெய்வத்தின் குரலில்’ கூறினாரே  அதை   மறுக்கிறார்களா?

நண்பர் கமல்ஹாசனின் நாடாளுமன்ற முதல் உரை, தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புரிய வேண்டியவர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும். அதனால்தான் பதறுகிறார்கள். தந்தை  பெரியார் இன்னும் இவர்களைப் பதறடித்துக் கொண்டிருக்கிறார்.

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

7.2.2026        

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

தமிழ் படிக்காமலேயே அரசுப் பணியில் சேர்ந்த அவலம் நீக்கம்

 

தமிழில் 40 விழுக்காடு மதிப்பெண் வாங்கியவர்களுக்கே அரசுப் பணி 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிய சட்ட திருத்தம் வரவேற்கத்தக்கது - பாராட்டத்தக்கது!

தமிழ் படிக்காமலேயே தமிழ்நாடு அரசுப் பணி களில் சேர்ந்த அவலத்தை நீக்கும் வகையிலும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கூடுதலாகக் கிடைக்கும் வகையிலும், இனி தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர்பவர்கள் தமிழில் 40 விழுக்காடு மதிப்பெண் பெற்றாகவேண்டும் என்ப தற்கான சட்டத் திருத்தம், தமிழ்நாடு சட்டப்பேரவை யில் நிறைவேற்றப்பட்டுள்ளதைப் பாராட்டியும், வரவேற்றும்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர்ந்திட தமிழ் மொழிக் கட்டாயம் என்று, சட்டத்தின் முன்வரைவு நேற்று (13.1.2023) தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகமிக வரவேற்றுப் பாராட்டப்படவேண்டிய ‘திராவிட மாடல்' ஆட்சியின் தனிப்பெரும் சாதனையாகும்!

நிதியமைச்சரும், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேற்று (13.1.2023) தாக்கல் செய்த இந்த மசோதா தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பு உரிமை - வாய்ப்புகளைக் காப்பாற்ற பெரிதும் பயன்படும்.

தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்ந்திட தமிழில் 40% மதிப்பெண் அவசியம் - சட்டத் திருத்தம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 அய் திருத்துவதற்கான சட்ட மசோதா கூறுவது என்ன?

அச்சட்டத்தின் 21 ஆம் பிரிவில் 21-ஏ என்ற புதிய பிரிவு சேர்க்கப்படுகிறது. அந்தச் சட்டத்தின் 21 ஆம் பிரிவின்படி, தமிழ்நாட்டின் அலுவல் மொழியான தமிழில் போதிய அறிவு பெறாத எவரும், நேரடி ஆள் சேர்ப்பின்மூலம் நடைபெறும் பணி எதிலும் நியமனம் செய்யப்பட, தகுதி உள்ளவராக கருதப்பட மாட்டார்.

அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கும்போது, தமிழில் போதிய அறிவு இல்லாதிருந்த விண்ணப்பதாரர்கள், தமிழ் மொழித் தகுதி பெறாமலேயே பணி நியமனம் பெற்றிருக்கலாம்; அப்படிப்பட்டவர்கள், பணியமர்த் தப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில், இரண்டாம் மொழித் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு பணியில் சேர விண்ணப்பிக்கவேண்டும். தமிழில் தேர்ச்சி பெறவில்லையானால், பணியிலிருந்து அவர் களை விடுவிக்கலாம்.

தற்போது அந்தச் சட்டத்தில் புதிதாக சேர்க்கப்படும் 21-ஏ பிரிவின்படி, 1.12.2021  ஆம் நாளில் இருந்து, நேரடி ஆள்சேர்ப்பு மூலம் எந்த ஒரு பதவிக்கும் விண்ணப் பிக்கும் நபர் எவரும், பணி நியமனத்திற்காக நடத்தப் படும் தேர்வில், தமிழ் மொழித் தாளில் 40 விழுக் காட்டிற்கும் குறையாமல் மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும்.

தமிழ் மொழித் தேர்வுக்கான அப்பாடத் திட்டத்தை அவ்வப்போது அரசு வெளியிடும்.

முந்தைய சட்டத்திலிருந்த 

ஓட்டை அடைக்கப்பட்டுள்ளது

இம்மசோதா முந்தைய சட்டத்தில் உள்ள ஓட்டை களை அடைக்கின்ற வகையில் உள்ளது என்றாலும், வெளிமாநிலத்தவர் நம் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறித்துக்கொண்டு செல்லாத அளவுக்கு, உயர்நிலைப் பள்ளிகளில் தொடர்ந்து தமிழ்ப் படித்தவர்களா (அவர்கள்) என்பதை உறுதி செய்து, பிறகு வேலை வாய்ப்பை அளிக்கும் ஓர் ஓட்டையை விட்டுள்ள (Fool-proof) முறையை ஆய்வு செய்வது அரசின் கண்ணோட்டமாகி, நமக்குப் பயன்படவேண்டும்!

தமிழ்நாட்டு இளைஞர்கள் பல லட்சம் பேர் ஏங்கித் தவிக்கையில், முன்பிருந்த அ.தி.மு.க. அரசு, பிற மாநில இளைஞர்களுக்குப் பணி நியமனங்களில் அகலமாகக் கதவுகளைத் திறந்து வைத்த காரணத்தினால், இத்திருத் தங்கள் இன்று முக்கியமாகத் தேவைப்படுகின்றன.

அவர்கள் தமிழ்நாட்டில் படித்தவர்களா? தமிழில் படித்தவர்களா? என்று உறுதிப்படுத்திக் கொண்டு பணி நியமனத்திற்கு மனு போடும் தகுதியை முன்நிபந்தனை ஆக்கவும் வேண்டும்.

தமிழ் ஆட்சி மொழியாக தமிழ்நாட்டில் இருக்கும் போது, தமிழ் தெரியாதவர்கள் - அவர்கள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்.,களாக இருந்தாலும் அல்லது நான்காம் பிரிவு (குரூப் 4) பணியாளர்களாக இருந்தாலும் அரசுப் பணிகளைப் பெறும் நிலை இனியும் இருக்கக்கூடாது.

மாநிலத்தின் ஆளுமைத் திறனையும் இது வெகுவாகப் பெருக்கப் பெரிதும் உதவவும் கூடும்.

தமிழ்ப் படிக்காமலேயே 

அரசுப் பணியில் சேர்ந்த அவலம்!

இந்தத் திருத்தத்தின் முக்கியத்துவம், தமிழ் மொழித் தாளில் 40 விழுக்காடு மதிப்பெண் என்பது முன் நிபந் தனையாகும். நம் இளைஞர்களும்கூட, தமிழ் படிக்கா மலே அரசுப் பணிகளில் சேரலாம் என்ற அவலத்திற்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்பதால், இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம்!

உணவின் தரம், சமைப்பதைவிட அதை உண்ணுபவர்களின் ருசியே முக்கியம். சத்தும் மிகமிக முக்கியம் என்பதே இதன் நோக்கமாகும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

14.1.2023

வியாழன், 22 டிசம்பர், 2022

படையெடுப்புகளில் மிக ஆபத்தானது பண்பாட்டுப் படையெடுப்பே! நமது முதலமைச்சர் வழிகாட்டியுள்ளார்-பின்பற்ற என்ன தயக்கம்?

புதன், 22 ஜூன், 2022

நடந்து முடிந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 47 ஆயிரம் மாணவர்கள் தமிழில் தோல்வி என்பது அதிர்ச்சிக்குரியது

வெள்ளி, 8 அக்டோபர், 2021

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் தமிழ் கட்டாயம் என்ற முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது!

 

பிற மாநிலங்களில் 80 விழுக்காடு இடங்கள் அந்தந்த மாநிலங்களுக்கே என்பதே இன்றைய நிலை!

தமிழ்நாட்டிலும் அந்த நிலை உறுதி செய்யப்படவேண்டும்!!

நீதிமன்றங்களிலும் தமிழ் வழக்காடு மொழியாகட்டும்!

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என்ற முடிவு மிகவும் வரவேற்கத்தக்கதுபிற மாநிலங்களில் 80 விழுக்காடு இடங்கள் அந்தந்த மாநிலங்களுக்கே என்பதே இன்றைய நிலை - தமிழ்நாட்டிலும் அந்த நிலை உறுதி செய்யப்படவேண்டும்நீதிமன்றங்களி லும் தமிழ் வழக்காடு மொழியாகட்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

டி.என்.பி.எஸ்.சி., (Tamilnadu Public Service Commission)  என்ற தமிழ்நாடு பொதுத் தேர்வாணையம் 22.9.2021 அன்று அதன் தலைமையகத்தில் கூட்டிய முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் சிறந்த முடிவுகளை எடுத்து அறிவித்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கதும்பாராட்டத்தக்கதும் மட்டுமல்லநீண்ட நாள் தமிழ்நாட்டு இளைஞர்மக்களது விருப்பம்வேண்டுகோளுக்கு செயலுருவம் தரும் சிறப்பான முடிவாகும்.

டி.என்.பி.எஸ்.சிமுடிவு வரவேற்கத்தக்கது!

‘‘தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டு இளைஞர் களை 100 சதவிகிதம் நியமனம் செய்யும் பொருட்டுதேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத் தாள் தகுதி தேர்வாக கட்டாயமாக்கப்படும்.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

அரசு எடுத்துள்ள கொள்கை முடிவுகளின் அடிப்படையில், டி.என்.பி.எஸ்.சிதேர்வுகளில் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டுவர டி.என்.பி.எஸ்.சிதிட்ட மிட்டுள்ளதுஇதன் ஒரு பகுதியாக தேர்வு எழுதுபவர் களுக்கான புதிய அறிவுரைகள் அண்மையில் வெளியிடப்பட்டது.

மேலும் தேர்விலும் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக் கும்  வகையில்பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.

அதாவது ஒவ்வொரு டி.என்.பி.எஸ்.சிதேர்வுக்கு முன்பாகவும் தமிழ் மொழித்தாள் தேர்வு நடத்தப்பட வுள்ளதுஇதில் 45 மதிப்பெண்கள் எடுத்து தகுதி பெற வேண்டும்அப்படி தகுதி பெற்றால் மட்டுமே பொதுத் தேர்வுக்குரிய விடைத்தாள்களைத் திருத்தபரிசீலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கு 40 விழுக்காடு இட ஒதுக்கீடு

பெண்களுக்கான நியமனங்களில் 40 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை வெளியானவு டன்அதையும் நடைமுறைப்படுத்தவும் டி.என்.பி.எஸ்.சிமுடிவு செய்துள்ளது.

அரசுத் துறைகளில் காலியாக குரூப் 1, 2, 4 உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கு புதிய திருத்தங்கள் மேற்கொள்வதற்கு கருத்துருக்கள் தேர் வாணையத்தின் மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளனஇவற்றுக்கான அனுமதி அரசிடமிருந்து கிடைத்தவுடன் தேர்வு நடைபெறும் தேதிகளும் வெளியிடப்படும்'' என்று  அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நமது தமிழ்நாட்டில்தான் விசித்திரமான ஒரு நிலை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தது!

செம்மொழி என்று தகுதி பெற்ற எம்மொழி - தமிழை தமிழ்நாட்டு இளைஞர்களில் பலரும் கூட படிக்காம லேயே  கூட மேற்பட்டப் படிப்பு வரை செல்ல முடியும் என்ற கேலிக்குரிய நிலைதான் அது!

பள்ளிக் கல்வி நிலையில் இருந்தாலும்வேறு பயிற்சி மொழிமூலம் தமிழ்ப் படிக்காமலேயே மேல் வகுப்புக்குச் செல்லலாம்பட்டமும் பெறலாம் என்பது விந்தையான நிலையல்லவா?

தமிழ்நாடு தேர்வாணையத்தில் அரசு பணிகளுக்குப் போட்டியிட்டும்தமிழ் படிக்காமலேயே - வெற்றி பெற்று வேலை வாய்ப்பைப் பறிக்க முடியும்இது ஒரு நகை முரண் அல்லவா?

தமிழ்நாட்டு இளைஞர்களின் நிலை

அவர்கள் பணியாற்றப் போவது யாரிடத்தில்எந்த மக்களிடத்தில்?

தமிழ்நாட்டுப் பொதுமக்களிடையே - அதுவும் சாமானிய மக்களுக்காகஅப்படியிருந்தும் தமிழ் தெரி யாதவர்கள் வேலை வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கும் நிலைஇதற்கு இனி ஒரு முற்றுப்புள்ளி வேண்டாமாபிற மாநிலத்தவர் ஆக்கிரமிப்பும்தமிழ் அறியா தக்கைகளின் ஆதிக்கமும் அரசுப் பணிமனைகளில் இனிமேல் - இதன்மூலம் வெகுவாகக் குறைந்துதமி ழுக்கும்பண்பாலும்பழக்கவழக்கத்திலும் முற்றிலும் மாறுபட்டவர்களின் ஆதிக்கம் பரவலாகப் பல்கிப் பெருகிய நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க இம்முடிவு பெரிதும் உதவக் கூடும்!

தமிழ்நாட்டில் தற்போதுள்ள பல வீட்டு இளைஞர்கள் தமிழ் நாளேடுகளைக்கூட படிப்பது கிடையாதுகாரணம்தமிழ்ப் படிக்க முடியாத நிலைவெளிநாட் டுக்காரர் தமிழ்ப் படித்துச் சொல்வதே இவர்களைவிட மேல் என்ற அளவில் தடுமாற்றம் - மகாவெட்கக்கேடான நிலைஇது வளர்ந்தால், ‘‘மெல்ல அல்ல - வேகமாகவே தமிழ் இனிச்சாகும்'' என்ற நிலையே ஏற்படக்கூடும்.

மற்ற மாநிலங்களில் பா..ஆளும் மாநிலங்கள் உள்பட - உள்ளூர் மக்களுக்கே அதுவும் அவர்களது தாய்மொழி அறிந்தவர்களுக்கு மட்டும் (சுமார் 80 விழுக்காடுவேலை வாய்ப்புகள் உண்டு என்ற சட்டங்களை இயற்றிசெயல்பட வேகமான முனைப்புக் காட்டும் நிலையில்தமிழ்நாடு மட்டும் திறந்த வீடாகண்டவர் நுழைந்து ஆதிக்கம் செலுத்த?

எல்லாப் பணிகளுக்கும் தமிழ் அவசியமே!

இதற்குத் தமிழ்நாடு அரசு உடனடியாக இதற்கு ஒப்புதல் வழங்கிஇதனை எல்லாப் பணிகளுக்கும் தமிழ்நாடு பொதுத் தேர்வாணையத்தின் வரம்பில் வராதவேலைவாய்ப்புகளில்கூட இதுபோன்ற விதி முறையை வகுத்துச் செயல்படுத்த முன்வரவேண்டும்.

தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலை கிட்டாது அவதியுறும் வேதனையை  தீர்க்கவும் இது பெரிதும் உதவும்.

தமிழில் இசைதமிழில் அர்ச்சனைதமிழில் நீதிமன்றத்தில் வாதாடுதல் என்பன போன்ற எல்லா உரிமைகளையும் எதிர்நீச்சல் போட்டுபோராடியே பெறவேண்டியுள்ளது - இதுதான் தமிழ்நாடு!

தாழ்ந்த தமிழகமேஉன் நிலை இனியாவது மாறட்டும்!'

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை

27.9.2021

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

மொழியின் அடையாளத்தை மறைக்கும் நடவடிக்கை கூடாது

 

ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றக் கிளை சரமாரி கேள்வி

மதுரைஆக.10- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளவும்பழங்கால தொல்லி யல் மற்றும் நினைவுச்சின்னங்களை பாதுகாக்கக் கோரியும் பலர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு செய்தி ருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிரு பாகரன்எம்.துரைசாமி ஆகியோர் முன் நேற்று (9.8.2021) விசாரணைக்கு வந்ததுஅப்போது ஒன்றிய அரசுத் தரப்பில்உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுவிரிவான அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது எனக் கூறப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், ‘‘கல்வெட்டியல் துறையை ஒன்றிய அரசு மூடுவதற்கான நடவடிக்கையை எடுப்பதைப் போல தெரிகிறதுசுமார் ஒரு லட்சம் கல்வெட் டுகளில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியைச் சேர்ந்தவைதமிழ் கல்வெட்டுகளை ஏன் மைசூருவில் பாதுகாக்க வேண்டும்கருநாடக அரசு டன் ஏற்கெனவே காவிரி பிரச்சினை உள்ளது.

எனவேமைசூருவிலுள்ள கல்வெட் டுகளை தமிழ்நாட்டில் வைத்து ஏன் பாதுகாக்கக் கூடாதுசமஸ்கிருதத்தில் எத்தனை கல்வெட்டுகள் உள்ளனபார்சி மற்றும் அரபு மொழியில் எத்தனை கல்வெட்டுகள் உள்ளனதிராவிட மொழி கல்வெட்டுக்கள் எனக் கூறிஇங்கு சமஸ்கிருத மொழிக்கான கல்வெட்டியல் அலுவலரை நியமிக்க வேண்டிய தேவை என்னதமிழ் மொழி என்பதற்கு பதிலாக திராவிட மொழி எனக்கூறி குறைக்கக் கூடாது’’ என்றனர்இதற்கு ஒன்றிய அரசுத் தரப்பில்இது அரசின் கொள்கை முடிவு தொடர்புடையது எனக் கூறப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ‘‘ஒரு மொழியின் அடையாளத்தை மறைக் கும் வகையில் நடவடிக்கை இருக்கக் கூடாதுஅனைத்து மொழிகளும் முக்கியமானவை தான்இதற்கென முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக் கப்பட வேண்டும்’’ என்றனர்.

பின்னர் நீதிபதிகள், ‘‘தொல்லியல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட 760 பணியிடங்களில் மண்டல வாரியாக எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள் ளனஅதில் கல்வெட்டியல் துறைக் கென எத்தனை இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளனஉடையாளூரில் ராஜராஜ சோழனின் நினைவிடம் குறித்து அறிவியல்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து ஒன்றிய அரசின் தரப்பில் அறிக்கையளிக்க வேண்டும்ஒன்றிய தொல்லியல் துறையின் கல் வெட்டியல் துறை அதிகாரி ஆஜராக வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

செவ்வாய், 27 ஜூலை, 2021

'தகைசால் தமிழர் விருது' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


சென்னை,ஜூலை,27- தமிழ்நாட்டிற்கும்தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில்,“தகைசால் தமிழர்என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேற்படி விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்யும் பொருட்டுதமிழ்நாடுமுதலமைச்சர்  தலைமையில்தொழில்துறைதமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரை உள்ளடக்கியஒரு குழுவை அமைக்கவும் ஆணையிட்டுள்ளார்ஒவ்வோர் ஆண்டும் தேர்வு செய்யப்படும்தகைசால் தமிழர்"விருது பெறும் விருதாளருக்கு , சுதந்திர தின விழாவின்போது முதலமைச்சர் அவர்களால் பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும்பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும்.